Monday, July 20, 2009

Most popular 10 open source software

பிரபலமான பத்து கட்டற்ற மென்பொருள்கள்



Mozilla Firefox
பலராலும் விரும்பப்படும், பயன்படுத்தப்படும் ஒரு ஓபன் சோர்ஸ் (Open Source) மென்பொருள் மொஸில்லா பயபொக்ஸ் எனும் இணைய உலாவி (வெப் பிரவுஸர்).. அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி ப்யபொக்ஸ் 47.1% இணைய பாவனையாளர்களால் பயன்படுத்தப் படுவதாகத் தெரிவிக்கிறது. அதே வேளை இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் 28 % பாவனையாளர்களாலேயே பயன்படுத்தபபடுவதாக் அதே புள்ளி விவரம் தெரிவிக்கிறது, அத்துடன் 24 மணி நேரத்தில் (2008 ஜூன் மாதம் 17 ஆம் திக்தி) 8,002,530 இணைய பாவனையாளர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு பயபொக்ஸ் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.

2. Mozilla Thunderbird
மொஸில்லா தண்டர்பர்ட் இமெயில்கள் அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படும் மற்றுமொரு ஓபன் சோர்ஸ் இமெயில் க்ளையண்ட். மென்பொருளாகும். பல்வேறு வசதிகளுடன் ஸ்பாம் எனும் குப்பை அஞ்சல்களை வடிகட்டுவதில் சிறப்பாகச் செயற்படுகிறது. தண்டர்பார்ட்.

3. Open Office
மைக்ரோஸொப்ட் ஒபிஸ் மென்பொருள் தொகுப்புக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் ஓபன் சோர்ஸ் மென்பொருள் தொகுப்பே ஓபன் ஒபிஸ். எம்.எஸ்.ஓபிஸில் போன்று Word Processing, Spreadsheet, Presentation, Graphics, Database மென்பொருள்களும் அடங்கியுள்ளன. இது ஏனைய ஒபிஸ் மென்பொருள்களுடன் ஒத்திசையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளtதால் இதன் மூலம் எம்.எஸ்.வர்ட்., எக்ஸல் பைல் வகைகளைக் கூட கையாளலாம்.

4. GIMP
அடோபி நிறுவனத்தின் (Photoshop) போட்டோசொப் போன்ற ஒளிப்படங்களைக் கையாளக் கூடிய ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருளே ஜிம்ப். கிரபிக்ஸ் டிசைனிங் பயன்பாடில் உதவக் கூடிய ஒரு சிறந்த மென்பொருளாக ஜிம்ப் விளங்கிகிறது.. போட்டோசொப் கொண்டு உருவாக்கப்படும் PSD பைல்களையும் கூட இதன் மூலம் கையாள முடியும்.

5.  Pidgin
இணைய உரையாடலில் பயன்படுத்தப்படும் ஓபன் சோஸ் மென்பொருளே பிட்ஜின். முன்னணியிலுள்ள Yahoo, MSN, GTalk, ICQ போன்ற உடனடி செய்தி (Instant Messenger) பரிமாற்றத்தில் பயன் படுத்தப்படும், மென்பொருள்களுடன் இது ஒத்திசையக் கூடியது. முன்னர் இது GAIM என்ப் பெயரிடப்பட்டிருந்தது,




6. VLC Media Player
ஒலி மற்றும் ஒளி வடிவிலானா பைல்களைக் கையாளக்கூடிய ஒரு சிறந்த ஓபன் சோர்ஸ் மீடியா ப்ளேயர் மென்பொருள்.. MPEG1, MPEG2, MPEG4, DivX, MP3, VCD, DVD, Audio CD, என ஏராளமானா ஓடியோ வீடியோ பைல் வகைகளை இதன் மூலம் கையாள் முடியும். .



7.  ClamWIN
இது விண்டோஸ் இயங்கு தளத்திற்கென உருவாக்கப் பட்டிருக்கும் ஓபன் சோஸ் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள். ஏனைய வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களைவிட கூடிய விகிதத்தில் வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களைக் கண்டறிகிறது. வியாபார நோக்கில் உருவாக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களுக்கு நிகராக் ஒழுங்கான கால இடைவெளியில் வைரஸ் ஸ்கேன் செய்தல், அதனை அப்டேட் செய்து கொள்ளல் போன்ற வசதிகளையும் கொண்டுள்ள்து.

