Sunday, January 31, 2010

Panda USB Vaccine


Panda USB Vaccine  !


பென் ட்ரைவ், சீடி, டீவிடி போன்ற ரிமூவபல் ட்ரைவ்களை கணினியில் இணைத்ததும் என்ன செய்ய வேண்டும் என் பயனரை வினவும் வசதி விண்டோஸ் இயங்கு தளத்தில் வழங்கப் பட்டுள்ளது. இதற்கு AUTORUN.INF எனும் பைலை விண்டோஸ் பயன் படுத்துகிறது. இந்த ஓட்டோரன் பைல் உரிய ட்ரைவின் ரூட் (root directory) டிரெக்டரியில் சேமிக்கப்படிருக்கும்.

விண்டோஸ் தரும் இந்த் வசதியே தற்போது கணினிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது, இந்த ஓட்டோரன் பைலைப் பயன்படுத்தி கணினியின் இயக்கத்தைப் பாதிக்கச் செய்யும் ஏராளமான வைரஸ் போன்ற மெல்வெயர்களைப் (malware) பரவ விடப்படுகின்றன. இந்த ஓட்டோரன் பைலை மற்றுமொரு ஓட்டோரன் பைல் மூலம் பிரதியீடு செய்து மாற்றி விடும் யுக்தியைப் பயன் படுத்துகிறார்கள். அந்த ஓட்டோரன் பைல் எம்மை அறியாமலேயே மெல்வெயர்களை இயங்க வைக்கிறது. ஏதேனும் ஒரு ரிமூவபல் ட்ரைவை கணினியில் பொருத்தியதுமே மெல்வெயர் தனது செயற்பாட்டை ஆரம்பித்து விடுகிறது. இந்த ஓட்டொரன் பைலினால் பரவும் மெல்வெயர்களுக்கு உதாரணமாக W32/Sality, W32/Virutas போன்ற வேர்ம் எனும் ஒரு வகை வைரஸ்களைக் குறிப்பிடலாம்.

இந்த ஓட்டோரன் பைல் சார்ந்த ஏராளமான மெல்வெயர்கள் தற்போது ஆக்கிரமித்திருப்பதால் இதற்கு தீர்வு தருகிறது Panda USB Vaccine எனும் யூட்டிலிட்டி. இது USB / CD / DVD ட்ரைவ் என எதிலிருந்தும் இயங்கும் ஒட்டோரன் பைல்களை முழுமையாக முடக்கி விடுகிறது. அதாவது எந்த ப்ரோக்ரமோ பைலோ தானாக இயங்குவதை நிறுத்தி விடுகிறது. உதாரணமாக USB போர்டில் பென் ட்ரைவ், டிஜிட்டல் கேமரா, மெமெரி சிப், MP3 ப்லேயர் போன்ற சாதனங்களை இணைத்ததுமே இந்த வெக்சீன் ஓட்டோரன் பைலைத் திறக்கவோ அழிக்கவோ அல்லது பிரதி செய்யவோ முடியாது செய்து விடும். எனினும் ஏனைய பைல்களை எந்த சிக்கலுமின்றி அணுக அனுமதிக்கும்.
பைல் அளவு 828 கிலோ பைட் கொண்ட இந்த Panda USB Vaccine எனும் யூட்டிலிட்டியை www.pandasecurity.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

-அனூப்-

What is Cache Memory?


Cache Memory எனறால் என்ன?

கணினியின் மூளையாக செயற்படும் ப்ரொஸெஸரின் (CPU) உள்ளேயோ அல்லது மத்ர்போர்டில் ப்ரோஸெஸ்ஸரின் அருகிலேயோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) கேஷ் மெமரி எனப்படுகிறது. (Cache எனும் இந்த ஆங்கில வார்த்தை ‘கேஷ்’ என்றே உச்சரிக்கப்படுகிறது என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள்) ஒரு ப்ரோக்ரமை இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்ப பயன் படுத்தப்படும் அறிவுறுத்தல்களை சேமிப்பதற்காகவே சிபியூ இந்த கேஷ் மெமரியைப் பயன் படுத்துகிறது. இதனால் கணினியின் வேகம் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கிறது.

