Friday, August 27, 2010

Computer Jobs

இவர்கள் என்ன ‘வேலை’ செய்கிறார்கள்?

இன்றைய நவீன உலகில் கணினியின் பயன்பாடு பாரிய வளர்ச்சி கண்டு வருகிறது. . அரசு மற்றும் தனியார் நிறுவனங்ளில் நடை பெறும் கருமங்கள் யாவும் கணினியையே முற்று முழுதாய் சார்ந்திருக்கின்றன. சுய தொழில் முயற்சிகளிலும் கணினி அளப்பரிய சேவையாற்றுகிறது. .

கணினித் துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியானது ஏராளமான தொழில் வாய்ப்புக்களையும் கணினித் துறையில் உருவாக்கி வருகிறது. . கணினியின் வருகையினால் பல பேர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என கணினி கண்டு பிடிக்கப்பட்ட காலத்தில் அஞ்சப்பட்டது. ஆனால் அந்த அச்சம் ஒரு மாயை இப்போது நிறூபிக்கப்பட்டுள்ளது,. ஏனெனில் இந்தக் கணினியே இப்போது பலவேறு பட்ட தொழில் வாய்ப்புக்களை வழங்கி வருகிறது,

கனினித் துறையில் System analyst, Programmer, Network Administrator. என ஏராளமான தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கு ஒரு சில முக்கிய கணினிசார் தொழில்களை இங்கு விவரிக்கலாம் என நினைக்கிறேன். இங்கு நான் கணினி சார் தொழிலாளர்கள் மேற்கொள்ளும் சில பொதுவான பணிகளையே குறிப்பிடுகிறேன், நான் சொல்லியிருப்பவை தவிர அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கேற்ப மேலதிக பொறுப்புக்களையும் அவர்கள் வகிக்கக் கூடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உதாரணமாக ஆசிரியராகப் பணியாற்றும் நான் வகுப்பறைக் கற்பித்தலுக்கு மேலதிகமாக சில வேலை துடைப்பங் கட்டையையும் கையிலெடுக்க வேண்டி ஏற்படுவதுண்டு.

System Analyst
ஒரு நிறுவனம் தனது தகவல் முறைமையை மாற்றியமைக்கும் போதோ அல்லது புதிதாக ஒரு தகவல் முறைமையை உருவாக்கும் பொதோ அப்பொறுப்பை சிஸ்டம் எனலிஸ்டிடமே கையளிக்கும். சிஸ்டம் எனலிஸ்ட் என்பவர் அந்நிறுவனத்திற்கு எவ்வாறான ஒரு தகவல் முறைமை அவசியம் என்பதை பல் வேறு பட்ட ஆய்வுகளை நடாத்தி ஒரு தீமானத்திற்கு வருவார். கணினிக்கு எவ்வாறு டேட்டா வந்தடையும், .அந்த டேட்டவை எவ்வாறன செயற்பாடுகளுக்குட் படுத்தவேண்டும் தகவல் எவ்வாறு நிறுவன வாடிக்கையாளர்களையோ அல்லது நிறுவன ஊழியர்களையோ சென்றடையும் போன்ற பல விடயங்களைத் திட்டமிடுவார். இறுதித் தீர்மானத்திற்கு வந்த பின்னர் அதற்கு ஏற்றவாறு ஒரு மென்பொருளை உருவாக்கும் பொறுப்பை கனினி ப்ரோக்ரமர்களிடம் கையளிப்பார்.. கணினித் துறையில் உச்ச நிலையில் இருப்பர்வர்கள் இந்த சிஸ்டம் எனலிஸ்ட் என்பது குறிப்பிடத் தக்கது. Programmerகணினி நிரல்களை (Programs) உருவாக்குபவரே ப்ரோக்ரமர் எனப்படுகிறார். கணினி நிரல்களை உருவாக்குவதோடு அவற்றைப் பரீட்சித்தல் பராமரித்தல், மேம்படுத்தல் போன்ற பல பொறுப்புக்களைக் கொண்டிருப்பர். ஒரு ப்ரோக்ரமர் ஜாவா, விஷுவல் பேசிக் , சீ போன்ற கணினி மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருப்பர். ப்ரோக்ரமர்

Software Developer
ஸொப்ட்வெயர் டெவலப்பரும் கணினி நிரல்களை உருவாக்கும் ப்ரோக்ரமர் போன்றவரே. எனினும் டெவலப்பரின் பணி இன்னும் அதிகமாகும். ஒரு ப்ரோக்ரமர் என்பவர் ஒரு பாரிய பிரச்சினையின் ஒரு பகுதிக்குரிய ப்ரோக்ரமை உருவாக்குவார். எனினும் டெவலப்பர் என்பவர் அந்தப் பாரிய பிரச்சினையின் ஒவ்வொரு பகுதிக்கும் என உருவாக்கப்பட ப்ரொக்மகளை ஒன்று சேர்த்து ஒரு முழுமையான மென்பொருளை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பார். அத்தோடு அந்த மென்பொருளைப் பரீட்சித்தல் பராமரித்தல், மேம்படுத்தல் போன்ற பல பொறுப்புக்களையும் கொண்டிருப்பர்

Database administrators
ஒரு நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதற்குத் தேவையான தகவல்களை நிர்வகிப்பது இவரின் கடமையாகும். தரவுத் தள நிர்வாகிகள் தரவுத்தள நிர்வாக மென்பொருளொன்றுடன் பணியாற்றுவர். தரவுத் தளமொன்றை உருவாக்குதல், தரவுகளை சேமித்தல், ஒழுங்கமைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் தரவுகளை முன் வைத்தல், பாதுகாத்தல் போன்ற பல செயற்பாடுகளை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்டிருப்ப்ர்.

