Tuesday, September 30, 2008

What is System Restore ?


எதற்கு இந்த System Restore  ?


புதிதாக ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவும்போது (install) அல்லது அதனை புதுப்பிக்கும் (update) போது உங்கள் கணினியை ஒரு மாற்றத்யதிற்கு உட்படுத்துகிறீர்கள். இந்த மாற்றம் சில வேளைகளில் கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கி கணினி முன்னர் போல் செயற்பாடாமல் போகவும் இடமுண்டு. இது போன்ற நிலைமைகளில் உங்களுக்குக் கை கொடுக்கிறது விண்டோஸிலுள்ள சிஸ்டம் ரீஸ்டோர் எனும் வசதி. இதன் மூலம் கணினியில் மாற்றத்தை ஏற்படுத்த முன்னர் இருந்த நிலைக்கு கணினியை மறுபடியும் மாற்றி கணினியை சீராக்கி விடலாம்.

சிஸ்டம் ரீஸ்டோர் என்பது மைக்ரோஸொப்ட் வர்ட், எக்ஸல் மற்றும் ஏனைய பயன்பாட்டு மென்பொருள்களில் உள்ள Undo எனும் கட்டளை போன்றதே. கணினியில் செய்த மாற்றத்தை இல்லாமல் செய்து கடைசியாக கணினி முறையாக இயங்கிக் கொண்டிருந்த நிலைக்கு மறுபடியும் சீரமைத்து விடுகிறது இந்த சிஸ்டம் ரீஸ்டோர் எனும் வசதி.

கணினி வைரஸ் தாக்குதலுக்குட்படும் சந்தர்ப்பங்கDலும் கூட இந்த சிஸ்டம் ரீஸ்டோர் மூலம் சில வேளைகளில் வைரஸை விரட்டி விடலாம். எனினும் சில கணினி வைரஸ் இந்த சிஸ்டம் ரீஸ்டோரயே இயங்காமல் (disable) செய்து விடுவதுமுண்டு.

சிஸ்டம் ரீஸ்டோர், விண்டோஸ் இயங்கு தளத்தில் செய்த மாற்றத்தையே இல்லாமல் செய்து விடுகிறது தவிர நீங்கள் முன்னர் பணியாற்றி சேமித்த எந்த ஒரு பைலையும் பாயதிப்பதில்லை. உதாரணமாக எம்.எஸ்.வர்ட் கொண்டு உருவாக்கிய ஒரு ஆவணம், இண்டநெட் எக்ஸ்ப்லோரர் கொண்டு பார்த்த இணைய தளங்கள், உங்களுக்கு வந்த மின்னஞ்சல் என எதனையும் இல்லாமல் செய்து விடாது. அதாவது சிஸ்டம் ரீஸ்டோர் செய்வதனால் உங்கள் தனிப்பட்ட பைல்களுக்கு எந்த வித ஆபத்தும் நேர்ந்து விடாது.

விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளம், கணினியில் நீங்கள் செய்யும் மாற்றங்களை முறையாக அவதானித்து அவ்வப்போது அவை பற்றிய விவரங்களை அதாவது என்ன திகதியில் என்ன நேரத்தில் என்ன மாற்றம் செய்யப்பட்டது போன்ற விவரங்களை பதிந்து வைக்கிறது. எடுத்துக் காட்டாக ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவுதல் அல்லது ஒரு ட்ரைவர் மென்பொருளை நிறுவுதல் போன்ற கணினியில் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்யும்போது அவை பற்றிய விவரங்களைப் பதிவு செய்து விடுகிறது. இந்த விவரங்கள் அடங்கிய குறிப்புகளை ரீஸ்டோர் பொயின்ட் (Restore Point) எனப்படும்.

இந்த ரீஸ்டோர் பொIன்டை நீங்களாகவே கூட கணினியில் ஏதும் மாற்றத்தை செய்வதற்கு முன்னர் உருவாக்கிக் கொள்ளலாம்.

நீங்கள் நிறுவிய ஒரு மென்பொருள் கணினியில் பாதிப்பை உண்டாக்கியிருந்தால் சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கி அதிலிருந்து ஒரு ரீஸ்டோர் பொயின்டைத் தெரிவு செய்து கணினியை மறுபடியும் முன்னர் இருந்தவாறு சீராக இயங்கிய நிலைக்குக் கொண்டு வரலாம். சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கியதும் ஒரு கலண்டர் தோன்றுகிறது. அதிலிருந்து ரீஸ்டோர் பொயின்ட் எனப்படும் நிலைகளைத் தெரிவு செய்யலாம். தினமும் கணினியை உபயோகிக்காமலிருந்தால் சில தினங்களில் ரீஸ்டோர் பொயின்ட் உருவாகியிருக்காது. மாறாக கணினியை அடிக்கடி உபயோகித்திருந்தால் அனேகமாக தினமும் ரீஸ்டோர் பொயின்ட் உருவாவதோடு ஒரே தினத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ரீஸ்டோர் பொயின்டுகளும் உருவாகியிருப்பதைக் காணலாம்.

ரீஸ்டோர் செய்யும் பணி முடிந்ததும் கணினி ரீஸ்டார்ட் ஆக ஆரம்பித்து விடுவ தால் சிஸ்டம் ரீஸ்டோரை இயக்குவதற்கு முன்னர் கணினியில் திறந்து வைத்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து எப்லிகேசன்களையும் மூடி விடுதல் வேண்டும்.

கணினியில் நீங்கள் செய்யவிருக்கும் ஒரு மாற்றம் கணினியில் ஸ்திரத்த தன்மையைப் பாதிக்கும் என நினைத்தால் அந்த மாற்றத்தைச் செய்வதற்கு முன்னர் ஒரு ரீஸ்டோர் பொயின்டை உருவாக்கிக் கொள்வது உங்களுக்கு நன்மை யளிக்கும்.

இந்த சிஸ்டம் ரீஸ்டோரை Start / All Programs / Accessories / System Tools மற்றும் Start / Help and Support / Pick a Task / Undo changes to your computer with System Restore என இரண்டு வழிகளில் அணுகலாம்.

ரீஸ்டோர் செய்வது எப்படி?

சிஸ்டம் ரீஸ்டோர் செய்வது ஒரு எளிமையான செயற்பாடு. சிஸ்டம் ரீஸ்டோரை இயக்கிய பின்னர் ஒரு விசர்ட் தோன்றும். இங்கு Restore your computer to an earlier time (படம்-1) தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல (படம்-2) ல் உள்ளது போல் ஒரு விண்டோ தோன்றும். இங்கு நீங்கள் விரும்பும் ரீஸ்டோர் பொயின்டைத் தெரிவு செய்யுங்கள். தேவையானால் இடப் பக்கமுள்ள கலண்டரில் க்ளிக் செய்து ரீஸ்டோர் பொயின்டைத் தெரிவு செய்து கொள்ளலாம். அடுத்து ரீஸ்டோர் பட்டனில் க்ளிக் செய்ய ரீஸ்டோர் செய்யும் பணி ஆரம்பித்து விடும்.

ஒரு சிஸ்டம் ரீஸ்டோர் பொயின்டை உருவாக்குவது எப்படி?

அவ்வாறே புதிதாக ஒரு ரீஸ்டோர் பொயின்டை உருவாக்கிக் கொள்ள ரீஸ்டோர் விசர்டில் வரும் முதல் கட்டத்தில் Create a restore point (படம்-1) தெரிவு செய்து Next க்ளிக் செய்ய வரும் திரையில் (படம்-3) உருவாக்கயிருக்கும் ரீஸ்டோர் பொயின்டுக்கு ஒரு பொருத்தமான ஒரு பெயரை டைப் செய்து Create பட்டனில் க்ளிக் செய்ய புதிதாக ஒரு ரீஸ்டோர் பொயின்ட் உருவாக்கப்பட்டு விடும்.

அதேபோல் சிஸ்டம் ரீஸ்டோர் விசர்டில் முதல் திரையில் System Restore Settings எனும் இணைப்பில் க்ளிக் செய்ய படம்-4 ல் உள்ளது போல் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். (இதனை வேறு வழி முறைகளிலும் வரவைக்கலாம்) இதன் மூலம் ஹாட் டிஸ்கில் எந்த ட்ரைவிலும் சிஸ்டம் ரீஸ்டோர் வசதியை இல்லாமல் செய்யவும், ஏற்கனவே இல்லாமல் செய்திருந்தால் அதனை மீள அமைக்கவும் முடியும். அத்துடன் இந்த டயலொக் பொக்ஸில் Settings பட்டனில் க்ளிக் செய்து ஒவ்வொரு ட்ரைவவிலும் சிஸ்டம் ரீஸ்டோர் செய்வதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வெற்றிடத்தை அதிகரித்துக் கொள்ளவும் குறைத்துக் கொள்ளவும் முடியும்.


-அனூப்

Sunday, September 21, 2008

Virtual PC – Part 2


சென்ற வாரம் வேர்ச்சுவல் கணினி என்றால் என்ன எனப் பார்த்தோம். இன்று வேர்ச்சுவல் கணினியில் ஒரு இயங்கு தளத்தை எவ்வாறு நிறுவு வது எனப் பார்ப்போம்.

மைக்ரோஸொப்ட் வேர்ச்சுவல் பீசி மென்பொருள் கொண்டு விண்டோ ஸின் எப்பதிப்பையும் வேர்ச்சுவல் கணினியில் இயங்கு தளமாக நிறுவிக் கொள்ளலாம். விண்டோஸ் மட்டுமன்றி விண்டோஸ் அல்லாத லினக்ஸ் போன்ற வேறு இயங்கு தளங்களையும் கூட நிறுவிக் கொள்ளலாம்.

இங்கு பிரதான இயங்கு தளமான விண்டோஸ் எக்ஸ்பீயில் லினக்ஸின் Ubuntu பதிப்பை வேர்ச்சுவல் கணினியில் எவ்வாறு நிறுவுவது எனச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

வேர்சுவல் கணினியை உருவாக்குவதற்கு முதலில் உங்கள் கணினி ஆகக் குறைந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதாயிருத்தல் வேண்டும். உங்கள் கணினியில் நிறுவியிருக்கும் பிரதான இயங்கு தளம் சிக்கலின்றி இயங்கவும் நிறுவவிருக்கும் ஏனைய வேர்ச்சுவல் இயங்கு தளங்களை சிறப்பாக செயற்படவும் போதிய அளவு நினைவகமும் ஹாட் டிஸ்கில் காலியிடமும் இருத்தல் அவசியம். நினைவகத்தின் அளவு அதிகமிருப் பின் ஒன்றுக்கு மேற்பட்ட வேர்சுவல் கணினிகளை உருவாக்Bக் கொள்ளலாம்.

வேர்ச்சுவல் கணினியில் இயங்கு தளமொன்றை நிறுவத் தேவையான நினைவகத்தின் அளவு ஹாட் டிஸ்க் காலியிடம் என்பவற்றினை அறிந்து கொள்ள பின்வரும் அட்டவணை உதவியாயிருக்கும் என நம்பு கிறேன்.

Operating System Memory Hard Disk Space
Windows 98 Second Edition 64 MB 500 MB
Windows 2000 Professional 128 MB 2 GB
Windows XP Professional 256 MB 2 GB
Windows Server 2003 256 MB 4 GB
Windows Vista Ultimate 512 MB 15 GB

முதலில் வேர்சுவல் பீசீ மென்பொருளை கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவிய பிறகு ஸ்டாட் மெனுவிலிருந்து அதனைத் இயக்குங்கள். அப்போது ஒரு விசர்ட் தோன்றும். இங்கு Use default settings to create a virtual machine தெரிவு செய்வதன் மூலம் வேர்ச்சுவல் ஹாட் டிஸ்க் தவிர எல்லா செட்டிங்ஸையும் வேர்ச்சுவல் கணினியே நிர்ணயித்துக் கொள்ளும். இதன் மூலம் இலகுவாக இரண்டாவது கட்டத்திற்கு வந்து சேரலாம். எல்லா செட்டிங்ஸையும் நீங்களாகக் குறிப்பிட Create a Virtual Machine என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அப்போது தோன்றும் பெட்டியில் வேர்ச்சுவல் மெசீன் பெயரையும் அதனை உருவாக்க வேண்டிய இடத்தையும் குறிப்பிடல் வேண்டும். இங்கு Ubuntu என டைப் செய்து அடுத்த கட்டத்திற்கு தாவுங்கள். வேர்ச்சுவல் மெசீனை உருவாக்க வேண்டிய இடத்தைக் குறிப்பிடா விட்டால் டிபோல்டாக My Virtual Machines போல்டரில் உருவாக்கப்படும்.

அடுத்து நிறுவவிருக்கும் இயங்கு தளத்தைத் தெரிவு செய்யுங்கள். Ubuntu என்பது விண்டோஸ் அல்லாத இயங்குதளமாதலால் இங்கு Other தெரிவு செய்யுங்கள்.

அடுத்து நினைவகத்தின் அளவைக் குறிப்பிடல் வேண்டும் இங்கு வேர்ச்சுவல் கணினி சிறப்பாக இயங்குவதற்கும் அதன் மேல் மேலும் பல பயன்பாட்டு மென்பொருள்களை நிறுவவும் அதிக நினைவகத்தை ஒதுக்க வேண்டும். அதற்கு நீங்கள் Adjusting RAM க்ளிக் செய்து நினைவகத்தின் அளவைக் கூட்டிக் கொள்ளலாம். நினைவகத்தின் அளவைக் கூட்ட அவசிய மில்லை எனின் Using the recommended RAM தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.

அடுத்த கட்டத்தில் வேர்ச்சுவல் ஹாட் டிஸ்கை குறிப்பிட வேண்டும். இங்கு A new virtual hard disk என்பதைத் தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள். இங்கு வேர்ச்சுவல் ஹாட் டிஸ்காக rowse பட்டனில் க்ளிக் செய்து ஒரு இடத்தையும் அதற்கான பெயரையும் குறிப்பிடலாம். அவ்வாறு குறிப்பிடா விட்டால் டிபோல்டாக My Virtual Machines போல்டரில் ஒரு பைலை உருவாக்கிக் கொள்ளும். வேர்ச்சுவல் ஹாட் டிஸ்க் என்பது நிஜக் கணினியில் ஒரு பைலையே குறிக்கிறது.
அடுத்து Next க்ளிக் செய்து அடுத்த கட்டத்திற்குத் தாவி Finish க்ளிக் செய்து முடிவுக்கு வரலாம்.

இப்போது வேர்ச்சுவல் மெசீனை உருவாக்குவதில் முதல் கட்டம் முடிவுக்கு வருகிறது. ஆனால் இன்னும் வேர்ச்சுவல் கணினியில் இயங்கு தளத்தை நிறுவும் பணி பூர்த்தியாகவில்லை.
இரண்டாவது கட்டமாக புதிய ஒரு இயங்கு தளத்தை வேர்சுவல் மெசீனில் நிறுவ வேண்டும். இங்கு நாங்கள் Ubuntu பதிப்பை நிறுவப் போகிறோம். இதற்கு உங்களிடம் Ubuntu சீடி இருத்தல் வேண்டும். (இந்த Ubuntu சீடீயை Ubuntu நிறுவன இணையதளத்திற்குச் சென்று விண்ணப்ப்ப்பதன் மூலம் இலவசமாக வீடு தேடி வர வைக்கலாம்) சீடீ இல்லா விடின் இணையத்திலிருந்தும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். எனினும் அதன் பைல் அளவு 600 எம்பீயிற்கு மேல் இருப்பதால் அதிவேக இணைய இ¨ணைப்பிருந்தால் மட்டுமே சாத்தியம். இணையத் திலிருந்து டவுன்லோட் செய்த பைலாயின் அது .ISO இமேஜ் பைல் வடிவிலிருக்கும். எனினும் அதனை சீடியில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இப்போது Virtual PC Console விண்டோவில் ஸ்டார்ட் பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ தோன்றி சுவல் மெசீன் பூட் ஆக ஆரம்பிக்கும். ஒரு இயங்கு தளத்தை கணினியில் நிறுவும் போது எவ்வாறு காண்பீர்களோ அத்தனை படி முறைகளையும் இந்த விண்டோவிலும் காணலாம்.

வழமையான சிஸ்டம் சோதனைக்குப் பின்னர் பூட்டபல் சீடியை தேட ஆரம்பிக்கும். இங்கு வேர்ச்சுவல் மெசீன் விண்டோவில் CD க்ளிக் செய்து பின்னர் Capture ISO Image என்பதைக் க்ளிக் செய்து .ISO பைலை சேமிக்கப் பட்டிருக்குமிடத்தைக் காட்டி விட வேண்டும்.

.ISO பைல் அல்லாது சீடியிலிருந்தே நிறுவ வேண்டுமாயின் சீடீயை ட்ரைவிலிட்டு சீடீ மெனுவில் Use Physical Drive க்ளிக் செய்து பின்னர் Action மெனுவில் Reset க்ளிக் செய்து விடுங்கள். இப்போது சீடி ட்ரைவிலிருந்து பூட் ஆக ஆரம்பிக்கும்.

இனி வரும் ஒவ்வொரு கட்டமும் வழமையான ஒரு இயங்கு தளத்தை நிறுவுவது போன்றதே.

Thursday, September 18, 2008

Microsoft Virtual PC -2007



கணினிப் பயனர்களில் அனேகர் வெவ்வேறு இயங்கு தள‎ங்களை (operating system) தமது கணினியில் நிறுவிப் பணியாற்ற விரும்புவர். எடுத்துக் காட்டாக விண்டோஸ் எக்ஸ்பீயில் பணியாற்றுவோர் விண்டோU‎ஸின் பழைய பதிப்புகளான விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 98, விண்டோUஸின் புதிய பதிப்பான விஸ்டா போ‎ன்ற இயங்கு தளங்களையும் சேர்த்து கணினியில் நிறுவிக் கொள்ள விரும்புவர்.

அவ்வாறே விண்டோஸ் இயங்கு தளத்திற்குப் பழக்கப் பட்டவர்கள் விண்டோஸ் அல்லாத லினக்ஸ் போ‎ன்‎ற இயங்கு தளங்களைப் பற்றி அற்ந்து கொள்ள ஆர்வமாயிருப்பர். லினக்ஸிலும் ரெட் ஹெட், பெடோரா, மென்ரிவா, உபுண்டு எனப் பல நிறுவனங்கள்‎ வெளியிடும் (distributions) பதிப்புகள் உள்ளன.

எனினும் ஒரு பய‎ன்பாட்டு மென்பொருளை (application software)நிறுவுவது போ‎‎ன்று ஒரு இயங்கு தளத்தை நிறுவுவது என்‎பது எளிமையான விடயம‎ல்ல. கணினித் துறையில் சிறிது அனுபவமும் அறிவும் அதற்கு வேண்டியிருக்கிறது. அதுவும் ஒரே நேரத்தில் ஒரு கணினியில் ஒ‎ன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங் களை (duel booting) நிறுவ வேண்டுமானால் க‎ணினி ஹட்வெயர் துறையில் சிறிது கற்றறிந்தவரா யிருத்தல் வேண்டும்.

நீங்கள் விரும்பிய இயங்கு தளத்தை விண்டோஸ¤ட‎ன்‎ சேர்த்து நிறுவுவதற்கு உதவவென சில மெ‎ன்‎பொருள் கருவிகள் பய‎ன் பாட்டில் உள்ளன. இவற்றுள் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வேர்ச்சுவல் பீசியை குறிப்பிட்டுக் கூறலாம் (Microsoft Virtual PC-2007). வேர்ச்சுவல் பீசீ மெ‎‎ன்பொருள் மூலம் இலகுவாக ஒன்‎றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை நிறுவிக் கொள்ளலாம். இதுபோன்ற மற்றுமொரு மென்பொருள் கருவி VMware Player. இம்மெ‎ன்‎ பொருள் கருவி வேர்ச்சுவல் பீசியை விட மேலும் சில வசதிகளைக் கொண்டுள்ளது. இவற்றை இலவசமாகவே இணையத்திலிருந்து டவு‎ன்லோட் செய்து கொள்ளலாம்.