கணினியில் கேஷ் மெமரி பயன் படுத்தப்படுவதன் முக்கிய அனுகூலம் யாதெனில் டேட்டாவைக் கடத்துவதற்கென அமைக்கப் பட்டிருக்கும் மதர்போர்டிலுள்ள சிஸ்டம் பஸ் (system bus) எனும் பாதைகளை சீபீயூ பயன் படுத்த வேண்டிய தேவை அற்றுப் போகிறது. சிஸ்டம் பஸ் ஊடாக டேட்டா பயணிக்கும் போது மதர்போர்டின் செயற்திறனுக்கமைய அதன் வேகம் குறைகிறது. சிஸ்டம் பஸ்ஸில் நெருக்கடி நிலை தோன்றும் சந்தர்ப்பங்களில் அதனைத் தவிர்த்து சீபீயூ கேஷ் மெமரியை அணுகி அதிக வேகத்தில் டேட்டாவைப் ப்ரோஸெஸ் செய்து விடுகிறது.

கேஷ் மெமரியில் இரண்டு வகைகளுள்ளன. சிபியுனுள்ளேயே இணைந்து வரும் கேஷ் மெமரியானது Level 1 (L1) cache எனவும் மதர்பொர்டில் வேறாக பொருத்தப்பட்டுள்ள கேஷ் மெமரியானது Level 2 (L2) cache. எனவும் அழைக்கப்படுகிறது.

சீபியுவினுள்ளேயே பொருத்தப்பட்டிருக்கும் கேஷ் மெமரியானது மதர் போர்டில் தனியாகப் பொருத்தப்பட்டிருக்கும் கேஷ் மெமரி சிப்பை விட வேகமாக செயற்படக் கூடியது. அதாவது ப்ரோஸெஸ்ஸரின் வேகத்திலேயே இது இயங்கும். தனியாகப் பொருத்தப்படும் கேஷ் மெமரியானது பிரதான நினைவகமான் ரேம்மை விட இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கக் கூடியது. எனவே ப்ரோஸெஸ்ஸரிலேயே பொருத்தப் படும் கேஷ் மெமரியே சிறந்தது எனலாம்.

அதிக வேகம் கொண்ட சீபியூ வுடன் குறைந்தளவு கேஷ் மெமரியைப் பயன் படுத்தும்போது கணினி செயற் திறனில் மாற்றத்தை அவதானிக்க முடியாது. மாறாக குறைந்த சீபியு வேகத்துடன் அதிக கேஷ் மெமரியைக் பயன் படுத்தும் கணினிகளின் செயற் திறனில் அதிக மற்றத்தை அவதானிக்க முடியும்.

சீபியுவில் பயன் படுத்தப்படும் கேஷ் மெமரி போன்றே ஹாட் டிஸ்கிலும் டிஸ்க் கேஷ் எனப்படும் தொழில் நுட்பம் பயன் படுத்தப் படுகிறது. அதாவாது ஹாட் டிஸ்கிலிருந்து அடிக்கடி அணுகப்படும் டேட்டாவானது திரும்பத் திரும்ப ஹாட் டிஸ்கிலிருந்தே பெறப்படுவதைத் தவிர்த்து நினைவகத்தின் ஒரு பகுதியில் சேமிக்கப்படும். இங்கு ஹாட் டிஸ்கை விடவும் பிரதான நினைவகம் (RAM) வேகம் கூடியது என்பதனாலேயெ இவ்வாறு ரேமில் தேக்கி வைக்கப்படுகிறது, எனினும் இந்த தொழில் நுட்பம் எதிர் காலத்தில் மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது ஹாட் டிஸ்க் ஆனது ப்ளேஷ் மெமரி கேஷ் (flash memory) உடன் வெளி வர ஆரம்பித்துளளது. இந்த ப்ளேஷ் மெமரி ரேம்மை விடவும் வேகமாக செயற்படக் கூடியது.

-அனூப்-

Sunday, January 24, 2010

Turn your handwriting into a font


உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்!

உங்கள் கையெழுத்தையும் ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றித் தருகிறது fontcapture.com எனும் இணைய தளம். இது ஒரு ஓன்லைன் சேவையாகும்.

இதற்கு  எந்த மென்பொருளும் நிறுவ வேண்டாம். உங்களிடம் ஒரு ப்ரிண்டர், ஸ்கேனர் மற்றும் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும்.