Systems Administrators
ஒரு நிறுவனத்தின் கணினி முறைமை திறம்பட செயலாற்றுவதைக கண்காணிப்பது Systems administrators களின் பணியாகும். அதாவது கணினி மற்றும் கணினியோடு இனைந்த துணைச் சாதனங்கள், கணினி வலையமைப்பு, மென்பொருள், போன்றன முறையாக இயங்குவதை உறுதி செய்வது போன்ற கடமைகள் இவருக்குரியது. கணினி முறைமையில் சிக்கல் தோன்றும்போது அவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை யெடுப்பதுடன் சில வேளைகளில் வலையமைப்புக்களைக் கண்காணிப்பதோடு அவற்றின் பாதுகாப்புக்கும் பொறுப்பாக இருப்பார்.

Network Administrator
ஒரு நிறுவனத்தின் கணினி வலையமைப்பை நிர்வகிப்பது இவரின் பணியாகும். கணினி வலையமைப்பு முறையாக இயங்குவதைக் கண்காணிப்பதோடு வலையமைப்பில் பயன் படுத்தப்படும் வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்களைக் கண்கானிப்பதோடு அதிகாரமற்ற எவரும் தமது கனினி வலையமைப்பினுள் உட்புகா வன்ணம் பாதுகாப்பதும் இவரின் கடமையாகும்.. வலையமைப்பு நிர்வாகிகளுக்கு வலையமைப்புச் சாதனக்கள், வலையமைப்பு மென்பொருள், மற்றும் வலையமைப்பு நியதிகள் (பபுரட்டகோல்) போன்ற வற்றில் போதிய தேர்ச்சியிருத்தல் வேண்டும்.

Network Engineer
ஒரு நிறுவனத்திற்குரிய உள்ளக வலையமைப்பு (LAN), பரந்த வலையமைப்பு (WAN), இணையம், அக இணையம் (intranets) போன்ற கணினி வலையமைப்புக்களையும் மற்றும் தொடர்பாடல் முறைகளையும் உருவாக்குபவரே வலையமைப்புப் பொறியியலாளர் ஆவார். நிறுவனத்தின் தேவைக் கேற்றவாறு வலையமைப்பை உருவாககத் தேவையான சாதனக்களையும் மென்பொருள்களையும் தெரிவு செய்வதோடு அவற்றை நிறுவுதலை மேற்பார்வை செய்வதோடு அந்த வலையமைப்பை முறையாக இயங்க வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் நெட்வர்க் என்ஜினியரின் கடமைகளாகும்.

Computer Hardware Engineers
கணினி வன்பொருள் பொறியியலாளர் எனப்படுபவர் கணினி உதிரிப்பாகங்களை ஆராய்ந்து வடிவமைத்தல், பரீட்சித்தல், அவற்றை த்யாரித்தல், நிறுவுதல் போன்ற பல பொறுப்புக்களை ஏற்பார். கணினித் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டு வரும் பாரிய வளர்ச்சிக்கு இந்த கணினி வன்பொருள் பொறியியலாளர்களின் பங்கு அளப்பரியது எனலாம்.






Webmasters
இணைய தளங்க்ளைப் நிர்வகிக்கும் பொர்றுப்பு வெப் மாஸ்டர்களைச் சாரும். இணைய தளங்கள் பயனர்களின் பார்வைக்கு உட்படுகிறதா, இணைய தளங்கள் வேகமாக பயனர் கணினிகளை அடைகிறதா போன்ற விடயங்களைக் கண்காணிப்பதோடு இணைய தளங்களில் உள்ளடக்கத்தைத் தீர்மாணிப்பதும் இவர் கடமைகளாகும். மேலும் இணய தள பயன்பாடு பற்றிய தரவுகளச் சேகரித்து அவற்றைப் பகுப்பாய்வு செய்வதோடு பயன்ர்களின் முறைப்பாடுகளுக்கு பதிலளிப்பதும் இவர் கடமைகளில் அடங்கும். .


Web developers
இனையதள உருவாக்கத்தில் உள்ள பல் வேறு பட்ட தொழில்நுடப திறன்களை இவர் கொண்டிருப்பார். இணைய தளங்களில் பயன்படுத்ததக்க எப்லிகேசன்களை உருவாக்குதல், இனைய தளங்களின் பயனர்களை இனங் காணல், இணைய தளங்களின் உள்ளடக்கம் மற்றும் அவை எவ்வாறு ஒழுங்கு படுத்த வேண்டும் என்பதையும் தீர்மாணித்தல், இணைய தளங்களைத் தரவுத் தளங்களோடு ஒன்றினைத்தல், நிறுவனத்தின் தேவைக்கேற்றவாறு இணைய தளங்கள் செயற்படுவதை உறுதி செய்தல். போன்றன இவர் பணிகளாகும்.. அத்தோடு இணைய தளத்தின் தரத்தைப் பேணுவதுடன் அது போதிய தகவல்களை உள்ளடக்கியதாகவும் இருப்பதற்கு வழி வகை செய்வது வெப் டெவலப்பன் கடமையாகும்.

