Friday, December 18, 2009

Internet - Some known and unknown terms


இணையம் - தெரிந்ததும் தெரியாததும்


உலகின் மிகப் பெரிய கணிணி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சர்ந்த கணினி வலையமைப்புகள் இணையத்தில் இணைந்துள்ளன. ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு கணினியூடாக பைல் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற் கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு வியாபித்திருக்கும் இந்தக் கணினி வலையமைப்பு அதி வேகம் கொண்ட கேபல் கொண்டிணைக்கப்பட்டுள்ளன. இதனை Internet Backbone எனப்படுகிறது.

பல்வேறு வகையான பல்வேறு அளவுகளைக் கொண்ட பல்வேறு இயங்கு தளங்களைக் கொண்ட ஆயிரக் கணக்கான கணினிகள் இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ளன. இவற்றை சேர்வர் கணினிகள் எனப்படும்.

பல்வேறு வகையான கணினிகள் இணையத்தில் இணைந்துள்ள போதும் அவற்றிற்கிடையே TCP/IP (Transmission Control Protocol /Internet Protocol) எனும் பொதுவான ஒரு விதிமுறை பின்பற்றப்படுவதன் காரணமாக நாம் எந்த ஒரு கணினியிருந்தும் மற்றுமொரு கணினியுடன் இலகுவாகத் தொடர்பாட முடிகிறது. .

இராணுவ தேவைக்காக அமெரிக்காவினால் 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பே பின்நாளில் இண்டர்நெட்டாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் இந்தக் கணினி வலையமைப்பு ARPANET என அழைக்கப்படது.

தற்போது இணையத்தின் உரிமையாளராக எந்த ஒரு நாடோ நிறுவனமோ இல்லை எனினும் இணையத்தின் வளர்ச்சிக்காகவும் இணையத்தில் விதி முறைகளை நிர்ணயிக்கவும் முறைப்படுத்தவுமென சில தன்னார்வநிறுவனங்கள் ஈடு பட்டு வருகின்றன.

இணையத்தின் மூலம் கிடைக்கும் சில பொதுவான பயன்பாடுகளாக எந்த வொரு விடயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல், மின்னஞ்சல் சேவை, நிகழ் நேரத்தில் ஒருவரோடொருவர் உரையாடுதல், பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளல், இசை, திரைப்படம், விளையாட்டு என பொழுது போக்கு அம்சங்களில் ஈடு படல் பொருட்கள் மற்றும் சேவைகளைப பெறுதல் விற்பனை செய்தல் மூலம் இணைய வணிகத்திலீடுபடல் போன்ற பல வற்றைக் குறிப்பிடலாம்.

இணையம் சார்ந்த சில கலைச் சொற்ளையும் அவற்றிற்கான விளக்கத் தையும் பார்ப்போம்.

Asymmetric Digital Subscriber Line (ADSL) :
அதி வேக இணைய வசதியை வழங்கும் ஒரு இணைய இணைப்பு முறை. இதனையே Broadband எனவும் அழைக்கப்படுகிறது.

Blog :
web Log என்பதன் சுருக்கமே ப்லோக். இதனை ஓன்லைன் ஜேர்னல் (online Journal) எனப்படுகிறது. இது இணைய தளம் போன்ற்தே. இணைய தள வடிவாக்கம் பற்றி அறியாதவர்கள் கூட இதனை இலகுவாக உருவாக்கலாம். இந்த சேவையை blogspot.com, wordpress.com என்பன இலவசமாக வழங்குகின்றன. தமிழில் வலைப்பதிவு எனப்படுகிறது.

Browser இணைய சேவைகளில் ஒன்றான உலகலாவிய வலைத் தளமமான WWW ஐ அணுகுவதற்குப் பயன்படும் மென்பொருளையே பிரவுஸர் (இணைய உலாவி) எனப்படுகிறது. உதாரணம்: இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மொஸில்லா பயபொக்ஸ், கூகில் க்ரோம்

Download : இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒரு கணினியிலிருந்து எமது கணினிக்கு பைல் ஒன்றைப் பெற்றுக் கொள்வதை டவுன்லோட் எனப்படும்.

Domain Name இணையத்தில், இணைந்துள்ள கணினிகளை அல்லது இணணய தளங்களை இலகுவாக நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் ஐபி முகவரி எனும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையை டொமேன்  நேம் எனப்படுகிறது.

Dial-up: இணையத்தில் இணைவதற்குப் பலரும் நாடும் ஒரு பொதுவான இணைப்பு முறை. இணைய சேவை வழங்கும் நிறுவன கணினியை ஒரு மோடமைப் பாவித்து தொலைபேசிக் கம்பியூடாக இணைப்பக்கப்ப்டும். அதிக பட்சமாக 128 kbps அளவிலான வேகத்தையே கொண்டிருக்கும்.

E-mail (Electronic mail) :
கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பிரபலமான இணைய சேவையே மின்னஞ்சல் ஆகும். மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் ஒரு மின்னஞ்சல் முகவரி அவசியம். ஒரு மின்னஞ்சல் முகவரி rila@gmail.com எனும் வடிவில் இருக்கும். இங்கு பயனர் பெயரும் டொமேன் பெயரும் @ எனும் குறியீட்டால் பிரிக்கப்படும்.

 Extranet : ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. இது இணையத்தோடு தொடர்புபட்டிருக்கும். அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மட்டுமன்றி பொது மக்களும் உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லோடு இதனை அணுக முடியும்.

FTP : (File Transfer Protocol)
இணையம் வழியே பெரிய அளவிலான பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளும் சேவையை FTP எனப்படுகிறது.

File attachment
மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பப்படும் சிறிய ஆவணங்கள் மற்றும் படங்களை எட்டேச்மண்ட் எனப்படுகிறது.

Firewall
இணையத்தைப் பயன்படுத்தி எமது கணினிக்குள் அனுமதியின்றி எவரும் ஊடுறுவாமல் தடுக்கும் மென்பொருளை பயவோல் எனப்படுகிறது.

Hyperlink :
இணைய தள மொன்றில் ஒரு பக்கத்திலிருந்து மற்றுமொரு பக்கத்திற்கு அல்லது வேறொரு இணைய தளத்திற்கு வழங்கப்படும் இணைப்பை ஹைபலின்க் எனப்படுகிறது.

HTTP (Hypertext Transfer Protocol) உலகலாவிய வலைத் தளத்தில் HTML ஆவணங்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான விதி முறையாகும்.

HTML (Hypertext Markup Language) வலைத்தளங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு கணினி மொழி.

Home Page ஒரு இணைய தளத்தின் முதல் பக்கத்தை அல்லது இணைய உலாவியைத் (வெப் பிரவுஸர்) திறக்கும் போது வரும் முதல் பக்கத்தை ஹோம் பேஜ் எனப்படுகிறது,.

Hacker
ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள ஒரு கணினியின் பாதுகாப்பு ஓட்டைகளை நன்கறிந்து அக்கணினியினுள் அனுமதியின்றி நுளையும் ஒரு கை தேர்ந்த நபர் ஹெக்கர் (குறும்பர்). எனப்படுகிறார். பாதுகாப்புத் தன்மையைப் பரீட்சிப்பதற்காகவும் ஹெக்கர்களின் உதவியை நாடுவதுண்டு.

Instant Message (IM):
இணையததைப் பயன் படுத்தி நிகழ் நேரத்தில் இருவருக்கிடையில் நிகழ்தப்படும் உரையாடலை உடனடி செய்திச் சேவை எனப்படுகிறது. உதாரணம் : யாஹூ மெஸ்ஸென்ஜர், ஸ்கைப்
Internet Service Provider (ISP):இணைய சேவை வழங்கும் நிறுவனத்தையே ISP எனப்படுகிறது. நமது கணினியை இணையத்துடன் இணைக்கும்போது இந்த நிறுவனத்தின் கணினியூடாகவே நம் இணையத்தில் இணைகிறோம்.

IP (Internet Protocol) address
இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒவ்வொரு கணினியையும் வேறு படுத்திக் காட்டும், ஒரு இலக்கமே ஐபி முகவரி எனப்படுகிறது. இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். (உதாரனம்: 169.254.222.1). ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருகும்.

ISDN (Integrated Services Digital Network)
 டயல் அப், ப்ரோட்பேண்ட் போன்று ஒரு வகை இணைய இணைப்பாகும். இது டயல் அப்பை விட வேகமானது. ப்ரோட்பாண்டை விட வேகம் குறைந்தது. இது ஒரு டிஜிட்டல் சேவை என்பதால் மோடெம் அவசியமில்லை.

Intranet
ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்களால் மட்டுமே இதனை அணுக முடியும். இது இணயத்தோடு தொடர்பு பட்டுமிருக்கலாம். தொடர்பு படாமலும் இருக்கலாம். எனினும் பொது மக்க்ள் யாரும் இந்த இந்த வலையமைப்பை அணுக முடியாது,

Modem:
என்லொக் வடிவில் டேட்டாவை ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு தொலைபேசிக் கம்பியூடாக அனுப்புவதற்கு மோடெம் எனும் சாதனம் பயன் படுத்தப்படுகிறது, இது டிஜிட்டல் வடிவிலுள்ள் டேட்டாவை (analogue) எனலொக்காகவும் (modulation) எனலொக் வடிவிலுள்ளதை டிஜிட்டல் (demodulation) வ்டிவிலும் மாற்றுகிறது.

Offline:
கணினி இணையத்தில் இணைந்திராத சந்தர்ப்பத்தை ஓப்லைன் எனப்படுகிறது. . Online: இணையத்தில் எமது கணினி இணந்திருக்கும் போது கணினி ஓன்லைனில் இருப்பதாகச் சொல்லப்படும்.

Password: ஒரு பைலை, கணினியை அல்லது வலையமைப்பை அதிகாரமளிக்கப்பட்வர்கள் மாத்திரம் அனுகுவதற்குப் பயன்படும் எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்ட ஒரு ரகசிய சொல்.

Portal:
மின்னஞ்சல், தேடற்பொறி ,போன்ற பல வகைப்பட்ட சேவைகளை வழங்கும் ஒரு இணைய தளத்தை வெப் போட்டல் எனப்படுகிறது. உதாரணம் : யாஹூ

Server
ஒரு வலையமைப்பில் தனது வளங்களையும் தகவல்களையும் ஏனைய கணினிகளுடன் பகிர்ந்து கொள்ளும் கணினிகளை சேர்வர் அல்லது Host ஹோஸ்ட் எனப்படுகிறது.

Search Engine
வேர்ல்ட் வைட் வெப் எனும் உலகலாவிய வலையமைப்பில் எமக்குத் தேவையான தகவல்கள் எந்த வலைத்தளங்களில் உள்ளன என்பதை தேடிப் பட்டியலிடும் மென்பொருளையே தேடற் பொறி எனப்படுகிறது. உதாரணம் : கூகில், யாஹூ, பிங்

Sub Domain: 
டொமேன் பெயரில் ஒரு பகுதியே சப் டொமேன் எனப்படுகிறது. உதாரணமாக madeena.sch.lk, என்பதில் sch என்பது பிரதான டொமேன் எனவும் madeena என்பது சப்டொமேன் எனவும் அழைக்கப்படுகிறது.

Spam
எமக்குத் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து நாம் கேட்காமலேயெ எமது மின்னஞ்சல் முகவ்ரிக்கு வந்து சேரும் வேண்டாத (குப்பை) மின்னஞ்சல்களையே ஸ்பாம் எனப்படுகிறது.

Top-level domains:
டொமேன் நேம் சிஸ்டம் எனப்படும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையில் ஒரு பிரதான பிரிவே டொப் லெவல் டொமேன் எனப்படுகிறது. உதாரணம் .com, .gov, .edu.

Uniform Resource Locator (URL): உலகலாவிய வலைத் தளத்தில் உள்ள ஒரு ஆவணத்தின் முகவரியைக் குறிக்கிறது. இதனையே வெப் எட்ரஸ் எனவும் அழைக்கப்படுகிறது. உதாரணம்

Upload
இணையத்தில் அல்லது வலையமைப்பொன்றில் ஒரு கணினியிலி ருந்து மற்றுமொரு கணினிக்கு பைல் ஒன்றை அனுப்புவதை அப்லோட் எனப்படுகிறது.

World Wide Web
ஹைப டெக்ஸ்ட் ஆவணங்களையும் தரவுத் தளங்களையும் கொண்ட இணைய சேர்வர்களையே வேர்ல்ட் வைட் வெப் (உலகலாவிய வலத்தளம்) எனப்படுகிறது. இது 1989 ஆம் ஆண்டு Tim Berners-Lee, எனும் பிரித்தானியரால் வடிவமைக்கப்பட்டது.

Website :
HTML எனும் வலை மொழி கொண்டு உருவாக்கிய, ஹைபடெக்ஸ்ட் ஆவணத்தையே இனையதளம் (வெப்சைட்) எனப்படுகிறது. இந்த ஆவணம் ஒரு நிறுவனம் சார்ந்த அல்லது தனி நபர் சார்ந்த அல்லது ஏதோவொரு விடயம் சார்ந்த தகவல்களைக் கொண்டிருக்கும். இது ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்களையோ (web pages) கொண்டிருக்கும் இவை ஹைபலிங் கொண்டு இணைக்கப்பட்டிருக்கும். இதனை இணையத்தில் இணைந்திருக்கும் ஒரு வெப் சேர்வரில் சேமிக்கப்படும். அந்த இணைய தளத்திற்கெனப் பதிவு செய்யப்படும் பெயரைக் கொண்டு (வெப் எட்ரஸ்) கொண்டு அந்த தளத்தை உலகின் எப்பாகத்திலிருந்தும் அணுகலாம்.

-அனூப்

Sunday, December 13, 2009

Is your computer running slowly?

உங்கள் கணினி நத்தை வேகத்திலா இயங்குகிறது?

உங்களுக்குப் பிடித்த ஒரு கணினி விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென நீலத் திரை (Blue Screen) தோன்றி கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது.

இணைய தளங்களைப பார்வையிட்டுக் கொண்டிருக்கும போது (Browser) ப்ரவுஸர் வழமையை விட மெதுவாக இயங்குகிறது அல்லது எந்த இயக்கமும் அற்றுப் போகிறது.
முக்கிய ஆவணமொன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கும் போது அதனை சேமிக்கு முன்னரே கணினி க்ரேஷ் (crash) ஆகி செயலற்றுப் போகிறது

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணினியைத் தரையில் போட்டு பந்தாடலாம் போல் பலருக்கும் தோன்றலாம்.

கணினி மெதுவாக இயங்குவதற்குப் பல காரணங்களைக் கூறலாம். இவற்றுள் ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களினாலோ கணினி மெதுவாக இயங்க வாய்ப்புள்ளது.

