Sunday, July 25, 2010

How to upload a website using FTP


ஒரு வெப் சேர்வரை அணுகி இணைய தளம் ஒன்றை எவ்வாறு பதிவேற்றுவது எனப் பார்ர்ப்போம்.

ஒரு இணைய தளம் சேமிக்கப்பட்டிருக்கும் வெப் சேர்வர் (Host - ஹோஸ்ட்) கணினிக்கு பைல் ஒன்றை அனுப்பும் செயற்பாட்டைப் பதிவேற்றுதல் (Uploading) அல்லது பதிப்பித்தல் (Publishing) என அழைக்கப்படும். ஹோஸ்ட் கணினி FTP எனும் பைல் ட்ரான்ஸ்பர் புரட்டகோலை (File Transfer Protocol) ஆதரிக்குமானால் இந்த செயற்பாட்டிற்கு FTP Client எனும் ஒரு மென்பொருள் கருவி அவசியம். இங்கு நான் (FileZilla) பைல்ஷிலா எனும் மென்பொருள் கருவி கொண்டு எவ்வாறு ஒரு பைலை இணைய தளமொன்றிற்குச் செலுத்துவது என விளக்க நினைக்கிறேன்.

பைல்ஷிலா என்பது ஒரு ஓப்பன் சோர்ஸ் எப்டிபி க்லையன்ட் ஆகும். இதனை நீங்கள் எனும் http://sourceforge.net/projects/filezilla/ இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன் லோட் செய்யலாம். FileZilla. 3.3.3 எனும் பதிப்பு தற்போது வெளியிடப் பட்டிருக்கிறது,

எப்.டி.பீ க்ளையண்ட் கொண்டு டெக்ஸ்ட், படங்கள். வீடியோ, இசை என எவ்வகையான பைல்களையும் அப்லோட் செய்யலாம். இணைய தளமொன்றிற்கு பைல் ஒன்றை அப்லோட் செய்வதற்கு முன்னர் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் அல்லது உங்கள் இணைய தளத்தை ஹோஸ்ட் செய்யும் நிறுவனத்திடமிருந்து பின்வரும் விவரங்களை அறிந்து வைத்திருத்தல் அவசியம்.

உங்கள் இணைய தளம் சேமிக்கப்படிருக்கும் ஹோஸ்ட் கணினியின் பெயர் அல்லது சேர்வர் முகவரி. உதாரணமாக ftp://ftp.example.com/.. FTP கணக்கிற்குரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல். வெப் சேர்வரில் எந்த டிரெக்டரி அல்லது போல்டரில் உங்கள் பைல்களை சேமிக்க வேண்டும் என்ற விவரம். இந்த போல்டர் www அல்ல்து public_html எனும் பெயர்களில் இருக்கலாம். இந்த போல்டரில் சேமிப்பதன் மூலம் மட்டுமே உங்கள் தளத்தை வெப் பிரவுஸரால் கண்டு கொள்ள முடியும்.

பைல் ஒன்றைப் பதிவேற்றுவதற்கு முதலில் பைல்ஷிலா எப்.டி.பீ க்லையண்டைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு File மெனுவில் Site Manager தெரிவு செய்யுங்கள். தோன்றும் Site Manager விண்டோவில் New Site பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது அதன் மேற் பகுதியில் இணைய தளத்தின் பெயரை வழங்குவதற்கு ஏற்றவாறு கர்சர் தோன்றும். அங்கு அந்த தளத்திற்குரிய பொருத்தமான பெயரை வழங்குங்கள். இந்தப் பெயர் உங்கள் தளத்தை அடைவதற்கான இணைய தள முகவரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

அடுத்து General டேபின் கீழ் Host எனுமிடத்தில் உங்கள் தளத்திறகான சேர்வர் முகவரியை டைப் செய்யுங்கள். உதாரணமாக ftp://ftp.example.com/. Server type எனுமிடத்தில் FTP தெரிவு செய்யுங்கள். . Port இல்க்கம் வழங்க வேண்டிய அவசியமில்லை

அடுத்து Logon type எனுமிடத்தில் ட்ரொப் டவுன் பட்டியலிலிருந்து Normal தெரிவு செய்யுங்கள். அப்போது User Name மற்றும் Password வழங்கக் கூடியதாக அந்த இடங்கள் மாறும். அவ்விடங்களில் உங்களுக்குத் தரப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்டை வழங்குங்கள்.

