Thursday, December 20, 2012

What is DNS?

DNS என்றால் என்ன?

நீங்கள் பேஸ்புக் தளத்திற்குப் பிரவேசிக்க நினைத்து facebook.com என பிரவுஸர் முகவரிப் பட்டையில் டைப் செய்கிறீர்கள். ஆனால் நிஜமான பேஸ்புக் தளத்திற்குப் பதிலாக வேறொரு தளத்தையே உங்கள பிரவுசர் காண்பிக்கிறது. .இது போன்ற அனுபவம் உங்களில் சில பேருக்குக் கிடைத்திருக்கலாம். இதற்குக் காரணம் என்ன என நீங்கள் அறிய முன்னரDNS பற்றி சிறிது அறிந்து கொள்ள வேண்டும்.

இணைய சேவைகளில் ஒன்றான world wide web எனும் சேவைக்கு DNS என்பது அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. மனிதரால் புரிந்து  கொள்ளக் கூடிய சொற்களைக் கொண்ட இணைய தள முகவரிகளை கணினியால் புரிந்து கொள்ளக் கூடியவாறு இலக்கங்களைக் கொண்ட ஐபி முகவரிக்ளாக (IP address) மர்ற்றுவதில்  DNS சேர்வர்கள் பின்னணின்யில் இய்ங்கி தமது பங்களிப்பைச் செய்கின்றன

DNS என்பது Domain Name System என்பதைக் குறிக்கிறதுDomain Name என்பது மனிதாரால் புரிந்து கொள்ளக் கூடிய சொற்களே. இவை இணைய தள முகவரிகளையே குறிக்கின்றன. உதாரணமாக கூகில் தளத்தின் டொமேன் பெயர் google.com ஆகும். கூகுல் தளத்தைப் பார்வையிட google.com என நீங்கள் பிரவுசரில் டைப்            செய்ய வேன்டும். இநத டொமேன் பெயர் எனும் சொற்களுக்குப் பின்னணியில் இலக்கங்களிலான ஐபி முகவரிகளே உள்ளன. இலக்கங்களிலான ஐபி முகவரிக்குப் பதிலாக சொற்களிலான் டொமேன் பெயர்களைப் பயன் படுத்துவதன் காரணம் இலக்கங்களை விட சொற்களை எம்மால் இலகுவாக நிணைவில் கொள்ள முடியும் என்பதே.

எனினும் உங்கள் கணினிக்கு கூகில் தளம் உலகலாவிய வலைத் தளத்தில் எந்த வெப் சேர்வரில் இருக்கிறது என்பது தெரியாது. Google.com எனும் டொமேன் பெயருக்குப் பின்னணினியில் 173.194.39.78 எனும் ஐபி முகவரி உள்ளது. அதாவது Google.com தளம் இணையத்தில் 173.194.39.78 எனும் ஐபி முகவரி கொண்ட சேர்வரில் அமையப் பெற்றுள்ளது.. பிரவுஸரில் Google.com என்பதற்குப் பதிலாக இந்த ஐபி முகவரியை வழங்குவதன் மூலமும் கூகில் தளத்தை அடையலாம். கூகில் மட்டுமன்றி எந்தவொரு இனைய தளத்தையும் அதன் ஐபி முகவரி கொண்டு அடைய முடியும்.

இங்கு DNS சேர்வர்கள் ஒரு தொலைபேசி விவரக் கொத்தைப் போல் செயற்படுகிறது. அதாவது நாம் வழங்கும் டொமேன் பெயருக்குரிய ஐபி முகவரியை கண்டறிந்து பிரவுஸருக்குக்ச் சொல்லி விடுகிறது.

பிரவுசரில் google.com  என டைப் செய்யும் போது கணினி உங்கள் தற்போதைய DNS சேர்வரை தொடர்பு கொண்டு google.com  ற்குரிய ஐபி முகவரியை வேண்டுகிறது. பீன்னர் DNS சேர்வர் வழங்கும் அந்த ஐபி முகவரியை அடைந்து கூகில் தளதை பிரவுஸரில் காண்பிக்கிறது, இந்த செயற்பாடு எமது குறுக்கீடு இல்லாமல  கண்ப் பொழுதில் ந்டை பெற்று முடிகிற்து.