வெப் டெவலபர் மற்றும் வெம் டிசைனரின் பணிகள் சில வேளைகளில் ஒன்றாக இருப்பினும் வெப் டெவலப்பர் வெப் டிசைனரிலிருந்து சற்று வேறுபடுகிறார். வெப் டெவலபர் எனபவர் அதிகமாக சேர்வர் கணினி சார்ந்த பணிகளிலேயே ஈடுபடுவார்.

Web Designer
இணைய தளங்களை வடிவமைப்பவர்களே வெப் டிசைனர் எனப்படுகிறார்,. வெப் மாஸ்டரின் அறிவுறைக்கேற்ப இணைய தளங்களைக் கவர்ச்சியாகவும் இலகுவாக அணுகக் கூடியதாகவும் வடிவமைத்தல் இவர் பணியாகும்..

Data Entry Operator
ஒரு நிறுவனத்தில் தகவல்களைத திற்ன்படக் கையாள்வதில் Data Entry Operator பங்காற்றுகின்றனர், தரவுகளைக் கணினிக்கு உள்ளீடு செய்வதோடு காரியாலய உபகரணங்களைக் கையாள்வதும் இவரது பணிகளாகும்.

Computer Operator
கணினி இயக்குனர்கள் என்போர், தாம் கடமையாற்றும் நிறுவனத்திற்கேற்ப கணினி சார்ந்த பல் வேறு பணிகளைக் கொண்டிருப்பர். வழமையான கணினிசார் செயற்பாடுகளள மேற்கொள்வார். அனேகமாக எம்..எஸ்.ஒபிஸ் போன்ற எப்லிகேசன் மென்பொருளைப் பயன் படுத்துவார். அத்தோடு கணினியில் சிக்கல்கள் ஏற்படும்போது அவற்றைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல் கணினி இயக்குனர்களின் பணிகளாகும்.

Computer security specialists
ஒரு நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பைத் திட்டமிடுதலிலும் உறுதி செய்வதிலும் Computer security specialists பங்காற்றுகின்றனர். நிறுவனத்திலுள்ள கணினி பயன்ர்களை கணினி பாதுகாப்பு பற்றி அறிவூட்டுதல், பதுகாப்பு மென்பொருள்களை நிறுவுதல் வலையமைப்புக்களிள் ஏற்படக கூடிய வழுக்களைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்க எடுத்தல், அனுமதியின்றி எவரேனும் வலையமைப்பினுள் பிரவேசிக்கும்போது உரிய பதில் நடவடிக்கை எடுத்தல் கணினி குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்ககெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தெவையான சாட்சியங்களைத் திரட்டல் போன்றன இவர்களின் பணிகளாகும்.,

Graphic Designer / Desktop Publisherவிளம்பரத்துறை, பதிப்புத் துறை மற்றும் இணைய தளங்களில் பயன் படுத்தக் கூடியவாறான எழுத்துக்கள், உருவங்கள் படங்களைக் கொண்டு அழகிய வடிவங்களை உருவாக்குவது கிரபிக் டிசைனரின் பணியாகும். போட்டோ ஷொப், இலஸ்ட்ரேட்டர்., கோரல் ட்ரோ போன்ற கிரபிக் டிசைனிங் மென்பொருள்களில் தேர்ச்சியும் அதிக கற்பனைத் திறனும் இவரிடம் எதிர்பார்க்கப்படும். இவரை ஒரு கணினி ஓவியர் என்றும் சொல்லலாம். கிரபிக் டிசைனரின் பணிகளையே டெஸ்க்டொப் பப்லிஷரும் மேற்கொள்வார். எனினும் இவரரின் பணி புத்தகங்கள், சஞ்சிகைகள் போன்ற பதிப்புத் துறை சார்ந்தாயிருக்கும்.

-அனூப்-

Sunday, August 22, 2010

DBMS - Some known and unknown terms

DBMS  -  தெரிந்ததும் தெரியாததும் !!


ஏதோவொரு விடயம் சார்ந்ததும் ஒன்றோடொன்று தொடர்பு பட்டதும் ஏதோவொரு வகையில் ஒழுங்கு படுத்தப்பட்டதுமான தரவுகளின் தொகுதியே தரவுத் தளம் (Database) எனப்படுகிறது. ஒரு தரவுத் தளத்திலிருந்து தேவையான போது தரவுகளை மீளப் பெறவோ அல்லது வேறு செயற்பாடுகளுக்குட்படுத்தவோ முடியும். தரவுத் தளம் என்பதற்கு உதாரணமாக ஒரு பாடசாலையில் கற்கும் மாணவர்களின் விவரம், தொலைபேசி விவரக்கொத்து, வாக்காளர் பட்டியல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

தரவுகளை வகைப் படுத்தல் (sorting) , தொடர்புபடுத்தல் (relating) ,கணித்தல் (Calculating) போன்ற செயற்பாடுகளுக்குட்படுத்தி அத்தரவுகளை பயனுள்ளஅர்த்தமுள்ள தகவலாக மாற்றுவதை தரவுச் செயற்பாடு (DataProcessing) எனப்படும். உதாரணம: சம்பளப் பட்டியல் தயாரித்தல், வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள், வரவு-செலவு திட்டமிடல்

ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் தரவுகளைச் சேகரித்து அவற்றை ஒரே தடவையில் ஏதேனும் ஒரு செயற்பாட்டுக்குட்படுத்தல் Batch Processing) பெட்ச் ப்ரோஸெஸ்ஸிங் எனப்படும். உதாரணம்: மின்சாரப் பட்டியல் தயாரித்தல்

தரவுகளை உடனுக்குடன் நிகழ் நேரத்தில் ஏதோவொரு செயற்பாட்டிற்குட்படுத்தலை நிகழ்நேர தரவுச் செயற்பாடு (Online / Real time Processing) எனப்படும். உதாரணம்: வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள்

த்ரவுத் தளமொன்றை உருவாக்கவும் அதனை நிர்வகிக்கவும் பயன்படும் கணினி மென்பொருள்களை DBMS (Database Management System) எனப்படும்.