8.  7-Zip
வின்ஸிப், வின்ரார் போன்ற பைல் அளவினைச் சுருக்க வல்ல (File Ccompression) ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருள். வின்ஸிப் (WinZip) , மற்றும் வின்ராருடன் (WinRAR) ஒப்பிடும் போது இதன் பைல்களாச் சுருக்கும் விகிதம் மேம்பட்டதாயுள்ளது. மேலும் ஏரளமான பைல்களைச் சுருக்கும் மென்பொருள்களுடன் ஒத்திசைவது இதன் சிறப்பம்சம். எனலாம்.

9. FileZilla
இது எந்த ஒரு இயங்கு தளத்திலும் இயங்கத் தக்க பைல்களை இணையம் வழியே பரிமாறக் கூடிய ஒரு FTP (File Transfer Protocol) மென்பொருள். விண்டோஸ் தளத்திற்கென உருவாக்கப் பட்டிருக்கும் FTP மென்பொருள்களில் சிறந்ததாக பைல்ஸிலா கருதப்படுகிறது,

10.Audacity
ஒடேசிட்டி என்பது ஒலிப்பதிவு செய்யவும் ஒலிக் கோப்புகளை (sound files) எடிட் செய்யவும் என உருவாக்கப்பட்டுள்ள் ஒரு ஓபனசோர்ஸ் மென்பொருள். ஒடேசிட்டி மூலம் ஒலிப்பதிவு செய்வது மட்டுமன்றி பல்வேறு ஒலி சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். எவரும் இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு எளிமையயன இடை முகப்பையும் கொண்டுள்ளது வர்ததக நோக்கில் உருவாக்கப்படும் ஒலிப்பதிவு செய்யக் கூடிய மென்பொருள்களை விட தரம் மிக்கதாக ஒடேசிட்டி விளங்கிகுகிறது.

Sunday, July 12, 2009

Net Meeting in Windows XP


வலையமைப்பில் உரையாட விண்டோஸ் தரும் Net Meeting



நெட் மீட்டிங் என்பது விண்டோஸுடன் வரும் ஒரு உரையாடல் மென்பொருள். இதன் மூலம் ஒரு கணினி வலையமைப்பிலோ அல்லது இணையம் வ்ழியிலோ ஒருவரோடொருவர் பல வகைப்பட்ட தொடர்பாடலை மேற்கொள்ள முடியும். யாகூ, எம்.எஸ்.என் போன்ற Internet Messenger களின் வருகைக்கு முன்னர் நெட் மீட்டிங்கே பிரபலமான ஒரு இணைய உரையாடல் மென்பொருளாய் இருந்தது விண்டோஸின் பதிப்புகளான விண்டோஸ் 95/98/2000 மற்றும் எக்ஸ்பீ பதிப்புகளில் இது இணைக்கப் பட்டுள்ளது. எனினும் அண்மைய பதிப்பான விஸ்டாவில் நெட் மீட்டிங் இணைக்கப் படவில்லை. பதிலாக வேறு எப்லிகேசன்களைப் பரிந்துரை செய்கிறது மைக்ரோஸொப்ட்...

நெட்மீட்டிங்கில் என்ன வசதிகள் கிடைக்கின்றன?

  • பைல்களயும் மென்பொருள்களையும் பறி மாறிக் கொள்ளலாம்.
  • டெக்ஸ்ட் செட்டிங் எனப்படும் எழுத்து வடிவ உரையாடல், குரல் வழி மற்றும் வீடியோ உரையாடலில் ஈடு பட முடியும்
  • ஒரு கணினியின் டெஸ்க்டொப்பைப் பகிர்ந்து கொள்ள் முடியும். இதன் மூலம் ஒரு கணினியில் நடப்பதை ஏனையோர் தமது கணினியில் பார்வையிட முடியும். மல்டி மீடியா ப்ரோஜெகடர் தேவையை இந்த வசதி மூலம் ஓரளவு நிவர்த்தி செய்யலாம்.
  • White Board எனப்படும் எம்.எஸ். பெயின்ட் போன்ற ஒரு எப்லிகேசனில் நெட்வர்க்கில் இணைந்துள்ள பல பேர் சேர்ந்து ஒரே படத்தை ஒரே நேரத்தில் வரைய முடியும். தகவல்களைப் பரிமாற முடியும்.