வேர்ச்சுவல் மெசீ‎ன் (virtual machine) எ‎‎ன்பது டுவெல் (duel boot) பூட் அல்லது (multi boot) மல்டி பூட் இயங்குதளங்களைக் கொண்ட கணினி போ‎ன்றதல்ல. மல்டி பூட் எனப்படுவது ஒரு கணினியில் ஒரே நேரத்தில் ஒ‎ன்‎றுக்கு மேற்பட்ட இ‎யங்கு தளங்களை நிறுவுதலைக் குறிக்கும். அப்படி ஒ‎ன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவ முடிந்தாலும் ஒரே நேரத்தில் ஒரு இயங்கு தளத்திலேயெ நம்மால் பணியாற்ற முடியும். ஒவ்வொரு இயங்கு தளமும் ஒரே வ‎‎ன்பொருளிலேயே இயங்குகின்றன. இவை மெய்க்கணினி (real machine) எனப்படும்.

இதற்கு மாறாக வேர்சுவல் மெசீன் எ‎ன்பது ஒரு மாயக் கணினி. இதன்‎ மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவி ஒரே நேரத்தில் ஒ‎ன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களில் நம்மால் பணியாற்ற முடிகிறது. அதாவது உங்கள் கணினி முதலில், பிரதான இயங்கு தளத்தை பூட் செய்யும்.. பி‎ன்னர் அத‎ன்‎ மீது ஏனைய இயங்கு தளங்கள் பூட் செய்யப்படும். இவை சாதாரண ஒரு பய‎‎ன்பாட்டு மென்பொருள் போல் இயங்கும்.

ஆங்லகிலத்தில் வேர்ச்சுவல் எனும் வார்த்தை இல்லாத ஒன்றை இருப்பதாகக் கருவதைக் குறிக்கும். அதேபோல் இ‎ங்கு வேர்ச்சுவல் மெசீன் என்பது நிஜமான கணினியல்ல. அது நிஜம் போல் இயங்கும் ஒரு கற்பனைக் கணினியே.

வேர்ச்சுவல் கணினி என்‎பது ஒரு போலியன ஹாட்வெயர் சாதனங்களையும் போலியான ஹாட்டிஸ்கையும் கொண்ட நிஜமல்லாத ஒரு கற்பனைக் கணினி. வேர்ச்சுவல் கணினியில் நிறுவப்படும் இயங்கு தளங்கள் நிஜமாகவே உங்கள் ஹார்ட் வெயர் சாதனத்தில் இயங்குவதில்லை. ஒரு மெ‎‎ன்பொருளே இங்கு ஹாட்வெயர் சாதனம் போ‎‎ன்று இயங்குகிறது. வேர்ச்சுவல் கணினியில் ஒரு இயங்கு தளத்தை நிறுவும் போது, அந்த இயங்கு தளம் உங்கள் கணினியின் ஹாட் வெயர் சாதனங்களோடு தொடர்பாட முயற்சிக்கும். இவ்வேளைIல் கணினியில் நிறுவியுள்ள வேர்ச்சுவல் கணினி மெ‎ன்‎பொருள், இயங்கு தளம் கேட்கும் கேள்விக்கு நிஜமான ஹாட் வெயர் சாதனம் எவ்வாறு பதிலளிக்குமோ அதே போ‎ன்றே பதிலளிக்கும்.

உதாரணமாக வேர்சுவல் கணினி மெ‎ன்பொருள் , உங்கள் கணினி Intel சிப்செட் கொண்ட மதர்போர்டை வைத்திருப்பதாக உணர்த்திவிட்டால், நிஜமாக உங்கள் கணினி மதர்போர்டில் எந்த வகையான சிப்செட் இருந்தாலும் வேர்ச்சுவல் கணினியில் உள்ள இயங்கு தளம் Intel சிப்செட் கொண்ட மதர்போர்டிலேயே தா‎ன் இயங்குவதாகக் கருதும்.

வேர்ச்சுவல் மெசீன் என்பதற்கு மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா சொல்லலியிருந்த ஒரு உதாரணத்தை இங்கு தரலாமென என நினைக்கிறே‎ன். உங்களுக்கு ஏதோ ஒரு பொருள் தேவைப்படுBறது. அதனைக் கொண்டுவர உங்கள் வேலையாளிடம் பணி‎க்கிறீர்கள். வேலையாளும் அதை வீட்டிலிருந்தோ, வெளியிலிருந்தோ அல்லது கடைத்தெருவிருந்தோ வாங்கி வந்து உங்கள் மு‎ன்‎னே நீட்டுகிறா‎ர். அதனை எங்கிருந்து கொண்டு வரவேண்டும் என நீங்கல் அவரிடம் சொ‎ல்லவில்லை. உங்கள் தேவை நிறைவடைந்தால் போதும். இவ்வாறே வேர்ச்சுவல் கணினியும் தனக்குத் தேவையானதை கொடுத்துவிட்டால் அல்லது காட்டி விட்டால் அது எங்கிருந்து கிடைக்கப் பெற்றது எனப் பார்பதில்லை.

வேர்ச்சுவல் கணினியானது நம்முட‎ன் தொடர்பாட உள்ளிடும் மற்றும் வெளியிடும் டேட்டாவை அல்லது‎ தகவலை நிஜக் கணினியின் கீபோட், மவுஸ், மொனிட்டர் எ‎ன்பவற்றகற்கே கடத்துகிறது. அவ்வாறே நிஜக் கணினியில் ஒரு யூஎஸ்பீ மவுஸ் பொறுத்தியுள்ளதாக வைத்துக் கொள்வோம். ஆனால் வேர்ச்சுவல் மெசீனில் ஒரு பீஎஸ் 2 மவுஸே பொறுத்தியுள்ளதாக உணர்தப்பட்டுள்ளது. எனினும் யூஎஸ்பீ மவுஸை நாம் நகர்த்த வேர்சுவல் மெசீனில் பிஎஸ் 2 மவுஸை நகர்த்தப்படு வதாகக் காட்டப்படும்.

அவ்வாறே வேர்ச்சுவல் கணினில் நிஜ ஹாட் டிஸ்கிற்குப் பதிலாக வேர்ச்சுவல் ஹாட் டிஸ்கே பய‎ன்‎ படுத்தப்படுBறது. வேர்ச்சுவல் ஹாட் டிஸ்க் எ‎ன்பது உண்மை யில் நிஜக் கணினியில் சாதாரன ஒரு பைலையே குறிக்கிறது. வேர்சுவல் கணினி மெ‎‎ன்பொருள், வேர்ச்சுவல் கணினிக்கு அதனை ஒரு நிஜ ஹாட் டிஸ்காகக் காட்டிவிடுகிறது. வேர்ச்சுவல் ஹாட் டிஸ்கை பாட்டிஸன் செய்யவும் போமட் செய்யவும் கூட முடியும். எனினும் இந்த செயற்பாடுகளை வேர்ச்சுவல் கணினியிலிருந்தே செயற்படுத்த முடியும். நிஜக் கணினியில் இந்த ஹாட் டிஸ்க் எ‎ன்‎பது ஒரு வழமையான பைல் மாத்திரமே.

வேர்ச்சுவல் கணினியை உருவாக்குவதற்கு முதலில் வேர்ச்சுவல் பீசீ மெ‎ன்‎பொ ருளைக் கணினியில் நிறுவ வேண்டும். பி‎ன்னர் வேர்ச்சுவல் கணினி, வேர்ச்சுவல் டிஸ்க் என்பவற்றை உருவாக்கி அவற்றில் இயங்கு தளங்களை நிறுவிக் கொள்ளலாம்.

வேர்சுவல் பீசீ 2007 எ‎‎ன்‎பது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஒரு மெ‎‎ன்பொருள். விண்டோஸ் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் நிறுவத்தக்க வகையில் இது உருவாக்கப்பட் டுள்ளது. இம்மெ‎‎ன்பொருளைக் கணினியில் நிறுவிக் கொண்டால் எம்.எஸ்.டொஸ் உட்பட விண்டோU‎ஸின் எப்பதிப்பையும் வேர்ச்சுவல் கணினியில் நிறுவிக் கொள்ளலாம். மைக்ரோஸொப்ட் தயாரிப்பல்லாத லினக்ஸ் போ‎ன்ற வேறு இயங்கு தளங்களையும் கூட நிறுவலாம்.

ஒரு இயங்குதளத்தை கணினியில் நிறுவும் போது பயோஸ் விவரங்களை வாசித்தறிதல், பிரதான நினைவகம்‎ மற்றும் வீ.ஜீ.ஏ நினைவகம் என் பவற்றின் அளவினைப் பரிசோதித்தல், ஹாட் டிஸ்கைக் கண்டறிதல், அவ்வாறே நிறுவிக் கொண்டிருக்கும்போது ஹாட் டிஸ்கை போமட் செய்தல், சிஸ்டம் பைல் பிரதி செய்தல், ரீஸ்டார்ட் செய்தல், கணினி வன்‎பொருள்களுக்கான ட்ரைவர் மென் பொருளை நிறுவுதல் போ‎ன்ற பல செயற்பாடுகளைக் கொண்டிருக்கும். மேற் சொ‎ன்ன அத்தனை செயற்பாடுகளும் வேர்ச்சுவல் கணினியிலும் ஒரு இயங்கு தளத்தை நிறுவும் போது நடைபெறுகிறது. இவை அத்தனையும் ஒரு விண்டோவுக் குள்ளேயே நடைபெறுவது ஒரு புதுமையான அனுபவம்.

இந்த வேர்சுவல் பீசீ மெ‎ன்‎பொருளை மைக்ரொஸொப்ட் இணைய தளத்திலிருந்து இல‎வசமாக டவு‎ன்லோட் செய்து கொள்ளலாம். இதன் பைல் அளவு 32 MB. வேர்சுவல் கணினியை உருவாக்க உங்கள் கணினியில் குறைந்த பட்சம் 512 MB அளவாவது நினைவகம் இருத்தல் அவசியம்.


- அனூப் -

Sunday, September 07, 2008

What is Zip folder?



பைல்களைச் சுருக்கும் Zip Folder

இணையத்திலிருந்து அடிக்கடி பைல்கள் மற்றும் மென்பொருள்களை பதிவிறக்கம் செய்பவரா நீங்கள்? அப்படியானால் ஸிப் பைல்கள் பற்றி நிச்சயம் அறிந்திருப்\ர்கள். இந்த பைல்களைச் சுருக்கும் முறையானது இணைய பயனர்களுக்கு மிக உபயோகமான ஒரு கண்டுபிடிப்பென்றே சொல்லலாம். ஏனெனில் இந்த ஸிப் பைல்கள் ஒரு பைலின் அளவை கணிசமாகக் குறைத்து விடுகிறது. அதன் மூலம் ஒரு பைலை வேகம் குறைந்த இணைய இணைப்பிலும் கூட பறிமாற முடிகிறது. அத்தோடு புலொப்பி டிஸ்க் மற்றும் பென் ட்ரைவ் போன்ற ஊடகங்களில் ஒரு பைலை சேமிக்கப் போயதிய இடமில்லாதபோது அதனை ஸிப் பைலாக சுருக்கிச் சேமிக்க முடிகிறது.

பைல்களைச் சுருக்கவென WinZip, WinRar என ஏராளமான (File Compression) கம்ப்ரெஸ்ஸன் மென்பொருள்கள் பாவனைல் இருந்தாலும் சவிண்டோஸு டன் இணைந்து வருவதே இந்த ஸிப் போல்டர்.

ஸிப் போல்டர் (Zip Folder) என்பது பைல் அல்லது போல்டர்களின் அளவைச் சுருக்கிப் பதியும் முறையாகும். வழமையான போல்டர்கள் போலன்று இந்த ஸிப் போல்டரானது குறைந்தளவு இடத்தை எடுத்துக் கொள்வதோடு ஒரு வலையமைப்பில் அல்லது இணையத்தில் பைகளை இலகுவாகவும் விரைவாகவும் பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது. அத்துடன் ஸிப் போல்டருக்குள் இருக்கும் ஒரு பைலையோ அல்லது இன்னுமொரு போல்டரையோ வழமையான பைல் அல்லது போல்டர் போன்றே கையாளவும் முடியும்.

ஒரு ஸிப் போல்டரை உருவாக்கிய பின்னர் அதற்குள் பைலை அல்லது போல்டரை இழுத்துப் போடுவதன் மூலம் அதனை சுருக்கிட முடிவதோடு அதனை நேரடியாகவே திறக்கவும் முடியும். விரும்பினால் சுருங்கிய பைலை விரிவடையச் செய்தும் உபயோகிக்க முடிகிறது.

ஒரு சுருங்கிய பைலை அல்லது போல்டரை விரிவடையச் செய்யாமல் நேரடியாகவே உபயோகிக்க முடிந்தாலும் கூட அந்த பைலானது ஏனைய பைல்களில் தங்கியிருந்தால் அதனை விரிவடையச் செய்தே உபயோகிக்க வேண்டும்.

ஸிப் போல்டர்களை உங்கள் கணினியில் எந்த ஒரு ட்ரைவுக்கும் அல்லது போல்டருக்கும் இலகுவாக நகர்த்த முடியும். அத்துடன் ஒரு வலையமைப்பில் பணியாற்றும் போது ஏனைய பயனர்கள் பைல்களைச் சுருக்கவென வின்ஸிப் போன்ற வேறொரு மென்பொருளை உபயோகித்தாலும் கூட அவர்களுடனும் இந்த ஸிப் போல்டர்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

அத்துடன் ஸிப் போல்டர்களை எமது அனுமதியில்லாமல் அடுத்தவர்கள் திறந்து பார்க்க விடாமால் பாஸ்வேர்ட் கொண்டு பாதுகாக்கவும் முடிகிறது.

அதேவேளை வின்ஸிப், வின்ரார் போன்ற சுருக்கிப் பதியக் கூடிய மென்பொருள்களை கணினியில் நிறுவும் போது விண்டோஸுடன் வரும் ஸிப் போல்டர் மறைந்து நீங்கள் நிறுவிய பிற கம்ப்ரெஸ்ஸன் மென்பொருளே இயங்கு நிலைக்கு மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸிப் போல்டரை எவ்வாறு உபயோகிப்பது?
முதலில் ஒரு ஸிப் போல்டரை உருவாக்கிக் கொள்ளுங்கள். உதாரணமாக டெஸ்க்டொப்பில் உருவாக்க, டெஸ்க்டொப்பில் ரைட் க்ளிக் செய்து வரும் கன்டெக்ஸ்ட் மெனுவில் New தெரிவு செய்து அதிலிருந்து வரும் சப் மெனுவில் Compressed (zipped) Folder என்பதைத் தெரிவு செய்ய ஒரு ஸிப் போல்டர் டெஸ்க்டொப்பில் உருவாவதைக் காணலாம். பின்னர் நீங்கள் சுருக்க வேண்டிய பைல்களையோ அல்லது போல்டரையோ அதற்குள் பிரதி செய்து விடுங்கள் அல்லது ட்ரேக் செய்து இழுத்துப் போடுங்கள். அவ்வளவுதான். இப்போது அதன் பைல் அளவானது கணிசமாகக் குறைந்திருப்பதை அவதானிக்கலாம். அடுத்து ஸிப் போல்டருக்குள் இருக்கும் பைல்களைத் திறப்பதானால் மேலே கூறியது போல், வழமையான முறையிலேயே தனிறக்கலாம்.

எனினும் அந்த சுருங்கிய பைல்களை விரித்து உபயோகிக்க வேண்டுமானால் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.

ஸிப் போல்டர் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Extract All தெரிவு செய்ய ஒரு விசர்ட் வந்து உங்களை வழி நடத்தும். அந்த விசர்டில் முதலில் நெக்ஸ்ட் க்ளிக் செய்யுங்கள். பின்னர் வரும் இரண்டாவது கட்டத்தில் எவ்விடத்தில் பவிரிவடைச் செய்யப்போகும் பைல்களைச் சேமிக்க வேண்டும் என்பதை பிரவுஸ் பட்டனில் க்ளிக் செய்து காட்டி விட்டு மீண்டும் நெஸ்ட் க்ளிக் செய்ய அடுத்த கனமே அந்த பைல்கள் விரிக்கப் பட்டுவிடும்.

ஸிப் போல்டருக்குப் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்க வேண்டுமானால் முதலில் ஸிப் போல்டரைத் திறந்து அதன் பைல் மெனுவில் Add A Password தெரிவு செய்து விரும்ய பாஸ்வர்டை வழங்கலாம்.

-அனூப்-

How to change OEM logo in Windows?


OEM   லோகோவினை  நீங்களும் மாற்றியமைக்கலாமே!

டெஸ்க்டொப்பில் மை கம்பியூட்டர் ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்ய வரும் கண்டெக்ஸ்ட் மெனுவில் ப்ரொப்படீஸ் தெரிவு செய்யும் போது வரும் சிஸ்டம் ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸில் ஜெனெரல் டேபின் கீழ் நீங்கள் நிறுவியுள்ள விண்டோஸின் பதிப்பு, பதிவு விவரம், ப்ரொஸெஸர் வகை மற்றும் அதன் வேகம், நினைவகத்தின் கொள்ளளவு போன்ற தகவல்களைக் காணலாம். (படம் -1)

இவற்றில் கணினி தயாரிப்பு நிறுவனம், கணினியின் மாதிரி இலக்கம், அதனுடன் இணைந்த சிறிய படம் (இலட்சினை), மற்றும் அதன் கீழ் காணப்படும் Support Information எனும் பட்டனைக் க்ளிக் செய்ய வரும் டயலொக் பொக்ஸில் (படம்-2) தோன்றும் விவரங்கள் போன்றவற்றை OEM தகவல்கள் எனப்படும்.

OEM என்பது Original Equipments Manufacturer என்பதன் சுருக்கமாகும். ஏதேனுமொரு பொருளை உற்பத்தி செய்யும் (வன்பொருள் / மென்பொருள்) முதன்மை நிறுவனம் அப்பொருளை நேரடியாக வாடிக்கையாளரிடம் கொண்டு செல்லாமல் வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்து விடும். இரண்டாவது நிறுவனம் அப்பொருளை மேலும் மேன்படுத்தி தனது பெயரில் பொதி செய்து வாடிக்கையாளர்களை அடையச் செய்யும். எனி னும் நேர்மாற்றமாக OEM என்பது இரண்டாவது நிறுவனத்தையே குறித்து நிற்கிறது.

இவ்; ழுநுஆ தகவல்கள் அனைத்தும் .ini • பைலாக கணினியில் சேமிக்கப்படுகின்றன. இதனை நோட்பேட் போன்ற டெக்ஸ்ட் எடிட்டர் கொண்டு மாற்றியமைக்கலாம்.

இந்த •பைலானது [General] , [Support Information] எனும் இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். [General] பகுதி

Manufacturer=
Model=

போன்ற விவரங்களைக் கொண்டிருக்கும்.

இரண்டாம் பகுதி, [Support Information] என்பதாகும். இதனை விரும்பினால் மாற்றலாம். இப்பகுதியின் தகவல்கள் Support Information எனும் பட்டனைக் க்ளிக் செய்யும் போது வரும் வேறொரு டயலொக் பொக்ஸில் காட்டும். இங்கு அளிக்கப்படும் தகவல்களை [Support Information] எனும் தலைப்பின் கீழ்

Line1=
Line2=
Line3=

என்ற வடிவத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.

