Friday, January 25, 2013

Windows search techniques

விண்டோஸ் தரும் தேடல் வசதி

விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்து வரும் தேடற் கருவியானது விண்டோஸில் உள்ள ஒரு சிறப்பம்சம் எனலாம். விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு போலல்லாமல் விஸ்டா மற்றும் செவன் பதிப்புக்களில்  இணைய தேடலில் உதவும் கூகில் இன்ஸ்டன்ட் போன்று தேடல் வார்த்தையை டைப் செய்யும்போதே தேடல் முடிவுகளை விண்டோஸ் காண்பிக்கிறது. விண்டோஸ் தேடற் கருவி உங்கள் ஆவணம் மின்னஞ்சல் படங்கள் வீடியோ  மற்றும் எப்லிகேசன்களை உடனடியாகத் தேடித் தருகிற்து.

விண்டோஸ் தேடல் கருவியை உங்கள் கணினியில் ஸ்டாட் மெனு, விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் மற்றும் Windows key + F விசைகளை ஒன்றாக அழுத்தவது போன்ற பல வழிகளில்; அனுகலாம். இங்கு இறுதியாகக் குறிப்பிடப்பட்ட முறை சிறந்ததெனலாம். காரணம் பைல்களைத் தேடுவ தற்கென தனியாக ஒரு விண்டோவைத் திறப்பதுடன்  தேடல்  உதவிகளையும் காண்பிக்கும்.

சில உதாரணங்கள்

1. தேடல் விண்டோவில் test என வழங்கும் போது test எனும் சொல்லைப் பெயராகக் கொண்ட பைல் மற்றும் போல்டர்களையும் அச்சொல் அடங்கியுள்ள அனைத்து பைல்களையும் காண்பிக்கும்.

2. ext:ppt test 
என
வழங்கும் போது வநளவ   எனும் சொல்லைப் பைல் பெயராகக் கொண்ட ppt வகை பைல்களயும் அந்தச் சொல் அடங்கும் வேறு ppt பைல்களயும் தேடித் தரும் இங்கு ext என்பதற்குப் பதிலாக type,  dot (.) என்பவற்றையும் பயன் படுத்தலாம்.

 3. ext:ppt filename:sales
என வழங்கும் போது sales எனும் சொல்லைப் பைல் பெயராகக் கொண்ட ppt வகை பைல்களை மட்டுமே தேடும்பைல் உள்ளடக்கத்தில் தேடுவதில்லை.

4. ext:doc date:this week
என வழங்கும் போது இந்த வாரத்தில் சேமிக்கப் பட்ட doc வகையிலான பைல்களை மாத்திரம் தேடும். இங்கு this week"> என்பதற்குப் பதிலாக today, yesterday, last week, past month, a long time ago எனவும் வழங்கலாம்.

5. date:13-09-2010..24-09-2010 என வழங்கும் போது குறிப்பிட்ட இரண்டு திகதிகளுக்கிடையே சேமிக்கப் பட்ட பைல்களத் தேடிப் பெறலாம்.

6. kind:pictures 
என வழங்கும் போது கணினியிலுள்ள அனைத்து வகையான படங்களையும் தேடிக் காண்பிக்கும்.

7. kind:pictures date:23-09-2010
என வழங்கும் போது குறித்த திகதிக்குப் பின்னர் சேமிக்கப் பட்ட படங்களை மட்டும் தேடிப் பட்டியலிடும்.

8. Size:small 
என வழங்கும் போது  (10 முதல் 100 கிலோ பைட்  அளவு கொண்ட பைல்களைப் பட்டியலிடும். இங்கு small   என்பதற்குப் பதிலாக Medium. Large, Huge, Gigantic  என வழங்கும் போது வெவ்வேறு அளவு கொண்ட பைல்களைப் பட்டியலிடக் காணலாம்.

9. size:500MB..800MB 
என வழங்கும் போது 500 முதல் 800 மெகா பைட் அளவுகளுக்கிடை யிலான பைல்களைக் காண்பிக்கும்.

10. size:>500MB  
என வழங்கும் போது 500 MB  ற்கு மேற்பட்ட அளவு கொண்ட பைல்களை  மாத்திரம் பட்டியலிடும்.


இவ்வாறு விண்டோஸ் இயங்கு தளத்தில் உங்கள் கணினியிலுள்ள  பைல்களைத் தேடிப் பெறுவதில் பல இலகு வழிகள் உள்ளன.

-அனூப்-

Scroll Wheel button tip

Scroll Wheel  பட்டன் எதற்கு?

மவுஸின் இரண்டு பட்டன்களுக்கு நடுவே உள்ள Scroll Wheel  பட்டனை நீங்கள் இது வரை திரையை மேலும் கீழும் நகர்த்தவே (scroll) பயன்; படுத்தியிருய்பீர்கள். எனினும் அதனைத்  தவிர மேலும் சில செயற்பாடுகளுக்கும் Scroll Wheel பட்டனைப் பயன் படுத்தலம்.

