Sunday, March 29, 2009

How to hide a drive in Windows?


ட்ரைவ் ஒன்றை மறைத்து வைப்பதெப்படி?

முக்கியமான தகவல்களை பிறர் அணுகாமல் பாதுகாக்க விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக கிடைக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா ட்ரைவ்களையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரமோ மறைத்து வைக்கலாம். அதற்கு நீங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது.

முதலில் விண்டோஸில் அட்மினிஸ்ட்ரேட்டராக லொக்-ஓன் செய்து கொள்ளுங்கள். அடுத்து ரன் (Run) பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். திறக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவில் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தை அணுகுங்கள்.
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion \Policies\Explorer

இங்கு இறுதியாக Explorer ல் க்ளிக் செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலப்புறம் ரைட் க்ளிக் செய்து புதிதாக NoDrives எனும் பெயரில் DWORD பெறுனமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். கணினியிலுள்ள ட்ரைவ் அனைத்தையும் மறைப்பதாயின் அதன் Value Data வாக 3FFFFFF எனும் பெறுமானத்தை வழங்குங்கள்.

அதேபோன்று குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரம் மறைப்பதாயின் அதாவது A, B, C, D, E, F, G, H என ஆங்கில் எழுத்துக்கள் மூலம் குறிக்கப்படும் ட்ரைவ்களை மறைக்க 2, 4, 8, 16, 32, 64, 128 எனும் ஒழுங்கில் வழங்குங்கள். உதாரணமாக F ட்ரைவை மறைத்து வைக்க வேண்டுமாயின் 32 எனும் இலக்கத்தை Value Data வாக வழங்க வேண்டும்.

அடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விட்டு கணினியை மறுபடி இயக்க நீங்கள் மறைத்து வைத்த ட்ரைவை மை கம்பியூடர் விண்டோவில் பார்க்க முடியாது. மீண்டும் அதனைக் காண்பிக்க வேண்டுமானால் மேற் சொன்ன இதே வழியில் சென்று புதிதாக உருவாக்கிய DWORD பெறுமானத்தை அழித்து விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்.

-அனூப்-

When you forgot Windows administrator password..

பாஸ்வர்ட் மறந்து போனால்..

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே. அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் எட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லொக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இதனைப் பற்றி ஏற்கனவே ஐடி வலம் பகுதியிலும் சொல்லியிருக்கிறேன்

இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது? அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.

அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,

ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அப்போது படத்தில் உள்ளது போல் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.

-அனூப்-

Sunday, March 22, 2009

What is Open Source ?


Open Source என்றால் என்ன?


ஒரு உயர் நிலை கணினி மொழி கொண்டு எழுதப்பட்ட ப்ரோக்ரம் எனும் ஆணைத்தொடரிலுள்ள வரிகளை சோர்ஸ்கோட் (source code) எனப்படுகிறது. இந்த சோர்ஸ்கோட் ஆனது கம்பைலர் (compiler) எனும் விசேட மொழி மாற்றும் ப்ரோக்ரம் கொண்டு கணினியால் புரிந்து கொள்ளக் கூடியவாறு இயந்திர மொழிக்கு (machine code) மாற்றப்படுகிறது.. கம்பைல் செய்யப்பட்ட சோர்ஸ் கோடை ஒப்ஜெக்ட் கோட் (object code) எனப்படும். விலைக்கு வாங்கும் அல்லது இணையத்திலிருந்து டவுன்லோட் செய்யும் ஒவ்வொரு மென்பொருளும் கம்பைல் செய்யப்பட்டு செயல் படத்தயார் (run) நிலையிலேயே எமக்குக் கிடைக்கிறது

கம்பைல் செய்யப்பட்ட பின்னர் ஒரு மென்பொருளில் மாற்றங்கள் செய்வதும் மீண்டும் அதனை சோர்ஸ்கோட் வடிவிற்கு மாற்றுவதும் இயலாத அல்லது மிகவும் கடினமான காரியமாகும். இதனால் ஒரு மென்பொருளின் ஒவ்வொரு பகுதியையும் எவ்வாறு ஒரு ப்ரோக்ரமர் உருவாக்கினார் என்று அறிந்து கொள்ள முடியாது போகிறது. அதாவது சோர்ஸ்கோட் மூடி மறைக்கப்படுகிறது. இது வியாபார நோக்கில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு சாதகமான விடயமாகும். அதாவது சோர்ஸ்கோடை எவரும் பிரதி செய்து கொள்ளவோ அல்லது அதனைக் கொண்டு தமது மென்பொருளுக்குப் போட்டியாக வேறொன்றை உருவாக்கவோ முடியாது போகிறது.