பிறகு அதனை oeminfo எனும் பெயரில் .ini எனும் •ஃபைல் வடிவில் சேமித்து விண்டோஸ் போல்டரில் உள்ள சிஸ்டம்32 (விண்டோஸ் எம்.இ, எக்ஸ்பீ ) எனும் சப் போல்டருக்குள் சேமிக்க வேண்டும். விண்டோஸ் 98, மற்றும் 2000 பதிப்பாயின் சிஸ்டம் எனும் போல்டருக்குள் சேமிக்க வேண்டும்.

அதனுடன் உங்கள் நிறுவன இலட்சினை (லோகோ) தோன்றச் செய்ய வேண்டுமாயின் ஏதேனுமொரு போட்டோ எடிட்டிங் மென்பொருள் கொண்டு நீங்கள் போட விரும்பும் படத்தின் அளவு 120 X 120 பிக்ஸலில் இருக்கத்தக்கதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை oemlogo எனும் பெயரில் . .bmp (bitmap) •போமட்டில் சேமித்து அதனைக் கட் & பேஸ்ட் செய்து மேற் சொன்ன அதே சிஸ்டம்32 போல்டருக்குள் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இப்போது கீ போர்டில் வின் கீயுடன் + Break கீயை அழுத்த சிஸ்டம் ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸில் உங்கள் கை வரிசையைக் காணலாம்.

நோட்பேடைத் திறந்து கீழுள்ளதை மாதிரியாகக் கொண்டு டைப் செய்து (படம்-3) oeminfo.ini எனும் பெயரில் C:\windows\system32 எனுமிடத்தில் சேமிக்கவும்.


- அனூப் -

How to convert audio cassettes into digital format?


ஓடியோ கேசட்டிலுள்ள பாடல்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுவோமா?


சிடி (CD) எனப்படும் கொம்பேக்ட் டிஸ்க்கி‎ன் (Compact Disk) வருகையின் பின்னர் ஓடியோ கேசட்டுகளின் (Audio Cassette) பாவனை தற்போது குறைந்து வருவது நீங்கள் அறிந்ததே; குறைந்து வருகிறது என்பதைவிட முற்றாக இல்லாமல் போய் விட்டதென்றே சொல்லலாம். எனினும் தொழில் நுட்ப வளர்ச்சியி‎‎‎‎‎ன் காரணமாக ஒலிப்பதிவு செய்வதற்கென தற்போது பல்வேறு சாதனங்கள் வந்து விட்டாலும்கூட வானொலியில் ஒலிபரப் பாகும் ஒரு பாடலை, ஒரு அறிவித்தலை அல்லது வீட்டில் நடக்கும் உரையாடல்களை அல்லது ஒரு அரங்கில் நடைபெறும் சொற்பொழிவுகள் போன்றவற்றை இலகுவாக ஒலிப்பதிவு செய்து மறுபடியும் அவற்றைக் கேட்பதற்கு ஓடியோ கேசட்டுகளையே பலரும் நாடுகிறார்கள். இது ஓடியோ கேசட்டுகளுக்கேயுரிய தனிச் சிறப்பு எனலாம்.

சீடிக்களின் ஆக்கிரமிப்பினால் நீங்கள் முன்னர் சிரமப்பட்டுப் பதிவு செய்து வைத்திருந்த பாடல் கேசட்டுக்கள் எல்லாம் இப்போது கவனிப்பாரற்றுக் கிடக்கும். ஓடியோ கேசட்டிலிருக் கும் அப்பாடல்களை அல்லது பேச்சுக்களை கணினிக்கு மாற்றி விட்டால் அதனை மீண்டும் CD யில் பதிவு செய்து கொள்ளவோ அல்லது மின்னஞ்சல் மூலம் பரிமாறிக் கொள்ளவோ முடியும். அது மட்டுமன்றி சீடீயிற்கு மாற்றுவதன் மூலம் நீண்ட காலம் அழியாமல் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். கேசட்டிலிருந்து கணினிக்கு மாற்றும் போது அவற்றை MP3, WAV, WMA எனப் பல பைல் போமட்டுக்களில் சேமித்துக் கொள்ளலாம். அதற்கெனப் பல மென்பொருள்களும் வந்துள்ளன. கணினியில் ஓடியோ மற்றும் வீடியோ பைல்களை இயக்கவல்ல அனேக மான மீடியா ப்ளேயர் மென்பொருள்களில் இவ்வசதி சேர்க்கப் பட்டுள்ளது. இவற்றில் Music Match Jukebox, Audacity மற்றும் Jet Audio என்பவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

இங்கு Music Match Jukebox பற்றி சொல்லலாம் என நினைக்கிறேன். இதன் மூலம் பல வகையான பைல் போமட்டுக் களிலுள்ள ஓடியோ பைல்களை இயக்க முடிவதுடன் சிடிக்களை பதிவு செய்தல் (burn), சீடி லேபல் தயாரித்தல், பைல் வகை மாற்றுதல், புறச் சாதனங்களிலிருந்து ஒலிப்பதிவு செய்தல் எனப் பல வசதிகளும் அடங்கியுள்ளன. Music Match Jukebox ன் அண்மைய பதிப்பு 10 தற்போது வெளிவந்துள்ளது. ஆனால் நான் இங்கு Jukebox 7.5 பற்றியே விவரிக்கிறேன். இருந்தாலும் இரண்டுக்குமிடையில் பெரிய மாறுதல் இல்லை.

ஓடியோ கேசட்டிலிருந்து பாடல்களைக் கணினிக்கு மாற்றுவதற்கு உங்களுக்குத் தேவையானது கேசட் ப்ளேயரையும் கணினியையும் இணைப்பதற்கான ஒரு கேபல் மாத்திரமே. இதில் இரு விதமான கேபல்கள் உள்ளன; Stereo Output ( L & R ) செய்யக் கூடிய (RCA) இரட்டைக் கேபல், மற்றும் ஒற்றைக் கேபல்.

உங்கள் கேசட் ப்ளேயரில் Stereo Output ( L & R ) செய்யக் கூடிய இரண்டு jack இருந்தால் அவற்றை இரட்டைக் கேபலின் ஒரு முனையைக் கொண்டும் மறுமுனையைக் கணினியின் Sound Card லுள்ள Line In போர்ட்டிலும் (port) இணைத்துக் கொள்ளுங்கள். கேசட் ப்ளேயரில் Stereo Output செய்யக் கூடிய ஜெக் இல்லாவிட்டால், கேசட் ப்ளேயரிலுள்ள Earphone ஜெக்கையும் கம்பியூட்டரின் சவுன்ட் கார்டில் லைன் இன் போர்டையும் Stereo Output செய்யக் கூடிய ஒற்றைக் கேபல் மூலம் இணைத்துக் கொள்ளவும். இவ்வாறு இணைப்பதன் மூலம் ஓடியோ கேசட்டை மாத்திரமன்றி வானொலி நிகழ்ச்சிகளையும் கூட கணினியில் பதிவு செய்ய முடியும்.

அடுத்து, System tray யில் உள்ள சிறிய ஸ்பீக்கர் ஐக்கன் மேல் ,ரட்டைக் க்ளிக் செய்து Windows Mixer ஐ திறந்து கொள்ளுங்கள். அதில் Options மெனு வில் க்ளிக் செய்து Properties தெரிவு செய்யுங்கள். வரும் டயலொக் பொக்ஸில் Adjust Volume for என்பதன் கீழ் வரும் Recording என்ற ரேடியோ பட்டனை தெரிவு செய்து அதில் Recording Control, Line In ஆகிய இரண்டு Check box களையும் தெரிவு செய்து OK க்ளிக் செய்துவிடுங்கள். ‏இப்போது Recording Control பேனலில் திரையில் பார்க்கலாம். அதனை மினிமைஸ் செய்து வையுங்கள். இதன் மூலம் Recording அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

இப்போது MusicMatch Jukebox ஐ இயக்கவும். ஜூக்பொக்ஸ் விண்டோவில் Options மெனுவில் Settings தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் செட்டிங்ஸ் டயலொக் பொக்ஸில் Recorder டேபில் க்ளிக் செய்யவும். Recording quality என்பதன் கீழ் Recording format ஆக MP3 என்பது தெரிவாகியிருக்கும். விரும்பினால் WAV, WMA, MP3pro என பைல் போமட்டை மாற்றிக் கொள்ளலாம். எனினும் MP3 பைலாக மாற்றுவது நல்லது. MP3 போமட்டிலும் பல வித ஒலித் தரங்களில், bit-rate களிலும் ஒலிப்பதிவு செய்யலாம். எனினும் 128 Kbps bit-rate ல் பதிவு செய்வதே சிறந்த ஒலித்தரம் கொண்டிருக்கும்.

விரும்பினால் bit-rate ஐ குறைக்கவோ, கூட்டவோ முடியும். பிட் ரேட்டைக் குறைப்பதன் மூலம் ஒலியின் தரம் குறைந்தாலும் அதன் பைல் அளவும் (file size) கணிசமான அளவு குறைவது ஒரு அனுகூலமான விடயமாகும். பைல் அளவு குறைவதனால் ஹாட் டிஸ்கில் நிறையப் பாடல்களை சேமிக்க முடிவதுடன் அவற்றை மின்னஞ்சலிலும்கூட attachment ஆக அனுப்பலாம்.

அடுத்து Recording Source என்பதன் கீழ் Line In என்பதைத் தெரிவு செய்யுங்கள். பின்னர் Tracks Directory எனும் பட்டனில் க்ளிக் செய்ய New Tracks Directory Options எனும் டயலொக் பொக்ஸ் திறக்கப்படும். அதில் Directory For New எனுமிடத்திலுள்ள பட்டனில் க்ளிக் செய்து பதிவு செய்யப்படும் பாடலை ஹாட் டிஸ்கில் எந்த போல்டரில் சேமிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடவும். Make sub-path using என்பதில் Artist, Album என்பன தெரிவு நிலையிலிருந்தால் அவற்றை நீக்கி விடவும். (விரும்பினால் வைத்துக் கொள்ளலாம்) ஏனெனில் நீங்கள் குறிப்பிடும் போல்டருக்குள் மேலும் இரண்டு போல்டர்களை இப்பெயர்களில் ஜூக் பொக்ஸ் தானாக உருவாக்கி அதற்குள்ளேயே பாடலை சேமிக்கும். அடுத்து Name track file using என்பதில் சேமிக்கப்படும் பைல் பெயராக எவற்றையெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டுமோ அவற்றைத் தெரிவு செய்து Ok க்ளிக் செய்யவும்.

அடுத்து Recorder பட்டனில் க்ளிக் செய்ய Recorder விண்டோ திறக்கப்படும். அதில் Record பட்டனில் க்ளிக் செய்வதோடு கேசட் ப்ளேயரையும் இயக்குங்கள். இணைப்புக்கள் சரியாக இருந்தால் கேசட் ப்ளேயரை இயக்கும் போது கணினியிலுள்ள ஸ்பீக்கரில் ஒலியைக் கேட்கக்கூடியதாகவிருக்கும். இப்போது கணினியில் ஒலிப்பதிவு செய்யும் பணியும் ஆரம்பிக்கப்படும். ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல் MP3 வடிவில் ஹாட் டிஸ்கில் நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட போல்டருக்குள் தெரிவு செய்த பைல் பெயரின்படி சேமிக்கப்பட்டிருக்கும். இதனை ஜூக் பொக்ஸ் கொண்டே இயக்கியும் பார்க்கலாம். இல்லை.. இல்லை கேட்கலாம்!

- அனூப் -

Shortcut to Web address


இணைய தளமுகவரிக்குக் குறுக்கு வழி

ஒவ்வொரு இணையதள முகவரியும் http://www என ஆரம்பிப்ப தோடு .com, .net, .org போ‎‎ன்ற வெவ்வேறு ‎ டொமேன் பெயர்களைக் (domain name) கொண்டிருக்கும் எ‎ன்‎பது நீங்கள் அறிந்ததுதா‎ன். இவற்றை web browser ன் address bar இல் ஒவ்வொரு இணைய தள முகவரியையும் டைப் செய்யும் போதும் சேர்க்க வேண்டும். எனினும் ஒவ்வொரு முறையும் இவற்றை டைப் செய்வதற்கு அனேகருக்கு சோம்பலாயிருக்கும்.


 இதனைப் உணர்ந்து இ‎ன்டர்னெட் எக்ஸ்ப்லோரரில் ஒரு குறுக்கு வLழிதரப்பட் டுள்ளது. நிறுவன பெயரை மட்டும் டைப் செய்து கீபோர்டில் கன்ட்ரோல் மற்றும் எ‎ன்டர் விசைகளை ஒரே நேரத்தில் தட்ட http:// www மற்றும் .com பகுதிகளை வெப் பிரவுஸரே தானாகப் போட்டுக் கொள்ளும்படி செய்யலாம். உதாரணமாக yahoo என டைப் செய்து Ctrl + Enter விசைகளை ஒரே நேரத்தில் அழுத்த http://www.yahoo.com என முழுமையாகத் தோ‎ன்றும். இந்த வசதியை இ‎ன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் .com எனும் டொமே‎‎ன் பெயருக்கு மட்டுமே தருகிறது. எனினும் மொஸில்லா பயர்பொக்ஸ் இ‎‎ன்னும் கூடுதலாக .net, .org ஆகிய டொமே‎ன்‎ பெயர்களுக்கும் இந்த வசதியைத் தருகிறது. பயபொக்ஸில் .net தளங்களுக்கு Shift+Enter விசைகளையும் .org தளங்களுக்கு Shift+Ctrl+Enter விசைகளையும் ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும். Alt+Enter விசைகளை அழுத்த http://www எனும் பகுதியை மட்டும் வர வைக்கலாம்.

அனூப்-

How to rename files and folders in Tamil?


File, Folder-களுக்குத்  தமிழில் பெயரிடுவது எப்படி?

பைல், போல்டர் மற்றும் சோட்கட் ஐக்க‎ன்களுக்குத் தமிழிலும் பெயரிடலாம். அதற்குப் புதிதாக எந்தவொரு மெ‎‎ன்பொருளையும் நிறுவ வேண்டியதில்லை. உங்கள் கணினியில் வி‎‎ன்டோஸ் 2000, எக்ஸ்பி நிறுவியிருந்தால் போதும். விண்டோஸ் 2000 / எக்ஸ்பியில் ‘லதா’ எ‎ன்‎ற யுனிகோட் முறையிலான தமிழ் எழுத்துருவும் (Font) உள்ளிணைக் கப்பட்டுள்ளது. ‏இத‎ன்‎ மூலம் விண்டோஸில் ‏இயங்கும் அனைத்து எப்லிகேச‎‎ன்களிலும் தமிழையும் பயன்‎படுத்தலாம்.

எனினும் விண்டோஸ் எக்ஸ்பியை முத‎ன் முதலில் நிறுவும் போது (Default installation) தமிழ் மொழியை உள்ளீடு செய்வதற்கான பைல்களும் நிறுவப்படுவதில்லை. அதனை நீங்களாகவே நிறுவிக் கொள்ள வேண்டும். அதற்குப் பி‎‎ன்வரும் வழிமுறையைக் கையாளவும்.

முதலில் கண்ட்ரோல் பேனலைத் திறந்து கொள்ளவும். அங்கு Regional and Language Options எ‎ன்‎பதைத் திறக்கவும். அப்போது தோ‎‎ன்றும் டயலொக் பொக்ஸில் Languages டேபில் க்ளிக் செய்து அங்கு காணப்படும் Supplemental Language Support எ‎‎ன்பத‎‎ன் கீழ் வரும் Install files for complex script and right-to-left languages (including Thai) எ‎‎ன்பதைத் தெரிவு செய்து Apply பட்டனில் க்ளிக் செய்யவும். அப்போது ஒரு மெஸ்ஸேஜ் பொக்ஸ் தோ‎ன்‎றி வி‎‎ண்டோஸ் எக்ஸ்பி சீடீயை உட்செலுத்துமாறு சொல்லும். சீடீயை உட்செலுத்த, தேவையான பைல்கள் பிரதி செய்யப்படும். அடுத்து வரும் மெஸ்ஸேஜ் பொக்ஸில் யெஸ் க்ளிக் செய்து கம்பியூட்டரை ரீஸ்டார்ட் செய்யவும்.

மீண்டும் க‎ன்ட்ரோல் பேனலில் Regional and Language Options எ‎ன்‎பதை திறக்கவும். தோ‎‎ன்‎றும் டயலொக் பொக்ஸில் Languages டேபில் Details பட்டனில் க்ளிக் செய்யவும். அப்போது Text Sevices and Input Languages எ‎ன்‎ற மேலும் ஒரு டயலொக் பொக்ஸ் தோ‎‎ன்றும். அதில் Settings டேபி‎‎ன் கீழ் வரும் Installed Services எனும் பகுதியிலுள்ள Add பட்டனில் க்ளிக் செய்ய Add Input Language எ‎ன்ற டயலொக் பொக்ஸ் தோ‎‎ன்றும். அதில் Input Language எனுமிடத்திலுள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் க்ளிக் செய்ய ஒரு ட்ரொப் டவு‎ன்‎ லிஸ்ட் வரும். அதிலிருந்து Tamil தெரிவு செய்து OK க்ளிக் செய்யவும். இ‏ப்போது Installed services எ‎‎ன்பத‎‎ன் கீழ் தமிழ் மொழியும் அதற்குறிய கீபோட் ட்ரைவரும் தெரிவு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். அடுத்து அந்த டயலொக் பொக்ஸிலுள்ள Apply பட்டனில் க்ளிக் செய்து OK சொல்லவும். ‏இப்போது தமிழ் மொழியையும் உள்ளீடு செய்யும் மொழியாக நிறுவப்பட்டு விட்டது.

‏டெஸ்க்டொப்பில் ‏‏இப்போது புதிதாக Language Bar தோ‎ன்றியிருப்பதைக் காணலாம். டெஸ்க்டொப்பில் வந்திராவிட்டால் டாஸ்க்பாரில் காணப்படும். டாஸ்க்பாரிலும் ‏இல்லாவிட்டால் டாஸ்க் பாரில் ரைட் க்ளிக் செய்து வரும் மெனு‏வில் Toolbars தெரிவு செய்து அதிலிருந்து லெங்குவேஜ்பாரை க்ளிக் செய்யவும்.

‏லெங்குவேஜ்பாரில், உள்ளீடு செய்யும் மொழியாக ஆங்கிலம் (EN) தெரிவு செய்யப்பட்டிருக்கும். EN எ‎‎‎ன்ற பட்டனில் க்ளிக் செய்ய நீங்கள் தெரிவு செய்திருக்கும் உள்ளீடு செய்யக்கூடிய மொழிகளைக் (Input Language) காட்டும். அதிலிருந்து (TA) தமிழ் தெரிவு செய்து தமிழை (enable) ‏இயக்க நிலைக்கு மாற்றவும்.

அடுத்து வேர்ட் ப்ரொஸெஸ்ஸிங் புரோக்ரம் ( WordPad அல்லது MS-Word) ஒ‎‎ன்றைத் திறந்து கொள்ளுங்கள். Font லிஸ்டிலிருந்து லதா (Latha) எ‎ன்‎ற எழுத்துருவையும் தெரிவு செய்யவும். ‏இப்போது உங்களால் தமிழில் டைப் செய்யக் கூடியதாகவிருக்கும். எனினும் ‘லதா’ எ‎‎ன்ற எழுத்துருவிற்கான கீபோட் லேயவுட் பரிச்சயமில்லாவிட்டால் தமிழில் டைப் செய்வது ஆரம்பத்தில் சிரமமாகவே ‏இருக்கும். அதற்கு கேரக்டர் மெப்பைத் (character map) துணைக்கு அழைத்துப் பழகிக் கொள்ளலாம்.