இந்த DNS சேர்வர் கணினிகள உங்களுக்கு இணைய இணைப்பு வழங்கும nternet service provider (ISP); நிறுவனத்தில ;இருக்கும். இவ்வாறான பல்லாயிரம்  DNS சேர்வர்கள் இணையத்தில் உள்ளன.

DNS சேர்வர் வழங்கும் ஐபி முகவரி மற்றும் விவரங்களை உங்கள் கணினி அவ்வப்போது பிரவுசரில் (ஹாட் டிஸ்கில்) சேமித்து விடும். எனவே ஒவ்வொரு முறையும் நீங்கள் கூகில் தளத்தை அணுகும் போது உங்க்ள் பிரவுசர் DNS சேர்வரை அணுகாது. ஏற்கனவே சேமித்து வைத்துள்ள விவரங்களீன் உதவி கொண்டு கூகில் தளத்தை பிரவுசரில் காண்பிக்கும். இதன் காரணமாக தொடர்பாடல் வேகம் ஓரளவு அதிகரிக்கிறது.

சில வேலை வைரஸ் போன்ற கணினி நச்சு நிரல்கள் உங்கள் கணினிக்குரிய DNS சேர்வர் முகவரியை மாற்றி வேறொரு கெடுதல் நோக்கம் கொண்ட ஒரு நிறுவனத்தின் DNS முகவரியை அடையுமாறு செய்து விடும். இந்த DNS சேர்வரானது ஒரு பிரபல்யமான ஒரு இணைய தளத்த்துக்குப் பதிலாக வேறொரு ஐபி முகவரிக்கு உங்கள் கணினியை திசை திருப்பி விடும். சாத்தியம் உள்ளது.

அதாவது நான் ஆரம்பத்தில் சொன்னது போல facebook.com எனும் முகவரியை நீங்கள் வழங்க வெறொரு போலியான தளத்தை உங்கள் பிரவுஸர் காண்பிக்கும். எனினும் பிரவுசர் முகவரி பட்டையில் facebook.com என்றே இருக்கும்.


கடந்த ஜுலை மாதம் DNSChange எனும் வைரஸ் இணையத்தில் இணையும் கணினிகள் அனைத்தையும் முடக்கப்  போகின்றன என பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

-அனூப்-

Thursday, November 01, 2012

How to delete pen drive virus?


பென் ட்ரைவ் வைரஸை ஒழிப்போமா?  


தற்போது கணினி பயனர் பலரும் பென் ட்ரைவ் உபயோகிப்பதை ஒரு வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். வைரஸ்கள் கூட தற்போது இந்த பென் ட்ரைவ் மூலமாகவே அதிகம் பரவுகின்றன. பென் ட்ரைவ் மூலம் பரவும் வைரஸ்களில் Ravmon, New Folder.exe, Orkut is banned என்பன குறிப்பிடத் தக்கவை. இவற்றை வைரஸ் எதிர்ப்பு (Anti virus Program) மென்பொருள்கள் எளிதில் அடையாளம் காண்பதில்லை. அப்படியே கண்டு கொண்டாலும் அவற்றால் இந்த வைரஸ்களை அழிக்க முடிவதில்லை. பென் ட்ரைவ் மூலம் பரவும் இந்த வைரஸ்களை நீங்களாகவே அழிப்பதற்குப் பின் வரும் வழிமுறையை முயன்று பருங்கள்.

ஒரு பென் ட்ரைவை கணினியில் பொருத்தும் போதே தானாக திறந்து கொள்ளும் வகையில் விண்டோஸில் டிபோல்டாக செட்டிங் செய்யப்பட்டுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பென் ட்ரைவை பொருத்தும் போது படத்திலுள்ளது போன்ற ஒரு சிறிய டயலொக் பொக்ஸ் தோன்றக் காணலாம். அந்த டயலொக் பொக்ஸில் ஓகே பட்டனில் க்ளிக் செய்து செய்து விடாமல் அதனை கேன்சல் செய்து மூடி விடுங்கள்.

