Sunday, May 29, 2011

Microsoft Fix It Center


கணினியில் இயக்கத்தில் ஏதும் சிக்கலேற்பட்டால் அதற்கான காரணத்தைக் கண்டு பிடித்து சிக்கலைத் தீர்ப்பதை கணினிப் பயனர்கள் அனைவரும் ஒரு சலிப்பூட்டும் அனுபவமாகவே கருதுகின்றனர்.
இனிமேல் அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் சலிப்ப்டைய வேண்டாம். உங்களுக்கென பைக்ரோஸொப்ட் நிறுவன்ம் ஒரு இலவச கருவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கணினியில் ஏற்படும் வன்பொருள் மற்றும் மென்பொருள் சார்ந்த பல்வேறு வகையான சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்கிறது Microsoft Fix It எனும் மென்பொருள் கருவி. .
இந்தக் கருவி உங்கள் கணினியை முழுமையாக ஸ்கேன் செய்து உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள வன்பொருள் மற்றும் மென்பொருள்களைப் பரீட்சித்து உங்களை சிக்கல்களைக் கண்டறிந்து சரி செய்யக் கூடிய அதேவேளை கணினியில் மேலுமுள்ள சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றை உங்கள் முன்னே பட்டியலிடுகிறது,.
அதேபோல் மேலும் புதிதாக கணினி சிக்கல்களைக் கண்டறியக் கூடிய கருவிகளை மைக்ரோஸொப்ட் வெளியிடும் போது அவற்றை டவுன்லோட் செய்து இந்த Fix It Center -இல் சேமித்து விடுகிறது.
இது விண்டொஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் செவன் பதிப்புகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு இலவச யூட்டிலிட்டியாகும். இதனை மைக்ரோஸொப்ட் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். அனூப்-

What is System Bus?


என்ன இந்த System Bus ?


கணினி மதர்போர்டில் ஒரு பகுதியிலிருந்து மற்றுமொரு பகுதிக்கு டேட்டாவைக் கடத்தும் பாதையையே பஸ் எனப்படுகிறது. இந்தப் பாதை மதர்போடிலுள்ள பிற பகுதிகளை சீபியூவுடனும் நினைவகத்துடனும் இணைக்கிறது. இதனை இண்டர்னல் பஸ் (internal bus) எனவும் அழைக்கப்படும். அதேபோல் எக்ஸ்பேன்சன் பஸ் (expansion bus) எனற பகுதியும் உண்டு. இது சவுண்ட் காட், வீஜிஏ காட், மோடெம் போன்ற எக்ஸ்பேன்சன் போர்டுகள் சீபியூ மற்றும் நினைவகத்தை அணுகுவதற்கான பாதையாகும். இந்த இரு வகை பஸ்களும். எட்ரஸ் பஸ் (address bus) டேட்டா பஸ் (data bus) என இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். டேட்டா பஸ் என்பது டேட்டாவைக் கடத்தும் அதே வெளை எட்ரஸ் பஸ் எனப்படுவது டேட்டா எப்பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பதைக் காட்டுகிறது.


பஸ்ஸின் அளவை அதன (width) அகலம் எனப்படும். ஒரே நேரத்தில் எவ்வளவு டேட்டாவைக் அனுப்ப முடியும் என்பதை இந்த பஸ் வித் தீர்மானிக்கிறது. உதாரணமாக 16 பிட் பஸ்ஸானது 16 பிட் கொண்ட டேட்டாவை கடத்தக் கூடியது.

ஒவ்வொரு பஸ்ஸும் இயங்கும் வேகத்தைk க்லொக் ஸ்பீட் (clock speed) எனப்படும். இது மெகா ஹேட்ஸில் இல் அளவிடப்படும். அதிக வேகம் கொண்ட பஸ் மூலம் விரைவாக டேட்டாவைக் கடத்த முடியும். அதன் காரணமாக ஒரு அப்லிகேசன் வேகமாக இயங்கும்.

-அனூப்-

What is Overclocking?

Overclocking   என்றால் என்ன?

கணினி வன்பொருள்களான மதர்போட், ப்ரோஸெஸ்ஸர், நினைவகம் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அவை செயற்படக் கூடிய் உச்ச வேகமொன்றை நிர்ணயித்திருப்பர்கள். அவர்கள் பரிந்துரைக்கும் இவ் வேகத்தினை மாற்றியமைத்து செயற்திறனை அதிகரிப்பதையே (Overclocking)   ஓவர்க்லொக்கிங்  எனப்படுகிறது.

