Sunday, May 30, 2010

Sweet Home 3D


Sweet Home 3D

ஸ்வீட் ஹோம் த்ரீ-டீ (Sweet Home 3D) என்பது ஒரு இல்ல அலங்கார மென் பொருள். இது உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு தளபாடத்தையும் எவ்வாறு பொருத்தமான இடத்தில் வைத்து ஒழுங்கு படுத்தலாம் என்பதைக் கற்றுத் தருகிறது. வீட்டின் எப்பகுதியிலிருக்கும் தளபாடங்களையும் வேறு இடங்களுக்கு நகர்த்தினால் எவ்வாறு தோறறமளிக்கும் என்பதை அவற்றை நகர்த்தாமலேயே இந்த ஸ்வீட் ஹோம் மூலம் த்ரீ-டீ இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

இந்த “இனிய இல்லத்தில்” 75 வெவ்வேறு விதமான தளபாட மாதிரிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வைத்துப் பொருத்தம் பார்க்கலாம். அத்தோடு உங்கள் வீட்டின் அறைகளின் நீள அகலம் போன்ற அளவுகளையும் அவற்றில் வைக்கப்பட்டுள்ள தளபாடங்களின் விவரங்களையும் கொண்டு புதிதாக ஒரு ஒரு வீட்டு மாதிரி ஒன்றைக் கூட உருவாக்கி விடலாம். அதாவது நீங்களே உங்கள் வீட்டுக்கான கட்டடக் கலஞராக மாறலாம்.

வடிவமைக்கும் வீட்டை முப்பரிமாணத்தில் (3D) தோன்றச் செய்தல், தோற்றமளிக்கும் கோணத்தை மாற்றியமைத்தல் படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தல் போன்றன ஸ்வீட் ஹோமில் அடங்கியுள்ள சிறப்பம்சங்களாகும். அத்தோடு வீட்டு வ்டிவமைப்பு மாதிரியை ஒரு வீடியோ பைலாக சேமித்துக் கொள்ளவும் முடியும்.

எளிய இடை முகப்பைக் கொண்ட இதனை சாதாரண கணினிப் பயனரும் இலகுவாகக் கற்றுக் கொள்ளலாம். உங்கள் கற்பனையில் தோன்றும் வீட்டு அலங்காரத்தை அப்படியே கணினித் திரையில் நிஜமாக்கிப் பார்க்கலாம். வீட்டு அலங்காரத்தில் உங்கள் திறமையைக் கூட இதன் மூலம் வளர்த்துக் கொள்ளலாம். ஸ்வீட் ஹோம் த்ரீ-டீ ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருளாகும். பைல் அளவு 30 எம்.பி கொண்ட இந்த மென்பொருளை sweethome3d.eu எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். ஸ்வீட் ஹோமில் பணியாற்றுவதற்கான ஏராளமான தளபாட மாதிரி உருவங்களையும் இணையத்திலிருந்து டவுன் செய்து கொள்ள முடியும்.

ஸ்வீட் ஹோமில் பணியாற்றுவது கடினம் என நினைப்பவர்கள், இந்த இணைய தளத்திலிருக்கும் வீடீயோ பாடத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டாலே போதும். அதன் மூலம் இலகுவாகக் கற்றுக் கொள்ளலாம். இதே இணைய தளத்தில் பயனர் வழிகாட்டியும் தரப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஸ்வீட் ஹோம் மென்பொருளை வைத்து நாளைக்கே நீங்களும் ஒரு கட்டடக் கலைஞர் தொழில் பார்க்கலாம் என்றெல்லாம் கற்பனை பண்ணதீர்கள். இது ஒட்டோ கேட் (Auto CAD) போன்று ஒரு மேம்பட்ட தொழில் ரீதியாகப் பயன்படுத்தக் கூடிய மென்பொருளல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

-அனூப்-

Chkdsk - to find errors in your hard disk

ஹாட் டிஸ்கில் பிழைகள் கண்டறிய -   Chkdsk

பழுதடைந்த பைல்கள் மற்றும் போல்டர்களைப் பரீட்சித்து அவற்றைச் சீரமைப்பதற்கும் ஹாட் டிஸ்கில் உள்ள பழுதடைந்த செக்டர்களைக் கண்டறிந்து அவற்றை வேறாக்கி விடுவதற்கான ஒரு யூட்டிலிட்டியே Chkdsk. இந்த செக் டிஸ்க் யூட்டிலிட்டி அன்றைய எம்.எஸ்.டொஸ் காலம் முதல் இன்றைய விஸ்டா வரை விண்டோஸின் எல்லாப் பதிப்புகளிலும் தவறாது இடம் பெற்று விடுகிறது.