அடுத்து ரன் பொக்ஸில் cmd என டைப் செய்து கமாண்ட் ப்ரொம்ப்டைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு உங்கள் பென் ட்ரைவுக்குரிய ட்ரைவ் எழுத்தை (உதாரணமாக d:) டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். (இந்த ட்ரைவ் லெட்டர் கணினிக்கு கணினி வேறுபடலாம்) அடுத்து dir /w/a என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அப்போது பென் ட்ரைவிலுள்ள அனைத்து பைல்களையும் பட்டியலிட்டுக் காண்பிக்கும். அங்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனுமொரு பைல் இருந்தால் உங்கள் பென் ட்ரைவ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

Autorun.inf
Ravmon.exe
New Folder.exe
svchost.exe

அடுத்து கமாண்ட் ப்ரொம்ப்டில் attrib -r -a -s -h *.* என டைப் செய்து எண்டர் செய்யுங்கள். இதன் மூலம் பென் ட்ரைவிலுள்ள அனைத்து பைல்களினதும் Read Only, Archive, System, Hidden பண்புகள் அகற்றப்படும். அடுத்து கமான்ட் ப்ரொம்ப்டில் del filename (உதாரணம்: del autorun.inf) என டைப் செய்து சந்தேகத்திற்கிடமான ஒவ்வொரு பைலையும் தெரிவு செய்து அழித்து விடுங்கள்.

உங்கள் கணினி ஏற்கனவே இந்த வகை வைரஸால் பாதிக்கப் பட்டிருந்தால் இந்த வழி முறைகள் பலனளிக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Saturday, October 13, 2012

What is CMS


CMS என்றால் என்ன?கண்டென்ட் மெனேஜ்மண்ட் சிஸ்டம் (Content Management System- உள்ளடக்க நிர்வாக முறைமை) என்பதன் சுருக்கமே CMS. இது ஒரு இலத்திரனியல் தகவல் முறைமையாகும். சீ.எம்.எஸ் மூலம் டேட்டாவைப் பல்வேறு முறைகளில் ஒழுங்கு படுத்தி அதிலிருந்து தேவையான தகவல்களை இலகுவாக தேடவும், மீளப் பெறவும், புதுப்பிக்கவும் முடிகிறது. தரவுத் தள நிர்வாக (Database Management System) தொழில் நுட்பமே. சீ.எம்.எஸ் –இல் அடங்கியிருக்கும் அடிப்படை அம்சமாகும். எனினும் சீ.எம்.எஸ், தகவல் தளத்தை விடவும் மேம்பட்ட கூறுகளைக் கொண்டுள்ளது.


வேறு வகையில் கூறுவதானால் ஒரு தரவுத் தளத்துடன் இணைக்கப்பட்ட பல தொடர்ச்சியான ப்ரோக்ரமிங் பக்கங்களை சீ.எம்.எஸ் எனப்படுகிறது.. இதிலிருந்து தகவல்களை இலகுவாக மீளப் பெறலாம்.

ஒரு நிறுவன கணினியில் டிஜிட்டல் வடிவில் தேக்கி வைக்கப்படுள்ள எழுத்துக்கள், படங்கள், ஒலிக்கோப்புகள், வீடியோ, ஆவணங்கள் மற்றும் கிரபிக்ஸ் போன்ற தகவலின் ஒவ்வொரு வடிவமும் (Content) உள்ளடக்கம் எனப்படும். இந்த உள்ளடக்கங்களை முறையாக நிர்வகிப்பதை உள்ளடக்க நிர்வாகம் (கண்டெண்ட் மெனேஜ்மண்ட்) எனவும் எனவும் அதற்குப் பயன்படும் மென்பொருள்களை உள்ளடக்க நிர்வாகம் முறைமை (கண்டெண்ட் மெனேஜ்மண்ட் சிஸ்டம்) எனவும் அழைக்கப்படுகிறது.

உள்ளடக்க நிர்வாக முறைமை என்றால் என்ன என்பதை நீங்கள் இதுவரை அறிந்திராவிட்டாலும் அதனைப் பயன் படுத்திய அனுபவம் உங்களுக் கிருக்கலாம். உதாரணமாக சமூக வலையமைப்புத் தளமான பேஸ்புக்கில் (Facebook) உங்கள் தகவல்களைப் புதிதாக சேர்த்திருப்பீர்கள். ப்லோக் (Blog) எனும் வலைப் பதிவில் புதிதாக ஆக்கங்களை இட்டிருப்பீர்கள். eBay போன்ற தளங்களில் ஏதேனும் ஒரு பொருளை ஏலத்தில் எடுத்திருப்பீர்கள்.. ஜிமெயில் போன்ற மின்னஞ்சல் சேவையைப் பயன் படுத்தியிருப்பீர்கள். இவையனைத்தும் உள்ளடக்க நிர்வாக முறைமையின் படியே இயங்குகின்றன,

