Sunday, November 28, 2010

Double Driver - Back up your drivers

Device Driver - களைப் பாதுகாக்க  Double Driver!

ஒரு கணினியை வாங்கும்போது கூடவே ஒரு சீடியும் தருவார்கள். அந்த சீடியில் கணினியில் பொருத்தியுள்ள எல்லா விதமான வன்பொருள்களையும் இயங்க வைக்கும் மென்பொருள்கள் அடங்கியிருக்கும். அதனை (டீவைஸ்) ட்ரைவர் சீடி என்பார்கள்.

டீவைஸ் ட்ரைவர் மென்பொருளானது வன்பொருள் சாதனத்துக்கும் இயங்குதளத்துக்கு மிடையில் தொடர்பாடலை உருவாக் கும் ஒரு மத்தியஸ்தராகச் செயற்படுகிறது. ஒவ்வொரு வன்பொருள் சாதனமும் ஒரு டீவைஸ் ட்ரைவர் மென்பொருளைக் கொண்டிருக்கும். . அதன் மூலமா கவே இயங்கு தளம் அந்த சாதனத்தைக் கண்டு கொண்டு அதனை முறையாக இயக்குகிறது.

கணினியில் தேவையான அனைத்து டீவைஸ் ட்ரைவர்க்ளும் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தாலும் ஹாட் டிஸ்கை போமட் செய்து மறுபடி இயங்கு தளத்தை நிறுவ வேண்டிய தேவை ஏற்பட்டால் ஒவ்வொரு சாதனத்துக்குமுரிய டீவைஸ் ட்ரைவரையும் மறுபட்டி நிறுவ வேண்டி இருக்கும். அதனால் எப்போதும் டீவைஸ் ட்ரைவர் சீடியை கவனமாக வைத்திருத்தல் அவசியம்.

ட்ரைவர் சீடி பழுதடைந்து விட்டால் அல்லது அதனைத் தொலைத்து விட்டால் எனன செய்வது? அதேபோன்று பழைய பாவித்த கணினிகளை வாங்கும்போது அனேகமாக அதற்குரிய ட்ரைவர் சிடிக்கள் கிடைப்பதில்லை.
தேவையான டீவைஸ் ட்ரைவரை இணையத்திலிந்து டவுன்லோட் செய்து கொள்ளலாமே என நீங்கள் நினைக்கலாம். இணயத்திலும் இல்லாதபோது ட்ரைவர் சீடியைத் தேடி எங்கே செலவது?

கணினி வன்பொருள் சாதனங்களுக்குத் தேவையான உரிய ட்ரைவர் மென்பொருளைத் தேடிப்பெறுவது எவ்வளவு கடினமான வேலை என்பதை அந்த நிலைமையை எதிர் கொண்டவர்களே அறிவார்கள்.

இது போன்ற ட்ரைவர் மென்பொருள் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருகிறது டபல் ட்ரைவர் (Double Driver) எனும் சிறிய மென்பொருள் கருவி. இந்த டபல் ட்ரைவர் மூலம் உங்கள் கனினியில் நிறுவப்பட்டுள்ள ட்ரைவர் மென்பொருள்கள் அனைத்தையும் தனியாக ஒரு சீடியிலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ பாதுகாப்பாக (Back up) சேமித்துக் கொள்ளலாம் ,

டபல் ட்ரைவர் இல்குவான இடை முகப்பைக் கொண்ட ஒரு பயனுள்ள ஒரு இலவ்ச யூட்டிலிட்டி. இதன் மூலம் கணினியில் நிறுவப்பட்டுள்ள ட்ரைவர் மென்பொருளகளைப் பார்வையிடுவதோடு, அவற்றைப் பாதுகாப்பாகவும் சேமிக்கவும், சேமித்ததிலிருந்து மறுபடி ரீஸ்டோர் (restore) செய்யவும் முடிகிறது. .

டபள் ட்ரைவர் யூட்டிலிட்டி கணினியை முழுமையாகப் பரீட்சித்து ட்ரைவர் மென்பொருள்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் எமக்குக் காண்பிக்கிறது. அதனை பேக்கப் செய்து விட்டு தேவையான போது பேக்கப்பிலிருந்து உரிய மென்பொருளை ரீஸ்டோர் செய்து கொள்ளலாம் ;.
விண்டோஸின் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் செவன் பதிப்புகளில் சிறப்பாக இயங்குகிறது. டபல் ட்ரைவர். .exe பைலாகக் கிடைக்கும் இந்த யூட்டிலிட்டியை கணியில் நிறுவ வேண்டிய அவசியமுமில்லை,