பொதுவாக (CPU ) சிபியூ தயரிக்கும் நிறுவனங்கள் அவை எந்த வேகத்தில் இயங்கும்போது அதன் இயக்கம் பாதிக்கப்படுகிறது என்பதைப் பரீட்சித்து அவ் வேகத்தை விட ஒரு படி குறைவாக அதன் உண்மையான வேகத்தை நிர்ணயிப்பார்கள். .எனினும் கணினியின் ஸ்திரத் தன்மை பாதிப்படையா வண்ணம் அவ் வேகத்தை விட சிபீயூவின் வேகத்தை மேலும் அதிகரிக்க முடியும்.

சில வேளைகளில் சிபியூ தயாரிப்ப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட வேகம் கொண்ட ப்ரோஸெஸருக்குத் தட்டுப்பாடு நிலவும் ச்ந்தர்ப்பத்தில் தாம் தயாரித்த அதிக வேகம் கொண்ட ப்ரோஸெஸ்ஸர்களையும் வேகம் குறைந்த ப்ரோஸெஸ்ஸர்களாகப் பொதி செய்து அனுப்புவதும் உண்டு. இந்த ப்ரோஸெஸ்ஸர் கிடைக்கப் பெறும் வாடிக்கையாளர் ஓவர்க்ளொக்கிங் செய்வதில் கை தேர்ந்தவராயிருந்தால் அதன் மூலம் உச்ச பயனைப் பெறலாம்.

சிபியூவை ஓவர்க்லொக்கிங் செய்வதன் மூலம், மட்டும் கணினியின் செயற் திறனில் வேகத்தை எதிர்பார்க்க முடியாது. கூடவே மதர்போட் பஸ் வேகம் (System Bus), நினைவகம் போன்றவற்றிலும் வேக அதிகரிப்பு இருக்க வேண்டும்,. உதாரணமாக ஓவர் க்லொக்கிங் மூலம் சிபீயுவில் 20 % வேக அதிகரிப்பு எற்படுத்தப்பட்டாலும் கணினியின் முழுமையான இயக்கத்தில் 20 வீத அதிகரிப்பை அவதானிக்க முடியாது. எனினும் ஏனைய பாகங்களைவிட சீபியூ அதிக வேகத்தில் இயங்க வேண்டும் என்பது நியதி. எனவே அதற்க்கேற்ப ஏனைய பாகங்களிலும் ஓவர்க்லொக்கிங் மூலம் முறையாக வேக அதிகரிப்பை உண்டாக்கி சமப்படுத்தல் வேண்டும்.

ஒவர்க்லொக்கிங் செய்வதன் மூலம் சீபியூ வழமையை விட வேகமாக செயற்படுவதோடு அதிக வெப்பத்தையும் வெளியேற்றும். ,எனவே அதற் கிசைவான சீபியூவை குளிர்விக்கும் கூலிங்பேன் (Cooling Fan) மற்றும் வெப்பத்தை உறிஞ்சும் ஹீட்சின்க் (heat sink) போன்றவறையும் பயன் படுத்த வேண்டும்.

முறையாக ஓவர்க்லொக்கிங் செய்யப்படாதபோது கணினியின் ஸ்திரத்தனமை பாதிக்கப்படும். சில வேளை சீபியூ முழுமையாக செயலிழக்கலாம் அல்லது அதன் ஆயுட்காலம் குறைவடையலாம்

ஓவர்க்லோக்கிங் செய்து மதர்போர்டின் System Bus வேகத்தை அதிகரிப்பதன் மூலமும் கணினியின் இயக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அவதானிக்க முடியும். ஏனெனில் அப்போது கணினியிலுள்ள அனைத்து பாகங்களும் வேகமாக இயங்கும். மேலும் சீபியுவின் வேகத்தில் ஏற்படுத்தப்படும் அதிகரிப்பு மதர்போர்டடில் அதிகரிக்கப்பட்ட பஸ் வேகத்துடன் ஒத்திசைவதால் கணினி இயக்கத்தில் வேக அதிகரிப்பை அவதானிக்க முடியும். எனினும் மதர்போர்டை ஓவர் க்லொக்கிங் செய்வது மதர்போர்டிலுள ஏனைய சிறு பாகங்களை அதி உயர் வேகத்தில் இயங்க வைப்பதால் மதர்போட் பழுதடைவதற்கான வாய்ப்புமுள்ளது.