இப்போது டெஸ்க்டொப்பிலுள்ள சோட்கட் ஐக்க‎ன் ஒ‎‎ன்றுக்குத் தமிழில் பெயரிட்டுப் பார்ப்போம். உதாரணமாக ‘மை டொகுயுமெ‎ட்‎ன்ஸ்’ எ‎‎ன்ற போல்டருக்குத் தமிழில் பெயரிட எம்.எஸ்.வர்டில் அந்த வார்த்தையைத் தமிழில் டைப் செய்து கொள்ளவும். பின்னர் அதனைப் பிரதி (Copy) செய்து கொள்ளுங்கள். அடுத்து டெஸ்க்டொப்பிலுள்ள ‘My Documents’ ஐக்கன்‎ மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Rename தெரிவு செய்யவும். பிறகு அதனுடைய (Text Label) மேல் மீண்டும் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Paste தெரிவு செய்யவும். ‏இப்போது ஐக்க‎ன் பெயர் தமிழில் ‘மை டொகுயுமெ‎ட்‎ன்ஸ்’ என மாறியிருப்பதைப் பார்க்கலாம். ‏இவ்வாறு ஐக்க‎‎ன்கள் மட்டும‎ன்றி, பைல் , போல்டர்களுக்கெல்லம் தமிழில் பெயரிட்டுக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் உள்ளவாறுதா‎ன் தமிழிலும் பெயரிட வேண்டும் என்‎ற கட்டாயம் இ‏ல்லை. உங்கள் விருப்பம் போல் பெயரிட்டுக் கொள்ள முடியும்.

- அனூப் -

Saturday, September 06, 2008

What is Firewall?


Firewall பயவோல் என்றால் என்ன?

ஒரு கணினி வலையமைப்புட‎ன் அல்லது இணையத்துட‎ன் இணைப்பை ஏற்படுத்திய பிறகு வேறு கணினியிலிருந்து தகவல்கள் உங்‎கள் கணினிக்கும் உங்கள் கணினியிலுள்ள தகவல்கள் வேறு கணினிகளுக்கும் போட்ஸ் (ports) எனப்படும் சிறு வாயில்கள் ஊடாக உள்ளே செல்லவும் அதிலிருந்து வெளியேறவும் செய்கின்றன. இவ்வாறான தகவல்களைக் கடத்த வல்ல ஏராளமான வாயில்கள் கணினியிலுள்ளன. இவை தகவல்களை உள்ளே வரவும் வெளியே செல்லவும் அனுமதிக்கின்‎றன. உங்கள் கணினியிலிருந்து வெளியேறும் அல்லது கணினியை நோக்கி உள்ளே வரும் தகவல்களை பயவோல் வடிகட்டுவதோடு கணிக்கும் அதில் அடங்கியுள்ள தகவல்களுக்கும் பாதுகாப்பையும் வழங்குகிறது.

அவ்வாறே, அக இணையம் எனும் இ‎ன்ட்ராநெட் (intranet) வசதியை வைத்திருக் கும் ஒரு நிறுவனம், அந்த வலையமைப்பிலிருந்து உலகலாவிய வலையமப்பான இ‎ன்டர்நெட்டுடன் இணைய விரும்பும் தமது ஊழியர்களுக்கு அனுமதியளிப்பதற்கு மு‎ன்‎னர் தமது கணினி வலையமைப்பில் பயவோலை நிறுவிய பின்‎னரே அந்த வசதியை அழிக்கிறது. இதன்‎ மூலம் வெளி நபர் யாரும் தமது நிறுவன தரவுகளை அணுகுவதைத் தடுக்க முடிவதோடு தமது நிறுவன ஊழியர்களும் இணையத்திலிருந்து பெறக்கூடிய தகவல்களையும் கட்டுப்படுத் துகிறது.

ஒரு கணினி இணையத்தில் இணைந்த பிறகு சில தகவல்கள் கடத்தப்படுவது உங்கள் பார்வைக்கு வெழிப்படையாகவே தெரியும். உதாரணமாக ஒரு மின்னஞ்சல் பெறும் போது அனுப்பும் போது, ஒரு இணைய தளத்தை அடையும் போது, ஒரு இணைய தளத்திலுள்ள ஒரு படிவத்தை நிரப்பி அனுப்பும் போது, ஒரு பைலை பதிவிறக்கம் செய்யும் போது உங்கள் அனுமதியுடனேயே அல்லது நீங்கள் அறிந்தே இச்செயற்பாடுகள் நடக்கி.ன்‎றன.

அவ்வாறே சில தகவல்கள் உ‎ங்களை அறியாமலேயே உங்கள் கணினிக்கு வந்து சேர்வதோடு கணினியிலிருந்தும் வெளியே செல்கின்றன. உதாரணமாக விண்டோஸ் இயங்குதளம் உபயோகிப்பீர்களானால், இணையத்தில் இணைந்த பிறகு விண்டோஸ் இயங்குதளம் புதுப்பிக்கப்பட்ட பைல்களுக்காக (Security Updates) மைக்ரோஸொப்ட் இணைய தளத்தை அவ்வப்போது அணுகும். அதேபோல் கணினியில் நிறுவியுள்ள வேறு சில மெ‎‎ன்பொருள்களும் புதிய பதிப்புகள் மற்றும் மாற்றங்களுக்காக தமது சொந்த நிறுவன இணைய தளங்களை நாடும். வைரஸ் எAர்ப்பு மெ‎ன்பொருளும் அவ்வாறே புதிய பதிப்புக்காக தமது நிறுவனத்தை அணுகும் . உங்களை அறியாமல் நடை பெறும் மேற் சொ‎ன்னவை போ‎ன்ற செயற்பாடுகள் நல்லவைதா‎ன். எனினும் சில செயற்பாடுகள் உங்கள் கணினிக்குக் கேடு விளைCப்பதோடு உங்கள் அந்தரங்க விடயங்களையும் கண்டறிந்து கொள்ளும்.

இமெயில் மட்டும் தா‎‎ன் கணினிக்கு அச்சுறுத்தலான விடயங்களைத் தாங்கி வரும் எ‎ன்பதல்ல. உங்களை அறியாமலேயே கணினியில் திறந்த நிலையிலுள்ள வாயில்கள் மூலமாக கணினிக்கும் தரவுகளுக்கும் கேடு விளைவிக்கும் ஏராளமான நச்சு நிரல்கள் கணினியை வந்து சேர்ந்து விடும். இதற்கு உதாரணமாக 2003 ஆகஸ்டில் கணினிகளைப் பாதித்த "Blaster" வேர்மைக் (worm) குறிப்பிடலாம். கணினியை இயக்கி ஒரே நிமிடத்தில் நின்று போகக் காரணமாக இருந்த இந்த “ப்லாஸ்டர்” வேர்ம் இணையம் மூலம் பரப்பப்பட்ட எனும் நச்சு நிரலாகும்.

இணையத்தில் இணைப்பை ஏற்படுத்தியதும் உங்கள் கணினி வைரஸ், வேர்ம், ட்ரோஜ‎ன், ஸ்பைவெயா போன்ற அச்சுறுத்தல்களுக்குள்ளாக வாய்ப்புண்டு. மேற்சொ‎ன்ன அச்சுறுத்தல்களிலிருந்து பயவோல் உங்கள் கணினியைப் பாதுகாக்கிறது. பயவோல் ஆனது வைரஸ் எதிர்ப்பு மென்பொருளிலிருந்து வேறுபட்டது. எனும் இவை இரண்டும் உங்கள் கணினியைப் பாதுகாக்க கை கோர்த்து இயங்குகின்றன.

பயவோல் மெ‎ன்பொருளை நிறுவிய பின் இணையத்தில் இணைந்ததும் உங்கள் கணினி அடுத்தவர்களின்‎ பார்வைக்குத் தோற்றாது விடும். அதேபோல் உள் வரும் சந்தேகத்திற்கிடமான தகவல்களையும் பயவோல் அனுமதிக்காது. கணினியிலிருக்கும் ஒரு மெ‎ன்பொருள் வேறொரு கணினியை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது அது பற்றி உங்களுக்கு எச்சரிக்கும். இதனால் அந்தரங்க விடயங்களான கிரடிட் கார்ட் விவரங்கள், மற்றும் பாஸ்வர்ட் போ‎ன்றவை வெளியே செல்லாமல் தடுக்கப்படும். இவ்வாறு பல அனுகுலமான விடயங்கள் பயவோல் மூலம் நமக்குக் கிடைத்தாலும் இவையே பயவோல் மூலம் கிடைக்கும் முக்கியமான ந‎‎ன்மைகளாகும்.

உங்கள் கணினியில் பயவோல் பாதுகாப்பு இல்லையானால் இணையத்தில் இணைப்பை ஏற்படுத்தியவுடனேயே அதாவது வெப் பிரவுஸரையோ இமெயில் க்லையன்டையோ திறக்காத போதும் கூட உங்கள் கணினி அச்சுறுத்தலுக் குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. ப்ரோட்பேன்ட் போ‎‎ன்ற அதி வேக இணைய இணைப்பு இருந்தால் கணினியில் கட்டாயம் பயவோல் மெ‎ன் ‎பொருளை நிறுவியிருத்தல் வேண்டும். ஹெக்கர்ஸ் எனப்படும் இணைய குறும்பர்கள் ப்ரோட்பேன்ட் இணைப்பு வைத்திருக்கும் கணினிகளை தங்கள் கட்டுப் பாட்டி‎ன்‎ கீழ் கொண்டு வர அதிகம் விரும்புகிறார்கள். அத‎ன் மூலம் மிக வேகமாக ஸ்பாம் போ‎ன்ற குப்பை அ‎ஞ்சல்களை அவர்களால் இலகுவாகப் பரப்ப முடிகிறது.

இப்போது பயவோல் மென்‎பொருளை எங்கிருந்து பெறுவது என நீங்கள் நினைக்கலாம். ஏராளமான பய‎வோல் மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்‎றன. இவற்றுள் சில இலவசமாகக் கிடைப்பதுடன் சிலவற்றை கட்டணம் செலுத்தியும் பெறலாம். இவற்றுள் Zonealarm எனும் பயவோல் மென்‎பொருள் மிக பிரபல்யம் வாய்ந்தது. இந்த சோ‎‎ன்-எலாம் மென்பொருளில் இலவச பதிப்பும் உண்டு. அதே வேளை பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்ட அத‎‎ன் மேன்பட்ட பதிப்பை கட்டணம் செலுத்தியே பெற வேண்டும்.

விண்டோஸ் எக்ஸ்பீ இயக்கச் சூழலிலும் பயவோல் மெ‎‎ன்பொருள் இணைந்தே வருகிறது. Windows XP SP2 வுடன்‎ முதன் முதலில் பயவோல் அறிகமுகமாகியது. எனினும் விண்டோஸ¤ட‎ன் வரும் பயவோலை விட பிற னநிறுவனங்களின் பயவோல் மென்பொருளை நிறுவிக் கொள்வதே பயனளிக்கும். வேறு பயவோல் மென்பொருள் கிடைக்காத பட்சத்தில் விண்டோஸ¤ட‎ன் வரும் பயவோல் மென்பொருளையாவது இயக்க நிலைIல் வைத்திருப்பது நல்லது.

விண்டோஸில் பயவோலை எவ்வாறு இயக்க நிலையில் வைப்பது?

டாஸ்க்பாரின் வலது புறம் Windows Security Alerts எனும் சிறிய ஐக்கனைக் காணலாம். அதன்‎ மீது இரட்டைக் க்ளிக் செய்ய Windows Security Center விண்டோ தோ‎ன்றும். அங்கு பயவோல் இயக்க நிலையில் இருப்பதாகக் காட்டினால் அந்த சட்டத்தை மூடி விடலாம். இயக்க நிலையில் இல்லாதபோது (Off) அந்த சட்டத்தின்‎ கீழ் காணப்படும் Manage your security settings எ‎ன்பத‎ன் கீழ் Windows Firewall என்பதைக் க்ளிக் செய்ய ஒரு டயலொக் பொக்ஸ் தோ‎ன்றும். இந்த டயலொக் பொக்ஸில் பயவோலை On செய்து இயக்க நிலைக்கு மாற்றி ஓகே சொல்லி விடுங்கள்.

பயவோல் மெ‎ன்பொருளை நிறுவுவதால் மட்டும் உங்கள் கணினிக்கு முழுமையான பாதுகாப்பைப் வழங்கிட முடியாது. எனினும் கணினியை மேற் சொ‎ன்ன அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படுவதிலிருந்து ஓரளவாவது குறைக்கலாம்.

Kural - Tamil Soft


“குறள் ” தமிழ்ச் செயலி

“குறள் தமிழ்ச் செயலி ” எ‎ன்‎பது கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கான ஒரு மென்பொருள். இத‎ன்‎ மூலம் இலகுவாக பல்வேறு தமிழ் விசைப் பலகை கொண்டு தமிழில் டைப் செய்யலாம். கலை கந்தசாமி எனும் அமெரிகக வாழ் தமிழரால் இது உருவாக்கப்பட்டுள்ள குறள் தமிழ்ச் செயலி 1999 ஆண்டு முதன் முதலில் அறிமுகமானது. தற்போது பல்வேறு வசதிகளைத் தாங்கி குறள் தமிழ்ச் செயலியின் புதிய பதிப்பு 4 தற்போது கிடைக்கிறது. இதனை www.kuralsoft.com எனும் இணையதளத்திலிருந்து இலவசமாக டவு‎ன்லோட் செய்து கொள்ள லாம். இதன் பைல் அளவு 4.13 MB. எனினும் இலவச பதிப்பில் எல்லா வசதிகளையும் பெற முடியாது. குறள் தமிழ்ச் செயலியின்‎ முழுமையான பயன் பாட்டைப் பெற 35 அமெரிக்க டாலர் செலவிட வேண்டியிருக்கிறது.

குறள் தமிழ்ச் செயலி பின்வரும் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.


  • யுனிகோட், திஸ்கி, டாப், டாம், லிபி மற்றும் பழைய எழுத்து
  • வகைகளை இதன் மூலம் பயன்படுத்தலாம்.
  • கவிதை தமிழ் ஆங்கில சொற்செயலி (Word Processor)
  • SMTP சார்ந்த பறவை மின்னஞ்சல் செயலி (Mail Client),
  • தென்றல், எனும் பெயர்த்தகு சாதனங்களுக்கான (Removable Disk)
  • குறள் செயலி, இதனை எங்கு வேண்டுமானாலும் உங்களோடு
  • எடுத்துச் செல்லலாம்.
  • ஓசை - தமிழ் உரை ஒலி, தமிழை வாசிக்கும் தொழில்நுட்பம் (Text- to-Speech)
  • தமிழில் டைப் செய்ய ஆங்கில ஒலியியல் சார்ந்த விசைப்பலகை (phonetic keyboard ) தமிழ்99 என்ற தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட விசைப்பலகை, புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு சார்ந்த விசைப்பலகை ஆகியவைகளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பார்த்து பழக திரைவிசைப்பலகை, இதனைக் கொண்டு மிகச்சுலபமாகத் தமிழில் உள்ளீடு செய்யலாம்.

குறள் தமிழ்ச் செயலி மைக்ரோசாப்ட் வின்டோஸ் தொகுப்பில் இயங்கும்அனைத்துச் செயலிகளிலும் (Programs) தமிழை நேரடியாக உள்ளீடு செய்யப் பயன்படுகிறது. இதனைக் கொண்டு எம். எஸ் ஒபீஸ், ஸ்டார் ஒபீஸ், வேர்ட்பேட், நோட்பேட், இன்டர்னெட் எக்ஸ்புலோரர், பயர்பொக்ஸ், அடோபி தொகுப்புகள் ஆகிய செயலிகளிலும் தமிழை உள்ளீடுசெய்யலாம்.

மேலும் யாகூ மெசெஞ்சர், கூகுள் டோக், வின்டோஸ் லைவ் மெசஞ்ஜர் மற்றும் ஏ.ஓ.எல் இன்ஸ்டன்ட் மெசஞ்ஜர் ஆகிய செயலிகளின் வழியாகத் தமிழில் chat செய்யவும் முடியும். இப்பொழுது இத்தொகுப்பின் மூலம் யுனிகோட் தமிழில் மின்னஞ்சல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம். யுனிகோட் தமிழிலேயே chat செய்யவும் . மேலும் யுனிகோட் தமிழ்த் தகவல்களை இணையம் வழியாகத் தேடவும் முடியும்.

இக் குறள் தமிழ்ச் செயலியுடன் கவிதை சொற்செயலி (Word Processor), சொற்பிழை திருத்தி (Spell Checker), பறவை மின்னஞ்சல் (Mail Client), குறியீட்டுமுறை(Encoding Converter) தென்றல் - பெயர்த்தகு செயலி, மற்றும் எழுத்துருவகை மாற்றிகள் (Font Converter), ஓசை - தமிழ் உரை ஒலி (Text-to-Speech) ஆகியவை ‏இணைந்துள்ளன.

ஆங்கில ஒலியியல் (Phonetic Keyboard) சார்ந்த விசைப்பலகையும், தமிழ்99 என்ற தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட விசைப்பலகையும், புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு சார்ந்த விசைப்பலகைகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் கணினியில் தமிழில் பயன்படுத்தப்படும் எந்த எழுத்துருவையும் அதாவது TSC / TAB/ TAM/ UNICODE / LIPI என எதனையும் பயன்படுத்தலாம்.

இதில் Text-to-speech - எனப்படும் டைப் செய்ததை வாசிக்கும் வசதியும் உள்ளது. "கவிதை" எனும் சொற்செயலியில் தமிழில் டைப் செய்து உரிய பட்டனில் க்ளிக் செய்தால் அதனை வாசித்துக் காட்டுகிறது தமிழில் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் எழுத்துப் பிழை திருத்தும் வசதியும் இதில் உள்ளது.

ஆங்கில ஒலியியல் சார்ந்த விசைப்பலகையி‎‎ன் மூலம் தமிழில் இலகுவாக டைப் செய்யலாம். அதாவது ஆங்கிலத்தில் “ammaa” என டைப் செய்ய தமிழில் “அம்மா” என டைப் ஆவதைக் காணலாம். ‏

30 நாள்களுக்கு முழுமையாக இயங்கும் இத்தொகுப்பு, உங்களின் தேவை களைப் பூர்த்திசெய்கிறதா எனச் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். அச்சோதனை காலத்திற்குப் பின் கட்டணம் செலுத்A உரிமம் பெறாவிட்டால் தானாகவே இத்தொகுப்பு இலவச பதிப்பாக மாறிவிடும்.

- அ‎னூப்

What is Search Engine ?



Search Engine  எ‎ன்றால் எ‎ன்ன?

வேர்ல்ட் வைட் வெப் (world wide web) எனும் இணைய சேவைIல் இலட்சக்கணக்கான இணைய தளங்கள் உலகெங்குமுள்ள வெப் சேர்வர்கDல் சேமிக்கப்பட்டுள்ளன. இந்த இனைய தளங்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்வதென்பது எம்மால் இயலாத காரியம். அவ்வாறே எந்த இனைய தளத்தில் என்ன தகவல் உள்ளது என்பதும் நாமறியாத விடயம். இணைய உலாவலின் போது ஒரு இணையதளத்தின்‎ பெயரை சரியாகத் தெரியாவிட்டால், அல்லது உங்களுக்குத் தேவையான ஒரு தகவல் எந்த இணைய தளத்தில் உள்ளது எனத் தெரியாத விடத்து எம்மால் ஒரு தகவலைப் பெற முடியாதிருக்கும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நமக்குக் கை கொடுக்கிறது சேர்ச் எ‎‎ன்ஜின் எனும் தேடுபொறி. இந்த சேர்ச் என்ஜின் வசதி மட்டும் நமக்கில்லையானால் இணையத்தின் முழுமையான பயனை நம்மால் பெற முடியாது போயிருக்கும்.

