Sunday, January 25, 2009

What is Beta Version?


Beta Version  என்றால் என்ன?

ஒரு மென்பொருளை உருவாக்கிய பிறகு அல்லது மேம்படுத்திய பிறகு அதனைச் சந்தைப்படுத்த முன்னர் மேலும் சில படிநிலைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. அவற்றுள் முதற்படியை அல்பா நிலை (Alfa stage) எனப்படும். அலபா நிலையில் அம்மென்பொருள் அந்நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொருள் பரிசோதகர்களால் சோதனைக்குட்படுத்தப் பட்டு பிழைகளிருப்பின் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். பீட்டா பதிப்பு (Beta Version) வேர்சன் எனப்படுவது மென்பொருள் பரிசோதனையின் இரண்டாம் நிலையைக் குறிக்கிறது. பீட்டா நிலையில் அந்த மென்பொருள் ஒரு குறிப்பிட்ட பாவனையாளர்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ வழங்கப்பட்டு அவர்கள் மூலம் அம்மென்பொரு ளிலுள்ள நிரை குறைகள் கண்டறியப்படும்.

ஒரு மென்பொருளின் பீட்டா பதிப்பை ஒரு முன்னோட்டமாகக் கருதலாம். ஒரு மென்பொருளின் பீட்டா பதிப்பு அந்த மென்பொருளுக்குரிய அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கும். எனினும் பரந்த அளவிளான விற்பனைக்குத் தயார் நிலையில் இருக்காது. இந்த நிலையில் பீட்டா பதிப்பை பயன்படுத்துவோரிடமிருந்து மென்பொருள் பற்றிய கருத்துக்கள் சேகரிக்கப்படும். மென்பொருளை வெளியிட முன்னர் அவர்கள் எதனை விரும்புகிறார்கள், எதனை நீக்க வேண்டும் எதனை மாற்ற வேண்டும் போன்ற விவரங்களை அந்நிறுவனம் சேகரித்துக் கொள்ளும்.

பீட்டா பதிப்பிலும் மூடிய பீட்டா (closed beta) திறந்த பீட்டா (open beta) என இரு வகைகளும் உள்ளன. . ஒரு குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதை மூடிய பீட்ட பதிப்பு எனப்படுகிறது. திறந்த பீட்டா பதிப்பு பொது மக்கள் யாவரும் பயன்படுத்துமாறு வழங்கப்படுவதாகும். பீட்டா பதிப்பில் இறுதியாக வெளிவிட விருக்கும் பதிப்பில் உள்ள அத்தனை சிறப்பம்சங்களையும் கொண்டிருந்தாலும் அதன் பயனர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தொழில் நுட்ப உதவியையே வழங்கும். சில நிறுவனங்கள் தமது மென்பொருளைப் பல வருடங்களுக்கு பீட்டா பதிப்பிலேயே விட்டு வைக்கும். அப்போது முழுமையான பதிப்பைப் போலவே அதனைப் பலரும் பயன்படுத்தலாம்..

பீட்டா எனும் வார்த்தை கிரேக்க மொழி அரிச்சுவடியில் இரண்டாவது எழுத்தைக் குறிக்கிறது என்பது நீங்கள் அறிந்த விடயமே. பீட்டா பதிப்பு அல்லது பீட்டா சோதனை எனும் வார்த்தையை ஐபிஎம் நிறுவனமே முதலில் அறிமுகம் செய்தது. ஐபிஎம் நிறுவனம் தனது கணினி வன்பொருள் சாதனங்கள் முறையாக இயங்குகிறதா எனச் சோதிப்பதற்கே பீட்டா சோதனை எனும் வர்த்தையைப் பயன்படுத்தியது, எனினும் தற்போது இந்த வார்த்தையை மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களளும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. அனேகமான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் பொது மக்கள் பாவனைக்காக வெளியிட முன்னர் பீட்டா பதிப்பையே முதலில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