மதர்போர்டுகள் பல்வேறு பஸ் ஸ்பீடில் இயங்க வைக்கக் கூடியதாக தயாரிக்கப்படுவதனால் அவற்றைப் பல்வேறு நிலைகளில் ஓவர்க்லொக்கிங் செய்யலாம. எனினும் மதர்போட் பஸ் வேகத்தை மாற்றியமைத்து ஏனைய வன்பொருள் பாகங்களும் அதனுடன் ஒத்திசைவதாக இருந்தால் மாத்திரமே சிறந்த பெற்பேற்றைப் பெறலாம்.

ஓவர் க்லொக்கிங் செய்வதற்குப் பயோஸ் செட்டப்பில் மாற்றத்தை ஏற்படுத்தல், மதர்போர்டில் ஜ,ம்பர்களை மாற்றியமைத்தல், அதற்கென விஷேட கருவிகளைப் பயன் படுத்தல் போன்ற பல்வேறு வழி முறைகள்பின்பற்றப்படு கின்றன.

-அனூப்-

Sunday, May 22, 2011

M File Anti-copy

 M File Anti-copy

பைல் ஒன்றைப் பிரதி செய்வதிலிருந்தும் அதன் பெயரை மாற்றுவதிலிருந்தும் தடுப்பதற்கான வசதி விண்டோஸ் இயங்கு தளத்தில்தரப்படவில்லை. இதற்கான மூன்றம் தரப்பு மென்பொருளே M File Anti-copy. இதன்  மூலம் பைல் ஒன்றைப் பிரதி செய்யாமலும் பெயரை மாற்றாமலும் தடுக்க முடிவதோடு அதனை இடமாற்றம் செய்வது  அழிப்பது (டெலீட்) போன்ற செயற்பாடுகளிலிருந்தும் தடுக்கலாம். மேலும் பைல்களைப் பிறர் திறந்து பார்க்க முடியாமல் அவற்றிற்குப் பாஸ்வர்ட் பாதுகாப்பும் கூட வழங்கலாம்.

இவை தவிர விண்டோஸிலுள்ள  folder options, Task manager, Registry Editor, Search போன்றவற்றை செயற்படாமல் முடக்கி விடவும் முடிகிறது. இந்த மென்பொருள் கருவியைக் கணினியில் நிறுவி விட்டு “Enable or Disable Protection பட்டனில் க்ளிக் செய்து பிரதி செய்வதிலிருந்து தடுப்பதற்கான பைல்களைக் காட்டி விடுங்கள். இதன் மூலம் பைல்களை மட்டுமன்றி போல்டர் ட்ரைவ் போன்றவற்றிற்கும் பாதுகாப்பு வழங்க முடியும்.

விண்டோஸ் இயங்கு தளத்தின் எந்தப் பதிப்பிலும் இயங்கும் இதனை http://www.softpedia.com/ எனும் இனைய தளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். இது ஒரு ஷேர்வெயார் (Shareware) என்பதால் 20 தடவைகள்  மட்டும் இயக்கிப் பரீட்சித்துப் பார்க்கலாம்பைல் அளவு 1.8 மெகாபைட்.

-அனூப்-

Friday, May 20, 2011

Google Desktop

கூகில் டெஸ்க்டொப்

கூகில் டெஸ்க்டொப் என்பது விண்டோஸ், லினக்ஸ், மேக் இயங்கு தளங்களுகென உருவாக்கப்பாட்ட ஒரு தேடற் கருவியாகும். இது உங்கள் கணினி ஹாட் டிஸ்கில் உள்ள பைல், போல்டர் மற்றும் மின்னஞ்சல்களைத் தேடிப் பெறும் வசதியோடு, இணையத்தில தகவல்களைத் தேடுதல், மற்றும் நாட் காட்டி, கூகில் டொக்ஸ்., யூடியூப், ஜிமெயில், செய்தியறிக்கை, வானிலை அறிக்கை போன்ற ஏராளமான வசதிகளை வழங்கக் கூடிய  டெஸ்க்டொப் பயன் பாட்டுக் கருவிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

பயன்படுத்துவதற்கு எளிமையான இடை முகப்பைக் கொண்டுள்ள கூகில் டெஸ்க்டொப் கருவி  1968 KB அளவு கொண்டதுஇதனை நீங்கள் ஒரே நிமிடத்தில் கணினியில் நிறுவி விடலாம். இதனை  நிறுவியதும்  டெஸ்க்டொப்பில் வலது புறம் காட்சியளிக்கும். எனினும் நீங்கள் அதனை விருப்பம் போல் டெஸ்டொப்பின் இடது புறமோ அல்லது டாஸ்க் பாரிலோ நிறுத்தலாம். இது விண்டோஸ் விஸ்டா மற்றும் செவன் பதிப்புக்களில் வரும் சைட் பாருக்கு ((Side Barநிகரானது. இந்த சைட் பாரில் ரைட் க்ளிக் செய்வதன் மூலம் நீங்கள் விரும்பும் பணிகளை மெற்கொள்ளலாம்.

