Tuesday, November 25, 2008

A useful Windows tip


உபயோகமான  ஒரு விண்டோஸ் டிப்

ஒரு போல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறீர்கள். கணினியை மறுபடியும் இயக்கியதும் அந்த போல்டரை நீங்களாகத் திறக்காமலேயே தானாக்வே அந்த போல்டரை திறந்த நிலையில் வர வைக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பீயில் இயல்பு நிலையில் இந்த வசதி நீக்கப்படிருக்கும். இந்த வசதியைப் பெற பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.

ஏதேனும் ஒரு போல்டரைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு Tools மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்க்ள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபின் கீழ் Advanced settings பகுதியின் கீழ் Restore previous folder windows at logon என்பதைத் தெரிவு செய்து ஓகே செய்யுங்கள்.. அவ்வளவு தான். இனி ஒரு போல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியை ரீஸ்டார்ட் செய்து பாருங்ககள். கணினி மறு படி இயங்கியதும் அந்த போல்டர் திறந்த நிலையிலேயே வரக் காணலாம்.
- அனூப் -

What is File Extension ?


File Extension என்றால் என்ன?

கணினியிலிருக்கும் ஒவ்வொரு பைலும் ஒன்று முதல் ஐந்து வரையிலான எழுத்துக்களைக் கொண்ட ஒரு சொல்லை பைல் பெயரின் இறுதியில் இணைத்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.. இதனையே பைல் எக்ஸ்டென்ஸன் எனப்படுகிறது. உதாரணமாக .doc, .ppt, .jpg, .txt, .mp3, .avi என ஏராளமான எக்ஸ்டென்சன் கொண்ட பைல் வகைகள் உள்ளன. இந்த பைல் எக்ஸ்டென்சன் மூலம் இது என்ன வகையான பைல் என்பதைக் கண்டறியலாம்.. பைல் பெயரும், எக்ஸ்டென்சனும் ஒரு புள்ளி (dot) கொண்டு பிரிக்கப்படும். இந்த பைல் எக்ஸ்டென்ஸன் இயங்குதளமான ஒபரேடிங் சிஸ்டம் மற்றும் பயனருக்கு அது எந்த வகையான பைல், அதனை எந்த மென்பொருள் கொண்டு திறக்க வேண்டும் என்பதை உணர்த்தி விடுகிறது.

தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் பாவனையி ளுள்ளன. இவை ஒவ்வொன்றும் தனக்கேயுரிய பைல் எக்ஸ்டென்சனைக் கொண்டிருக்கும். இவை அனைத்தையும் அறிந்திருப்பது என்பது சாத்தியமான விடயமல்ல. எனினும் பொதுவாகப் பாவனையிலுள்ள மென் பொருள்களின் பைல் எக்ஸ்டென்சனை நினைவில் வைத்திருக்க முடியும். அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருள்களின் பைல் எக்ஸ்டென்சனை அறிந்து வைத்திருப்பது அந்த பைல்களை இனங்காண வசதியாயிருக்கும். .doc, .jpg, .txt என்பன பொதுவாகப் பாவனையிலுள்ளவை. ஒரு பைல் எக்ஸ்டென்சனை உங்களால் அறிது கொள்ள முடியாத போது இணைய தேடலில் மூலம் அதே பைல் எக்ஸ்டென்சனுக்குரிய மென்பொருளை அறிந்து கொள்ளலாம்.

விண்டோஸ் எக்ஸ்பீயில் இயல்பு நிலையில் பைல் எக்ஸ்டென்சன் எப்போதும் மறைக்கப்பட்டேயிருக்கும். ஒரு பைல் பெயருடன் அதன் எக்ஸ்டெண்டஸனையும் காண்பிக்குமாறு செய்வது நல்லது. கணினியைத் தாக்கக்ககூடிய வைரஸ் போன்றவை .exe பைலுடன் சேர்ந்து வர வாய்ப்புள்ளது. இந்த வகை பைல்கள் இரட்டை எக்ஸ்டென்சன் கொண்டிருக்கும். பைல் எக்ஸ்டென்சன் மறைந்திருக்கும்போது எவ்வகை யான பைலைக் கையாளுகிறோம் என்பதை நாம் அறிய மாட்டோம். இவ்வாறான பைல்களைத் திறக்கும்போது வைரஸ் போன்ற நச்சு நிரல்கள் கணினியைத் தாக்கலாம்.