நெட் மீட்டிங் தரும் வசதிகளைப் பயன் படுத்த கணினி இணையத்திலோ அல்லது ஒரு உள்ளக வலையமைப்பிலோ இணைந்திருத்தல் அவசியம். இரண்டு கணினிகளை இணைப்பதன் மூலமும் இந்த வசதிகளைப் பரீட்சித்துப் பார்க்கலாம்.

நெட் மீட்டிங்கை முதலில் எவ்வாறு ஆரம்பிப்பது?

Start " Programs " Accessories " Communications ஊடாக NetMeeting. தெரிவு செய்யுங்கள் அல்லது Start " Run தெரிவு செய்து Conf எனும் கட்டளையை டைப் செய்யுங்க்ள். அப்போது ஒரு விசர்ட் தோன்றும். அந்த Next க்ளிக் செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்களைப் பற்றிய தகவல்களை வழங்கிய பிறகு மீன்டும் Next க்ளிக் செய்யுங்கள். அடுத்து தோன்றும் கட்டத்தில் Directory Server என்பது அவசியமில்லை எனின் தெரிவுகளை மேற்கொள்ளாமலே அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.

அங்கு பொருத்தமான இணைப்பு வகையைத் தெரிவு செய்யவும். ஒரு உள்ளக வலையமைப்பு எனின் Local Area Network என்பதைத் தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லவும். அங்கு விரும்பினால் Put a shortcut on my Desktop என்பதைத் தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.

அடுத்து Audio Tuning Wizard தோன்றும். இங்கு மைக்ரபோனை இணைத்து அதனைப் பரீசித்துக் கொள்ள வேண்டும். Audio / Video வசதிகள் தேவையில்லை எனின் அடுத்த கட்டங்களைப் புறக்கணித்து விட்டு இறுதியாக Finish பட்டனில் க்ளிக் செய்யலாம். Audio / Video வசதிகளை நெட்மீட்டிங் கன்பிகர் செய்த பின்னரும் கூட சேர்த்துக் கொள்ளலாம். .

நெட் மீட்டிங்கில் அடுத்தவருடன் இணைப்பை ஏற்படுத்துவது எப்படி?

முதலில் நெட் மீட்டிங் திறந்து கொள்ளுங்கள். பிறகு நெட் மீட்டிங் விண்டோவில் இணைப்பை ஏற்படுத்த விரும்பும் கணினியின் IP முகவரியை அல்லது கம்பியூட்டர் பெயரை டைப் செய்து Enter விசையை அழுத்த இணைப்பை ஏற்படுத்த விரும்பும் கணினியின் டாஸ்க் பாரில் ஒரு அறிவித்தல் தோன்றி அந்தக் கணினியில் பணியாற்றுபவரின் சம்மதத்தைக் கேட்கும். அவர் Accept க்ளிக் செய்ய இரண்டு கணினிக்ளும் நெட் மீட்டிங்கில் இணைந்து கொள்கின்றன. இவ்வாறு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி அதன் வசதிகளை பயன்படுத்தலாம்.

ஐபி முகவரியை எவ்வாறு அறிந்து கொள்வது?

விண்டோஸ் இயங்கு தளத்தில் ஸ்டாட் மெனுவில் Run தெரிவு செய்ய வரும் ரன் பொக்ஸில் cmd என டைப் செய்து ஓகே செய்யுங்கள். அப்போது தோன்றும் விண்டோவில் ipconfig என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த உங்கள் கணினியின் ஐபி முகவரியைக் காணலாம். ஒரு வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருந்தால் மட்டுமே ஐபி முகவரியைக் காணலாம் எனபதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Computer Name எவ்வாறு அறிந்து கொள்வது?

My computer ஐகன் மீது ரைட் க்ளிக் செய்ய வரும் context menu விலிருந்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் System properties டயலொக் பொக்ஸில்; Computer Name எனும் டேபில் க்ளிக் செய்ய Full computer name பகுதியில் உங்கள் கணினியின் பெயரை அறிந்து கொள்ளலாம்.