மிக எளிமையாகப் பயன் படுத்தக் கூடியவாறு கூகில் டெஸ்க்டொப்பின் இடை முகப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சைட் பாரிலிருந்தே கூகில் தளத்தில் உங்கள் தேடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

சைட் பாரில் ரைட் க்ளிக் செய்து Add gadgets தெரிவு செய்யும்போது புதிதாக ஒரு விண்டோ தோன்றி கூகில் மற்றும் பிற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட கருவிகளை (gadgets) வெவ்வேறு தலைப்புக்களின் கீழ் பட்டியலிடக் காணலாம். அவற்றுள் விரும்பியதைத் தெரிவு செய்து கூகில் டெஸ்க்டொப்பில் இணைத்துக் கொள்ள முடியும்


கூகில் டெஸ்க்டொப்ஒரு இலவச யூட்டிலிட்டி, இது விண்டோஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் செவன் பதிப்புக்களில் சிறப்பாக இயங்குகிறது. இதனை நீங்கள் desktop.google.com எனும் தளத்திலிருந்து டவுன்லோட் செய்யலாம்.

-அனூப்-

Tuesday, May 17, 2011

Wordmarkit - view all fonts in your PC


எழுத்துருக்களை ஒரே நேரத்தில்  பார்வையிட  wordmark.it



இணையத்தில் ஏராளமான எழுத்துருக்கள் கொட்டிக் கிடக்கின்றன. மேலும் அவை இலவசமாகவே கிடைக்கின்றன என்பதனால் நாமும் நமது கணினியில் நூற்றுக்கு மேற்பட்ட எழுத்துருக்களை டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்வோம். இவ்வாறு ஏராளமான எழுத்துருக்களை நிறுவிக் கொண்டாலும் ஆவணமொன்றை டைப் செய்து விட்டு அதற்குப் பொருத்தமான எழுத்துருக்களை தேடிப் பிரயோகிப்பதற்குத் திண்டாடிப் போன அனுபவம் கணினிப் பயனர் பலருக்கு ஏற்பட்டிருக்கும். ஏனேனில் டைப் செய்த எழுத்துக்களைத் தெரிவு செய்து பின்னர் அதனை ஒவ்வொரு எழுத்துருவுக்கும் மாற்றி மாற்றி திருப்தியடையும் மட்டும் நாம் மாற்றிக் கொண்டேயிருப்போம்.

இது போன்ற நிலைமகளுக்கு நமக்குத் தீர்வைத் தருகிறது www.wordmark.it எனும் இணைய தளம். இது ஒரு ஓன்லைன் சேவையாகும்.இந்த இணைய சேவை மூலம் பிரவுஸர் விண்டோவிலேயே நாம் விரும்பும் டெக்ஸ்டை நமது கணினிய்ல் நிறுவியுள்ள அனைத்து எழுத்து வடிவங்களிலும் காண்பிக்கிறது,

இதனை செயற்படுத்திப் பார்ப்பதற்கு www.wordmark.it எனும் இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு wordmark எனும் இடத்தில் ஒரு க்ளிக் செய்து நீங்கள் விரும்பும் டெக்ஸ்டை டைப் செய்யுங்கள். பின்னர் load fonts எனும் பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது ஒரே வினாடியில் உங்கள் கணினியில் நிறுவியுள்ள அனைத்து எழுத்துருக்களிலும் நீங்கள் டைப் செய்த வார்த்தையை காண்பிக்கும்.

மேலும் negative பட்டனில் க்ளிக் செய்வதன் மூலம் கருமை நிறப் பின்னணியில் வெள்ளை நிறத்தில் எழுத்துக்களைக் காணலாம். கட்டணம் செலுத்துவதன் மூலம் மேலும் பல எழுத்துரு சார்ந்த வசதிகளைத் தருகிறது இந்த  wordmark.it  இணைய தளம். 