இந்த டபல் ட்ரைவர் மென்பொருளை http://www.boozet.co.cc/ எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

-அனூப்-

Quillpad

Quillpad         http://www.quillpad.com/

கில்பேட் என்பது இந்திய மொழிகளுக்கான ஒரு ஓன்லைன் டைபிங் கருவி. இதன் மூலம் தமிழ், ஹிந்தி, மலையாளம். உட்பட 10 இந்திய மொழிகளில் ஆங்கில உச்சரிப்பு (Phonetic) முறையில் இலகுவாக டைப் செய்யலாம். உதாரணமாக ‘ammaa’ என ஆங்கிலத்தில் டைப் செய்ய தமிழில் ‘அம்மா’ என உடனே மாற்றும் . தமிழில் மின்னஞ்சல் அனுப்புவதற்கும் கூகில் போன்ற தேடற் பொறிகளிலும் தமிழில் தகவல் தேடுவதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த இணைய தளத்திற்கான முகவரி

Change your text file into an audio file


டெக்ஸ்ட் பைலை ஒலி வடிவில் மாற்றலாமே!


எம்.எஸ்.வர்டில் உருவாக்கப்பட்ட உங்கள் ஆவணங்களை ஒலி வடிவில் மாற்றிக் கொள்ளலாம். இதற்கென எந்தவொரு மென்பொருளையும் டவுன்லோட் செய்யவோ கணினியில் நிறுவவோ வேண்டியதில்லை. ஓன்லைனில் பைல் வடிவை மாற்றும் இந்த வசதியைத் தருகிறது Zamzar. எனும் இணையதளம்.

இதன் மூலம் டெக்ஸ்ட் வடிவிலுள்ள பைல்களை MP3 பைலாக மாற்றிக் கொள்ளலாம். இந்த பைல் மாற்றும் சேவை மூலம் எம்.எஸ்.வர்டில் உருவாக்கப்பட்ட (doc) பைல்கள் மட்டுமன்றி odt, pdf, pub, txt, wpd, wps பைல்களையும் ஒலி வடிவில் மாற்றிக் கொள்ளலாம்.

எம்.எஸ்.வர்டில் உருவாக்கப்பட்ட (doc) ஆவணமொன்றை MP3 பைலாக மாற்றும் செயற்பாடானது மிக சுலபமானது.. இந்த இனைய தளத்திற்குச் சென்று கணினியிலுள்ள ஆவணத்தை தெரிவு செய்து அதனை அப்லோட் செய்வதோடு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் வழங்க வேண்டும்.. அந்த பைலை MP3 வடிவில் மாற்றியவுடன் ஓரிரு நிமிடங்களில் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறது சம்சார் . 

சம்சார் இணைய தளம் ஆவணங்களை ஒலி வடிவில் மாற்றித்தருவது மட்டுமன்றி, இமேஜ், வீடியோ, ஓடியோ என ஏராளமான பல்வேறு பைல் போமட்டுகளை விரும்பும் வடிவில் மாற்றக் கூடிய வசதியைத் தருகிறது. அப்லோட் செய்யக் கூடிய பைலின் உச்ச அளவு 100 எம்பி. இந்த சேவையைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளமுகவரி http://zamzar.com/

Sunday, November 21, 2010

When you use public computers..

பொது இடங்களிலுள்ள கணினியைப் பயன் படுத்துகிறீர்களா?

நீங்கள் சொந்தமாக கணினி, இணைய இணைப்பு வைத்திருந்தாலும் கூட சில வேளைகளில் இண்டர்நெட் மையம், நூல் நிலையம், விமான நிலையம். போன்ற பொது இடங்களில் காணப்படும் பலரின் பாவனைக்கென வைக்கப்பட்டிருக்கும் கணினிகளையும் பயன் படுத்தக் கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கும் வரலாம். இவ்வாறு பொது இடங்களிலுள்ள கணினிகளைப் பயன் படுத்தும்போது
  • மின்னஞ்சல் கணக்கிற்குரிய பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்ட்
  • பேஸ்புக் போன்ற தளங்களில் பயன் படுத்தக் கூடிய பயனர் பெயர் பாஸ்வர்ட்
  • கடன் அட்டை விவரங்கள்
  • அந்தரங்க தகவல்களைக் கொண்ட மின்னஞ்சல்கள்
  • நீங்கள் பரிமாறிக் கொள்ளும் பைல்க்ள்
  • நீங்கள் பார்க்கும் பார்க்கக் கூடாத தளங்களின் பெயர்கள்
போன்ற பல அந்தரங்க விடயங்களை இழக்க வேண்டி வரலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?

