Tuesday, April 26, 2011

PDF to Word Doc Converter

PDF to Word Doc Converter

PDF to Word Doc Converter   என்பது டோபி நிறுவனம் உருவாக்கிய Portable Document Format எனும் பீ.டி.எப் கோப்புக்களை  மாற்றியமைக்கவென  உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு இலவச மென் பொருள் கருவியாகும்.. எளிமையான இடை முகப்புடன் கூடிய இந்தக் கருவியை எவரும்   இலகுவாகப் பயன் படுத்தக் கூடியதாயுள்ளது. .

இதன் மூலம் ஒரு பீடிஎப் பைலை இலகுவாக வர்ட் பைலாக மாற்றிக் கொள்ளலாம.  பீடிஎப் பைல் ஒன்றிலுள்ள எழுத்துக்களை (text) மட்டுமல்லாது படங்கள் மற்றும் உருவங்களையும் கூட அதன் பக்க அமைப்புக் கெடாத வண்ணம் வர்ட் பைலுக்கு மாற்றிக் கொள்ளலாம். அத்தோடு  பீடிஎப் பைலுள்ள அத்தனை பக்கங்களையும் நீங்கள் விரும்பிய் ஒழுங்கில் வர்ட் பைலாக மாற்றிக் கொள்ளலாம.

பீடிஎப் கோப்புக்களைப்  படிக்க உதவும் டோபி அக்ரோபெட் ரீடர்  மற்றும் எம்.,எஸ், வர்ட் ப்லிகேசன்களைக் கணினியில்  நிறுவபபடா விட்டாலும் இதனை செயற்படுத்தலாம். என்பது ன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.


இந்த மென்பொருள் கருவியை நீங்கள் http://www.hellopdf.com/ எனும் இணைய தளத்திலிருந்து இலவ்சமாக தறவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பைல் அளவு 1.07 எம்.பீ

-அனூப்-

Sunday, April 24, 2011

Email Backup!


மறந்து விடாதீர் - Email Backup!

வெப் மெயில் (web mail) சேவைகளான ஜிமெயில், யாகூ, விண்டோஸ் லைவ் மெயில் போன்றவற்றை நமது கணினியிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் எப்பாகத்திலிருந்தும் அணுகக் கூடிய வசதியானது அவை மின்னஞ்சல் பயனரிடையே மிகுந்த வரவ்பேற்பைப் பெறக் காரணமாய் அமைந்துள்ளது.
மேலும் இந்த வெப் மெயில் மூலம் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பவோ அல்லது பெறவோ அதற்கென தனியாக மின்னஞ்சல் மென்பொருள்களை நிறுவாமலேயே வழமையான பிரவுஸர் கொண்டே எளிமையாகவும் இலகுவாகவும் கையாள முடிகிறது,


எனினும் வெப் மெயில் சேவை மூலம் எமக்குப் பல வசதிகள் கிடைக்கப் பெற்றாலும், பொப் மெயில்களைக் கையாள்வதற்குப் பயன்படும் மின்னஞ்சல் க்லையன்ட் (mail client) மூலம் கிடைக்கும் எமது மின்னஞ்சல்களை எமது கணினியிலேயே தேக்கி வைக்கும் வசதியானது கிடைப்பதில்லை. .

இதன் காரணமாக வெப் மெயில் சேவை வழங்கும் நிறுவன சேர்வர் கணினிகளில் சில வேளைகளில் கோளாறு ஏற்படும்போது உங்கள் மின்னஞ்சல் கணக்கை எந்நேரத்திலும் நீங்கள் இழக்க நேரிடலாம் அல்லது உங்கள் கணக்குக்குரிய அனைத்து மின்னஞ்சல்களும் அழிக்கப்பட்டு (Reset)) இன்றுதான நீங்கள் புதிதாய் ஒரு மின்னஞ்சல் கணக்கை ஆரம்பித்தது போல் காட்டி விடும். 