எம்.எஸ். டொஸ்ஸில் Chkdsk எனப் பெயரிடப்பட்டிருந்த செக் டிஸ்க் யூட்டிலிட்டி விண்டோஸ் 9x மற்றும் விண்டோஸ் மீ பதிப்புகளில் Scandisk எனப் பெயரிடப்பட்டது. பின்னர் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா பதிப்புகளில் மறு படியும் அது Chkdsk என்றே பெயர் மாற்றப்பட்டது.

செக்டிஸ்க் யூட்டிலிட்டி ஹாட் டிஸ்கின் பௌதிக கட்டமைப்பைப் பரிசோதித்து அது சிறந்த நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்கிறது. ஹாட் டிஸ்கில் உருவாகும் பழுதடைந்த செக்டர்கள், இழக்கப்படும் க்லஸ்டர்கள், தவறான பைல் இணைப்புகள் மற்றும் போல்டர் கட்டமைப்பில் ஏற்படும் பிழைகள் போன்றவற்றைக் கண்டறிந்து சீரமைத்து விடுகிறது.

திடீரென் கணினி இயக்கம் நின்று போதல், கனிணி எந்த வித அசைவுமின்றி உறைந்து போதல், மின்சார இணைப்பில் ஏற்படும் கோளாறுகள், கணினியை முறையாக சட்டவுன் செய்யர்து விடல் என ஹாட் டிஸ்கில் பிரச்சினைகள் தோன்றுவதற்குப் பல காரணிகள் உள்ளன.

ஹாட் டிஸ்கிலுள்ள டேட்டாவைப் படிக்கும் / பதியும் ஹெட்டானது டேட்டா பதியப்படும் தளத்தில் வந்து மோதும் வன்ணம் ஹாட் டிஸ்கில் அதிர்வுகள் ஏற்படுதல் செக்டர்கள் பழுதடையக் காரணமாக அமைந்து விடுகின்றது. ஹாட் டிஸ்கில் இவ்வாறான பழுதுகள் ஒரு முறை ஏற்பட்டதும் அதன் தொடர்ச்சியான பாவனையில் மேலும் பழுதாகி விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே ஹாட் டிஸ்கை குறிப்பிட்ட கால இடை வெளிகளில் செக் டிஸ்க் யூட்டிலிட்டி மூலம் பரிசோதித்துக் கொள்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஹாட் டிஸ்கின் செயல் திறன் குறைந்து வருகிறது என்பதையும் செக் டிஸ்க் எதிர்வு கூறிவிடுகிறத்து. ஹாட் டிஸ்க் தொடர்ச்சியான பாவனையில் படிப்படியாக தேய்மானம் அடைந்து செக்டர்கள் பழுதடைந்து விடுகின்றன. செக் டிஸ்க் பழுதடைந்த செக்டர்களைக் கணடறியுமானால் ஹாட் டிஸ்கை மாற்றிக் கொள்ள வேண்டிய காலம் அருகில் வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

செக் டிஸ்க் யூட்டிலிட்டியை கமாண்ட் லைன் இடை முகப்பிலோ அல்லது கிரபிக்கல் இடை முகப்பிலோ இயக்க முடியும். கிரபிக்கல் இடை முகப்பில் இயக்குவதற்கு மை கம்பியூட்ட்ர் ஐக்கனைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு தோன்றும் ஹாட் டிஸ்க் ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Tools டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Error-checking எனும் பகுதியில் உள்ள Check now பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது ஒரு சிறிய டயலொக் பொக்ஸ் தோன்றும். அதில் Automatically fix file system errors என்பதைத் தெரிவு செய்ய டிஸ்ட் செக்கிங் செய்யற்பாடு ஆரம்பிக்கப்படும். நினைவில் கொள்ளுங்கள்.

-அனூப்-

Sunday, May 23, 2010

Dfference between Bluetooth and Wi-Fi?

Bluetooth Vs Wi-Fi  – என்ன வேறுபாடு?


செல்லிடத் தொலைபேசி போன்று செல்லிடக் கணினியும் (mobile computers) தற்போது பரவலாகப் பயன்பாட்டில் வந்துள்ளது.. அதற்கேற்றாற் கம்பியில்லாத் தொடர்பாடல் தொழில் நுட்பமும் வேகமாக வளர்ந்து வருகின்றது. அமர்ந்த இடத்திலிருந்தே வயர் இன்றி கணினி மற்றும் கணினி சார்ந்த சாதனங்களிடையே தொடர்பாடல் மேற்கொள்ளவே கணினிப் பயனர் பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக பெரிய வர்த்தக நிறுவனங்களில் கம்பியில்லாத் தொடர்பாடல் முறை பெரிதும் வரவேற்கப்படுகிறது. வயறின்றி ஏனைய கணினிகளுடன் இணைக்கும் வசதியுடன் கூடிய மடிக்கணினிகளும் தற்போது அதிகளவில் பயன் படுத்தப்படுகின்றன. நீங்கள் ஒரு மடிக் கணினி அல்லது கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துபவரா? அப்படியனால் ப்லூடூத், வைபை போன்ற வார்தைகளையும் நீங்கள் கேட்டிருக்கலாம். பயன்படுத்தியும் இருக்கலாம். இந்த இரண்டு தொழில் நுட்பங்களும் என்ன செய்கிறன? எந்த வகையில் அவை வேறு படுகின்றன?