கையெழுத்தை பொண்ட் பைலாக மாற்ற முதலில் www.fontcapture.com எனும் இணைய தளத்திற்குப் பிரவேசியுங்கள். அவர்கள் வழங்கும் பொண்ட் டெம்ப்லேட் (template) பைலை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள். இது PDF பைலாகக் கிடைக்கும். அதனை ப்ரிண்ட் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து அந்த டெம்ப்லேட்டை இணைய தளத்தில் அறிவுறுத்தியிருப்பதன் பிரகாரம் உங்கள் கையெழுத்தால் நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த டெம்ப்லேட்டை ஒரு இமேஜ் பைலாக ஸ்கேன் செய்து மறுபடி அதே இணைய தளத்திற்குச் சென்று (upload) அப்லோட் செய்து விடுங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்கள் கையெழுத்தைக் கொண்ட ஒரு பொன்ட் பைலாக அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

What is TEMP file?

TEMP FILE   என்றால் என்ன?

கணினியில் பணியாற்றும்போது .TMP எனும் பைல் நீட்டிப்பைக் (Extension) கொண்ட பைல்களை நீங்கள் அவ்வப்போது அவதானித்திருக்கலாம். இவற்றை TEMP  டெம்ப் பைல்கள் எனப்படும். என்ன இந்த டெம்ப் பைல்கள்?


டெம்ப் பைல்கள என்பவை அவற்றின் எக்ஸ்டென்சனால் குறிப்பிடப்படுவது போல் அவை தற்காலிக (temporary) பைல்களே. டெம்ப் பைல்களை பொதுவாக நாம் பயன்படுத்தும் எப்லிகேசன்களே உருவாக்கி விடுகின்றன. அதாவது சில எப்லிகேசன்கள் இயங்குவதற்குத் தேவையான தற்காலிக மான சில டேட்டாவை தற்காலிக நினைவகமான ரேமில் (RAM) சேமிக்காமல் நிரந்தரமாகவே ஹாட் டிஸ்கில் சேமித்து விடுகின்றன. நினைவகத்தில் போதிய இடம் இல்லாமல் போகும் போது அல்லது ப்ரோஸெஸ்ஸிங் பணிக்கு உதவு முகமாக இவ்வாறு ஹாட் டிஸ்கில் டெம்ப் பைல்களை சேமித்து விடுகின்றன.

தற்போது பயன்பாட்டிலுள்ள இயங்கு தளங்கள் (Operating Systems) வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) எனும் முறையினைப் பயன் படுத்துகின்றன. அதாவது ஒரு எப்லிகேசன் இயங்குவதற்கு ஒதுக்கப்படும் நினைவகத்தின் அளவை விட அதிகமான நினைவகம் அவசியப் படும்போது பிரதான நினைவகத்துக்குப் பதிலாக ஹாட் டிஸ்கைப் பயன் படுத்துன் வண்ணம் வடிவமைக்கப் படுகின்றன. அதிக நினைவகத்தை பயன் படுத்தும் வீடியோ எடிட்டிங் மென்பொருள்கள் அதிக எண்ணிக்கையிலான டெம்ப் பைல்களை உருவாக்கி விடுகின்றன.

டெம்ப் பைல்களின் தேவை முடிந்ததும் அதனை உருவாக்கும் எப்லிகெசன்களே அவற்றை அழித்து விடும். எனினும் சில வேளைகளில் இந்த டெம்ப் பைல்கள் முறையாக அழிகப்படாமல் ஹாட் டிஸ்கிலேயே தங்கி விடும். இவ்வாறு தினமும் ஹாட் டிஸ்கிலேயே தங்கி விடும்போது ஹாட் டிஸ்கில் இவை அதிக இடத்தைப் பிடித்து ஹாட் டிஸ்கை நிரப்பி விடும். அந்த டெம்ப் பைல்களை உருவாக்கிய எப்லீகேசன் இயங்கிக் கொண்டிருக்கும் போது இடையே எதிர்பராமல் கணினி க்ரேஷ் ஆகி விடுவது அல்லது அந்த எப்லிகேசனை உருவாக்கியவர் டெம்ப் பைல்களை இறுதியில் அழித்து விடும் படியான ப்ரோக்ரம் வரிகளை சேர்க்க மறந்து விடுவது போன்றன இதற்குக் காரணங்களாகும்.