-அனூப்-


Sunday, January 18, 2009

Create a older without an icon


ஐக்கன் இல்லாமல் ஒரு போல்டர்



ஐக்கன் இல்லாமல் ஒரு போல்டரை எவ்வாறு எனப் பார்ப்போம்

ஒரு போல்டரை வ்ழமையான முறையில் உருவாக்கிக் கொள்ளுங்கள். (விரும்பினால் Alt + 255 டைப் செய்து அதன் பெயரை இல்லாமல் செய்யுங்கள்) அடுத்து அந்த போல்டர் மேல் ரைட் க்ளிக் செய்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Customize டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Folder Icons பகுதியின் கீழ் Change Icon பட்டனில் க்ளிக் செய்ய போல்டருக்குரிய ஏராளமான ஐக்கன்களைக் அங்கே காணலாம்.

அந்த பெட்டியில் ஸ்க்ரோல் செய்யும்பொது ஐக்கன்களுக்கு நடுவே ஓரிடத்தில் வெற்றிடம் இருப்பதை அவதானிக்கலாம். அதிலுள்ள ஒரு வெற்றிடத்தில் க்ளிக் செய்ய அந்த இடம் தெரிவு செய்யப்படும். அந்த வெற்றிடமே நாங்கள் உருவாக்க இருக்கும் போல்டருக்குரிய ஐக்கன். இப்போது ஓகே செய்து விடுங்கள். அவ்வளவுதான். இப்போது நீங்கள் உருவாக்கிய அந்த போல்டர் மறைந்து விடுவதைக் காணலாம்.

இந்த போல்டரில் உங்கள் ரகசிய ஆவணங்கள் மற்றும் பைல்களை இட்டுப் பாதுகாக்கலாம். யாருமே இலகுவில் கண்டுபிடிக்க மாட்டார்கள். இது வழமையாக போல்டர்களை மறைத்து (Hidden Folders) வைக்கும் முறையை விடவும் பாதுகாப்பனதாகும்.

அனூப்

What is Disk Defragment?


Disk Fragment என்றால் என்ன?



டிஸ்க் டிப்ரேக்மெண்டர் என்பது விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்து வரும் ஒரு சிறிய யூட்டிலிட்டி. இதன் மூலம் ஹாட் டிஸ்கில் பைல்களை திறன் பட ஒழுங்கு படுத்தலாம்.

ஹாட் டிஸ்கில் பைல் ஒன்றைச் சேமிக்கும் போது இயங்கு தளமானது அந்த பைலை சிறு சிறு பகுதிகளாக உடைக்கின்றன. பின்னர் அந்த பைலின் பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அல்லாமல் ஹாட் டிஸ்கில் வெவ்வேறு பகுதிகளில் அங்கொன்று இங்கொன்றாக சேமிக்கின்றன. இவ்வாறு சேமிக்கப்பட்ட பைல்களின் சிதறள்களை ப்ரேக்மன்ட்ஸ் (fragments) எனப்படுகிறது.

ஒரு பைலை சேமிக்கும் போதே அந்த பைலுக்குரிய பகுதிகள் ஹாட் டிஸ்கில் எந்தெந்த இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளன என்பது போன்ற விவரங்களையும் இயங்கு தளம் பதிந்து கொள்ளும். FAT (File Allocation Table) எனப்படும் பைல் பகிர்வு அட்டவணை மூலம் இந்த விவரங்களைப் பதிந்து கொள்கின்றன. FAT16, FAT32 மற்றும் NTFS என்பன விண்டோஸில் பயன்படுத்தப்படும் பைல் சேமிப்பு முறைகளாகும். இயங்கு தளம் சேமித்த ஒரு பைலை மீண்டும் அணுக முற்படும் போது உரிய பைல் சிஸ்டம் மூலம் அந்த பைலுக்குரிய பகுதிகள் ஹாட் டிஸ்கில் அல்லது பாட்டிசனில் எந்த க்ளஸ்டரில் (Cluster) எந்த செக்டரில் (Sector) உள்ளன என கண்டறிந்து கொள்ளும்.