தரவுத் தள நிர்வாகம் எனும் போது தரவுத் தளமொன்றிற்குப் புதிதாக தரவுகளைச் சேர்த்தல், தரவுகளை நீக்குதல், மீளப் பெறல், அவற்றைப விரும்பிய கோணத்தில் பார்வையிடல், பாதுகாத்தல் போன்ற பல செயற்பாடுகள் அடங்குகின்றன.

MS-Access, Oracle, Fox Pro, My SQL, dBase III+, என்பன சில DBMS மென்பொருள்களாகும்.

மைக்ரோஸொப்ட் ஒபிஸ் தொகுப்புடன் வெளிவரும் ஒரு DBMS மென்பொருளே எம்.எஸ். எக்ஸஸ (MS-Access) ஆகும்.. அதேபோன்று ஓபன் ஒபிஸ் தொகுப்பில் Base எனும் பெயரிலான DBMS மென்பொருள் இணைக்கப்பட்டுள்ளது. .

எம்.எஸ்.எக்ஸஸ் 2003 மற்றும் அதற்கு முந்திய பதிப்புகளில் தரவுத் தளமொன்றின் (file extension) பைல் நீட்டிப்பு .MDB ஆக இருந்தது. எம்.எஸ்.எக்ஸஸ் 2007 பதிப்பில் .ACCDB எனும் பைல் போமட் (file format) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அட்டவணை (Table), படிவம் (Form), அறிக்கை (Report), வினவல் (Query) என்பன எந்தவொரு DBMS மென்பொருளிலும் பொதுவாகக் காணக்கூடியதும் தரவுத்தளமொன்றை நிர்வகிக்கப் பயன்படுவதுமான நான்கு (Database Objects) கருவிகளாகும்.

அட்டவணையே தரவுத் தளமொன்றின் அடிப்படையாகும். அட்டவணையிலிருந்தே வினவல், படிவம், அறிக்கை என்பன உருவாக்கப்படுகின்றன.

பொதுவான புலம ஒன்றின் மூலம் ஒன்றோடொன்று தொடர்பு படுத்தக் கூடிய பல அட்டவணைகளைக் கொண்ட ஒரு தரவுத்தளம் உறவு நிலைத் தரவுத் தளம் (Relational Database) எனப்படும். இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணைகளிலிருந்து தேவையான தரவுகளை மீளப் பெறலாம்.

ஒரே ஒரு அட்டவணையை மாத்திரம் கொண்ட தரவுத் தளம் ஒற்றைக் கோப்பு தரவுத்தளம் (Flat File) எனப்படும்.

இரண்டு அட்டவணைகளில் உள்ள ஒரு பொதுவான புலத்தை Key Field எனப்படும்.

ஒரு அட்டவணையானது குறிப்பிட்ட விடயம் சார்ந்த தரவுகளைக் கொணடிருக்கும். ஒரு அட்டவணையில் ஒவ்வொரு நெடுவரிசையும் (Columns) ஒரு புலத்தையும் (fields) ஒவ்வொரு வரிசையும் (rows) ஒரு பதிவையும் (records) குறிக்கும்.

ஒவ்வொரு நெடுவரிசையும் ஒரு விடயம் சார்ந்த தகவலின் ஒரு பகுதியைக் கொண்டிருப்பதுடன் அவை ஒரே மாதிரியான தரவுகளாகவும் இருக்கும். அதேபோல் ஒவ்வொரு வரிசையும் வேறுபட்டதாயிருப்பதுடன் அவை ஒரு முழுமையான தகவலையும் கொண்டிருக்கும்.

ஒரு அட்டவணையில் ஒரே தரவுக் கூட்டம் மறுபடியும் வழங்கப் படுவதைத் தவிர்ப்பதற்காகப் பயன்படும் புலமே .(Primary Key) முதன்மை சாவியாகும்..இந்த முதன்மைச் சாவிப் புலமானது ஒவ்வொரு பதிவையும் (record) மற்றையதிலிருந்து வித்தியாசப் படுத்திக் காட்டும் வன்ணம் தனியான இயல்பைக் (Unique) கொண்டிருக்கும். உதாரணம் : அடையாள அட்டை இலக்கம், பாடசாலை அனுமதி இலக்கம்,

எம்.எஸ்.எக்ஸஸ் அட்டவணை ஒன்றில் முதன்மைச் சாவியாகப் பயன் படுத்தக் கூடிய ஒரு புலம் இல்லையெனில் Auto Number எனும் புலம் உருவாக்கப்படும்.

ஒரு அட்டவணையில் பிரதான புலமாகச் செயற்டும் ஒரு புலம் மற்றுமொரு அட்டவணையில் சாதாரண ஒரு புலமாகப் பயன் படுத்தப்படுமானால் அது அந்நியச சாவி (Foreign Key) எனப்படும்.