ப்லூடூத் - வைபை இவை இரண்டுமே கம்பியில்லா கணினி வலையமைப்புக்கான தொழில் நுட்பங்களே இவை கம்பிகளுக்குப் பதிலாக வான் அலைகளை (Radio Frequency) மூலம் வலையமைப்பை உருவாக்குகின்றன.. இவையிரண்டும் 2.4 Ghz அலைவரிசையில் செயல்பட்டாலும் அவை பயன் படுத்தப்படும் விதத்தில் மாறுபட்டு நிற்கின்றன. வைபை தொழில் நுட்பத்தின் பிரதான நோக்கம் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களில் கம்பியில்லா அதிவேக இணைய இணைப்பைப் பெறுவதே என கடந்த வாரம் பார்த்தோம். எனினும் ப்லூடூத் தொழில் நுட்பத்தின் பிரதான பயன்பாடு ஒரு தனி நபர் சார்ந்த வலயமைப்பை உருவாக்குவதாகும். .

அதாவது ஒரு தனி நபருடைய கணினியோடு கையடக்கத் தொலைபேசி ப்ரிண்டர், கேமரா போன்ற சாதனங்களை குறுகிய ஒரு வீச்சினுள் வயரின்றி இணைத்து அவற்றிற்கிடையே டேட்டாவைப் பரிமாறிக் கொளவதாகும். இவ்வாறான இணைப்பை Personal Area Network (PAN) என அழைக்கப்படும்.

உதாரணமாக ப்லூடூத் வசதி கொண்ட ஹெட்செட்டைப் (hands free) பொருத்துவதன் மூல்ம் வாகனமொன்றைச் செலுத்தியவாறோ அல்லது தங்கள் வேலையில் எந்த இடையூறுமில்லாமலே செல் போன் அழைப்புக்கு செவி மடுக்க முடிகிறது. அது மட்டுமல்லாமல் ப்லூடூத் மூலம் ஒரு செல்போனைக் கணினியில் இணைத்து பைல் பரிமாற்றம். செய்தல், மற்றும் செல்போனிலிருந்து இணையத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற வசதிகளையும் பெறலாம்.

ப்லூடூத் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தும்போது முதலில் அந்த சாதனங்களை ஒன்றோடொன்று இணைக்க வேண்டும். இதனைப் pairing என்ப்படும். அவ்வாறு இரண்டு சாதனங்களைப் பெயார் செய்யும் போது அவற்றில் ஒரு சாதனம் மற்றைய ப்லூடூத் வசதி கொண்ட சாதனத்தைத் தேடிக் கண்டறிய வேண்டும். குறிப்பிட்ட வீச்சினுள் தேடிக் கண்டறிந்து கொள்ளும். அடுத்த ப்லூடூத் சாதனத்தை அதன் திரையில் காண்பிக்கும். அவ்வாறு கண்டறியும் சாதனத்துடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு பாஸ்கீ எனும் ஒரு இலக்கத்தை அழுத்த வேண்டும். இரண்டு சாதனத்திலும் ஒரே பாஸ்கீ (passkey) வழங்கி அது ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் இரண்டு சாதனங்களும் தொடர்பாடலை மேற்கொள்ள முடியும்..

- தற்போது மடிக் கணினிகள் வைபை மற்றும் ப்லூடூத் இணைப்புக்கான வசதியுடனேயே தயாரிக்கப்படுகின்றன. உங்கள் கணினியில் ப்லூடூத் / வைபை வசதி இல்லை எனின் வைபை அடெப்டர் போன்று ப்லூடூத் எடப்டரைப் புறம்பாக பொருத்திக் கொள்ளலாம். இதனை Dongle -டொங்கில் எனவும் அழைக்கப்படும். - வைபை இணைப்பில் பொதுவாக கணினிகளே இணைக்கப்படுகின்றன. அதிவேக இணைய இணைப்பு தவிர வைபை மூலம் பைல், ப்ரோக்ரம் போன்ற மென்பொருள்களையும் ப்ரிண்டர், ஸ்கேனர் போன்ற வன்பொருள்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

- வைபையை விடவும் ப்லூடூத் தொழில் நுட்பம் பயன் படுத்துவது எளிமையானது, ஏனெனில் வைபை தொழில் நுடபத்தைச் செயற்படுத்த ரூட்டர், மோடெம் போன்ற சாதங்களை நிறுவுதல் அவற்றில் செட்டிங் மாற்றியமைத்தல் போன்ற பல செயற்பாடுகள் உள்ளன. அவ்வாறே மற்றுமொரு கணினியிலிருந்து வளங்களைப் பரிமாறிக் கொள்ளும்போதும் சில செட்டிங் மாற்றியமைக்க வேண்டியுள்ளது.. ப்லூடூத்தில் இது போன்ற சிரமங்கள் இல்லை.