பைல்களை அவ்வப்போது சேமிக்கப்படும்போதும், மென்பொருள்களை நிறுவும் போதும் நீக்கப்படும் போதும் ஹாட் டிஸ்கில் டேட்டா சேமிக்கப்படும் இடங்களில் ஏராளமான இடை வெளிகள் உருவாகின்றன. ஹாட் டிஸ்கில் வேவ்வேறு பகுதிகளில் டேட்டா சிறு சிறு பகுதிகளாக சேமிக்கப்படும் போது ஒரு பைலைத் திறப்பதற்கு கணினி இன்னும் கடினமாக செயற்பட வேண்டியுள்ளது. இதன் காரணமாக கணினியின் வேகத்தில் மந்த நிலை உருவாகும்.

ஹாட் டிஸ்கை டிப்ரேக்மன்ட் செய்வதன் மூலம் சேமிக்கப்பட்ட டேட்டாவை ஹாட் டிஸ்கில் மீள ஒழுங்கு செய்யப்பட்டு பைகளுக்கிடையிலான இடை வெளிகள் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் இயங்கு தளம் ஒரு பைலை மிகக் குறுகிய நேரத்தில் அணுக முடிகிறது.

உதாரணமாக ஹாட் டிஸ்கில் உள்ள பைல்களை புத்தகங்களாகவும் ஹாட் டிஸ்கை புத்தகங்களை அடுக்கி வைக்கும் ஒரு புத்தக அல்மாரியாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். அல்மாரியில் ஒரு தட்டில் புத்தகங்கள் நிரம்பியிருக்கின்றன. அந்தத் தட்டிலிருந்து மூன்று சிறிய புத்தகங்கள் அகற்றப்படுகின்றன. (மூன்று சிறிய பைல்கள் ஹாட் டிஸ்கிலிருந்து அழிக்கப்படுகின்றன) அப்போது அங்கு சிறிய மூன்று இடை வெளிகள் உருவாகும். பிறகு அவ்விடத்தில் அளவில் பெரிய ஒரு புத்தகத்தை வைக்க நினைக்கிறீர்கள். எனினும் உங்களால் முன்னர் எடுக்கப்பட்ட ஒரு புத்தகம் இருந்த இடத்தில் அதனை வைக்க முடியாதிருக்கும். பதிலாக அதனை வேறொரு தட்டிலேயே வைக்க வேண்டும். (ஹாட் டிஸ்கில் வேறொரு இடத்தில் பதியப்பட வேண்டும்) அல்லது புத்தகங்களை நகர்த்தி மூன்று சிறிய இடை வெளிகளை ஒன்றாக்கி ஒரு பெரிய இடை வெளியை உருவாக்குவதன் மூலம் அந்த பெரிய புத்தகத்தை வைக்கலாம் (பெரிய பைலை ஹாட் டிஸ்கில் பதியலாம்) இங்கு புத்தகங்களுக்கிடையில் இடை வெளியைக் குறைப்பது போன்றே ஹாட் டிஸ்கில் பைல்களுக்கிடையில் இடை வெளியைக் குறைத்து ஒரு பைலுக்குரிய பகுதிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக தொடராக ஒழுங்கு படுத்தப்படுவதையே டிப்ரேக்மண்ட் (Defragment) எனப்படுகிறது.

ஹாட் டிஸ்கை குறைந்தது மாதத்தில் ஒரு முறையாவது டிப்ரேக்மண்ட் செய்தல் நல்லது. எனினும் டிப்ரேக்மண்ட் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும். ஹாட் டிஸ்கின் அளவைப் பொறுத்து அந்த நேரம் வேறுபடும்.

ஹாட் டிஸ்கை டிப்ரேக்மன்ட் செய்யும் வசதி விண்டோஸ் இயங்குதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் மூன்றாம் தரப்பு மென்பொருள்கள் எதனையும் பயன் படுத்த வேண்டியதில்லை.

விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் டிப்ரேக்மண்ட் செய்யப் பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.

Start → Programs → Accessories → System Tools → Disk Defragmenter தெரிவு செய்யுங்கள். அப்போது Disk Defragmenter டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு உரிய ட்ரைவைத் தெரிவு செய்து Analyze பட்டனில் முதலில் க்ளிக் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்ய வேண்டிய தேவையுள்ளதா எனக் கண்டறியலாம். அதன் பின்னர் டிப்ரேக்மண்ட் செய்ய வேண்டியிருப்பின் Defragment பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.

