Sunday, June 28, 2009

How to share folders in Windows


போல்டர்களைப் பகிர்வது எப்படி?

ஒரு கணினி வலையமைப்பில் பைல்களைப் பரிமாறிக் கொள்ள (share) இலகுவான வழி முறையை விண்டோஸ் இயங்கு தளம் தருகிறது. போல்டர் மற்றும் ட்ரைவ்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கணினிக்குக் கணினி பைல்களை இலகுவாகப் பரிமாறிக் கொள்ளலாம்.

பைல் பகிர்தலில் விண்டோஸில் Simple File sharing மற்றும் Advanced File sharing என இரு வகைகள் உள்ளன. Simple File sharing மூலம் பைல் பகிர்வை மேற் கொள்ளும் போது பாதுகப்பு நடை முறைகள் கவனத்திற் கொள்ளப் படுவதில்லை. வலையமைப்பில் இணைந்துள்ள எவரும் அந்த பைல்களை அணுகும் வாய்ப்பை Simple File sharing அணுமதிக்கிறது.

Simple File sharing மூலம் போல்டர் மற்றும் ட்ரைவ்களைப் பகிர்ந்து கொள்ள உரிய போல்டர் அல்லது ட்ரைவ் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Sharing and security தெரிவு செய்ய வேண்டும். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Sharing டேபின் கீழ் Network Sharing and security பகுதியில் Share this folder on the network என்பதைத் தெரிவு செய்து ஓகே சொல்ல வேண்டும். இவ்வாறு பகிரப்படும் போல்டரை வலையமைப்பில் உள்ள அனைத்து கணிகளாலும் My Network Places விண்டோவைத் திறந்து அல்லது ரன் பொக்ஸில் \\ (கம்பியூட்டர் பெயர்) என டைப் செய்து வேறொரு கணினியிலிருந்து அந்த போல்டரை அணுக முடியும்.

அடுத்து Advanced File Sharing ஐ அணுகுவதற்கு முதலில் மேற் சொன்ன Simple File sharing என்பதை முடக்க வேண்டும். அதற்கு மை கம்பியூட்டர் விண்டோவைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு tools மெனுவில் Folder options தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபின் கீழ் Use Simple File sharing என்பதைத் தெரிவு நிலையிலிருந்து நீக்கி விட்டு ஓகே சொல்லுங்கள்.

அடுத்து ஏற்கனவே சொன்னது போன்று தேவையான போல்டரின் மீது அல்லது ட்ரைவின் மீது ரைட் க்ளிக் செய்து Sharing and security தெரிவு செய்யுங்கள். இப்போது முன்னரை விட வித்தியசமான ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றக் காணலாம். அங்கு பகிர வேண்டிய போல்டரை தெரிவு செய்து விட்டு Security டேப் மற்றும் Permissions பட்டனில் க்ளிக் செய்து வலையமைப்பில் உள்ள எந்தக் கணினிகளால் பைல்களை அணுகலாம், மாற்ற்ம் செய்யலாம் என்பன போன்ற பைல்களுக்கான பாதுகாப்பை வழங்கலாம்.

-அனூப்-


Remote Assistance in Windows XP

தொலைவிலிருந்து  கணினியை இயக்க Remote Assistance

விண்டோஸ் இயங்கு தளத்தின் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள வேறொரு கணினியை அணுகும் வசதியைத் தரும் Remote Assistance மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் கணினியில் ஏதும் சிக்கல் ஏற்படும் போது நீங்கள் அறிந்த ஒரு கணினி வல்லுனரின் உதவியை அவரிடம் நேரில் செல்லாமலேயே பெற்று சிக்கலைத் தீர்த்துக் கொள்ளலாம்.

அதாவது கொழும்பிலோ குருனாகாலிலோ வசிக்கும் நீங்கள் வெளிநாடொன்றில் இருக்கும் ஒரு நண்பரை அழைத்து அவர் அங்கிருந்தே உங்கள் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்த்து வைக்கும் வசதியை Remote Assistance தருகிறது.