ஓபன்சோர்ஸ் என்பது இதற்கு முற்றிலும் மாறுபட்டது. கம்பைல் செய்யப்பட ஒரு மென்பொருளுடன் கூடவே அதன சோர்ஸ்கோடும் வழங்கப்படுகின்றது. அதாவது இங்கு சோர்ஸ்கோட் மூடி மறைக்கப்படாமல் அதன் பெயருக்கேற்ப திறந்து காட்டப்படுகிறது. இதன் மூலம் திறமையுள்ள எவரும் ஒரு மென்பொருளில் விரும்பிய மாற்றங்கள் செய்யவும் அதனை மேம்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது. ஓபன்சோர்ஸ் செயற் திட்டத்தை ஆதரிப்போரும் ஓபன்சோர்ஸ் மென்பொருளாக்கத்தில் ஈடுபட்டிருப்போரும் சோர்ஸ்கோடில் மாற்றம் செய்வதையும் அதனை மேம்படுத்துவதையும் வரவேற்கின்றனர். இதனால் ஒரு மென்பொருள் பல வல்லுனர்களின் கைகளால் செப்பனிடப்பட்டு வழுக்கள் களையப்பட்டு சிறப்பான வடிவத்தைப் பெறுவதோடு அதிக பயனுள்ளதாகவும் மாறிவிடுகிறது.

ஒரு மென்பொருளை ஓபன்சோர்ஸ் மென்பொருளாகாக் கருதப்படு வதற்குக் சில விதி முறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

· மென்பொருளை இலவசமாக கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும்.
· அதனுடன் சோர்ஸ்கோடையும் இணைக்க வெண்டும்.
· விரும்பிய எவரும் சோர்ஸ்கோடில் மாற்றங்கள் செய்ய அனுமதிக்க வேண்டும்.
· மாற்றம் செய்யப்பட்ட சோர்ஸ்கோடை மீள விநியோகித்தல் வேண்டும் என்பன அந்த விதி முறைகளிற் சிலவாகும்.

ஓப்னசோர்ஸ் செயற்திட்டம் மூலம் ஏராளமான மென்பொருள்களும் மென்பொருள் கருவிகளும் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. ஓபன்சோர்ஸ் மென்பொருளுக்கு உதாரணமாக லினக்ஸ் இயங்கு தளத்தைக் குறிப்பிடலாம். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த Linus Torvalds என்பவர் 1991 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மாணவனாக இருந்த போது யுனீக்ஸ் இயங்கு தளத்தை அடிபபடையாகக் கொண்டு லினக்ஸ் எனும் பெயரில் ஒரு புதிய இயங்கு தளமொன்றை வடிவமைத்ததார். பின்னர் அதன் 0.02 எனும் பதிப்பை GNU General Public License எனும் உரிமத்தின் கீழ் வெளியிட்டார். GNU என்பது இலவச மென்பொருள் களுக்கு உரிமம் வழங்கும் அமைப்பாகும்.

அனேகமான் மென்பொருள்களின் உரிமமானது அதனைப் பிரதி செய்து பகிர்ந்து கொள்வதற்கும் அதில் மாற்றங்கள் செய்வதற்கும் அனுமதிப்பதில்லை. எனினும் GNU General Public License என்பது இதற்கு மாறுபட்டது. அதாவது ஒரு இலவச மென்பொருளை பகிரவும் மாற்றங்கள் செய்வதற்குமான சுதந்திரத்தை இந்த உரிமம் வழங்குகிறது. அத்தோடு இந்த உரிமத்துக்கமைய சோர்ஸ்கோடும் அதன பிரிவுகளும் எப்போதும் ஒபனசோர்ஸாகவே பேணப்படுவதற்கும் வகை செய்கிறது.

