Encryption என்றால் என்ன?

என்க்ரிப்சன் என்பது தரவுகளை பிறரால் கண்டறியப்பட முடியாத வேறொரு வடிவத்திற்கு மாற்றும் செயற்பாட்டைக் குறிக்கிறது. இது பொதுவாக அதிக உணர் திறன் மிக்க (sensitive) தகவல்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயெ பயன் படுத்தப்படுகிறது. டேட்டாவை என்க்ரிப்ட் செய்வதன் மூலம் அதிகாரம் பெற்ற நபர்கள் மாத்திரமே அதனைப் பார்க்க முடியும். இந்த டேட்டா என்பது எமது கணினியின் தேக்கச் சாதனங்களில் தேக்கி வத்திருக்கும் பைல்களாவோ அல்லது வலையமைப்பு மற்றும் இணையத்தினூடாக அனுப்பப்படுபவையாகவோ இருக்கலாம். …

Read More »

Registry  என்றால் என்ன?

விண்டோஸ் இயங்கு தளத்தில் ரெஜிஸ்ட்ரி (பதிவகம்) என்பது ஒரு தரவுத் தளம். புதிதாக ஒரு வன்பொருளை அல்லது மென்பொருளை கணினியில் நிறுவும்போது அல்லது நீக்கும்போது அவை பற்றிய விவரங்களை தொடர்ச்சியாகப் பதியப்படும் ஒரு தரவுத் தளமே இந்த ரெஜிஸ்ட்ரி. கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய விவரங்கள் ரெஜிஸ்ட்ரியிலேயே பதியப்படுகின்றன. விண்டோஸில் என்னென்ன செட்டிங்ஸ் செய்யப்பட்டுள்ளன, கணினியை இயக்கியதும் எந்த எப்லிகேசன்களை ஆரம்பிக்க வேண்டும், ஒவ்வொரு பயனரும் …

Read More »

என்ன இந்த BIOS?

கணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input / Output System எனபதாகும். அதன் மூலம். நினைவகம், ஹாட் டிஸ்க், மற்றும் துணைச் சாதனங்கள் அனைத்தும் முறையாக இயங்குகிறதா என்பதைச் சரி பார்த்து உறுதி செய்து கொள்ளும். பயோஸ் ஆனது கணினியிலுள்ள இயங்கு தளத்திலிருந்து வேறுபட்டது. ஹாட் டிஸ்கில், சேமிக்கப்பட்டிருக்கும். இயங்குதளம் கணினிக்கும் அதனைப் …

Read More »

TEMP FILE   என்றால் என்ன?

கணினியில் பணியாற்றும்போது .TMP எனும் பைல் நீட்டிப்பைக் (Extension) கொண்ட பைல்களை நீங்கள் அவ்வப்போது அவதானித்திருக்கலாம். இவற்றை TEMP  / டெம்ப் பைல்கள் எனப்படும். என்ன இந்த டெம்ப் பைல்கள்? டெம்ப் பைல்கள என்பவை அவற்றின் எக்ஸ்டென்சனால் குறிப்பிடப்படுவது போல் அவை தற்காலிக (temporary) பைல்களே. டெம்ப் பைல்களை பொதுவாக நாம் பயன்படுத்தும் எப்லிகேசன்களே உருவாக்கி விடுகின்றன. அதாவது சில எப்லிகேசன்கள் இயங்குவதற்குத் தேவையான தற்காலிக மான சில டேட்டாவை …

Read More »

What is Bitcoin?

பிட்கொயின் என்பது காகிதத்தில் அச்சிடப்படாத கண்ணுக்குப் புலப்படாத ஒரு மெய்நிகர் (Virtual Currency) நாணயமாகும். இது 2009 ஆம் ஆண்டில் சடோஷிநகமோட்டா என்பரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மின்னணு (digital) வடிவில் இருக்கும் பிட்காயின் நாணய கொடுக்கல் வாங்கல் அனைத்தும் இணையத்தின் ஊடாகவே நடைபெறுகின்றன. இந்த பிட்காயின் நாணயம் வழமையான பாரம்பரிய நாணயம் போன்று எந்த ஒரு வங்கியினாலோ அரசினாலோ கட்டுப்படுத்தப்படுவதில்லை. பதிலாக பிட்காயின் கணக்குகளை வைத்திருக்கும் பயனர்களின் வலையமைப்பினூடாக பிட்காயின்களை ஒருவருக்கொருவர் …

Read More »

ஒரே கணினியில் ஒன்றிற்கு மேற்பட்ட இயங்கு தளங்களை நிறுவிட..