இந்த வசதியைப் பெற உங்கள் கணினியிலும் இணைய விரும்பும் கணினியிலும் இணைய இணைப்புடன் விண்டோஸ் எக்ஸ்பியும் (விஸ்டாவிலும் மேம்படுத்தப்பட்ட ரீமோட் எஸிஸ்டன்ஸ் வசதி கிடைக்கிறது) நிறுவியிருத்தல் வேண்டும். அத்துடன் வின்டோஸ் லைவ் மெஸ்ஸெஞ்சரில் இணைவத்ற்கான ஒரு மின்னஞ்சல் முகவரியும் அவசியம்.

நீங்கள் நண்பரை அழைத்ததும் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டு கணினியுடன் இணைப்பை ஏற்படுத்தியதும் உங்கள் கணினியின் டெஸ்க் டொப் திரையை அவரது கணினியில் காண முடியும். அவருக்கு உங்கள் கணினியை முழுமையாகக் கட்டுப்படுத்த அனுமதி வழங்கப்படின் அவரது கீபோர்டையும் மவுஸையும் உபயோகித்து உங்கள் கணினியை முழுமையாக அவரது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வர முடியும். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.

முதலில் ஸ்டார்ட் மெனுவில் Help and Support தெரிவு செய்யுங்கள். உதவி வேண்டுபவர் மட்டுமே இதனைத் தெரிவு செய்ய வேண்டும். அப்போது Help and Support விண்டோ தோன்றும். அங்கு Ask For Assistance மெனுவின் கீழ் உள்ள Invite a Friend to connect to your computer with Remote Assistance என்பதைத் தெரிவு செய்யுங்கள். அடுத்து தோன்றும் விண்டோவில் Invite someone to help you எனும் லிங்கில் க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து தோன்றும் விண்டோவில் விண்டோஸ் மெஸ்ஸெஞ்சர் காட்டும் பட்டியலிலிருந்து உதவியைப் பெற விரும்பும் நண்பரின் பெயரைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள Invite this person லிங்கில் க்ளிக் செய்தல் வேண்டும். அப்போது உங்கள் நண்பர் உங்கள் கணினியின் டெஸ்க்டொப்பைப் பார்வையிட அனுமதிக்கும். நண்பர் உங்கள் கணினியை முழுமையாகத் தனது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவர Take control பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் ஓகே க்ளிக் செய்து அவரை உள்ளே வர அனுமதிக்க வேண்டும்.

அனூப்





Sunday, June 21, 2009

File System – 2


பைல் சிஸ்டம் – 2


FAT16, FAT32 மற்றும் NTFS எனும் மூன்று பைல் சிஸ்டங்களும் ஒரே விததிலேயே இயங்குகின்றன. இவற்றுக் கிடையே உள்ள முக்கிய வேறுபாடு யாதெனில் ஒவ்வொரு பைல் சிஸ்டமும் ஹாட் டிஸ்கில் எவ்வளவு வெற்றிடத்தைக் கையாளும் திறன் வாய்ந்தது என்பதாகும். பைல்களைக் கையாளும் திறனில் காணப்படும் பாரிய சிக்கல் யாதெனில் ஹாட் டிஸ்கில் ஒவ்வொரு க்ளஸ்டரும் ஒரு பைலை மட்டுமே சேமிக்கும். அதாவது ஒவ்வொரு அணியும் ஒரு விடயத்தை மாத்திரமே கையாளும். கீழே தரப்படும் உதாரணங்களைக் கவனியுங்கள்.

இயங்கு தளமானது ஒரு தொகுதி நபர்களை குழுவுக்கு 8 பேர் வீதம் பிரித்துக் கொள்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பையும் உள்ளது. இப்போது இயங்கு தளம் பென்சில்கள் கொண்ட ஒரு பெட்டியை முதல் அணியிடம் கொடுத்து அவற்றை பையில் போடச் சொல்கிறது.. முதல் எட்டுப் பேரும் அந்தப் பென்சில்களை பையில் போட்டு விடுகிறார்கள். ஒரு பை நிரம்பியதும்ம் அடுத்த நபருக்குக் கைமாறுகிறது. இவ்வாறு 7 பைகளை அந்தப் பென்சில்கள் நிரப்பி விடுகின்றன்.