Sunday, July 05, 2009

Bits & Bytes

என்ன இந்த Bits & Bytes ?

கணினி ஒரு இலத்திரனியல் சாதனம் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஒரு மின் விளக்குப் போல் கணினியிலுள்ள மின் சுற்றுக்களும் On அல்லது off எனும் இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளன. On ஆக இருக்கும் நிலையை 1 (ஒன்று) எனும் இலக்கத்தாலும் off நிலையை 0 (பூச்சியம்) எனும் இலக்கத்தாலும் குறிக்கப்படுகின்றன. தகவல்களைக் கணினி நினைவகத்திலும், டிஸ்க் ட்ரைவ்லிலும் சேமிக்கும் போது ஒன்றுகளாலும் பூச்சியத்தாலும் மட்டுமே பதிவு செய்கின்றன. இங்கு ஒன்று அல்லது பூச்சியத்தை ஒரு பிட் என அழைக்கப்படும். பைனரி டிஜிட் (binary digit) எனும் வார்த்தைகளிலிருந்ததே பிட் (bit) எனும் வார்த்தை உருவானது. பிட் என்பது ஒரு தகவலின் மிகச் சிறிய அலகாகும்.

ஒரு பிட்டை மாத்திரம் கொண்டு ஒரு எழுத்தையோ அல்லது குறியீட்டையோ உருவாக்கி விட முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட பிட்டுகளை ஒரு அணியாக ஒன்று சேர்க்கும்போதே எதனையும் (ஒரு தகவலை) அர்த்த முள்ளதாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு 8 பிட்டுகள் சேர்ந்ததை ஒரு பைட் (byte) எனப்படும். ஒரு பைட் மூலம் 256 வெவ்வேறான எழுத்துக்களையோ அல்லது குறியீடுகளையோ வெளிப்படுத்தலாம். அதாவது எட்டு பிட்டுகளை மூலம் 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். இதன் மூலம் கீபோர்டிலுள்ள ஆங்கில பெரிய எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளையும் உருவாக்க முடிகிறது.

உதாரணமாக் "A" எனும் எழுத்தானது கணினியில் 01000001 என பதியப்படுகிற்து. (அதாவது கணினி மின் சுற்றில் 8 Switches / ஆளிகள் இயங்குகின்றன) அதேபோல் " * " எனும் குறியீடு 00101010 என பதியப்படுகிறது. Cat எனும் பெயரை பதிய 010000110110000101110100 பிட்டுகள் இவ்வாறு அணி சேர்கின்றன. இவை மூன்று எழுத்துக்களைக் குறிக்கின்றன. எனவே இது மூன்று பைட்டுகளைக் கொண்டிருக்கும்.

பைட் கொண்டு ஒரு சிறு அளவிலான தகவலையே சேமிக்க முடியும் தகவலின் அளவு கிலோ பைட், மெகாபைட், கிகா பைட் போன்றவற்றிலேயே குறிப்பிடப்படுகின்றன.

ஒரு Kilobyte (KB) கிலோ பைட் என்பது 1024 பைட்டுகளுக்குச் சமனானது. ஒரு சராசரி எம்.எஸ். வர்ட் ஆவணம் 100 பைட்டுகளைக் கொண்டிருக்கும்.
ஒரு மெகா பைட் Megabyte (MB) என்பது 1024 கிலோ பைட்டுகள் கொண்டது. 1024 மெகா பைட்டுகளை ஒரு கிகாபைட் (Gigabyte) கொண்டிருக்கும்.

பைல்களின் அளவு பைட்டிலும் கிலோ பைட்டிலும் அளவிடப்படுகின்றன. ஒரு தசாப்தத்துக்கு முன்பு வரை அனேகமன மென்பொருள்கள் 1.44 மெகா பைட் அளவு கொண்ட ப்லொப்பி டிஸ்கிலேயே கிடைக்க்கப்பெற்றன. அப்போது வெளிவந்த மென்பொருள்க்ளின் அளவு மிகவும் சிறியதாயிருந்தன. அதனால் ஒரு மென்பொருளை ஓரிரு ப்லொப்பி டிஸ்கில் அடக்கக் கூடியதாயிருந்தது.