அதேவேளை பைல் எக்ஸ்டென்ஸன் மறைக்கப் படாதபோதும் சில பிரச்சினைகள் வரலாம். அதாவது ஒரு பைல் பெயரை மாற்றும் போன்று அதற்குரிய எக்ஸ்டென்சனையும் வழங்க வேண்டியிருக்கும். அவ்வாறு வழங்காவிட்டால் அந்த பைலை மறுபடியும் உபயோகிக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது. எனினும் பைல் எக்ஸ்டென்சன் மறைக்கப்பட்ட நிலையில் பைல் பெயரை மாற்றும்போது அதன் எக்ஸ்டென்சனை வழங்க வேண்டியதில்லை.

சில ப்ரோக்ரம், மாற்றிய பைல் எக்ஸ்டென்சனை அறிந்து அந்த பைலைத் திறக்கும். எனினும் அனைத்து மென்பொருள்களும் அவ்வாறு திறக்கும் என எதிர் பார்க்க முடியாது. ஆகவே ஒரு பைல் எக்ஸ்டென்சனை மாற்றும் போது அதிக கவனம் தேவை. அத்தோடு நீங்கள் அடிகடி பயன்படுத்தும் மென்பொருள்களுக்குரிய பைல் எக்சஸ்டென்சன் பற்றியும் அறிந்து வைத்திருத்தல் நல்லது.

இமேஜ் பைல் வகைகளான .jpg, .gif, .bmp போன்றவற்றை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த பைல் போமட்டுகளை வேறு எந்த மென் பொருள் துணையின்றி ஒரு போமட்டிலிருfது இன்னொரு போமட்டிற்கு விண்டோஸிலேயே இல்குவாக மாற்றிக் கொள்ளலாம். அதாவாது ஒரு .jpg பைலை .gif ஆகவோ .bmp ஆகவோ மாற்ற வேண்டுமானால் அதன் பைல் எக்ட்ஸ்டென்சனை மாற்றி விட்டாலே போதும்.

விண்டோஸ் எக்ஸ்பீயில் பைல் எக்ஸ்டென்சனைத் தோன்றச் செய்ய பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள். முதலில் Start - All Programs - Accessories ஊடாகச் சென்று windows Explorer தெரிவு செய்யுங்கள். (அல்லது ஏதேனுமொரு போல்டரைத் திறந்து கொள்ளுங்கள்) அந்த விண்டோவில் Tools மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபின் கீழ் Hide Extension for known file types என்பது தெரிவு நிலையில் இருந்தால் அதனை நீக்கி விட்டு ஓகே க்ளிக் செய்யுங்கள். இப்போது ஒவ்வொரு பைலையும் அதன் எக்ஸ்டென்சனுடன் பார்க்கலாம்.

- அனூப் -

Tuesday, November 18, 2008

What is IP Address?

IP Address என்றால் என்ன?


ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet protocol எனபதைக் குறிக்கிறது.

அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது.. இதனை ஆங்கிலத்தில்; uniqueness எனப்படுகிறது.


இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும், இதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான (Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும்.

ஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதிகளும் பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும். ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது, மேலுள்ள ஐபி முகவரி 11011000.00011011.00111101.10001001 எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவரியிலுள்ளா இந்த நான்கு பிரிவுகளையும் ஒரு ஒக்டட் (Octets) எனப்படும். பைனரி எண் வடிவில் ஒவ்வொரு இலக்கமும் 8 இடங்களைக் கொண்டிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு எட்டு இலக்கங்களினதும் கூட்டுத் தொகையாக 32 எனும் இலக்கம் கிடைக்கிறது. இதனாலேயே ஐபி முகவரிகள் 32 பிட் எண் எனக் கருதப்படுகின்றன. 