இப்போது இயங்குதளம் அந்த அணியில் மீதமிருக்கும் எட்டாவது நபரின் பையில் போடுமாறு வேறொரு பொருளைக் கையளிக்க முயற்சிக்கிறது. எனினும் அந்த அணியானது ஏற்கனவே தம்மிடம் பென்சில்கள் தரப்பட்டுள்ளதாகவும் இந்தப் பொருளை ஏற்க முடியாது எனவும் மறுக்கிறது. பதிலுக்கு இயங்கு தளம் ஹாட் டிஸ்கில் (1/8 = 0.125) 12 வீதத்தை விரயம் செய்வதாகச் சொல்கிறது. எனினும் பைல் சிஸ்டம் தம்மால் அதனைத் தவிர்க்க முடியாது எனச் சொல்லி விடுகிற்து.

அடுத்து இயங்கு தளம் 8 பேர் கொண்ட வேறொரு அணியிடம் ஒரே ஒரு பென்சிலை மாத்திரம் கொடுத்து அதனைப் பையில் போடச் சொல்கிறது. அதனை வாங்கிக் கொண்ட அந்த அணி வேறு எதனையும் வாங்கிக் கொள்ள மறுக்கிறது. இப்போது இயங்கு தளம் 100 வீதமான வெற்றிடம் அங்கு விரயம் செய்யப்படுவதாகச் சொல்கிறது. . எனினும் பைல் சிஸ்டம் தன்னால் எதுவும் செய்ய முடியாது எனச் சொல்லி விடுகிறது.

இந்த உதாரணங்கள் சிறு பிள்ளைத்தனமாகத் உங்களுக்கு தோன்றலாம். எனினும் இவ்வாறன நிகழ்வே பைகளைச் சேமிக்கும்போது நடை பெறுகிறது.
க்ளஸ்டரின் எண்ணிக்கை அதிகமாகும் போது விரயமாகும் ஹாட் டிஸ்கின் வெற்றிடமும் அதிகமாகும். க்ளஸ்டரின் அளவுக்கேற்ப ஒவ்வொரு பைவையும் மாற்றியமைக்க முடியுமானால் எந்த வித விரயமும் ஏற்படப் போவதில்லை. எனினும் அது சாத்தியமானதல்ல.

ஒவ்வொரு க்ளஸ்டரின் அளவையும் கணினி எவ்வாறு தீர்மாணிக்கிறது? இதற்கு மிக எளிதாக விடை காண்லாம். ஹாட் டிஸ்கின் அளவை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மொத்தம் பயன்படுத்தப்ட்டுள்ள க்ளஸ்டர்களின் எண்ணிக்கையால் வகுக்க வருவது ஒரு க்ளஸ்டரின் அளவாகும்.

அதாவது க்ளஸ்டரின் அளவு = ஹாட் டிஸ்க் வெற்றிடம் / க்ளஸ்டர்களின் எண்ணிக்கை

க்ளஸ்டரின் அளவு அதிகரிக்கும்போது டிஸ்க் விரயமும் அதிகரிப்பதால் அதிக எண்ணிககையிலான க்ளஸ்டர்களைக் கையாளக் கூடிய ஒரு பைல் சிஸ்டமே எமக்கு அவசியமாகிறது. இந்த இடத்திலேயே FAT16 மற்றும் FAT32 என்பன வேறுபடுகின்றன. FAT32 அதிக என்ணிக்கை யிலான க்ளஸ்டர்களைக் கையாள வல்லது.