சேர்ச் எ‎ன்ஜின் எ‎ன்பதை இணைய தள‎ங்களின் பெயர் மற்றும் அவற்றின் உள்ளடக்கம் போ‎ன்றவற்றைக் கொண்ட ஒரு பட்டியல் (catalogue) எனலாம். அந்தப் பட்டியலிலிருந்து உங்களுக்குத் தேவையான தகவலைப் பெறுவதற்குரிய சொல்லை அல்லது சொற்றொடரை சேர்ச் எ‎ன்ஜினுக்குரிய வெப் தளத்திலுள்ள கட்டத்தில் டைப் செய்து எ‎ன்டர் கீயை அழுத்த, அடுத்த கனமே உங்களுக்குத் தேவையான தகவல்களைக் கொண்டிருக்கும் ஏராளமான இணைய தளங்களின் பெயர்களை உங்கள் மு‎‎ன்னே காண்பிக்கிறது இந்தத் தேடுபொறி


சேர்ச் எ‎ன்ஜின் என்பது எமக்கு ஒரு வழமையான ஒரு இணைய தளம் போன்று எளிமையாகத் தோற்றமளித்தாலும் அது ஒரு விசாலமான தரவுத் தளத்தினை (Data base) த‎‎ன்னகத்தே கொண்டுள்ளது. இந்த சேர்ச் எ‎‎ன்ஜிமனின் முகப்புப் பக்கத்திலிருந்தே அந்த சேர்ச் எ‎‎ன்ஜினின் தரவுத் தளத்தை அடைகிறோம்.

சேர்ச் எ‎‎ன்ஜின் கொண்டு தகவல் தேடலில் ஈடுபடும் போது அந்தத் தகவல்கள் அடங்கியிருக்கும் வெப் சேர்வர்களை அதாவது சேர்ச் எ‎‎ன்ஜின்கள் வேர்ல் வைட் வெப் முழுவதும் அப்போதே நேரடியாகத் தேட ஆரம்பிப்பதில்லை. ஒவ்வொரு சேர்ச் எ‎‎ன்ஜினும் ஏற்கனவே தானியங்கி முறையில் உருவாக்கப்பட்டுள்ள தமது தரவுத்தளங்களில் அடங்கியுள்ள கோடிக் கணக்கான இனைய பக்கங்களிலுள்ள சொற்களில் (text) இருந்தே நாம் தேடும் தகவல் எந்த இணைய தளத்திலுள்ளது எ‎ன்பதைக் கண்டு பிடித்து நமக்குத் முடிவுகளாகத் தருகின்றன. அதாவது இணைய தேடலில் ஈடுபடு‎ம் போது ஒரு இணைய பக்கத்தின் நகலையே சேர்ச் எ‎‎ன்ஜின் எமது பார்வைக்குத் தருகிறது. இணைய பக்கங்களிலுள்ள டெக்ஸ்ட் எனப்படும் எழுத்துக்களையோ அல்லது சொற்களையோ சேர்ச் எ‎‎ன்ஜின் தேடலில் முடிவுகளாகப் பட்டியலிடுவதோடு அவற்றிற்கு இணைப்புக்களையும் (links) உருவாக்கிக் கொள்ளும். அந்த இணைப்பில் க்ளிக் செய்யும் போது உரிய இனைய தளத்தை நாம் அடைகிறோம். அந்த இணைய தளம் ஒரு வேளை இப்போது புதுப்க்கப்பட்டிருந்தால் அத‎ன் புதிய வடிவையே பார்க்க முடியும் .

சேர்ச் எ‎‎ன்ஜினின் தரவுத் தளங்களை உருவாக்கும் கணினி நிJரல்களை ரோபோட் (robot) ஸ்பைடர் (spider) மற்றும் க்ரோலர் (crawler) எனப் பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறன. இந்த க்ரோலர்கள் தரவுத் தளத்தில் சேர்ப்பதற்காக ஏற்கனவே தரவுத்தளங்களில் இருக்கும் இணைய பக்கங்களிலுள்ள லிங்ஸ் மூலம் புதிய தளங்களை தேடிச் செல்கின்றன. இந்த க்ரோலர்கள் இனைய தளங்களை அடிக்கடி சென்று பார்வையிடு வதோடு அவை பற்றிய விவரங்களை மாற்றங்களை தரவுத்தளத்தில் குறித்துக் கொள்ளும். ஒரு இணைய தளம் அல்லது ஒரு இணைய பக்கம் வேறொரு இணைய பக்கத்தை இணையாத விடத்து இந்த ரோபோட்டுக்களால் அவற்றைக் கண்டறிய முடிவதில்லை. இவ்வாறான வேறு இணைப்புகள் இல்லாத வெப் தளங்களின் பெயர்களை நாமாக ஒரு சேர்ச் எ‎ன்ஜினில் சேர்க்க வேண்டியிருக்கும். இந்த வசதியை அனைத்து சேர்ச் என்ஜின் சேவை தரும் நிறுவனங்களும் வழங்குகின்றன.

ஸ்பைடர்கள் புதிதாக இணைய பக்கங்களைக் கண்டறிந்த பின்‎னர் அது பற்றிய விவரங்களை வேறொரு கணினி நிரலுக்கு (program)அதனை வரிசைப்படுத்தும் பொருட்டு (indexing) வழங்குகின்றன. இந்த கணினி நிரல் அந்த வெப் பக்கத்திலுள்ள எழுத்துக்கள், இணைப்புக்கள் மற்றும் ஏ‎னைய உள்ளடக்கங்களைக் க‎ண்டறிந்து சேர்ச் எ‎‎ன்ஜினுக்குரிய தரவுத் தளத்தில் இணைய தளங்களின்‎ தரத்திற்கேற்ப அவற்றை வரிசைப்படுத்தி சேர்த்து விடுகின்றன, இவ்வாறு தரவுத் தளத்தில் சேர்க்கப்படும் விவரங்களை கீ வேர்ட் (key word) எனப்படும் முக்கிய தேடற் சொல் கொண்டு இணைய பயனர்களால் தேடக் கூடியதாக இருக்கும்.

தேடு பொறிக்குரிய முகப்புப் பக்கத்தில் (home page) நாம் தேடும் தகவலைச் சொல்ல உடனே தனது தரவுத்தளத்தை அடைந்து அதிலிருந்து முக்கியமான இணைய தளங்களின் பெயர்கள் முதலில் வருமாறும் எனையவற்றை அதற்கடுத்து வருமாறும் வரிசைப் படுத்தி முடிவுகளாகத் தரும். இணைய தளங்களின் உள்ளடக்கம் எ‎ன்ன, எ‎ன்பதனைப் பொருத்து வரிசைப்படுத்தல் வேறுபடும்.

சில நிறுவனகங்கள் சேர்ச் என்ஜின்‎ சேவை தரும் நிறுவனகங்களுக்குக் கட்டணம் செலுத்தி தமது நிறுவன இணைய தளத்தின்‎ பெயர் தேடல் முடிவுகளில் ஆரம்பத்தில் வருமாறு செய்திருக்கும். இவை Sponsored Links எனப்படும். இவைதா‎‎ன் உங்கள் தேடலுக்குப் பொருத்தனான முடிவு என நீங்கள் நினைக்கக் கூடாது.

இந்த தர வரிசைப்படுத்தல் எல்லா சேர்ச் எ‎ன்ஜினிலும் ஒரே மாதிரியிருக்காது. இவை ஒவ்வொரு சேர்ச் எ‎ன்‎ஜினும் கடை பிடிக்கும் வரிசைப் படுத்தல் முறைக்கமைய மாறுபடும். இதனால் தா‎‎ன் நாம் ஒரே தேடற் சொல்லைக் கொண்டு வெவ்வேறு சேர்ச் எ‎ன்ஜினில் தேடலில் ஈடுபடும் போது எமக்கு வேவ்வேறு முடிவுகளைத் தருகிறது.

சேர்ச் எ‎‎ன்ஜின் முடிவுகளைத் தரும் போது இணைய தளங்களில் என்னென்ன தகவல்கள் உள்ளன என்பதையும் சுருக்கமாகக் காட்டுவதோடு தேடல் முடிவுகள் அதிகமிருப்பின் அவற்றின் பக்க இலக்கங்களையும் கீழே பட்டியலிடும்.

இணைய தேடலுக்கு உதவி செய்ய ஏராளமான சேர்ச் எ‎ன்‎ஜின்கள் ஏராளம் இருந்தாலும் அவற்றில் Google, Yahoo , Windows Live Search. Ask , AOL, Altavista, Lycos, Hotbot, எ‎ன்‎பன பிரபல்யமான தேடு பொறிகளாகும்.

சேர்ச் எ‎ன்ஜினி உள்ள தேடுவதற்குரிய கட்டத்தில் நீங்கள் விரும்பிய எதனையும் டைப் செய்ய முடியும். எந்த சொற்களையும் பய‎‎ன்படுத்தலாம். சொற்கள் மட்டும‎ன்றி திகதி, இலக்கம் என எதையும் டைப் செய்யலாம். ஏன் கூட்டல் கழித்தல் போன்று எளிய கணித செயற்பாடுகளையும் டைப் செய்து விடை காணலாம். உங்கள் பிரச்சினைகள் மற்றும் வினாக்களுக்கும் ‎ கூட டைப் செய்து அவற்றிற்குத் தீர்வு காண முடியும்.

உதாரணமக உங்கள் கணினி பழுதடைந்திருந்தால் my computer has stopped working என டைப் செய்து அதற்கான பொதுவான முடிவுகளைப் பெறலாம். அத்தோடு உங்கள் கணினியைத் தயாரித்த க‎ம்பனியின் பெயரையும் சேர்த்துக் கொடுப்போமானால் அதாவது my ibm computer has stopped working எனக் கொடுப்போமானால் இன்னும் சிறப்பாக கிட்டிய முடிவதோடு இந்த முடிவுக:ளிலிருந்து உங்கள் பிரச்சினைக்கான தீர்வையும் பெறலாம்.

சேர்ச் எ‎ன்ஜின்கள் சில பொதுவான வார்த்தைக¨ளைப் புறக்கணிக்கும். உதாரணமாக தேடலில் ஈடுபடும் போது where is , what is போ‎ன்‎ற சொற்களைத் தவிர்க்கலாம். where is the eiffel tower எ‎ன்பத‎ன் முடிவுகளும் eiffel tower எ‎ன்பதன் முடிவுகளும் அனேகமாக ஒரே மாதிரியாகவே இருக்கும். அத்துடன்‎ ஆங்கிலத்தில் தேடும்போது capital / simple வேறுபாடும் (case sensitive) பார்ப்பதில்லை.

சில சேர்ச் எ‎‎ன்ஜின்கள் உங்கள் தேடலை இலகுவாக்க சேர்ச் பொக்ஸின் பக்கத்திலேயே சில விருப்புக்களைக் காட்டும். அதாவது படங்கள் போ‎ன்ற ஒரு குறிப்பிட்ட வகைப் பைல்களையே தேட வேண்டுமானால் Images எனும் லிங்கை ‎ சேர்ச் என்ஜின் முகப்புப் பக்கத்தில் வைத்திருக்கும். இத‎ன் மீது க்ளிக் செய்து சேர்ச் பொக்ஸில் உங்கள் தேடற் சொல்லை டைப் செய்ய படங்களை மட்டுமே தேடிப் பட்டியலிடும்.

சில சேர்ச் எ‎ன்ஜின்கள் Options அல்லது Preferences போ‎ன்ற இணைப்புகளைக் கொண்டிருக்கும். இத‎‎ன் மூலம் உங்கள் தேடலை குறிப்பிட்ட சில விதி முறைகளுக்கமையத் தேட முடிவதுட‎‎ன் நீங்கள் எதிர் பார்க்கும் தகவலைப் இலகுவாகப் பெறக் கூடியதாய் இருக்கும். அதேபோல் தேடு பொறிகள் (Safe Search) பாதுகாப்பான தேடல் எனும் வசதியைக் கொண்டிருக்கும். இத‎‎ன் மூலம் பார்க்கத் தகாத படங்கள், மற்றும் செய்திகளை வடிகட்டவோ அல்லது அனுமதிக்கவோ முடியும்.

சேர்ச் எ‎ன்ஜின்களில் AND, OR, NOT போன்ற Boolean Operator கொண்டு தேடுவதன் மூலம் உங்கள் தேடலை மேலும் இலகுவாக்Bக் கொள்ளலாம்.

பல சேர்ச் எ‎ன்ஜின் நிறுவனங்கள் தற்போது நீங்கள் விரும்பிய மொழியில் தேடுவதற்குரிய வசதியைத் தருகின்றன. தமிழ் மொழியிலும் கூட தேடலை மேற்கொள்ளலாம். தமிழில் தேட யுனிகோட் முறையிலமைந்த எழுத்துருவையே (font) பய‎‎ன்படுத்த வேண்டும்.

-அனூப்-

What is Spam?


ஸ்பாம் (SPAM) என்றால் என்ன?


உங்கள் இமெயில் ‏கணக்கிற்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களி டமிருந்து தினமும் உங்களுக்கு வேண்டாத ‏மெயில்களெல்லாம் வந்து குவிந்து உங்கள் மெயில் ‏‎பொக்ஸை நிரப்புவதைப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் கேட்காமலேயே உங்களிடம் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்கு வர்த்தக நோக்கில் வரும் இந்த வேண்டாத ‏மெயி‏ல்களையே ஸ்பாம் (spam) எனப்படுகிறது. வேண்டாத ‏ இந்தக் குப்பை மெயில் அனுப்புவோரை ஸ்பாமர் (spamer) எ‎ன்பர்.

‏‏இந்த ஸ்பாம் எமக்கு நேர விரயத்தை ஏற்படுத்துவதோடு சில வேளைக ளில் வேண்டாத பிரச்சினைகளிலும் சிக்க வைத்து விடுகிறது.

வர்த்தக நோக்கில் வரும் ‏ ‏ இந்த ஸ்பாம் மெயில்கள்,

• எமக்கு அவசியமேயில்லாத பொருட்கள் மற்றும் சேவைகள்
• நம்ப முடியாத விலைக் கழிவுட பொருட்கள்
• ‏இழந்த இளமைபோ மீட்டுக் கொள்ள மருந்து மாத்திரைகள்
• பல்கலைக் கழகம் செல்லாமலேயே பட்டப் படிப்புச் சா‎‎‎ன்றிதழ்கள்
• மலிவு விலையில் கணினி மெ‎‎‎‎ன்பொருள்கள்
• இணையம் வழி சூதாட்டம்
• குறுகிய காலத்தில் உங்களை குபேரனாக மாற்றும் திட்டம்
• மற்றும் ‎ சட்ட விரோத செயல்களுக்கு உதவுதல் போன்‎‎ற
தலைப்புகளை (subject) கொண்டிருக்கும். ‏ ‏இந்த தலைப்பைக் கொண்டே ‏ ‏இவை ஸ்பாம் அஞ்சல் எ‎ன்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

சில வேளை ‏ந்த ஸ்பாம் மெயில்கள் உங்களுக்கு வழமையாக வரும் ஒரு தனிப்பட்ட மெயில் போ‎‎‎ன்ற தோற்றத்துடன் அல்லது தலைப்புட‎ன் வந்தும் உங்களைத் திசை திருப்பக் கூடும்.

ஸ்பாம் உண்மையில் எமக்குப் பிரச்சினைதானா?

கணினி வைரஸ் போல் ஸ்பாம் அஞ்சல்கள் உங்கள் கனினியி‎ன்; செயற்பாட்டையோ அல்லது டேட்டாவையோ பாதிப்பதில்லை. எனினும் உங்கள் வியாபார நடவடிக்கைகளைப் பாதிப்பதோடு நேர விரயத்தையும் பண விரயத்தையும் கூட உண்டாக்குகிறது.

நீங்கள் தினமும் நூற்றுக் கணக்கான ‏,மெயில்களை வாடிக்கையாளர் களிடமிருந்து பெருகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ‏இவற்றுள் எவை ஸ்பாம் மெயில் என்பதைக் கண்டு பிடித்து அழிப்பதில் உங்களது அல்லது உங்கள் அலுவலக ஊழியரது நேரம் வீணாக விரயமாக்கப் படுகிறது. (மிக அரிதாக ‏ மி‎ன்னஞ்சல் பெறுபவர்கள் வே‎ண்டுமானால் ஸ்பாம்களைப் பார்த்து சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்.)

சில வேளை எது ஸ்பாம் எனக் கண்டறிய முடியாமல் உங்களுக்கு வந்த ஒரு முக்கிய ‏மெயிலையும் கூட தவறுதலாக நீங்கள் அழித்து விட வாய்ப்புண்டு.

எமக்கு முன்பின் அறியாத ஒரு நபர் எமது கம்பியூட்டரை தனது கட்டுப் பாட்டி‎ன் கீழ் கொண்டு வருவதோடு எமது கணினியிலிருந்தே, ஸ்பாம் அ‎ஞ்சல்களை வேறு நபர்களுக்கு அனுப்பிவிடுவார்கள். ‏ இதனால் யரோ ஒருவர் செய்யும் தவறுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

ஏ‎ன் ஸ்பாம் அஞ்சல்கள் அனுப்புகிறார்கள்?

‏ஸ்பாம் ஒரு வகை விளம்பர உத்தி எனக் கூடக் கூறலாம். மிகக் மிகக் குறைந்த செலவில் ஆ‏யிரக்கணக்கான மெயில்களை ‏ ஒரே தடவையில் அனுப்பி விடுகிறார்கள் ஸபாமர்கள். ‏இவர்கள் அனுப்பும் ‏மெயில்கள் கிடைக்கப் பெறும் பத்தாயிரம் பேரில் ஒரே ஒருவர் மட்டும் ஒரு பொருளை ‏இவர்களிடமிருந்து கொள்வனவு செய்து விட்டால் அல்லது சேவையைப் பெற்று விட்டால் போதும். அதன் மூலம் அந்த ஸ்பாமர் ,இலாபமடைந்து விடுகிறார்.

ஸ்பாம் அஞ்சலைத் தவிர்ப்பது எப்படி?

1. ஸ்பாம் எதிர்ப்பு அல்லது ஸ்பாம் வடிகட்டும் (spam filter) மெ‎‎‎‎‎ன்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள். ‏இதன் மூலம் ஸ்பாம் அஞ்சல்களை ஓரளவுக்குக் குறைத்து விடலாம். அத்துட‎ன் ஸ்பாம் பில்டரில் எவை எவை ஸ்பாம் என நாமே மு‎ன் கூட்டியே காட்டி விட்டால் மீ‎ண்டும் மீ‎ண்டும் அதே ஸ்பாம் வருவதைத் தடுக்கலாம்.

2. உங்களுக்கு வரும் ,மெயில் அனுப்பியவர் யார் எனத் தெரியாத பட்சத்தில் அதனை அழித்து விடுங்கள். சில வேளை அந்த ‏ஸ்பாம் மெயிலுடன் வைரசும் சேர்ந்திருக்கக் கூடும். அதனைத் திறந்து பார்க்க உங்கள் கணினி வைரஸ் தாக்கத்திற்குள்ளாகலாம்.

3. ஸ்பாம் அஞ்சலுக்கு ஒரு போதும் பதில் அளிக்கவோ அல்லது அதனோடு வரும் லிங்கில் க்ளிக் செய்யவோ வேண்டாம். அவ்வாறு பதிலளிப்பது சரியான ஒரு முகவரிக்கே நாம் மெயில் அனுப்பியுள்ளோம் எd;பதை ஸ்பாமருக்கு உணர்த்தி விடும்.

4. ஸ்பாம் ‏அஞ்சலில் வரும் விளம்பரங்களைப் பார்த்து பொருட்களையோ சேவையையோ பெற்று விடாதீர்கள். ‏இது மேலும் மேலும் ஸ்பாம் அஞ்சலைப் பெற வழி வகுப்பதோடு மாத்திரமி‎d;றி உமது ‏‏ஈ-மெயில் முகவரி ஏனைய ஸ்பாமர்களி‎ன் கையிலும் சேர வாய்ப்புள்ளது.