When you send an email attachment



மின்னஞ்சலுடன் பைல்களை இணைப்பாக அனுப்பும் போது



மின்னஞ்சலுடன் ஒரு இணைப்பு கிடைக்கப் பெறும்போது அதனைத் திறந்து பார்க்கப் பலரும் அஞ்சுவர். ஏனெனில் அந்த பைலுடன் வைரஸும். இணைந்து வருமோ என்ற அச்சம்தான், எனவே ஒரு பைலை இணைப்பாக அனுப்பு முன்னர் வைரஸ் ஸ்கேன் செய்து வைரஸ் இல்லையென உறுதி செய்த பின் அனுப்புங்கள். அல்லது பைல்களள இணைப்பாக அனுப்புவதை முடிந்த வரை தவிருங்கள்.

மின்னஞ்சல் பைலின் அளவு அதிகமக இருக்கும்போது அதனை டவுன்லோட் செய்ய அதிக நெரம் எடுக்கும். எனவே எப்போதும் சிறிய அளவு கொண்ட பைல்களையே அனுப்புங்கள். உதாரணமாக படங்களை இணைப்பாக அனுப்பும் போது BMP போன்ற அதிக கொள்ளளவு கொண்ட பைலுக்குப் பதிலகா அவற்ரை GIF, JPG போன்ற பைல் வடிவங்களுக்கு மாற்றி அனுப்பலாம்.

படங்களல்லாத அளவில் பெரிய (ஒரு மெகா பைட்டை விட அதிகமான) வேறு வகையான பைல்களை அனுப்ப வேண்டிய தேவையேற்படின் அதனை வின்ஷிப், வின்ரார் போன்ற கருவிகளைப் பயன் படுத்தி ஷிப் செய்து பைல் அளவைச் சுருக்கி அனுப்புங்கள். 

மேலும் அளவில் பெரிய ஒரு வீடியோ பைலை அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டால் அதனைச் சிறு சிறு பகுதிகளாக வெட்டி (Split) வேறாக்கை அனுப்பலாம்.. அதற்கென ஏராலமான கருவிகள் உள்ளன.

ஒரு Word, Excel பைல் அல்லது PDF பைலை அனுப்பும் போது நண்பரிடம் அதனைத் திறப்பதற்கான உரிய மென்பொருள் உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு அனுப்புங்கள். அல்லது அந்த நண்பரிடம் உள்ள மென்பொருளுக்கேற்ப அதன் வடிவத்தை மாற்றி அனுப்புங்கள்.

நண்பர் விரும்பாதபோது எந்த விதமான இணைப்பையும் அனுப்பாதீர்கள். அல்லது முன் கூட்டியே அது பற்றி நண்பருக்கு சொல்லி விடுங்கள்.

Horizontal rule in in MS Word


எம்.எஸ்.வர்டில் கிடைக் கோடிட இலகு வழி


எம்.எஸ். வர்டில் Format மெனுவில் Boarders and Shading கட்டளை தெரிவு செய்து விரும்பிய வடிவில் கிடையாக ஒரு நேர் கோடு இடலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் அதனை விட இலகுவாக கீபோர்ட் மூலமாகவும் கிடைக் கோடுகளை வரையக் கூடிய வசதி எம்.எஸ்.வர்டில் உள்ளது. இதனை எம்.எஸ். வர்ட் 2003 மாத்திரமன்றி அண்மைய பதிப்புகளான 2007 மற்றும் 2010 லும் கூட செயற்படும்.

உதாரணமாக Underscore ( _ ) விசையை (ஷிப்ட் விசையுடன் - குறியீட்டை அழுத்திப் பெறுவது) மூன்று முறை டைப் செய்து விட்டு Enter விசையை அழுத்தும்போது ஒரு ஒற்றைக் கிடைக் கோடு கிடைக்கப் பெறும். அதேபோன்று = (equal sign) சமன் அடையாளத்தை மூன்று தடவை டைப் செய்து விட்டு எண்டர் விசையை அழுத்தும் போது ஒரு இரட்டைக் கிடைக் கோடு கிடைக்கப் பெறலாம். ~ (tilde) விசையை மூன்று முறை அழுத்தி விட்டு எண்டர் விசையை அழுத்த அலை வடிவில் ஒரு கோட்டைப் பெறலாம். * (asterisk) விசையை மூன்று தடவை டைப் செய்து விட்டு எண்டர் விசையை அழுத்துங்கள். ஒரு புள்ளிக் கோட்டைப் பெற முடியும்.