Wednesday, December 21, 2011

Screen Shot in MS Windows 7

திரையில் தோன்றுவதைப் படம் பிடிப்பதற்குப் புதிய வசதிகள் ....

விண்டோஸ் இயங்கு தளத்தின் பழைய பதிப்புக்களில் இது வரை காலமும் கீபோர்டில்  PrintScreen விசையை அழுத்தி க்லிப் போர்டில் அதனை சேமித்துக் கொண்டு பின்னர் எம்.எஸ். பேண்ட் திறந்து பேஸ்ட் செய்தே திரைக் காட்சிகளைப் (screen shots) படம் பிடித்து வந்தோம். அல்லது அதற்கென  மூன்றாம் தரப்பு மென்பொருள்களைப் பயன் படுத்தினோம்

எனினும்  விண்டோஸின் அண்மைய பதிப்புக்களான  விஸ்டா மற்றும் விண்டோஸ் செவன் பதிப்புகளில் இந்த வசதி மேலும் மேம்படுத்தப் பட்டுள்ளது..  அதாவது திரைக் காட்சிகளைப் படம் பிடிப் பதற்கென்றே Snipping Tool எனும் தனியான ஒரு கருவி தரப்படுள்ளது. இதனை Start à All Programs à Accessories ஊடாக Snipping Tool திறந்து கொண்டு நீங்கள் விரும்பும் திரையின் எப்பகுதியையும் மவுஸைக் கொண்டு தெரிவு செய்து அதனை ஒரு இமேஜ் பைலாக JPG> GIF மற்றும்   PNG வடிவில் சேமித்துக் கொள்லலாம்.

அதே போன்று திரையில் தோன்றுவதைப் படம் பிடித்து உடனடியாக  அதனை உங்கள் ஆவணத்தில் சேர்க்கும் வசதி எம்.எஸ்.வர்ட் 2010  பதிப்பிலும் உள்ளடக்கப்பட்டுள்ளதுஅதன் மூலம் இலகுவாகவும் விரைவாகவும் திரைக் காட்சிகளைப் படம் பிடிதது ஒரு ஆவணத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த வசதியை எவ்வாறு பயன் படுத்துவது?

எம் எஸ் வர்ட் 2010  திறந்து கொள்ளுங்கள். திரையில் தோன்றுவதைப் படம் பிடிக்க Insert டேபில் க்ளிக் செய்யுஙகள். தோன்றும் பட்டன்களில் Screenshot என்பதைக் க்ளிக் செய்யுங்கள்.

அப்போது திறந்திருக்கும் விண்டோக்களை சிறிய அளவில் காண்பிக்கும். நீங்கள் விரும்பும் வேறு ஒரு பகுதியைப் படம் பிடிக்க Screen Clipping.. என்பதைக் க்ளிக் செய்யுங்கள். தெரிவு செய்துள்ள விண்டோ படம் நேரடியாக ஆவனத்திற்குள் நுளைக்கப்படுவதோடு தேவைப் படின் அதனை மேலும் எடிட் செய்வதற்கான கருவிப் பட்டையும் தோன்றும்.


ஒரு விண்டோவின் குறிப்பிட்ட பகுதியைப் படம் பிடிக்க Screen Clipping. தெரிவு செய்யும் போது திரை மங்களாக மாறுவதோடு விரும்பிய பகுதியை மவுஸைக் கொண்டு ட்ரேக் செய்து தெரிவு செய்ய வேண்டும். உடனடியாக அந்தப் பகுதி உங்கள் ஆவனத்தில் நுளைக்கப்பட்டு விடும்..
-அனூப்-