கணினிப் பயனர் சிலர் வெவ்வேறு இயங்கு தளýங்களை (operating system) கணினியில் நிறுவிப் பணியாற்ற விரும்புவர். எடுத்துக் காட்டாக விண்டோஸ் 7 இயங்கு தளத்தில்  பணியாற்றுவோர் விண்டோýஸின் பழைய பதிப்புகளான விண்டோஸ் எக்ஸ்பி,  2000 மற்றும் விண்டோஸின் புதிய பதிப்பான 8 மற்றும்10  போýன்ற இயங்கு தளங்களையும் சேர்த்து கணினியில் நிறுவிக் கொள்ள விரும்புவர். அதேபோன்று  விண்டோஸ் இயங்கு தளத்திற்குப் பரிச்சயமானவர்கள் விண்டோஸ் அல்லாத லினக்ஸ் போýன்ýற இயங்கு தளங்களைப் …

Read More »

ஆழ் வலை (Deep Web) என்றால் என்ன?

இணையத்தின் ஊடாக கிடைக்கப் பெறும் மிக முக்கியமான சேவையான உலகலாவிய வலையமைப்பை (World Wide Web) எல்லோரும் அறிந்திருக்கிறோம். அன்றாடம் பயன் படுத்துகிறோம். ஆனால்  இவ்வுலகலாவிய வலையமைப்பின் மேற்பரப்பிலேயே (surface) இதுவரை நாம் அனைவரும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இம்மேற்பரப்பில் உள்ள தகவல்கள் உலகலாவிய வலையமைப்பின் மொத்த அளவின்  சுமார் 5 ஐந்து வீதமே என மதிப்பிடப் பட்டுள்ளது. அப்படியானால்  மீதமுள்ள 95 வீத தகவல்களும்  உள்ளடங்கிய …

Read More »

வெப்பிரவுஸரில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை ஆரம்பப் பக்கமாக வரவழைக்க..

இணையஉலாவியொன்றைத் திறக்கும்போது ஏதேனும் ஒரு பக்கத்தைமுதற் பக்கமாக வரவழைக்கலாம் என்பதைநீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் ஒன்றல்ல ஒன்றுக்குமேற்பட்ட தளங்களையும் முதற் பக்கமாக வரவழைக்கலாம்என்பதை அறிவீர்களா? இங்கு க்ரோம், பயர்பொக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மற்றும் எட்ஜ் ஆகியபிரபலமான பிரவுசர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைய எவ்வாறு முதற் பக்கமாகவரவைப்பது எனப் பார்ப்போம். Chrome க்ரோம்விண்டோவில் வலது பக்க மேல்மூலையில் உள்ள மூன்று கிடைக்கோடுகளுடன் தோன்றும் மெனு பட்டனில்  க்ளிக் செய்யுங்கள. வரும்மெனுவில் Settings தெரிவு …

Read More »

SEO என்றால் என்ன?

இணையத்தில்தேடற் பொறிகளைப் பயன் படுத்தி தகவல்தேடும் போது நாம் தேடும்தகவல் அடங்கியிருக்கும் இணைய தளம் தேடல்முடிவுகளில் அனேகமாக முதலாவது பக்கத்திலேயேஅதுவும் பட்டியலில் முதல் ஐந்து இடங்களிலேயேஇடம் பெற்றிருக்கக் காணலாம். மேலும் அவ்விணைய தளம் ஒரு பிரபலமானஇணைய தளமாகவும் கூட இருக்கும். இவ்வாறுஒரு இணைய தளத்தை தேடற்பொறிகளின் தேடல் முடிவுகளின் பட்டியலின்ஆரம்பத்தில் இடம் பெற வைப்பதுஎன்பது ஒரு இலகுவான விடயமல்ல. இணையதளங்களை விருத்தி செய்பவர்கள் இதற்குப் பயன் படுத்தும் ஒரு(தொழில்) நுட்பமே …

Read More »

Chipset என்றால் என்ன?

கணினியின் மூளையாகச் செயற்படுவது சிபியூ (CPU) என்பதை நீங்கள் அறிவீர்கள்.. அதேபோன்று கணினியின் இதயமாகச் செயற்படுவது எது என்பதை அறிவீர்களா? அதுதான் மதர்போர்டில் சிபியூவிற்கு அருகே பொருத்தப்பட் டிருக்கும். (Chipset) சிப்செட். எனும் மைக்ரோ சிப் ஆகும். கணினியில் சிபியூ, மெமரி, ஹாட் டிஸ்க் என்பன எவ்வகையான பணிகளை மேற்கொள்கின்றன என்பதைப் பலரும் அறிந்திருப்பர். எனினும் இந்த சிப்செட் என்றால் என்ன அதன் முக்கியத்துவம் என்ன என்பதை அனேகர் அறிந்திருப்பதில்லை. …

Read More »