ஏன அப்படி? எளிமையான விளக்கம் தருவதானால் FAT32 இல் FAT16 ஐ விடவும் அதிக அளவில் க்ளஸ்டர்களை இலக்கமிட முடியும். ஒவ்வொரு க்ளஸ்டரும் பைல் சிஸ்டம் மூலம் இலக்கமிடப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். FAT16 ஆனது 16 இலக்கங்கள் கொண்ட (16 பிட்) பைனரி இலக்க முறையை அதற்குப் பயன்படுததுகிறது. இதன்படி FAT16 மூலம் இலக்கமிடக்கூடிய அதி கூடிய எண் 65535. ஆகவே FAT16 இல் 65535 க்லஸ்டர்களை இலக்கமிடலாம். இதிலிருந்து என்ன தெளிவாகிறதென்றால், ஹாட் டிஸ்கின் அளவு பெரிதாகும்போதும் க்ளஸ்டரின் எண்ணிக்கை (number of clusters) அதே அளவு மாறாமலேயிருக்கும். ஆகவே க்ளஸ்டரின் அளவு (cluster size) அதிகரிக்கும்

எனினும் ஒரு க்ளஸ்டரின் அளவை எல்லையின்றி அதிகரிக்க முடியும் எனக் கருதுவதும் தவறு. ஏனெனில் ஒவ்வொரு க்லஸ்டரிலும் உள்ள செக்டர்களும் இலக்கமிடப்பட வேண்டியுள்ளது. ஒவ்வொரு செக்டரும் ஒரு தொடரிலக்கத்தைக் கொண்டிருக்கும். அது ஒரு பைட்டின் அளவிற்குள் இருக்கும். ஒரு பைட் என்பது 8 பிட்டுகளைக் கொண்டிருக்கும்., அதாவது செக்டர்களைக் குறிக்கப் பயன்படும் இலக்கம் மூலம் 2^7 (இரண்டின் 7 ஆம அடுக்கு) அல்லது 128 செக்டர்களை இலக்கமிட முடியும். இதிலிருந்து பின்வரும் முடிவைப் பெறலாம்.

உங்களிடம் 65536 க்ளஸ்டர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு க்ளஸ்டரும் 128 செக்டர்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு செக்டரும் 512 பைட்டுகளைக் கொண்டுள்ளன.

இதிலிருந்து FAT16 கையாளக் கூடிய ஹாட் டிஸ்க் அளவு 65535 X 128 X 512 = 4 GB
FAT16 கையாளும் அதி கூடிய ஹாட் டிஸ்க் அளவு 2 GB .என நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன் அப்படியானால் இந்தக் கணக்கு சரிதானா?. FAT16 இல ஒவ்வொரு க்ளஸ்டரும் 32 கிலோபைட்டைக் கொண்டிருக்கும். இங்கு சிக்கல் என்னவென்றால் 128 செக்டர்கள் X 512 பைட் தருவது 65536 எனும் இலக்கமாகும். இது 16 பிட் இலக்கமொன்றால் கையாளக்கூடிய என்ணிக்கையை விட ஒன்று அதிகமாகும். எனவே 128 ற்குப் பதிலாக 64 செக்டர் கொண்ட க்ளஸ்டராகக் குறைத்துக் கொள்ள் வேண்டி ஏற்படுகிறது. அதன்படி க்ளசஸ்டரின் அளவு 32 கிலோ பைட்டாக மாறுகிறது. 32 கிலோ பைட் X 65535 தருவது அண்ணளவாக 2 GB எனும் பெறுமானமாகும். .

மிகுதி இன்னுமொரு ஐடி வலத்தில்..

Sunday, June 14, 2009

What is Word Verification?

Word Verification என்றால் என்ன?

இலவச வெப் மெயில் சேவை வழங்கும் யாகூ, கூகில் போன்ற நிறுவனங்களின் இணைய தளங்களூடாக மின்னஞ்சல் முகவரியொன்றை உருவாக்கும் போது நம்மைப் பற்றிய விவரங்ளையும் கேட்கிறர்ர்கள். அங்கு ஓரிடத்தில் அர்தமற்ற ஓர் ஆங்கிலச் சொலலை இமேஜ் போமட்டில் தோன்றச் செய்வார்கள. அந்தச் சொல்லில் காணப்படும் எழுத்துக்களை அவதானித்து அதன் கீழுள்ள டெக்ஸ்ட் பொக்ஸில் டைப் செய்யச் சொல்வார்கள். இதனை Word Verification (சொல் சரிபார்ப்பு) என்பார்கள். எதற்கு இந்த நடை முறை? உங்கள் கண் பார்வையை சோதிக்கிறார்களா? அதுதான் இல்லை. இது இலவச இமெயில் சேவை வழங்கும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையே.