இவற்றிற்கு அடிப்படைக் காரணங்களாக வன்பொருள் சிக்கல், மென்பொருள் சிக்கல் மற்றும் வைரஸ் பாதிப்பு என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்தப் பிரச்சினைக்கு, அனேகமான கணினிப் பயனர்கள் முகம் கொடுக்க வேண்டி ஏற்படுவதால் சில பொதுவான காரணங்களை இங்கு பட்டியலிட நினைக்கிறேன்.
  1. · கணினியில் எப்லிகேசன் மென்பொருள்களை அவ்வப்போது நிறுவும் போது அவற்றுலள் சில எப்லிகேசன்கள் விண்டோஸ் ஸ்டாட் அப் (Startup) போல்டருக்குள் எங்கள் அனுமதி இல்லாமலேயே நுளைந்து கொள்ளும். ஸ்டாட் அப்பில் அதிக எண்ணிக்கையிலான எப்லிகேசன்கள் இருக்குமானால் அனைத்தையும் விண்டொஸ் ஆரம்பிக்கும் போதே நினைவகத்தில் ஏற்ற வேண்டியிருக்கும். அதற்கு அதிக் நேரம் எடுத்துக் கொள்ளும். அதன் காரணமாக விண்டோஸ் ஆரம்பிக்கவும் அதிக நேரம் பிடிக்கும்.. எனவே ஸ்டாட் அப்பில் இயங்கும் ப்ரோக்ரம்களின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் Start மெனுவில் Run தெரிவு செய்து msconfig என் டைப் செய்ய வரும் System Configuration Utility விண்டோவில் Startup தெரிவு செய்து தேவையறற எப்லிகேசன்களை ஸ்டாட் அப்பிலிருந்து நீக்கிக் கொள்ளலாம்.
  2. · பொருத்த மாற்ற BIOS (Basic Input Output System) செட்டிங்கும் கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். எனவே BIOS செட்டிங் உரிய முறையில் உள்ளதா என்பதை மதர் போர்டுடன் வழங்கப்படும் கை நூலுதவியுடன் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
  3. விண்டோஸ் இயங்கு தளத்தின் மிக முக்கிய பகுதியாக ரெஜிஸ்ட்ரி (Registry) கருதப் படுகிறது. கணினியிலுள்ள அனைத்து வன்பொருள் மற்றும் மென்பொருள்களின் விவரங்களைக் கொண்ட ஒரு தரவுத் தளமாக ரெஜிஸ்ட்ரி தொழில் படுகிறது. ரெஜிஸ்ட்ரியில் குளருபடி நிகழும் போது இயங்கு தளம் அந்த விவரங்கள் அனைத்தையும் தேடிப் பெற அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது. வழி காட்டி இல்லாமல் ஒரு ஊருக்குப் போக முற்பட்டு பல இடங்களிலும் சுற்றி அலைந்து விட்டு இறுதியாகப் போக வேண்டிய இலக்கை பல் மணி நேரம் கழித்து சென்றடைவதைப் போன்றே கணினியும் இந்த விவரங்ககளைத் தேடி இறுதியில் தனது இலக்கை அடைகிறது.. சில வேளை இவ்வாறு தேடி கிடைக்காத போது கணினி “க்ரேஸ்” ஆகி விடுவதுமுண்டு. எனவே Registry optimizer மற்றும் Cleaners யூட்டிலிட்டி கொண்டு அவ்வப்போது கணினியை ஸ்கேன் செய்து ரெஜிஸ்ட்ரியை சுத்தம் செய்து கொளள வேண்டும்.
  4. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் போன்றனவும் கணினி மெதுவாக செயற்படக் காரணாமாய் அமைகிறது. கணினி வைரஸ் பாதிப்புக்குள்ளாகும்போது கணினியின் முக்கிய வளங்களைப வைரஸ் பயன் படுத்த ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக கணினி மெதுவாக இயங்க ஆரம்பிக்கிறது. கணினியில் போதிய பாதுகாப்பு இல்லாது இணையத்தில் இணையும் போது வைரஸ் மற்றும் கணினியில் எமது நடவடிக்கைகளை வேவு பார்க்கும் ஸ்பைவேர் (spyware) என்பன நமது கணினிக்குள் ஊடுறுவுகின்றன.. எனவே ஒரு சிறந்த வைரஸ் எதிர் மென்பொருளுடன் (Anti Virus Program) ஸ்பைவேர் கண்டறியும் மென்பொருளையும் நிறுவிக் கொள்வதன் மூலம் வைரஸ் மற்றும் மற்றும் ஸ்பைவேரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடிவதோடு கணினியின் இயங்கு திறனையும் அதிகரிக்கலாம்.
  5. · குறைந்தளவு மின் சக்தியில் சீபீயூ (CPU) இயங்குமாறு செட்டிங் மாற்றப்பட்டிருக்கலாம். இதன் காரண்மாகவும் சிபியூவின் வேகம் மந்த நிலையடையும். அதனால் பயோஸ் செட்டிங் மற்றும் விண்டோஸ் கண்ட்ரோல் பேனலில் Power Options திற்நது அதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  6. · சீபீயூ அதிக அளவு வெப்பமடைவதாலும் கணினி மெதுவாக இயங்க ஆரம்பிக்கிறது. அதனால் சீபீயுவின் வெப்பத்தைத் தணிக்கும் ஹீட் சிங்க் (Heat Sink) மற்றும் விசிறி (Cooling Fan) என்பவறறைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். சீபீயூ வெப்ப நிலையையும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்,
  7. கணினியின் வேகத்தில் நினைவகமும முக்கிய பங்களிப்பைச் செலுத்துகிறது. தற்போது பயன்பாட்டிலுள்ள இயங்கு தளம் மற்றும் எப்லிகேசன் மென்பொருள்கள் இயங்குவதற்கு அதிக அளவு நினைவகமும் அவசியம். அதனால் நினைவகத்தின் அளவை அதிகரித்துக் கொளவதன் மூலமும் கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம். எனினும் மதர்போட் ஆதரிக்கும் உச்ச அளவு நினைவகத்தை கணினி ஏற்கனவே கொண்டிருந்தும் கணினி மெதுவாக இயங்கினால் மேலும் அதிக அளவு நினைவகத்தை ஆதரிக்கக் கூடிய மதர்போர்டை வாங்கிப் பொருத்திக் கொள்ளுங்கள்.
  8. · ஹாட் டிஸ்கில் பைல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக் அல்லாமல் சிறு சிறு பகுதிகளாக சிதறலாகவே சேமிக்கப்படும். கணினியின் தொடர்ச்சியான பாவனையின் போது இந்த சிதறல்களின் எண்ணிக்கை அதிகரித்து அதன் காரணமாக உரிய பைலைத் தேடிப் பெற அதிக நேரம் எடுக்கும். எனவே ஹாட் டிஸ்கை குறிப்பிட்ட சில கால இடை வெளிகளில் அதனை டிப்ரேக்மண்ட் (Defragment) செய்து கொள்ள வேண்டும். டிப்ரேக்மண்ட் செயற்பாட்டில் பைல்கள மீள ஒழுங்கு படுத்தப்படுகின்றன. அதன் மூலமும் கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம். ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்து கொள்ளும் வசதியை விண்டோஸ் இயங்கு தளம் தன்னகத்தே கொண்டுள்ளது.


- அனூப் -

Tuesday, December 08, 2009

Unmovable Files என்றால் என்ன?

இயங்கு தளத்தினால் தற்போது பயன் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பைல்களை அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வாறான பைல்களையே (Unmovable Files) அன்மூவபல் பைல்கள் எனப்படுகின்றன. பேஜ் (Page file) பைல் மற்றும் MFT பைல்கள் (Master File Table) என்பவற்றை iஇடமாற்றம் செய்ய முடியாத பைல்களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
பிரதான நினைவகமான RAM இல் வெற்றிடம் போதுமான அளவு இல்லாத போது ஹாட் டிஸ்கில் அதற்கென ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டு ஹாட் டிஸ்கும் நினைவகமாகச் செயற்படும் இதனையே பேஜ் பைல் / ஸ்வொப் பைல் (Swap file) அல்லது வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) எனப்படுவது
அதேபோல் ஹாட் டிஸ்கிலுள்ள ஒவ்வொரு பைல் பற்றிய விவரங்களையும் கொண்டிருக்கும் ஒரு அட்டவணையே Master File Table (MFT) எனப்படுகிறது. இது ஹாட் டிஸ்கில் நிரந்தரமாக ஓரிடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
இந்த MFT பைல் மற்றும் பேஜ் பைல்கள் இடமாற்றம் செய்ய முடியாத பைல்களாக விண்டோஸில் அடையாளமிடப்படுகின்றன.
ஹாட் டிஸ்கில் பைல் சேமிக்கப்படும்போது, இயங்கு தளம் எங்கெல்லாம் வெற்றிடம் காணப்படுமோ அவ்விடங்களில் புதிய பைல்களை சேமித்து விடும். ஹாட் டிஸ்கின் வெற்றிடத்தைப் பொறுத்தும் பைலின் அளவு பெரிதாக இருக்கும் பட்சத்திலும் அந்த பைல் முழுமையாக அல்லாமல் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிதறலாக சேமிக்கப்படும். இதனையே ப்ரேக்மண்ட்ஸ் (Fragments) எனப்படுகிறது. இந்த பைல் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கணினியின் வேகத்தில் மந்த நிலை ஏற்படலாம் அல்லது சில வேளை பைல்களை இழக்கவும் நேரிடலாம். ஹாட் டிஸ்கை ஒரு குறித்த் கால இடைவெளிகளில் டிப்ரேக்மண்ட் செய்து கொள்வதன் மூலம் இவ்வாறான பாதிப்புகளிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்வதற்கென Disk Defragmenter எனும் யூட்டிலிட்டி விண்டோஸுடன் இணைந்து வருகிறது.
டிப்ரேக்மண்ட் செய்யும்போது அங்கொன்று இங்கொன்றாக சிதறிக் கிடக்கும் ஒரு பைலின் பகுதிகள் அருகருகே தொடர்ச்சியாக அமையும் வண்ண்ம் இடமாற்றம் செய்யப்படுகின்றன.
டிப்ரேக்மண்ட் செய்யும்போது, டிப்ரேக்மண்ட் விண்டோ டிஸ்க் மேப்பில் (Disk Map) பச்சை நிறத்தில் சில பகுதிகளைக் காண்பிப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இடமாற்றம் செய்ய முடியாத் பைல்கள் உள்ள இடங்களையே விண்டோஸில் இவ்வாறு காண்பிக்கப்படுகிறது.. ஏனைய பகுதிகளை டிப்ரேக்மண்ட் செய்த பிறகும் இந்த அன்மூவபல் பைல்கள் ஹாட் டிஸ்கில் முன்னர் இருந்த இடத்திலேயே சிதறலாகக் இருக்கும்.
பேஜ் பைல் அலல்து ஸ்வொப் பைல்களை டிப்ரேக்மண்ட் செய்ய முடியாது என்பதால் அவற்றை அழித்து விட்டு டிப்ரேக்மண்ட் செய்யலாம். எனினும் அவற்றை வழமையான முறையில் அழிக்கவும் முடியாது. அவற்றை அழிப்பதற்குப் விண்டோஸில் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். Control Panel System Advanced tab Performance Settings Advanced tab Change தெரிவு செய்யுங்கள். அங்கு Virtual Memory என்பதன் கீழ் No paging file தெரிவு செய்து Set என்பதைக் க்ளிக் செய்யுங்கள். பின்னர் கணினியை மறுபடி இயக்கி டிப்ரேக்மண்ட் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம்.
டிப்ரேக்மண்ட் செய்த பிறகு மேற்சொன்னவாறு Virtual Memory எனுமிடத்திற்குப் பிரவேசித்து Custom size என்பதைத் தெரிவு செய்து Initial size மற்றும் Maximum size எனுமிடங்களில் ஒரே அளவான ஹாட் டிஸ்கில் இடத்தை ஒதுக்குங்கள். இந்த அளவானது, கணினியின் பிரதான நினைவகத்தின் இரண்டு முதல் நான்கு மடங்காக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
ஹாட் டிஸ்கிலுள்ள் மற்றுமொரு இடமாற்றம் செய்ய முடியாத் பைல் வகையான MFT எனும் பைல் அட்டவணையாகும்.. ஹாட் டிஸ்கில் பைல்களின் அளவு அதிகரிக்கும்போது இந்த MFT யின் அளவும் அதிகரிக்கிறது. இந்த MFT பைலும் அதன் உச்ச அளவைத் தாண்டும் போது சிறு சிறு பகுதிகளாக்கப்படுகிறது.
ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றததைச் செய்வதன் மூலம் MFT பைலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள் இடத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் Start → Run → regedit ஊடாக ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் (Registry Editor) திறந்து HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ CurrentControlSet\Control\Filesystem வரை பயணித்து NtfsMftZoneReservation என்பதை டபள் க்ளிக் செய்து அதன் வலது புறம் 2 முதல் 4 வரையிலான ஒரு இலக்கத்தை உள்ளீடு செய்யுங்கள். இரண்டை டைப் செய்வதன் மூலம் 25 வீதத்தையும் 3 ஐ டைப் செய்வதன் மூலம் 37.5 வீதத்தையும் 4 ஐ உள்ளீடு செய்வதன் மூலம் 50 வீதத்தையும் ஹாட் டிஸ்கில் ஒதுக்கலாம்.
-அனூப்-

Why do you need to partition a hard disk?


ஹாட் டிஸ்கை ஏன் Partition செய்ய வேண்டும்?

ஹாட் டிஸ்க் ஒன்றைக் கணினியில் பொருத்தியதும் அதனை போமட் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கு முன்னர் (Partition) பாட்டிசன் செய்து கொள்ள வேண்டும். என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.ஒரு ஹாட் டிஸ்கின் மொத்த சேமிப்பிடத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொள்வதையே பாட்டிசன் எனப்படுகிறது. பாட்டிசனை உருவாக்கிய பின்னர் அதனை போமட் (format) செய்து பயன் படுத்த ஆரம்பிக்கலாம். 

பாட்டிசனை உருவாக்கும்போது ஹாட் டிஸ்கின் மொத்த கொள்ளளவிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி ஒரு பாட்டிசனுக்காக ஒதுக்கப் படுகிறது. உதாரணமாக ஒரு
80 GB கொள்ளளவு கொண்ட ஒரு ஹாட் டிஸ்கை 80 GB கொண்ட ஒரே பாட்டிசனாகவும் பயன் படுத்தலாம். அல்லது அதனை இரண்டு, மூன்று அல்லது நான்கு பாட்டிசனாகவும் பிரித்துக் கொள்ளலாம். ஆனால் அதிக கொள்ளளவு கொண்ட ஹாட் டிஸ்கை ஒரே பாட்டிசனாக பயன்படுத்துவது அரிது. இதே 80 GB ஹாட் டிஸ்கை இரண்டு பாட்டிசனாகப் பிரிக்கும்போது இயங்கு தளம் மற்றும் அப்லிகேசன் மென்பொருள்களை சேமிப்பதற்கு 20 GB யில் ஒரு பாட்டிசனும் ஏனைய பைல்களைச் சேமிப்பதற்கு 60 GB யில் ஒரு பாட்டிசனும் உருவாக்கிக் கொள்ளலாம்.


ஒரு பாட்டிசனை உருவாக்குவதற்குப் பதிலாக ஒன்றுக்கு மேற்பட்ட பாடிசன்களை ஏன் உருவாக்க வேண்டும் என நீங்கள் வினவலாம். ஒரு ஹாட் டிஸ்கைப் பாட்டிசன் செய்வதன் மூலம் பல அனுகூலங்கள் கிடைக்கப் பெறுகின்றன.