கண்டெண்ட் மெனேஜ்மண்ட் சிஸ்டம் என்பதில் ஆவண முகாமைத்துவம் (Document Management) கற்றல் முகாமைத்துவம் (Learning Management), மின்னஞ்சல் முகாமைத்துவம் (E-Mail Management) என பல் வேறு தேவைகளுக்கென பல்வேறு வகையான சீ.எம்.எஸ் கருவிகள் பயன் பாட்டில் உள்ளன. இங்கு இணைய தளங்களை வடிவமைக்கப் பயன்படும் Web Content Management System பற்றி சிறிது விளக்கலாம் என நினைக்கிறேன்.

இணைய தளம் ஒன்றின் உள்ளடக்கத்தை நிர்வகிக்கப் பயன் படும் இலகுவான ஒரு முறைமையே Web Content Management System எனப்படுகிறது. இதற்கு உதாரணமாக Joomla, Drupal, Wordpress போன்ற மென்பொருள்களைக் குறிப்பிடலாம. இவை தவிர இன்னும் ஏரளமான இணைய தள உள்ளடக்க நிர்வாக மென்பொருள்கள் பயன் பாட்டில் உள்ளன. இவை இணைய தளங்கள் பராமரிக்கப்படும் ஹோஸ்ட் கணினியிலேயே நிறுவப்படும்.. இதன் மூலம் வேறு மென்பொருள்கள் எதனையும் நிறுவாமல் இணைய தளமொன்றின் உள்ளடக்கத்தை வெப் பிரவுசர் எனும் இணைய உலாவியைக் கொண்டே இலகுவாக நிர்வகிக்கலாம். அதாவது இணைய தளத்திலுள்ள ஒரு பக்கத்தை மாற்றியமைக்க விரு்ம்பின் பிரவுசர் கொண்டே அதனை மாற்றி சேமித்த பின்னர் உடனடியாக அந்தப் பக்கத்தை இணையத்தில் புதுப்பிக்கவும் முடிகிறது. .

சீ.எம்.எஸ் மூலம் ஒரு இணைய தளத்தில் படங்கள், ஒலிக்கோப்புகள், சலனப் படங்கள், பீடிஎப் பைல்கள் போன்ற எல்லா விதமான ஆவணங்களும் முறையாக வகைப் படுத்தப்பட்டு. இணைய தள பக்கங்களிடையே இணைப்புகளை (hyperlinks) இடலாம். மேலும் படிவங்கள் (forms) ஒளிப்பட கோர்வைகள் (image galleries), கருத்துக் களம் (forums), கருத்துக் கணிப்புகள் (polls), தேடு பொறிகள் (search engines), அன்றாட செய்திக் குறிப்புகள் (news) போன்ற இணைய தளமொன்றில் காணப்படும் அனைத்து அம்சங்களையும் இலகுவாக நிர்வகிக்க முடியும்.

பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த வெப் கண்டெண்ட் மேனேஜ்மண்ட் பயன் படுத்தி வெப் டிசைனர், ப்ரோக்ரமர் போன்றவர்களின் உதவியின்றி உங்கள் நிறுவன இணைய தளங்களை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளவும் அவ்வப்போது பக்கங்களைப் புதுப்பிக்கவும் முடிகிறது. இணைய தள வடிவமைப்பில் பயன் படுத்தப்படும் HTML, PHP போன்ற இணைய வடிவாக்க மொழிகளில் தேர்ச்சியற்றவர்களும் சாதாரண வர்ட் ப்ரோஸெஸ்ஸிங் (Word Processing) அறிவுடன் இணைய தளங்களை உருவாக்கலாம். அத்தோடு இதன் மூலம் இயங்கு நிலையிலுள்ள (Dynamic Websites) இணைய தளங்கள் உருவாக்கப்படுவது மற்றுமொரு சிறப்பம்சமாகும்

மேலும் ஏற்கனவே பதிப்பித்த இணைய உள்ளடக்கம் பாதிப்புறா வண்ணம் புதிதாக ஒரு இணணய தளம் உருவாக்காமலேயே அதற்கொரு புதிய தோற்றத்தினை வழங்கவும் முடியும். . இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களை இணைய தள உள்ளடக்க நிர்வாக மென்பொருள்கள் கொண்டுள்ளன. 

