Saturday, December 21, 2013

Sure Delete - Delete your files permanently

பைல்களை நிரந்தரமாக அழிக்க - Sure Delete

நீங்கள் பயன் படுத்திய  கணினியை வேறு ஒருவருக்கு விற்கும்போதோ அல்லது நன்பருக்குப் பரிசளிக்கும் போதோ ஹாட் டிஸ்கில் உள்ள பைல்களை நிரந்தரமாக அழித்து விட்டுக் கொடுப்பதே நல்லது. எனினும் ஹாட் டிