Friday, July 26, 2013

What is Clipboard?

Clipboard

க்ளிப்போர்ட் என்பது பிரதான நினைவகமான இன் ஒர் பகுதியைக் குறிக்கிறது. இங்கு நிங்கள் கட்டளை மூலம் பிரதி செய்யும் தரவுகள் இங்கு தற்கலிகமாக சேமிக்கப் படுகின்றன. கொப்பி செய்யப் படும் டேட்டா ஒரு உரைப் பகுதியாகவோ, படமாகவோ அல்லது வேறு எவ்வகையான டேட்டாவாகவும் இருக்கலாம். அனேகமான மெனுவின் கீழ் வரும் கொப்பி

கட்டளையைப் பிரயோகிக்கும் போது இந்த க்ளிப் போர்டிலேயே அந்த டேட்ட தங்குகிறது. 

கொப்பி செய்யப் பட்ட டேட்டா க்லிப் போர்டிலிருந்து மறுபடியும் பேஸ்ட கட்டளை மூலம் ஒரு ஆவணத்தில் அல்லது எதேனுமொரு அப்லி கேசனில் ஒட்டி விடலாம். அந்த பேஸ்ட கட்டளையும் எடிட் மெனுவின் கீழேயே காணப்படும். உதாரணமாக ஒரு போல்டரிலிருந்து கொப்பி செய்யப் பட்ட ஒரு படத்தை போட்டோசொப் போன்ற ஒரு அப்லிகேசனில் பேஸ்ட் செய்து கொள்லலாம்., ஒரு மின்னஞ்சல் செய்தியிலுளள ஒரு இணைய தள முகவரியை பிரதி செய்து பிரவுசரின் முகவரிப் பட்டையில் ஒட்டிக் கொள்ளலாம். எவவகையான டேட்டா வையும் க்லிப்போர்டிற்குப் பிரதி செய்யும் போது அதற்கு முன்னர் க்லிப் போர்டில் தேக்கி வைத்திருந்த டேட்டா இல்லாமல் போய்விடும். மேலும் கணினி இயக்கத்தை நிறுத்தும் போதும் க்லிப் போடில் இருந்த டேட்டா இழக்கபப்டும்.

-அனூப்- 


Test your eye sight

கண் பார்வையைப் பரீட்சிக்க..
ஓன்லைனில் உங்கள கண் பார்வையைப் பரீட்சித்துப் பார்க்கும் வசதியைத் தருகிறது ஓர் இணையதளம். பல்வேறு வகையான கண் பார்வைச் சோதனைகள இந்த இணைய தளத்தில் தரப்பட்டுள்ளன. உங்கள் கண் பார்வையை இவற்றின் மூலம் பரீட்சித்து  நண்பர். உறவினர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பார்வைக் குறைபாடுகள் தெரியுமிடத்து ஒரு கண் வைத்தியரை நாடி பார்வைக் கோளாறு தீவிரமடைவதை ஒரளவாவது குறைத்துக் கொள்ளவும்  முடியும். கண் பார்வையைப் பரீட்சிக்க செல்ல வேண்டிய இணைய தள முகவரி.. http://www.freevisiontest.com/

-அனூப்-


Download You tube Videos

மென்பொருளின்றி யூடியூப் வீடியோவைத் தரவிறக்க..

வீடியோ பைல்களின் மாபெரும் களஞ்சிய சாலையாக யூடியூப் விளங்கிகிறது. எனினும் அந்த வீடியோ பைல்களை தரவிரக்கம் செய்வதற்கான வசதியை யூடியுப் வழங்குவதில்ல. அதற்கு மூன்றாம் தரப்பு மென்பொருள்களையே பலரும்  பயன் படுத்தி டவுன்லோட் செய்து விடுகின்றனர். நான் இங்கு சொல்ல வருவது எந்த மென்பொருளையும் நிறுவாமல் யூடியுப் வீடியாவை தரவிறக்குவதற்கான வழி முறையாகும்

முதலில் யூடியூப் தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு டவுன்லோட் செய்ய வேண்டிய வீடியோ பைலின் URL ஐப் பிரதி செய்து கொள்ளுங்கள் (வீடியோ URL பிரவுசர் விண்டோவின் முகவரிப் பகுதியில் காணலாம்

அடுத்து www.keepvid.com எனும் தளத்திற்குச் சென்று அதன் முகப்புப் பக்கதிலேயே உள்ள பெட்டியில் நீங்கள் முன்னர் பிரதி செய்த URL ஒட்டி விட்டு  download பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.