எனினும் தற்காலத்தில் வெளி வரும் மென்பொருள்களின் அளவு முன்னரை விடப் பல மடங்கு பெரிதாகவுள்ளன. உதராணமாக் எம்.எஸ்.ஒபிஸ் மென்பொருள் தொகுப்பின் அண்மைய பதிப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் கொள்ளளவு சுமார் 700 மெகா பைட்டுகளாகவுள்ளது. அதாவது ஒரு சீடியின் அளவுக்குச் சமமானது.

மென்பொருள்களைப் போன்றே ஹாட் டிஸ்கின் கொள்ளளவுகளும் தற்போது நினைத்தும் பார்க்க முடியாத அளவுகளில் கிடைக்கின்றன. பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு ஹாட் டிஸ்கின் உச்ச கொள்ளளவு 1 கிகாபைட்டிலும் குறைவாகவேயிருந்தன.. பின்னர் அதன் கொள்ளளவு 10, 20, 40, 60, 80, 120, 160, 300 500 கிகாபைட் என படிப்படியாக மிக வேகமாக அதிகரித்து தற்போது ஒரு டெராபைட் அளவிலும் கூட ஹாட் டிஸ்க்குகள் கிடைக்கப் பெறுகின்றன. ஒரு டெரா பைட் என்பது 1024 கிகா பைட்டுகளுக்குச் சமனானது.

டேட்டாவை சேமிக்கும் ப்ளொப்பி, சிடி, டிவிடி, ஹார்ட் டிஸ்க், பென் ட்ரைவ் போன்றவற்றில் அதிக அளவில் டேட்டா சேமிக்கப் படுகையில் அவற்றின் அளவைக் குறிக்க கிலோபைட், மெகாபைட், கிகாபைட் போன்ற அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

  • 1 பிட் (Bit) 0 அல்லது 1 ஐக் குறிக்கும்
  • 4 பிட்டுகளின் சேர்க்கையை நிப்ல் (Nibble) என்ப்படும்.
  • 8 பிட்டுகளின் சேர்க்கையை ஒரு பைட் (Byte) எனப்படும்.
  • 16 பிட்டுகளின் சேர்க்கையை ஒரு வர்ட் (Word) எனப்படும்.
  • 1024 கிலோபைட்டுகள் சேர்ந்தவை Kilobyte (KB) எனப்படும்.
  • 1024 கிலோ பைட்டுகள் சேர்ந்தவை ஒரு Megabyte (MB) எனப்படும். ஒரு மெகாபைட் 1200 எழுத்துக்களாலான 873 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்திற்குச் சமமானது.


  • 1024 மெகா பைட்டுகள் சேர்ந்தவை ஒரு கிகா பைட் Gigabyte (GB)எனப்படும். இதனுள் 200 பக்கங்கள் கொண்ட 4473 புத்தகங்களை அல்லது 3 MB அளவு கொண்ட 341 படங்களை அல்லது 4 MB அளவு கொண்ட 256 பாடல்களைச் அடக்கிவிட்லாம்.


  • 1024 கிகா பைட்டுகள் சேர்ந்தவை ஒரு Terabyte (TB) எனப்படும். ஒரு டெராபைட்டில் 200 பக்கங்கள் கொண்ட 4,581,298 புத்தகங்களை அல்லது 3 MB அளவு கொண்ட 349,525 படங்களை அல்லது 4 MB அளவு கொண்ட 262,144 MP3 பாடல்களைச் சேமிக்கலாம். மேலும் இது 650 MB அளவு கொண்ட 1,613 சீடிக்களுக்கு அல்லது 4.38 GB அளவு கொண்ட 233 டிவிடிக்களுக்கு அல்லது 25GB அளவு கொண்ட 40 ப்ளூரே டிஸ்க்குகளுக்குச் சமமானது.


இந்த பயணம் டெரா பைட்டுடன் நின்று விடவில்லை. Petabyte (PB), Exabyte (EB), Zettabyte (ZB), Yottabyte (YB) என எதிர்காலத்தில் தொடர இருக்கிறது. மேற்சொன்ன உதாரணங்களை நோக்கும் போது நாம் தகவல் யுகத்தில் வாழ்கிறோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

-அனூப்-