வெப் மெயில் சேவையைப் பயன் படுத்தும் எவரும் இவ்வாறான நிலைமையை எதிர் கொள்ளச் சாத்தியம் உண்டு. உங்கள் மின்னஞ்சல்களை இழக்க நேரிடலாம் என நீங்கள் அஞ்சினால் உடனடியாக அவற்றை பேக்கப் (backup) செய்து கொள்ளுங்கள்.

வெப் மெயில் கணக்கைப் பயன்படுத்தியே மின்னஞ்சல்கள் அனைத்தையும் உங்கள கணினியிலேயே பாதுகாப்பாக சேமித்துக் கொள்ளலாம். இதனையே இமெயில் பேக்கப் எனப்படுகிறது. வெப்மெயில் சேவை வழங்கும் நிறுவனங்களும் தமது பயனர்களின் மின்னஞ்சல்கள் அனைத்தையும் முறையான கால இடை வெளிகளில் பாதுகாப்பாக பேக்கப் செய்து கொள்கிறது. இதன் மூலம் தான் அண்மையில் கூகில் நிறுவனத்தால் கூட இழந்த கணக்குகள அனைத்தையும் மறுபடி மீட்க முடிந்த்து.

இதே பேக்கப் வேலையை நீங்களும் உங்கள் கணினியில் முறையாக செய்து கொண்டால் என்ன? உங்களுக்கு வந்து சேர்ந்த எத்தனையோ விலை மதிப்பற்ற மின்னஞ்சல்களை இழந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ளலாமே!

வெப் மெயில்களை பேக்கப் செய்வதற்கு நான் இங்கு இரண்டு வழிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இநத இரண்டு வழிமுறைகளும் ஜிமெயில் சேவையைப் பயன் படுத்துபவர்களுக்கே. 
.
முதலாவது முறையின் படி ஒரு பொப் POP மெயில் கலையன்ட் பயன் படுத்தி பேக்கப் செய்வதாகும். அதற்கு நீங்கள் முதலில் வழமையான பிரவுஸர் மூலம் உங்கள் ஜிமெயில் கணக்கிற்கு லொகின் செய்து நுளையுங்கள். அங்கு Settings டேபில் க்ளிக் செய்து Forwarding and POP/IMAP என்பதைக் க்ளிக் செய்யுங்கள். அங்கு Enable POP for all mail (even mail that is already been downloaded)) என்பதைத் தெரிவு செய்து Save பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து மெயில்கள அனைத்தையும் உங்கள் கணினிக்கு டவுன் லோட் செய்வதற்கு ஒரு மெயில் கலையண்ட் அவசியம். அவுட்லுக் எக்ஸ்பிரஸ், யுடோரா, தண்டர்பர்ட் என பல மின்னஞ்சல க்ளையண்டுகள் பாவனையிலுள்ளன. நான் இங்கு ஓபன சோர்ஸ் (Open Source) மென்பொருளான மொஷில்லா தண்டர்பர்ட் பயன் படுத்தி விளக்குகிறேன். 

தண்டர்பர்ட் மென்பொருளை mozillamessaging.com எனும் இணைய தளத்திலிருந்து டவுன் லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் தண்டர்பர்ட்டைத் திறந்து File > New  ஊடாக Mail Account என்பதைத் தெரிவு செய்யுங்கள.. அங்கு உங்கள் ஜிமெயில் கணக்குக்குரிய லொகின் விவரங்களை வழங்கி Continue க்ளிக் செயுங்கள்.

தன்டர்பர்ட் உங்கள் கணக்கு விவரங்களைச் சரிபார்த்த பின்னர் தோன்றும் திரையில் POP என்பதைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள Create Account பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.

இப்போது தண்டர் பர்ட் ஜிமெயில் சேர்வரிலிருது உங்கள் கணக்குக்குரிய மின்னஞ்சல், அதனோடு வந்த இணைப்புகள் அனைத்தையும் உங்கள கணினிக்குள் கொண்டுவர ஆரம்பிக்கும்.