- ப்லூடூத் தொழில் நுட்பம் 30 முதல் 100 அடிகள் வரையிலான மிகவும் குறுகிய வீச்சினுள்ளேயே டேட்டாவைக் கடத்துகிறது. எனினும் வைபை சிக்னல் அதனை விட அதிகமாக 800 அடிகள் அல்லது அதற்கு மேலும் செல்லத்தக்கது.

- ப்லூடூத் மற்றும் வைபை என்பன அவற்றிற்கேயுரிய ப்ரொட்டோகோல எனும் விதிமுறைகளைக் கொண்டுள்ளன. தற்போது ப்லூடூத் தொழில் நுட்பம் அதன் நான்காம் பதிப்பை அடைந்துள்ளது. அதேவேளை வைபை தொழில் நுட்பத்தில் அண்மைய பதிப்பாக (வர்யர்லெஸ் என்) 802.11n, எனும் விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது.


- ஏராளமான டெஸ்க்டொப் மற்றும் மடிக் கணினிகளை வைபை மூலம் இணைத்து ஒரு கம்பியில்லா உள்ளக வலையமைப்பை Local Area Network (LAN) உருவாக்கி விடலாம். எனினும் ப்லூடூத் கொண்டு ஒரு உள்ளக வலையமைப்பை உருவாக்க முடியாது. இதன் மூலம் தனி நபர் கணினி வலயமைப்பே உருவாக்கப்படுகிறது.

- வைபை இணைப்பில் 802.11g எனும் பதிப்பில் டேட்டா பரிமாறும் வேகமானது 54 Mbps அளவில் செயல்படுகிறது. எனினும் ப்லூடூத் இணைப்பின் பதிப்பு ஒன்றில் வேகமானது 1 Mbps அளவிலேயே செயல்படுகிறது.

வைபை – ப்லூடூத், இரண்டுக்குமிடையில் பல வேறுபாடுகள் இருந்தாலும் இந்த இரண்டு தொழில் நுட்பங்களும் பயன்மிக்கவை. பரவலாக பயன்பாட்டிலுள்ளவை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

-அனூப்-

Sunday, May 16, 2010

What is Wi-Fi?

Wi-Fi என்றால் என்ன?


கணினி மற்றும் கணினி சார்ந்த உபகரணங்களிடையிலான கம்பியில்லாத் தொடர்பாடலைக் குறிக்கும் ஒரு சொல்லே (Wi-Fi) வைபை. இந்த Wi-Fi எனும் வார்த்தை Wireless Fidelity எனும் இரு வார்த்தைகளிலிருந்து உருவானது. வைபை இணைப்பில் கம்பிகளுக்குப் பதிலாக வழமையான ரேடியோ அலைகளே டேட்டாவை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் பயன் படுத்தப்படுகிறது.

கம்பி மூலம் இணைக்கப்பட்ட உள்ளக வலயமைப்பை LAN என்பது போல் கம்பியில்லா இந்த உள்ளக வலையமைப்பை WLAN (Wireless Local Area Network) எனப்படுகிறது.

நீங்கள் அதி வேக இணைய இணைப்பைப் பெறுவதற்கு கம்பியில்லா ரவுட்டர் (Router) சாதனம் பயன்படுத்துவதாயிருந்தால் நீங்களும் வைபை பயன் படுத்துகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

செல்போன், தொலைக் காட்சி, வானொலி போன்று இந்த கம்பியில்லா வைபை தொழில் நுட்பத்தில் ரேடியோ அலைகள் பயன் படுத்தப்படுகின்றன.. இதற்கு 2.4GHz அலை வரிசை பயன் படுத்தப்படுகிறது. எனினும் வனொலி, தொலைக் காட்சி போலன்றி இந்த வயர்லெஸ் நெட்வர்கில் (Wireless Network) இரு வழித் தொடர்பாடலே நடைபெறுகிறது. இதனை Full-Duplex எனப்படும்.

1998 ஆம் அண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வைபை தொழில் நுட்பமானது இன்று வரை பல வளர்ச்சிப் படிகளைத் தாண்டி வந்துள்ளது. தற்போதைய வைபை தொழில் நுட்பத்தில் 300 முதல் 600 அடிகள் அல்லது அதனையும் தாண்டி டேட்டா கம்பியின்றிப் பயணிக்கிறது.