இந்த ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு நிலைகளைக் கொண்டிருக்க முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட ஒவ்வொரு ஒக்டட் கொண்டும் 28 = 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருக்க முடியும். இவ்வாறு நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 வெவ்வேறான் சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவாக்கலாம். அதாவாது இந்த முறையினை உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் கணினிகளுக்கு வெவ்வேறான ஐபி முகவரிகளை வழங்கி விடலாம்..


க்ளையனட் / சேவர் என்ன வேறுபாடு

இணையத்தில் இனைந்துள்ள ஒவ்வொரு கணினியையும் சேர்வர் / க்ளையண்ட் என இரு வகைப்படுத்தலாம். இணையத்தில் இணைந்துள்ள ஏனைய கணினிகளுக்கு சேவை வழங்கும் கணினிகளை சேர்வர் (Server) எனப்படுகிறது. இவற்றுள் வெப் சேர்வர் (web server) , மெயில் சேர்வர் (mail server) எனப் பல வகையுண்டு. அவ்வாறே இந்த சேர்வர்களிலிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் கணினிகளை க்ளையண்ட் ( Client) எனப்படுகிறது.

.உதாரணமாக இணையத்தில் இணைந்து யாஹூ இணைய தளத்தைப் பார்வையிட விரும்புகிறீர்கள். அப்போது நீங்கள் யாஹூ நிறுவனத்தின இணைய தளம் சேமிக்கப்பட்டிருக்கும் சேர்வரையே அணுகுகிறீர்கள். அந்த சேர்வரே உங்களுக்கான சேவையை வழங்குகிறது. சேவையைப் பெற்றுக் கொள்ளும் உங்கள் கணினியை க்ளையண்ட் எனப்படுகிறது, இங்கு சில கணினிகள் சேர்வராகவோ க்ளையண்டாகவோ தொழில் படவும் வாய்ப்புள்ளது. ஒரு சேர்வர் இணையத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளையும் வ்ழங்கலாம். சேர்வரில் இயங்கும் மென்பொருள் வெப் சேர்வராக, மெயில் சேர்வராக (Mail Server) , எப்டிபி (FTP Server) சேர்வராக இயங்கலாம்.

ஐபி முகவரிகள் எண்களால் ஆனது. அது தசம எண்ணாகவோ அல்லது பைனரி இலக்கமாகவோ இருப்பினும் எண்களை நம்மால் நினைவில் வைத்திருப்பது இலகுவான விடயமல்ல.  இதனைக் கருத்தில் கொண்டே ஐபி முகவரிக்குப் பதிலாக சொற்களைப் பயன்படுத்தும் முறை அறிமுகமானது. இதனை டொமேன் நேம் சிஸ்டம் (Domain Name System) எனப்படும். இதற்காக டொமேன் நேம் சேர்வர் பயன்படுத்தப்படுகிறது. இந்த டொமேன் நேம் சேர்வர்கள் ஐபி முகவரிகளையும் அதற்குரிய டொமேன் பெயர்களையும் கொண்ட ஒரு தரவுத் தளத்தைப் பேணி வருகிறது.

வெப் பிரவுஸரில் நீங்கள் ஒரு இணைய தள முகவரியை டைப் செய்யும்போது வெப் பிரவுசர் இந்த டொமேன் நேம் சேர்வரையே முதலில் அணுகுகின்றன. அந்த இணைய தள முகவரிக்குரிய ஐபி முகவரியைக் கண்டறியும் டொமேன் நேம் சேர்வர் அதனை வெப் பிரவுஸருக்குத் தெரியப்படுத்துகிறது. இங்கு சரியான ஐபி முகவரியைப் பெற்றுக் கொள்வதற்குப் பல டொமேன் நேம் சேர்வர்களின் பங்களிப்பு இருக்கும். ஒரு இணைய தளத்துக்குரிய ஐபி முகவரியை நீங்கள் அறிந்திருந்தால் அதன் மூலமும் ஒரு இணைய தளத்தைப் பார்வையிட முடியும்.