நீங்கள் வழங்கும் பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்ட் விவரங்கள் உங்கள் கணினியில் சேமிக்கப்படும். அதனால் நீங்கள் பைல் அப்லோட் செய்ய விரும்பும் ஒவ்வொரு தடவையும் இந்த விவரங்களை வழங்க வேண்டிய தேவை ஏற்படாது. .

எனினும் இணைய மையங்கள் (Internet café) போன்ற பொது இடங்களில் எப்.டிபீ க்லையண்டுகளைப் பயன் படுத்துவதானால் அப்லோட் செய்யும் பணி முடிந்ததுமே அந்த விவரங்களை அப்போதே கணினியிலிருந்து அகற்றி விட்டு வெளியேறுங்கள்.

அடுத்து உங்கள் சேர்வர் கணினியை அடைவதற்கு Connect பட்டனில் க்ளிக் செய்யுங்கள். சேர்வர் கணினியுடனான இணைப்பு வெற்றிகரமாக அமைந்தால் FileZilla விண்டோவின் வலப்புறம் உங்க்ள் தளத்திற்குரிய பைல் போல்டரகளைப் பட்டியலிடக் (Remote Site) காணலாம். அதேபோல் இடப்புற விண்டோவில் உங்கள் கணினியிலுள்ள (Local Site) பைல் போல்டர் மற்றும் ட்ரைவ்களக் காண்பிக்கும். இந்த இரண்டு விண்டோக்களும் விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் போல் செயற்படும்.

உங்கள் இணைய தளத்தை ஹொஸ்ட் செய்யும் நிறுவனம் வெப் சேர்வரிலுள்ள www, public_html போன்ற எதேனுமொரு போல்டரை உங்களுக்குப் பரிந்துரைத்திருந்தால் அந்த உரிய போல்டரை வலப்புற விண்டோவில் காண்பிக்கும். அதன் மேல் இரட்டைக் க்ளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்.

அடுத்து விண்டோவின் இடப்புற விண்டோவில் நீங்கள் அப்லோட் செய்ய விரும்பும் பைலை உங்கள் கணினியிலிருந்து தெரிவு செய்து கொள்ளுங்கள்..
பின்னர் அந்த பைலை ட்ரேக் எண்ட் ட்ரொப் (Drag & Drop) முறையில் இழுத்து வலப்புறம் உள்ள உரிய போல்டரில் போட்டு விடுங்கள். உடனடியாக அந்த பைல் அப்லோட் ஆக ஆரம்பிக்கும். . உங்கள் பைலை அப்லோட் ஆகும் செயற்பாட்டை பைல்ஷிலா விண்டோவின் கீழ்ப் பகுதியில் காண்பிக்கும். . அப்லோட் செயற்பாடு முடிந்தவுடன் சேர்வரிலிருந்து இணைப்பைத் துண்டித்து விடலாம். அதற்கு Server மெனுவிலிருந்து Disconnect தெரிவு செய்யுங்கள்.

ஒரு வேளை உங்கள் தளத்தை ஹோஸ்ட் செய்யும் நிறுவனம் எப்.டி.பீ கொண்டு அணுக விடாமல் த்டுத்திருந்தால் அப்லோட் செய்யும் பணிக்கு வெப் பிரவுஸரையே பயன் படுத்த வேண்டும். என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இணைய தளங்களை நிர்வகிப்பதற்கான கண்ட்ரோல் பேனல் (Control Panel) எனும் வசதி ஹோஸ்ட் செய்யும் நிறுவனத்தால் வழங்கப்படும்.

-அனூப்-

Sunday, July 18, 2010

What is FTP?


FTP என்றால் என்ன?