எனினும் விண்டோஸ் விஸ்டா பதிப்பில் டிப்ரேக்மண்ட் செய்யும் செயற்பாட்டை குறிப்பிட்ட கால இடை வெளிகளில் இயங்கு தளம் தானாகவே செயற்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண ஒரு கணினிப் பயனர் ஹாட் டிஸ்கை டிப்ரேக்மன்ட் செய்வதைப் பற்றிக் கவலையே பட வேண்டாம். அதனை விண்டோஸே கவனித்துக் கொள்ளும். அதேபோல் மேல் நிலைப் பயனர்கள் கமாண்ட் ப்ரொம்ப்ட் மூலம் டிப்ரேக்மண்ட் செய்யும் வசதியும் விஸ்டாவில் உள்ளது.

-அனூப்-


Sunday, January 11, 2009

How to create a folder without a name


பெயரில்லாமல் ஒரு போல்டர்!

பெயரில்லாமல் ஒரு போல்டரை உங்களால் உருவாக்க முடியுமா? கணினியில் இருக்கும் ஒவ்வொரு பைலும் போல்டரும் ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில் போல்டர் ஒன்றை அதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும். பெயரை வழங்காது விடின் (New Folder) நியூ போல்டர் எனும் பெயரை விண்டோஸ் டிபோலடாக போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வ்ழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அப்போது பெயரில்லாமல் போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப ஸ்பேஸ் பாரையோ டெலீட் கீயையோ அழுத்தினாலும் நியூ போல்டர் எனனும் பெயரையே விண்டோஸ் எடுத்துக் கொள்ளும்.

நான் சொல்வது சரிதானா என்பதை கணினி முன்னே உட்கார்ந்து ஒரு முறை முயன்று பார்த்து விட்டு கீழே சொல்லப்படும் வழி முறையைப் படியுங்கள்.

முதலில் போல்டர் ஒன்றை உருவாக்க்குங்கள். அதன் பெயரை (text label) அழித்து விட்டு கீபோர்டில் 'alt’ கீயை அழுத்தியவாறே இலக்கம் ‘255' ஐ டைப் செய்யுங்கள். அப்போது பெயரில்லாமல் ஒரு போல்டர் தோன்றக் காணலாம். இலக்கத்தை டைப் செய்ய கீபோர்டில் நியூமரிக் கீபேடையே பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரி. இந்த பெயரிடப்படாத போல்டரை வைத்து என்ன செய்யலாம்? அதுதான் எனக்கும் புரியவில்லை.

-அனூப்-

Difference between Disk / Disc ?


Disk / Disc  என்ன வேறுபாடு?



Floppy Disk, Hard Disk, Zip Disk என்பவற்றில் டிஸ்க் எனும் வார்த்தையின் இறுதியில் “K” எழுத்து பயன்படுத்தப்பட்டிருப்பதையும் மாறாக Compact Disc (CD), DVD, BD என்பவற்றில் வரும் டிஸ்க் எனும் வார்த்த்தையின் இறுதியில் “C” எழுத்து பயன்படுத்தப்படுவதையும் அவதானித்திருப்பீர்கள். என்ன எல்லா ஊடகங்களிலும் ஒரு வட்ட வடிவிலான ஒரு தட்டே பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால் அவற்றைக் குறிக்கப் பயன்படும் சொற்களில் மட்டும் ஏன் இந்த வேறுபாடு? பெரிதாக ஒன்றும் இல்லை. அவற்றில் பயன் படுத்தும் தொழில் நுட்பத்தைக் கொண்டே இவ்வாறு வேறுபடுத்துகிறார்கள். அதாவது காந்தப் புலம் கொண்டு படிக்கும், பதியும் ஊடகங்ளைக் (Magnetic Media) குறிக்க Disk எனும் வார்த்தையும், ஒளிக் கதிர் கொண்டு படிக்கும், பதியும் (Optical Media) ஊடகங்களை Disc எனும் வார்த்தை கொண்டும் வேறு படுத்துகிறார்கள். தவிர Disk மற்றும் Disc எனும் வர்த்தைகளின் பொருளும் ஒன்றே. உசசரிக்கும் விதமும் ஒன்றே.