விண்டோஸ் இயங்கு தளத்தில் அனேகமாக டெம்ப் பைல்கள் ஹாட் டிஸ்கில் C:\WINDOWS\Temp எனும் போல்டரில் சேமிக்கப்படும்.. இந்த போல்டரில் மாத்திரமன்றி ஹாட் டிஸ்கில் வெவ்வேறு பகுதிகளிலும் கூட சிதறலாக டெம்ப் பைல்கள் சேமிக்கப்படும்.

அனேகமாக டெம்ப் பைல்கள் கணினியில் மறைந்தே காணப்படும். அவற்றைப் பார்வையிட வேண்டுமாயின் Folder Options தெரிவு செய்ய வரும் டயலொக் பொக்ஸில் Show hidden files and folders தெரிவு செய்து கொள்ள வேண்டும்

டெம்ப் பைல்கள அதிகமாக உருவாக்கும் ஒரு எப்லிகேசனாக இணைய தளங்களைப் பார்வையிட உதவும் இணைய உலாவிகளைக் (Web Browsers) குறிப்பிடலாம். இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் உருவாக்கும் டெம்ப் பைல்கள் C ட்ரைவில் C:\Documents and Settings\(User)\Local Settings\Temporary Internet Files எனும் போல்டரில் பொதுவாக் சேமிக்கப்படும். விண்டோஸில் ஒரு இணைய தளத்தை அணுகும்போது அந்த இனைய தளம் சார்ந்த சில பைல்களை தற்காலிகமாக ஹாட் டிஸ்கில் இந்த Temporary Internet Files எனும் போல்டரிலேயே சேமித்து விடும். அடிக்கடி பார்வையிடும் இணைய தளங்களை முன்னரை விட வேகமாக காண்பிப்பதற்கே இந்த ஏற்பாடு.

இந்த போல்டரும் விண்டோஸில் மறைந்தே (Hidden) காணப்படும். தொடர்ச்சியான இணைய பாவனையின் போது இந்த Temporary Internet Files போல்டரும் ஹாட் டிஸ்கை நிரப்பி விடலாம். எனவே அந்த பைல்களையும் தேவைப் படும் பட்சத்தில் அழித்து விட வேண்டும்.

மைக்ரோஸொப்ட் ஓபிஸ் தொகுப்பைப் பயன் படுத்தும் போதும் டெம்ட் பைல்கள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக எம்.எஸ்.வர்டைப் பயன் படுத்தி ஒரு பைலை ஏதோவொரு பெயரில் சேமித்து விட்டு (Jeesa.doc) தொடர்ந்து அதே பைலில் பணியாற்றும் போது அதே பைல் பெயருடன் ஒரு டெம்ப் பைலும் (Jeesa.tmp) அவ்வப்போது தொடர்ச்சியாக் ஹாட் டிஸ்கில் சேமிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். நீங்கள் அந்த பைலை சேமிக்கு முன்னரே கணினி க்ரேஷ் ஆகி விடும் சந்தர்ப்பத்தில் இந்த டெம்ப் பைலிலிருந்து அந்த பைலை மீட்டுக் கொள்ளவே இந்த வசதி செய்யப் பட்டுள்ளது.

டெம்ப் பைல்களை முறையாக நீக்குவதற்கு விண்டோஸில் Disk Cleanup எனும் யூட்டிலிட்டி இணைந்து வருகிறது. அதன் மூலம் இலகுவாக டெம்ப் பைல்களை நீக்கி விடலாம் விண்டோஸ் எக்ஸ்பீயில் டெம்ப் பைல்களை டிஸ்க் க்ளீன் அப் யூட்டிலிட்டி மூலம் நீக்குவதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

Start → Programs → Accessories → System Tools → Disk Cleanup தெரிவு செய்யுங்கள். அப்போது எந்த ட்ரைவை சுத்தம் செய்ய வேண்டுமென் உங்களிடம் வினவும். உரிய ட்ரைவை தெரிவு செய்ததன் பின்னர் டிஸ்க் க்ளீனப் யூட்டிலிட்டியை இயக்குவதன் மூலம் ஹாட் டிஸ்கில் எவ்வளவு வெற்றிடத்தை மீளப் பெறலாம் என்பதை கணித்து ஒரு டயலொக் பொக்ஸைக் காண்பிக்கும். அங்கு பல தெரிவுகள் இருக்கும் அதிலிருந்தி டெம்பரரி பைல்ஸ் தெரிவு செய்து ஓகே சொல்லி விடுங்கள்.