தரவுத் தளமொன்றில் தேவையான தரவுகளை குறிப்பிட்ட சில நிபந்தனைகளோடு வேறாக்கிப் பெறலாம் . இதற்கு குவரி (Query) எனும் கருவி பயன் படுத்தப்படும்.. இது த்ரவுத்தளத்தை வினவுதல் எனும் பொருள் படும். தேவையெனின் குவரியிலிருந்து படிவம் ஒன்றையோ அறிக்கையொன்றையோ உருவாக்கலாம்.

தரவுகளை உள்ளீடு செய்யவும் அவற்றைப் பார்வையிடவும் அட்டவணைகள் பொருத்தமான தெரிவாக அமையாது. எனவே தரவுகளை இலகுவாக உள்ளீடு செய்யவும் அத்தோடு ஒன்றுக்கு மேற்பட்ட அட்டவணைகளிலிருந்து தரவுகளைப் பார்வையிடவும் (Form) படிவங்கள் உருவாக்கப்படுகின்றன. படிவங்கள் ஒரு சமயத்தில் ஒரு பதிவை மட்டுமே காண்பிக்கும்.

தரவுகளைப் பர்ரவையிடவும் அவற்றை அச்சிட்டுக் கொள்ளவும் அறிக்கை (Report பயன்படுகிறது, அறிக்கை மூலம் தரவுகளின் சாராம்சத்தை (Summary) மட்டும் வேறாக்கியும் பெறலாம். .

Text, Memo, Number, Date/ Time , Currency, Yes / No எக்ஸலில் உள்ள சில டேட்டா வகைகளாகும்.

ஒரு அட்டவணையில் தேவையற்ற தகவல்களைத் தவிர்த்து தேவையான தகவல்களை மட்டும் சில நிபந்தனைகளோடு வடி கட்டுதலை பில்டர் (Filter) எனப்படும்.

இரண்டு அட்டவணைகளுக்கிடையே One-to-One, One-to- Many, Many-to-Many என மூன்று விதமான உறவு நிலைகளை உருவாக்கலாம்.

.ஒரு அட்டவணையில் உள்ள ஒரு பதிவு அடுத்த அட்டவணையிலுள்ள ஒரே ஒரு பதிவுடன் மாத்திரமே பொருந்துமாயின் அது One-to-One இணைப்பு எனப்படும். இங்கு இரண்டு அட்டவணைகளிலும் ஒரே மாதிரியான தகவல்களைக் கொண்ட ஒரு பொதுவான புலம் காணப்படும். உதாரண்மாக உங்களுக்கு ஒரு துணை இருக்கலாம். அந்தத் துணைக்கு நீங்கள் மட்டுமே துணை.

One-to-One இணைப்பு ஒரு சிறந்த தொடர்பு முறை எனக் கருத முடியாது. ஏனேனில் அந்த இரு அட்டவணைகளையும் ஒரே அட்டவணையாக இணைத்துக் கொள்ளலாம்..

ஒரு அட்டவணையில் உள்ள சில நெடு வரிசைகள் (Columns) அடிக்கடி பயன் படுத்துபவையாகவும் சில நெடு வரிசைகள் அடிக்கடி பயன் படுத்தப்படாத சந்தர்ப்பத்தில் ஒரே அட்டவணையை இரண்டாகப் பிரித்து அங்கு One-to-One இணைப்பை உருவக்கிக் கொள்ளலாம்.

ஒரு அட்டவணையில் உள்ள ஒரு பதிவு அடுத்த அட்டவணையிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளுடன் பொருந்துமாயின் அது One-to-many இணைப்பு என்ப்படும்.. உதாரணமாக உங்கள் தாய்க்கு பல பிள்ளைகள் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஒரு தாய்தான் இருக்க முடியும்.

பொதுவாக One-to-many இணைப்பே அதிகம் பயன் பாட்டிலுள்ளது. .

ஒரு அட்டவணையில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகள் அடுத்த அட்டவணையிலுள்ள ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வரிசைகளுடன் பொருந்தக் கூடியதாயிருப்பின் அது Many-to-Many Relationship எனப்படும். உதாரணமாக ஒரு பாடசாலையிலுள்ள ஒவ்வொரு ஆசிரியரும் பல மாணவர்களுக்குக் கற்பிப்பர். அதேபோல் ஒவ்வொரு மாணவனுக்கும் பல ஆசிரியர்கள் கற்பிக்க முடியும்.


-அனூப்-



Format Painter in MS Word

எம்.எஸ்.வர்டில் Format Painter

எம்.எஸ், வர்ட் ஸ்டேண்டர்ட் டூல் பாரிலுள்ள (Format Painter) போமட் பெயிண்டர் பட்டன் மூலம் ஏற்கனவே பயன் படுத்திய டெக்ஸ்ட் மற்றும் கிரபிக் போமட்டுகளைப் பிரதி செய்து மறுபடியும் அதே ஆவணத்ததின் அல்லது வேறொரு ஆவணத்தின் டெக்ஸ்ட் அல்லது கிரபிக் பகுதிக்குப் பயன்படுத்தலாம்.