வயரில்லாமல் எங்கிருந்தும் இணையத்தை அணுகக் கூடிய வசதியே வைபை வலையமைப்பின் பிரதான பயனாகக் கருதப்படுகிறது. தற்போது மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசி போன்ற இடத்துக்கிடம் எடுத்துச் செல்லத்தக்க பல இலத்திரனியல் சாதனங்கள் வைபை வசதியுடன் வெளி வருகின்றன. அதன் மூலம் வைபை ரூட்டர் பயன் படுத்தப்படும் குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் எங்கிருந்தும் வயரில்லாமலேயே இணையத்தை அணுக முடியும்.

ஒரு வைபை ரூட்டருடன் இணைப்பை ஏற்படுத்த வேண்டுமானால் ஒரு கணினியில் வைபை சிக்னலை அனுப்ப மற்றும் பெறக்கூடிய வைபை அடெப்டர் (Wireless Adapter) எனும் சாதனம் பொருத்தப்படல் வேண்டும். தற்போது வெளிவரும் மடிக் கணினிகள் வைபை அடெப்டர் கார்டுடன் தயாரிக்கப்படுகின்றன. உங்கள் கணினியில் வைபை வசதி இல்லையெனில் யூ.எஸ்.பி போர்டில் பொருத்தக் கூடிய வைபை அடெப்டரை வாங்கிப் பொருத்தலாம்.,

கணினியிலுள்ள வயர்லெஸ் அடெப்டரானது டேட்டாவை ரேடியோ சிக்னலாக மாற்றி எண்டெனா மூலம் அனுப்புகிறது. இந்த சிக்னலைப் பெற்றுக் கொள்ளும் வயர்லெஸ் ரூட்டரானது அதை டீகோட் (decode) செய்து மறுபடியும் இணையத்துடன் வயர்மூலம் தொடர்பு கொள்கிறது. இதே செயற்பாடு மறுதலையாகவும் நடை பெறுகிறது. அதாவது இணையத்திலிருந்து பெறும் தகவலை ரூட்டரானது ரேடியோ சிக்னலாக மாற்றி கணினியிலுள்ள வயர்லெஸ் அடெப்டரை நோக்கி அனுப்புகிறது.

வைபை சிக்னல் கிடைக்கப்பெறும் இடங்களை வைபை hotspotஎனப்படும். இந்த வைபை ஹொட்ஸ்பொட்டிலிருந்து இலவசமாகவோ அல்லது கட்டணம் செலுத்தியோ இணையத்தில் இணைந்து கொள்ளலாம். ஒரு ஹொட் ஸ்பொட்டில் இருந்து இணைய சேவையைப் பெறுவதற்கு கணினியில் வயர்லெஸ் எடப்டரைப் பொருத்தியிருக்க வேண்டும். அதன் மூலம் வர்யர்லெஸ் இணைய சேவை உள்ள இடங்கள் கண்டறியப்படுகிறது.
பொது மக்கள் பாவனைக்கென வழங்கப்படும் வைபை ஹொட் ஸ்பொட் டுகளை கட்டணமின்றி அணுக முடியும். கட்டணம் செலுத்தி அணுககக் கூடிய ஹொட் ஸ்பாட்டுகள் பாஸ்வர்ட் கொண்டு பாதுகாக்கப்பட்டிருக்கும்.

ஒரே நேரத்தில் பல பேர் இந்த வைபை இணைப்பைப் பயன்படுத்தி இணைய சேவையைப் பெறலாம். எனினும் அதிக அளவிளான இணைப்புகள் ஏற்படுத்தப்படும்போது டேட்டா பயணிப்பதில் குறுக்கீடுகளும் வேகத்தில் மந்த நிலையையும் உணரப்பபட வாய்ப்புள்ளது. 


கம்பியில்லா கணினி வலயமைப்பைக் குறிக்கும் வைபை தொடர்பாடலிலும் பல விதிமுறைகள் உள்ளன. இவற்றுள் 802.11 என்பது Institute of Electrical and Electronics Engineers (IEEE) எனும் நிறுவனத்தினரால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு விதி முறையாகும். இந்த விதிமுறைகள் 802.11a, 802.11b, 802.11g, 802.11n என பல வளர்ச்சிப் படிகளைத் தாண்டி வந்துள்ள்ன. 802.11n (வயலெஸ் என்) என்பது 2009 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வரையறுக்கப்பட்டதாகும்.

இந்த Wireless  n  - ஆனது 2.4GHz அல்லது 5 GHz அலை வரிசையில் டேட்டாவைக் கடத்துகிறது. இது இதற்கு முந்திய விதிமுறைகளை விட அதிக வேகமாகவும். அதிக தூரம்செல்லத்தக்கதாகவும். உருவாக்கப்பட்டுள்ளது.

கம்பியில்லா வலையமைப்பை இப்போது பலரும் பரவலாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். வீடுகளில் மட்டுமன்றி நூல் நிலையங்கள், .பல்கலைக் கழகங்கள், விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் போன்ற பல இடங்களில் இந்த கம்பியில்லாத் தொழில் நுட்பம் பயன் படுத்தப் படுகிறது.