ஜிமெயில் மின்னஞ்சலை பேக்கப் செய்வதற்கு நான் பரிந்துரைக்கும் இரண்டாவது வழி முறை அதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு இலவச யூட்டிலிட்டியான GMail Backup. பயன் படுத்துவதாகும். இந்த ஜிமெயில் பேக்கப்யூட்டிலிட்டி உங்கள் ஜிமெயில் கணக்குக்குரிய மின்னஞ்சல், மற்றும் அதனோடு வந்த இணைப்புகள் என அனைத்தையும் உங்கள் கணினியில் நீங்கள் குறிப்பிடும் போல்டருக்குள் பாதுகாப்பாக சேமித்து விடுகிறது.

இதன் மூலம் ஜிமெயில் சேர்வரிலிருந்து உங்கள் கணக்குக்குரிய அனைத்து மெயில்களையோ அல்லது குறிப்பிட்ட தேதிகளுக்கிடையே உங்களுக்கு வந்து சேர்ந்த மெயில்களையோ வடிகட்டி உங்கள் கணினிக்கு டவுன்லோட் செய்து இணையத்தில் இணையாமலேயே ((offline)) பார்வையிடலாம். எனினும் இந்த மெயில்களைப் பார்வையிடுவதற்கு அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போன்ற ஒரு மெயில் க்ளையண்ட் அவசியம். 4.4 ஆடீ அளவுள்ள இதனை gmail-backup.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த யூட்டிலிட்டியை நிறுவிய பிறகு அதனைத் திறந்து உங்க்ள் கணக்குக்குரிய பயனர் பெயர், கடவுச் சொல், கணினியில் அதனைச் சேமிக்க வேண்டிய போல்டர், மற்றும் தேதி விவரங்களை வழங்கி Backup பட்டனில் க்ளிக் செய்து விட்டால் போது,ம் ஜிமெயில் பேக்கப் உடனடியாக தன வேலையை ஆரம்பிக்கும்.
-அனூப்-

Friday, April 22, 2011

Turn your computer quickly

கணினி இயக்கத்தை விரைவாக நிறுத்திட

விண்டோஸ் இயங்கு தளத்தில் கணினியின் இயக்கத்தை நிறுத்துவதற்குப் பல வழிகள் உள்ளன. பொதுவாகப்  பலரும் ஸ்டாட் பட்டனில் க்ளிக் செய்து வரும் டயலொக் பொக்ஸில்  சட்டவுன் தெரிவு செய்தே நிறுத்துவது வழக்கம். இந்த முறையின் படி இரண்டு படிகளில் கணினியின் இயக்கம் நிறுத்தப்படுகிறதுஎனினும் இந்த வழியை விடவும் கணினி இயக்கத்தை மிக விரைவாக ஒரேயடியாக நிறுத்தும் வசதியும் விண்டோஸ் இயங்கு தளத்தில் உள்ளது.

முதல் வழியாக நான் பரிந்துரைப்பது டெஸ்க் டொப்பில் ஒரு shortcut ஐக்கனை உருவாக்கிக் கொள்வதாகும்இந்த ஷோர்ட் கட் ஐக்கனாது  shutdown.exe எனும் விண்டோஸ் பைலைப் பயன்படுத்துகிறது.

ஷோட் கட் ஐக்கனை உருவாக்குவதற்கு முதலில் டெஸ்க் டொப்பில் ரைட் க்ளிக் செய்யுங்கள். வரும் மெனுவிலிருந்து New-Shortcut என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் கட்டத்தில் Type the location of the item எனுமிடத்தில்

; %windir%\system32\shutdown.exe -s -t 0 என டைப் செய்து நேஒவ பட்டனை அழுத்துங்கள். அடுத்து ஷோட் கட்டுக்கு விரும்பிய ஒரு பெயரையும் வழங்கி Finish பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.