ஒரு வர்ட் பைலை அல்லது ஒரு படத்தை இணையத்தினூடு அனுப்ப வேண்டிய தேவை ஏற்படும் போது அதனை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பி விடலாம் என்பது நீங்கள் அறிந்ததே. அதிவேக இணைய இணைப்பு பயன் பாட்டில் உள்ள இக்காலத்தில் பைல் ஒன்றை அனுப்ப பெற உதவும் இம்முறையானது ஒரு சாதாரண கணினிப் பயனரைப் பொருத்த மட்டில் போதுமானதே.

மாறாக பைல் அளவு அதிகமாகும்போது அல்லது அதிக எண்ணிக்கையிலான பைல்களை அனுப்பும்போது மின்னஞ்லில் அனுப்புவது சிறந்த தெரிவாக அமைய மாட்டாது. ஏனெனில் மின்னஞ்சல் சேவை தரும் நிறுவனங்கள் ஒரு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பக் கூடிய பைலின் அளவில் ஒரு எல்லையை நிர்னயித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமக்கு உதவுகிறது FTP.

File Transfer Protocol என்பதன் சுருக்கமே FTP. இணையத்தில் ஒரு சேர்வர் கணினிக்கும் எமது கணினிக்குமிடையில் பைல்களைப் பரிமாறிக் கொள்ளக் கூடிய வசதியை FTP தருகிறது. . FTP தளம் (sites) என்பது மென்பொருள்கள், படங்கள், இசை, வீடியோ என பலவகையான பைல்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு சேர்வர் கணினியாகும். World Wide Web எனும் உலகலாவிய வெப் தளம் போல்,. (E-mail) மின்னஞ்சல் போல் இனையம் மூலம் பெறப்படும் மற்றுமொரு சேவையே எப்டிபி.

இணையம் வழியே பைல்களைப் பரிமாறிக் கொள்வதில் தற்காலத்தை விட கடந்த காலங்களில் FTP பயன்பாடு ஒரு பொதுவான விடயமாக விருந்தது. இரண்டு கணினிகளுக்கிடையே பைல்களைப் பறிமாறிக் கொள்ள மின்னஞ்சலை விட FTP யே அதிகம் பயன்படுத்தப்பட்டது. முன்னரைப் போன்று பலராலும் பரவலாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும் FTP என்பது இன்னும் கூடப் பயன்பாட்டிலுள்ளது. பெரிய பைல்களை இணையத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளும் வண்ணம் செய்வதற்கு FTP பயன் படுத்தப்படுகிறது. பைல்களை பறிமாறிக் கொள்வதில் தற்போது பயன்படுத்தப்படும் ஏனைய வழிமுறைகளுடன் ஒப்பிடும்போது FTP அதிக வேகம் கொண்டதாகவும் உள்ளது.. FTP இணையம் வழியே பைல்களை அனுப்ப பெற உதவும் ஒரு சிறந்த வழிமுறை எனலாம்.


பொதுவாக FTP யானது இணைய தள வடிவமைப்பாளர்களால் அதிகம் பயன் படுத்தப்படுகிறது. இணைய தளங்களை அவை சேமிக்கபடும் சேர்வர் கணினிகளுக்கு அல்லது ஹோஸ்ட் (host) கணினிகளுக்கு அப்லோட் (upload) செய்வதற்காக அவர்களால் இது பயன்படுத்தப்படுகிறது. அத்தோடு அனேகமான இணைய தள சேர்வர்கள் FTP மூலம் மாத்திரமே இணைய தளங்களை அப்லோட் செய்வதற்கு அனுமதிக்கிறது.

ஒரு FTP சேர்வரை இரண்டு முறைகளில் அணுகலாம். முதல் வழி முறையில் உங்களுக்கு வழங்கப்படும் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொண்டு உங்கள் அடையாளத்தை உறுதி செய்து கொண்டு ஒரு FTP சேர்வரை அணுகுவதாகும். இரண்டாவது வழிமுறையாக பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் விவரங்கள் ஏதும் இன்றி ஒரு எப்டிபீ சேர்வரை அணுகுவதாகும். இவ்வாறான FTP சேர்வரை (Anonymous FTP) பெயரில்லா எப்டிபீ எனப்படும் இந்த எனோனிமஸ் எப்டிபியை விரும்பிய எவரும் அடைய முடியும்.