வைபை தொழில் நுட்பத்தின் மூலம் மூலம் இலகுவாக இணையத்தில் இணையும் வசதி கிடைத்தாலும் உரிய பாதுகாப்பு இல்லையெனின் அதன் அருகாமையில் உள்ள எவரும் இந்த வலயமைப்பில் இணைந்து கொள்ளலாம் என்பதை ஒரு பாதகமான விடயமாகக் கருதலாம்.

வைபை தொழில் நுட்பமானது தொடர்பாடலில் பெரிய அளவிலான பங்கை வகிக்க ஆரம்பித்துள்ளதுடன் உலகெங்கும் உள்ளக கணினி வலையமைப்பு களில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
-அனூப்-

Sunday, May 09, 2010

How to restrict others from using your drives


ட்ரைவ்களை பிறர் அணுகாமல் தடுப்பது எப்படி?

ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் கணினியிலுள்ள ஹாட் டிஸ்க் டரைவ், சீடி ரொம் டரைவ் போன்றவற்றை பிறர் அணுகாத வண்ணம் தடுப்பதற்கான வசதி விண்டோஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் செவன் பதிப்புகளில் உள்ளது. இவ்வாறு தடுப்பதன் மூலம் ஏனையோர் கணினியில் (ஹாட் டிஸ்க் ட்ரைவில்) சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான பைல்களைத் அனுமதியின்றி திறந்து பார்க்காமலோ அல்லது அவற்றை அழித்து விடாமலோ பாதுகாக்க முடியும்.

ட்ரைவ்களை பிறர் அணுகுவதைத் தடுப்பதற்குப் பின்வரும் வழி முறையை கையாளுங்கள். முதலில் ஸ்டார்ட் மெனுவில் ரன் தெரிவு செய்து வரும் ரன் பொக்ஸில் gpedit.msc என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். அப்போது தோன்றும் Group Policy விண்டோவின் இடது புறம் User Configuration \ Administrative Templates \ Windows Components ஊடாக Windows Explorer தெரிவு செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலது புறம் Setting என்பதன் கீழ் Prevent access to drives from My Computer தெரிவு செய்து அதன் மேல் இரட்டை க்ளிக் செய்யுங்கள்.

அப்போது தோன்றும் விண்டோவில் Setting டேபின் கீழ் Enable தெரிவு செய்யுங்கள். பின்னர் அதன் கீழுள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் க்ளிக் செய்து வரும் ட்ரொப் டவுன் லிஸ்டிலிருந்து விரும்பிய ஒரு ட்ரைவையோ அல்லது எல்லா ட்ரைவ்களையுமோ தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள். கணினியை மறுபடி இயக்காமலேயே உடனடியாகவே நீங்கள் செய்த மாற்றங்களை விண்டோஸ் எற்றுக் கொள்ளும். ஆனால் Restricting all drives தெரிவு செய்வதன் மூலம் அடுத்தவர்களால் கனினியிலுள்ள CD / DVD மற்றும் பென் ட்ரைவ்களையும் அணுக முடியாது போய் விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இவ்வாறு ட்ரைவ்களை அணுக முடியாது செய்த பின்னர் வேறொரு நபர் கணினியில் மை கம்பியூட்டர் திறக்கும்போது அங்கு கணினியிலுள்ள ட்ரைவ்கள் அனைத்தையும் காண்பிக்கும். எனினும் அவற்றைத் திறக்க முற்படும் போது ஒரு பிழைச் செய்தியைக் காண்பித்து திறக்க அணுமதிக்க மறுக்கும்.
மேற் சொன்ன Local Group Policy விண்டோ மூலம் உங்கள் கணினியை நிர்வகிப்பதற்கான ஏராளமான தெரிவுகள் உள்ளன. இதன் மூலம் பல பேர் பயன் படுத்தும் ஒரு கணினியை இலகுவாகப் பாதுகாக்க முடியும்.
-அனூப்-


Autorun Eater

Autorun Eater

கணினி இயக்கத்தைப் பாதிக்கும் அதிக எண்ணிக்கையிலான மெல்வெயர்கள் (Malware) பென் ட்ரைவ் போன்ற ரிமூவவபல் மீடியா மூலம் பரவுகின்றன. autorun.inf எனும் பைலைப் பயன் படுத்தி இந்த மெல்வயர்கள் பரப்பப்படுகிறன.
இந்த மெல்வெயரினால் பாதிக்கப்பட்ட ஒரு பென் ட்ரைவை கணினியில் நுளைக்கும்போது ஓட்டோரன் பைலானது ஒடோ-ப்லே மெனுவைக் காண்பிக்கிறது. அதனை திறப்பதால் எற்படும் விபரீதத்தை உணராத ஒரு கணினிப் பயனர் உடனடியாக அதனை ஓகே செய்து விட எமது கணினியிலும் இந்த மெல்வெயார் புகுந்து விடுகிறது. அல்லது அந்தப் பென் ட்ரைவை இரட்டைக் க்ளிக் செய்து திறக்க முற்படும்போது கூட மெல்வெயர் நமது கணினியில் பிரவேசிது விடும்.

