Thursday, April 25, 2013

Difference between Optical Zoom and Digital Zoom

Optical Zoom- Digital Zoom என்ன வேறுபாடு?

டிஜிட்டல் கேமரவில் digital zoom ,  optical zoom என இரு வகையான உருப் பெருக்க வசதிகள் காணப்படுகின்றன. சில கேமராக்களில்  இவ்விரு வசதிகளும் காணப்படும். 5x, 10x,  20x. அளவுகள் கேமராவில் குறிப்பிடப் பட்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள். இது சூம் செய்யக் கூடிய அளவையே குறிக்கிறது. ஆனால் கேமரா வாங்க விரும்பும் பலர்  இந்த சூம் வசதி பற்றி  அக்கறை காட்டுவதில்லை..

டிஜிட்டல் சூம் எனப்படுவது அடிப்படையில் கேமராவில் அப்போது உள்வாங்கப் பட்ட  காட்சியின் ஒரு பகுதியையே பெரிதாக்கிக் காட்டப் படுகிறது. இது அக் காட்சியின் கிட்டிய உண்மையான நிலையல்ல. மேலும் அப்படத்தின் முழுமையான் அளவின் தெளிவுத் திறனிலும் (resolution) பார்க்கக் குறைந்த தெளிவுத் திறனுடனேயே அது பதிவாகிறது.  டிஜிட்டல் சூம் செய்வதை போட்டோ எடிட்டிங் மென்பொருளொன்றில் ஒரு படத்தின் பகுதியைப் பெரிதாக்கும் செயற் பாட்டிற்கு நிகரானது எனலாம். இதனை கேமரா தயாரிக்கும் நிறுவனத்தின்  ஓர் ஏமாற்று வித்தை என்றாலும் தவறில்லை.

மாறாக ஒப்டிக்கல் சூம் என்பபடுவது கேமரவில் பொருத்தியுள்ள விசேட கண்ணாடி வில்லைகள் (telephoto lens) பயன் படுத்தி தொலைவிலுள்ள காட்சி அருகில் உள்ளவாறு. உருப் பெருக்கம் செய்யப் படுகிறது. இதுவே நிஜமான உருப் பெருக்கமாகும் என்பதுடன் படத்தின் தெளிவுத் திறனிலும்  பாதிப்பை உண்டாக்குவதில்லை.


ஒரு படத்தின் தரத்தை பேன வேண்டுமாயின் முடிந்தளவு டிஜிட்டல் சூம் என்பதைத் தவிர்த்தல் நல்லது.. உங்கள் கேமராவில் இரண்டு வசதிகளும் இருக்கும் பட்சத்தில் ஒப்டிக்கல் சூமையே பயன் படுத்துங்கள். ஒப்டிக்கல் சூம் இல்லையெனின் டிஜிட்டல் சூம் வசதியைப் பயன்படுத்தலாம்.  

-அனூப்-

Where is "B" drive?

 “B”-  ட்ரைவ் எங்கே போச்சு?

விண்டோஸ் இயங்கு தளம் நிறுவப்பட்ட கணினியில் (மை) கம்பியூட்டர் திறந்து பாருங்கள். அப்போது தோன்றும் விண்டோவில் உங்கள் கணினியில்  பொருத்தப் பட்டுள்ள ஹாட் டிஸ்க் ட்ரைவ், ப்லொப்பி டிஸ்க் ட்ரைவ், சீடி/டீவிடி ரொம் ட்ரைட், பென் ட்ரைவ் என அனைத்து ட்ரைவ்களையும் அங்கு காண்பிக்கும். இந்வொவ்வொரு ட்ரைவ் பெயருக்கு முன்னால் ஒரு ஆங்கில எழுத்தும் குறிப்பிடப் பட்டிருக்கும். ப்லொப்பி ட்ரைவிற்கு எனும் எழுத்தும் ஹாட் டிஸ்க் பாட்டிசன்களுக்கு சி, டீ, ஈ தொடர்ச்சியாக ஒவ்வொரு ட்ரைவிற்கும் ஒரு எழுத்து  வழங்கப் பட்டிருப்பதைக் காணலாம்.  
ஆனால் அங்கு ஆங்கில பீ எழுத்தைக் காண முடியாது. பீ ட்ரைவ் என ஒன்று அங்கு இருக்கக் கூடாதா? இல்லை. இந்த பீ (B) எனும் எழுத்து மற்றுமொரு  ப்லொப்பி ட்ரைவை இணைப்பதற்கு வசதியாகவே ஒதுக்கப் பட்டுள்ளது. ஒரு காலத்தில் இரண்டு ப்லொப்பி ட்ரைவ்கள் ஒரே கணினியில் பொருத்திப் பயன் படுத்தப் பட்டன. தற்போது ப்லொப்பி ட்ரைவ்கள் பயன்பாட்டிலிருந்து  இல்லாமல் போனாலும் அவற்றிற்கென ஒதுக்கப் பட்ட அந்த எழுத்துக்கள் இன்னும் அவ்வாறே தொடர்கின்றன.  நீங்கள் விரும்பினால் அவற்றை மாற்றிக் கொள்ளக் கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது. 
-அனூப்- 

Thursday, April 18, 2013

How long has your PC been working?

உங்கள் கணினி எவ்வளவு நேரமாக இயங்குகிறது?
உங்கள் கணினி எவ்வளவு நேரமாக இயங்குகிறது என்பதை அறிய வேண்டுமா? விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் கணினி இயங்கிய நேரத்தைக் (uptime) அறிய Taskbar இல் ரைட் க்ளிக் செய்து Task Manager தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Performance tab தெரிவு செய்யுங்கள். அங்கு System பகுதியில் uptime என்பதைப் பார்வையிடுங்கள்

விண்டோஸ் எக்ஸ்பியில் கணினி இயங்கிய நேரத்தைக் காண Run பொக்ஸில் CMD என டைப் செய்து OK சொல்லுங்கள். அப்போது தோன்றும் கமாண்ட் ப்ரொம்ப்ட் விண்டோவில் systeminfo என டைப் செய்து எண்டர் விசையைத் தட்டுங்கள். சிறிது நேரத்தின் பின்னர் கணினியின் uptime என்ன என்பதைக் காண்பிக்கும்.

அனூப்