·
ஹாட் டிஸ்கின் கொள்ளளவு அதிகமாயிருக்கும் பட்சத்தில் சில இயங்கு தளங்கள் அதனை ஆதரிக்காது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஹாட் டிஸ்கைப் பல பகுதிகளாகப் பிரித்தே பயன்படுத்த வேண்டியிருக்கும். ஹாட்டிஸ்கின் கொள்ளளவிற்கேற்ப அதனைப் பல பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

விண்டோஸ் இயங்கு தளத்தில் விண்டோஸ் மற்றும் மென்பொருள்களை ஒரு பாட்டிசனிலும் டேட்டாவை ஏனைய பாட்டிசனிலும் சேமித்துக் கொள்ளும் வழக்கம் நடை முறையிலுள்ளது. அதன் மூலம் விண்டோஸில் ஏதும் சிக்கல் ஏற்படும் போது இயங்கு தளம் நிறுவப்பட்டிருக்கும் பாட்டிசனை மாத்திரம் போமட் செய்து விட்டு மறுபடியும் விண்டோஸை நிறுவிக் கொள்ளக் கூடிய வசதி கிடைக்கிறது. இதன் காரணமாக் ஏனைய பைல்களை இழக்க நேரிடாது.

சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இயங்கு தளங்களில் ஒரு பாட்டிசனின் உச்ச அளவு வரையறுக்கப்பட்டிருந்தது. எனவே அதிக கொள்ளளவு கொண்ட ஹாட் டிஸ்கில் அந்த இயங்கு தளம் ஆதரிக்கும் உச்ச அளவிலான பாட்டிசனை உருவாக்கி விட்டு பயன் படுத்தப்படாத இடத்தில் மேலும் சில பாட்டிசன்கள உருவாக்க வேண்டியிருந்தது.

சில வேளை ஒரு இயங்கு தளம் பயன் படுத்தும் பைல் முறைமையை (file system), மற்றுமொரு இயங்கு தளம் ஆதரிக்காது விடலாம். எனவே வெவ்வேறு பைல் சிஸ்டம்களை ஆதரிக்கும் இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவ முற்படும்போது வெவ்வேறு பாட்டிசன்களை உருவாக்க வேண்டும்.

ஒரு பைல் சிஸ்டம் ஒரு பாட்டிசனில் டேட்டாவை சேமிக்கும்போது பாட்டிசனின் அளவு அதிகமாயிருக்கும்போது ஹாட் டிஸ்கில் காளியிடம் பயன் படுத்தப்படாது விரயமாவதற்கான வாய்ப்புள்ளது. சிறிய அளவிலானா ஒன்றுக்கு மேற்பட்ட பாட்டிசன்களை உருவாக்கும்போது பைல் சிஸ்டம் மூலம் உருவாக்கப்படும் விரயத்தைக் குறைக்கலாம். அதாவது சிறிய பாட்டிசன்கள் சிறிய க்லஸ்டர்களை உருவாக்கும். ஒரு க்லஸ்டர் என்பது ஒரு பாட்டிசனில் சேமிக்கக் கூடிய டேட்டாவின் மிகவும் சிறிய பகுதியாகும். பெரிய பாட்டிசன் 16 KB அளவிலான கலஸ்டரைக் கொண்டிருக்கும். அதாவது ஒரு எழுத்தைக் (character) கொண்ட ஒரு பைலை சேமிக்க 16 KB அளவு இடத்தை எடுத்துக் கொள்ளும். சிறிய பாட்டிசன்களில் அதே பைல் 4 KB அளவு இடத்தையே பிடிக்கும்.

ஹாட் டிஸ்கில் இயங்கு தளத்தை ஆரம்பித்து வைப்பதற்கான கட்டளை (MBR) Master Boot Record எனும் விவரங்கள் ஹாட் டிஸ்கின் ஒரு பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும். அந்த MBR இல் ஒரு (Partition Table) பாட்டிசன் அட்டவணையிருக்கும். அந்த பாட்டிசன் அட்டவணை ஹாட் டிஸ்க் பாட்டிசன் பற்றிய விவரங்களைக் கொண்டிருக்கும். இந்த பாட்டிசன் அட்டவணை மேலும் நான்கு பாட்டிசன் அட்டவணைகளைக் கொண்டிருக்கும். இந்த ஒவ்வொரு அட்டவனையும் ஒவ்வொரு பாட்டிசன் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக ஒரு ஹாட் டிஸ்கில் நான்கு பாட்டிசன்களை உருவாக்க முடிகிறது. இதனை primary partitions எனப்படுகிறது. இந்த வரையரையின் காரணமாகவே extended partition எனும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நான்கு primary partition இல் ஒரு பாட்டிசனை extended partition பாட்டிசனாக மாற்றுவதன் மூலம் அதனுள்ளே மேலும் 24 பாட்டிசன்களை உருவாக்கலாம். இதனை logical partitions எனப்படுகிறது.

ஒவ்வொரு ஹாட் டிஸ்கிலும் அதனுள் உருவாக்கக் கூடிய நான்கு ப்ரைமரி பாட்டிசன்களில் ஒன்றை active partition ஆக செயற்படத்தக்க நிலைக்கு மாற்ற வேண்டும். அந்த எக்டிவ் பாட்டிசனையே, MBR இயங்கு தளத்தை ஆரம்பிப்பதற்குப் பயன் படுத்துகிறது. ஒரு பாட்டிசனை மாத்திரம் எக்டிவ் பாட்டிசனாக மர்ற்றும் போது ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை வெவ்வேறு பாட்டிசனில் நிறுவும் போது அவற்றை எவ்வாறு ஆரம்பிப்பது எனும் கேள்வி எழலாம். பூட் லோடர் ப்ரோக்ரமை (Boot loader) இந்த எக்டிவ் பாட்டிசனில் நிறுவுவதன் மூலம் இதற்குத் தீர்வு கிடைகிறது. கணினி இயங்க ஆரம்பிக்கும்போது MBR ஐ வாசித்தறிந்து எக்டிவ் பாட்டிசனைக் கண்டு கொள்கிறது. இங்கு பூட் லோடர் ப்ரோக்ரம் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பாட்டிசனிலிருந்து இயங்கு தள்ம் ஆரம்பிக்குபோது போது பூட் லொடர் ப்ரோக்ரம் இயங்க ஆரம்பித்து எந்த இயங்கு தளத்தை ஆரம்பிப்பது என வினவுகிறது.

அனேக இயங்கு தளங்கள் ஹாட் டிஸ்கைப் பாட்டிசன் செய்ய fdisk எனும் கட்டளையைப் பயன் படுத்துகின்றன. அதே வேளை சில இயங்கு தளங்கள் பாட்டிசன் செய்வதற்கான வேறு கருவிகளையும் கொண்டுள்ளன.

-அனூப்-

Which image file format is better?

எந்த Image File சிறந்தது?

டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்கள், இணையத்தி லிருந்து டவுன்லோட் செய்த படங்கள் மற்றும் கிரபிக்ஸ் மென்பொருள் கொண்டு உருவாக்கிய படங்கள் என கணினியால் கையாளக் கூடிய பல வகையான படங்கள் (Digital Images) இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு இமேஜ் பைல் போமட்டும் கணினியில் ஒரு குறிப்பிட்ட ஒரு வழி முறையில் சேமிக்கப்படுகின்றன. அத்தோடு ஒவ்வொரு இமேஜ் பைல் போமட்டும் அவற்றிற்குரிய சாத்க பாதகங்களைக் கொண்டுள்ளதுடன் வெவ்வேறு சந்தர்ப்ப்பங்களில் அவை ஒவ்வொன்றும் பயன் படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு இமேஜ் பைல் வடிவங்களைப் பற்றியும் அலசுவதற்க்கு முன்னர் இமேஜ் பைல்கள் கொண்டிருக்கக் கூடிய பண்புகள் சில வற்றை முதலில் பார்ப்போம்.

Compression
படங்களின் பைல் அளவைக் குறைக்கும் செயற்பாட்டை கம்ப்ரெஸ் எனப்பபடுகிறது. கம்ப்ரெஸ் செய்யப்பாடத படங்களின் பைல் அளவு பெரிதாக இருக்கும். இது சேமிப்பு ஊடகங்களில் அதிக இடத்தைப் பிடித்துக் கொள்வதோடு இணையம் வழியே பகிரும்போது அதிக நேரமும் எடுக்கும். படங்களைக் கம்ப்ரெஸ் செய்யும்போது பைல் அளவு குறைவதோடு அதனை எந்த ஒரு ஊடகத்திலும் இலகுவாக சேமிக்கவோ அல்லது இணையம் வழியே பரிமாறிக் கொள்ளவோ முடியும். ஒவ்வொரு வகையான் பைல் போமட்டும் வெவ்வேறு வகையான கம்ப்ரெஸ்ஸன் உத்திகளைப் பயன் படுத்துகின்றன.

Lossy
ஒரு பைல் போமட்டில் பயன்படுத்தப்படும் கம்ப்ரெஸ்ஸன் முறையானது படத்தின் முக்கியமல்லாதது எனக் கருதும் தகவல்களைப் புறக்கணிக் கின்றன. இந்த கம்ப்ரெஸ் முறையானது படத்தின் அளவை முன்னரை விட சிறிதாக்கி விடுகிறது. அத்தோடு படத்தின் தரமும் குறைகிறது. இதனையே Lossy எனப்படுகிறது தகவல் இழப்புகள் இல்லாத lossless கம்ப்ரெஸ் முறையில் படங்களைச் சேமிக்கும்போது இந்த வித்தியாசத்தை நீங்கள் அவதானிக்க முடியாது.

Animations
சில பைல் வடிவங்கள் அசைவுகளை (Animations) ஏற்படுத்தக் கூடியவாறான பண்புகளைக் கொண்டிருக்கும். ஒரு படத்தினுள் அல்லது சட்டத்தினுள் (frame) ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை நுளைத்து அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக விரைவாகத் தோன்றச் செய்வதன் மூலம் படங்கள் அசைவது போன்ற தோற்றத்தை உருவாக்கப்படுகிறது. .

Maximum Colors
ஒவ்வொரு இமேஜ் போமட்டும் பயன் படுத்தும் வண்ணங்களின் என்ணிக்கையில் ஒரு வரையரையுண்டு. ஒரே வண்ணத்தை அதிக அள்வில் பயன்படுத்தும் படங்களுக்கு குறைந்த எண்ணிக்கையான வண்ணங்களைப் பயன் படுத்தும் இமேஜ் போமட்டுகள் பொருத்தமான தாகும். மாறாக கேமரா கொண்டு எடுக்கப்பட்ட படங்களைப் போன்று பல வண்ணங்களின் கலவையாக உருவங்களை உருவாக்க அதிக எண்ணிக்கையிலான வண்ணத்தைப் பயன் படுத்தும் இமேஜ் போமட்டுகள் சிறந்ததாகும்.

Transparency
ட்ராண்ஸ்பரென்சி எனும் இந்த பண்பு ஒரு படத்திலுள்ள ஒரு வண்ணத்தை ஒளி புக விடும் தன்மை கொண்டதாக மாற்றிவிடுகிற்து. இதன் காரணமாக ஒரு இணையதளத்தின் அல்லது ஒரு ஆவணத்தின் பின்னணி வண்ணம் அந்த இணைய தளத்தில் அல்லது ஆவணத்தில் உள்ள படத்தின் ஊடாக் நமக்குத் தோற்றமளிக்கிறது அல்லது அந்தப் படம் தனித்து நிற்காமல் ஒரு ஆவணத்தின் பின்னணி வண்ணத்தோடு கலந்து விடுகிறது .

Alpha Channel
அல்பா சேனல் எனப்படுவது ட்ரான்ஸ்பெரன்ஸி பொன்றதே. இதன் முலம் ஒரு படத்தின் குறித்த ஒரு பகுதியை மட்டும் ஒளி புகவிடும் தன்மை கொண்டதாக மாற்ற முடிகிறது.

Interlace 
ஒரு படத்தை இண்டர்லேஸ் முறைப்படி சேமிக்கப்பட்டிருப்பின் அந்த பைலை கணினித் திரையில் பகுதி பகுதியாக மேலிருந்து கீழ் நோக்கி படிப்படியாக திரையில் தோன்றச் செய்யலாம்.. குறைந்த வேகம் கொண்ட டயல்-அப் இணைய இனைப்பில் படங்கள் டவுன்லோட் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால். இதன் முலம் ஒரு படம் முழுமையாக டவுன்லோட் ஆகு முன்னரேயே அந்தப், படத்தின் பகுதிகளைப் பார்க்க முடிகிறது.

GIF - Graphics Interchange Format
அனேக இணைய தளங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பைல் போமட் GIF ஆகும்.. இந்த வடிவத்தில் மொத்தம் 256 வண்ணங்களே பயன் படுத்தப்படுவதால் சிறிய ஐக்கன், பட்டன் போன்ற ஒரே வண்ணம் அதிக அளவில் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களுக்கு இந்த போமட் ஏற்றது. எனினும் போட்டோவாக அச்சிட்டுக் கொள்ள இந்த போமட் பொருத்தற்றது. ஜிப் பைல்கள் மேலே சொன்ன ட்ரான்ஸ்பரன்சி., இண்டர்லேஸ் மற்றும் எனிமேசன் என்பவற்றை ஆதரிப்பதால் இணைய தளங்கலுக்குப் பொருத்தமான ஒரு பைல் போமட்டாகக் கருதப்படுகிறது. .

JPG - Joint Photographic Experts Group
JPEG எனபது (lossy) தகவல் இழப்புகள் கொண்ட ஒரு பைல் போமட்டாகும். இது டிஜிட்டல் கேமரா கொண்டு எடுக்கப்படும் போட்டோ இமேஜுக்குப் பொருத்தமான ஒரு பைல் வடிவமாகும். இது 16.7 மில்லியன் வரையிலான வண்ணங்களைக் கையாள முடிவதுடன் இயற்கையில் காணும் வண்ணங்களை எந்த மாறுதலுமின்றிக் காண்பிக்கக் கூடியது. இந்த பைல்களை கம்ப்ரெஸ் செய்ய முடிந்தாலும் கம்ப்ரெஸ்ஸின் அளவு அதிகரிக்கும் போது தகவல் இழப்பும் ஏற்படும். எனினும் JPEG ஐ விட TIFF போமட் அதிக தரம் கொண்டிருந்தாலும், TIFF பைல்கள் அதிக இடத்தைப் பிடித்துக் கொள்பவை. அதனால் JPEG போமட்டே டிஜிட்டல் கேமராக்களில் அதிகளவில் பயன் படுத்தப்படு கின்றன. இவை எனிமேசன் ட்ரான்ஸ்பரன்சி என்பவற்றை ஆதரிக்காது.

PNG - Portable Network Graphics
GIF பைல் போமட்டுக்கு Unisys எனும் நிறுவனம் காப்புரிமை கோரியதன் விளைவாக இணைய தளங்களில் பயன் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மற்றுமொரு பைல் வடிவமே PNG ஆகும். இவையும் எனிமேசன், ட்ரான்ஸ்பரன்சி மற்றும் இண்டர்லேஸ் என்பவற்றை ஆதரிக்கின்றன. PNG பைல்களும் PNG-8, PNG-24 என இரு வடிவங்களில் கிடைக்கின்றன. PNG-8 என்பது GIF பைகளை ஒத்தது. PNG-24 வானது JPEG பைல்களை ஒத்தது. எனினும் JPEG ஐ விடவும் அதிக பைல் அளவை இவை கொண்டிருக்கும்.

TIFF - Tagged Image File Format
டிஜிட்டல் கேமரா போட்டோவுக்கு மிகவும் பொருத்தமான ஒரு பைல் வடிவமே TIFF ஏனெனில் இதன் தரம் JPEG பைல்களை விடவும் உயர்ந்ததாயிருக்கும். எனினும் இந்த வகை பைல்களை அனேக எப்லிகேசன்கள் கம்ப்ரெஸ் செய்வதில்லை. அதனால் இந்த பைல்கள் அதிக பைல் அளவைக் கொண்டிருக்கும். ஹாட் டிஸ்கில் இந்த பைல்கள சேமிப்பதில் பிரச்சினை எழாது. பைல் அளவு பெரிதாக இருப்பதால் கேமராவில் பயன் படுத்தப்படும் மெமரி சிப்பில் அதிக அளவில் படங்களை சேமிக்க முடியாது போகும். எனவே பைல் அளவைக் கருதும்போது டிஜிட்டல் கேமராவிற்கு JPEG பைகளே பொருத்தமாகும். இவையும் எனிமேசன், ட்ரான்ஸ்பரன்சி மற்றும் இண்டர்லேஸ் என்பவற்றை ஆதரிக்காது
.
BMP - Bit-Map
இது மைரோஸொப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இழப்புகளற்ற ஒரு இமேஜ் பைல் போமட்டாகும். இவை மிக அரிதாகாவே கம்ப்ரெஸ் செய்யப்படுகின்றன. என்வே இதன் பைல் அளவு பெரிதாகாவே இருக்கும். இதன் மூலம் 16.7 மில்லியன் வண்ண வேறுபாடுகளை உருவாக்க முடியும். இவையும் எனிமேசன், ட்ரான்ஸ்பரன்சி மற்றும் இண்டர்லேஸ் என்பவற்றை ஆதரிக்காது

PSD 
பலராலும் பயன்படுத்தப்படும் போட்டொ எடிட்டிங் மென்பொருளான அடோபி நிறுவனத்தின் போட்டோசொப் PSD, வடிவிலேயே பைல்களைச் சேமிக்கின் றன. இந்த மென்பொருள் படங்களைப் பல லேயர்களைக் கொண்டு உருவாக்கு கின்றன. PSD போமட் லேயர் பற்றிய விவரங்களைக் கொண்டிருக்கும். வேறொரு பைல் போமட்டில் இதனை செமிக்கும் போது லேயர் விவரங்கள் இழக்கபடும். எனினும் இறுதியாக அந்த PSD பைல் JPEG அல்லது TIFF போமட்டிலேயே மாற்றப்படும்.


- அனூப் -

Hard Disk Drive - Some known and unknown facts


Hard Disk Drive தெரிந்ததும் தெரியாததும்

எல்லாக் கணினிகளின் உள்ளேயும் ஒரு ஹாட் டிஸ்க் ட்ரைவ் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். டேட்டாவை கணினியின் உள்ளே நிரந்தரமாகச் சேமிக்கக் கூடிய ஒரு சாதனமே ஹாட் டிஸ்க் ட்ரைவ். கணினி இயக்கத்திலிருக்கும் போதோ அல்லது ஓய்வாக இருக்கும் போதோ ஹாட் ட்ரைவில் பதியப்பட்டுள்ள டேட்டா எந்தவித இழப்புகளுமின்றிப் பாதுகாப்பாக இருக்கும். அதாவது மின்சக்தி இல்லாமலேயே ஹாட் ட்ரைவிலுள்ள டேட்டா பாதுகாக்கப்படுகிறது.

கணினியில் உள்ள மிக முக்கிய பாகங்களில் ஒன்றாக ஹாட் ட்ரைவ் கருதப்படுகிறது. எனெனில் இயங்கு தளம் (operating system) , எப்லிகேசன் மென்பொருள், மற்றும் டேட்டா என அனைத்தும் இந்த ஹாட் ட்ரைவிலேயே சேமிக்கப்படுகின்றன. ஹாட் ட்ரைவ் முறையாக செயற்பட மறுக்கும் போது இயங்கு தளத்தை நினைவகத்தில் ஏற்ற முடியாமல் போய் விடுகிறது. அதாவது கணினியை பூட் செய்ய முடியாது போகும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் கணினி ஒரு பிழைச் செய்தியைக் காண்பித்த சந்தர்ப்பங்களை நீங்களும் எதிர் கொண்டிருக்கலாம்.

ஹாட் ட்ரைவ் பற்றிப் பேசும்போது ப்லேட்டர்ஸ், ‘ஆம்ஸ்’ மோட்டர் ட்ரேக்ஸ், செக்டர்ஸ் எனப் பல்வேறு வார்த்தைப் பிரயோகங்களை நீங்கள் கேட்டிருக்கலாம். ப்லேட்டர்ஸ் (platters) எனப்படுவது காந்தப் புலம் கொண்ட வட்ட வடிவிலான தட்டுகளைக் குறிக்கிறது. ஒரு ஹாட் ட்ரைவ் பல ப்லேட்டர்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு ப்லேட்டரும் ஒரு குறிப்பிட்ட அளவு டேட்டாவைச் சேமிக்கின்றன. எனவே அதிக கொள்ளளவு கொண்ட ஒரு ஹாட் ட்ரைவ் குறைந்த கொள்ளளவு கொண்ட ஹாட் ட்ரைவை விடவும் அதிக எண்ணிக்கையிலான ப்லேட்டர்களைக் கொண்டிருக்கும்.

ஹாட் ட்ரைவின் கொள்ளவு பைட்டில் அளவிடப்படுகிறது. தற்போது ஒரு டெறா பைட் (1 TB = 1024 GB) அளவிலான ஹாட் டிஸ்க் ட்ரைவ்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன.

ஒவ்வொரு ப்லேட்டரும் ஒரே மத்தியைக் கொண்ட பல வட்டப் பாதைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதனையே ட்ரேக்ஸ் (Tracks) எனப்படுகிறது. இந்த ட்ரேக்ஸிலேயே டேட்டா பதியப்படுகின்றன. ட்ரேக்ஸ் ஆனது செக்டர்ஸ் (sectors) என மேலும் சிறு பகுதிகளாகப் பிரிக்கப்படும்.

ப்லேட்டரிலிருந்து வெளியே தள்ளிக் கொண்டிருக்கும் கை போன்ற அமைப்பை ‘ஆம்’ (arm) எனப்படுகிறது.

காந்தப் புலம் கொண்டு தகவல்களைப் ப்லேட்டரில் (read) படிப்பதற்கும் பதிவதற்குமான (write) ரீட் ரைட் ஹெட்டை (read/write head) இந்த ‘ஆம்’ கொண்டுள்ளது.

ஒவ்வொரு ப்லேட்டரும் அதற்குரிய ஆமைக் கொண்டிருக்கும். அதன் மூலம் டேட்டா ஹாட் டிஸ்கில் பதியப்படும்.

ப்லேட்டர்களை சுழற்றுவதற்கான மோட்டார் (Motor) ஒன்றையும் ஹாட் ட்ரைவ் கொண்டுள்ளது. இந்த மோட்டார் ஒரு நிமிடத்தில் 4500 லிருந்து 15000 வரையிலான சுழற்சிகளை உருவாக்கக் கூடியவை. மோட்டரின் வேகம் RPM இல் (Rotations Per Minute) அளவிடப்படுகிறது. சுழற்சிகளின் எண்ணிக்கை அதிகமாயிருக்கும் போது ஹாட் ட்ரைவிலிருந்து விரைவாக டேட்டாவை அணுகலாம்.

ஹாட் ட்ரைவிலிருந்து டேட்டாவைப் படிக்கும் போது அல்லது மீளப் பெறும் போது, மோட்டரானது ப்லேட்டர்களைச் வேகமாகச் சுழற்றும். அதே வேளை அதிலுள்ள ‘ஆம்’ எனப்படும் பகுதி டேட்டா பதியப்பட்டுள்ள உரிய பகுதியை நோக்கி தானாக அசையும். ஆமிலுள்ள ஹெட் ஆனது காந்தப் புலம் கொண்ட பிட்டுகளை இனம் கண்டு கணினியால் கையாளக் கூடிய டேட்டாவாக மாற்றிக் கொடுக்கிறது. 


அதே போன்று டேட்டாவைப் பதியும் போது ஆமிலுள்ள ஹெட்டிலிருந்து காந்தப் புலத் துடிப்புகளை அனுப்பி ப்லேட்டரில் காந்தப் புல பண்புகளை மாற்றியமைக்கும். அதன் மூலம் ஹாட் ட்ரைவில் டேட்¡ பதியப்படும்.

ஹாட் டிஸ்கிலிருந்து ஒரு தகவலைப் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை லேடன்சி (latency) எனப்படுகிறது. அதிக வேகம் கொண்ட ஹாட் ட்ரைவ், குறைந்த லேடன்சியைக் கொண்டிருக்கும். அதாவது 7200 rpm கொண்ட ஹாட் டிஸ்க் ட்ரைவ் 4.2 ms (மில்லி செகண்ட்) லேடன்சியைக் கொண்டிருக்கும்.

ப்லேட்டர் சுழலும் வேகம் தவிர ப்லேட்டரிலுள்ள ரீட் ரைட் ஹெட்டை உரிய டேட்¡வை நோக்கி நகர்த்த எடுக்கும் நேரமும் ஹாட் ட்ரைவிலிருந்து டேட்டாவைப் படிப்பதில் பாதிப்பைச் செலுத்தும் காரணியாக உள்ளது. இதனை சீக் டைம் (Seek Time) என்படுகிறது. இந்த நேர அளவு குறைவாக இருத்தல் அவசியம்.

ஹாட் ட்ரைவைக் கணினியில் பொருத்துவதற்கென சில இடை முகப்புகள் Interface உள்ளன. ஹாட் ட்ரைவிலுள்ள இந்த இடை முகப்பு மதர் போர்டுடன் பொருந்த வேண்டும். தற்போது ஹாட் ட்ரைவை மதர் போர்டுடன் பொருத்துவதற்கு IDE, SATA, SCSI என மூன்று வகையான இடை முகப்புகள் பாவனையிலுள்ளன.

பொதுவாகப் பாவனையிலுள்ள யிளிரி IDE (Integrated Drive Electronics) or ATA Advanced Technology Attachment) எனும் இடை முகப்பாகும். இதன் மூலம் 100 Mbps வரையிலான வேகத்தில் டேட்டாவைக் கடத்தலாம். எனினும் தற்போது இந்த இடை முகப்பு பாவனையிலிருந்து குறைந்து வருகிறது.

IDE இடை முகப்பிலிருந்து மாறி தற்போது ஹாட் ட்ரைவ்கள் ஷிதிஹிதி (Serial Advanced Technology Attachment )எனும் இடை முகப்புடன் வருகின்றன. இவை 100 முதல் 300 Mbps வரை வேகத்தில் டேட்டாவைக் கடத்த வல்லன.

தற்போது எல்லா கணினி தயாரிப்பு நிறுவனங்களும் இந்த தொழில் நுட்பத்தையே பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. SCSI (Small Computer System Interface) ஸ்கசி எனப்படும் இடை முகப்பு அநேகமாக சேர்வர் கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஸ்கசி ஹாட் ட்ரைவ்கள் அதிக RPM வேகத்தைக் கொண்டவை.

ஹாட் டிஸ்க் ட்ரைவ் பற்றி முக்கியமாக நீங்கள் அறிந்திருக்க வேண்டியது யாதெனில், எப்போதோ ஒரு நாள் அது முறையாக இயங்காமல் பழுதடைந்து உங்கள் காலை வாரி விடப்போகிறது என்பதுதான்.

எனவே இது போன்ற சந்தர்ப்பங்களுக்கு நீங்கள் முகம் கொடுக்கத் தயாராக இருத்தல் வேண்டும். அதனால் உங்கள் முக்கியமான பைல்களை சீடி, டீவிடி போன்ற வேறொரு ஊடகத்தில் பாதுகாப்பாக பேக்கப் (back up) செய்து வைத்திருத்தல் அவசியம்.

அனூப்

Sunday, November 08, 2009

What is BIOS?

என்ன இந்த BIOS?

கணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input / Output System எனபதாகும். அதன் மூலம். நினைவகம், ஹாட் டிஸ்க், மற்றும் துணைச் சாதனங்கள் அனைத்தும் முறையாக இயங்குகிறதா என்பதைச் சரி பார்த்து உறுதி செய்து கொள்ளும். பயோஸ் ஆனது கணினியிலுள்ள இயங்கு தளத்திலிருந்து வேறுபட்டது. ஹாட் டிஸ்கில், சேமிக்கப்பட்டிருக்கும். இயங்குதளம் கணினிக்கும் அதனைப் பயன் படுத்துபவர்களுக்குமான ஒரு இடை முகப்பை வழங்கிறது. எனினும் பயோஸ் ப்ரோக்ரமானது கணினி மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் ரொம் (Read Only Memory) எனும் நினைவக (Chip) சிப்பில் சேமிக்கப்பட்டிருக்கும். கணினியை ஓன் செய்ததும் கணினியைக் கட்டுப்படுத்தி பின்னர் ஹாட் டிஸ்கிலுள்ள இயங்கு தளத்தை நினைவகத்தில் ஏற்றி கணினியை ஆரம்பித்து வைக்கிறது பயோஸ். இதனை Firmware எனவும் அழைப்பதுண்டு. ஏனெனில் இதில் நாம் மாற்றங்கள் செய்ய முடியாது.

கணினியில் பயோஸிற்கு பல பணிகள் வழங்கப் பட்டிருந்தாலும் இயங்கு தளத்தை ஆரம்பித்து வைபபதே அதன் முக்கிய பணியாகும். கணினியை இயக்கியதும் பயோஸ் மைக்ரோப்ரொசஸருக்கு அதன் முதல் அறிவுறுத்தலை வழங்குகிறது. அனைத்து வன்பொருள்களும் முறையாக இயங்குகிறதா என்பதை சுய பரிசோதானை செய்து கொள்ளும். இதனை Power On Self Test (POST) எனப்படுகிறது ஹாட் டிஸ்க், சீடி ரொம் போன்றவற்றை இனம் காணுதல், நினைவகத்தின் அளவை சோதித்தல், ப்ரோசெஸ்ஸரின் வேகத்தை அளவிடல் கடிகாரம் மற்றும் முக்கிய செட்டிங்க்ஸ் என்பவற்றை நிர்வகித்தல். கிரபிக்ஸ் காட் (Graphics Card) , சவுண்ட் காட் (Sound Card) போன்ற எனைய சாதனங்களில் பொருத்தப் பட்டிருக்கும் இது போனற வேறு பயோஸ் சிப்புகளை ஆரம்பித்து வைத்தல் அவற்றின் ஏனைய பணிகளில் அடங்குகின்றன..

கணினியை இயக்கியதும் ஆரம்பிகும் பயோஸ் ப்ரோக்ரமுடைய வழமையான பணி ஒழுங்கில் CMOS ஐ பரிசோத்திப்பதன் மூலம் பயனர் தெரிவுகளில் ஏதாவது மாற்றங்கள் உள்ளதா என்பதைப் பரிசோதித்தல் மின் வழங்கியை நிவகித்தல் (Power Management), மற்றும் எந்த ட்ரைவிலிரிருந்து இயங்கு தளத்தை ஆரம்பிப்பது (Boot Sequence) என்பதைத் தீர்மானித்தல் போன்ற பல பணிகள் அடங்குகின்றன.