அப்போது பிரவுஸர் விண்டோவின் மேற்பகுதியில்  java applet இயக்குவதற்கு  உங்கள் அனுமதியைக் கோரும்  ஒரு செய்தி தோன்றும். அப்போது run தெரிவு செய்யுங்கள்.


அடுத்து தோன்றும் விண்டோவில் உங்கள் வீடியோவை எந்த பைல் வடிவில் டவுன் லோட் செய்வது எனக்; கேட்கும். நீங்கள் விரும்பிய பைல் வடிவைக் கிளிக் செய்து டவுன் லோட் செய்ய ஆரம்பிக்கலாம்.

-அனூப்-

Difference between Kbps and Mbps

Kbps / Mbps என்ன வேறுபாடு?

Kbps / Mbps என்பன ஒரு கணினி  வலையமைப்பில் அல்லது இணையத்தில் தரவுப் செலுத்துகை வேகத்தை  அளவிடவே பயன் படுகின்றன. Kilobits Per Second என்பதன் சுருக்கமே Kbps. அதாவது ஒரு வினாடியில் எததனை கிலோ பிட் டேட்டா பரிமாறுகிறது என்பதைக் குறிக்கிறது. ஒரு கிலோ பிட் என்பது ஆயிரம் பிட்களுக்குச் சமமானது இதனைக் Kilobytes per second  எனும் அளவீட்டுடன் குழப்பி விடாதீர்கள்..முன்னர் பயன் பாட்டில் இருந்த டயல்-அப் மோடமின் வேகம் Kbps.  எனும் அளவீட்டிலேயே குறிப்பிடப்பட்டது.

அதே போன்று. Megabits Per Second என்பதன் சுருக்கமே Mbps. ஒரு மெகா பிட் என்பது ஒரு மில்லியன் (10 இலட்சம்) பிட்களுக்குச் சமமானது. மெகாபிட் என்பது மெகா பைட் எனும் வார்த்தை போன்று ஒலித்தாலும் இரண்டும் ஒன்றல்ல. மெகா பிட் என்பது மெகா பைட்டின் எட்டில் ஒரு பகுதியையே அண்ணளவாகக் குறிக்கிறது. (ஒரு பைட்டில் 8 பிட்டுக்கள் அடங்கியுள்ளன) தற்போதைய அதி வேக இணைய இணைப்பு Mbps அளவீட்டில் குறிப்பிடப்படுகிறது.

-அனூப்-

Thursday, July 25, 2013

What is QR code?

QR Code என்றால் என்ன?

Bar Code தொழில் நுட்பம் போன்ற மற்றுமொரு தொழில் நுட்பமே  QR CodeQuick Response என்பதன் சுருக்கத்தையே QR குறிக்கின்றது. இத் தொழில் நுட்பம் ஜப்பானில் பரவலாகப் பயன் பாட்டிலுள்ளது  QR Code  தொழில் நுட்பத்தில் ஒரு படத்தினுள்  தகவல்கள் மறைக் குறியாக்கம் (encode) செய்ய்யப் படுகின்றன.   

இந்த QR Code இல் இணையதள முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கங்கள் மற்றும் குறுஞ் செய்திகள் போன்றவறை மறைக்குறியாக்கம் செய்யலாம்.

மறைக் குறியாக்கம் செய்யப் பட்ட தகவல்களைக் கொண்ட இப்படத்தினை இனையம் வழியே பகிரலாம். அல்லது அதனை அச்சிட்டு வன் பிரதியாக வும் பயன் படுத்தலாம்.

QR கோடை உருவாக்குவதற்கென  மென்பொருள்களும்  உள்ளன. அவற்றை இலவசமாகவே இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் மென்பொருள்கள் எதனையும் கணினியில் நிறுவாமலேயே ஓன்லைனிலும் QR  கோடை உருவாக்கும் வசதியை பல இனைய தளங்கள் வழங்கிகின்றன. அவற்றின் மூலம்  இலகுவாக உங்கள் விருப்பத்திற்கேட்ப QR Code படங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

சரி. உருவாகிய
QR கோடினுள் அடங்கியிருக்கும் தகவல்களைக் ஒருவர் கண்டறிவது (decode)  எப்படி?  அதற்கும் ஏராளமான மென்பொருள் உள்ளன. அல்லது ஓன்லைன் சேவைகளையும் பயன் படுத்தலாம்.