-அனூப்-


Thursday, September 20, 2012

.google doodles

தெரியுமா கூகில் டூட்ல்?


கூகில் தேடற் பொறியின் லோகோவை இணைய பயனர் எவரும் இலகுவில் மறக்க மாட்டார்கள். எனினும் சில நாட்களில் இந்த வழமையான லோகோவுக்குப் பதிலாக வெறொரு லோகோவினை கூகில் தளத்தில் பயன்படுத்தப் பட்டிருப்பதை  அவதானித்திருப்பீர்கள். சில வேளை அது ஒரு எனிமேசன் படமாகவும் இருக்கும். இதற்கு கூகில் டூட்ல் (doodle) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது

இந்த கூகில் டூட்ல் சில விசேட நாட்களிலும்., உலகப் புகழ் பெற்றவர்களை நினைவு கூறுவதற்காகாவும், உலகில் சில விசேட நிகழ்வுகள் நடைபெறும் போதும் கூகில் தளத்தில் இடம் பெறும். மிக சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த கூகில் டூட்ல் இரண்டொரு தினங்கள் மட்டுமே கூகில் தளத்தில் நீடிக்கும். பின்னர் வழமையான லோகோவைக் காண்பிப்பார்கள். முன்னர் பதிப்பித்த கூகில் டூட்ல அனைத்தையும் கூகில் தனது வேறொரு இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அவற்றை www.google.com/doodles/ எனும் இணைய தள்த்தில் காணலாம். கூடவே அவை பற்றிய மேலதிக தகவல்களையும் கூகில் இங்கு வெளியிட்டு வருகிறது.

-அனூப்-

Monday, July 09, 2012

Google Drive

வந்தாச்சு Google Drive?

இணைய  உலகின் ஜாம்பாவானாகிய கூகில் நிறுவனம் தனது  கூகில் ட்ரைவ் சேவையைக்  கடந்த ஏப்ரல் மாத  இறுதியில் ஆரம்பித்தது

கூகில் ட்ரைவ் என்பது இணய வெளியில் பைல்களை தேக்கி வைக்கக் கூடிய  ஒரு சேவை யாகும். இதனை ஆங்கிலத்தில்  cloud storage எனப்படுகிறது. எம்.எஸ்.வர்ட், எக்சல் போன்ற ஆவணங்கள், படங்கள் வீடியோ கிரபிக்ஸ் என எவ்வகையான பைல்களையும் இந்த கூகில் ட்ரைவில் பாதுகாப்பாகக் களஞ்சியப் படுத்தி வைக்க முடிவதோடு அவற்றை  எப்போதும்  எங்கிருந்தும் இணையம் வழியே அணுகக் கூடியதாகவும் இருக்;கும். மேலும் அந்த பைலை உரிய மென்பொருள்களைக் கணினியில் நிறுவாமலேயே திறந்து பார்க்கவும் மாற்றங்கள செய்யவும் முடிகிறது. இவ்வாறு  30 ற்கும் மேற்பட்ட பைல் வகைகளை கூகில் ட்ரைவ் ஆதரிக்கிறது

ஏற்கனவே கூகில் நிறுவனம் Google Docs எனும் பெயரில் இது போன்ற ஆவணங்களைத் தேக்கி வைப்பதற்கான சேவையை வழங்கி வருகிறது . அந்த கூகில் டொக்ஸின் புதிய வடிவமே இந்த கூகில் ட்ரைவ்.

இந்த கூகில் ட்ரைவை கணினி செல்லிட  தொலைபெசி மற்றும் கையடக்கக்  கருவிகளின் மூலமும் அணுக முடியும். அதே போன்று கூகில் ட்ரைவில் சேமிக்கப் பட்டுள்ள  ஆவணமொன்றில்  மாற்றம் செய்து சேமித்த பிறகு வேறு சாதனங்களினூடாக அதே பைலை அணுகும் போது பிற கருவிகளிலும் அதே மாற்றத்தோடு காண்பிக்கும் வகையில் அந்த பைல் (Synchronize)   சமப்படுத்தப்படும்..