பொது இடங்களிலுள்ள கணினிக்ளில் எமது அந்தரங்க விடயங்களைப் பாதுகாப்பதற்கு யாரும் உத்தரவாதம் தருவதில்லை. அவ்விடங்களில் பணியாற்றும் கணினி நிர்வாகிகள் எமது அந்தரங்க தகவல்களையிட்டு கவலைப்படுவார் என நாம் எதிர் பார்க்க முடியாது. சில இடங்களில் எமது அந்தரங்க தகவல்களுக்குப் பாதுகாப்பு தரலாம் எனினும் பொதுக் கணினிகளில் எமது தகவல்கள் நூறு வீதம் பாதுகாக்கப்பட வேண்டு மானால் நாமும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுக் கணினிகளைப் பயன் படுத்தும்போது எவ்வவறு நாம் அவதானமாக நடந்து கொள்வது என்பதைக் கீழே பட்டியலிடுகிறேன்.

இணையத்தில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தி விட்டு அந்த இணைய தளத்திலிருந்து முறையாக log out செய்து வெளியேறுங்கள். . பிரவுசர் விண்டோவை மூடிவிட்டால் அல்லது வேறொரு இணைய தள முகவரியை டைப் செய்து விட்டால் போதுமானது என நினைக்கக் கூடாது, முறையாக லொக்-அவுட் செய்யாமல் வெளியேறுவது உங்களுக்குப் பின்னர் கணினியைப் பயன் படுத்தும் நபரின் கையில் உங்கள் அந்தரங்க தகவல்கள் போய்ச் சேர்ந்து விட வாய்ப்புள்ளது. .

பொதுக் கணினிகளில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய தேவைகளேற்படும் போது வழமையான உங்கள் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பாமல் அதற்கென தற்காலிகமாக ஒரு மின்னஞ்சல் கணக்கை உருவாக்கி அனுப்பலாம். அல்லது பொதுக் கணினிகளில் மின்னஞ்சல் தேவை முடிந்தவுடன் உடனடியாக உங்கள் பாஸ்வர்டை மாற்றிக் கொள்ளுங்கள்.

வெப் மெயில் சேவைகளில், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் இனஸ்டண்ட் மெஸ்செஞ்சர்களில் தானாகவே லொகின் செய்யும் வசதி உள்ளது. இவை எமது வசதிக்காகவே பயனர் கணக்கையும் பாஸ்வர்டையும் கணினியில் சேமித்து வைக்கும். எனவே இந்த வசதியை முடக்கி விடுங்கள்.

பின்னஞ்சல் இணைப்புகளில் வரும் பைல்களை டவுன்லோட் செய்யும் போது அவற்றை உங்கள் பென் ட்ரைவில் சேமித்துக் கொள்ளுங்கள். டவுன்லோட் செய்த பைலை ஹாட் டிஸ்கில் சேமிப்பதானால் அதனை பென் ட்ரைவில் ஏற்றி விட்டு ஹாட் டிஸ்கிலிருந்து அநத பைலை அழித்து விடுவதோடு ரீசைக்கில் பின்னையும் காளி செய்து விடுங்கள்.

டவுன் லோட் செய்த பைல்களை உங்கள் பென் ட்ரைவில் ஏற்றுமுன் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள். அவ்வாறே அதனை உங்கள் கணினியில் மறுபடி ஏற்று முன்னரும் வைரஸ் ஸ்கேன் செய்யுங்கள்.

பொதுக் கணினிகளில் உங்கள் அந்தரங்க விடயங்களைக் கொண்ட பைல்களை படங்களை பரிமாறிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

பொதுக் கணினிகளில் முக்கியமான தகவல்களை வழங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சில திருடர்கள் நீங்கள் கீபோர்டில் அழுத்தும் ஒவ்வொரு கீயின் அசைவுகளையும் பதிவு செய்யக் கூடிய 'keylogger' மென்பொருள்களை நிறுவியிருக்கக் கூடும். இந்த மென்பொருள் பதிவு செய்யும் தகவல்களைத் திருடர்கக்ளுகு இமெயிலில் அனுப்பி விடும். நீங்கள் முக்கிய தகவல்க்ளை கணினியில் சேமிக்காது விட்டாலும், அவற்றை முறையாக அழித்தாலும் கூட உரிய தகவல்கள் திருடரின் கையில் போய் சேர்ந்து விடும்.