அதனை செயற்படுத்த முதலில் நீங்கள் ஒரு உரைப் பகுதியை டைப் செய்து font, font size, bold, italic, underline போன்ற பல வகையான் போமட்டிங்கை அதன் மீது பிரயோகியுங்கள் அடுத்து ஸ்டேண்டர்ட் டூல்பாரிலுள்ள Format Painter பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது மவுஸ் பொயிண்டர் ஒரு தூரிகை வடிவில் மாறும். அடுத்து போமட் செய்ய வேண்டிய டெக்ஸ்டின் மீது மவுஸால் ட்ரேக் செய்யுங்கள். இப்போது முன்னர் போமட் செய்திருந்த வடிவிற்கு டெக்ஸ் மாறக் காணலாம்.

ஒரு போமட்டிங்கை ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்த வேண்டுமானால் Format Painter பட்டன் மீது இரட்டை க்ளிக் செய்யுங்கள். . இந்த வசதி எம்.எஸ்.வர்டில் மட்டுமண்டி எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்பின் ஏனைய மென்பொருள்களிலும் இணைக்கப்பட்டுள்ளது.

-அனூப்

Internet Protocols


இணையத்தில் பயன்படும் சில நியதிகள் (Protocols)



மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் என சில  புரட்டகோல்கள் பயன் படுத்தப்படுகின்றன. 
மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு (SMTP). Simple Mail Transfer Protocol எனும் புரட்டகோல் பயன்படுகிறது. அவ்வாறே இமெயில்களைப் பெறுவதற்கு (POP) Post Office Protocol எனும் புரொட்டகோல் பயன் படுத்தப்படுகிறது. தற்பொது இந்த POP புரட்டகோலின் மூன்றாம் பதிப்பு பயன்பாட்டிலுள்ளது. இதனை POP3 எனப்படுகிறது.

Outlook Express போன்ற இமெயில் க்ளையண்டுகளைப் பயன்படுத்தும் போது மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு SMTP server முகவரியும் மின்னஞ்சல்களைப் பெறுவதற்கு POP3 சேர்வர் முகவரியும் வழங்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். SMTP மற்றும் POP3 சேர்வர்கள் ஒரே முகவரியில் அல்லது வெவ்வேறு முகவரிகளிலும் இருக்கலாம். அத்தோடு SMTP மற்றும் POP3 என்பன மின்னஞ்சல்களை உரிய முகவரியை அணுகச் செய்யவும் நிர்வகிக்கவும் TCP/IP எனும் புரட்டகோல்களைப் பயன்படுத்துகின்றன.

இமெயில்களைப் பெறுவதற்காகப் பயன் படும் மற்றுமொரு புரட்டகோலேInteractive Mail Access Protocol (IMAP) என்பதாகும்.. இது நிறுவன சூழலில் மின்னஞ்சல்களை நிர்வகிக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

அனேகமானோர் யாஹூ ஜீமெயில் போன்ற (Web Mail) வெப் மெயில் சேவைகளையே பயன்படுத்துகின்றனர். இந்த வெப் மெயில்கள இணைய தளங்களில் பயன்படும் அதே புரட்டகோல்களையே பயன்படுத்துகின்றன.

இணைய பக்கங்கள் Hypertext Markup Language (HTML) எனும் வலை மொழி கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு HTML பக்கமானது Hypertext Transfer Protocol (HTTP) எனும் விதி முறையின் கீழ் இணையம் வழியே கடத்தப்படுகின்றது. அனேக இணைய தள முகவரிகள் http என்பதை ஆரம்பத்தில் கொண்டிருக்கும். அத்தளங்கள் எந்த புரட்டகோலை ஆதரிக்கின்றன என்பதை இது குறிக்கிறது. இந்த http புரட்டகோலும் இணைய பக்கங்களை நிர்வகிக்கவென முன்னர் சொல்லப்பட்ட TCP/IP எனும் புரட்டகோல்களைப் பயன்படுத்துகிறது.

HTTPS என்பது HTTP யோடு தொடர்பு பட்ட மற்றுமொரு புரட்டகோலாகும். இது Hypertext Transfer Protocol over Secure Socket Layer என்பதன் சுருக்கமாகும். . இரகசிய தகவல்களை பதுகாப்பாக என்க்ரிப்ட் (encrypt) செய்து அனுப்புவதற்காக இந்த புரட்டகோல் பயன்படுகிறது. இந்த புரட்டகோலைப் பயன் படுத்தும் இணைய தள முகவரிகள். https என்பதை ஆரம்பத்தில் கொண்டிருக்கும்.

File Transfer Protocol எனபது அதன் பெயரைப் போன்றே கணினி வலையமைப்பில் ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு பைல்களைப் பிரதி செய்து கொள்வதற்கான விதி முறையைக் கொண்டுள்ளது. இது தொலைவிலுள்ள ஒரு கணினியிலுள்ள பைல்களை நிர்வகிப்பதற்கான எளிய வழி முறையாகும். இணையத்தில் Word Wide Web எனும் வலைத் தளங்கள் அறிமுகமாவதற்கு முன்னர் அதிகம் பயன் பாட்டிலிருந்த ஒரு பழைய புரட்டகோல FTP ஆகும். 

இந்த புரொட்டகோல் இணைய தளங்களுக்கு பைல்களை அப்லோட் செய்வதற்காக அதிகம் பய்ன்படுத்தப்படுகிறது. இணைய தளங்களிலிருந்து பைல்களை டவுன்லோட் செய்வதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். எனினும் HTTP எனும் ப்ரொட்டகோல் ஊடாகவே அனேகமாக பைல்கள் டவுன்லோட் செய்யப்படுகின்றன.