நீங்கள் ஸ்மாட் போன் பயன் படுத்துபவராயிருந்தால் உங்கள் வேலை மிக இலகுவாகிடும். ஐபோன், அன்ட்ரொயிட் பொன்ற ஸ்மாட் கருவிகள்  மூலம் QR கோட் உருவாக்குதல்,  அதனை இனையத்தில் பகிர்தல் கண்டறிதல் போன்ற பணிகளை மிக இலகுவாகக் கையாள முடியும். .

ஐபோன் மற்றும் அன்ட்ரொயிட் கருவிகளுக்கான QR அப்லிகேசனை நிறுவிக் கொள்வதன் மூலம் QR கோட் ஒன்றைப் படிக்கும் போது  அந்தக் கோடிலுள்ள ஒரு தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, இணைய தள முகவரி போன்றவறை காண்பிப்பது  மட்டுமல்லாம. மேற் குறித்த பயன் பாடுகளுக்குரிய அப்லிகேசன்களையும் இயக்கி விடும். அதாவது ஒரு QR கோடினுள் இணைய தள முகவரி இருக்குமானால அதனைக் காண்பிப்பதோடு அதன் மீது விரலால் தொடும் போது பிரவுசரை இயக்கி அந்த தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். ஸ்மாட் கருவியில் பொருத்தியுள்ள கேமரா QR கோட் ஸ்கேனராகப் பயன் படும்.

மேலும் நீங்கள் எங்காவது பயனிக்கும் போது, ஒரு புத்தகம, சஞ்சிகை, அல்லது ஏதேனும் ஒரு பொருளில் அச்சிடப் படிருக்கும் QR கோடுகளை ஸ்மாட் கருவி கொண்டு ஸ்கேன் செய்து உடனடியாக அவ்விடத்தி லிருந்தே அப்பொருள் பற்றிய மேலதிக விவரங்களை உரிய நிறுவனத்தோடு தொடர்பை ஏற்படுத்தி அறிந்து கொள்ளவும் முடியும். .

அதாவது இனைய தள முகவரி, மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை  டைப் செய்யாமாலேயே தொலைபேசி இலக்கத்தை டயல் செய்யாமாலேயே தொடர்பை ஏற்படுத்தலாம்.

நீங்கள் ஸ்மாட் போன் வைத்திருந்தால இப்பக்கத்தில் ப்ரசுரிக்கப் பட்டுள்ள QR Code   ஐ ஒரு முறை ஸ்கேன் செய்து பாருங்கள்.  

-அனூப்-

Saturday, July 20, 2013

What is Streaming?

Streaming


பொதுவாக எந்த வொரு பைலையோ மென்பொருளையோ இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யும் போது அதனை முழுமைகயாகத் தரவிறக்கம் செய்த பின்னரே எம்மால் அவற்றை இயக்கவோ அல்லது திறந்து பார்க்கவோ முடிகிறது. எனினும் ஓடியோ மற்றும் வீடியோ பைல்களை இணையத்தின் ஊடாக இயக்கும் போது அவறை முழுமையாக தரவிறக்கம்  செய்யாமலேயே. அவற்றைப் பார்வையிடவோ அல்லது செவி மடுக்கவோ முடிகிறது. இவ்வாறு ஓடியோ மற்றும் வீடியோ பைல்களை முழுமையாகத் தரவிறக்கம் செய்யாமல் டவுன்லோட் நடைபெறும் சந்தர்ப்பத்திலேயே. எமக்குக் காட்சி படுத்தபப் படுவதையே streaming எனப்படுகிறது. மேலும் அதி வேகம் கொண்ட இணைய இணைப்பில் ஒரு நேரடி நிகழ்வையும் கூட ஸ்ட்ரீமிங் தொழில் நுட்பத்தின் மூலம் நேரடியாகப் பார்வையிடலாம். 

-அனூப்-

How to do Private Browsing?

பிரைவேட் பிரவுசிங் வேண்டுமா?