சில இடங்களில் கணினிகளைக் கண்கானிப்பதற்கென பாதுகாப்புக் கேமராக்கள் பொருத்தியிருப்பர்கள். எனவே இந்த கேமராவின் பார்வையிலிருந்தும் உங்கள அந்தரங்க தகவல்களை மறைக்க மறந்து விடாதீர்கள். .

பொதுக் கணினிகளைப் பயன் படுத்தும்போது அருகில் நடமாடும் ஆசாமிகளை இட்டும் கவனமாயிருங்கள். அவர்கள் உங்கள் பின்புறமிருந்து தோளிற்கு மேலாக நீங்கள் அறியாமலேயே உங்கள் கணினித் திரையைப் நோட்டமிடலாம்.

இணையத்தில் பொருட்கள் வாங்குதல் (Online Shopping), வங்கி நடவடிக்கை களை மேற்கொள்ளுதல் (Online Banking) போன்ற செயற்பாடுகளுக்குப் பொதுக் கணினிகள் பொருத்தமானதல்ல. எனவே அக்கண்னிக்ளில் கிரடிட் காட் விவரங்களை வழங்காது தவிர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் முக்கியமான அந்தரங்க தகவல்களை கணினியில் டைப் செய்து விட்டு வேறு வேலையாக ஒரு போதும் எழுந்து செல்லாதீர்கள் இவ்வாறு நகர்ந்து செல்வதனால் அடுத்தவர்கள் உங்கள் அந்தரங்க தகவல்களைப் பார்ப்பதற்கு வசதியாக. அமைந்து விடும்.

பிரவுஸரிலுள்ள 'Auto complete' வசதியானது எமது டைப்பிங் வேலைகளைக் குறைத்து விடக் கூடிய பயனுள்ள வசதி. எனினும் பொதுக் கணினிகளில் இநத் வசதியைப் பயன் படுத்துவது ஏற்ற செயலல்ல. இந்த வசதியை முடக்குவதற்கு இண்டர்நெட் எக்ஸ்ப்லோரரில் Tools மெனுவில் Internet Options. தெரிவு செய்யுங்கள் தோன்றும் டயலொக் பொக்ஸில் Content டேபில் AutoComplete பட்டனில் க்ளிக் செய்ய வரும் பெட்டியில் பாஸ்வர்ட் சம்பந்தப்பட்ட தெரிவுகளை நீக்கி விடுங்கள்.

அதேபோல் உங்கள் இணைய பயன்பாட்டை பிரவுசர் Temporary Internet files எனும் போல்டரில் சேமித்து விடும்.. அவற்றை அழிப்பதற்க்கு இதே Internet Options டயலொக் பொக்ஸில் General டேபில் Temporary Internet files என்பதன் கீழ் Delete cookies, Delete Files பட்டன்களில் க்ளிக் செய்து விடுங்கள்.

பயபொக்ஸ் பிரவுஸரில் Tools > Options > Privacy க்ளிக் செய்யுங்கள். அங்கு Clear History When Firefox Closes என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றுங்கள். இதன் மூலம் பய பொக்ஸ் பிரவுஸரில் உங்கள் இணைய நடவடிக்கைகள் அனைத்தையும் அழித்து விடலாம்.

பொதுக் கணினி பயன்பாட்டில் மேற்சொன்ன விடயங்களுக்கு மேலாக சமயோசித புத்தியும் உங்களிடம் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

-அனூப்-

Wednesday, November 17, 2010

இணையத்தில் குர்-ஆன்


இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் வாசகர்களுக்கு ஐடி வலம் சார்பாக பெருநாள் வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு பயனுள்ள ஒரு இணைய தளத்தையும் அவர்களுக்காக அறிமுகம் செய்ய நினைக்கிறேன். தளத்தின் பெயர் தன்ஸீல். இந்த இணைய தளத்தில் முஸ்லிம்களின் புனித நூலான அல் குர்-ஆன் முழுமையாக எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் அல் குர்-ஆனின் எந்த ஒரு அத்தியாயத்தையும் விரும்பிய ஒழுங்கில் பார்வையிடவோ ஒலிக்க வைக்கவோ முடியும். அத்தோடு அல்குரானை முறையாகவும் அழகாகவும் ஓதுவதில் தேர்ச்சி பெற்ற (காரிகள்) பலரின் குரலில் கேட்கவும் முடிகிறது. அல்குரானின் மொழி பெயர்ப்பையும் கூட தமிழ் உட்பட ஏராளமான மொழிகளில் பெறக்கூடியதாகவும் இருப்பது இந்த தளத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். இந்த இணைய தளத்தைப் பார்வையிட நீங்கள் செல்ல வேண்டிய முகவரி www.tanzil.info

-அனூப்-