ஒரு எப்டிபி சேர்வரை அணுகுவதற்கு இணைய தளங்களைப் பார்வையிட உதவும் இணைய உலாவி அல்லது அதற்கென விசேடமாக உருவாக்கப்பட்ட மென்பொருள் கருவி பயன்படுத்தப்படும். . இவ்வாறான மென்பொருள் கருவிகளை (FTP Client) எப்டிபி க்ளையண்ட் எனப்படும். பிரவுஸரை விட FTP க்ளையன்ட் பயன் படுத்துவதே சிறந்த வழிமுறையாகும். FileZilla. Cute FTP, Smart FTP என ஏராளமான FTP க்ளையண்டுகள் பாவனையிலுள்ளன. இவை அனைத்தும் வேறு பட்ட இடை முகப்புகளைக் கொண்டிருப்பினும் ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு பைல்களைப் பரிமாறும் செயற்பாட்டையே மேற்கொள்கின்றன.

இணைய உலாவி மூலம் FTP சேர்வரை அணுகும்போது முகவரிப் பட்டையில் ftp:// என்பது சேர்த்துக் கொள்ளப்படும். உதாரணமாக, ftp://ftp.schoolnet.lk/ என வழங்கினால் அந்த FTP சேர்வரை அடையாளமில்லாத முறையில் (anonymous) அணுகும். எனினும் அந்த FTP சேர்வர் பயனர் பெயர் மற்றும் கடவு சொல் வினவுமாயின் ftp://username:password@ftp.somedomain.com எனும் ஒழுங்கில் வழங்க வேண்டும். எனினும் இவ்வாறு வழங்கும் போது கடவு சொல் பிரவுஸரினால் கணினியில் சேமிக்கப்படும் அத்னால் பாஸ்வர்டை வழங்காது பயனர் பெயரை மட்டும் பின்வருமாறு வழங்கலாம். ftp://username@ftp.somedomain.com இவ்வாறு வழங்கும் போது பாஸ்வர்டை பிரவுஸர் பின்னர் வினவும். எனினும் ப்ரவுஸரில் பாஸ்வர்ட் தங்காது. .

வெப் பிரவுஸர் அல்லது எப்டிபீ க்ளையண்ட் பயன் படுத்தி எப்டிபி சேர்வர் ஒன்றை அணுகும்போது சேர்வரிலுள்ள பைல் போல்டர்களை பட்டியலிடக் காணலாம். அதிலிருந்து உங்களுக்குத் தேவையான பைல்களை Drag & drop முறையில் உங்கள் கணினிக்கு டவுன்லோட் செய்யவோ அல்லது உங்கள் கணினியிலிருந்து சேர்வருக்கு அப்லோட் செய்யவோ முடியும்.

-அனூப்-



Sunday, July 04, 2010

Is your font not displayed in other PCs?


நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?


இன்றைய இணைய உலகில் கணினி வழியே பிறருடன் ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வதென்பது தவிர்க்க முடியாத விடயமாகி விட்டது. எப்போதும் எதற்கெடுத்தாலும் அச்சிடப்பட்ட ஆவணங்களையே பயன்படுத்தி வந்த நிலையும் தற்போது மாறிவிட்டது.

ஒரு கணினியில் உருவாக்கப்படும் ஒரு ஆவணம் மின்னஞ்சல் வழியாகவோ, சீடி மற்றும் பென் ட்ரைவ் போன்ற ஊடகங்களூடாகவோ பல பேருடன் பகிர்ந்து கொள்ளப் படுகிறது. அவ்வாறு பிறருடன் பகிர்ந்து கொள்ளப்படும் போது வேறொரு கணினியில் அந்த ஆவணம் பார்வையிடுவதற்காகவோ அல்லது மாற்றங்கள் செய்வதற்காகவோ திறக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் கணினியில் உருவாக்கிய அந்த ஆவணம் மற்றுமொரு கணினியில் சில வேளைகளில் வேறொரு தோற்றத்தைத் தருவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுவான ஒரு பிரச்சினையாக இருப்பது font எனும் எழுத்துருக்களே,