இந்த ஸ்க்ரோல் பட்டனைக் கொண்டு ஒரு இணைய தங்களைப் பார்வையிடப் பயன் படும் ப்ரவுஸரில்  ஏதேனும் ஒரு இணைய பக்கத்தி;ல் ஒரு இணைப்பின் மேல் க்லிக் செய்ய அந்த லின்க் ஒரு புதிய டேபைத் திறந்து கொள்ளும். அதே போன்று திறந்து கொண்ட டேபை மூடி விடவும் இதே ஸ்க்ரோல் பட்டனைப் க்லிக் செய்து மூடலாம்.


மேலும் இதே பட்டனைக் கொண்டு பிரவுசர் மற்றும் எம்.எஸ்,வர்ட் போன்ற பயன் பாட்டு மென்பொருள்களில் விசைப் ப்லகையில் [CTRL] விசையை அழுத்தியவாறே ஸ்க்ரோல் பட்டனை மேலும் கீழும் சுழற்றும் போது அப்பக்கம் பெரிதாகத் தெரிவதையும் ; (zoom in)  மறுபடி சிறிதா வதையும் ; (zoom out) காணலாம்.

-அனூப்-

Thursday, January 24, 2013

Does your PC need frequent refresh?

அடிக்கடி Refresh  தேவைதானா?

விண்டோஸ் இயங்கு தளத்த்தில் டெஸ்க்டொப்பில் அல்லது திறந்து வைத்துள்ள ஒரு ;போல்டர் விண்டோவில் வலது க்ளிக் செய்யும் போது தோன்றும் மெனுவில் உள்ள Refresh  எனும் தெரிவு இருப்பதைக் கணினிப் பயனர்  பலரும் அறிந்திருப்பீர்கள் பயன் படுத்தியிருய்ப்பீர்கள்,

எனினும் இந்த Refresh  கட்டளை எதற்கு என்பதை நீங்கள் நினைத்துப் பர்த்ததுண்டா? அது விண்டோஸ் இயங்க்ய் தளத்திற்குப் புத்துயிர் கொடுத்து அதனை திறன்பட  இயங்க வைக்கிறதா? கணினியின் வேகத்தை  அதிகரிக்கச் செய்கிறதா அல்லது நினைவகத்தில் தேங்கியுள்ள வற்றை அழித்து விடுகிறதா? உனமையில் இது எதுவுமே நடப்பதில்லை.

அப்படியானால் Refresh  என்பது எதற்கு?

டெஸ்க்டொப் என்பது விண்டோஸ் இயங்கு தளத்தில் ஒரு போல்டர் அன்றி வேறெதுவுமில்லை. அந்த போல்டரின் உள்ளடக்கம் மாறறத்திற்குள்ளாகும் போது தானாகவே அந்த போல்டர் புதுப்பிக்கப்படும் வகையில் ஆணைத் தொடர் எழுதப் பட்டுள்ளது. எனினும் சில வேளைகளில் டெஸ்க்டொப் அல்லது ஏதேனும் ஒரு போல்டர் மாற்றத்திற்குள்ளானாலும் அந்த மாற்றத்தைக் காண்பிப்பதிலை. அதாவது (Refreshபுதுப்பிக்கப் படுவதில்லை. எனவே பின்வரும்  சந்தர்ப்பங்களில் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் சநகசநளா  தெரிவு செய்ய்லாம் அல்லது விசைப் பலகையில் F5 விசையை  அழுத்தலாம்.

  • நீங்கள் உருவாக்கிய, இடம் மாற்றிய, அல்லது  பெயர் மாற்றிய  பைல் மற்றும் போல்டர்களைக் காண்பிக்காத போது
  • உங்கள் டெஸ்க்டொப் ஐக்கன்களை மீள்-வரிசைப் படுத்த்தியும் அது மாற்ற முறாதபோது  போது
  • டெஸ்க்டொப் ஐக்கன்களைப் பயன் படுத்த  முடியாமல் இருக்கும் போது

  • ஒரு பயன் பாட்டு மென்பொருள் கொண்டு உருவாக்கி சேமிக்கப் பட்ட பைலைக் காண்பிக்காத போதுமுன்னர் பார்வையிட்ட அல்லது தடைப் பட்ட இணைய தளப் பக்க மொன்றை மறுபடியும் பார்வையிடும் போது
எனினும் டெஸ்க்டொப்பில்; அடிகடி மறுபடியும் மறுபடியும்  Refresh  செய்தவதை பலரும் ஒரு வழக்கமாகக்  கொண்டிருப்பார்கள். இது  ஒரு தேவையற்ற விடயம என்றே கூறலாம்.  

-அனூப்-