எனினும் ஓபன்சோர்ஸ் மென்பொருள்களுக்கு உத்தரவாதமும் தொழில் நுடப உதவியும் கிடைப்பதில்லை என்பது ஒரு குறைபாடாகும்.. ஓபன்சோர்ஸ் மென்பொருள்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமமானது, அதனை எவரும் தமது தேவைக்கேறறபடி மாற்றிக் கொள்ள அனுமதிப்பதனால் தொழில் நுட்ப உதவிகள் அளிப்பது சிரமமான விடயமாகக் கருதப்படுகிறது.

அனேக வியாபார நிறுவனங்கள் இணையத்ததிலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்வதை விட உத்தரவாதத்துடனும் தொழில் நுட்ப உதவியுடனும் ஒரு மென்பொருளை விலை கொடுத்து வாங்குவதையே விரும்புகின்றன. கோடியில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சில ஆயிரங்களை மென்பொருள்களுக்காக செலவிடுவது ஒரு பொருட்டல்ல. இதனால் பல மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் ஓபன்சோர்ஸ் மென்பொருள்களைப் பொதி செய்து உத்தரவாதத்துடனும் தொழில் நுட்ப உதவியுடனும் விற்பனை செய்கின்றன.

உதாரணமாக லினக்ஸின் சோர்ஸ்கோட் எப்போதும் இலவசமாகவே கிடைக்கிறது. எனினும் லினக்ஸ் இயங்கு தளத்தின் ரெட்ஹெட் பதிப்பு இலவசமாகக் கிடைப்பதில்லை. ரெட்ஹெட் நிறுவனம் அதனைப் பொதி செய்வதற்கான செலவுகளுக்கும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளுக்குமென கட்டணம் அறவிடுகிறது. இவ்வாறு லினக்ஸ் இயங்கு தளத்தை மெருகூட்டிப் பொதி செய்து உத்தரவாதத்துடன் பல நிறுவனங்கள் பல பெயர்களில் வெளியிட்டு வருகின்றன. இதனை லினக்ஸ் டிஸ்ட்ரிபியூசன் (distributions /distros) எனப்படுகிறது

ஓபன் சோர்ஸ் மென்பொருள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

ஒரு மென்பொருளை உருவாக்கக்க் கூடிய திறன் பெற்ற ஒருவர் அல்லது ஒரு குழுவினர் , கணினி மூலம் நமது ஏதோவொரு பிரச்சினைக்குத் தீர்வு தரக்கூடிய மென்பொருளை உருவாக்க எண்ணுகிறார் / எண்ணுகின்றனர்.
அடுத்த கட்டமாக அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமுகமாக அதற்குரிய ப்ரோக்ரம் எனப்படும் ஆணைத்தொடரை கை தேர்ந்த ஒரு கணினி மொழியில் எழுத அரம்பிக்கிறார்கள். இதனை கணினி மூல நிரல் (சோர்ஸ்கோட) எனப்படும். .

பின்னர் இந்த சோர்ஸ்கோடை ஏனைய மென்பொருள் வல்லுனர்களும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக அதனை இணையத்தில் அப்லோட் செய்து விடுகின்றனர். இது போன்ற பல தளங்கள் இணையத்திலுள்ளன. உதாரணமாக sourceforge.com எனும் இணைய தளத்தில் பலரும் பதிவேற்றியுள்ள ஏராளமான ஓபன்சோர்ஸ் செயற்திட்டங்களைக் காண்லாம்..

சோர்ஸ்கோடை எவரும் பெற்றுக் கொள்ளும்படி செய்த பின்னர் அத்னை மாற்றியமைக்க விரும்பும் ஒவ்வொருவருடனும் கருத்துக்கள் பரிமாறப் படும். ஒவ்வொருவரினதும் ஆணைத்தொடர்கள் பரிசோதிக்கப்படும். வழுக் கள் கண்டறியப்பட்டு நீக்கப்படும். உலகெங்குமுள்ள பல மென்பொருள் வல்லுனர்களால் அது மெருகூட்டப்பட்டு இறுதியில் முழு வடிவத்தைப் பெறுவதோடு கணினிப் பயனர்களிடம் வரவேற்பையும் பெற்றுவிடு கிறது. துரதிர்ஸ்டவசமாக சில் ஓபன் சோர்ஸ் செயற்திட்டங்கள் முன்னெ டுத்துச் செல்லப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டு காணாமல் போவதுமுண்டு.