-அனூப்-

What is DLL file ?


DLL பைல் என்றால் என்ன?

DLL (Dynamic Link Library) என்பது ஒரு சிறிய கணினி நிரல். இவை ஒரு குறிப்பிட்ட சில செயல்களைக் கணினியில் மேற்கொள்ளும். தற்போது இயக்கத்திலுள்ள ஒரு எப்லிகேசன் மென்பொருளொன்றினால் தேவையேற்படு மிடத்து அதனை அழைத்து பயன்படுத்திக் கொள்ளும். விண்டோஸில் ஏராளமான DLL பைல்கள் பயன்பாட்டில் உள்ளன. அது தவிர ஒவ்வொரு எப்லிகேசன் மென்பொருளும் அதற்கேயுரிய DLL பைலகளையும் கொண்டிருக்கும். ஒரு DLL பைலை பல எப்லிகேசன் மென் பொருள்கள் ஒரே நேரத்திலும் பயன் படுத்தி கொள்ளும் ஒரு DLL பைல் .dll எனும் பைல் நீட்டிப் பைக் கொண்டிருக்கும்..


ஒரு ப்ரோக்ரமை செயற்படுத்து (execute) முன்னர் அதற்குத் தேவையான பைலகள் மற்றும் அதன கூறுகள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு தொகுத்த பின்னரே அந்த ப்ரோக்ரம் செயற்படுத்தப்படும். எனினும் DLL பைலக்ள் தேவையேற்படும்போது மாத்திரம் மெமரியில் ஏற்றப்பட்டு பயன்படுத் தப்படும். DLL பைல்களின் இந்த விசேட தன்மையால் நினைவகத்தில் இடத்தைச் சேமிக்க முடிகிறது.

உதாரணமாக எம்.எஸ்.வர்டில் ஒரு ஆவணத்தை டைப் செய்து கொண் டிருக்கும் போது ப்ரிண்டருக்குரிய DLL பைல் நினைவகத்தில் ஏற்றப்பட மாட்டாது. நீங்கள் அந்த ஆவணத்தை அச்சிட அரம்பிக்கும்போது ப்ரிண்டர் DLL பைல் நினைவகத்தில் ஏற்றப்படும். DLL பைல்களை கணினியிலிருந்து அழிக்க முயற்சிக்க வேண்டாம். முக்கியமான ஒரு DLL பைலை அழித்து விட்டால் அல்லது சேதமடைந்து விட்டால் கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். விண்டோஸ் குறித்த இந்த DLL பைலைக காணவில்லையென்ற என்ற அறிவிப்பையும் அடிக்கடி திரையில் காண்பித்துக் கொண்டேயிருக்கும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் வேறொரு கணினியிலிருந்து பிரதி செய்தோ அல்லது இணையத்திலிருந்தோ இறக்கி அதனை சரி செய்து விட வேண்டும்.

-அனூப்-

What is network Drive?


தெரியுமா Network Drive ?

வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் வைத்திருப்பின் அவற்றை இணைத்து ஒரு வலையமைப்பை உருவாக்கிப் பயன் படுத்துவதன் மூலம் நீங்கள் பல வசதிகளைப் பெறலாம். அவற்றில் போல்டர்களை பகிர்ந்து கொள்வதன் (sharing) மூலம் இலகுவாக ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினுக்குப் பைல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

ஒரு கணினியில் போல்டர் ஒன்றைப் பகிர்ந்து கொண்ட பின்னர் அடுத்த கணினியிலிருந்து இரண்டு வழிகளில் அதனை அணுகலாம். முதல் வழி அந்த போல்டரை நேரடியாகத் திறந்து கொள்வதாகும். அதாவது My Network Places ஐகணை திறந்ததும் அங்கு பகிரப்பட்டுள்ள போல்டர்களை கான்பிக்கும். அதில். இருந்து நேரடியாகவே திறந்து கொள்ளலாம்.