ஐபி முகவரியை எவ்வாறு அறிந்து கொள்வது?

விண்டோஸ் இயங்கு தளத்தில் ஸ்டாட் மெனுவில் Run தெரிவு செய்ய வரும் ரன் பொக்ஸில் cmd என டைப் செய்து ஓகே செய்யுங்கள். அப்போது தோன்றும் விண்டோவில் ipconfig என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த உங்கள் கணினியின் ஐபி முகவரியைக் காணலாம். ஒரு வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருந்தால் மட்டுமே ஐபி முகவரியைக் காணலாம் எனபதையும் நினைவில் கொள்ளுங்கள்.


- அனூப் -

Monday, November 10, 2008

What are Cookies?


Cookies  என்றால் என்ன?


கேள்விகள் பல கொண்ட ஒரு இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள். முதல் வினா முதல் பக்கத்திலும் இரண்டாவது மூன்றாவது வினாக்கள் அடுத்தடுத்த பக்கங்களிலுமுள்ளதாக வைத்துக் கொள்வோம். இரண்டாவது பக்கதிற்குச் செல்லும்போது முதல் பக்கத்தில் இருந்த கேள்விக்கான விடையைத் தெரிவு செய்தவரே இரண்டாம் பக்கத்தை தற்போது பார்வையிடுகிறார் என்பதை அந்த இணைய தளம் சேமிக்கப்பட்டுள்ள வெப் செர்வர் அறிந்து கொள்கிறது. இவ்வாறு பல இணைய பக்கங்களிலுள்ள கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் கடைசியாக அனைத்து விடைகளுக்குமான புள்ளிகளை மொத்தமாக சொல்லி விடுகிறது அந்த இணைய தளம். இது எவ்வாறு சாத்தியம்?

மேற் சொன்ன செயற்பாட்டின் போது வெப் சேர்வருக்கு உதவுகிறது நமது கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒரு சின்னஞ் சிறிய டெக்ஸ்ட் பைல். இதனையே குக்கீ எனப்படுகிறது.

சில இணைய தளங்களைப் பார்வையிடும்போது அந்த வெப் சேர்வர் ஒரு குக்கீ பைலை உமது கணினியின் ஹாட் டிஸ்கில் சேமித்து விடுகிறது. இதன் மூலம் அந்த குக்கீ பைலுக்குரிய நபர் நீங்கள் தான் என்பதை சேர்வர் நினைவில் கொள்ளும். இங்கு குக்கீ பைல் ஒரு அடையாள அட்டை போல் செயல்படுகிறது. மீண்டும் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட தளத்தைப் பார்வையிடும்போது உங்கள் வெப் பிரவுசர் அந்த குக்கீயை சேர்வருக்கு அனுப்பி விடுகிறது. இதன் மூலம் வெப் செர்வர் அந்த இணைய தளத்தில் நுளைந்திருப்பது முன்னர் வந்து போகும் நபர்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதோடு அந்த இணைய தளத்தில் எந்த ஒரு பக்கத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாலும் உங்களை சேர்வர் இனம் காணும்