5. சில ‏ இணைய தளங்களில் படிவங்களை நிரப்பும்போது “மேலதிக விவரங்களைப் பெற” ஒரு check box ஐ தெரிவு செய்யவோ அல்லது நீக்கவோ வேண்டியிருக்கும். அதனைத் தெரிவு செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

6. இமெயில் அனுப்பும் ப்ரோக்ரம்களில் (Mail Client) உங்களது ‏மெயிலைத் திறந்து பார்க்காமலேயே அதன்‎‎‎ உள்ளடக்கத்தைக் காட்டும் (preview) வசதியுள்ளது. ‏ இவ்வாறு preview ல் பார்க்கும் போதே ஸ்பாமர்கள் தா‎ங்கள் அனுப்பிய ஸ்பாம் உரியவரைச் செ‎‎‎ன்றடைந்து விட்டதை உறுதி செய்து கொள்வார்கள். அவ்வாறு Preview ல் காட்ட வைக்காமல் அதன் தலைப்பை மட்டுமே பார்த்து நம்பகமான ‏மெயிலை மட்டும் திறவுங்கள்.

7. ஒரே ‏மெயிலைப் பல பேருக்கு அனுப்பும் போது Bcc (Blind Carbon Copy) எனும் , இ‏டத்தில் முகவரிகளை டைப் செய்யுங்கள். இந்த Bcc பகுதியில் டைப் செய்யும் ‏மெயில் முகவரிகள் நீங்கள் யார் யாருக்கு‎ ‏ இந்த இமெயில் அனுப்பியுள்ளீர்கள் எ‎ன்பதை மறைத்து விடும். மாறாக To பகுதியில் டைப் செய்தால் நீங்கள் டைப் செய்யும் முகவரிகள் அனைத்தும் ஸ்பாமர்களை அடையும்.

8. உங்கள் ‏மி‎ன்னஞ்சல் முகவரிகளை‎ நம்பிக்கையானவர்களிடம்‎ மட் டுமே பகிர்ந்து கொள்ளுங்கள்.

9. இணைய தளங்கள் மற்றும் நியூஸ் க்ரூப் போன்றவற்றைப் பார்வையிடும் போதும் ‏‏‏‏ இணைய அரட்டையில் ஈடுபடும் போதும் ‏இமெயில் முகவரிகளை வழங்க நேரிடும் போது மி‎ன்னஞ்சல் முகவரிகளில் பய‎ன்படுத்தப்படும் “ @ “ எனும் குறியீட்டுக்குப் பதிலாக AT என டைப் செய்யுங்கள். ‏இந்த “ @ “ குறியீட்டைக் கொண்டே ஸ்பாமர்கள் ‏ பயன்படுத்தும் ப்ரோக்ரம்கள் இது ஒரு மின்னஞ்சல் முகவரியென கண்டறிந்து கொள்ளும்.

10. எப்போதும் ஒரே‏ ‏இமெயில் முகவரியை மட்டும் பய‎ன் படுத்தாமால் ஒ‎ன்றுக்கு மேற்பட்ட முகவரிகளை பயன்ப‎டுத்துங்கள். உதாரணமாக அலுவலக தேவைக்கென ஒ‎ரு ‏‏இமெயில் முகவரி, தனிப்பட்ட தேவைக் கென ஒன்று மற்றும்‏,இணைய தளங்களில் வரும் படிவங்களை நிரப்பும் தேவைக்கென வேறொ‎‎‎‎‎ன்றும் என வெவ்வேறாக வைத்துக் கொள்ளுங் கள். ஸ்பாமர்களிடமிருந்து ஓரளவுக்குத் தப்பிக் கொள்ளலாம்.

-அனூப்-

Some useful MS PowerPoint tips


எம்.எஸ். பவபொயின்ட் -  தெரிந்ததும் தெரியாததும்


Add caption
பவபொயின்ட் ப்ரஸன்டேசன் ஒன்றினை ஸ்லைட் ஸோவாகப் பார்வையிடும் போது ஸ்லைட் ஸோவில் முன் பின் நகர்வதற்கான கட்டளைகளை மட்டுமே நம்மில் அனேகம் பேர் அறிந்து வைத்துள் ளோம். ஆனால் அது தவிர மேலும் பல வசதிகளைப் பவபொயின்ட் வழங் குகிறது. கீழே தரப்பட்டுள்ள கீபோர்ட் குறுக்கு வLகளையும் கட்டளை களையும் ஸ்லைட் ஸோவை ஓட Cட்டு செயற்படுத்திப் பார்க்கலாமே.

• ஸ்லைட் ஸோவை ஆரம்பிக்க F5
• ஒவ்வொரு ஸ்லைடாக முன் செல்ல N, Space, Page Down, , Enter
• ஒவ்வொரு ஸ்லைடாக பின் செல்ல P, Backspace, Page Up, ,,
• தானியங்கி முறையில் செயற்படும் ஸ்லைட் ஸோவை தற்காலிகமாக மீள ஆரம்பிக்கவும் S அல்லது ( + )
• ஸ்லைட் ஸோவை விட்டு வெளியெற ESC, CTRL+BREAK, அல்லது HYPHEN ( - )
• மறைத்து வைக்கப்பட்டுள்ள ஸ்லைடைப் பார்வையிட H
• ஸ்லைட் இலக்கத்தை டைப் செய்து என்டர் விசையை அழுத்த குறித்த ஸ்லைடைப் பார்வையிடலாம்.
• இலக்கம் ஒன்றை டைப் செய்து என்டர் விசையை அழுத்னால் முதல் ஸ்லைடுக்கு வரலாம்.
• மவுஸின் இரண்டு பட்டன்களையும் ஒரே நேரத்தில் இரண்டு வினாடிகளுக்கு அழுத்திக் கொண்டிருந்தாலும் முதல் ஸ்லைடுக்கு வந்து Cடலாம்.
• கறுப்புத் திரையைத் தோன்றச் செய்யவும் அதிலிருந்து மீளவும் B அல்லது PERIOD ( . )
• வெண் திரையைத் தோன்றச் செய்யவும் அதிலிருந்து வெளியேறவும் W அல்லது COMMA ( , )
• ஸ்லைட் ஸோவில் எழுதும் குறிப்புகளை இல்லாமல் செய்ய E
• டாஸ்க்பாரைத் தோன்றச் செய்ய CTRL+T
• டயலொக் பொக்ஸை தோன்றச் செய்ய CTRL+S
• கீபோட் குறுக்கு வழிகளைக் காண F1

Have you forgotten your user account password?

பாஸ்வர்ட் மறந்து விட்டதா?

அடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரை வில் ஏற்றிக் கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் பார்த்திருக்கிறோம்.  இவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் வேறு எவரும் தங்கள் அனுமதியில்லாமல் கணினியைப் பயன்படுத்தாத வாறும் பயனர் கணக்குக்குப் பாஸ்வர்ட் வழங்கியிருப்பர் பலர். அவ்வாறு வழங்கிய பாஸ்வர்டை மறந்து விட்டு கணினியை உபயோக்க்க முடியாமல் தவிப்பார்கள் இன்னும் பலர். இந்தப் “பலர்”களுக்கு உபயோகமன ஒரு விண்டோஸ் டிப்

விண்டோஸின் முன்னைய பதிப்புகள் போலன்றி எக்ஸ்பீ பதிப்பில் கட்டாயம் ஒரு பயனர் கணக்கை (User Account) உருவாக்கிய பிறகே கணினியை உபயோகிக்க வேண்டியுள் ளது. ஒன்றுக்கு மேல் பயனர் கணக்கை வைத்திருக்கும் போது ஒவ்வொருவரும் இந்தப் பயனர் கணக்கு மூலம் வெவ்வேறு செட்டிங்ஸ்ஸை கணினியில் பேணக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கிறது.

இந்த பயனர் கணக்கிலும், கணினியின் ஏக போக நிர்வாகி (Administrator) வரையறுக்கப்பட்ட பயனர் (limited user) என இரு வகைகளுண்டு. எட்மினிஸ்ட்ரேட்டர் என்பவருக்கு கணினியில் விரும்பிய மாற்றங்களைச் செய்ய முடியும். வரையறுக் கப்பட்ட பயனருக்கு எல்லா செட்டிங்ஸையும் மாற்ற உரிமையில்லை. அத்துடன் ஒவ்வொரு பயனரும் தங்கள் கணகிற்கு ஒரு பாஸ்வேர்டும் அளித்து தங்கள் செட்டிங்ஸ்களை எவரும் மாற்றாத வண்ணம் பாதுகாப்பளிக்கவும் முடியும். இது தவிர விண்டோஸ் Administrator எனும் பெயரி லும் ஒரு யூசர் கணக்கு இயல்பாகவே உருவாக்கப்படும்.

ஆனால் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் இல்லாமலேயே அடுத்தவர்கள் உங்கள் கணினியைப் பயன் படுத்த முடியும். அது எப்படி சாத்தியம். அதாவது மேலே குறிப்பிட்ட எட்மினிஸ்ட்ரேட்டராக கணினிக்கு உள்ளே நுளைய முடியும்.

கணினியை இயக்கியதும் வரும் விண்டோஸ் வெல்கம் திரையில் விசைப்பலகையிலுள்ள Ctrl + Alt + Del ஆகிய விசைகள் மூன்றையும் இரண்டு தடவை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது வேறொரு log on திரை தோன்றும். அங்கு யூசர் பெயராக Administrator என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அவ்வளவுதான்! அடுத்த சில வினாடிகளில் நீங்கள் உள்ளே நுளைந்து விடலாம்.

பாஸ்வர்ட் வழங்கப்பட்டுள்ள கணினியை இயக்க இன்னு மொரு வழியுமிருக்கிறது, பேசாமல் பாஸ்வர்ட் என்னவெண்று அந்த எட்மினிஸ்ட்ரேட்டரையே கேட்டுவிட வேண்டியதுதானே.


-அனூப்-

What is Safe Mode?


எதற்கு இந்த Safe Mode?

விண்டோஸ் என்பது பல விதமான வேலைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறந்த இயங்குதளம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் சில வேளைகளில் இந்த விண்டோஸ் நம்மை ஏமாற்றி விடுவது முண்டு; எரிச்சலூட்டுவதும் உண்டு. ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவும் போது அல்லது ஏதேனுமொரு வன்பொருள் சாதனத்தைக் கணினில் இணைப்ப தற்கான ட்ரைவர் மென்பொருளை நிறுவும்போது திடீரென கணினி நீலத் திரையுடன் இயக்கம் நின்று விடும் அல்லது உறைந்து விடும். பிறகு கணினியை மீள இயக்கும்போது வித்தியாசமான தோற்றத்துடன் டெஸ்க்டொப்பின் நான்கு மூலைகளிலும் Safe Mode எனும் வாசகங்களுடன் விண்டோஸ் பூட் ஆவதைக் காணலாம். இதுவே விண்டோஸின் சேப்மோட் நிலையைக் குறிக்க்கிறது. என்ன இந்த சேப் மோட்?

விண்டோஸின் வழக்கமான இயக்கம் பாதிக்கும் வகையில் ஏதேனும் பிரச்சினை தோன்றும் போது விண்டோஸை இயங்கு நிலைக்குக் கொண்டு வருவதற்கான ஒரு விசேட ஏற்பாடே இந்த சேப்மோட். விண்டோஸை வழமையாக இயங்க விடாமல் பண்ணிய காரணத்தைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய சேப்மோடைப் பயன்படுத்தலாம். சேப்மோடில் வைத்து பிரச்சினையைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்த பின்னர் கணினியை மீள இயக்கும்போது விண்டோஸ் வழமைபோல் இயங்க ஆரம்பிக்கும்.

சேப் மோடில் கணினியை இயக்கும்போது

• autoexec.bat, config.sys எனும் பைல்கள் இயக்கப்படுவதில்லை.
• அனேகமான டீவைஸ் ட்ரைவர் மென்பொருள்கள் இயக்கப்படுவதில்லை. உதராணமாக ப்ரிண்டர் , ஸ்கேனர் போன்ற வன்பொருள் கருவிகளை இயக்குவதற்கான மென்பொருள்கள் இயக்கப்படுவதில்லை.
• கணினியில் பொருத்Aயுள்ள விஜீஏ கார்ட்டிற்கான டீவைஸ் ட்ரைவருக்குப் பதிலாக விண்டோஸிலுள்ள வீஜீஏ ட்ரைவரே இயக்கப் படும்.

இது போன்ற பல செயற்பாடுகள் சேப்மோடில் முடக்கப்படுன்றன.

அத்துடன் விண்டோஸ் டெஸ்க்டொப் 16 வர்ணங்களுடன் 640 x 480 ரெஸலுயூசனுடனும் நான்கு மூலைகளிலும் சேப்மோட் எனும் வாசகங்க ளுடனும் தோன் றும்.

விண்டோசை ஆரம்பிக்கும்போது அது முறைப்படி இயங்க மறுத்திருந்தால் அடுத்த முறை இயக்கும் போது தானாகாவே விண்டோஸ் சேப்மோடில் இயங்கும். அவ்வாறல்லாமல் `நீங்களாகவே சேப் மோடிற்குச் செல்ல வேண்டுமானால் விண்டோஸை ஆரம்பிக்கும் போதே கீபோர்டில் F8 விசையை அழுத்துவதன் மூலம் வரும் பூட் மெனுவில் சேப்மோடைத் தெரிவு செய்து சேப் மோடிற்குள் பிரவேசிக்கலாம்.

சேப்மோடிற்குள் பிரவேசித்து என்னதான் செய்வது? கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கிய காரணத்தைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கே சேப்மோடில் நுளைகிறோம். உதாரணமாக, நீங்கள் எதேனுமொரு வன்பொருள் சாதனத்தைக் கணினியில் புதிதாக இனைத்திருந்தால், கன்ட்ரோல் பேனலில் நுளைந்து அதற்குரிய டீவைஸ் ட்ரைவரை அகற்ற வேண்டும். பின்னர் [பூட் செய்து விண்டோஸ் சரிவர இயங்கினால் அந்த வன்பொருளையும் அதற்கான டீவைஸ் ட்ரைவரையும் விண்டோஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதேபோல் ஏதேனுமொரு கணினி விளையாட்டு அல்லது பயன்பாட்டு மென்பொருளை நிறுவும்போது இப்பிரச்சினை தோன்றியிருந்தால் அதற்கும் இதே வழி முறையைக் கையாளலாம். அதாவது கன்ட்ரோல் பேனலில் Add / Remove Programs மூலம் அந்த மென்பொருளை அகற்றி விடுங்கள்.

விண்டோஸ் முறையாக இயங்காமைக்கான காரணம் வன்பொருளோ மென்பொருளோ அல்ல என இருந்தால் அனேகமாக விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி பழுதடைந்திருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் விண்டோஸை மீண்டும் புதிதாக நிறுவுவதன் மூலமே நிவர்த்தி செய்யலாம்.

-அனூப்-

For safe web browsing - Mozilla Firefox


பாதுகாப்பாக இணையத்தில் உலாவிட



இணைய உலாவி (web browser) என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் Internet Explorer தான். அந்த அளவுக்கு இணைய பாவனையாளர்கள் மத்தியில் இன்டனெட் எக்ஸ்ப் லோரர் பிரபல்யம் பெற்று விளங்குகிறது. இது விண்டோஸ் இயங்கு தளத்துடன் இலவசமாகக் கிடைப்பதும், எவராலும் பயன்படுத்தக் கூடிய வண்ணம் எளிய இடை முகப்பைக் கொண்டிருப்பதும் அதன் பிரபல்யத் துக்குக் காரணம் எனலாம். நெட்ஸ்கேப் நெவிகேட்டர், ஒபெரா, சபாரி என மேலும் பல பிரவுசர்கள் இருந்தாலும், இன்டனெட் எக்ஸ்ப்லோரர் அளவுக்கு அவற்றால் வரவேற்பைப் பெற முடியவில்லை.

இந்த இன்டனெட் எக்ஸ்ப்லோரர் கணினிப் பாவ¨னையாளளிடயே வரவேற்பைப் பெற்றாலும், பாதுகாப்பில் பல குறைகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதனை உபயோகிப்பதால் நம்மை அறியாமலேயே நமது கணினிக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. இண்டனெட் எக்ஸ்ப்லோ ரரிலுள்ள ஏராளமான ஓட்டை களால் நமது கணினில் ஸ்பைவெயர் (spyware) போன்ற வேவு பார்க்கும் மென்பொருள்கள் தானாகவே நிறுவப் பட்டு கணினியில் நமது செயற் பாட்டைக் கன்காணிப்பதோடு அது பற்றிய தகவல்களையும் அதனை உருவாக்கியவருக்கு அனுப்பி வைக் கிறது.

இந்த ஓட்டைகளை அடைக்கவென மைக்ரோஸொப்ட் நிறுவனம் Patches எனப்படும் ஒட்டுக்களையும் அவ்வப்போது வெளியிடுகிறது. எனினும் எத்தனை ஒட்டுக்களிட்டாலும் புதிது புதிதாக ஓட்டைகள் உருவாகி விடிவதால் இன்டனெட் எக்ஸ்ப்லோரரின் நம்பகத் தன்மை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

இன்டனெட் எக்ஸ்ப்லோரரில் இருக்கும் இந்த பாதுகாப்புக் குறைகளை உணர்ந்து எந்த ஸ்பைவெயர்களும் ஊடுறுவா வண்ணம் போதிய பாது காப்புக் கவசத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது Mozilla Firefox எனும் இணைய உலாவி.
.
மொஸில்லா நிறுவனத்தின் open source செயற் திட்டத்தில் உருவானதே இந்த பயபொக்ஸ் எனும் பிரவுசராகும். ஓபன் சோர்ஸ் செயற்திட்டம் எனப்படுவது ஒரு ப்ரோக்ரமுக்குரிய source code ஐ இலவசமாகப் பெற்று அதனை எவரும் தமது தேவைக் கேற்ப மாற்றியமைத்து அல்லது மேம்படுத்தி பின்னர் அதனைத் தமது தேவைக்கு மட்டும் உபயோகித் தல் அல்லது அனைவரும் பயன்படும் வண்ணம் செய்தலைக் குறித்து ந்ற்கும். எனவே பயபொக்ஸ் இணைய உலாவியின் வெற்றியில் மொஸில்லா நிறுவனத்தின் பங்களிப்பு மட்டுமன்றி நூற்றுக் கணக்கான தன்னார்வலர்களின் உழைப்பும் அடங்குகிறது.

மொஸில்லா பயபொக்ஸ் ஆரம்பத்தில் பீனிக்ஸ் எனும் பெயரிலேயே 2003 ஆம் ஆண்டில் அறிமுகமானது. பின்னர் பயபொக்ஸ் என பெயர் மாற்றப்பட்டது. தற்போது பயபொக்ஸின் அண்மைய பதிப்பான பய பொக்ஸ் 3 எனும் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பயபொக்ஸ் வெப் பிரவுசரை www.mozilla.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன் லோட் செய்து கொள்ளலாம்.

பயபொக்ஸ் இணைய உலாவியில் எழுத்துப் பிழை திருத்தி (spell checkers), விளம்பரத் தடுப்பு (advertisement blockers) போன்ற பிற நிறுவனங்களின் தயாரிப்புகளையும் இணைத்துக் கொண்டு செயலாற்ற முடியும். இவை Add-on என அழைக்கப்படுகின்றன. இது போன்ற எராளமான எட்- ஒன்கள் மொஸில்லா வலைத் தளத்தில் கிடைக்கின்றன. வேறு வலைத்தளங்களிலும் இது போன்ற எட்-ஒன்கள் காணப்படாலும் அவற்றை உபயோகவிப்பதை விட மொஸில்லா தளத்திலிருந்து பெறும் எட்-ஓன்கள் மிகவும் பாதுகாப்பானவை.