தேதி, நேரம் மற்றும் ஏனைய கணினியின் செட்டிங்ஸ் விவரங்களை பேட்டரி மின்சக்கதியில் இயங்கும் ஒரு நினைவக சிப்பில் சேமிக்கிறது. இதனை (CMOS) சிமோஸ் எனப்படுகிறது.

BIOS (Basic Input/Output System) என்பதும் CMOS (Complementary Metal Oxide Semiconductor) என்பதும் ஒன்றையே குறிப்பதாகப் பலரும் தவறாகக் எண்ணுகின்றன்ர். இவற்றிற்கிடையே தொடர்புகளிருந்தாலும் இரண்டும் வேறு பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. .

பயோஸ் என்பது கணினியை இயக்கும் அதேவேளை தேதி, நேரம் மற்றும் செட்டிங்ஸ் விவரங்களை பயோஸ் சேமித்து வைக்குமிடமே சிமோஸ் எனும் சிப்பாகும். சீமோஸ் என்பது ஒரு வகை நினைவகம்,.


சீமோஸில் மாற்றங்கள் செய்ய கணினியை ஓன் (On) செய்தவுடனேயே கீபோர்டில் குறித்த ஒரு விசையை அழுத்த வேண்டும். இதற்கான அறிவுறுத்தல் கணினியை ஆரம்பித்ததுமே திரையின் கீழ் எந்த விசையை அழுத்த வேண்டும் என்பதைக் காண்பிக்கும். சீமோஸ் செட்டபில் நுளைந்த்துமே CMOS கணினிப் பயனருக்குப் பல தெரிவுகளைச் செய்ய அனுமதிக் கிறது.  தேதி மற்றும் நேரத்தை மாற்றியமைப்பது, கணினியை எந்த ட்ரைவிலிருந்து இயக்கி இயங்கு தளத்தை ஆரம்பிப்பது பூட் செய்யப்படும் ஒழுங்கு (Boot Sequence) , பாஸ்வர்ட் செட்டிங், நினைவக செட்டிங். மின் வழங்கியை நிர்வகித்தல் போன்ற பல செட்டிங்ஸை மாற்றியமைக்கக் கூடிய வசதியைத் தருகிறது.

பயோஸ் ப்ரோக்ரமை காலத்துக்குக் காலம் புதுப்பிக்கவும் (update) முடியும். புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஏதாவது வன்பொருள் சாதனங்களைக் கணினி இனம் காண வேண்டுமானால் அந்த பயோஸை வடிவமைத்த நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து அதன் புதிய பதிப்பை டவுன் லோட் செய்து கொள்ள வேண்டும். பயோஸை அப்டேட் செய்வதற்குரிய யூட்டிலிட்டியும் அதனுடன் இணைந்து வரும். யூட்டிலிட்டி ப்ரோக்ரமையும் அப்டேட் பைல்களையும் ஒரு ப்லொப்பி டிஸ்கில் பிரதி செய்து ப்லொப்பியை கணினியில் நுளைத்து இயக்க பழைய பயோஸ் பைல்களை அழித்து புதிதாக நிறுவிக் கொள்ளலாம். . எனினும் பயோஸ் அப்டேட் செய்வதில் கூடிய கவனம் தேவை.

தற்போது கணினிகளில் பயோஸை அப்டேட் செய்ய வேண்டிய தேவை அரிதாகவே ஏற்படுகிறது. எனினும் பழைய கணினிகளிலுள்ள பயோஸ் சிப் தற்போது பாவனையிலுள்ள வன்பொருள் சாதனங்களை ஆதரிக்காது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வந்த கணினிகளில் பயோஸ் ஆனது அதன் ரொம் சிப்பை மாற்றுவதன் முலமே அப்டேட் செய்யப்பட்டது. எனினும் தற்போது EEPROM (Electrically Erasable Programmable Read-Only Memory எனும் நினைவக சிப்பிலேயே சேமிக்கப்படுவதால் ரொம் சிப்பை மாற்றாமலேயே தேவையேற்படின் பயோசை அப்டேட் செய்து கொள்ளலாம்.

-அனூப்-

How to disable error messages

பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய..


விண்டொஸில் ஒரு எப்லிகேசன் செயற்பட மறுக்கும்போது அது பற்றிய பிழைச் செய்தியை Error Report மைக்ரோஸொப்ட் நிறுவனத்துக்கு இணையம் வழியே அனுப்புவதன் மூலம் அதற்குரிய தீர்வை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த பிழைச் செய்தி அடிக்கடி தோன்றும் போது அவர்கள் தரும் இந்த வசதியை சில வேளை தொல்லையாகவும் நினைக்கத் தோன்றும். அதனால் இந்தப் பிழைச் செய்தி வராமல் த்டுக்கவும் விண்டோஸில் வழியுள்ளது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுவே. கண்ட்ரோல் பேண்லுக்குள் நுழையுங்கள். அங்கு. System தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Advanced டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Error Reporting பட்டனில் க்ளிக் செய்து வரும் டயலொக் பொக்ஸில் Disable Error Reporting தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள். தொல்லை ஓய்ந்து விடும்.

Instant text in MS word

எம்.எஸ்.வர்டில் டைப் செய்யாமலேயே டெக்ஸ்டை நுளைப்பதற்கு


எம்.எஸ்.வர்டில் டெக்ஸ்ட் போமட்டிங் பற்றி உங்கள் நண்பருக்குக் கற்றுக் கொடுக்க நினைக்கிறீர்கள். அதற்கு டைப் செய்த ஒரு பந்தி உங்களுக்கு அவசியம். ஆனால் டைப் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும. நீங்கள் சொல்வது போல் ஏற்கனவே டைப் செய்து சேமித்து வைத்துள்ள ஒரு பைலைத் திறந்தும் தேவையான டெக்ஸ்டைப் பெற்றுக் கொள்ள்லாம். எனினும் அதனை விட இலகுவாக டெக்ஸ்டைப் பெற எம்.எஸ்.வர்டில் ஒரு வழியுள்ளது. இதன் மூலம் டெக்ஸ்டை டைப் செய்யாமலேயே பக்கம் முழுவதும் நிரப்பிக் கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

எம்.எஸ்.வர்ட்டைத் திறந்து புதிய ஆவணமொன்றில் =rand() என டைப் செய்து எண்டர் விசையைத் தட்டுங்கள். அடுத்த வினாடியே ஒரு பந்தி டெக்ஸ்ட் தோன்றக் காணலாம். இந்த வசதி எம்..எஸ்.வர்ட் 2007 மற்றும் அதற்கு முந்திய பதிப்புகளிலும் கிடைக்கிறது. எனினும் 2007 பதிப்பில் தோன்றும் டெக்ஸ்ட் 2003 மற்றும் அதற்கு முந்திய பதிப்பிலிருந்து மாறுபட்டது.

இன்னும் சற்று மாறுதலாக =rand(5) என டைப் செய்யுங்கள். அதே போன்ற டெக்ஸ்ட் ஐந்து பந்திகளில் தோன்றச் செய்யலாம். =rand(10,5) என டைப் செய்ய ஐந்து வரிகள் கொண்ட பத்து பந்திகள் தோன்றக் காணலாம்.

Change names of selected files

பைல் பெயரை ஒரே தடவையில் மாற்றிட..

டிஜிட்டல் கேமராவிலிருந்து படங்களை ட்வுன்லோட் செய்யும்போது அவற்றின் பெயர்கள் அனேகமாக உங்களால் புரிந்து கொள்ள முடியாத பெயர்களாக இருக்கும்.. அந்த பைல்களின் பெயர்களை (File Name) நீங்கள் விரும்பியபடி மாற்றிக் கொள்ள நினைத்தால் ஒவ்வொன்றாக மாற்றாமல் ஒரே முறையில் எல்லா பைல்களின் பெயர்களையும் மாற்றிக் கொள்ளும் வ்சதியை (Batch File Rename) விண்டோஸ் தருகிறது. இந்த வசதி மூலம் படங்கள் மட்டுமன்றி எந்த வகையான பைல்களின் பெயர்களையும் மாற்றிக் கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். .


படங்கள் உள்ள போல்டரைத் திறந்து பெயரை மாற்ற வேண்டிய படங்களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள் பெயரை மாற்ற வேண்டிய படங்கள் அருகருகே இல்லாமல் வேவ்வேறு இடங்களில் இருக்குமாயின் Ctrl விசையை அழுத்தியவாறு படங்கள் மீது க்ளிக் செய்யுங்கள். அடுத்து File மெனுவில் அல்லது ரைட் க்ளிக் செய்து Rename தெரிவு செய்யுங்கள். பின்னர் அந்த பைலுக்குப் புதிய பெயரை டைப் செய்து Enter கீயை அழுத்துங்கள். நீங்கள் தெரிவு செய்த பைல்கள் அனைத்தும் வழங்கிய புதிய பெயரோடும் ஒரு தொடரிலக்கத்துடனும் மாறியிருக்கக் காண்லாம். உதாரணமாக முதல் பைலுக்கு Jeesa என வழங்கினால் ஏனைய பைல்கள் Jeesa(1), Jeesa (2) என மாறியிருப்பதைக் காணலாம். முதல் பைலுக்குப் பெயருடன் அடைப்புக் குறிக்குள் ஒரு இலக்கத்தையும் சேர்த்து வழங்கும்போது ஏனைய பைல்களும் தொடர்ச்சியாக மாறக் காணலாம். அதாவது முதல் பைலுக்கு Jeesa (10) என வழங்கும்போது அடுத்த் பைல்கள் Jeesa (11), Jeesa (12) என மாறும்.

Is your computer freezing frequently?

உங்கள் கணினி அடிக்கடி உறைந்து போகிறதா?

கணினியில் ஏதோ வேலையாக இருக்கிறீர்கள். திடீரென்று கணினி தன் கட்டுப் பாட்டை இழந்து இய்க்கமேது மற்று உறைந்து (freeze) விடுகிறது அல்லது நீல்த் திரையில் வெள்ளை நிறத்தில் ஏதோ பிழைச்ச் செய்திகளைக் காண்பிக்கிறது.. இந்த இரு வகையான் சிக்களும் எல்லாக் கணினிப் பயனர்களும் வழமையாக எதிர் கொள்பவைதான்.

இந்த இரு சந்தர்ப்பங்களும் தவிர்க்க முடியாதவை தான் எனினும் சில விடயங்களைக் கவனத்திற் கொண்டால் ஓரளவுக்கு இவற்றைத் தவிர்க்க லாம்.

கணினி உறைந்து விட்டது என்பதை விண்டோஸ் இயங்கு தளம் பலவாறு திரையில் காண்பிக்கும். இவற்றுள் ஒரு எப்லிகேசன் நம் விருப்பப்படி செயற்படாமால் போவது ஒரு பொதுவான் அறிகுறியாகும். எப்லிகேசன் விண்டோக்கள் மினிமைஸ் செய்ததுபோல் டாஸ்க் பாரில் ஒட்டிக் கொண்டிருக்கும். ம்றுபடி முன்ன்ர் இருந்த நிலைக்கு விண்டோவைக் கொண்டுவர முடியாமலிருக்கும். மவுஸ் பொயிண்டர் நகராமல் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதுவும். கணினி உறைந்து விட்டது என்பதை வெளிப்படுதும் ஒரு முக்கிய அறிகுறி


சில வேளைகளில் This program performed an illegal operation and will be shut down அல்லது இந்த எப்லிகேசன் செயற்பட மறுக்கிறது (Not Responding) போன்ற பிழைச் செய்திகளைக் விண்டோஸ் காண்பிக்கும். ஒரு எப்லிகேசன் செய்ற்பட மறுப்பதை விண்டோஸ் இவ்வாறு பல வழிகளில் காண்பிக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனேகமாக் அந்த எப்லிகேசனை நிறுத்தி விடுமாறு அல்லது கணினி தானாக் அந்த எப்லிகேசனை மறுபடி ஆரம்பிக்கும் வண்ணம் கேன்சல் செய்து விடுமாறு விண்டோஸ் பரிந்துரைக்கும்.

நீலத் திரை மரணம் (blue screen of death) என்பது ஒரு வெளிப்படையான அறிகுறி. நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிறத்தில் சில பிழைச் செய்திகளைக் காண்பிக்கும். இந்த நிலையை crash க்ரேஷ் எனப்படுகிற்து.

குறைபாடுகளுள்ள் அல்லது ஒன்றோடொன்று ஒத்திசையாத வன்பொருள் சாதனங்கள், இயங்கு தளம், எப்லிகேசன் மென்பொருள் மற்றும் ட்ரைவர் மென்பொருள் போன்றவற்றில் ஏற்படும் வழுக்கள். மற்றும் கணினி நினைவகத்தில் ஏற்றப்படும் அதிக சுமை என்பன கணினி க்ரேஷ் ஆவதற்கும் ப்ரீஸ் ஆவதற்கும் முகிய காரணங்களாகும்.

இவற்றுள். நினைவகத்தில், அதிக சுமை ஏற்றுவது பொதுவானா ஒரு காரணியாகும். கணினி செயற்பட, போதுமான அளவு நினைவகம் அவசியம். இதனை RAM ரேம் அல்லது Random Access Memory எனப்படும்.. கணினி ஒரு நேரத்தில் கையாளக் கூடிய அளவை விட மேலதிகமாக் சுமை ஏற்றும்போது கணினி தற்காப்பு நடவடிகையாக க்ரேஷ் ஆகி விடுகிறது., ஒன்றுக்கு மேற்பட்ட எப்லிகேசன்களை ஒரே நேரத்தில் இயக்க முற்படுவதே இவ்வாறு கணினி உறைந்து விடுவத்ற்கான பொதுவான் காரண்மாகும். அதனால் நீங்கள் பயன் படுத்தாத எப்லிகேசனை நிறுத்தி விடுவது கனினியின் நினைவகச் சுமையக் குறைத்து விடும்.

சில எப்லிகேச்ன்களுக்கிடையிலான முரண்பாடுகளும் (Conflicts) கணினி க்ரேஷ் ஆவதற்குரிய மற்றுமொரு காரணமாகும். ஏனைய எப்லிகேசன்களுடன் முரண்படும் மென்பொருள்களில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களும் அடங்கும்.

கணினி எதிர்பாராத் விதமாக் க்ரேஷ் ஆகும்போது கணினியில் இயக்கமே நின்று விடும். கணினியைப் பழுது பார்க்கு முன்னர் கணினி க்ரேஷ் ஆவதற்கான் காரணத்தைக் கண்டு பிடித்துக் கொள்வது நண்மை பயக்கும். அதன் முதல் படியாக கணினியை ரீபூட் (reboot) செய்ய வேண்டும்..கணினி முறையாக் ரீபூட் ஆகுமானால் ரெஜிஸ்ட்ரியில் (Registry) ஏதோ சிக்கலிருப்பது உறுதியாகிறது.. உடனடியாக் ரீபூட் ஆக வில்லையானால் கணினியை சேப் மொடில் (Safe Mode) ரீபூட் செய்து ஒரு ரெஜிஸ்ட்ரி க்லீனர் கொண்டு ரெஜிஸ்ட்ரியைப் பழுது நீக்கிக் கொள்ள வேண்டும்.