இந்தப் பாதுகாப்பு முன்னேற்பாடு மட்டும் இல்லையானால் கணினி வித்தகர்கள் (எத்தர்கள்) மெயில் சேர்வரே திணறிப் போகும். அளவுக்கு தன்னியக்க முறையில் ஒரே மணித்தியாலத்தில் பல்லாயிரக் கணக்கான மின்ன்ஞ்சல் முகவரிகளை உருவாக்குமாறு அதற்கென விசேட மென்பொருள்களை வடிவமைத்து விடுவார்கள். அத்தோடு ஸ்பாம் எனும் வேண்டாத குப்பை அஞ்சல்களையும் அனுப்ப அவர்களுக்கு வாய்ப்பாப் போய் விடும். இலவசமாக வழங்கும் சேவையை துஸ்பிரயோகஞ் செய்வதைத் தடுக்கவே இந்த பாதுகாப்பு ஒழுங்கு. ஒரு மனிதரால் மட்டுமே இமேஜ் போமட்டிலுள்ள எழுத்துக்களைக் கண்டறிந்து டைப் செய்ய முடியும் என்பதனாலேயே அந்த எழுத்துக்களை டெக்ஸ்ட் போமட்டில் அல்லாமல் இமேஜ் போமட்டில் தோன்றச் செய்கிற்ர்ர்கள்..

-அனூப்-

File System - 1

File System என்றால் என்ன?

பைல் சிஸ்டம் எனப்படுவது ஹாட் டிஸ்கில் பதியப்படும் பைல்களைக் இயங்குதளம் கையாளும் ஒரு வழி முறையாகும். பல்லாயிரம் பைல்கள் உங்கள் கணினியில் இருக்கலாம். எனினும் அவற்றை ஒழுங்காகப் பேணவும் நிர்வகிக்கவும் ஒரு வழி முறை இல்லையெனின் கணினி மெதுவாகவே இயங்கும்.

உதாரணமாக ஒரு அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை முறைப்படி ஒழுங்காக வைக்காமல் ஒவ்வோரிடத்தில் சிதறிக் கிடந்தால் தேவையான நேரத்தில் ஒரு பைலைத் தேடிப் பெற எவ்வளவு நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும்? முறையான ஒரு பைல் சிஸ்டம் இல்லையாயின் இது போன்ற ஒரு நிலையையே கணினியும் எதிர் கொள்ளும்.

வீடுகளிலோ அலுவலகத்திலோ பலரும் பல விதமன முறைகளில் பொருட்களை ஒழுங்கு படுத்துவது போல் கணினியிலும் பைல்களை ஒழுங்கு படுத்துவதில் FAT16, FAT32, NTFS என்ப் பல வழி முறைகள உள்ளன. இவை ஓவ்வொன்றும் தமக்கேயுரிய சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளதுடன் அவற்றிற்கிடையே சில பொதுவான பண்புகளும் உள்ளன.

ஹாட் டிஸ்கில் உள்ள வெற்றிடத்தில் டேட்டாவை சேமிப்பதில் காட்டும் திறன், ஹாட் டிஸ்கில் உள்ள பைல்கள் அனைத்தையும் பட்டியலிடுதல் மூலம் அவற்றை விரைவாக மீட்டுக் கொள்ளும் திறன்

பைல்களை அழித்தல், பெயரிடுதல். பிரதி செய்தல், இடம் மாற்றுதல் போன்ற பைல் சர்ந்த அடிப்படை விடயங்களை மேற்கொள்ளுதல் எனபன பொதுவான பண்புகளாகும்.