டவுன்லோட் செய்வதற்கென பைல்களைக் கொண்டிருக்கும் தளங்கள், உதாரணமாக இணையம் வழியே மென்பொருள்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் FTP சேர்வர்களையே அதிகம் பயன் படுத்துகின்றன. இதன் காரணமாக இணையத்தில் பைல் பரிமாற்றத்தில் ஏற்படக் கூடிய பைல் நெரிசல் ஓரளவு கட்டுப் படுத்தப்படுகிறது. FTP சேர்வர்களை பயன்படுத்தும் போது இணைய தள முகவரிகள் ftp என்பதை ஆரம்பத்தில் கொண்டிருக்கும்.

FTP மற்றும் HTTP என்பவற்றிற்கிடையிலான பிரதான வேறுபாடு யாதெனில் FTP இரு வழிச் செயற்பாட்டைக் கொண்டது. அதாவது சேர்வர் கணினியிலிருந்து க்ளையண்ட் கணினிக்கு பைல்களைப் பிரதி செய்யக் கூடிய அதேவேளை க்ளையண்ட் கணினியிலிருந்து சேர்வர் கணினிக்கும் பைல்களை அப்லோட் செய்யவும் பயன்படுகிறது. அதே வேளை HTTP யானது ஒரு வழிச் செயற்பாட்டைக் கொண்டது. இங்கு சேர்வர் கணினியிலிருந்து பைல்களை க்லையண்ட் கணினிக்கு ப்ரவுஸர் ஊடாக அனுப்பும் செயற்பாடு மாத்திரமே நிகழ்கிறது,

Sunday, August 15, 2010

Internet Protocols !


இணையத்தில் பயன்படும் சில Protocols !


இரண்டு நபர்கள் உரையாடும் போது ஒருவர் பேசுவதை மற்றவரால் புரிந்து கொள்ள வேண்டுமானால் இருவரும் ஒரே மொழியைப் பயன் படுத்த வேண்டும். அங்கு இலக்கண மரபுகள் மீறப்படினும் ஒருவர் பேசுவதை மற்றவரால் புரிந்து கொள்ளக் கூடியதாயிருக்கும்.

அதேபோன்று இரண்டு கணினிகளுக்கிடயே தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டுமானால் அங்கும் ஒரு பொதுவான மொழி பயன் பாட்டிலிருக்க வேண்டும். எனினும் இங்கு “இலக்கண மரபுகள்” மீறப்பட முடியாது தகவல் பரிமாற்றம் எவ்வாறு நடை பெற வேண்டும், அந்த தகவலின் அமைப்பு என்ன வடிவத்திலிருக்க வேண்டும் போன்ற விடயங்களை இரண்டு கணினிகளும் முன் கூட்டியே அறிந்திருத்தல் வேண்டும் என்பதோடு அனைத்து விவரங்களும் தெளிவாக வரையறுக்கப்படவும் வேண்டும்.

இவ்வாறு ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் கணினிகள் ஒன்றோடொன்று தொடர்பாடலை மேற்கொள்ளவென சில பொதுவான விதி முறைகள் உருவாக்கப் பட்டுள்ளன. இதனையே புரட்டகோல் (protocol) எனப்படுகிறது. இந்த விதி முறைகள் சர்வதேச அங்கீகாரத்துடன் நிர்ணயம் செய்யப்படுவதுடன் எந்த இடத்திலிருந்தும் கணினிகள ஒன்றோடொன்று தொடர்பாடலாம் என்பதையும் உறுதி செய்கின்றன.

இணையம் வழியே வெவ்வேறு விதமான தகவல்களைக் கடத்தவும் கையாளவும் என சில பொதுவான விதி முறைகள் பயன் பாட்டிலுள்ளன. அவற்றுல் சில புரட்டகோல்களான TCP, IP, UDP, POP, SMTP, HTTP, FTP என்பன பற்றி சிறிது விளக்கலாம் என நினைக்கிறேன். இந்த புரட்டகோல்கள் ஒரு சாதாரண கணினிப் பயனரும் அவ்வப்போது எதிர்ப்படுபவையாகும்.

TCP (Transmission Control Protocol) மற்றும் IP (Internet Protocol) என்பன ஒன்றோடொன்று இணைந்து செயற்படும் இரண்டு வேறுபட்ட புரட்டகோல்களாகும். இணையத்தில் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட புரட்டகோல்கள் இணைந்து செயற்படுவதும் உண்டு. இங்கு ஒரு புரட்டகோலின் செயற்பாடுகள் மற்றொன்றிற்கு ஆதரவாயிருக்கும். . அவை ஒவ்வொன்றும் தமக்கென வழங்கப்பட்டிருக்கும் பணியை நிறை வேற்றுவதோடு மொத்தத்தில் அவை ஒன்றிணைந்து முழுமையான பணியை நிறை வேற்றுகின்றன. ஒரு குறிப்பிட்ட பணியை நிறை வேற்றுவதற்கு பல புரட்டகோல்கள ஒன்றிணைவதை "stack" எனப்படுகிறது.