லினக்ஸ் மற்றும் அபாச்சி சேர்வர் (Apache web server) மென்பொருள் போன்ற ஓபன்சோர்ஸ் செயற்திட்டங்களில் உருவாக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார் வளர்கள பங்களிப்புச் செய்துள்ளார்கள்.

ஓபன்சோர்ஸ் என்பது மென்பொருள் வியாபாரிகளின் உழைப்பைச் சுரண்டும் ஒரு தந்திரமே எனும் கருத்தும் நிலவுகிறது. உலகெங்குமுள்ள மென்பொருள் விறபன்னர்களின் உழைப்பை ஊதியமே வழங்காமல் பெற்று பின்னர் அதனை வியாபாரப் பொருளாக்கி விடுகின்றனர் எனும் குற்றச் சாட்டை ஒரு சாரார் முன் வைக்கின்றனர்.

எது எப்படி இருப்பினும் வியாபார நோக்கில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் தமது மென்பொருள்களை யானை விலைக்கு விற்பனை செய்வதாலும் ஒரு சில நிறுவனங்கள் குறிப்பாக மைக்ரோஸொப்ட் நிறுவனம் மென்பொருள் சந்தையில் தமது ஆதிக்கத்தை செலுத்த முயல்வதாலும் தற்போது ஓபன் சோர்ஸ் மென்பொருள்களுக்கு ஆதரவான கோசமே உலகெங்கும் எதிரொலிக்கிறது.

– அனூப் -

Sunday, March 08, 2009

How to disable startup program?


ஸ்டாட்-அப்பில் இயங்கும் எப்லிகேசன்களைக் கட்டுப்படுத்த.

கணினியை ஆரம்பிக்கும்போதே சில எப்லிகேசன்கள் விண்டோஸில் இயங்க ஆரம்பித்து விடும். இதனால் விண்டோஸ் பூட் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். விண்டோஸ் ஸ்டாட்-அப்பில் இயங்கும் இந்த எப்லிகேசன்களை நிறுத்தி விடவும் விண்டோஸில் வசதியுள்ளது. அவ்வாறே சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட சில எப்லிகேசன்களும் ஸடாட் அப்பில் அந்த எப்லிகேசனை ஆரம்பிக்கவும் நிறுத்தவும் கூடிய வசதியைக் கொண்டிருக்கும்.. இந்த வசதி சில எப்லிகேசன்களில் இல்லையெனின் விண்டோஸ் இயங்கு தளத்தில் அதனை நிறுத்த வழியுள்ளது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

ஸ்டார்ட் பட்டனில் க்ளிக் செய்து ரன் தெரிவு செய்ய வரும் ரன் பொக்ஸில் MSCONFIG என டைப் செய்து ஓகே சொல்ல ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு Startup டேபில் க்ளிக் செய்து ஸ்டாட் அப்பில் இயங்கத் தேவையற்ற எப்லிகேசன்களின் பெயர்களை நீக்கி விட்டு ஓகே செய்து விடுங்கள். எனினும் இந்த வழி முறை 100 வீதம் வெற்றியளிக்காது ஏனெனில் சில எப்லிகேசன்களை ஸ்டாட் அப்பில் இயங்குமாறே உருவாக்கப்படிருக்கும். அவ்வகையான எப்லிகேசன்களை ஸ்டாட் அப்பில் இயங்காதவாறு செய்தாலும் அந்த எப்லிகேசன்கள மறுபடியும் தானாகவே இயங்க ஆரம்பிக்கும்.

-அனூப்-

How to search a file quickly?


பைல்களை விரைவாகத் தேடிப் பெற.

கணினியில் தொலைத்து விட்ட உங்கள் பைல்களைத் தேடிப் பெற Search for files or folders எனும் வசதி விண்டோஸில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் மூலம் ஒரு பைலை இலகுவாகத் தேடிப் பெறலாம். இங்கு உங்கள் பைல்களைத் தேடுவதற்கு அந்த பைல் வகைக்குரிய எக்ஸ்டென்சனை வழங்குவதன் மூலம் மேலும் விரைவாகத் தேடிப் பெறலாம். 