அனேகமான மெல்வெயர் எதிர்ப்பு மென்பொருள்கள் இவற்றைக் கண்டறிந்ததுமே உடனடியாக நீக்கிவிடும். எனினும் இந்த ஓட்டோரன் பைலை மட்டும் விட்டு வைக்கும்.

எனவே இது போன்ற விபரீதங்களைத் தவிர்க்கு முகமாக நமக்கு உதவுகிறது Autorun Eater எனும் மெல்வெயர் எதிர்ப்பு மென்பொருள் கருவி. இதன் மூலம் பென் ட்ரைவ் போன்ற ரிமூவபல் ட்ரைவிலிருந்து மட்டுமல்லாமல் ஹாட் டிஸ்கிலிருந்தும் சந்தேகத்துக்குறிய autorun.inf பைல்களைப் பரிசோதித்து நீக்கி விட முடிகிறது.

இந்த ஒட்டோரன் ஈட்டரை www.softpedia.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

-அனூப்-



Rotate your text in any direction


டெக்ஸ்டை விரும்பிய கோணத்தில் திருப்புவதற்கு

எம்.எஸ்.வர்டில் வர்ட் ஆட், டெக்ஸ் பொக்ஸ் போன்றவற்றை விரும்பிய கோணத்தில் இலகுவாக திருப்பலாம் என்பது நீங்கள் அறிந்ததே. எனினும் சாதாரணமாக டைப் செய்த ஒரு டெக்ஸ்டை திருப்ப உங்களால் முடியுமா? அதற்கும் வழி சொல்கிறது எம்.எஸ்.வர்ட்.

முதலில் சுழற்ற வேண்டிய டெக்ஸ்ட் பகுதியத் தெரிவு செய்து கொள்ளுங்கள். பின்னர் Edit மெனுவில் Cut தெரிவு செய்யுங்கள். பின்னர் அதே எடிட் மெனுவில் Paste Special தெரிவு செய்ய ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அதிலிருந்து Picture தெரிவு செய்யுங்கள். அப்போது In line with text எனும் போமட்டிங் தெரிவோடு அந்த டெக்ஸ்டை சுற்றி Resizing handles தோன்றியிருக்கக் காணலாம்.

பின்னர் அதன் மேல் ரைட் க்லிக் செய்து Format Picture தெரிவு செய்யுங்கள். அபோது தோன்றும் டயலொக் பொக்ஸிலிருந்து Layout டேபில் க்ளிக் செய்து Square எனும் லேயவுட் தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள். இபோது அந்த டெக்ஸ்டைச் சுழற்றக் கூடியதாக பச்சை நிற பட்டன் தோண்றக் காணலாம். அதன் மூலம் அந்த டெக்ஸ்டை விரும்பிய கோணத்தில் சுழற்ற முடியும்.

-அனூப்-

Sunday, May 02, 2010

Partition in a partition


பாட்டிசனில் ஒரு Partition

விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் உள்ள டிஸ்க மெனேஜ்மண்ட் கருவி மூலம் ஹாட் டிஸ்கில் பாட்டிசன் செய்யப்படாத வெற்றிடத்தில் புதிதாக பாட்டிசன்களை உருவாக்கலாம் என நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் இந்த டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவி மூலம் ஏற்கனவே பாட்டிசன் செய்யப்பட்ட பகுதியினுள் டேட்டா இழப்பின்றி மேலும் பாட்டிசன்களை உருவாக்க முடியாது. அவ்வாறு மறுபடியும் பாட்டிசன்களை உருவாக்க வேண்டுமானால் பாட்டிசன் மேஜிக் போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருள் கருவிகளையே உபயோகிக்க வேண்டும். அல்லது விண்டோஸை மறுபடி நிறுவும்போது தேவையான பாட்டிசன்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.


 
ஆனால் டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவி மூலம் ஹாட் டிஸ்கை விரும்பிய வாறு பாட்டிசன் செய்து கோள்ளும் வசதியை விண்டொஸின் விஸ்டா மற்றும் 7. 8 பதிப்புகள்  தருகின்றன. இதன் மூலம் ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு பாட்டிசனைச் சுருக்கி புதிதாக மேலும் பாட்டிசன்களை உருவாக்குதல் (Shrink), பாட்டிசனின் அளவை அதிகரித்தல் (extend) பாட்டிசன் செய்யப்படாத வெற்றிடத்தில் புதிதாக பாட்டிசனை உருவாக்குதல், போமட் செய்தல் (Format) போன்ற பல்வேறு ஹாட் டிஸ்க சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.