முன்னர் பார்வையிட்ட ஒரு இணைய தளத்தை மறுபடியும் பார்வையிடும்போது குக்கீஸ் நமக்கு உதவுகின்றன. உதாரணமாக ஒரு பயனர் பெயரை குக்கீ பைலாக நமது கணினியில் சேமித்தவுடன் அந்த பயனருக்குரிய பாஸ்வர்ட், இமெயில் முகவரி, தற்போதைய தேர்வுகள் போன்ற வேறு விவரங்களை சேர்வரில் உள்ள தரவுத் தளத்தில் பதியப்பட்டு விடும்.. அந்த குக்கீயில் பதியப்பட்ட பயனர் பெயரைக் கொண்டு அவரின் பாஸ்வர்டை மறுபடியும் டைப் செய்யாமலேயே அவர் பற்றிய விவரங்கள அறிந்து கொள்கிறது, இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இணைய தளத்திற்குள் ஒருவரின் செயற்பாட்டை அறிந்து கொள்ளவும் நேரத்தை சேமிக்கவும் முடியுமாயுள்ளது.
அவ்வாறே இணையம் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போதும் (online shopping) அந்த தளங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை குக்கீஸில் போட்டு விடுகிறது. இதன் மூலம் அந்த தளங்களை மறுபடியும் பார்வையிடும்போது உங்கள் பெயர் விவரங்களை மறுபடியும் வழங்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

குக்கீஸ் இணையத்தில் உங்கள் செயற்பாட்டை அவதானிக்கவே உருவாக்கப்படுகின்றன.. ஒரு குக்கீயை உருவாக்கும்போது அவ்விணைய தளத்தின் பெயரும் அந்த குக்கீயில் பதிவாகிவிடும். . அதன் மூலம் அந்த குக்கீயைத் திறந்து பார்க்க அவ்விணைய தளத்திற்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். ஏனைய் தளங்களால் அந்த குக்கீயைப் பார்வையிட முடியாது.

சில இணைய தளங்கள் வியாபார நோக்கம் கொண்ட நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்ந்து அவர்களின் குக்கீகளை நமது கணினியில் சேமித்து விடும். இவை மூன்றாம் தரப்பு குக்கீ (Third party cookies) எனப்படும். இதன் மூலம் அவ்வியாபார நோககம் கொண்ட நிறுவனங்கள் தங்கள் குக்கீகளை பயன்படுத்துவோரின் இணைய் செயற்பாட்டை அவதானிப்பதோடு அவர்களை இணையத்தில் பின் தொடர்ந்து கொண்டேயிருக்கும். . அதாவது நீங்கள் எவ்வாறான இணைய பயனர், உங்கள் விருப்பு என்ன, எவ்வகையான பொருட்களை இணையத்தின் வ்ழியே கொள்வனவு செய்கிறீர்கள போன்ற விவரங்களைப் பெற்றுக் கொள்ளும்.

எடுத்துக் காட்டாக ஒரு இணைய தளத்திலிருந்து ஒரு டிஜிட்டல் கேமராவை வாங்கி விடுகிறீர்கள். அப்போது குக்கீயைப் பகிர்ந்து கொள்ளும் வேறு நிறுவன இணைய தளங்களும் கேமரா போன்ற வேறு இலத்திரனியல் சாதனங்களை உங்களுக்கு விற்பனை செய்ய முயலும்.

ஒரு இணைய தளத்தில் இமெயில் முகவரியை வழங்கும் போது அதன் சக நிறுவனங்களும் அதனை அறிந்து கொண்டு நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு வேண்டாத குப்பை அஞ்சல்களையெல்லாம் உங்களுக்கு அனுப்பி விடும். உங்களைப் பற்றி இவர்கள எப்படி அறிந்து கொண்டார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.

குக்கீஸ் என்பவை மிகச் சிறிய டெக்ஸ்ட் பைல்களே. இவை .txt எனும் பைல் நீட்டிப்பைக் கொண்டிருக்கும். அது ஹாட் டிஸ்கில் சேமிக்கப்பட் டிருக்கும். விண்டோஸில் குக்கீ பைல்கள் c - சீ ட்ரைவில் Documents and Settings போல்டரில் உள்ள பயனர் கணக்கிற்குரிய Cookies போல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும்.