TCP/IP என்பது இணையத்தில் பயன் படும் பொதுவான ஒரு வார்த்தையாக இருந்தாலும் இது இரண்டு வேவ்வேறு விதமான பணிகளைக் கொண்டுள்ளது. TCP/IP புரட்டகோலே இணையத்தில் அடிப்படை செயற்பட்டினை நிறை வேற்றுகிறது. எனலாம். இந்த புரட்டகோல் இணையத்தில் மட்டுமன்றி உள்ளக கணினி வலையமைப்புகளிலும் (LAN) பயன் படுத்தப்படுகிறது.

இணையத்தில் அல்லது ஒரு கணினி வலையமைப்பில் ஒரு பைலை அனுப்பப்படும் போது அந்த பைலானது முழுமையாக அனுப்பப்படுவதில்லை, அது சிறு பகுதிகளாக உடைக்கப்பட்டே அனுப்பப்படுகிறது. அந்த பகுதிகள் ஒவ்வொன்றையும் பெக்கட் (packet) எனப்படுகிறது.

ஒரு பைல் சிறு பகுதிகளாக்கப்படுவதனால் அந்த பகுதிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் அதன் காரணமாக அந்த பைல் வேகமாக இலக்கை அடையக் கூடியதாயிருக்கும். உரிய இலக்கை அடைந்தது,ம் இந்த பெக்கெட் ஒவ்வொன்றும் ஒன்று சேர்க்கப்படும். ஒரு பைல் சிறு பகுதிகளாக்கப்படுவதன் மூலம் டேட்டா பயணிக்கும் போது ஏற்படும் தகவல் இழப்பும் ஓரளவு குறைக்கப்படுகிறது.

இவ்வாறு பைல்களை பக்கெட்டுகளாக பொதி செய்யவும் மறு படி அந்த பெக்கெட்டுகளை சரியான ஒழுங்கில் ஒன்று சேர்ப்பதற்கும் TCP எனும் புரட்டகோல் பயன் படுத்தப்படுகிறது. இந்த TCP புரட்டகோல் டேட்டா பயணிக்கையில் எந்த பெக்கட்டும் இழக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்கிறது. தகவல் இழப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் உரிய அந்த பெக்கட்டை மறுபடி அனுப்புமாறும் வேண்டுகோள் விடுக்கும்.

வலையமைப்பில் பயணிக்கும் டேட்டாவானது உரிய இலக்கை அடையச் செய்வதில் Internet Protocol (IP) பயன் படுகிறது. வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு கணினியும் தனித்துவமான ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும்.. இதனை ஐபி முகவரி IP address. எனப்படும்.

வலையமைப்பில் பயணிக்கும் ஒவ்வொரு பெக்கட்டும் அது எந்தக் கணினியிலிருந்து செல்கிறது.? எந்தக் கணினியை நோக்கிச் செல்கிறது? அது எத்தனையாவது பெக்கட்? போன்ற பல விவரங்களைக் கொண்டிருக்கும். ஒரு பெக்கட்டானது உரிய இலக்கை அடையு முன்னர் பல பாதைகளில் பல கணினிகளைக் கடந்து செல்லும்.. ஒவ்வொரு பெக்கட்டும் உரிய இலக்கை அடையச் செய்வதை இந்த IP புரட்டகோல் உறுதி செய்கிறது.

User Datagram Protocol (UDP) என்பது TCP/IP குடும்பத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு புரட்டகோலாகும். டேட்டா கிரேம் என்பது ‘பெக்கேட்’ போன்றதே. எனினும் ஒரு பெக்கெட் ஒன்றுக்கு மேற்பட்ட டேட்டகிராம்களைக் கோண்டிருக்கும். சிறியளவிலான தகவ்ல் பரிமாற்றத்தில் இந்த UDP புரட்ட கோலானது IP யுடன் இணைகிறது,

 -அனூப்-

Saturday, August 07, 2010

How to install fonts in Windows

புதிய எழுத்துருக்களை நிறுவுவதெப்படி?


விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தித்கு முன் வெளி வந்த விண்டோஸ் பதிப்புகளில் புதிதாக எழுத்துருக்களை நிறுவுவது என்பது கணினிக்குப் புதியவர்களுக்கு சற்று சிரமமான விடயமாக விருந்தது.

புதிய எழுத்துருக்களை நிறுவுவதற்கு கண்ட்ரோல் பேணலில் Font போலடரைத் திறந்து வரும் விண்டோவில் File மெனுவில் Install New Font தெரிவு செய்து அங்கிருந்து பொண்ட் பைல் சேமிக்கப் பட்டிருக்கும் ட்ரைவைக் காண்பித்து நிறுவ வேண்டியிருந்தது.

How to install font
விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பிலும் இதே முறையே பின் பற்றப்பட்டாலும் இன்னும் சிறிது இலகுவாக புதிய எழுத்துருக்களை Copy & Paste முறையில் கண்ட்ரோல் பேணலில் உள்ள பொண்ட் போல்டரிற்குப் பிரதி செய்து விடுவதன் மூலமும் நிறுவ முடிகிறது.

எனினும் விண்டோஸின் அண்மைக் காலப் பதிப்புகளான விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் செவன் பதிப்புகளில் புதிய எழுத்துருக்களை நிறுவும் முறை மேலும் இலகுவாக்கப்பட்டுள்ளது. புதிய எழுத்துருக்களை நிறுவுவதற்கு உரிய எழுத்துரு பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Install தெரிவு செய்ய அடுத்த ஒரு சில வினாடிகளில் அந்த எழுத்துரு நிறுவப்பட்டு விடுகிறது.

-அனூப்-