Saturday, June 22, 2013

Sellinam - Tamil typing tool for Android

செல்லினம் என்ட்ரொய்டு கருவிகளுக்கான தமிழ்

என்ட்ரொய்டு இயங்கு தளம் நிறுவப்பட்ட கையடக்கத் தொலைபேசி மற்றும் டேப்லட் கணிகளில் தமிழில் உள்ளீடு செய்வதற்கான ஒர்  மென்பொருள் கருவியே செல்லினம். இதனைக் அன்ட்ரொயிட் கருவிகளில் நிறுவுவதன் மூலம் தமிழில் முரசு அஞ்சல் மற்றும் தமிழ்99 விசைப் பலகை உள்ளீட்டு முறைகளின் மூலம் இலகுவாக டைப் செய்ய முடிகிறது.

குறுஞ்செய்திகள்,  மின்னஞ்சல் செய்திகள், கூகில் தேடல் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் பதிவுகளை இடுதல் போன்ற செயற்பாடுகளை தமிழில் தட்டச்சு செய்யும் பணிகளுக்கு இதனைப் பயன் படுத்தலாம்.

2003 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகமான செல்லினம் பொது மக்கள் பயன் பாட்டுக்காக 2005 ஆம் ஆணடு விடப் பட்டது

செல்லினம் அகராதியும் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் முதலில் டைப் செய்யும் ஓரிரு எழுத்துக்களைக் கொண்டு உங்களுக்குப் பரிந்துரைப்புக்கள் (suggestion list) வழங்கப்படும். இதன் மூலம் டைப் செய்யும் எடுத்துக் கொள்ள நேத்தைக் குறைக்க முடிவதோடு எழுத்துப் பிழைகளையும் தவிர்க்கலாம்

2003ஆம் ஆண்டு முதன் முதலில் சோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட செல்லினம் 2005ஆம் ஆண்டு பொதுப் பயனீட்டுக்காக  வெளியிடப்பட்டது., 2009 ஆம் ஆண்டு -போனில் அறிமுகமான செல்லினம்  அண்மையில் கூகில் ப்லே  ஸ்டோரில் பதிவேற்றப் பட்டுள்ளது.

என்ட்ரொய்டு கருவிகளை வைத்திருக்கும் பயனர்கள் கூகில் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக இதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
என்ட்ராயிட் 2,3 (Ginger Bread) பதிப்பிலும் செல்லினம் இயங்கினாலும் செல்லினத்தின் முழுமையான செயல்பாட்டுக்கு என்ட்ராயிட் 4.1 பதிப்பு (ஜெலலி பீன்) அவசியம்.  

கூகில் ப்லே ஸ்டோரிலிருந்து செலினத்தை டவுன் லோட் செய்த பின்னர் இதனை செயல் படுத்த பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.
முதலில் settings  - language and Input – Keyboard Method input – sellinam என்பதை தெரிவு செய்யுங்கள். அடுத்து மின்னஞ்சல், கூகில் தேடல் போன்ற எப்லிகேசன் களில் டைப் செய்யும் போது தோன்றும் விசைப் பலகையில் மறு படியும் செல்லினத்தைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். அப்போது இடது பக்க ஓரத்தில் மு எனும் பட்டன் தோன்றும். அந்த பட்டனில் மறு பட்டி தட்டி , EN , என ஆங்கிலம் தமிழ் என மொழியை மார்றிக் கொள்ளலாம். இங்கு த் என்பது தமிழ்99 என்பதையும் மு என்பது முரசு அஞ்சல் விசைப் பலகை முறையையும் குறிக்கிறது-அனூப்-

Friday, June 21, 2013

Google Glass

வருகிறது கூகில் கண்ணாடி

செல்லுமிடமெல்லாம் கணினிப் பயன்பாடு எனும் கனவை நணவாக்க விரைவில் வெளிவருகிறது கூகில் நிறுவனம் அறிமுகப் படுத்தவுள்ள (Google Glass) கூகில் கண்ணாடி. இது டெஸ்க்டொப் கணினிகளிலிருந்தும் கையடக்கக் கணினிகளிலிருந்தும் உங்கள் முக்கிய தகவல்களை  விடுவித்து உங்கள் கன்ணேதிரெ நீங்கள் செல்லுமிட மெங்கும் உங்களோடு வர வைக்கிறது.

முகத்தில் அணியும் வழமையான மூக்குக் கண்ணாடி அமைப்பிலான இந்த விசேட கூகில் கண்ணாடி குரல் வழி கட்டளைகள் (voice commands) மூலம் இயக்கப் படுகிறது உங்கள் குரல் வழி கட்டளைகளுக்கேற்றவாறு பல் வேறு பணிகளைச் செய்து முடிப்பதோடு இணைய வசதியையும் கொண்டிருக்கிறது.
குரல் வழி கட்டளை மூலம் ஏராளமான் பணிகளை கூகில் கண்னாடி நிறை வேற்றுகிறது. உதாரணமாக

  • OK glass- எனும் போது தற்போதைய நேரத்தைக் காண்பிக்கிறது
  • OK glass take a pictureஎனும் கட்டளைக்கு முன்னால் தெரியும் காட்சியைப் புகைப்படம் எடுக்கிறது
  • OK, glass, record a video   எனும் போது கேமராவைக்  கைகளால் தொடாமலேயே முன்னால் தெரியும் காட்சியை வீடியோ படம் எடுக்கிறது.