பயபொக்ஸ் பதுகாப்பில் மேம்பட்டதாயிருந்தாலும் டவுன்லோட் செய்யப்படும் பைலானது பிரவுசரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதால், அவ்வாறு டவுன் லோட் செய்யப்படும் பைலை வைரஸ் நீக்கி மென்பொருள் கொண்டு ஸ்கேன் செய்தே பயன்படுத்த வேண்டும்.

பயபொக்ஸின் விசேட அம்சங்களாக பொப்-அப் ப்லொக்கர் (pop-up blocker) மற்றும் tabbed browsing. எனப்படும் வெப் பிரவுஸரின் ஒரு விண்டோவுக்குள்ளேயே பல விண்டோக்களை தோன்றச் செய்யக்கூடிய வசதி என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த tabbed browsing. இணைய உலாவலில் புதிய அனுபவத்தைத் தருகிறது. இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட இணைய தளங்களை ஒரே விண்டோவுக்குலள் கொண்டு வர முடிவதுடன் டேப் மூலம் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு இலகுவாகத் தாவலாம்.

கூகில், யாஹூ, அமேசோன் போன்ற தேடு பொறிகளுக்கான (search engine) இணைப்பும் பிரவுஸரின் டூல் பாரிலேயே இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இணைய தேடலில் பயன்படுத்தப்படும் Keyword எனப்படும் தேடற் சொற்கனள் நாம் பாதி டைப் செய்ய மீதியை தானாகவே பூரணப்படுத்தி விடும். அத்தோடு உங்களுக்குத் தேவையான தகவலைத் தேடும் போது அனாவசியமாக வேறு தளங்களுக்குச் செல்லாமல், நேரடியாக உரிய தளத்ரதிற்கு மட்டுமே அழைத்துச் செல்லும்.

பயபொக்ஸ் எவரும் தமது இஸ்டம் போல் மாற்றியமைக்கக் கூடிய ஒரு இணைய உலாவி. கணினி ப்ரோக்ரமர் ஒருவர் சோர்ஸ் கோடை டவுன் லோட் செய்து மாற்ற்யமைக்கக் கூடியது போலவே சாதாரண பயனர் களும் பிரவுசரின் தோற்றத்தை மாற்றியமைக்கக் கூடியவாறு themes போன்றவையும் உள்ளன.

அத்துடன் பைல்களை பதிவிறக்கம் செய்யக் கூடிய டவுன் லோட் மேனேஜர் மூலம் பைல் ஒன்றை பவிறக்கிக் கொண்டிருக்கும்போது இணைய இணைப்பு துண்டிக்கப்படுமானால் விடுபட்ட இடத்திலிருந்தே மீண்டும் தொடரவும் முடியும்.

இன்டனெட் எக்ஸ்ப்லோரர் போன்ற வேறு பிரவுஸர்களிலிருந்து பயபொக்ஸ¤க்கு மாறும் போது அந்த பிரவுசரில் பயன்படுத்Aய புக்மார்க், மற்றும் பாஸ்வர்ட் போன்றவற்றை பயபொக்ஸிற்கு import செய்து கொள்ளவும் முடியும். அத்தோடு ஒரு இணைய தளத்தைப் பார்வைIட்டுக் கொண்டிருக்கும்போது பிரவுசர் சடுதியாக மூடிக் கொண்டால் அதனை மீள ஆரம்பிக்கும் போது பார்த்துக் கொண்டிருந்த அதே தளத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது.

இவ்வாறு பயபொக்ஸில் ஏராளமான வசதிகள் கிடைக்கப் பெறுகின்றன. இன்டனெட் எக்ஸ்ப்லோரருக்கு சவாலாக வெளிவந்துள்ள ஒரே இணைய உலாவி இந்த மொஸில்லா பயபொக்ஸ்தான்.

-அனூப்-

Malicious Software Removal Tool

தற்போது வைரஸ் என்பது கணினிப் பாவனையாளர்களுக்கு பெரும் தொல்லையாகவே இருந்து வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து காத்துக் கொள்ள ஒவ்வொரு கணினிப் பாவனையாளரும் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. அதே வேளை உலகில் கணினி பயன்படுத்துவோரில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே முறையான வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிறுவிக் கணினியைப் பாதுகாப்பதாகவும் ஏனையோர் வைரஸைக் கணினிக்குக் கணினி பரவச் செய்வதில் துணை புரிபவர்களாகவே இருப்பதாகவும் ஒரு மதிப்பீடு சொல்கிறது. இந்த நிலையை மாற்றி அமைக்கும் வண்ணம் மைக்ரோஸொப்ட் நிறுவனம் வெளிIட்டிருப்பதே Malicious Software Removal Tool எனும் வைரஸ் நீக்கும் மென்பொருள் கருவியாகும்.

விண்டோஸ் 2000, எக்ஸ்.பீ, மற்றும் விஸ்டா பதிப்புகளுக்கென மைரோஸொப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கருவியான இந்த Microsoft Malicious Software Removal Tool இதற்கு முன்னர் மைக்ரோஸொப்ட் நிறுவனத்தல் வெளியிடப்பட்டுள்ள வைரஸ் எதிர்ப்புக் கருவிகள் அனைத்தையும் விட மேம்பட்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நீக்கியை மைரோஸொப்ட் நிறுவனம் இலவசமாகவே வழங்குBறது.

வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கருவியை முதன் முதலாக 2005 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்த மைக்ரோஸொப்ட் நிறுவனம் அதன் புதிய பதிப்பை (Updates) ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க் கிழமைகளில் இணையம் வழியே வெளியிடுகிறது. விண்டோஸிலுள்ள Automatic Updates இயங்கு நிலையிலிருந்தால் நீங்கள் இணையத்தில் இணையும் போது ஒவ்வொரு மாதமும் இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் தானாகப் பதிவிறக்கப்படுவதோடு கணினி வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளதா என முழுமையான வைரஸ் சோதனையை நடத்தும். பின்னர் விண்டோஸை மீள ஆரம்பிக்கும் போது உங்கள் கணினியில் வைரஸ் நிலைமையை ஒரு அறிக்கையாகக் காண்பிக்கும். இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கருவியை நிறுவிய பின்னர் நீங்களாக இயக்க வேண்டுமானால் , Start  Run டயலொக் பொகஸில் mrt என டைப் செய்து ஓ.கே சொல்ல வேண்டும்.

எனினும் இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருளானது வைரஸ் தாக்குதலை ஓரளவுக்குக் குறைக்குமே தவிர முழுமையான ஒரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளாக செயற்படாது. அதாவது நோட்டன், மெகாபே போன்ற பிற நிறுவனங்களின் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளுக்கு இது ஈடாகாது. இவ்வாறு நான் சொல்லவில்லை. இதனை மைக்ரோஸொப்ட் நிறுவனமே சொல்லி வைக்Bறது. எனவே மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் இந்த வைரஸ் நீக்கியை, மாத்திரம் நம்பியிராமல் பிற நிறுவனங்களின் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளையும் கணினியில் னிறுவிக் கொள்வது நல்லது.

இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கருவியை மைக்ரோஸொப்ட் னிறுவன இணையதளத்தின் கீழுள்ள இணைப்பிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். http://go.microsoft.com/fwlink/?LinkId=௪0௫௮௭

-அனூப்-

What is OCR technology?


அச்சிட்ட ஆவணங்களை டெக்ஸ்டாக மாற்றும் OCR தொழில் நுட்பம்

ஸ்கேனர் கொண்டு படங்களை ஸ்கேன் செய்து அவற்றை டிஜிட்டல் வடிவில் மாற்றிக் கொள்ளலாம் என்பது எல்லோரும் அற்ந்ததே. அதே போல் ஸ்கேனர் பயன்படுத்தி அச்சிடப்பட்ட அல்லது கையினால் எழுதப் பட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து பின்னர் OCR தொழில் நுட்பத்துடன் edit செய்யக் கூடிய ஒரு டொகுயுமென்டாக மாற்றிக் கொள்ளவும் முடியும். ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட ஆவணங்களை மீண்டும் டைப் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் ஓ.சீ.ஆர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உடனடியாகவே அவற்றை ஸ்கேன் செய்து (editable text) ஆக மாற்றி விடலாம்.


Optical Character Recognition என்பதன் சுருக்கமே OCR. இது அச்சிட்ட அல்லது கையினால் எழுதப்பட்ட எழுத்துக்களை கணினியினால் அடையாளம் காணும் ஒரு தொழில் நுட்பமாகும். இச் செயற்பாட்டில் ஆவணத்தை ஒரு Bitmap இமேஜ் ஆக ஸ்கேன் செய்தல், ஸ்கேன் செய்ததை அடையாளம் காணல், அதனை ASCII போன்ற text code வடிவிற்கு மாற்றல் ஆகிய செயற்பாடுகளைக் கொண்டிருக்கும்.

அதேவேளை ஒரு புத்தகம் அல்லது சஞ்சிகையில் வெளிவந்த ஏதோவொரு ஆக்கமொன்றை எடிட் செய்யக் கூடிய ஆவணமாக மாற்ற வேண்டுமனால் ஒரு ஸ்கேனர் மட்டும் கொண்டு இதனை மாற்ற முடியாது. ஸ்கேனர் மூலம் இதனை ஒரு இமேஜ் பைலாக மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு ஸ்கேன் செய்த அல்லது டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கப்பட படத்திலிருந்து டெக்ஸ்டை வாசித்தறிய ஒரு ஓ.சீ.ஆர் மென்பொருளும் அவசியம். ஓ.சீ.ஆர் மென்பொருள் அந்த ஆவணத்திலிருந்து எழுத்துக்கள் ஒவ்வொன்றாக கண்டறிந்து சொல்லாகவும் வாக்கியமாகவும் மாற்றி விடுகிறது.

ஓ.சீ.ஆர் தொழில் நுட்பம் மூலம் ஸ்கேன் செய்த ஆவணம் மட்டுமன்றி பீ.டீ.எப் பைல், மற்றும் டிஜிட்டல் கேமரா முலம் எடுக்கப்பட்ட படங்களில் எழுத்துக்கள் இருக்குமானால் அவ்வெழுத்துக்களையும் ஓ.சீ.ஆர் மூலம் எடிட் செய்யக் கூடிய பைலாக மாற்றிக் கொள்ளலாம்

ஓ.சீ.ஆர் தொழில் நுட்பம் புத்தகங்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றவும் பாதுகாக்கவுமென நூலகங்களில் பெருமளவு பயன்படுத்தப்படுககிறது. அதேபோல் தபால் நிலையங்களில் தபால்களை வகைப்படுத்தல் மற்றும் வங்கிகளில் காசோலைகளை இனம் காணல் போன்ற செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப் படுBறது.

எனினும் ஓ சீ.ஆர் தொழில் நுட்பத்ததின் மூலம் மாற்றப்படும் ஆவணம் நூறு வீதம் திருத்தமாக இருக்கும் என சொல்ல முடியாது. எனினும் காலப்போக்கில் இத்தொழில் நுட்பம் மேலும் வளரும் என எதிர் பார்க்கலாம்.

ஓ.சீ.ஆர் தொழிநுட்பம் கொண்ட பல மென்பொருள்கள் தற்போது பாவனைIலுள்ளன. அவற்றில் OmniPage, ABBYY FineReader, ParaVision, Recognita, ReadIris என்பவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். சில ஓ.சீ.ஆர் மென்பொருள்கள் ஸ்கேனர் வாங்கும் போதே இலவசமாகக் கிடைக்கும்.

ஓ.சீ.ஆர் மென்பொருள் மைக்ரோஸொப்ட் ஒபிஸ் தொகுப்பிலும் இணைந்தே வருகிறது. இவ்வசதி தற்போது ஆங்கிலம் உட்பட ஒரு சில மொழிகளுக்கே கிடைக்கிறது.

MS-Office XP / 2003 யுடன் வரும் ஓ.சீ.ஆர் மென்பொருளை Start  Programs  MS-Office Tools  MS-Office Document Scanning என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் இயக்கலாம். ஸ்கேன் செய்த பின்னர் அதனை நேரடியாக அங்கிருந்தே MS-Word க்குள் நுழைத்து விடலாம்.

ABBYY FineReader எனும் ஓ.சீ.ஆர் மென்பொருள் மூலம் ஆவணத்தை ஸ்கேன் செய்தல், எழுத்துக்களைக் கண்டறிதல், நீங்கள் விரும்பும் வடிவில் சேமித்துக் கொள்ளல் என மூன்றே படிகளில் இலகுவாக மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பைலை DOC, RTF, XLS, PDF, HTML, TXT என பல்வேறு பைல் வடிவங்களில் சேமிக்கவும் முடியும்.

அதேபோல் தமிழில் அச்சிடப்பட்ட ஆவணங்களை ஓசீஆர் முறைப்படி டெக்ஸ்டாக மாற்றிக் கொள்ள “பொன்விழி” எனும் மென்பொருள் உதவுகிறது. பொன்விழி பற்றி மேலுமொரு ஐ.டி வலத்தில் பார்க்கலாம்.

-அனூப்-

What is high speed USB 2 ?


அதி வேக USB 2  என்றால் என்ன?

கீபோட், மவுஸ், ப்ரின்டர் போன்ற உள்ளிடும் மற்றும் வெள்யிடும் சாதனங்களைக் கணினியுடன் இணைப்பதற்கான ஒரு வன்பொருள் இடை முகப்பே யூ.எஸ். பீ போர்ட் (USB Port) என்பதாகும். Universal Serial Bus என்பதன் சுருக்கமே (USB) யூ.எஸ்.பீ இந்த யூ.எஸ்.பீ போர்டுகள் தற்போது அனைத்துக் கணினிகளிலும் இணைந்து வருகின்றன. சிஸ்டம் யூனிட்டின் முன்புறம், ப்ன்புறம், பக்க வாட்டில் என ஒன்றுக்கு மேற்பட்ட யூ.எஸ்.பீ போர்டுகள் இணைந்து வருகின்றன. யூ.எஸ்.பி போர்டுகளை எளிதாகப் பயன்படுத்த முடிவதுடன் கணினியிலுள்ள ஏனைய சீரியல், பெரலல் போர்டுகளைப் போலல்லாது மிக வேகமாகவும், தரவுகளைக் கடத்த வல்லவை.

யூ.எஸ்.பீ போர்ட் மூலமாக பல்வேறு சாதனங்களை கணினியில் இணைக்கலாம். யூ.எஸ்.பீ போர்ட் மூலம் இணைக்கக் கூடிய சாதனங்களாக கீ போர்ட், மவுஸ், ப்ரின்டர், ஸ்கேனர், டிஜிட்டல் கேமரா, வெப் கேம், ,ஹாட் டிஸ்க், மோடம், ஸ்பீக்கர், மொபைல் போன், ஐ-போட் என ஒரு நீண்ட பட்டியலே போடலாம். யூஎஸ்பீ சாதனங்களில் மிகவும் பிரசித்தமானதும், பலராலும் உபயோகிக்கப்படும் கருவியாக பென் ட்ரைவைக் (Pen Drive) ஐக் குறிப்பிடலாம்

அத்துடன் யூ.எஸ்.பீ வழியாக ஒரே நேரத்தில் 127 சாதனங்களைக் கணினியில் இணைத்துக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பியல்புகளில் ஒன்று. தற்போது வரும் அனைத்து வன்பொருள் சாதனங்களான கீபோர்ட், மவுஸ், ப்ரின்டர், ஸ்கேனர், டிஜிட்டல் கேமரா, மொபைல் போன் என அனைத்து சாதனகங்களும் யூஎஸ்.பீபோர்ட் மூலமாக இணைத்துக் கொள்ளக் கூடியதாகவே வருகின்றன.

கணினியை இயங்கு நிலையில் வைத்தே எந்த வொரு யூ.எஸ்.பீ சாதனத்தையும் கணினியுடன் பொருத்தவோ, அல்லது அகற்றவோ முடியும் என்பது யூ.எஸ்.பீ போர்டில் கிடைக்கும் மற்றுமொரு வசதியாகும்.

ஒரு யூ.எஸ்.பீ சாதனத்தை கணினியில் இலகுவாக இணைத்து விடலாம். கணினியில் நிறுவியுள்ள இயங்கு தளம் யூ.எஸ்.பீ போர்டுகளை செயற்படுத்தும். அதே வேளை ஒரே நேரத்தில் பல வகையான யூ. எஸ்.பீ சாதனங்களை கணினியில் இணைத்துக் கொள்ள (USB hub) எனும் சாதனம் பயன்படுத்தப்படுகிறது.

யூ.எஸ்.பீபோர்ட் மூலம் 0.5 amps (500 milliamps) அளவான மின்சாரமும் பிரயோகிக்கப்படுகிறது. எனவே குறைந்த அளவு மின் சக்தி தேவைப்படும் சாதனங்கள் கணினியிலிருந்தே அதனைப் பெற்றுக் கொள்ள முடியும். மவுஸ், கீபோர்ட், டிஜிட்டல் கேமரா, மொபைல் போன் போன்றவற்றின் இயக்கத்திற்கான மின் சக்தியை யூ.எஸ்.பீ போர்ட் மூலமாக கணினியிருந்தே வழங்கலாம். எனினும் பிரின்டர், ஸ்கேனர் போன்ற யூ.எஸ்.பீ சாதனங்களை கணினியில் இணைக்கும் போது அதற்கான மின் இணைப்பும் தனியாக வழங்க வேண்டும்.

யூஎஸ்பீ போர்டுகள் முதன் முதOல் 1997 ம் ஆண்டில் கணினிகளில் அறிமுகமாகின. யூ.எஸ்.பீ போர்டுகள் யூ.எஸ்.பீ 1, யூ.எஸ்.பீ 1.1, யூ.எஸ்.பீ 2 என தரப்படுத்தப்படுகின்றன. பழைய கணினிகள் யூ.எஸ்.பீ1. ஐயே ஆதரிக்கனின்றன. எனினும் தற்போது யூ.எஸ். பீ2 ஐ ஆதEக்கும் சாதனங்களே பாவனையிலுள்ளன. யூ.எஸ்.பீ 2 வகை போர்ட்டுகள் 1.5 Mbps (megabits per second) எனும் (Low Speed) குறைந்த வேகத்திலும், 12 Mbps எனும் (Full Speed) முழுமையான வேகத்Aலும் 480 Mbps அதியுயர் வேகத்திலும் (Hi-Speed) டேட்டாவைக் கடத்துகின்றன. இவற்றுள் 480 Mbps வேகம் கொண்ட அதியுயர் வேகம் கொண்டவை இவை யூ.எஸ்.பீ2 வகையைச் சேர்ந்ததாகும்.

யூ.எஸ்.பீரி2 வை ஆதEக்கக் கூடிய ஒரு ஹார்ட் வெயர் சாதனத்தை யூ.எஸ்.பீ 1 ஆதரவு கொண்ட கணினியில் இணைக்கும் போது விண்டோஸ் டாஸ்க் பாரில் சிஸ்டம் ட்ரே பகுதியில் ஒரு செய்தி தோன்றுவதை நீங்கள் பர்த்திருக்கலாம். யூ.எஸ். பீ 2 ஆதரவழிக்கக் கூடிய கணினியில் இந்த சாதனம் உயர் வேகத்தில் டேட்டாவைக் கடத்தும் என்பதனையே அந்த செய்தி குறிக்கிறது.

யூஎஸ்பீ 1 , 1.1, 2 என பல தரப்படுத்தல்கள் இருந்தாலும் அனைத்தும் ஒரே வகையான கனெக்டர்களையே கொண்டிருக்கும். கனெக்டர்களில் மாற்றம் எதுவுமில்ல. யூ.எஸ்.பீ 2 தரத்தைச் சார்ந்த சாதனத்தை யூ.எஸ்.பீ 1 தரம் கொண்ட கணினியிலும் இணைத்துக் கொள்ளலாம். எனினும் அவ்வாறு இணைக்கும் போது யூ.எஸ்.பீ 1 தரத்திற்கு ஏற்றவாறு குறைந்த வேகத்திலேயே சாதனம் டேட்டாவைக் கடத்தும். இதனை ஆங்Bலத்தில் backwards compatible என்பர்.