எனினும் இவற்றால் கணினிக்கு எந்த வித பாதிப்பம் ஏற்படாது. இவை வெறும் டெக்ஸ்ட் பைல்களேயன்றி .இதன் மூலம் வைரஸை கணினியில் பரவச் செய்திட முடியாது. நீங்கள் ஒரு இணைய தளத்தில் வழங்கிய தகவல்களை அந்த இணைய தளம் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளாதவரை குக்கீஸால் எந்த வித பாதிப்பும் இல்லை.

இணைய தளங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை நினைவில் வைத்திருக்க குக்கீஸ் உதவுவதால், உங்கள் கணினியை உபயோகிக்கும் வேறொரு நபரால் நீங்கள் ஏற்கனவே பார்வையிட்ட இணைய தளங்களைப் பர்வையிட வழி கிடைத்து விடுகிறது.

குக்கீஸ் மேல் உங்களுக்கு நம்பிக்கையில்லையானால் அதனை அனுமதிக்காது விடலாம் அல்லது குக்கீஸ் எனும் வசதியை வெப் பிரவுசரிலிருந்து முடக்கி விடலாம். எனினும் இவ்வாறு செய்வதால் வேறு சில வசதிகளைப் பெற முடியாது போய்விடும். சிலர் தங்கள் கணினியில் பதிவாகியிருக்கும் குக்கீஸை அவ்வவப்போது அழித்து விடுவதும் உண்டு. இவ்வாறு அழிப்பது சில வேளை சிக்கலை ஏற்படுத்தவும் கூடும். ஏனெனில் சில தளங்கள் குக்கீஸ் இல்லாது தமது தளத்தை அணுக விடாது..

அனேகமான வெப் பிரவுசர்களில் குக்கீஸைக் கட்டுப் படுத்துவத்ற்கன வசதியுள்ளது., இதன் மூலம் குறிப்பிட்ட சில பாதுகாப்பான இணைய தளங்களிலிருந்து மட்டும் குக்கீஸை அனுமதிக்கலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் குக்கீகளை எவ்வாறு தடுப்பது?

இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Tools மெனுவில் Internet Options தெரிவு செய்யுங்கள். அங்கு Privacy டேபின் கீழ் ஸ்லைடர் கொண்டு குக்கீ அளவினைக் கட்டுப்படுத்தலாம். Block All Cookies, High, Medium High, Medium, Low, Accept All cookies என ஆறு தெரிவுகள் இருக்கும். (Block All Cookies) தெரிவு செய்வதால் அனைத்து குக்கீகளையும் தடுக்க முடியும்.. இத்தகைய செயலமைப்பால், எந்தவொரு இணைய தளமும் கணிணிக்குள், குக்கீகளை உட்புகுத்தி சேமிக்க இயலாது. அனைத்து குக்கீகளையும் தடுத்தால், மிகுதியான இணைய தளங்களை பார்வையிடுவதை தடுக்க நேரிடும்.. அடுத்த இரண்டு நிலைப்பாடுகளான, உயர்வு (High), மிதமான உயர்வு (Medium High), ஆகியவை மிக்க பொருத்தமானவையாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட தளத்திற்கான குக்கீயை மட்டும் தடுக்கவும் இயலும்.

பழைய குக்கீகளை நீக்கல்

முன்பு ஹாட்டிஸ்கில் சேமிக்கப்பட்ட குக்கீகளை அகற்றும் வரை அவற்றைப் படிக்க இயலும். அனைத்து குக்கீகளையும் அகற்றுவதற்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Tools மெனுவில், Internet Options தேர்ந்தெடுக்கவும். General டேபின் கீழ் Temporary Internet Files பகுதியில், Delete Cookies என்பதை தேர்ந்தெடுத்து ஓகே சொல்லி விடுங்கள்.

-அனூப்-

Monday, November 03, 2008

What is Macro ?


Macro என்றால் என்ன?



