Thursday, September 26, 2013

Bookboon.com for free e-books

மின்நூல்களுக்கான ஒரு தளம் Bookboon.com. 

e-books எனப்படும் மின் நூல்கள் கற்பதில் ஆர்வமுள்ள  இணைய பயனர்க்ள் மத்தியில் பெரும் வர வேற்பைப் பெற்றுள்ளன. .மின் நூல்களைப் பதிப்பிக்கும் ஏராளமான இணையதளங்களும்  உள்ளன. எனினும் எமக்குத் தேவையான மின் நூல்களை இவசமாகப் பெறுவதென்பது  ஒரு கடினமான விடயமே. இலவச மின் நூல்களையத் தரும் தளங்களைப் பட்டியலிடுமாறு கூகிலைக் கேட்டபோது மறுக்காமல் பல தளங்களைப் பட்டியலிட்டது. 

எனினும் அவற்றில் பல தளங்கள் விளம்பரங்களைக் காண்பித்து எரிச்சலூட்டின. சில தளங்கள்  டவுன்லோட் பணியை தமதப் படுத்தின. இன்னும் சில தளங்களில் எதனை டவுன்லோட் செய்வது என்பதையே புரிந்து கொள்ள முடியாதபடி எத்தனையோ டவுன்லோட் லிங்குகள் காண்பித்தன. இவ்வாறு பல இன்னல்களுக்கு மத்தியில் கண்டெடுத்ததுதான் Bookboon.com.


இங்கு மாணவர்களுக்குக் குறிப்பாக உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்குப் பல்வேறு பாட விடயங்களத் தாங்கிய  ஏராளமான மின் நூல்கள் அடுக்கி வைக்கப் பட்டுள்ள்ன., மேலும் இத்தளத்தின் இடை முகப்பும் பயனரை இலகுவாகக் கவரும் வண்ணம் உள்ளது. எந்த தடையு மில்லாமல் இலகுவாக டவுன்லோட் செய்யக் கூடிய வசதியையும் தருகிறது  கற்பதில் ஆரவமுள்ள மாணவர்களுக்கான ஒரு தளம்.
 . www.bookboon.com

-அனூப்-

Thursday, September 19, 2013

Find & Replace in MS Word

சொல்லைத் தேடி மாற்றிடு..

எம்.எஸ். வர்டில்  ஒரு சொல் அல்லது சொற் தொடருக்குப் பதிலாக வேறு சொற்களை அல்லது சொற் தொடர்களை அமைக்க முடியும். . இதற்கு நாம் ஒவ்வொரு சொல்லாகத் தேடி மாற்ற வேண்டியதில்லை. எம்.எஸ். வர்டில் உள்ள Find and Replace எனும் வ்சதியைப் பயன் படுத்தி மாற்றிடலாம்..

எம்.எஸ். வர்ட் 2003 இல் மெனுவின் கீழும் 2007 இல் மெனுவிலும் கட்டளையக் காணலாம். அல்லது விசைளை அழுத்தி எப்பதிப்பிலும் Find and Replace டயலொக் பொக்ஸை வரவழைக்கலாம். அந்த டயலொக் பொக்ஸில்  Find What எனுமிடத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை டைப் செய்யுங்கள்.  அடுத்து Replace With பொக்ஸில் தேடிப் பெறும் சொல்லுக்குப் பதிலாக வரவைக்க வேண்டிய சொல்லை டைப் செய்யுங்கள்.

இறுதியாக Find Next க்ளிக் செய்திடுங்கள்.

இவ்வாறு தொடர்ச்சியாக Find Next க்லிக் செய்வதன் மூலம் ஒரு ஆவணத்திலுள்ள குறிப்பிட்ட  சொல்லை மாத்திரம் மாற்றீடு செய்யலாம்.  

-அனூப்-

-

Have you forgotten your Win 7 user account password?

பாஸ்வர்ட் மறந்து விட்டதா?

விண்டோஸ் விஸ்டா மற்றும் செவன் பதிப்புகளில் பயனர் கணக்கிற்குரிய கடவுச் சொல்லை மறந்து விடடீர்களா? கவலையை விடுங்கள். மறந்து போன கடவுச் சொல்லை நீக்கி விட்டு புதிதாக ஒரு பயனர் கணக்கையும் அதற்குப் புதிதாக கடவுச் சொல்லையும் உருவாக்கிக் கொள்வதற்கான வசதியையும் விண்டோஸ் தருகிறது. அதற்குப் பின்வரும் வழிமுறை யைக் கையாளுங்கள். உங்களிடம் . இதற்கு ஒரு விண்டோஸ் விஸ்டா அல்லது  7 டிவிடி இருத்தல் அவசியம்.

முதலில் விண்டோஸ் டிவிடியிலிருந்ய்து கணினியை  (பூட்) செய்யுங்கள்.. அப்போது தோன்றும் மெனுவில் “Repair your computer” என்பதைத் தெரிவு செய்யுங்கள்.

பின்னர் படத்தில் உள்ளது போன்ற திரை தோன்றும் வரை காத்திருங்கள்.  அத்திரையிலிருந்து Command Prompt என்பதைத் தெரிவு செய்யுங்கள். அந்த கமான்ட் ப்ரொம்ப்டில் கீழுள்ள வரியை டைப் செய்து என்டர் கீயை அழுத்துங்கள். 
copy c:\windows\system32\sethc.exe c:\  அடுத்து
copy c:\windows\system32\cmd.exe c:\windows\system32\sethc.exe

எனும் வரியையும் டைப் செய்து எனடர் விசையைத் தட்டுங்கள். பின்னர் கணினியின் இயக்கத்தை மறுபடி ஆரம்பியுங்கள். ஒரு லொகின் திரை தோன்றும். அங்கு Shift விசையை ஐந்து தடவை மேலும் மேலும் அழுத்துங்கள். அப்போது மறுபடியும் ஒரு கமாண்ட் ப்ரொம்ப்ட் திரை தோன்றும். அங்கு கீழே காட்டியுள்ள வடிவில் ஒரு பயனர் பெயரோடு கடவுச் சொல்லையும் வழங்குங்கள் net user newusername newPassword

இனி உங்கள் பயனர் கணக்குனுள் லொகின் செய்யலாம். எனினும் இன்னும் ஒரே ஒரு வேலை பாக்கி.இருக்கிறது. அதாவது ஆரம்பத்தில் பிரதி செய்த sethc.exe பைலை மறுபடியும் விண்டோஸ் போல்டரினுள் இட வேண்டும். அதற்கு ஆரம்பத்தில் சொன்ன வழி முறையிலேயே விண்டோஸ் சிடியுடன் பூட் செய்து கமான்ட் ப்ரொம்டில் கீழுள்ள கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக வழஙகி செயற்படுத்த வேண்டும்.  c:\sethc.exe,  c:\windows\system32\sethc.exe. அவ்வளவுதான்.

-அனூப்-