நாம் பார்வையிடும் அனைத்து இணைய தளங்களைப் பற்றிய விவரங்கள் நம் பிரவுசரில் பதியப்படும்.  நாம் முன்னர் பார்வையிட்ட இணைய தளங்களின் பெயர்களை ஹிஸ்ட்ரி பட்டியலில் பார்க்கலாம். நாம் இனைய பயன் பாட்டின் போது வழங்கும் பயனர் பெயர்கள், பாஸ்வர்ட்கள் மற்றும் படிவங்கள நிரப்பபப் படும்போது வழங்கும் விவரங்கள் போன்றன குக்கீ எனும் பைல்களாக எமது கணினியிலேயே சேமிக்கப் பட்டு விடும். கூகில் போன்ற தேடு பொறிகளைப் பயன் படுத்தி நாம் தேடும் தகவல்கள் கூட பதிவாகி  விடுகின்றன, இவ்வாறு எமது இணைய செயற்பாடுகள் அனைத்தும் எமது சொந்தக் கணினியிலே பதிவாகி விட்டால் எமக்கொன்றும் பெரிகாக பாதிப்புகள் ஏற்படாது. எனினும் இணைய மையம் போன்ற பொது இடங்களிலுள்ள பலரும் பயன் படுத்தும் கணினிகளில் மேற் சொன்ன தகவல்களனைத்தும் பதிவாகி விட்டால் எமது அந்தரங்க விடயங்கள் பகிரங்கமாவதுடன் அது பல தீய விளைவுகளையும் உருவாக்கி விடும். எனவே பொது இடங்களிலுள்ள கணினிகளில் இணையத்தைப் பயன் படுத்துவதற்கான விசேட வசதியை தற்போதுள்ள அனைத்து பிரவுசர்களும் வழங்குகின்றன. அந்த வசதியையே பிரைவேட் பிரவுஸிங் எனப்படுகிறது. இந்த பிரைவேட் பிரவுசிங்கில் குக்கிகள் எதுவும் பதியப்பட மாட்டாது. அதே போன்று நாம் பார்த்த தளங்களை மற்றவர்கள் கண்டறியவும் முடியாது. இந்த பிரைவேட் பிரவுஸிங் வசதியைப் பயன் படுத்தி பொது இடங்களிலுள்ள கணினிகளில் நிம்மதியாக இணையத்தில் உலாவலாம். நமது இணய பயன் பாட்டில் எந்த தடயத்தையும் அடுத்தவர்களால் கண்டறிய முடியாது.

கூகில் க்ரோமில் பிரைவேட் பிரவுஸிங் செய்வதற்கு incognito. விண்டோவினுள் நுளைய வெண்டும், அதற்கு குரோம் பிரவுசர் விண்டோவின் வலது பக்க மூலையிலுள்ள பட்டனில் க்ளிக் செய்து வரும் மெனுவில் New incognito Window என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது ஒரு புதிய விண்டோ தோன்றும். 


பயர்பொக்ஸ் பிரவுஸரில் பிரைவேட் பிரவுசிங் செய்ய பைல் மெனுவில் New Private Window என்பதைத் தெரிவு செய்யுங்கள். இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் புதிய பதிப்பில்  பிரவேட் பிரவுஸிங் செய்வதற்கு tools மெனுவில் InPrivate Window என்பதைத் தெரிவு செய்யுங்கள். 

-அனூப்-

Friday, July 19, 2013

AirDroid

AirDroid

AirDroid என்பது Android கருவிகளை கேபலின்றி கணினியோடு இணைத்து பிரவுசர் மூலமாக நிர்வகிக்கக் கூடிய ஒரு என்ட்ரொயிட் எப்(லிகேசன்.) இதற்கு உங்கள் கணினியில் எந்தவித  மென்பொருளோ ட்ரைவரோ நிறுவ வேண்டியதில்லை. அவசியம். உங்கள் Android கருவியில் மாத்திரம் AirDroid எப்லிகேசனை நிறுவிக் கொண்டால் போதுமானது. எனினும் உங்களிடம் வை-பை இணைப்பு இருத்தல் அவசியம் 