உதாரணமாக test எனும் பெயர் கொண்ட ஒரு வர்ட் பைலைத் தேட Search விண்டோவில் All or part of the file name எனுமிடத்தில் test.doc என வழங்க வேண்டும். எல்லா வேர்ட் பைல்களையும் தேடிப் பெற *.doc என வழங்கவும். அவ்வாறே எக்ஸல் பைலாயின் *.xls எனவும் பீடிஎப் பைலாயின் *.pdf எனவும் ஒரு exe பைலாயின் *.exe எனவும் வழங்க வேண்டும். T யில் ஆரம்பிக்கும் ஒரு வர்ட் பைலைத் தேட t*.doc என டைப் செய்யுங்கள். அதேபோல் *e.doc என வழங்க e யில் முடிவுறும் அனைத்து வர்ட் பைல்களையும் முடிவாகப் பெறலாம்..இங்கு (*) குறியீட்டின் பிரயோகத்தை வைல்ட் காட் (wild card) எனப்படுகிறது. மேலும் ஒரு பைலை கணினி முழுவதும் தேடாமல் உரிய ட்ரைவில் மட்டுமே தேடச் செய்வதன் மூலம் நேரத்தை மேலும் மீதப்படுத்தலாம்

How to shut down PC's in a network


வலையமப்பில் இணைந்துள்ள கணினிகளை
ஒரே இடத்திலிருந்து சட்டவுன் செய்ய....


ஒரு கணினி வலையமைப்பில் இணைந்துள்ள கணினிகளை மற்றுமொரு கணினியிலிருந்து சட்டவுன் செய்யும் வசதி விண்டோஸ் எக்ஸ்பீயில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைக் கொண்டு சட்டவுன் செய்வது மட்டுமல்லாமல் ரீஸ்டார்ட் மற்றும் லொக்-ஓப் செய்யவும் முடியும்., இந்த வசதி ஒரு வலையமப்பு மேலாளராகப் பணிபுரிவோருக்கு மிகவும் உபயோகமானது. ஒரு உள்ளக கணினி வலையமைப்பில் இணைந்துள்ள கணினிகள் ஒவ்வொன்றாக சட்டவுன் செய்வது சலிப்பை உண்டாக்கும் விடயமாதலால், இருந்த இடத்திலிருந்தே ஏனைய கணினிகளின் இயக்கததை இந்த வசதி மூலம் நிறுத்தி விடலாம். அதற்கு நீங்கள்ப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.

முதலில் கணினி அட்மினிஸ்ட்ரேட்டராக லொக் இன் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஸ்டார்ட் பட்டனில் க்ளிக் செய்து ரன் தெரிவு செய்யுங்கள். அங்கு தோன்றும் ரன் பொக்ஸில் shutdown –I என டைப் செய்து ஓகே க்ளிக் செய்ய Remote Shutdown Dialogbox தோன்றும்.

அங்கு Add பட்டனில் க்ளிக் செய்து நீங்கள் சட்டவுன் செய்யவிருக்கும் கணினியின் பெயரை அல்லது ஐபி முகவரியை டைப் செய்து சேர்த்து விடுங்கள். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளையும் இவ்வாறு சேர்க்கலாம். அடுத்து "What do you want these computers to do எனுமிடத்தில் விரும்பும் செயற்பாட்டையும் (log off, restart, shutdown) தெரிவு செய்து விடுங்கள். இந்த செயற்பாடு பற்றி அந்தக் கணினியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பயனருக்கு அறிவிப்பதற்கு "Warn users of the action" என்பதைத் தெரிவு செய்து ஒரு நேர இடை வெளியையும் குறிப்பிடலாம். அடுத்து ஓகே பட்டனில் க்ளிக் செய்ய அந்தக் கணினி நீங்கள் தெரிவு செய்த செயற்பாட்டை நிறைவேற்றும்.

How to change Boot option in Windows


விரும்பிய இயங்கு தளத்தை பூட் செய்திட..

ஒரு கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை நிறுவ முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இவ்வாறு இரண்டு இயங்கு தள்ங்கள் நிறுவப்பட்டுள்ள ஒரு கணினியில் நீங்கள் விரும்பும் இயங்கு தளத்தை இயல்பு நிலைக்கு (default) மாற்றிக் கொள்ளும் வசதி விண்டோஸ் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் உள்ளது. இதற்கு Boot.ini பைலில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது.