இந்த அடிப்படை விடயங்களுடன் சில பைல் சிஸ்டம் பைகளைச் சுருக்குதல் (compression) , குறியீட்டு முறைக்கு மாற்றுதல் (encryption), கடவுச் சொல் (password) மூலம் பாதுகாப்பளித்தல் போன்ற கூடுதல் வசதிகளையும் கொண்டிருக்கும்.
FAT16 (File Allocation Table) என்றால் என்ன? எம்.எஸ்.டொஸ் இயங்கு தளத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட. இந்த பைல் சிஸ்டம் அதிக பட்சம் 2GB கொள்ளளவு கொண்ட ஹாட் டிஸ்கிற்கே பொருந்தும்.

ஹாட் டிஸ்கில் டேட்டா மெல்லீய பொது மையம் கொண்ட ட்ரேக்ஸ் (tracks) எனும் பாதையிலேயே பதியப்படுகின்றன. ஒவ்வொரு ட்ரேக்கும் செக்டர்ஸ் (Sectors) எனும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. அத்தோடு ஒவ்வொரு ட்ரேக்கும் ஒரே அளவான செக்டர்களைக் கொண்டிருக்கும். டிஸ்கில் உள்ள டேட்டாவை பதியும் மிகவும் சிறிய பகுதியே செக்டர் ஆகும். ஒரு செக்டரின் அளவு 512 பைட்டுகளாகும். ஹாட் டிஸ்கை போமட் செய்யும் போதே இவ்வாறு பிரிக்கப்படுகின்றன..

ஹாட் டிஸ்கின் மொத்த கொள்ளளவு 10 கிலோ பைட் எனின் அந்த ஹாட் டிஸ்க் 20 செக்டர்களாகப் பிரிக்கப்படும். எனினும் இயங்குதளமானது நேரடியாக ஒவ்வொரு செக்டரையும் அணுகுவதில்லை. மாறாக அது பல செக்டர்களை ஒன்று சேர்த்து க்ளஸ்டர் (Cluster) எனும் ஒரு அணியாக மாற்றி அதனையே அணுகுகின்றது. இதனை (Allocation unit) எனவும் அழைக்கப்படும்.

உதாரணமாக ஒவ்வொரு செக்டரையும் ஒரு பையை கையில் வைத்திருக்கும் ஒரு நபருக்கு ஒப்பிடுங்கள். ஒவ்வொரு பையிலும் 512 பைட் டேட்டாவையே சேமிக்க முடியும். ஒவ்வொரு நபரையும் 1,2,3 என இலக்கமிடாமல், பைல் சிஸ்டமானது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை ஒன்று சேர்த்து ஒரு அணியாக மாற்றி அவர்களை முதலாவது அணி எனப் பெயரிடுகிறது. மொத்தமாக 400 பேர் இருப்பார்கள் எனின் பைல் சிஸ்டம் அணிக்கு நால்வராக 100 அணிகளாகப் பிரித்துக் கொள்ளும்.

இன்னொரு வகையில் சொல்வதானால் 400 செக்டர்கள் கொண்ட ஒரு ஹாட் டிஸ்கில் (200 கிலோபைட்) பங்கீட்டு அளவாக 4 செக்டர்களை ஒரு க்ளஸ்டர் கொண்டிருப்பின் மொத்தமாக 100 க்ளஸ்டர்கள் காணப்படும்.

பைல் சிஸ்டமானது ஒரு குறித்த செக்டரை அணுக வேண்டுமானால், முதலில் அந்த செக்டர் இடம் பெறும் க்ளஸ்டர் இலக்கத்தையே அணுகும். அந்த க்ளஸ்டருக்குள் செக்டரின் தொடரிலக்கத்தின் மூலம் உரிய செக்டரை அடையும். அதாவது ரிம்ஸி எனும் நபரைக் கண்டு பிடிக்க ரிம்ஸி இடம் பெறும் அணியை முதலில் அணுகி அங்கு ரிம்ஸியைக் கண்டு பிடிப்பதற்கு ஒத்ததாகும்.

FAT16, FAT32 மற்றும் NTFS எனும் மூன்று பைல் சிஸ்டங்களும் இம்முறையிலேயே இயங்குகின்றன. அப்படியானால் இவற்றுக் கிடையே என்ன வேறுபாடு உள்ளன?