கணினியின் இயக்கத்தை நிறுத்துவதற்கு நான் சொல்லும் இரண்டாவது வழி விசைப் பலகை பயன்படுத்துவதாகும். சில விசைப்ப பலகைகளில் அதற்கென தனையாக ஒரு விசை ((Power Button) காணப்படும்அந்த விசை இல்லாத  கீபோர்டில் விண்டோஸ் (Win key) விசையுடன், u விசையை அடுத்தடுத்து இரண்டு முறை அழுத்துங்கள்இந்த  கீபோட் சுருக்க விசை விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் மட்டுமே செயற்படும்.


விஸ்டா பதிப்பில் இதனைச் செயற்படுத்த விண்டோஸ் லோகோ விசையை அழுத்திய பின்னர் வலது அம்புக்குறி விசையை ((Right Arrow) மூன்று முறை அடுத்தடுத்து அழுத்திய பின்னர், u விசையை அழுத்துங்கள்,. விண்டோஸ் செவன் பதிப்பில் வின் கீயை அழுத்திய  பின்னர் Right Arrow விசையை ஒரு முறை அழுத்தி விட்டு Enter விசையைத் தட்டுங்கள்.

-அனூப்-

Wednesday, April 20, 2011

Increase the life time of your Laptop Battery

மடிக் கணினி பயன்படுத்துகிறீர்களா?


தற்போது பயன்பாட்டிலுள்ள இயங்கு தளங்களாகட்டும் அப்லிகேசன் களாகட்டும் கணினியில் அவை அதிக வளங்களைப் பயன் படுத்துகின்றன. டெஸ்க் டொப் கணினிகளில் இவற்றின் பாதிப்பை நாம் உணர்வதில்லை. எனினும்  இடத்துக்கிடம் எடுத்துச் செல்லும் மடிக் கணினிகளில் (Laptop) இவற்றின் பாதிப்பை வெகுவாக  உணரலாம். குறிப்பாக மடிக் கணினிகளில் பயன் படுத்தப்படும் மின் களங்களின் (பேட்டரி) ஆயுட் காலத்தை இவை தினமும் குறைத்து விடுகின்றன.

பேட்டரியின் ஆயுட் காலத்தை  எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது அனேகன்மாக ஒவ்வொரு மடிக் கணினி பயனர்களும்  தங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளும் ஒரு கேள்வி என்பதை உறுதியாகக் கூறலாம். பேட்டரியின் ஆயுட் காலத்தை  மடிக் கணினிக்கான  மின் சக்தியை நேரடியாக Power Cord பயன்படுத்தி  வழங்குவதன் மூலம் அதிகரிக்க முடியுமா எனக் கேட்டால் இதற்கான பதில் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும்.

மடிக்கணினிகளில் பயன் படுத்தப்படும் மின் களங்களுக்கும் அவை  செயற் படக் கூடிய ஒரு கால எல்லை உண்டு. Lithium-Ion எனும் வகையிலான பேட்டரிகள் 1000 தடவைகள் மீள் சக்தியளிக்கவோ அல்லது 2 முதல்  4 வருடங்கள் வரை பயன் படுத்தக் கூடியதாகவோ இருக்கும் எனவே வசதியான இடங்களில் பவர் கோட் பயன் படுத்துவதன் மூலம் அக்கால எல்லையை மேலும் சில காலம் நீடிக்கச் செய்யலலாம்

.மடிக் கணினிகளில் பேட்டரியின் ஆயுட் காலத்தை அதிகரிப்பதற்கான சில ஆலோசனைகளை இங்கே பட்டியலிடுகிறேன்.  
  • முறையான கால இடை வெளிகளில் ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் (Defragment) செய்து கொள்ளுங்கள். ஏனெனில் ஹாட் டிஸ்கிலுள்ள டேட்டாவைப் படிப்பதற்கு அதிக் நேரம் எடுக்குமாயின் ஹாட் ட்ரைவ் அதிக தடவை சுழல் வேண்டியிருக்கும். ஹாட் டிஸ்க் ட்ரைவ் அதிக நேரம் சுழல வேண்டி ஏற்பட்டால் மடிக் கணினி பேட்டரியின் சக்திய அதிகமாக நுகரும்.  எனவே டிப்ரெகமண்ட் செய்வதன் மூலம் ஒரு பைலுக்குரிய பகுதிகள் அனைத்தும் ஹாட் டிஸ்கில் அருகருகே நிறுத்தப்படும். இதன் மூலம் ஹாட் டிஸ்கிலிருந்து ஒரு ஃபைலை வேகமாக அணுகக் கூடியதாயிருக்கும்.  