ஒரு ஹோட்டலுக்கு தினமும் போகிறீர்கள். ஒரு பீஸா,  இரண்டு ரோல்ஸ், ஒரு டீ என்று ஒவ்வொரு நாளும் தவறாமல் அதே ஹோட்டலில் ஓடர் செய்து சாப்பிடுகிறீர்கள். ஒரு நாள் உங்களைப் பார்த்ததுமே ஹோட்டல் சர்வர், “வழக்கம் போல் தானே ஐயா?” எனக் கேட்கிறார். “ஆம்” என்று நீங்கள் தலையசைக்க சர்வர் செயற்படுத்துவது ஒரு மேக்ரோ ஆணைத் தொடரை. பீஸா, ரோல்ஸ், டீ என்பதற்குப் பதிலாக ஒரு தலையசைப்பின் மூலம் மூன்றையும் ஓடர் செய்கிறீர்கள் அல்லவா?  இது தான் மேக்ரோ.

மேலே நீங்கள் படித்தது மேக்ரோ என்பதற்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்ன விளக்கம்.

கணினியில் ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்கிறீர்கள். அவ்வாறு செய்வது சோர்வை உண்டாக்குவதோடு நேரத்தையும் சக்தியையும் கூட வீணாக்குகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நமக்கு உதவுகிறது மேக்ரோ எனும் வசதி. மேக்ரோவைப் பயன்படுத்துவதன் மூலம் எமது வேலையை இலகுவாக்க முடிவதோடு மன மகிழ்ச்சியையும் தருகிறது..

திரும்பத் திரும்பச் செய்யப்படும் செயற்பாடுகள் எதுவாயிருந்தாலும் அனைத்தையும் மேக்ரோ கொண்டு இலகுவாகச் செய்யலாம். கணினியில் நாம் ஒரே வேலையைப் பல முறை திரும்பத் திரும்பச் செய்கிறோம்.இந்த மேக்ரோ மூலம் நீண்ட மற்றும் சலிப்பை உண்டாக்கும் வேலைகளை ஒரே க்ளிக்கின் மூலம் செய்து முடிக்கலாம்.

விண்டோஸ் இயங்கு தளத்திற்கான பயன்பாட்டு மென்பொருள்களில் மேக்ரோ அதிகம் பாவனையிலுள்ளது. எம்.எஸ்.வர்ட், எக்ஸல், பவர்பொயிண்ட் போன்ற பல எப்லிகேசன் மென்பொருள்களில் மேக்ரோ வைப் பயன்படுத்தும் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள்களில் மேக்ரோவைப் பதிவு செய்யும் வசதி, மற்றும் புதிதாக தங்கள் தேவைகளுக்கேற்ப மேக்ரோவை விசுவல் பேசிக் எனும் கணினி மொழி மூலம் வடிவமைப்பதற்கான வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே சில நிறுவனங்கள் பொதுவான தேவைக்கான எந்தவொரு எப்லிகேசன் மென்பொருளுடனும் பயன் படுத்தக் கூடியவாறான மேக்ரோ நிரல்களையும் வெளியயிட்டுள்ளன.

ஒரே வேலையே திரும்பத் திரும்ப உங்களால் செய்யப்படுவதாக உணர்ந்தால் அந்த செயறபாட்டுக்கென ஒரு மெக்ரோவினை உருவாக்கி வைப்பதன் மூலம் அடுத்த முறை அதே வேலையை மறுபடியும் செய்யு வேண்டிய தேவை ஏற்படும்போது ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள மெக்ரோவினை இயக்கி ஒரே க்ளிக்கில் அந்த வேலையை செய்து முடிக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் கணக்குகள் வைத்திருப்பின் அவை ஒவ்வொன்றினையும் லொகின் செய்து மின்னஞ்சல்களைப் பார்த்தல், டைப் செய்த ஒரு டொகியுமென்டை போமட் செய்தல், திகதி பக்க இலக்கம் போன்றவற்றை உள்ளீடு செய்தல், அறிக்கைகளை தயாரித்தல், வெவ்வெறு எப்லிகேசன் மென்பொருள்களுக்கிடையே டேட்டாவை பிரதி செய்தல் என எண்ணிலடங்கா செயற்பாடுகளை மேக்ரோவினை உருவாக்குவதன் மூலம் இலகுவாக செய்து கொள்ளலாம்.