முக்கிய வேறுபாடு யாதெனில் ஒவ்வொரு பைல் சிஸ்டமும் ஹாட் டிஸ்கில் எவ்வளவு வெற்றிடத்தைக் கையாளும் திறன் வாய்ந்தது என்பதிலேயே தங்கியுள்ளது. பைல்களைக் கையாளும் திறனில் காணப்படும் பாரிய சிக்கல் யாதெனில் ஹாட் டிஸ்கில் ஒவ்வொரு க்ளஸ்டரும் ஒரு பைலை மட்டுமே சேமிக்கும். அதாவது ஒவ்வொரு அணியும் ஒரு விடயத்தை மாத்திரமே கையாளும்.

-அனூப்-


Sunday, June 07, 2009

Selection techniques in MS Word


எம்.எஸ்.வர்ட் Selection techniques

எம்.எஸ்.வர்டில் டைப் செய்த ஆவணங்களை நேர்த்தியாக போமட் செய்ய வேண்டுமானால் முதலில் அந்த டெக்ஸ்டைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். என்பது நீங்கள் அறிந்த விடயம்தான் அதற்கு மவுஸ் கீபோர்ரட் இரண்டையும் பயன்படுத்த முடியும். டெஸ்டைத் தெரிவு செய்வதிலும் பல உத்திகள் (Selection techniques) உள்ளன. அவ்வுத்திகளையே இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  • ஒரு சொல்லைத் தெரிவு செய்வதற்கு அந்த சொல்லின் மீது டப்ள் க்ளிக் செய்யுங்க்ள்.
  • கீபோர்ட் மூலம் ஒரு சொல்லைத் தெரிவு செய்ய Ctrl + Shift விசைகளுடன் இடம் அல்லது வலம் நோக்கிய அம்புக்குறி விசைகளை (Arrow Keys) அழுத்த வேண்டும்.
  • ஒரு வாக்கியத்தைத் தெரிவு செய்வதற்கு Ctrl விசையை அழுத்தியவாறு அந்த வாக்கியத்தின் எப்பகுதியிலும் ஒரு க்ளிக் செய்யுங்க்ள்.
  • ஒரு பந்தியைத் தெரிவு செய்வதற்கு அந்தப் பந்தியின் மீது மூன்று க்ளிக் செய்யுங்கள். அல்லது பந்தியின் இடப்புற ஓரத்தில் (left margin) மவுஸ் பொயிண்டரை நகர்த்தும் போது அது வலப்புறமாகத் திரும்பும். அப்போது இரட்டைக் க்ளிக் செய்யுங்கள்.
  • Shift விசையை அழுத்தியவாறு பந்தியில் தேவையான இடத்தில் க்ளிக் செய்யும் போது கர்ஸர் (Cursor / Insertion Point) உள்ள இடத்திலிருந்து க்ளிக் செய்த இடம் வரை தெரிவு செய்யப்படும்.
  • Shift விசையை அழுத்தியவாறு அம்புக்குறி விசைகளை அழுத்தும் போது விரும்பிய திசையில் டெக்ஸ்டைத் தெரிவு செய்து கொள்ளலாம்.
  • கர்ஸர். உள்ள இடத்திலிருந்து ஒரு வரியின் முடிவிடம் மட்டும் தெரிவு செய்ய கீபோர்டில் Shift + End. விசைகளை அழுத்துங்கள்.
  • கர்ஸர் உள்ள இடத்திலிருந்து ஒரு பந்தியின் முடிவிடம் மட்டும் தெரிவு செய்ய Ctrl + Shift + Down Arrow விசைகளை ஒரே தடவையில் அழுத்துங்கள்.
  • கர்ஸர் உள்ள இடத்திலிருந்து ஆவணத்தின் முடிவு வரை தெரிவு செய்ய Ctrl + Shift + End. விசைகளை ஒரே முறையில் அழுத்த வேண்டும்.
  • இடப்புறமுள்ள ஓரத்தில் மவுஸ் பொயிண்டரை நகர்த்தி ஒரு க்ளிக் செய்யுங்கள். அப்போது ஒரு வரி மட்டும் தெரிவு செய்யப் படும்.
  • இடப்புறம ஓரத்தில் மவுஸ் பொயிண்டரை நகர்த்தும் போது அது வலப்புறமாகத் திரும்பும்.. அப்போது மூன்று க்ளிக் (triple click) செய்ய ஆவணம் முழுவதும் தெரிவு செய்யப் படும்.
  • கீபோர்ட்டில் Ctrl + A விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தியும் ஆவணம் முழுவதும் தெரிவு செய்யலாம். .