அதற்கு நீங்கள் மை கம்பியூட்டர் ஐக்கனில் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Advanced டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Startup and Recovery பகுதியின் கீழ் செட்டிங்ஸ் பட்டனில் க்ளிக் செய்யுங்கள். இங்கு Time to display list of operating systems எனுமிடத்தில் டிபோல்ட் இயங்கு த்ளத்தை ஆரம்பிக்கு முன்னர் எவ்வளவு நேரம் இந்த அறிவித்தலைத் திரையில் காண்பிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட வேண்டும். இந்த நேர இடைவெளி செக்கனில் தரப்பட்டுள்ளது. இங்கு 0 முதல் 999 செக்கன் வரையில் நேரத்த்தை வழங்கலாம்.,

Sunday, March 01, 2009

Audacity - a sound editing software


Audacity எனும் ஒலிப்பதிவு கூடம்

ஒடேசிட்டி என்பது ஒலிப்பதிவு செய்யவும் ஒலிக் கோப்புகளை (sound files) எடிட் செய்யவும் என உருவாக்கப்பட்டுள்ள் ஒரு ஓபனசோர்ஸ் மென்பொருளாகும்.
இம் மென்பொருள் Dominic Mazzoni என்பவரால் உருவாக்கப்பட்டது. தற்போது கூகில் நிறுவனத்தில் பணியாற்றும் இவர் ஒடேசிட்டி மென் பொருளை உலகெங்குமுள்ள பல தன் ஆர்வளர்களுடன் இணைந்து பேணி வருகிறார்.

ஒடேசிட்டி மூலம் ஒலிப்பதிவு செய்வது மட்டுமன்றி பல்வேறு ஒலி சார்ந்த செயற்பாடுகளை செய்யக் கூடியதாகவிருப்பதுடன் அதனை எவரும் இலகுவாகப் பயன்படுத்தக் கூடியவாறு ஒரு எளிமையயன இடை முகப்பையும் கொண்டுள்ளது. வர்ததக நோக்கில் வெளியிடப்படும் ஒலிப்பதிவு செய்யும் மென்பொருள்களை விட தரம் மிக்கதாக ஒடேசிட்டி விளங்கிகுகிறது.

ஒடேசிட்டி மென்பொருளின் சிறப்பம்சங்கள் சில

ஒலிப்பதிவு செய்தல மற்றும் ஒலிக் கோப்புகளை இயக்கிப் பார்த்தல். (மைக் மூலம் மட்டுமல்லமால் கணினி ஸ்பீக்கரில் ஒலிக்கும் பாடல்களையும் பதிவு செய்து கொள்ளலாம்.)

WAV, AIFF, MP3, Ogg Vorbis போன்ற பல விதமான ஒலிக் கோப்புகளைக் கையாள முடியும். எனினும் MP3 பைல்களைக் கையாள LAME encoder ஐ இணைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு ஒலிக் கோப்பை பகுதி பகுதிகளாக வெட்டி (cut / paste, copy/paste) பின்னர் அவற்றைப் பிரதி செய்து அதனை வெவ்வேறு இடங்களில் ஒட்டிக் கொள்ள முடியும்.

ஒலிக் கலவை செய்தல்

ஒலிக் கோப்புகளுக்கு வெவ்வேறு விதமான டிஜிட்டல் இபெக்டுகளைப் பிரயோகித்தல்

ஒலிக்கோப்பிலுள்ள இரைச்சல்களை நீக்குதல்

பாடல்களில் இசையை வேறாகவும் குரலை வேறாகவும் பிரித்தல்

கேசட் நாடாவிலுள்ள பாடல்களை டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுதல் போன்ற
பல வசதிகளைக் கொண்டுள்ளது.

இதனை Windows, Mac , மற்றும் Unix போன்ற பல்வேறு இயங்கு தளங்களில் நிறுவ முடியும். ஒடேசிட்டி மென்பொருளை http://audacity.sourceforge.net  இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

What is Live CD ?

Live CD  என்றால் என்ன?

லைவ் சிடி அல்லது லைவ் டிவிடி என்பது கணினியின் செயற்பாட்டை ஆரம்பிக்கக் கூடியவாறு தன்னகத்தே ஒரு இயங்கு தளத்தைக் கொண்ட ஒரு சிடி அல்லது டிவிடியைக் குறிக்கிறது. கணினியில் தற்போது நிறுவியுள்ள இயங்கு தளத்திலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ எந்த மாற்றமோ பாதிப்போ ஏற்படாதவாறு புதியதோர் இயங்கு தளத்தைப் பயன்படுத்திப் பார்க்கக் கூடிய வசதியை அளிக்கிறது லைவ் சிடி.

