Friday, October 25, 2013

Google Play Store - SpeedView

SpeedView 


Speed View
நீங்கள் ஒரு வாகனத்தில் செல்லும் போது உங்கள் வேகத்தினைக் கண்டறிந்து இது சொல்கிறது. உங்கள் தற்போதைய வேகத்துடன்  உங்கள் அதி கூடிய வேகம், சராசரி வேகம், திசை நீங்கள் சென்ற தூரம், எடுத்துக் கொண்ட நேரம் என பல விவரங்களைக் காண்பிக்கிறது. இது காரில் செல்வோர்  மட்டுமல்லாது சைக்கிள் சவாரி செய்வோரும், ஓட்டப் போட்டிகளில் பங்கெடுப்போரும் கூட கட்டாயம் தங்கள் அண்ட்ரொயிட் கருவிகளில் நிறுவிக் கொள்ள வெண்டிய அப்லிகேசன்  எனலாம். இது உங்கள் அண்ட்ரொயிட் கருவியிலுள்ள GPS வ்சதியைப் பயன் படுத்தி இய்ங்குகிறது. இந்த அப்லிகேசன்  IOS லும் கிடைப்பது குறிப்பிடத் தக்கது. 

-அனூப்-


Thursday, October 24, 2013

Browser tip

பிரவுஸர் உதவிக் குறிப்பு

கூகில் க்ரோம் ப்ரவுசரைப் பயன் படுத்தி gmail, yahoo, facebook போன்ற தளங்களைப் அணுகும் போது சில வேளைகளில் அத்தளங்களைக் காண்பிப்பதற்குப் பதிலாக படத்தில் காட்டியுள்ளது போன்ற ஒரு பக்கத்தைக் காண்பிக்கும் அப்பக்கத் தில் Server Security Certificate is not yet valid எனும் ஒரு பிழைச் செய்தியையும் காண்பிக்கும். அப்போது நீங்கள் “Proceed anyway” எனும் லிங்க்கில் க்ளிக் செய்ய மறுபடியும் அதே முடிவையே தரும். உண்மையில் இந்தப் பிழைச் செய்தி வருவதற்கு உங்கள் கணினி தவறான நேரத்தையும் திகதியையும் காண்பிப்பதே காரணம் ஆகும். எனவே கணினியில் சரியான திகதியை மாற்றியமைப்பதன் மூலம் இப்பிழைச் செய்தியைத் தடுத்து மேற் சொன்ன தளங்களை அடைய முடியும். டாஸ்க் பாரின் வலது பக்க ஓரத்தில் காண்பிக்கப் படும் கடிகாரத்தில் இரட்டைக் க்ளிக் செய்வதன் மூலம் கணினியில் திகதியை மாற்றிக் கொள்ளலாம். 

-அனூப்-

Is your monitor display upside down?

கணினித் திரையில் காட்சிகள் தலை கீழாக மாறி விட்டதா? 

உங்கள் கணினித் திரையில் காட்சிகள் தலை கீழாக மாறி விட்டதா? கவலை வேண்டாம். விண்டோஸ் இயங்கு தளத்தில் கணினித் திரையை மறுபடி பழைய நிலைக்குக் கொண்டு வர பல வழிகள் உள்ளன.

விசைப் பலகையில் Ctrl-Alt விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தியவாறே மேல் நோக்கிய அம்புக் குறி  (up arrow) விசையை அழுத்துங்கள். உடனே கணினித் திரை வழமையான நிலைக்கு மாறுவதைக் காண்லாம். மேலும் Ctrl-Alt  விசைச் சேர்மானத்துடன் ஏனைய அம்புக் குறி விசைகளை அழுத்தும் போதும் அவை காட்டும் திசைகளில் கணினித் திரை மாறும்.  