மேலும் வலது கண்னின் மேல் பகுதி ஓரத்தில் மிகச் சிறிய திரையொன்று பொருத்தப் பட்டுள்ளது. உங்கள் காண் பார்வைக்குத் தடஙள் இல்லா வண்ணம், எட்டு அடி தூரத்திலிருந்து 25 அங்குள அளவிளான திரையில் பார்ப்ப்து போன்று அத்திரையில் காட்சிகள் உருப் பெருக்கிக் காண்பிக்கப்படுகிறது.  இத்திரையில் தொடர்ச்சியாக தகவல்கள் காண்பிக்கப் படுவதோடுதிரையில் தோன்றுவதைக் காண்பதற்குப்  பார்வையை சற்று மேல் நோக்கி யர்த்திப்  பார்க்க வேண்டும்


கூகில் கண்ணாடியில் கிடைக்கும் மேலும் சில வசதிகளாவன:
  • கேமராவில் எடுத்த வீடியோவை  நேரடியாக இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொள்ள் முடிகிறது.
  • வாகனமொன்றைச் செலுத்தும் போது உங்களுக்கு வழிகாட்டியாகவும் கூட அது செயற்படுகிறது. .
  • செய்திகளை அனுப்பவும் பெறவும் முடிகிறது
  • உங்கள குரலை பல்வேறு மொழிகளுக்கு மாற்றிப் பெறவும் முடியும்.
  • நீங்கள் தற்போது இருக்கும் இடத்தின் விவரங்களை உங்களுக்குத் தெரிவிக்கிறது.  உதாரணமாக நீங்கள் ஒரு விமான நிலையத்தில் இருக்கும் போது அந்த விமான நிலையதின் நேர அட்டவணையைக் உங்களுக்குக் காண்பிக்கிறது.
இவ்வாறு  ஏராளமான வசதிளைக் கொண்டுள்ள கூகில் கண்ணாடிக்கு  $1500 டாலர் என விலை நிர்ணயித்துள்ளதுடன் இன்னும் பரீட்சார்த்த நிலயிலுள்ள கூகில் கண்ணாடி அடுத்த வருட நடுப்பகுதியளவில் பொது மக்கள பாவனைக்காக வெளியிடும் என எதிர் பார்க்கப் படுகிறது

-அனூப்-

Thursday, June 20, 2013

What is WiMax?

WiMAX  என்றால் என்ன?

வைமேக்ஸ் என்பது கம்பியில்லா தொழிநுட்பம் மூலம் பெரு நகர கணினி வலையமைப்புக்களை உருவாக்க உதவும் மற்றுமொரு தொழில் நுட்பமாகும்.  இணைய இனைப்பிற்காக வீடுகளிலும் அலுவலகங்களிலும் தற்போது அதிக பயன் பாட்டிலுள்ள வைபை போன்ற  ஒரு தொழில் நுட்பமே வைமேக்ஸ். எனினும் வைபை ஒரு சிறு இடப் பரப்பினுள் உள்ள கணினிகளை இணைக்கவே பயன் படுகிறது.  வைபை மூலம் பெரும் பரப்பை இணைக்க வேண்டுமாயின் ஏராளமான வைபை ரிபீட்டர் கருவிகளைப் பல் வேறு இடங்களில் பொருத்த வேண்டியிருக்கும். அவவாறே இணைத்தாலும் அனைத்தையும் பராமரிப்பது இலகுவான விடயமல்ல. எனவே பல மைல் துர்ர இடை வெளிகளிலுள்ள  கணினிகளை கம்பியில்லா தொழில் நுட்பம் மூலம் இணைக்க இது சிறந்த வழி முறையாகாது. பெரும் பரப்பு வலையமைப்புகளுக்கு இது  பொறுத்தமற்ற்து

பல மைல் தொலைவிலுள்ள கணினிகளை இணைக்கவென உருவாக் கப் பட்டிருக்கும் தொழில் நுட்பமே வைமேக்ஸ்.  வைமேக்ஸ் என்பது அதன் தொழில்நுட்ப தர நிர்னய பெயரான IEEE 802.16 எனபதாலும் அறியப் படுகிறது. இது வைபை தொழில் நுடபத் தர நிர்ணயமான Wi-Fi 802.11 என்பதற்கு நிகரானது.


வை-மேக்ஸ் தொழில் நுட்பம் இரண்டாம் தலை முறை அகலப் பட்டை கம்பியில்லா தொழில் நுட்பம் எனவும் அறியப் படுகிறது.  வை-மேக்ஸ் சமிக்ஞைகள் அதிக தொலைவிவ்க்குச் (சுமார் 30 மைல்) செல்வதன் காரணமக ஒரு பெருநகர்பரப்பிள்லுள்ள கணினி வலையமைப்பை உருவாக்கவோ அல்லது இணைய இணைப்பை வழங்கவோ முடிகிறது.  

-அனூப்-

Wednesday, June 19, 2013

Learnerstv.com

Learnerstv.com

Learnerstv.com என்பது ஒரு முழுமையான கல்வி சார்ந்த இணைய தளம்...இவ்விணைய தளம் பௌதிகவியல், உயிரியல் விஞ்ஞானம், இரசாயனவியல், கணிதம், கணினி விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், முகாமைத்துவம், கணக்கியல்,  வரலாறு, இலக்கியம், பொருளியல் என பல்வேறு துறை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ பாடங்களைக் கொண்டிருக்கிறது..

வீடியோ மட்டுமல்லாது ஓடியோ பாடங்கள்,  பாடக் குறிப்புகள், நிகழ நேர பரீட்சைகள் என பல்வேறு வகையான கற்றல் . கற்பித்தல்  உதவிகள் தரப்படுள்ளன. அத்தோடு இவற்றை இலவசமாகத் தரவிறக்கிப் பயன் படுத்தும் வசதியையும் கூட வழங்குகிறது.


உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும், பல்கலைக் கழக மாணவர்களுக்கும் Learnerstv.com ஒரு பயனுள்ள தளமாகும்.

-அனூப்-