ஒரு லைவ் சீடியை சிடி ரொம் ட்ரைவில் அடையாளம் காணும் கணினி ஏற்கனவே நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குப் பதிலாக சிடியிலுள்ள இயங்குதளத்திலேயே கணிணி பூட் செய்ய ஆரம்பிக்கும். லைவ் சிடியிலிருந்து கணினி இயங்க அரம்பித்ததும் எமது விருப்பப்படி கணினியில் வலம் வர முடியும். அதிலிருந்தே மீண்டும் கணினியில் நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குத் திரும்ப வேண்டுமானால் சிடி ட்ரைவிலிருந்து லைவ் சிடியை அகற்றி விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்.

லைவ் சிடி எம்ககுப் பல வழிகளில் பயன்படுகிறது. ஒரு புதிய இயங்கு தளம ஒன்றைக் கணினியில் நிறுவ ஹாட் டிஸ்கில் இடம் ஒதுக்கவோ அல்லது அதற்கு நேரத்தைச் செலவிட வேண்டிய அவசியமோ இல்லை அதனை கணினியில் நிறுவாமலேயே இயக்கிப் பார்க்கக் கூடிய வசதியைத் தருகிறது.. லைவ் சிடி.

ஹாட் டிஸ்கில் நிறுவியிருக்கும் இயங்கு தளம் செயற்பட மறுக்கும்போது ஒரு லைவ் சீடியை பயன் படுத்தி எமது பணிகளை மேற்கொள்ள முடிகிறது.
குறிப்பாக உபுண்டு போன்ற லின்க்ஸ் இயங்கு தளத்தின் பல பதிப்புகள் word processor, spreadsheet program, graphics editor, Web browser போன்ற பல்வேறு பயன்பாட்டு மென்பொருள்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. .இதன் மூலம் கணினிப் பயனர்கள் ஒரு லைவ் சிடியை எந்தவொரு கணினியில் இட்டும் ஏற்கனவே நிறுவியுள்ள இயங்கு தளத்திற்குப் பாதிப்புகள் வராமல் தமது பணிகளை மேற்கொள்ள முடியும்.

லைவ் சிடியை ட்ரைவிலிட்டதும் க்ணினி பூட் ஆகாமல் மறுபடியும் ஹாட் டிஸ்கிலிருந்தே இயங்க ஆரம்பித்தால் BIOS இல் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் கணினி பூட் ஆக ஆரம்பிக்கும் போதே டெல் விசையை அழுத்தி பயோஸ் செட்டப்பில் நுளைய வேண்fடும். (எனினும் இது கணினிக்குக் கணினி வேறுபடலாம்.) அங்கு கணினியிலுள்ள பூட் சாதனங்கள் படியலில் சிடி ட்ரைவை முதல் பூட் சாதனமாகத் தேர்ந்ததெடுக்க வேண்டும். பயோஸில் செய்யும் இந்த மாற்றத்தை கணினியில் சிக்கலை ஏற்படுத்தாதவாறு சேமித்துக் கொள்ள முடியும்.. ஒரு லைவ் சிடி ட்ரைவில் இல்லாத போது கணினி ஹாட் டிஸ்கிலிருந்தே பூட் ஆக ஆரம்பிக்கும்.

அனேகமாக லினக்ஸ் இயங்கு தளத்தின் பல்வேறு பதிப்புகள் லைவ் சிடி வடிவில் கிடைக்கின்றன. இவற்றை இணையத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். அல்லது இந்த சிடிக்களை தபாலில் வரவழைத்துக் கொள்ளவும் முடியும். லினக்ஸ் தவிர Mac OS, Microsoft Windows, SunJava Desktop. OpenBSD எனப் பல்வேறு இயங்கு தளங்கள் லைவ் சிடி வடிவில் கிடைக்கின்றன. இவற்றுள் ஏதோவொரு லைவ் சிடியைக் கைவசம் வைத்திருப்பது ஹாட் டிஸ்கில் இருந்து கணினி பூட் ஆக மறுக்கும் சந்தர்ப்பங்களில் நமக்குப் பயன்படும்.

-அனூப்-