  • லேப்டொப் திரையின் பிரகாசத் தனமையக் (brightness)  குறைத்து விடுங்கள். இதற்கான வசதி கீபோர்டில் தரப்பட்டிருக்கும். எனினும் இந்த .விசை கணினிக்குக் கணினி மாறுபடலாம்

  • பின்னணியில் இயங்கும் ஸ்க்ரீன் சேவர் போன்ற ப்ரோக்ரம்களையும் மற்றும் நீங்கள் பயன் படுத்தாத எப்லிகேசன்களையும் நிறுத்தி  விடுங்கள். இதன் மூலம் சீபியூ வின் பயன்பாடு வெகுவாகக் குறைகிறது. அதனால் சிபியூ நுகரும்  மின் சக்தியின் அளவும் குறைகிறது. விண்டோஸ் இயங்கு தளத்தில் Ctrl+Alt+Del விசைகளை ஒரே தடவையில் ழுத்துவதன் மூலம் டாஸ்க் மேனெஜரை வரவழைத்து அங்கு Processes தெரிவு செய்து தேவையற் ப்ரோக்ரம்களை நிறுத்தி விடலாம்.  

  • மடிக் கணினி பேட்டரியின் உலோகப் பகுதியை அற்ககோலில் தோய்க்கப்பட்ட ஒரு துணி கொண்டு சுத்தம் செய்து விடுங்கள். இதன் மூலம் பேட்டரியிலிருந்து மடிக் கணினிக்கு மின் சக்தி மேலும் தின்பட வழங்கப்பட்டும்.

  • முறையானதோர் மின் வலு திட்டமொன்றை  (Power Scheme) உங்கள் மடிக் கணியில் பேணுங்கள்.  இதற்கான வசதி விண்டோஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் செவன் பதிப்புகளில் தரப்பட்டுள்ளது. முடிந்தளவு Low Power Mode இல் மடிக்கணினியை ப் பயன் படுத்துங்கள்.

  • வை-ஃபை,  ப்லூடூத் போன்ற கம்பியில்லா இணைப்புக்கள் அதிக மின் சக்தியைப் பயன் படுத்துகின்றன. எனவே அவற்றைப் பயன் படுத்தாத போது நிறுத்தி விடுங்கள். இதன் மூலாம் அதிக மின் வலுவை சேமிக்க முடியும்.

  • - மடிக் கணினி பேட்டரியில் இயங்கும்  போது ஒரே சமயத்தில் ஒரு எப்லிகேசனில் மாத்திரம் பனியாற்றுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட எப்லி கேசன் களை இயக்கும் போது (multitask) அவை அதிக மின் சக்திய நுகர வேண்டியிருக்கும். 
  • USB போர்ட் மூலம் இணைக்கப்படும் வயர்லஸ் மவுஸ், டிஜிட்டல் கேமரா போன்ற புற சாதனங்களை அவற்றைப் பயன் படுத்தாத் போது அகற்றி  விடுங்கள்.