உமது கணினியில் எந்த வகையான யூ.எஸ்.பீ போர்ட் உள்ளது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது? My Computer ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். அங்கு தோன்றும் டயலொக் பொக்ஸில் Hardware எனும் டேபில் க்ளிக் செய்து Device Manager தெரிவு செய்யுங்கள். அங்கு பட்டியலிடப்படும் சாதங்களிலிருந்து Universal Serial Bus controller என்பதநன விரிக்க Enhanced என வந்தால் அது யூ.எஸ்.பீ 2 ஆகும். இல்லையென்றால் யூ.எஸ்.பீ 1.0 அல்லது 1.1 எனக் கொள்ளுங்கள்.

-அனூப்-

Handwriting Recognition feature in MS Office 2003


கையெழுத்தை அச்செழுத்தாக மாற்றும் தொழில் நுட்பம்

Handwriting Recognition என்பது கையெழுத்தை அச்செழுத்தாக மாற்றும் ஒரு தொழில் நுட்பம். ரைடி‎ங்பேட் (Writing Pad), ஸ்டைலஸ் அல்லது மவுஸை உபயோகித்து திரையில் எழுதுவதை அடுத்த வினாடியே அச்செழுத்தாக (text) மாற்றுகிறது HR engine எனும் ‏இம் மெ‎‎ன்‎ பொருள். எம்.எஸ்.வேர்ட் போன்ற சில புரோக்ரம் களில் கையெழுத்தை டெக்ஸ்டாக மாற்றாமல் எழுதியவாறே‏ இன்க் மோடில் (Ink Mode) டொகுயுமென்‎டில் நுளைத்துக் கொள்ளவும் முடியும். ஹே‎ன்ட் ரைட்டிங் ரெகக்னிசன் வசதி மைக்ரொசொப்ட் ஒபிஸ் தொகுப்பின் எக்ஸ்பீ மற்றும் 2003 பதிப்புகளில் இணைக்கப்பட்டுள்ளது. எனினும் ஒபிஸ் தொகுப்பின் அண்மைய பதிப்பான ஒபிஸ் 2007 ல் இது இணைக்கப்படவில்லை. பதிலாக விண்டோஸ் விஸ்டாவில் சேர்க்கப்பட் டுள்ளது.

ஹேன்‎ட்ரைடிங் ரெகக்னிசனுக்கு ஒத்திசைவு வழங்கும் புரோக்ரம்களில் ‏இன்டனெட் எக்ஸ்ப்லோரர், அவுட்லுக் எக்ஸ்பிரஸ், மற்றும் மைக்ரோ ஸொப்ட் ஒபிஸ் எ‎ன்பன குறிப்பிடத்தக்கவை.

ஹேன்‎ட்ரைடிங் ரெகக்னிசனை செயற்படுத்த ஒரு டிஜி ட்டல் ரைட்டிங் பேட் அவசியம். ரைட்டிங் பேட் ‏இல்லாதிருந்தால் மவுஸையே எழுதுவதற்கு உபயோகிக்கலாம். எனினும் மவுஸை விட ரைட்டிங்பேட் கொண்டு இலகுவாக எழுதலாம். அத்துட‎ன்‎ வின்டோஸ் 98 அல்லது அதற்குப் பிந்திய பதி‏ப்பு நிறுவியிருத்தல் வேண்டும்.

ஹே‎ன்ட்ரைட்டிங் ரெகக்னிசன் ஒபிஸ் எக்ஸ்பி மற்றும் 2003 யுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் ஒபிஸ் தொகுப்பை முழுமையாக நிறுவும் ‎ போதே ஹெச்.ஆர் எ‎ன்ஜி‎னும் நிறுவப்படும்

உங்கள் கணினியில் ஹெச்.ஆர் எ‎ன்ஜி‎ன் நிறுவப்பட்டுள்ளதா எ‎ன்‎பதை அறிந்து கொள்ளப் பி‎‎ன்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

1. க‎ன்ட்ரோல் பேனலில் Regional and Language Options திறவுங்கள்,
2. Languages டேபி‎ல் Text services and input Languages என்பத‎ன் கீழ் வரும் Details பட்டனைக் க்ளிக் செய்யுங்கள்
3. Install Services என்பத‎ன் கீழ் வரும் Add பட்டனைக் க்ளிக் செய்யவும்.
4. Handwriting Recognition என்பது அங்கு ‏ இருந்தால் உங்கள் கMனியில் ஹே‎ன்ட்ரைட்டிங் ரெகக்னிசன் ‎ என்ஜின் நிறுவப்பட்டுள்ளது


ஹெச்.ஆர் எ‎ன்ஜி‎ன் ‎ நிறுவப்படா திருந்தால் பி‎ன்வரும் வழிமுறையில் நிறுவிக் கொள்ளலாம்.

1. க‎ன்‎ட்ரோல் பேனலில் Add / remove Programs திறந்து கொள்ளவும்.
2. Change or remove Programs க்ளிக் செய்யுங்கள்
3. மைக்ரொசொப்ட் ஒபிஸ் 2003 க்ளிக் செய்த பிறகு Change பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.
4. Add / remove features ல் க்ளிக் செய்து நெக்ஸ்ட் க்ளிக் செய்யுங்கள்.
5. Choose advanced customization of applications தெரிவு செய்து நெக்ஸ்ட் க்ளிக் செய்யவும்
6. Features to install எ‎‎ன்பத‎‎ன் கீழ் Office shared features எ‎ன்‎பதை இரட்டை க்ளிக் செய்யவும்.
7. Alternative user input எ‎‎ன்பதை ‏‏இரட்டை க்ளிக் செய்யுங்கள். பிறகு Handwriting க்ளிக் செய்யவும். கீழ் நோக்கிய அம்புகுறியில் க்ளிக் செய்து Run from my computer தேர்வு செய்யவும். பிறகு update பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.


ஹே‎‎ன்ட்ரைட்டிங் ரெகக்னிசனை எவ்வாறு ‏செயற்படுத்துவது?

ஹேன்ட்ரைட்டிங் ரெகக்னிசனை அல்லது ஸ்பீச் ரெகக்னிசனை ‏ நிறுவும்போது Language Bar எ‎ன்ற ஒரு டூல்பாரும் டெஸ்க்டொப்பில் வந்து விடும். உள்ளீடு செய்யும் மொழியாக ஒ‎‎ன்றுக்கு மேற்பட்ட மொழிகளைத் தேர்வு செய்திருந்தால் டாஸ்க்பாரிலும் வந்துவிடும். வராதிருந்தால் டாஸ்க் பாரி‎‎ன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் டூல்பார்ஸ் தேர்வு செய்து அதில் வரும் லெங்குவேஜ் பாரை க்ளிக் செய்யவும். டாஸ்க் பாருக்கு வந்ததும் அத‎ன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Restore the Language Bar தெரிவு செய்யவும். ‏ இப்போது டெஸ்க்டொப்பில் அதனைப் பார்க்கலாம். அதனை திரையில் எப்பகுதிக்கும் நகர்த்தலாம். மினிமைஸ் செய்யவோ அல்லது க்லோஸ் செய்யவோ அதன் ‎ மீது ரைட் க்ளிக் செய்ய வரும் மெனுவிலிருந்து தேவையான கட்டளைகளை செயற்படுத்தவும்.

லெங்குவேஜ் பாரை பின்வரும் வழிமுறையிலும் வரவைக்கலாம். எம்மெஸ் வேர்டைத் திறந்து கொள்ளு‎ங்கள். அதில் டூல்ஸ் மெனுவில் ஸ்பீச் தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸை கேன்ஸல் செய்து விடுங்கள். லெங்குவேஜ் பாரைத் திரையில் பார்க்கலம்.

ஹே‎ன்ட்ரைட்டிங் ரெகக்னிசனிலும் ஸ்பீச் ரெகக்னிசனிலும் கட்டளைகளை செயற்படுத்துவதற்கான பட்ட‎ன்கள் n‏இந்த லெங்குவேஜ் பாரிலேயே இருக்கி‎‎ன்றன. ‏இதன் ‎ மூலம் உங்கள் தேவைக்கேற்ப அவற்றில் மாறிக் கொள்ளலாம். ‏கையெழுத்தை உள்ளீடு செய்ய லெங்குவேஜ் பாரிலுள்ள ஹே‎ன்ட்ரைட்டிங் என்ற பட்டனில் க்ளிக் செய்யவும். அப்போது ஒரு மெனு தோன்றும் அதில் Writing Pad மட்டுமன்‎றி Write Anywhere, Drawing Pad , On Screen Keyboard, On Screen Symbol Keyboard எனப் பல வசதிகள் ‏அங்கிருப்பதைக் காணலாம்.

அந்த மெனுவில் ஹேன்ட்ரைட்டிங்கில் க்ளிக் செய்ய ரைட்டிங்பேட் வி‎ண்டோ தோன்றும். அதன் ‎ வலது பக்க ஓரமாக பட்ட‎ன்களையும் காணலாம். அதில் டெக்ஸ்ட் பட்டணை தெரிவு செய்துவிட்டு ரைட்டிங்பேட் விண்டோவில் மவுஸை உபயோகித்து மவுஸி‎ன் இடது பக்க பட்டனை அழுத்தியவாறு மவுஸ் பேடின் ‎ மீது அதனை நகர்த்தி ஆங்கிலத்தில் எழுதவும். எழுதுவதை நிறுத்திய அடுத்த வினாடியே உங்கள் கையெழுத்தை அறிந்து அதனை டெக்ஸ்டாக மாற்றப்பட்டு எம்மெஸ் வேர்ட் டொகுயுமெ‎ன்டில் நுளைப்பதைக் காணலாம். எனினும் நீங்கள் எழுதும் விதத்தைப் பொறுத்தே அத‎ன் செயற்பாடு அமையும். அதேபோல் இன்க் மோடில், கையெழுத்து டெக்ஸ்டாக மாற்றப்படாமல் எழுதியவாறே ‏இன்சர்ட் செய்யப்படும். அதனை ஆங்கிலத்தில்தா‎‎ன் எழுத வேண்டும் எ‎‎‎ன்ற கட்டாயம் ‏‏இல்லை. எந்த மொழி யிலும் எழுதலாம். ‏இந்த விண்டோவை திரையி‎ன் எந்தப் பகுதிக்கும் நகர்த்த முடிவதோடு அதனை விருப்பம் போல் அளவை பெரிது படுத்துக் கொள்ளவும் முடியும்.

ஹேன்ட்ரைட்டிங்கை க்ளிக் செய்ய வரும் மெனுவில் Write Anywhere தேர்வு செய்தால் திரையில் எந்தப் பகுதியிலும் விருப்பம்போல் எழுதலாம். அதற்கும் ஒரு டூல்பார் தோ‎ன்றும். அதிலும் டெக்ஸ்ட் மோட், ‏இன்க் மோட் இரண்டயும் செயற்படுத்தலாம்.

அடுத்ததாக உள்ள Drawing Pad மூலம் படங்கள் வரைந்து டொகுயுமென்டுக்குள் நுளைக்கலாம். On-Screen Keyboard மூலம் கீபோட் துணையி‎‎ன்றியே ‏மவுஸை உபயோகித்து ‏இலகுவாக டைப் செய்யலாம். அதேபோல் On-Screen Symbol Keyboard மூலம் விசேட குறியீடுகளை ‏இன்சர்ட் செய்து கொள்ளவும் முடியும்.

-அனூப்-

Run Commands


ரன் கமாண்ட்

விண்டோஸ் இயக்கச் சூழலில் ஸ்டாட் மெனுவில் உள்ள ரன் கமாண்டை அறிந்திருப்பீர்கள். இதன் மூலம் கணினியில் நிறுவியுள்ள ஒரு ப்ரோக்ரமை திறந்து கொள்ளலாம். எப்லிகேசன் ப்ரோக்ரமை பல வழிகளில் திறக்க முடிந்தாலும் ரன் கமாண்ட் மூலம் இலகுவாகவும், விரைவாகவும் திறந்து பணியாற்றலாம். 

ப்ரோக்ரம்ஸ் லிஸ்டில் அல்லது டெஸ்க் டொப்பில் இல்லாத ஒரு ப்ரோக்ரமை திறக்கவும் ரன் கமாண்ட் உதவுகிறது. ப்ரோக்ரம் மட்டுமன்றி ஒரு போல்டரை அல்லது பைலையும் கூட ரன் கமாண்ட் மூலம் திறந்து கொள்ளலாம். ஒரு கணினி வலையமைப்பில் இணைந்திருந்தால் வலையமைப்பிலுள்ள ஏனைய கணினிகளை அணுகுவதோடு இணையத்தில் இணைந்திருந்தால் இனையதள முகவரிகளைக் கூட டைப் செய்து ரன் கமாண்ட் மூலம் அத்தளங்களை அடையலாம். டெஸ்க்டொப் short cut மூலமாகவும் இலகுவாக எப்லிகேசன்களைத் திறக்க முடிந்தாலும் அனைத்து ப்ரோக்ரம்களுக்கும் டெஸ்க்டொப்பில் short cut உருவாக்கி விட்டால் டெஸ்க்டொப், ஐக்கன் வனமாக மாறிவிடும். அதனால் டெஸ்க்டொப் short cut ஐ விடவும் ரன் கமாண்ட் ஒரு எப்லிகேசனைத் திறப்பதற்கான சிறந்த வழி எனலாம்.

ஒரு ப்ரோக்ரமை போல்டரை அல்லது பைலை ரன் கமாண்ட் மூலம் திறப்பதானால் open பொக்ஸில் அதன் அமைவிடத்துக்குரிய வழியை Browse பட்டனில் க்ளிக் செய்து காட்டி ஓகே சொல்லிவிட்டால் போதும்.

அதேபோல் அண்மையில் திறந்து பார்த்த ப்ரோக்ரம் மற்றும் பைல்களை ரன் டயலொக் பொக்ஸில் open எனுமிடத்தில் பட்டியலிடும். அதிலிருந்து தேவையான ப்ரோக்ரமை தெரிவு செய்து அல்லது புதிதாக பெயரை டைப் செய்து திறக்கலாம்.

ஆனால் சில எப்லிகேசன்களை முழுமையான (path)பாதையைக் காட்டாமல் அதன் பெயரை மட்டும் டைப் செய்தும் திறக்கலாம். Path environment க்குள் அடங்கும் எப்லிகேசன்களையே இவ்வாறு திறக்கலாம். பாத் சூழல் எனப்படுவது கணினியிருக்கும் குறிப்பிட்ட சில போல்டர்களையே குறிக்கிறது. இந்த போல்டர்களுக்குள் இருக்கும் பைல்களைத் திறக்க Path ஐ குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. \Windows\ மற்றும் \Windows\ system32\ போல்டர்கள் பாத் என்வயரன்மென்ட் போல்டர்களுள் அடங்கும். இந்த போல்டர்களுக்குள் இருக்கும் எப்லிகேசன், எக்ஸசரீஸ் மற்றும் எப்லட்ஸ் போன்றவற்றை அதன் .exe பைல் பெயரை மட்டும் ரன் டயலொக் பொக்ஸில் டைப் செய்து திறக்கலாம். regedit, msconfig என்பவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இவற்றை Start- All Programs மூலம் திறந்து கொள்ள முடியாது. ரன் டயலொக் பொக்ஸ் மூலம் மட்டுமே இது போன்ற எப்லிகேசன்களைத் திறக்க முடியும்.

பாத் என்வயரன்மென்டுக்குள் இல்லாத பைல்களைத் திறப்பதானால் அவற்றின் முழுமையான பாதையை காட்டிக் கொடுப்பதனால் மட்டுமே திறக்கலாம். நீளமான பாத்தாக இருந்தால் அதனைப் டைப் செய்யாம லேயே Browse பட்டனில் க்ளிக் செய்து உரிய பைலைக் காட்டி விடலாம். அடிக்கடி பயன்படுத்தும் எப்லிகேசனை பாத் என்வயரன் மென்டில் சேர்த்து விடுவது நல்லது. ரன் டயலொக் பொக்ஸைத் திறந்து வைத்து டெஸ்க்டொப்பில் உள்ள எந்த ஒரு short cut ஐக்கனையும் ட்ரேக் என்ட் ட்ரொப் செய்து போடுவதன் மூலமும் அந்த பைலுக்குய பாத்தை ரன் லைனில் உருவாக்கி விடலாம்.

சில எப்லிகேசன்களை கணினியில் நிறுவும் போதே அந்த எப்லிகேன் பாத் சூழலில் சேர்க்கப்பட்டு விடும். உதாரணமாக எம்.எஸ்.ஒபிஸை நிறுவும்போது வேர்ட், எக்ஸல், எக்ஸஸ் போன்ற எப்லிகேசன்கள் பாத் என்வயரென்மென்டில் சேர்க்கப்பட்டு விடும். அதனால்தான் winword என டைப் செய்ய Microsoft Word ம் excel என டைப் செய்ய Microsoft Excel ம் திறக்கப்படுகின்றன.

எந்தவொரு எப்லிகேசனையும் பாத் என்வயரென்மென்டில் சேர்த்து விட பின்வரும் வழிமுறையைக் கையாளலாம்.

ரன் டயலொக் பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்ல Registry Editor விண்டோ தோன்றும். அங்கு HKEY_LOCAL_MACHINE எனும் போல்டருக்கு இடது புறமுள்ள (+) குறியீட்டில் க்ளிக் செய்ய விரியும் போல்டர் களிலிருந்து software எனும் போல்டரை விரியச் செய்யுங்கள். இவ்வாறு HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\App Paths\ என ஒவ்வொரு போல்டராகத் திறந்து கொண்டு வந்து க்ளிக் App Paths க்ளிக் செய்ய ஏராளமான .exe எனும் `ட்டிப்புடன் கூடிய போல்டர் களைக் காணலாம். இங்கு எடிட் மெனுவில் க்ளிக் செய்து New Key தெEவு செய்ய ஒரு போல்டர் உருவாகும். உங்கள் ரன் கமாண்ட் மூலம் திறக்க விரும்பும் எப்லிகேசனுக்குரிய பொருத்தமான சுருக்கமான நீங்கள் விரும்பிய ஒரு பெயரை .exe எனும் நீட்டிப்புடன் வழங்க வேண்டும். (இந்தப் பெயரையே ரன் கமாண்டாகப் பயன்படுத்த வுள்ளீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.) பின்னர் அந்த போல்டரைத் தெரிவு செய்து விண்டோவுக்கு வலப்புறமுள்ள பகுதியில் default எனும் பெயரிலிருக்கும் ஐக்கனில் க்ளிக் செய்து Edit மெனுவில் Modify தெரிவு செய்யுங்கள். அடுத்து தோன்றும் டயலொக் பொக்ஸில் Value Data எனுமிடத்தில் அந்த எப்லிகேசனுக்குரிய முழுமையான பாத்தை வழங்க வேண்டும். இப்போது ரன் கமாண்ட் மூலம் அந்த எப்லிகேசனை நீங்கள் ஏற்கனவெ கொடுத்த பெயர் கொண்டு திறக்கக் கூடியதாயிருக்கும்.

விண்டோஸ¤டன் இணைந்து வரும் சில ப்ரோக்ரம்களுக்கான ரன் கமாண்ட் இங்கு பட்டியலிடப் படுகிறது. ரன் கமான்ட் எவ்வளவு வேகமாகச் செயல்படுகிறது என்பதை நீங்களும்தான் பரீட்சித்துப் பாருங்கள்..


-அனூப்-