இந்த விசைச் சேர்மானம் இயங்காமல் போனால் கண்ட்ரோல் பேணலில் Display தெரிவு செய்து வ்ரும் டயலொக் பொக்ஸில் Settings டேபில் க்ளிக் செய்து கிழுள்ள Advanced பட்டணில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Orientation என்பதைத் தெரிவு செய்தும் விரும்பிய கோணத்தில் திரையை மாற்றிக் கொள்ளலாம். .

உங்கள் கணினிய்ல் மூன்றாம் தரப்பு வீடியோ அடெப்டர் மென்பொருள் கருவிகள் நிறுவியிருப்பின் சாவிச் சேர்மாங்கள் இயாங்காமல் போவதுடன் மேற்சொன்ன Orientation தெரிவும் காணப்படாது. அவ்வாறு மூன்றாம் தரப்பு மென்பொருள் கருவிகள் நிறுவியிருக்கும் சந்தர்ப்பங்களில் டாஸ்க் பாரின் வலது புறம் System tray பகுதியில் உங்கள் கணினியில் நிறுவப் பட்டிருக்கும் வீடியோ  ட்ரைவர் மென்பொருளுக்குரிய ஐக்கனில் right-click செய்து வரும் விண்டோவில் rotation settings தெரிவுகளை மெற் கொள்ளலாம்.  

இன்னும் உங்களால் கணினித் திரையை ஒழுங்கமைக்க முடிய வில்லையா? அப்படியாயின் கணினியை Safe Mode இல் இயக்குங்கள். . (அதற்குக் கணினி இயங்க்ம் போது F8 விசையை அழுத்த வேண்டும்.)   பின்னர் மேற் சொன்ன வழிகளில் முயன்று பாருங்கள். முடியாமல் போனால் உங்கள் வீடியோ ட்ரைவர் மென்பொருளை நீக்கி விட்டு மறுபடி அதனைக் கணினியில் நிறுவுங்கள். அப்போதும் முடியாது போனால் உங்கள் வீடியா ட்ரைவருக்குரிய புதிய பதிப்பை  இணையத்திலிருந்து டவுன் லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். 


-அனூப்- 

What is Case Sensitive?

Case Sensitive என்றால் என்ன?

கணினியில் நம் உள்ளீடு செய்யும் எழுத்துக்களை அனைத்தும் ஆங்கில் பெரிய எழுத்துக்கள் (uppercase /capital letters)  சிறிய எழுத்த்துக்கள் (lowercase / small letters)  என வேறு படுத்தி இன்ம் காணப்படுவதையே Case-sensitive எனப்படுகிறது. உதாரணமாக Computer மற்றும் computer என்பன இரண்டு வெவ்வேறு வார்த்தைகளாகக் கருதப் படுகின்றன. ஏனெனில் இங்கு C எனும் எழுத்து  uppercase  இலும்  lowercase இலும் எழுதப் பட்டுள்ளது.

கணினி பயன் பாட்டின் போது பயனர் பெயர்கள் மற்றும் பாஸ்வர்ட் என்பன அனேகமாக Case-sensitive ஆகவே பயன் படுத்தப்படுவது வழக்கம். அதாவது நீங்கள் வழங்கும் பயனர் பெயரோ அல்லது கடவுச் சொல்லோ உரிய (case) கேஸிலேயே வழங்கப் பட வேண்டும். இல்லாவிடின் உங்களால் அந்தப் பயனர் கணக்கை அணுக முடியாது.  விசைப் பலகையில்  caps lock  விசை இயங்கு நிலையில் இருக்கும் போது உங்கள் கணக்கிற்கு லொகின் செய்ய முடியாமல் போன அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

கேஸ் சென்ஸிடிவ் இல்லை (not case sensitive) எனும் போது uppercase அல்லது lowercase எழுத்துக்கள் எதனையும் நீங்கள் வழங்கலாம்..  உதாரமாக விண்டோஸ்  கமாண்ட் ப்ரொம்ட்  case-sensitive அற்றது. இங்கு "cd", "CD", "Cd", or "cD" என விரும்பிய விதத்தில் வழங்கலாம்.

-அனூப்-