  • CD  / DVD போன்றவற்றை நீங்கள் பயன் படுத்தா விடினும அவற்றை சிடி ட்ரைவில் இட்டு வைக்காதீர்கள். ஏனேனில் சீடி ட்ரைவ் சுழல்வதாலும்  பேட்டரியின் ஆயுட் காலம் குறைந்து விடும்

  • மடிக் கணினியை குறுகிய நேரத்திற்கு நிறுத்தி வைக்க விரும்பின்  standby நிலையில் வைப்பதை விட Hibernate நிலையில் வைப்பதன் மூலம் பேட்டரிய்ல் அதிக மின் சக்தியை சேமிக்கலாம். ஏனெனில் Stand By நிலையில் ஹாட் டிஸ்க் மற்றும் திரையின் இயக்கம் நிறுத்தப் பட்டாலும் நினைவகம்  இயக்கத்திலிருக்கும்.  இதனால் மின் சக்தியும் விரயமாகும். எனவே ஸ்டேண்ட் பை நிலையில் கணினியை வைக்காமல் ஹைபனேட் செய்து விடுங்கள். ஹைபனேட் செய்வதன் மூலம் கனினியியில் இறுதியாக நடை பெற்றுக் கொண்டிருந்த செயற்பாட்டை சேமித்து விட்டு கணினி முழுமையாக ஓய்வுக்குச் செல்கிறது.

  • மடிக் கணினியில் வெப்பத்தை வெளியேற்ற வென அமைக்கப்படிருக்கும் துவாரங்கள் அடைக்கப்படாததை உறுதி செய்து கொள்ளுங்கள். துவாரங்கள் அடைக்கப்படின் கணினி மேலும் வெப்பமடைந்து பேட்டரியின் ஆயுட் காலத்தை குறைத்து விட வாய்புள்ளது. எனவே மடிக் கணினி பயன் படுதும் இடத்தை காற்றோட்டமுள்ளதாயும் தூசுகள் படியாதவாறு சுத்தமான இடத்திலும்  வைத்திருங்கள்.

-அனூப்-

Sunday, April 17, 2011

What is Cloud Computing?

நாளைய உலகை ஆளப் போகும்  மேகக் கணினி !



கடந்த சில வருடங்களாக க்லவுட் கம்பியூட்டிங் (Cloud Computing /மேகக் கணினி) எனும் வார்த்தை தகவல் தொழில் நுட்பத் துறையில் உலவுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். (கேட்காமலும் இருந்திருக்கலாம்). இந்தக் க்லவுட் கம்பியூட்டிங் எனப்படுவது அடிப்படையில் கணினித் தொழில் நுட்பத்தின் மத்திய நிலையமாக இணையத்தைப் பயன்படுத்துவதையே குறிக்கிறது.

மின்னஞ்சல் ஒன்றை ஒரு நண்பருக்கு அனுப்பிய பிறகு அதனை அவர் பெறும் வரையில் அந்த மின்னஞ்சல் எங்கு தங்கியிருக்கும் என ஒரு ஒரு முறை என் மாணவர்களிடம் கேட்டேன். அப்போது ஒரு மாணவன் அந்த மின்னஞ்சல ஆகாயத்தில் மேகம் போல் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் என்றான். அவன் சொன்ன பதில் அப்போது எனக்கு நகைப்புக்குரிய
விடயமாகத் தெரிந்தாலும் இன்றைய மேகக் கணினி எனப்படுவது அவனது கற்பனையுடனும் ஒத்திருப்பதை நான் இன்று நினைத்துப் பார்க்கிறேன்.

நாம் அனுப்பிய மின்னஞ்சல் உலகில் எங்கேயோ உள்ள ஒரு அன்றாட கணினி பயன் பாட்டின்போது எமக்குத் தேவையான எப்லிகேசனை எமது கணினியில் நிறுவாமலேயே இணையம் வழியே அந்த சேவையைப் பெறுவதையே மேகக் கணினி எனப்படுகிறது.

நீங்கள் ஜிமெயில், கூகில் கேலண்டர், யாஹூ போன்ற ணை சேவைகளைப் பயன் படுத்துகிறீர்கள் என்றால் நீங்களும் கிலவுட் கம்பியூட்டிங் பயன் படுத்துகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இவை அனைத்தும் க்லவுட் கம்பியூட்டிங் சேவையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இந்த சேவைகளை நீங்ள் பெறும் போது உலகில் எங்கோ ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள சேர்வர் கணினித் தொகுதியோடு ணைந்து கொள்கிறீர்கள். .

