Thursday, May 23, 2013

How to zoom in Desktop icon?

டெஸ்க் டொப் ஐக்கனைப் பெரிதாக்க..

விண்டோஸ் இயங்கு தளத்தில் விஸ்டாவிற்குப் பிந்திய பதிப்புக்களில் கன்ட்ரோல் விசையை அழுத்திக் கொண்டு உங்கள் மவுஸின் நடுவிலுள்ள ஸ்க்ரோல் பட்டனை மேலும் கீழும்  சுழற்றி பாருங்கள். மேலே நகர்த்தும் போது  டெஸ்க் டொப்பிலுள்ள  ஐக்கன்கள்  அனைத்தும் பெரிதாவதையும் கீழே நகர்த்தும் போது சிறிதாவதையும் காணலாம். 
-அனூப்-

Tuesday, May 21, 2013

Where is my file?

பைல் எங்கே இருக்கிறது?

சில வேளைகளில் நாம் திறந்து பணியாற்றும்  பைல் எந்த போல்டரியல் இருக்கிறது என்று தெரியாமல் திண்டாடுவோம். டைட்டில் பாரில் அந்த பைலின் பெயர் மட்டுமே காட்டப்படும். பைல் இருக்கும் இடம் எது? அது இருக்கும் போல்டரின் பெயர் என்ன என்று தெரியாமல் இருப்போம். அந்த பைல் இருக்கும் இடத்தின் முழு விபரமும் டைட்டில் பாரில் தெரிந்தால் எவ் வளவு வசதியாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா? அனைத்து தகவல்களையும் டைட்டில் பாரில் இருக்கும்படியும் செய்யலாம்.


அதற்கு விண்டோஸ் எக்ஸ்ப்லோ ரரைத்  திறந்து கொள் ளுங்கள். அதில் Tools மெனுவில் அதில் உள்ள Folder options  தெரிவு செய்யுங்கள். பின்பு அதில் உள்ள View டேபைக் கிளிக் செய்து ‘Display full path in title bar ‘ என்ற என்பதற்கு இடப்புறம் உள்ள கட்டத்தைத் தெரிவு செய்யுங்கள். இனி உங்கள் பைலின் இருப்பிடம் உங்கள் டைட்டில் பாரில் காட்டப்படும்.

-அனூப்-

Monday, May 20, 2013

When you click on a link..

லின்கில் க்ளிக் செய்யும் போது

ஒரு இணைய தள பக்கத்தில் உள்ள லிங்கைக் க்ளிக் செய்யும் போது  அதே விண்டோவில் தான் புதிய பக்கமும் வரும். பிறகு மறுபடியும் Back  பட்டனில் க்ளிக் செய்து முன்னர் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்திற்கு வர வேண்டியிருக்கும்.  . இதனைத் தவிர்ப்பதற்கு ஒரு லிங்கின் மீது க்ளிக் செய்யாமல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Open link in new window  அல்லது Open link in new tab  என்பவறைத் தெரிவு செய்து கொள்ளலாம்.
-அனூப்-