விண்டோஸ் ஆரம்பிக்கு முன்னர் கீபோர்டில் F8 விசையை அழுத்துவதன் மூலம் கணினியை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும் என்ற மெனுவை வரவழைத்து சேப் மோடில் நுளையலாம்..

விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியிலிருக்கும் ஒவ்வொரு பைலும் கணினியிலுள்ள ஒவ்வொரு எப்லிகேச்னுக்குமுரிய கட்டளைகளைக் கொண்டுளன. அடுத்து என்ன செய்ய வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை ரெஜிஸ்ட்ரி பைல்களே கொண்டிருக்கும். இந்த ரெஜிஸ்ட்ரி பைல்கள் பழுதடையும் போது அல்லது இடம் மாறி விடும் போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற விவரம் தெரியாமல் கணிணி தடுமாறுகிரது. இவ்வறான சந்தர்ப்பத்தில் கணினி தன் கட்டுப் பாட்டை இழந்து இறுதியில் க்ரேஷ் ஆகி விடுகிறது.

சில மென்பொருள்களைப் புதிதாக நிறுவும்போது கூட கணினி க்ரேஷ் ஆகலாம். அப்போது அந்த மென்பொருளை அகற்றி விடுவதே சிறந்த வழி.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் முறையாக செயற்பட மறுக்கும் ஒரு எப்லிகேசனை டாஸ்க் மேனேஜரை (Task Manager) வரவழைப்பதன் மூலம் நிறுத்தி விடலாம். டாஸ்க் மேனேஜரை வரவழைக்க Ctrl + Alt + Delete விசைகளை ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும். செயற்பட மறுக்கும் எப்லிகேசன் பெயரை டாஸ்க் மேனேஜர் விண்டோவில் காண்பிக்கும். அதிலிருந்து உரிய எப்லிகேசனை தெரிவு செய்து End Task பட்டனில் க்ளிக் செய்வதன் மூல்ம் நிறுத்தி விடலாம்.

டாஸ்க் மெனேஜர் மூலமாகாவும் உரிய எப்லிகேசனை நிறுத்த முடியாது போனால் டாஸ்க் மேனேஜர் திறந்திருக்கும் நிலையில் மறுபடியும் Ctrl + Alt + Delete விசைகளை அழத்துங்கள். கணினி ரீபூட் ஆக ஆரம்பிக்கும்.

ரீபூட் ஆக வில்லையெனின் க்னினியில் உள்ள Reset பட்டனை அழுத்தி விடுங்கள். அப்படிம் ஒரு பட்டன் இல்லையென்றால் கவலை வேண்டாம். கணினியிலுள்ள பவர் பட்டனை ஐந்து வினாடிகள் தொடர்ச்சியாக அழுத்திக் கொண்டேயிருங்கள் கணினி முழுமையாக் சட்டவுன் ஆகிவிடும்.

கணினி க்ரேஷ் ஆவதும் ப்ரீஷ் ஆவதும் தவிர்க்க முடியாதது. அதனால் கணினியில் முக்கியமான பைல்களை அவ்வப்போது நகலெடுத்துப் பாதுகாக்கும் பழக்கத்தை கடை பிடிக்க மறந்து விடாதீர்க்கள்.

Tuesday, October 13, 2009

Uses of Insert Key

Insert key யின் பயன்பாடு என்ன?

விசைப் பலகையின் வலது புற்ம் Insert எனும் ஒரு விசை இருப்பதை நீங்கள் அறிவீர்கள். சில கீபோர்டுகளில் இது INS எனப் பெயரிடப் பட்டிருக்கும். இதன் பயன்பாடு என்ன என்பதை அறிவீர்களா?

டைப் செய்த எழுத்துக்களை அழிப்பதற்கு Delete Key பயன்படுத்துவதைப் போல் சில (Word Processor) வேர்ட் ப்ரொஸசர்களில் எழுத்துக்களை இடையில் செருகு வதற்கு இந்த Insert கீயை அழுத்த வேண்டியிருக்கும்.. அல்லா விடின் இடையில் டைப் செய்யும் எழுத்துக்கள் முன்னர் டைப் செய்த எழுத்துக்களை (Overwrite) அழித்து விடும்.. எம். எஸ். வர்டில் இந்த விசை எம்.எஸ்.வர்டைத் திறந்ததுமே Insert நிலையிலேயே இயல்பாக் (default) இருக்கும். Insert கீயை ஒரு முறை அழுத்தியதும் அது Overwrite நிலைக்கு மாறி விடும். அப்போது இடையில் எழுத்துக்களை டைப் செய்யும்போது முன்னர் டைப் செய்த எழுத்துக்களை அழித்து விடுவதைக் காணலாம்.

எம்.எஸ்.வர்ட் தற்போது Insert நிலையிலா அல்லது Overwrite நிலையிலா இருகிறது என்பதை Status Bar இல் காண்பிக்கும். ஸ்டேட்டஸ் பாரில் OVR என இருப்பின் அது Overwrite நிலையில் இருப்பதாகக் கொள்ளுங்கள். அத்தோடு Insert கீயை எம்.எஸ்.வர்டில் (Clip Board) க்ளிப் போர்டில் உள்ளதைப் (Paste) பேஸ்ட் செய்வதற்கான ஒரு குறுக்கு விசையாகவும் பயன்படுத்தலாம். அதற்கு Tools மெனுவில் Edit டேபைத் தெரிவு செய்யுங்கள். அங்கு Use the ‘Ins’ key for paste என்பதைத் தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள்.

-அனூப்-

CutePdf Writer - Create PDF files easily

PDF பைல்களை எளிதாக உருவாக்க CutePdf Writer

Cute1பலருக்கும் பல்வேறு விதமான எப்லிகேசன் களிலிருந்து ஆவணங்களை அச்சிட்டுக் கொள்ள் வேண்டிய தேவை அவ்வப்போது வரலாம். எனினும் கணினி வைத்திருப்பவர்கள் எல்லோருமே ப்ரிண்டரும் வைத்திருப்ப தில்லை.. அப்போது தமது கணினியில் உருவாக்கிய ஆவணத்தை ப்ரிண்டர் பொருத்தியுள்ள் வேறொரு கணினிக்கு சீடி அல்லது பென் ட்ரைவ் மூலம் எடுத்துச் சென்று அச்சிட்டு கொள்வதைப் பார்க்கிறோம்.

ஆவணத்தை உருவாக்கிய எப்லிகேசன் அந்தக் கணினியிலும் நிறுவப் பட்டிருந்தால் பிரச்சினை அத்தோடு முடிந்து விடும்.. ஆனால் கணினிப் பயனர்கள் எல்லோருமே பொதுவாகப் பாவனையிலுல்ள மென்பொருள் களைத் தவிர எல்லா விதமான எப்லிகேசன்களையும் கணினியில் நிறுவிக் கொள்வதில்லை. ப்ரிண்டர் பொருத்தியுள்ள் நண்பரின் கணினியில் உரிய எப்லிகேசன் நிறுவப்படாதிருந்தால் எப்படி அச்சிட்டுக் கொள்வது? இவ்வாறன சந்தர்ப்பங்களில் கை கொடுக்கிறது Adobe நிறுவனம் உருவாக்கிய PDF (Portable Document Format) எனும் பைல் வடிவம்.

இணைய தளங்களிலும் மின்னஞ்சல் ஊடாகவும் மென்பொருள் உதவிக் குறிப்புகள், வழிகாட்டி நூல்கள், விண்ணப்பப் படிவங்கள் போன்ற பல வகையான ஆவணங்கள் மற்றும் மின் புத்தகங்கள் (e-books) பீ.டீ.எப் பைல்களாகவே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பீ.டீ.எப் பைல்கள் எழுத்துக்கள், வெக்டர் கிரபிக்ஸ் (Vector Graphics), நிழற் படங்கள், அட்டவணைகள், ஹைபலிங்ஸ் (hyperlinks) எனப் பல்வேறு விடயங்களைத் கொண்டிருக்கும். பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் சார்ந்த ஆவணங்களை அறிக்கைகளை வலையமைப்பிலோ, இணையத்திலோ வெளியிட இந்த பீ.டீ.எப் பைல்களையே பெரிதும் நம்பியிருக்கின்றன. ஏனெனில் பீ.டி.எப் பைல்களை யாரும் எளிதில் மாற்றி விட முடியாது.

அதாவது இலத்திரனியல் ஆவணங்களைப் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் பரிமாறிக் கொள்ளக் கூடிய ஒரு பைல் வடிவமாக PDF உலகம் முழுதும் பயன் படுத்தப்படுகிறது.. இந்த பீ.டீ.எப் பைல்களை எடோபி நிறுவனத்தின் எக்ரொபெட் ரீடர் (Acrobat Reader) மென்பொருள் மூலம் (read) வாசித்தறியலாம். எந்தவொரு எப்லிகேசனில் உருவாக்கிய ஆவணத்தையும் பீ.டி.எப் பைலாக மாற்றிக் கொள்வதன் மூலம் குறிப்பிட்ட அந்த எப்லிகேசன் இல்லாமலேயே எக்ரோபெட் ரீடர் கொண்டு வாசித்தறியவோ அச்சிடவோ முடியும். பி.டி.எப் பைல்களைக் கையாளக் கூடிய எக்ரொபெட் ரீடர் மென்பொருள் அனேகமாக எல்லாக் கணினிகளிலும் நிறுவப் பட்டிருக்கும்.

எனினும் எக்ரோபெட் ரீடர் மூலம் புதிதாக பீ.டீ.எப் பைல்களை உருவாக்கவோ அல்லது அதனை மாற்றியமைக்கவோ (edit) முடியாது.. புதிதாக பீ.டி.எப் பைல்களை உருவாக்கவென (write) எடோபீ நிறுவனத்தால் உருவாக்கப் பட்டிருப்பது Adobe Acrobat மற்றும் Adobe LiveCycle எனும் மென்பொருள்கள். இவை மட்டுமன்றி பீ.டீ.எப் பைல்களை உருவாக்கும் வசதி எடோபீ நிறுவனத்தின் பதிப்புதுறை (Desktop Publishing) சார்ந்த வேறு மென்பொருள்களிலும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் இங்கு சொல்ல வருவது எடோபி நிறுவனத்தின் தயாரிப்பல்லாத CutePdf Writer எனும் சிறிய மென்பொருள் பற்றியே.

CutePdf Writer .மூலம் ஆவனங்களை பீ.டீ.எப் பைலாக மாற்றி கொள்ள லாம். விண்டோஸில் இயங்கும் அச்சிடும் வசதி கொண்ட அனேகமான எப்லிகேசன்களில் உருவாக்கிய ஆவணங்களை பீ.டி.எப் பைலாக இலகுவாக் மாற்றித் தருகிறது இந்த கியூட் பீ.டி.எப். ரைட்டர்.

கியூட் பீ.டி.எப் ரைடடரோடு PS2PDF எனும் converter மென்பொருளையும் ஐயும் சேர்த்தே நிறுவிக் கொள்ள வேண்டும், கியூட் பீ.டி.எப் ரைட்டர் (3.36 MB) மற்றும் PS2PDF (5.01 MB) அளவு கொண்ட மாற்றி ஆகிய இரண்டு மென்பொருள்களையும் www.cutepdf.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ஒரு ஆவணத்தை பீ.டி.எப் பைலாக மாற்றுவதெப்படி?
மேற் சொன்ன இரண்டு மென்பொருள்களையும் நிறுவிய பின்னர் உங்கள் ஆவணத்தை உரிய எப்லிகேசன் மூலம் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File மெனுவில் Print தெரிவு செய்யுங்கள். அப்போது ப்ரிண்ட் டயலொக் பொக்ஸ் தோன்றும். அந்த டயலொக் பொக்ஸில் பிரிண்ட்டர் பெயராக CutePdf Writer ஐத் தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள். அப்போது Save as என மேலுமொரு டயலொக் பொக்ஸ் தோன்றக் காணலாம். அங்கு பைலுக்கு பொருத்தமான ஒரு பெயரையும் பைல் வடிவமாக பீ.டி.எப் என்பதையும் தெரிவு செய்து தேவையான இடத்தில் சேமித்துக் கொள்வதன் மூலம் அந்த ஆவணம் பீ.டீ.எப் பைலாக் மாற்றப் பட்டிருப்பதைக் காணலாம்.

-அனூப்-

Sunday, October 04, 2009

Package for CD in MS PowerPoint

எதற்கு இந்த Package for CD?

எம்.எஸ்.பவர்பொயிண்ட், ப்ரசண்டேசன் ஒன்றை அந்த ப்ரசண்டே சனுக்குரிய அத்தனை துணை அம்சங்களுடனும் சீடியில் பிரதி செய்து கொள்ளக் கூடிய வ்சதியைத் தருகிறது Package for CD எனும் கட்டளை. அதாவது பவர்பொயின்டிலுள்ள Package for CD எனும் வசதியின் மூலம் ஒரு ப்ரசண்டேசனில் பயன் படுத்திய படங்கள் (images) , ஒலி (sound), வரைபுகள் (charts) , எழுத்துரு (fonts) போன்றவற்றை ஒரே பைலாக சேமித்துக் கொள்ள முடியும். இத்ன மூலம் ஒரு ப்ரசண்டேசனை வேறொரு கணினிக்கு இலகுவாக் மாற்றிக் கொள்ள முடிவதோடு பவர்பொயிண்ட் நிறுவப் பட்டிராத கணினிகளிலும் அதனை இய்ககி பார்க்கக் கூடிய வசதியை தருகிறது. அத்தோடு ப்ரசண்டேசன் ஒன்றை நகலெடுத்துப் பாதுகாக்கவும் (backup) முடிகிறது. எம்.எஸ்.பவர் பொயிண்ட் 2003 ற்கு முன்னைய பதிப்புக்ளில் இதற்கு Pack and Go எனப் பெயரிடப் படிருந்தது.

Package for CD எனும் இந்த சிறப்பம்சத்தைப் ப்யன் படுத்த பின் வரும் வழி முறையைக் கையாளுங்கள். முதலில் File மெனுவில் Package for CD எனும் கட்டளையைத் தெரிவு செய்யுங்கள். அப்போது ஒரு சிறிய டயலொக் பொக்ஸ் தோன்றும்,. அங்கு Name the CD எனுமிடத்தில் சீடியிற்கு ஒரு பெயரை வழங்குங்கள்.

 அடுத்து அதே டயலொக் பொகஸில் Add Files பட்டனில் க்ளிக் செய்து உரிய ப்ரசண்டேசன பைலைக் காட்டி விடுங்கள். விரும்பினால் Options பட்டனில் க்ளிக் செய்வதன் மூலம் ப்ரசண்டேசன் பைலிலிருந்து இணைப்பு கொடுக்கப் பட்டிருக்கும் வேறு பைலகள் மற்றும் எழுத்துருக்கள் போன்ற வற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். அத்தோடு அதிகாரமற்றவர்கள் எவரும் அந்த ப்ர்சண்டேசனை இயக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியா வண்ணம் கடவுச்சொல் ஒன்றை வழங்கவும் முடியும்.

அடுத்து Copy to CD யில் க்ளிக் செய்வதன் மூலம் அதனை நேரடியாக சீடியில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது Copy to Folder க்ளிக் செய்து இந்த பைலை ஹாட் டிஸ்கில் விரும்பிய ஒரு போல்டரில் சேமித்துக் விட்டு பின்னர் சீடியில் பதிவு செய்து கொள்ளவும் முடியும்.