உதாரணமாக மின்னஞ்சலை எடுத்துக் கொள்ளுங்கள். மின்னஞ்சலை பொப் மெயில், வெப் மெயில் என இரு வகைகள் உள்ளன. பொப் மெயிலை அணுகுவதற்கு எமது கணினியில் அதற்குரிய விசேட மென்பொருளை நிறுவ வேண்டும். எமது கணினியிலிருந்து மாத்திரமே அதனை அணுகலாம். ஆனால் ஜிமெயில், யாகூ போன்ற வெப் மெயில் சேவைகளை அணுகுவதற்கு விசேட மென்பொருள் எதனையும் நிறுவ வேண்டியதில்லை. அதனை வெப் பிரவுசர் மூலம் இணைய இணைப்புள்ள எந்த ஒரு கணினியிலிருந்தும் உலகின் எப்பகுதியிலிருந்தும்
அணுகக் கூடிய வசதியைப் பெறுகிறோம். இது மேகக் கணினி என்பதற்கு ஒரு எளிமையான உதாரணமாகும். .நாம் செல்லுமிடமெல்லாம் அகாயம் இருக்கிறது. எந்த ஊருக்குப் போனாலும் எந்த நாட்டுக்குப் போனலும் அன்னாந்து பார்த்தால் நமது ஊரில் பார்த்த அதே ஆகாயம் தான் நம் கண்ணில் தெரியும். அதே போன்றதுதான் இந்த மேகக் கணினியும். நமது தனிப்பட்ட பைல்கள். அலுவலக பைல்கள் தேவையான எப்லிகேசன் மென்பொருள் என அனைத்தும் ஆகாயத்திலேயே இருப்பதால் நாம் எங்கு சென்றாலும் அவையும் நம்மைப் பின் தொடர்ந்து வரும். .


வணிக நிறுவனங்களில் கணினி லையமைப்பைக் காட்டும் ரை படங்களில் இணையத்தைக் குறிப்பதற்கு மேகம் போன்று வரைந்து காண்பிக்கப்பட் டிருக்கும். இதிலிருந்தே இந்த க்லவுட் கம்பியூட்டிங் எனும் சொல் அறிமுகமானது.

தற்போது இணையம் சார்ந்த கணினி மென்பொருள் பயன்பாடு மிக வேகமக வளர்ச்சியடைந்துள்ளது. ப்லோக் எனும் வலைப்பதிவு மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் பல ஒன்லைன் சேவைகளுக்குக் கிடைக்கப் பெற்று வரும் வரவேற்பு காரணமாக க்லவுட் கம்பியூட்டிங் துறையின் பால் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.

2007 ஆம் ஆண்டுகளில் கூகில் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையுடன் வேர்ட் ப்ரோஸெஸ்ஸிங் (Word Processing), ஸ்ப்ரெட்ஸீட் (Spreadsheet), ப்ரசன்டேசன் (Presentation) போன்ற அலுவலக பயன்பாட்டுக்கான எப்லிகேசன்களை இணையம் வழியே பயன்படுத்தக் கூடிய வகையில் கூகில் டொக்ஸ் (Google Docs) எனும் பெயரில் அறிமுகப்படுத்தியது.. அதன் மூலம் அனைத்து அலுவலகக் கணினிப் பயன்பாட்டையும் மேகக் கணினிக்குள் அடக்கி விட்டு ஏனைய மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சவால் விட்டது. இதன் காரணமாக மைரோஸொப்ட், அடோபி போன்ற ஏனைய மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் தனது அப்லிகேசன்களை ஆகாயத் துக்கே நகர்த்த வேண்டிய கட்டாயத்துக்குள்ளானது. மைக்ரோஸொப்ட் நிறுவனம் கலவுட் கம்பியூட்டிங் சேவையை Software as a Service எனப் பெயரிட்டது.