இரண்டாவது வழி முறை நெட்வர்க் ட்ரைவ் மூலம் அந்த போல்டரை அணுகுவதாகும். அதாவது பகிரப்பட்டுள்ள ஒரு போல்டரை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தப் போகிறீர்களாயிருந்தால் அந்த போல்டரைக் குறிக்க வென ஒரு ட்ரைவ் லெட்டர் வழங்கி விட்டால் அதனை மை கம்பியூட்டர் ஐக்கனைத் திறப்பதன் மூலம் அணுகலாம். அதற்குப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.

மை கம்பியூட்டர் அல்லது மை டொகுயுமெண்ட்ஸ் திறந்து கொள்ளுங்கள். அங்கு Tools மெனுவில் Map Network Drive என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது படத்தில் உள்ளது போன்ற் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு Drive எனும் இடத்தில் விரும்பிய ஒரு ட்ரைவ் லெட்டரைத் தெரிவு செய்யுங்கள்.. அடுத்து Folder எனுமிடத்தில் வேறொரு கணினியில் பகிரப்பட்டுள்ள போல்டருக்கான Path வழங்க வேண்டும். அதற்கு நீங்கள் பிரவுஸ் பட்டனில் க்ளிக் செய்து அதன் அமைவிடத்தைக் சுட்டிக் காட்டி விட்டு Finish பட்ட்னில் க்ளிக் செய்யுங்கள். இப்போது அந்த பகிரப்பட்ட போல்டரை மை கம்பியூடரைத் திறப்பதன் மூலம் அடையலாம்.

நெட்வர்க் ட்ரைவ் அவசியமில்லையெனின் அதே Tools மெனுவில் Disconnect Network Drive ட்ரைவ் என்பதைத் தெரிவு செய்யுங்கள். அல்லது மை கம்பியூட்டரைத் திறந்து உரிய நெட்வர்க் ட்ரைவின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்தும் இணைப்பை துண்டிக்கலாம்.

Sunday, January 04, 2009

How to delete virus in Pen Drives ?


பென் ட்ரைவ் வைரஸை ஒழிப்போமா


தற்போது கணினி பயனர் பலரும் பென் ட்ரைவ் உபயோகிப்பதை ஒரு வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். வைரஸ்கள் கூட தற்போது இந்த பென் ட்ரைவ் மூலமாகவே அதிகம் பரவுகின்றன. பென் ட்ரைவ் மூலம் பரவும் வைரஸ்களில் Ravmon, New Folder.exe, Orkut is banned என்பன குறிப்பிடத் தக்கவை. இவற்றை வைரஸ் எதிர்ப்பு (Anti virus Program) மென்பொருள்கள் எளிதில் அடையாளம் காண்பதில்லை. அப்படியே கண்டு கொண்டாலும் அவற்றால் இந்த வைரஸ்களை அழிக்க முடிவதில்லை. பென் ட்ரைவ் மூலம் பரவும் இந்த வைரஸ்களை நீங்களாகவே அழிப்பதற்குப் பின் வரும் வழிமுறையை முயன்று பருங்கள்.

ஒரு பென் ட்ரைவை கணினியில் பொருத்தும் போதே தானாக திறந்து கொள்ளும் வகையில் விண்டோஸில் டிபோல்டாக செட்டிங் செய்யப்பட்டுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பென் ட்ரைவை பொருத்தும் போது படத்திலுள்ளது போன்ற ஒரு சிறிய டயலொக் பொக்ஸ் தோன்றக் காணலாம். அந்த டயலொக் பொக்ஸில் ஓகே பட்டனில் க்ளிக் செய்து செய்து விடாமல் அதனை கேன்சல் செய்து மூடி விடுங்கள்.