-அனூப்-


Sunday, January 03, 2010

FUNCTION KEYS


என்ன செய்யும் இந்த FUNCTION KEYS?


கணினி விசைப் பலகையின் மேல் வரிசையில் F1, F2 என பெயரிடப்பட்ட 12 விசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவை (FUNCTION KEYS) பன்ங்ஷன் கீஸ் எனப்படுகின்றன. இந்த பன்ங்ஷன் விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளன..

இந்த பன்ங்ஷன் விசைககள், பயன் படுத்தப்படும் இயங்கு தளத்திலும் எப்லிகேசன் மென்பொருளிலுமே சார்ந்திருக்கின்றன. அதாவது இவை எல்லா எப்லிகேசன்களிலும் எல்லா இயங்கு தளங்களிலும் ஒரே மாதிரியாகத் தொழிற்படுவதில்லை. அதே வேளை சில விசைகள் சில எப்லிகேசன்களில் தனியாக தொழிற் படுவதோடு வேறு சில விசைகள் ALT மற்றும் CTRL விசைகளோடு சேர்த்தே இயக்கப்படும். உதாரணமாக விண்டோஸ் இயங்கு தளத்தில் ALT + F4 விசைகளை அழுத்துவதன் மூலம் இயக்கத்திலிருக்கும் ஒரு எப்லிகேசனை நிறுத்தி விட முடியும். .

விண்டோஸ் இயங்கு தளத்தில் மேலே குறிப்பிட்டது போல் எல்லா எப்லிகேசன்களும் பங்க்ஷ்ன் விசைகளை ஆதரிப்பதில்லை. அதே வேளை சில விசைகள் எந்த செயற்பாடுகளும் வழங்கப் படாமலும் உள்ளன

பங்க்ஷ்ன் விசைகளில் சில பொதுவான தொழில்கள் கீழே விவரிக்கப்படுகின்றன.

F1
இந்த விசை அனேகமாக எந்த எப்லிகேசனிலும் அதற்குரிய உதவிக் குறிப்புகளடங்கிய பைலை வர வழைக்கும். அதே வேளை எந்த எப்லிகேசனும் திறக்கப்படாத நிலையில் இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸுக்குரிய ஹெல்ப் பைல் திறந்து கொள்ளும். எம்.எஸ் வர்ட்டில் இந்த விசையை அழுத்த டாஸ்க் பேன் (Task Pane) திறந்து கொள்ளும். அதிலிருந்து உதவிகள் பெறலாம்.

F2
விண்டோஸில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு பைலின் அல்லது போல்டரின் பெயரை மாற்ற (rename) இந்த விசை பயன்படும்., எம்.எஸ். வர்டில் Alt + Ctrl + F2 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தும் போது open டயலொக் பொக்ஸ் திறக்கும்.

F3
இதனை அழுத்தும்போது கணினியில் பைல் போல்டர்களைத் தேடித் தரும் Search விண்டோ திறந்து கொள்ளும். எம்.எஸ். வர்டில் Shift + F3 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் வாக்கியமொன்றின் ஆரம்பத்தில் ஆங்கில பெரிய எழுத்தில் (upper case) உள்ளதை சிறிய எழுத்தாகவும் (lower case) சிறிய எழுத்திலுள்ளதை பெரிய எழுத்தாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

F4
விண்டோஸில் எந்த தொழிற்பாடையும் செய்வதில்லை. எம்.எஸ். வர்டில் இறுதியாகச் செய்த வேலையை மறுபடி செய்யும். Alt + F4 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் தற்போது இயக்கத்திலிருக்கும் எப்லிகேசனை நிறுத்தி விடலாம். எப்லிகேசன் எதுவும் திறந்திறாத நிலையில் Alt + F4 விசைகளை அழுத்தி விண்டோஸ் இயக்கத்தையும் நிறுத்த முடியும்.