மேகக் கணினியில் வணிக நிறுவனங்களுக்கான உட்கட்டமைப்பு சேவை Infrastructure as a Service (IaaS), மென்பொருள் உருவாக்குனர்களுக்கான இயங்குதள சேவை Platform as a Service (PaaS), மற்றும் வழமையான பயன் பாட்டு மென்பொருள் சேவை Software as a Service (SaaS) என பல் வேறுபட்ட சேவைகள் உள்ளன.

சாஸ் எனபது மேகக் கனினியில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. சாதாரண கணினிப் பயனர் இந்த சாஸ் எனும் சேவையே பயன் படுத்துகின்றனர். சாஸ் சேவையில் எப்லிகேசன்கள் எதுவும் நமது கனினியில் நிறுவ வேண்டியதில்லை. அந்த சேவையை வழங்கும் நிறுவன சேர்வர் கணினியிலேயே அவை நிறுவப்படுகிறது. இதன் காரணமாக கணினியும் இணைய இணைப்பும் இருக்கும் பட்சத் தில் எங்கிருந்தும் தேவையான எப்லிகேசனை இயக்கலாம். அதாவது அன்றாட பயன் பாட்டிலுள்ள எப்லிகேசன் மென்பொருள்களை இணையத்தினூடக வெப் பிரவுஸரைக் கொண்டே இயக்கக் கூடியதாயுள்ளது.
சாஸ் ப்லிகேசனுக்கு உதரணமாக கூகில் எப்ஸ் (Google Apps) தரும் அலுவலக பயன்பாட்டு மென்பொருள் சேவையான Google Docs, ஜிமெயில், கூகில் கேலண்டர், மற்றும் மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் Office Live போன்ற வற்றைக் குறிப்பிடலாம்.
இந்த சாஸ் சேவையில் உருவாக்கிய பைல்களையும் ஆகாயத்திலேயே சேமித்துக் கொள்ளலாம் அதனை ஓன்லைன் ஸ்டொரேஜ் (Online Storage) எனப்படும்.

இனிமேல் உங்கள் பைல்களைக் காவிச் செல்ல சிடி வேண்டாம், பென் டரைவ் வேண்டாம்., உங்கள் தனிப்பட்ட பைல்கள் அலுவலக பைல்களை என அனைத்தையும் மேகக் கனினியில் ஏற்றி விட்டு எந்த ஊருக்கும் நடையைக் கட்டலாம். அலுவலகம் செல்லாமலேயே அலுவலகக் கருமங்களை வீட்டிலிருந்தே செய்து முடிக்கலாம்.
அணமைக் காலங்களில் அனேகமான ணி நிறுவனங்கள் தமது வணிக செயற்பாடுகள் அனைத்தையும் இணையம் சார்ந்ததகாவே (Web Based) மாற்றிக் கொண்டுள்ளன. அத்தோடு தமது வணிக தேவைகளுக்குப் பிரத்தியேகமாக சேர்வர் கணினிகளை நிறுவாமால் அதற்குப் பதிலாக ஆகாயத்துக்கே நகர்த்த ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாக அவற்றைப் பராமரிக்கவும் அதிலுள்ள தகவல்களைப் பாதுகாக்கவும் ஏற்படும் செலவுகள் குறைக்கப்படுவதுடன் வாடிக்கையளர்களுக்கு விரைவான மற்றும் திருப்திகரமான சேவைகளையும் வழங்கக் கூடிய வசதி கிடைக்கிறது. க்லவுட் கம்பியூட்டிங் சேவை வழங்கும் ஒரு நிறுவனம் அடிப்படை சேவைகளை இலவசமாக வழங்கும். எனினும் அதன் மேம்பட்ட சேவைகளைப் பெறுவதற்குக் கட்டணம் அறவிடும்.

எதிர்காலத்தில் கணினிப் பயன்பாடு முற்று முழுதாய் இணையம் சார்ந்ததாகவே இருக்கப் போகின்றது. அதாவது நாளைய உலகை இந்தக் மேகக் கணினிகளே ஆளப்போகின்றன. 

-அனூப்-