Air Droid
AirDroid மூலம் கணினியிலிருந்தே SMS அனுப்பலாம் பெறலாம். பைல்களை கணினிக்கும் என்ட்ரொயிட் கருவிக்கும் இடையில் பரிமாற்றம் செய்யலாம்.  புதிய எப்லிகேசன்களை நிறுவவோ நீக்கவோ முடியும். படங்கள், பாடல்கள், வீடியோ, தொலைபேசி விவரப் பட்டியல் contacts, போன்றவற்றை நிர்வகித்தல் என பல்வேறு வசதிகளை  AirDroid தருகிறது. அதுவும் கணினி பிரவுஸரிலிருந்தே. இத்தனை பணிகளையும்  நிறை வேற்ற முடியும் என்பது இதன் சிறப்பம்சம். எனலாம்.  என்ட்ரொயிட் பயனர்கள் இதனை Google Play Store  இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். 

-அனூப்-

Thursday, July 18, 2013

How to increase your typing speed?

டைப்பிங் வேகத்தை அதிகரிப்பது எப்படி?

நீங்கள் கணினித் துறையில் ஏதாவ்து வேலை வாய்புப் பெற விரும்பினால் வேகமாக தட்டச்சு செய்யும் திறனையும். வளர்த்துக் கொள்வது உங்களுக்கு பயனளிக்கும் டேட்டா என்ட்ரி இயக்குனர்களுக்கு இது மிக முக்கியமான ஒரு தகைமையாகக் கருதப்படுகிறது.  எனலாம். உங்கள் டைப்பிங் திறனை வளர்த்துக் கொள்ள எவ்வாறான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்?.

1.டைப் செய்வதற்கு உங்களுக்குப் பொருத்தமான, வசதியான  ஓரிடத்தையும் இருக்கையையும்,  விசைப் பலகையையும் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

2. டைப் செய்வதற்கு இரண்டு கைகளையும் பயன் படுத்துங்கள். டைப்பிங் வேகத்தை அதிகரிக்க இது ஒரு சிறந்த வழி எனலாம். டைப் செய்ய ஒரு கையை மாத்திரமோ அல்லது ஒரு சில விரல்களை மாத்திரமோ பயன் படுத்தும் போது மந்த கதியிலேயே டைப்பிங் நடை பெறும். இரண்டு கைகளையும் பயன் படுத்தும் போது உங்கள் இடது கை விரல்களை விசைப் பலகையில் A,S,D,F எனும் விசைகளிலும் வலது கை விரல்களை J,K,L ; விசைகளிலும ஆயத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.  

3.டைப் செய்யும்போது விசைப் பலகையை அடிக்கடி பார்ப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு பார்ப்பது டைப்பிங் வேகத்தைக் குறைத்து விடும். டைப் செய்ய ஆரம்பித்தும் ஒரு வசனம் டைப் செய்து முடிக்கும் வரை விசைப் பலகையை பார்க்காமல் இருப்பது வேகத்தை அதிகரிக்கக் கூடிய நல்ல பயிற்சியாகும்.

4.எந்த ஒரு விடயத்தையும் அதிக முயற்சியும், அதிக பயிற்சியும் எடுத்துக் கொள்வதன் மூலம் நாம் விரைவில் கற்றுக் கொள்ளலாம். எனவே உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி டைப்பிங் பயிற்சியில் ஈடு படுங்கள். டைப்பிங் கற்றுக் கொள்வதற்கென Typing Master போன்ற ஏராளமான மென்பொருள்களும் பயன் பாட்டில் உள்ளன. அவறை இணையத்தின் மூலம் இலவசமாகவே டவுன் லோட் செய்து பயன் படுத்தலாம். ஓன்லைனிலேயே டைப்பிங் கற்றுக் கொள்ளக் கூடிய வசதியை சில இணைய தளங்கள் வழங்குகின் றன. http://www.play.typeracer.com/ என்பது அவ்வாறான ஓர் இணைய தள மாகும்.

5.
டைப்பிங் கற்றுக் கொள்வதற்குப் பலருக்கும் ஆசையிருந்தாலும் அதிக நேரம் டைப் செய்வது சோர்வை உண்டாக்குவதால் டைப்பிங் பயிற்சியை இடையில் நிறுத்தி விடுவார்கள். அதனால் சோர்வைப் போக்கக் கூடிய டைப்பிங் விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.  ஏராளமான டைப்பிங் விளையாட்டுக்கள்  இணையத்தில் கிடைக்கின்றன. 

-அனூப்-