F5
விண்டோஸில் இந்த விசையை அழுத்தி ஒரு விண்டோவின் உள்ளடக்கத்தை Refresh செய்து புதுப்பிக்கலாம். அனேகமான வெப் பிரவுஸர்களில் ஒரு இணைய பக்கத்தைப் புதுப்பிக்கவும் இந்த விசையே பயன் படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பக்கத்தை மறுபடி ஆரம்பத்திலிருந்து தோன்றச் செய்யலாம். . எம்.எஸ். வர்டில் இந்த விசை அழுத்தி Find & Replace டயலொக் பொக்ஸை வர வழைக்கலாம். எம்.எஸ்.பவர் பொயிண்டில் இந்த விசையை அழுத்தி ஸ்லைட் ஷோவை இயக்க முடியும்.

F6
இண்டர் நெட் எக்ஸ்ப்லோரர் மற்றும் மொஸில்லா பயபொக்ஸ் பிரவுசர்களில் கர்சரை எட்ரஸ் பாரை நோக்கி நகர்த்தலாம். Ctrl + Shift + F6 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் திறந்து வைத்துள்ள எம். எஸ். வார்ட் ஆவணங்களில் மாறிக் கொள்ள முடியும். .

F7
எம்.எஸ். வர்ட் மற்றும் பவர்பொயின்ட் மென் பொருள்களில் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் கண்டறிந்து சரி செய்யக் கூடிய டயலொக் பொக்ஸ் தோன்றும் .

F8
இந்த விசையை விண்டோஸ் இயங்க ஆரம்பிக்கு முன்னர் அழுத்துவதன் மூலம் விண்டோஸ் ஸ்டாட்-அப் மெனுவை வர வழைக்கலாம். விண்டோஸ் ஆரம்பிப்பதில் சிக்கல் தோன்றும் போது அதனை சேப் மோடில் (Safe Mode) இயக்க இந்த விசையே பயன் படுத்தப்படுகிறது. .

F9
இந்த விசையை அழுத்தும்போது விண்டோஸில் எந்த இயக்கமும் நடை பெறாது.

F10
விண்டோஸில் திறந்திருக்கும் எந்த எப்லிகேசனிலும் மெனுபாரை இயக்க நிலைக்கு மாற்றி (activate) அதன் மூலம் கீபோர்டைக் கொண்டே மேலும் தெரிவுகளை மேற்கொள்ளலாம். அத்தோடு Shift + F10 விசைகளை ஒரே நெரத்தில் அழுத்துவதன் மூலம் ரைட் க்ளிக் செய்யும் போது தோன்றும் கண்டெக்ஸ்ட் மெனுவை வர வழைக்கலாம்.

F11
அனேகமான இணைய உலாவிகளில் (வெப் பிரவுஸர்) முழுத் திரையைத் தோன்றச் செய்யும்.

F12
எம்.எஸ். வர்டில் Save as விண்டோவை வர வழைக்கும். அத்தோடு Shift + F12 விசைகளை அழுத்தும் போது வர்டில் ஆவணமொன்று சேமிக்கப்படும். Ctrl + Shift + F12 விசைகளை அழுத்தி Print டயலொக் பொக்ஸை வர வழைக்கும்

விண்டோஸில் எல்லா பங்க்ஷன் விசைகளும் பயன் படுவதில்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்திருக்கலாம். (உதாரணம்: F9) எனவே இதனை சாதகமாகப் பயன் படுத்தி நீங்கள் விரும்பும் ஒரு எப்லிகேசனுக்கு அந்த விசையை ஒதுக்கி விட முடியும், அதன் மூலம் குறிப்பிட்ட அந்த பங்ஷன் விசையை அழுத்தி ஒரு எப்லிகேசனைத் திறந்து கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

டெஸ்க் டொப்பில் அல்லது ஸ்டாட் மெனுவில் இருக்கும் நீங்கள் விரும்பிய எப்லிகேசனுக்குரிய ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் . மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Shortcut டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Shortcut Key எனுமிடத்தில் நீங்கள் விரும்பிய பங்க்ஷன் கீயை அழுத்தி ஓகே செய்து விடுங்கள்.

-அனூப்-