அடுத்து ரன் பொக்ஸில் cmd என டைப் செய்து கமாண்ட் ப்ரொம்ப்டைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு உங்கள் பென் ட்ரைவுக்குரிய ட்ரைவ் எழுத்தை (உதாரணமாக d:) டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். (இந்த ட்ரைவ் லெட்டர் கணினிக்கு கணினி வேறுபடலாம்) அடுத்து dir /w/a என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அப்போது பென் ட்ரைவிலுள்ள அனைத்து பைல்களையும் பட்டியலிட்டுக் காண்பிக்கும். அங்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனுமொரு பைல் இருந்தால் உங்கள் பென் ட்ரைவ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
Autorun.inf
Ravmon.exe
New Folder.exe
svchost.exe

அடுத்து கமாண்ட் ப்ரொம்ப்டில் attrib -r -a -s -h *.* என டைப் செய்து எண்டர் செய்யுங்கள். இதன் மூலம் பென் ட்ரைவிலுள்ள அனைத்து பைல்களினதும் Read Only, Archive, System, Hidden பண்புகள் அகற்றப்படும். அடுத்து கமான்ட் ப்ரொம்ப்டில் del filename (உதாரணம்: del autorun.inf) என டைப் செய்து சந்தேகத்திற்கிடமான ஒவ்வொரு பைலையும் தெரிவு செய்து அழித்து விடுங்கள்.

-அனூப்-

How to get a Screen Shot in MS Windows


திரையில் காண்பதைப் பிரதி செய்வோமா?


விண்டோஸ் இயங்கு தளம் நிறுவியுள்ள ஒரு கணினியில் கணினி திரையில் காணும் எந்த ஒரு படத்தையும் ஒரு இமேஜ் பைலாக சேமித்துக் கொள்வதென்பது மிக இலகுவான ஒரு செயற்பாடு. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

கீபோர்டில் ப்ரின்ட் ஸ்க்ரீன் (PrintScreen) விசையை ஒரு முறை அழுத்துங்கள். அப்போது திரையில் காணும் படம் விண்டோஸ் க்ளிப்போர்டில் கொப்பி செய்யப்படும். (இதே க்ளிப்போர்ட்தான் கொப்பி பேஸ்ட் கமாண்ட் மூலம் பிரதி செய்யும் செயற்பாட்டுக்கு உதவுகிறது.)

அடுத்து க்ளிப்போர்டில் உள்ளதை ஒரு பைலாக சேமித்துக் கொள்ள வேண்டும்,. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஏதேனும் ஒரு கிரபிக்ஸ் அல்லது போட்டொ எடிட்டிங் மென் பொருள் ஒன்றைத் திறந்து கொள் ளுங்கள். உங்கள் கணினியில் போட்டோ எடிட்டிங் மென்பொருள் இல்லையானால் எம்.எஸ்.பெயிண்ட் மென்பொருளைத் திறந்து கொள்ளுங்கள். எம்.எஸ் .பெயிண்டில் (Edit) எடிட் மெனுவில் பேஸ்ட் (Paste) க்ளிக் செய்யுங்கள். அப்போது திரையில் தெரிந்த அந்தப் படம் பெயிண்ட் விண்டோவில் ஒரு இமேஜ் பைலாக தோன்றக் காணலாம். அதனை ஒரு .jpg பைலாக சேமித்துக் கொள்ளலாம்.

திரையில் காணும் ஒரு விண்டோவை அல்லது டயலொக் பொக்ஸை இமேஜ் பைலாக சேமித்துக் கொள்ள வேண்டுமானால் கீபோட்ர்டில் Alt மற்றும் PrintScreen கீ இரண்டையும் ஒரே நேரத்தில் அழுத்துங்கள். இது தவிர திறந்திருக்கும் ஒரு விண்டோவில் வெவ்வேறு பகுதிகளை உதாரணமாக மெனு பார், டூல் பார், கண்டெக்ஸ்ட் மெனு போன்றவற்றையும் தனித் தனியாயாக இமேஜ் பைலாக சேமித்துக் கொள்ளலாம். எனினும் இதற்கு விண்டோஸில் வசதியில்லை. அதற்கு Snag It, Screen Swift எனப் பல மென்பொருள்கள் பாவனையில் உள்ளன.

-அனூப்-

Difference between Save and Save As


Save  /   Save As  என்ன வேறுபாடு?