உங்கள் ஆவணத்தில் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தக் கூடியவாறு மிகப் பொருத்தமாக நீங்கள் தெரிவு செய்து பயன் படுத்திய விஷேட எழுத்துருக்கள் மற்றுமொரு கணினியில் நிறுவப்பபடாத விடத்து அதற்குப் பதிலாக வேறு எழுத்துருக்கள் தோன்றுவதைப் பர்க்கும்போது உங்கள் நிலை பரிதாபத்திற்குரியதே.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் இரண்டு வழிகளைக் கையாளலாம். பயன்படுத்திய குறிப்பிட அந்த எழுத்துரு பைலைப் பிரதி செய்து அந்த ஆவணத்துடனேயே அனுப்புதல் அவற்றுள் முதல் வழியாகும்.

இரண்டாவது வழி அந்த பொண்ட் பைலை குறிபிட்ட அந்த ஆவணத்தினுள்ளேயே எம்பெட் (Embed) செய்து விடுவதாகும். .

எழுத்துரு பைலைப் பிரதி செய்து ஆவணத்துடன் இணைத்து அனுப்புவது சிறந்த வழியெனச் சொல்ல முடியாது ஏனெனில் நிறுவன கணினிகளில் புதிதாக பொண்டுகளை நிறுவுவதையோ கணினியில் மாற்றங்கள் செய்வதையோ நிறுவன கணினி நிர்வாகிகள் அனேகமாக விரும்புவதில்லை அல்லது அனுமதிப்பதில்லை. (எனினும் தனி நபர் கணினிகளில் இப் பிரச்சினை எழாது)
எனினும் எழுத்துருவை எம்பெட் செய்து அனுப்பும் போது குறிப்பிட்ட அந்த பொண்டை கணினியில் நிறுவாமலேயே அந்த ஆவணத்தை திறந்து பார்க்க முடியும். எழுத்துருக்களை எம்பெட் செயும் வசதி பல எப்லிகேசன்களில் தரப்படுகிறது.

எம்.எஸ். வர்ட் 2003 ஆவணமொன்றில் பொண்ட் பைலை எம்பெட் செய்வதற்குப் பின் வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

பைல் மெனுவில் Save As தெரிவு செய்ய வரும் சேவ் ஏஸ் டயலொக் பொக்ஸில் Tools க்ளிக் செய்து Save Options தெரிவு செய்யுங்கள். (Tools மெனுவில் Options தெரிவு செய்து Save டேபில் க்ளிக் செய்தும் இதே இடத்திற்கு வந்து சேரலாம்) அங்கு Embed true type font தெரிவு செய்து ஓகே சொல்லி விடுங்கள்,.

எம்.எஸ்.வர்ட் 2007 மற்றும் எம்.எஸ்.வர்ட் 2010 பதிப்புகளில் Office பட்டனில் க்ளிக் செய்து Word Options தெரிவு செய்து Save க்ளிக் செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Embed font in the file தெரிவு செய்து ஓகே செய்யுங்கள்.

பொண்ட் பைலை எம்பெட் செய்வதன் மூலம் ஒரு ஆவணத்தை வேறொரு கணினியில் எந்தவித சிக்கலுமின்றி திறந்து பணியாற்றலாம் என்பது உண்மை. ஆனால் எழுத்துருவை எம்பெட் செய்வதன் மூலம் பைல் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் ஆவணத்தில் பல வகையான எழுத்துருக்களைப் பயன் படுத்தியிருப்பின் பைல் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே உங்கள் ஆவணத்தை வெறொரு நபருடன் பகிர்ந்து கொள்ளாத விடத்து அல்லது நீங்கள் பயன் படுத்தியிருப்பது விண்டோஸ் மற்றும் எம்.எஸ்.ஒபிஸ் உடன் இணைந்து வரும் பொதுவான எழுத்துருக்களாயின் அதனை எம்பெட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


-அனூப்-