இந்த டிஸ்க் மெனேஜ்மண்ட் கன்சோலை Disk Management console நீங்கள் (மை) கம்பியூட்டட்ர் மேல் ரைட் க்ளிக் செய்து Manage கட்டளையைத் தெரிவு செய்வதன் மூலம் அல்லது ரன் பொக்ஸில் Diskmgmt.msc என டைப் செய்வதன் மூலம் அணுகலாம்.

 
டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவியை Manage கட்டளை மூலம் அணுகியிருப்பின் அதில் Storage க்ளிக் செய்து Disk Management தெரிவு செய்ய வேண்டும். ரன் பொக்ஸ் மூலம் அணுகும் போது படம் (1) ல் உள்ளது போல் ஒரு விண்டோ தோன்றும்.

படத்தில் காடியிருப்பது 80 ஜீபீ கொள்ளளவுள்ள ஒரே பாட்டிசன் கொண்ட ஒரு ஹாட் டிஸ்க். ஏற்கனவே பாட்டிசன் செய்யப்பட்ட இந்த இந்த ஹாட் டிஸ்கை இரண்டு பாட்டிசன் கொண்டதாகப் பிரிக்க வெண்டுமானால் (படம் -2) அந்த பாட்டிசன் மீது மேல் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Shrink Volume தெரிவு செய்ய வேண்டும். . அப்போது புதிதாக பாட்டிசனை உருவாக்க எவ்வளவு வெற்றிடம் உள்ளது என்பதை டிஸ்க் மெனெஜ்மண்ட் கருவி பரீட்சிக்க ஆரம்பிக்கும்.


புதிதாக பாட்டிசன் ஒன்றை உருவாக்குவதற்குப் போதிய இடம் உள்ளதா எனப் பரீட்சித்த பின்னர் படம் (3) உள்ளது போல் Shrink டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு ஹாட் டிஸ்கை பாட்டிசன் செய்வதற்கு முன்னர் உள்ள பாட்டிசனின் மொத்த அளவு, அதனை சுருக்குவதன் மூல்ம் கிடைக்கப் பெறும் வெற்றிடம், புதிய பாட்டிசனை உருவாக்க நீங்கள் வழங்க விரும்பும் அளவு மற்றும் புதிதாக பாட்டிசனை உருவாக்கிய பின்னர் மாற்றமடையும் ஏற்கனவே இருந்த பாட்டிசனின் அளவு என்பவற்றை இந்த Shrink டயலொக் பொக்ஸில் பட்டியலிடும்.

இங்கு மை கம்பியூட்டர் திறந்து ஹாட் டிஸ்கில் உள்ள வெற்றிடத்தைப் பரீட்சிக்கும் போது அதிக வெற்றிடம் (61 ஜிபீ) இருப்பதாகக் காட்டினாலும் அதனை சுருக்கி புதிதாக பாட்டிசனை உருவாக்குவதற்கு மிகக் குறைந்த அளவிலான (7 ஜீபீ) வெற்றிடமே இருப்பதாக Shrink டயலொக் பொக்ஸ் காண்பிப்பதை அவதானிக்கலாம்.

இதற்கான காரணம் யாதெனில் பேஜ் பைல் (page file) ஹைபனேசன் (hibernation) மற்றும் ரீஸ்டோர் (restore) போன்ற செயற்பாடுகளுக்கு ஹாட் டிஸ்கில் குறிப்பிட்ட பகுதி ஏற்கனவே ஒதுக்கப்படிருக்கும்.. இந்த பைல்களை அன்மூவபல் பைல் (unmovable files) எனப்படும்.. இவற்றை டிஸ்க் மெனேஜ்மண்ட் கருவியினால் இடமாற்றம் செய்யும் செய்ய முடியாது இந்த அன்மூவபல் பைல்களைத் தவிர்த்து ஏனைய பகுதிகளிலுள்ள மீதமுள்ள வெற்றிடமே புதிய பாட்டிசனை உருவாக்கக் கூடிய உச்ச அளவாகக் கண்பிக்கும்.

அடுத்து Enter amount of space to shrink எனுமிடத்தில் தேவையான அளவை வழங்கி விட்டு Shrink பட்டனில் க்ளில் செய்ய வேண்டும். சிறிது நேரத்தில் புதிதாக ஒரு பாட்டிசன் உருவாகக் காணலாம்..

பாட்டிசனை உருவாக்கிய பின்னர் அடுத்த கட்டமாக அதனைப் பயன் படுத்துவதற்கு அந்த பாட்டிசன் மேல் ரைட் க்ளிக் செய்து New Simple Volume எனபதைத் தெரிவு செய்ய ஒரு விசர்ட் தோன்றி வழி நடத்தும். அதனை நிறைவு செய்து புதிய பாட்டிசனை பயன் படுத்த அரம்பிக்கலாம் .

 -அனூப்