இப்போது எம்.எஸ். எக்ஸலில் மேக்ரோவை எவ்வாறு செயற்படுத்துவது எனப் பார்ப்போம். முதலில் எக்ஸலைத் திறந்து மெக்ரோவை செயற்படுத்த விருக்கும் பைலை அல்லது வேர்க்புக்கை திறந்து கொள்ளுங்கள். அடுத்து Tools மெனுவில் Macro தெரிவு செய்து அதிலிருந்து வரும் சப் மெனுவிலிருந்து Record New Macro தெரிவு செய்யுங்கள்.  ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும் .

இங்கு Macro Name – எனுமிடத்தில் மேக்ரோவுக்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும்.

Shortcut Key – இங்கு ஏதேனுமொரு ஆங்கில எழுத்தை வழங்கலாம். படத்தில் S எனும் எழுத்து வழங்கப்பட்டுள்ளது. CTRL +Shift உடன் S விசையை அழுத்த மேக்ரோவை ஓட விடலாம். எனினும் இது கட்டாயமன்று.

Store macro in – இது வழமையாக நீங்கள் பணியார்றும் வேர்க்புக் ஆக இருக்கும்.. புதிதாகத் திறக்கும் ஒவ்வொரு வேர்க்புக்கிலும் இந்த மேக்ரோ வினைப் பயன்படுத்த வேண்டுமானால் New Workbook என்பதைத் தெரிவு செய்யுங்கள்.

Description – இங்கு நீங்கள் உருவாக்கும் மேக்ரோவை பற்றி சிறுது விவரிக்கலாம் இவ்வாறு விவரிப்பதன் மூலம் பிரிதொரு நேரம் பயன் படுத்தும் போது எதற்கான மேக்ரோ என்பதை எமக்கு ஞாபகமூட்டும்., இதுவும் கட்டாயமன்று.

இந்த விவரங்கள் அனைத்தையும் வழங்கிய பிறகு ஓகே சொல்ல மேக்ரோ ரெகோடர் பதிவு செய்ய ஆரம்பிக்கும். அத்தோடு Stop Recording என ஒரு சிறிய டூல்பாரும்  திரையில் தோன்றும்.

இப்போது எக்ஸலில் நீங்கள் தினமும் செய்யும் வேலைகளை வழமை போல் செய்ய ஆரம்பியுங்கள். உதாரணமாக ஒரே அட்டவணைய தினமும் டைப் செய்ய வேண்டியிருப்பதாக வைத்த்துக் கொள்ளுங்கள். அந்த அட்டவணையை மறுபடியும் இங்கு டைப் செய்யுங்கள். அடுத்து உங்கள் செயற்பாடுகள் அனைத்தும் முடிய டூல்பாரில் Stop Recording பட்டனில் க்ளிக் செய்து மெக்ரோவை நிறுத்தி விடுங்கள்.

அடுத்து பதிவு செய்த மேக்ரோவை இயக்குவதற்கு மறுபடியும் Tools மெனுவில் Macro, தெரிவு செய்து வரும் சப் மெனுவிலிருfது Macros தெரிவு செய்யுங்கள். அப்போது  ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு உருவாக்கப்பட்டுள்ள மேக்ரோக் களின் பெயரும் காண்பிக்கப்படும். அதிலிருந்து உரிய மேக்ரோவை தெரிவு செய்து Run பட்டனில் க்ளிக் செய்யுங்கள். இப்போது அடிக்கடி நீங்கள் சிரமப்பட்டு செய்து வந்த ஒரு வேலை ஒரே க்ளிக்கில் செயற்படுத்தப்டுவதைக் காணலாம்.

-அனூப்-