How to view a file without opening it


பைலைத் திறக்காமலேயே பார்வையிட.

உங்களிம் ஏராளமான வர்ட் பைல்கள் உள்ளன. அவற்றில் எந்த பைலில் உங்க்ளுக்குத் தேவையான் விவரம் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு நிச்சயமில்லாதபோது அந்த பைல்கள அனைத்தையும் ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவற்றைத் திற்க்காமாலேயே முன்னோட்டம் (Preview) பார்க்கும் வசதியை எம்.எஸ்.வர்ட தருகிறது.

இந்த வசதியைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுவே. எம்.எஸ். வர்டைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File மெனுவில் Open தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸின் வலப்புறம் உள்ள டூல் பாரில் Views பட்டனில் இருக்கும் சிறிய கீழ் நோக்கிய அம்புக் குறியில் க்ளிக் செய்ய ஒரு பட்டியல் தோன்றும் . அதில் Preview தெரிவு செய்யுங்கள். அப்போது அங்கு ப்ரிவியூ விண்டோ தோன்றும்,

அடுத்து இடப்புறம் இருக்கும் எம்.எஸ். வர்ட் பைல் பெயர்களில் க்ளிக் செய்ய அந்த பைல்களில் என்னென்ன அடங்கியுள்ளன என்பதை அந்த பைல்களைத் திறக்காமலேயே பார்வையிடலாம்.

-அனூப்-

How to add you signature in MS Word document

ஆவணத்தில் கையெழுத்தை இணைத்திட..




உத்தியோகபூர்வ கடிதங்கள் போன்ற் காகித ஆவணங்களில் எமது கையெழுத்தைச் (Signature) சேர்ப்பது போன்று இலத்திரனியல் ஆவணங்களில கையெழுத்தைச் சேர்ப்பதெப்படி என்று பலருக்கும் ஒரு ஐயம் இருக்கலாம். கையெழுத்தைச் சேர்க்கும் வசதியை எம்.எஸ்.வர்ட தருகிறது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

முதலில் உங்கள் கையெழுத்தை ஒரு காகிதத்திலிட்டு ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவில் மாற்றிய பின்னர் அதனை .GIF அல்லது .JPEG வடிவில் கணினியில் ஏதாவது ஓரிடத்தில் சேமித்துக் கொள்ளுங்கள்.

அடுத்து எம்.எஸ்.வர்டைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர் Insert மெனுவில் Picture - From File தெரிவு செய்து ஸ்கேன் செய்த உங்கள் கையெழுத்தைக் கொண்ட படத்தை நுளைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அந்தப் படத்தை நீங்கள் விரும்பிய அளவில் மாற்றிக் கொள்ளுங்கள்.

கையொப்பமிட்ட படத்தை நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு ஆவணத்திலும் சேர்த்துக் கொள்ள அந்தப் படத்தைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து insert மெனுவில் AutoText – New என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது Create Auto Text எனும் ஒரு சிறிய டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு படத்திற்குப் பொருத்தமான ஒரு பெய்ரையிட்டு ஓகே சொல்லி விடுங்கள்.

உங்கள் ஆவனங்களில் கையெழுத்தைச் சேர்ர்ப்பதற்கு insert மெனுவில் AutoText - Normal தெரிவு செய்ய அங்கு நீங்கள் வழங்கிய பெயரையும் காணலாம் அந்தப் பெயரில் க்ளிக் செய்து நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு ஆவணத்திலும் கையெழுத்தைச் சேர்க்கலாம்.

-அனூப்-