-அனூப்-

Sunday, September 27, 2009

How to find the difference between two dates

எம்.எஸ்.எக்ஸலில் இரண்டு திகதிகளுக்கிடைய
வித்தியாசத்தைக்  
கண்டறிவதெப்படி?

எம்.எஸ்.எக்ஸலில் இரண்டு தேதிகளுக்கிடையே உளள நாட்களின் வித்தியாசத்தை ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழிப்பதன் மூலம் இலகுவாகக் கணித்து விடலாம். எனினும் இரண்டு தேதிகளுக்கிடையே உ வித்தியாசத்தை வருடங்களில் மாதங்களில் நாட்களில் எப்படி கண்டறிவது? அதற்கும் ஒரு இலகுவான வழி முறை எக்ஸ்லில் உள்ளது..

இதற்கு எக்ஸலில் உள்ள
Datedif எனும் பங்க்ஸ்ன் (function) பயன் படுத்தப்படுகிறது. இந்த Datedif எனும் பங்ஸனை = Datedif (திகதி1, திகதி2, விடை காண வேண்டிய வடிவம்) {=DATEDIF(Date1, Date2, OutputRequirement)} எனும் ஒழுங்கிலேயே வழங்க வேண்டும். OutputRequirement எனுமிடத்தில் மேற்கோள் குறிகளுக்கிடையே "Y" என வழங்கும் போது வருட வித்தியாசத்தையும் “M” என வழங்கும்போது மாதங்களின் வித்திய்சாத்தையும் “D” என்பது நாட்களின் வித்தியாசத்தையும் தரும். இங்கு திகதி1 ஐ விட திகதி2 பெரிதாக இருக்க வெண்டும் என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்.

உதாரணமாக 8/8/1990 எனும் திகதிக்கும் 13/05/2008 எனும் திகதிக்கும் இடையில் எத்தனை வருடங்கள் உள்ளன? எத்தனை நாட்கள் உள்ளன? எத்தனை மாதங்கள் உள்ளன எனக் கணக்கிட முதலில் எக்ஸல வர்க் சீட்டில் B3 எனும் செல்லில் 08/08/1990 எனும் திகதியையும் B4 எனும் செல்லில் 13/05/2008 எனும் திகதியையும் உள்ளீடு செய்யுங்கள்.. திகதியை உள்ளீடு செய்யும்போது உங்கள் கணினியில் திகதி உள்ளீடு செய்யும் வடிவத்தையும் (Date format) கவனத்திற் கொள்ள மறந்து விடாதீர்கள் அனேகமாக் விண்டோஸில் MM/DD/YYYY (மாதம் /திகதி/வருடம்) எனும் திகதி வடிவமே இயல்பு நிலையில் இருக்கும்

அடுத்து இரண்டு திகதிகளுக்கிடையிலுள்ள வருட வித்தியாசத்தைக் கண்டறிய B6 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,"Y") எனும் சமன்பாட்டை டைப் செய்யுங்கள். விடையாக 17 (வருடங்கள்) வரக் காணலாம். அதேபோல் இரண்டு திகதிகளுக்கிடையேயுள்ள மாதங்களின் எண்ணிக்கையைக் காண B7 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,"M") எனவும் நாட்களின் வித்தியாசத்தைக் காண B8 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,"D") எனவும் வழங்குங்கள்.
இன்னும் சற்று மாறுதலாக இன்றைய திகதிக்கு உங்கள் வயது என்ன என்பதைக் கண்டறிய வேண்டுமானால் மேற் சொன்ன சமன்பாட்டில் சிறிய மாற்றத்தைச் செய்ய வெண்டும்.Date2உதாரணமாக B2 எனும் செல்லில் உங்கள் பிறந்த திகதியையும் B3 எனும் செல்லில் இன்றைய திகதியையும் டைப் செய்யுங்கள். B5 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,"Y") எனும் சமன் பாட்டை வழங்கும் போது வருட வித்தியாசம் கிடைக்கும். அவ்வாறே B6 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,"YM") என வழங்குங்கள். வருடங்கள் நீங்களாக மாத வித்தியாசம் கிடைக்கும். B7 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,"MD") எனும் சமன்பாட்டை வழங்க வருடங்களையும் மாதங்களையும் தவிர்த்து நாட்களின் வித்தியாச்ம் மாத்திரம் கிடைக்கும்.

இதே சமன்பாட்டை இன்னும் சற்று மாற்றி இன்று உன் வயது ...வருடங்கள் ... , மாதங்கள் ...., நாட்கள் எனவும் காட்டலாம். அதற்கு எக்ஸ்லில் உள்ள TEXT எனும் பங்ஸனையும் பிரயோகிக்க் வேண்டும். இந்த பங்ஸன் என் பெறுமாணத்தை டெக்ஸ்டாக மாற்றி விடுகிறது.

அதற்கு வேறொரு செல்லில் ="இன்று உன் வய்து " & TEXT(B5, "0") & " வருடங்கள் ," & TEXT(B6, "0") & " மாதம் ," & TEXT(B7, "0") & " நாட்கள்." என வழங்குங்கள். இன்று உன் வய்து 19 வருடங்கள் ,1 மாதம் ,19 நாட்கள். எனும் விடையை எக்ஸல் காண்பிக்கும். .


-அனூப்-

Useful Windows tip

உபயோகமான ஒரு விண்டோஸ் டிப்

நீங்கள் கணீயில் ஏதோ வேலையாக் இருக்கிறீர்கள். அப்போது உங்க்ள் ந்ண்பரோ அல்லது வேறு எவரோ அவ்விடத்திற்கு வந்து விடுகிறார். நீங்கள் கணினியில் என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்பதை வந்தவர் பார்த்து விடக் கூடாது என நினைகிறீர்கள். அப்போது என்ன செய்வது? ஒரு துணியை எடுத்து கணினித் திரையை மூடி விடலாம் என்கிறீர்களா?

அதே போன்று இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு அவசர வேலையாக வெளியே சென்று வர நினைக்கிறீர்கள். கணினியின் இயக்கத்தை நிறுத்தி விட்டுச் சென்றால் மீண்டும் வந்து முன்னர் பணியாற்றிக் கொண்டிருந்த அதே பைல்களையும் ப்ரோக்ரம்களையும் திறக்க வேண்டிய கட்டாயம். கணினியின் இயக்கத்தை நிறுத்தாமல் சென்றால் வேறு யாராவது வந்து நீங்கள் என்ன செயுது கொண்டிருந்தீர்கள் என்பதைப் பார்த்து விடுவார்கள் என்ற அச்சம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில். உதவுகிறது கீபோர்டிலுள்ள். விண்டோஸ் கீ அல்லது Winkey. இந்த வின்கீயையும் L விசையையும் ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அடுத்த விநாடியே டெஸ்க் டொப் திரை மறைக்கப்பட்டு கணினியில் Log-on செய்யும் திரை தோன்றும். இங்கு அடுத்தவர்கள் உங்கள் கணினியை லொக் ஓன் செய்யாமலிருக்க உங்கள் பயனர் கணக்குக்கு (User Account) ஒரு கடவுச் சொல்லையும் (password) கொடுத்திருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

–அனூப்-

Slide Master in Power Point

எதற்கு இந்த Slide Master?

எம்.எஸ்.பவர்பொயிண்டில் உருவாக்கும் Presentation இல் ஒரே மாதிரியான தோற்றத்தை ஒவ்வொரு ஸ்லைடிலும் பிரதிபலிக்கச் செய்ய விரும்புகிறீர்களா? அதற்கு உதவுகிறது பவர்பொயிண்டிலுள்ள ஸ்லைட் மாஸ்டர் (Slide Master) எனும் சிறப்பம்சம். இந்த ஸ்லைட் மாஸ்டர் என்பது ஒவ்வொரு ஸ்லைடினதும் வடிவத்தைத் தீர்மாணிக்கும் டிசைன் டெம்ப்லேட்ட்டின் (Design Template) ஒரு அங்கமாகவே செயற்படுகிறது. ஒரு டிசைன் டெம்ப்லேடின் விவரங்களை தன்னகத்தே சேமித்துக் கொள்கிறது ஸ்லைட் மாஸ்டர். இதன் மூலம் உங்கள் உங்கள் ப்ரசண்டேசனுக்கு ஒரே மாதிரியான அதே வேளை நிலையான் தோற்றத்தை தனியாக் ஒவ்வொரு ஸ்லைடிலும் மாற்றாமல் ஒரே தடவையில் வ்ழங்க முடியும்.


Font Styles எனும் எழுத்து வடிவம், எழுத்தின் நிறம்,, எழுத்தின் அளவு மற்றும் ஸ்லைடின் பின்னணி வர்ணம், பின்னணியில் தோன்றச் செய்யும் படம், எழுத்துக்களை டைப் செய்ய உதவும் (Palce Holder) ப்லேஸ் ஹோல்டரின் நீள அகலம், அதன் அமைவிடம் பட்டியல் ஒன்றைத் தயாரிக்க உதவும் புல்லட்ஸ் (Bullets) எனும் குறியீடுகள், ஹெடர் மற்றும் பூட்டர் (Header and Footer) போன்ற பல விதமான் மாற்றங்களை உங்கள் விருப்பத்திற்கேற்றபடி மாற்றியமைக்க உதவுகிறது இந்த ஸ்லைட் மாஸ்டர்.

முக்கியமாக் ஒவ்வொரு ஸ்லைடிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு லோகோவை (Logo) தோன்றச் செய்ய வேண்டுமானால் அதற்கும் இந்த ஸ்லைட் மாஸ்டரையே நாட வேண்டும்.

புதிதாக் ஒரு டிசைன் டெம்ப்லேட்டை ஸ்லைட் மாஸ்டரின் மூலம் உருவாக்க View மெனுவில் Master → Slide Master என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது மாஸ்டர் வியூ விண்டோவினுள் பிரவேசிக்கலாம். அங்கு Slide Master View எனும் டூல் பாரும் தோன்றும். அந்த டூல் பாரிலுள்ள Slide Master மற்றும் Title Master .பட்டன்களில் க்ளிக் செய்து வரும் இரு ஸ்லைடுகளில் தேவையான மாற்றங்களை செய்து புதிதாக் ஒரு டிசைன் டெம்ப்லேட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள். விரும்பினால் டூல் பாரிலுள்ள Rename பட்டனில் க்ளிக் செய்து உருவாக்கிய அந்த டிசைன் டெம்ப்லேட்டுக்கு வேறு பெயரிட்டுக் கொள்ளலாம்.

இவ்வாறு ஒரு ப்ரசண்டேசனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட டிசைன் டெம்ப்லேட்டுக்களை உருவாக்கிக் கொள்ள முடியும். பின்னர் Close Master View பட்டனில் க்ளிக் செய்து மாஸ்டர் வியூவிலிருந்து வெளியேற வேண்டும்.

நீங்கள் உருவாக்கிய டிசைன் டெம்ப்லேட்டுக்களை அந்த ப்ரசன்டேசனில் Slide Design Task Pane இல் காண்பிகும்,. அவற்றில் க்ளிக் செய்வதன் மூலம் அந்த டிசைனை ப்ரச்ண்டேசனில் நுளைக்கலாம்.

-அனூப்-

What is Cross-Over Cable?

Cross-Over Cable  என்றால் என்ன?

இரண்டு கணினிகளை நேரடியாக இணைப்பதற்குக் க்ரொஸ்–ஓவர் கேபல் (cross-over)  பயன்படுகிறது.

கணினி வலயமைப்பை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் சாதாரண முறுக்கிய கம்பிகளைக் (Twisted pair) கொண்ட கேபலானது எட்டு வயர்களை உள்ளே கொண்டிருக்கும்.. இந்த எட்டு வயர்களும் நான்கு சோடிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றின் இரு முனைகளும் pin-to-pin முறையில் (Connector) கனெக்டரில் இணைக்கப்படும். அதாவது கேபலில் உள்ள வயர்களின் நிலைகள் இரண்டு முனைகளிலும் ஒத்திருக்கும்.

100 Mbps வேகம் கொண்ட Fast Ethernet நெட்வர்க் கார்டில் ஒரு சோடி வயரானது டேட்டாவை அனுப்புவதற்கும் (transmit) மற்றொரு சோடி வயர் டேட்டாவைப் பெற்றுக் கொள்வதற்கும் (receive) பயன்படுத்தப்படும். அதே வேளை மீதமிருக்கும் இரண்டு சோடி வயர்களும் பயன்படுத்தப் படாமலிருக்கும்.

இரு கணினிகளை இணைக்கும்போது pin-to-pin முறையில் வயர்களைக் அதற்குரிய கனெக்டரில் இணணக்கப்படின் அது செயற்படாது. ஏனெனில் இந்த முறையில் டேட்டாவை அனுப்புவதற்குப் பயன்படும் ஒரு சோடி வயரானது அதன் அடுத்த முனையிலும் அதே போன்று டேட்டாவை அனுப்புவதற்கான சோடியுடனேயே இணைக்கப்படும். அதே போன்று டேட்டாவை பெற்றுக் கொள்ளும் ஒரு சோடி வயரானாது அடுத்த முனையிலும் டேட்டாவைப் பெற்றுக் கொள்ளும் சோடியுடனேயே இணைக்கப் படும். இதனையே பின்-டு-பின் கேபல் எனப்படும். இதன் காரணமாகா இரண்டு கணினிளும் ஒன்றோடொன்று தொடர்பாடலை மேற் கொள்வது சாத்தியப்படாது. .

பின்-டு-பின் கேபலை பயன்படுத்தி இரண்டு கணினிகளைக் இணைக்க வேண்டுமானால் இடையில் ஹப் (hub) அல்லது ஸ்விட்ச் (switch) போன்ற சாதனங்கள் தேவைப்படும். இந்த ஹப் அல்லது ஸ்விச், ஆனது இரண்டு வயர் சோடிகளையும் எதிரெதிர் முனைகளில் (cross) சந்திக்க வைக்கிறது. அதாவ்து ஒரு கணினியில் டேட்டாவை அனுப்புவதற்குப் பயன்படும் ஒரு சோடி வயரானாது அடுத்த கணினியில் டேட்டாவைப் பெற்றுக் கொள்ளும் முனையுடனும் டேட்டாவைப் பெற்றும் கொள்ளும் முனையானது அடுத்த கணினியில் டேட்டாவை அனுப்பும் வயர் சோடியின் முனையுடனும் தொடுக்கப்படும். இதன் மூலம் இரு கணினிகளுக்கிடையே தொடர்பாடலை மேற்கொள்ள முடியும்.

க்ரொஸ்-ஓவர் கேபல் இதற்கு நேர் மாற்றமானது. இங்கு டேட்டாவை அனுப்புவதத்குப் பயன்படும் ஒரு சோடி வயரானாது அடுத்த முனையில் டேட்டாவைப் பெற்றுக் கொள்ளும் முனையுடன் இணைக்கப்படும். அதே போன்றே அடுத்த சோடி வயரில் டேட்டாவைப் பெற்றுக் கொள்ளும் முனையானது டேட்டாவை அனுப்பும் வயரின் முனையுடன் கனெக்டரில் இணைக்கப்படும்.

க்ரொஸ்-ஒவர் கேபல் சாதராண நெட்வர்கின் கேபலிலிருந்து வேறுபடுவது அதிலுள்ள வயர்களினாலோ அல்லது அவற்றில் இனைக்கப்படும் கனெக்டரினாலோ அல்ல. அந்த வயர்களை ஒன்றோடொன்று இணைக்கப்படும் விதத்திலேயே அது மாறுபடுகிறது,

Sunday, September 20, 2009

How to connect two PC's?

இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி?

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கப் பட்டிருப்பின் அதனை ஒரு கணினி வலையமைப்பு (Computer Network) எனப்படும். கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதிலும் பல்வேறு முறைகள் பயன் பாட்டிலுள்ளன. வலையமைப்பின் அளவைப் பொருத்து இந்த ஒவ்வொரு முறையும் அதற்கேயுரிய சாதக பாதகங்களையும் கொண்டுள்ளன.

எந்த வகையிலான கணினி வலையமைப்பை உருவாக்கும் போதும் சில அடிப்படை விடயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது, உதாரணமாக வலையமைப்பு உருவாக்கப் போவது கம்பியூடா (wired) அல்லது கம்பியில்லாமலா (wireless) என்பது.

அதேபோன்று ஒரு வலையமைப்பில் முக்கிய பங்காற்றுவது ப்ரொட்டகோல் (Protocol) எனப்படும் தொடர்பாடல் விதி முறைகளாகும். இருவேறு பட்ட கணினிகள் தொடர்பாடும் போது இணைப்பு மொழியாக இந்த ப்ரொட்டகோல் தொழிற்படுகிறது. தற்போது கணினி வலையமைப்பில் TCP/IP எனும் தொடர்பாடல் விதிமுறையே பயன் பாட்டிலுள்ள்து.. இந்த விதி முறையே உலகலாவிய கணினி வலையமைப்பான இணையத்திலும் பயன் படுத்தப்படுகிறது.

பைல் மற்றும் வளங்களைப் பாரிமாறிக் கொள்ளும் வசதி, மின்னஞ்சல், கணினி வழி உரையாடல், பேஸ் புக் போன்ற சோஷியல் நெட் வொர்க் (Social Networking) சேவைகள் போன்றன் இன்றைய கணினிகளால் இணைந்து விட்ட உலகின் வியக்கத் தக்க பயன்பாடுகளாகப் பேசப்படுகிறது. உலகம் முழுதும் பரவியுள்ள கணினிகளின் வலையமைப்பே இதனைச் சாத்தியமாக்கியது.

இனி விடயத்திற்கு வருவோம். வீட்டிலோ அலுவலகத்திலோ கணினிகளை ஓர் அறையின் மூலையில் வெளியுலக் தொடர்பேதுமில்லால் (Stand alone) தனியாக வைத்துப் பாவிக்கும் காலம் எப்போதோ மலையேறி விட்டது இருப்பது இரண்டே இரண்டு கணினிகளாயினும் அவற்றை ஒன்றோடொன்று இணைத்துப் பயன் படுத்துவதில் பல அனுகூலங்கள் உள்ளன. இரண்டு கணினிகளை இணைத்து ஒரு சிறிய கணினி வலயமைப்பை உருவாக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழி முறைகளும் உள்ளன. அவற்றுள் அதிக செலவில்லாமல் இணைக்கக் கூடியது க்ரொஸ் ஒவர் (cross-over) கேபல் கொண்டு இணைப்பதாகும். அதன் மூலம் இரண்டு கணினிகளுக்கிடையே பைல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இணைய இணைப்பு மற்றும் ப்ரிண்டர்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்..

இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்வதாயின் ஒரு கணினியில் இரண்டு நெட்வர்க் கார்டுகளை (Network Interface Card) பொருத்த வேண்டி யிருக்கும். ஒரு கார்டை ப்ரோட்பேண்ட் (Broadband) இணைப்புக்கான ரூட்டரிலும் (Router) மற்றொரு கார்ட் அடுத்த கணினியை இணைக்கவும் பயன் படுத்தப்படும்.
ப்ரோட்பேண்ட் இணைய இணைப்பைப் பகிர வேண்டிய அவசியமில்லை அல்லது நீங்கள் பயன் படுத்துவது டயல் அப் (Dial up) இணைப்பு எனின் ஒரு கணீனியில் இரண்டு நெட்வர்க் கார்டுகள் தேவைப் படாது.. இரண்டு கணினிகளை இணைப்பது பைல்களைப் பரிமாற மட்டுமே எனின் இரண்டு கணினிகளிலும் ஒவ்வொரு நெட்வர்க் கார்ட் இருந்தாலே போதுமானது.

எனினும் இவ்வாறு இரண்டு கணினிகளை இணைக்கும் போது சில வரையறைகளும் உள்ளன என்பதைக் கவனத்திற் கொள்ள் வேண்டும். உதாரணமாக இணைய இணைப்பையோ அல்லது ப்ரிண்டரையோ பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு கணிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்,.

இடையில் ஹப் (Hub) , ஸ்விச் (Switch) போன்ற வேறு எந்த சாதனங்களும் இல்லாமல் நெட்வர்க் கார்ட் ஊடாக மட்டுமே இணைப்பதற்கு இரண்டு கணினிகளையும் விசேட cross-over கேபல் பயன் படுத்தப்படுகிறது.. இந்த க்ரொஸ் ஓவர் கேபல் வழமையான (Ethernet) ஈதர்நெட் கேபலிலிருந்து வேறுபட்டது. இதனை நாமாகவே த்யாரித்துக் கொள்ளவும் முடியும்.

இரண்டு கணினிகளையும் கேபல் கொண்டு இணைத்து விட்டால் மாத்திரம் அவற்றிற்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள முடியாது. அடுத்த வேலையாக இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரிகளை கீழுள்ளவாறு மாற்றியமைக்க வேண்டும்.

விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் முதல் கணினியில் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்யுங்கள். அப்போது திறக்கும் விண்டோவில் Local Area Network என்பதன் கீழ் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனை மஞ்சள் நிறத்தில் விழிப்புக் குறியுடனும் “Limited or No Connectivity” எனும் செய்தியுடனும் காண்பிக்கும். அதாவது கணினிகளுக்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள இரண்டு கணினிகளும் இன்னும் தயாராயில்லை என்பதையே இது காட்டுகிறது

அடுத்து அந்த ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள்., அப்போது தோன்றும் Local Area Connection Properties டயலொக் பொக்ஸில் General டேபின் கீழ் Internet Protocol (TCP/IP) என்பதைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள் Properties பட்டனில் க்ளிக் செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Use the following IP address என்பதைத் தெரிவு செய்து கீழுள்ள்வாறு அதன் ஐபி முகவரியை மற்றியமையுங்கள்..


முதல் கணினியில் (PC-1) ஐபி முகவரியாக 192.168.0.1 எனவும் இரண்டாவது கணினியில் (PC-2) 192.168.0.2 எனவும் வழங்குங்கள். இப்போது இரண்டு கணினிகளையும் இணைத்தாயிற்று, இதனை உறுதி செய்து கொள்ள வேண்டுமானால் மறு படியும் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்ய் வரும் விண்டோவில் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனில் ம்ஞ்சல் நிற விழிப்புக் குறி மறைந்திருப்பதைக் காணலாம். சில வேளை அந்த ஐக்கன் மேல் பூட்டு வடிவில் ஒரு ஐக்கன் இருப்பதை அவதானித்தால் Firewall இயக்க நிலையிலுள்ளது என்பதையே காட்டுகிறது. அவ்வாறிருந்தால் பைல் பரிமாறம் செய்வதை விண்டொஸ் அனுமதிக்காது. அதனை இடப்பக்கம் Network Task என்பதன் கீழ் Change Windows Firewall Settings என்பதைக் க்ளிக், செய்து தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுங்கள்.. தற்போது இந்த சிறிய வலையமைப்பில் பைல், போல்டர் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாயிருக்கும்.

IP Address: 192.168.0.1
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1

இரண்டாவது கணினியிலும் கீழே காட்டியுள்ளது போன்று ஐபி முகவரியை மாற்றி அமையுங்கள்.
IP Address: 192.168.0.2
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1

அதி வேக ப்ரோடபேண்ட் இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரியை மாற்றியமைக்கும் இடத்தில் “Obtain an IP address automatically” என்பதைத் தெரிவு செய்ய் வேண்டும்.

எனினும் அதிவேக இணைய இணைப்பை இரண்டு கணினிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் நேரடியாக க்ரொஸ் ஓவர் கேபல் கொண்டு இணைப்பதை விட இடையில் இரண்டு அல்லது நான்கு போர்டுகள் (Ports) கொண்ட ரூட்டர் மூலம் இணைப்பதே சிறந்த வழி முறையாகும். எனினும் அதற்கு க்ரொஸ் ஓவர் கேபலை விட செலவு சற்று அதிகமாயிருக்கும். .என்பதை நினைவில் கொள்ளவும்.

- அனூப் -


Internet - 40 years


இணையத்தின் வயது 40 -சில வரலாற்றுப் பதிவுகள்

1969 செப்டெம்பர் 2 – ஆம் திகதி லொஸ் ஏஞல்ஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் Leonard Kleinrock என்பவரின் கணினி ஆய்வு கூடட்தில் இரண்டு கணினிகளுக்கிடையே டேட்டா பரிமாறுவதில் வெற்றியீட்டப் படுகிறது. இதுவே நம் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிணைந்து விட்ட இணையத்தின் துவக்க நாளாகும். அதாவது கடந்த செப்டபர் 2 ஆம் திகதி தனது 40 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியது இண்டர்நெட்.

இரானுவ தேவைக்காக, தனது பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக் கழகங்களை இணைத்து எந்த ஒரு பேரழிவு எற்பட்டு அதன் ஒரு பகுதி சேதமுற்றாலும் எஞ்சியுள்ள மற்றொரு பகுதியூடாக் டேட்டாவைப் பரிமாறிக் கொள்ளக் கூடியதாக் ஒரு கணினி வலயமைப்பை உருவாக்க நினைக்கும் அமெரிக்கா அந்தப் பொறுப்பை Advanced Research Project Agency எனும் நிறுவனத்திடம் ஒப்படைக்கிறது. இந்த வலையமைப்புக்கு ARPANET எனும் பெயர் வழங்கப் படுகிறது.. இன்று கூகில் என்றும், பேஸ்புக் என்றும், யூடியூப் என்றும் இமாலய வளர்ச்சியடைந்துள்ள இணையத்தின் துவக்க நாளில் அர்த்தமறற டேட்டாவே முதன் முதலில் ARPANET இல் பறிமாறிக் கொள்ளப்பட்டன.

எனினும் இந்த் டேட்டா பரிமாற்றம் முழுமையான வெற்றியாக அப்போது கருதப் படவில்லை. அதன் பின்னர் அதே வருடம் ஒக்டோபர் 29 ஆம் திகதியே அவர்களின் முயற்சியில் முழு வெற்றி கிடைக்கிறது.

1971 Ray Tomlinson, எனும் பொறியியலாளர் கணினி வலயமைப்பில் முதல் மின்னஞ்சல் செய்தியை அனுப்புகிறார். பயனர் பெயரையும் டொமேன் பெயரையும் பிரிக்கும் “@” எனும் குறியீட்டையும் இவரே அறிமுகப் படுத்துகிறார்.
1973 அமெரிக்கவிற்கு மட்டுமே சொந்தமாயிருந்த ARPANET எனும் கணினி வலயமைப்பில் ஐக்கிய ராஜ்யம், மறும் நோர்வே நாடுகளும் இணைகின்றன.
1974 அமெரிக்க கணினித் துறை நிபுண்ர்களான Vinton Cerf மற்றும் Bob kahn என்போரால் The Internet and Transmission Control Protocols (TCP/IP) எனும் இனைய விதிமுறைகள வடிவமைக்கப்படுகிறது. இது இணைய வரலாற்றில் ஒரு புரட்சிகர முன்னேறறம் எனலாம்.

1979 CompuServe எனும் நிறுவனம் இணையத்தில் பயனருக்கான online சேவையை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கட்டணம் செலுத்தி இணையம் வழியே செய்திகளை வாசித்தறிந்தார்கள்

1980 CB Simulator எனும் பெயரில் இணையம் வழியே (Chat) உரை யாடும் சேவை அறிமுகமாகிறது.

1983 : இணையத்தளங்களுக்கு ".com".".gov" , “.net”, ".edu" எனும் Domain Name System அறிமுகப் படுத்தப்பட்டது.

1988 Robert T. Morris எனும் பலகலைக கழக மாணவன் இணையத்தின் வழியே முதல் கணினி வைரசை பரப்பி விடுகிறார். மோரிஸ் இதனை ஒரு சோதனை முயற்சியாகாவே செய்ததாக்ச் சொன்னாலும் ஆயிரக் கணக்கில் கணினிகளை பழுதடையச் செய்ததனால் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.. தற்போது இவர் ஒரு கணினித் துறைப் பேரசியராக கடமையாற்றுகிறர்ர்.

1989 Quantum Computer Services எனும் நிறுவனம், கணினி விளையாட் டுக்கள், மற்றும் இணைய உரையாடலுக்கான America Online எனும் சேவையை இணையத்தின் வழியே அறிமுகப்படுத்துகிறது.

1990 அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்த ARPANET எனும் கணினி வலையமைப்பு உலக நடுகள் அனைத்தும் இணைந்து கொள்ளக் கூடியதாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு இண்டர்நெட் எனும் பெயரில் அறிமுகமாகிறது.

Tim Berners-Lee எனும் ஆங்கிலேயரால் இணைய சேவைகளில் ஒன்றான World Wide Web. உலகில் அறிமுகப்படுத்தப்பட்டுகிறது. இதுவே இணைய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

1993 Mosaic எனும் முதல் வெப் பிரவுஸரை Marc Andreessen அறிமுகப் படுத்துகிறார்.

1994 Mosaic இல் பணியார்றிய சிலர் இணைந்து Netscape எனும் வெப் பிரவுஸரை வியாபார நோகில் உருவாக்குகின்றனர்.

1994 David Filo மற்றும் Jerry Yang என்போரால் Yahoo. நிறுவனம் தோறுவிக்கப் படுகிறது.

1998 – Larry Page மற்றும் Sergey Brin என்போரால் Google நிறுவனம் தோற்றுவிக்கப்படுகிறது

1999 ப்லோக் எனும் வலைப்பதிவு அறிமுகமாகியது.

2005 இணையத்தில் வழியே வீடியோ காட்சிகளைப் பகிர்ந்து கொள்ளும் YouTube சேவை அறிமுகமாகிறது.

2006 Mark Zuckerberg எனும் ஹாவாட் பல்கலைக் கழக மாணவனால் 2004 ஆம் அண்டில் உருவாக்கப்பட்ட் thefacebook.com 2006 ஆம் வருடத்திலிருந்து வயது வித்தியாசமின்றி எவரும் இணைந்து கொள்ள அனுமதிக்க்ப் பட்டதும் facebook பெரு வ்ளர்ச்சியடைகிறது.

இதே ஆண்டு 2001 அண்டில் உருவாக்கப்பட்ட விக்கிபீடியா எனும் ஓன்லைன் த்கவல் களஞ்சியத்தில் . (online encyclopedia) வெளியிடப் பட்டுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியன் இலக்கை அடைகிறது.

2007 Apple நிறுவனம் Iphone எனும் கையடக்கத் தொலைபேசியை வெளியிட்டது. இதன் மூலம் அதி வேக கம்பியில்லா இணையம் பாவனைக்கு வந்த்து.

  -அனூப் –