பல பயன்பாட்டு மென்பொருள்களில் ஒரு பைலை சேமிக்க வென சேவ் (Save) , சேவ் ஏஸ் (Save As) என இரு கட்டளைகள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இரண்டு கட்டளைகளும் செய்வது ஒரே வேலைதான் எனினும் இரண்டுக்குமிடையில் சிறிய வேறு பாடும் இருக்கத் தான் செய்கிறது. முதன் முதலாக ஒரு பைலை சேமிக்கும் போது சேவ் அல்லது சேவ் ஏஸ் எனும் இரண்டு கட்டளைகளில் எதனைத் தெரிவு செய்தாலும் ஒரே மாதிரியான (Save As Dialog Box) டயலொக் பொக்ஸே தோன்றும். அப்போது உங்கள் பைலுக்கு பொருத்தமான் ஒரு பெயரை வழங்கி நீங்கள் விரும்பும் இடத்தில் பைலை சேமித்துக் கொள்ளலாம். சேமிக்கப்பட்ட அந்த பைலில் மாற்றங்கள் செய்து மறுபடி அதே பெயரில் அதே இடத்தில் சேமிக்க வேண்டுமானால் பைல் மெனுவில் சேவ் க்ளிக் செய்யுங்கள். எனினும் இப்போது டயலொக் பொக்ஸ் எதுவும் தோன்றாது. அதேபோல் ஏற்கனவே சேமிக்கப்பட்ட ஒரு பைலை வேறு பெயரில் அல்லது வேறொரு இடத்தில் சேமிக்க வேண்டுமானால் பைல் மெனுவில் சேவ் ஏஸ் தெரிவுசெய்யுங்கள்.

-அனூப்-

What is Document Scrap ?


Document Scrap தெரியுமா?

எம்.எஸ்.வர்ட் ஆவணமொன்றைத் ஒன்றைத் திறந்து பணியாற்றுகிறீர்கள். அதிலலுள்ள உரையில் (text) ஒரு பகுதியைத் தெரிவு செய்து வேறொரு ஆவணத்தில் அல்லது வேறொரு எப்லிகேசனில் பயன்படுத்த நினைக்கிறீர்கள். அதற்கு நீங்கள் கொப்பி / பேஸ்ட் கட்டளையைப் பிரயோகிக்க வேண்டியதில்லை. உரைப் பகுதியைத் தெரிவு செய்து அதனை ட்ரேக் செய்து அப்படியே டெஸ்க் டொப்பில் போட்டு விடுங்கள். அந்தப் பகுதி டொக்யுமெண்ட் ஸ்க்ரேப் எனும் பெயரோடு டெஸ்க் டொப்பில் சேமிக்கப்பட்டுவிடும். இவ்வாறு உங்களுக்குத் தேவையான பகுதிகளை மட்டும் தெரிவு செய்து டெஸ்க்டொப்பில் ட்ரேக் செய்து விடுங்கள்.

பின்னர் அவற்றைப் பிரதி செய்து கொள்ள வேண்டிய எப்லிகேசனைத் திறந்து டெஸ்க்டொப்பிலுள்ள ஸ்க்ரேப் பைலை அந்த எப்லிகேசனில் ட்ரேக் செய்து போட்டு விடுங்கள். அவ்வளவு தான். எப்லிகேசன் மென்பொருளிலிருந்து டெஸ்க்டொப்பிற்கு ட்ரேக் செய்யும் போதும் டெஸ்க்டொப்பிலிருந்து எப்லிகேசன் மென்பொருளுக்கு ட்ரேக் செய்யும் போதும் எப்லிகேசன் விண்டோவின் அளவை சிறிதாக்கிக் (resize) கொள்ள வேண்டும் என்பதை மற்ந்து விடாதீர்கள். அத்தோடு இந்த செயற்பாட்டை எம்.எஸ்.வர்டில் மாத்திரமின்றி எந்தவொரு எப்லிகேசன் மென்பொருளிலும் செயற்படுத்த்லாம் என்பதயும் நினைவில் கொள்ளுங்கள்.

-அனூப்-