மேலும் ஒரு பைலில் மாற்றம் செய்து சேமித்த பின்னரும் கூட கடந்த 30 நாட்களுக்குள் அந்த பைல் என்னென்ன மாற்றங்ங்களுக்குள்ளானது என்பதையும் கூட பார்க்கக் கூடிய வசதியை கூகில் டரைவ் தருகிறது.

இந்த க்லவுட் ஸ்டொரேஜ் சேவையில்  5புடீ அளவிலான இடத்தை  இலவசமாகவே வழங்குகிறது. கூகில்அதற்கு மேலும் உங்களுக்கு இடவசதி அவசியமெனின்  கட்டண்ம் செலுத்துவதன் மூலம் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.

இந்த கலவுட் ஸ்டொரேஜ் சேவையை கூகில் தான் முதலில் ஆரம்பித்தது எனச் சொல்ல முடியாது. கூகில் இந்த சேவையில் மிகத் தாமதமாகவே பிரவேசித்துள்ளதுஇது போன்ற க்லவுட் ஸ்டொரேஜ் சேவையை ஏற்கனவே Dropbox, Microsoft  SkyDrive,  Apple iCloud Amazon Cloud Drive என்பன வழங்கி வருகின்றன. ஆனால் இவை சிறிய அளவிலான இடத்தையே வழங்கி வருகின்றன

தற்போது க்லவுட் ஸ்டொரேஜ் சேவையில் முன்னணியில் இருக்கும் ட்ரொப் பொக்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு  2GB அளவிலான இடத்தையே வழங்கி வருகிறது. அதே போன்று ஆப்பில் க்லவுட் iOS இயங்கு தள பாவனையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவையை வழங்குகிறது.

கூகில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரே பாய்ச்சலில் 5 கிகா பைட் அளவு இடத்தை ஒதுக்குகிறது. ஏற்கனவே தனது மின்னஞ்சல் (gmailவாடிக்கையாளர்களுக்கு 7 கிகா பைட் அளவிலான இடத்தை தருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். .

இந்த கூகில் டரைவ் விண்டோஸ் மேக் லினக்ஸ் என எந்தவொரு கணினி இயங்கு தளத்திலும் மேலும் அன்ட்ரொயிட் ஐஓஎஸ் என எந்த மொபைல் கருவிகளிலும் பயன் படுத்தக் கூடியவாறு உருவாக்கப் பட்டிருப்பது இதன்  சிறப்பம்சம்hகும்.

படங்கள் வீடியோ போன்ற அதிக பைல் அளவு கொண்ட பைல்களை மின்னஞ்சல் வழியே இனி இணைத்து அனுப்ப வேண்டியதில்லை. உங்கள் பைலை கூகில் ட்ரைவில் அப்லோட் செய்து விட்டு அதற்குரிய லிங்கை மாத்திரம் நண்பருக்கு அனுப்பி விடலாம். அவர் அதனை தனது கணினிக்கு டவுன் லோட் செய்யாமலேயே பார்க்கக் கூடிய வசதியையும் இந்த கூகில் ட்ரைவ் தருகிறது

மேலும் பென் ட்ரைவ்களையும் இனி கையிலெடுத்துச் செல்ல வேன்டிய அவசியமில்லை. நீங்கள் செல்லுமிடத்தில் இணைய வசதி இருக்குமானால் பென் ட்ரைவில் எடுத்துச் செல்ல வேண்டிய பைல்களை உங்கள் வீட்டுக் கணினியில் கூகில் டரைவில் அப்லோட் செய்து  விடுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும்  அந்த பைலைப் பார்க்க முடிகிறது

இந்த கூகில் ட்ரைவ் சேவையைப் பெற drive.google.com எனும் இணைய தளத்தின் மூலம் அணுகி அதற்குரிய எப்லிகேசனை நிறுவிக் கொள்ள வேண்டும்.. மேலும் உங்களிடம் ஒரு கூகில் கணக்கும் இருக்க வேண்டும் என்பதையும் மறவாதீர்கள்

இணைய வெளியில் கூகில் மைக்ரோஸொப்ட், ஆப்பில் போன்ற இமாலய நிறுவனங்கள் நடாத்தும் வியாபாரப் போட்டியின் காரணமாக சாதாரண இணையப் பயனருக்கு எப்போதுமே கொண்டாட்டம்தான்.

-அனூப்-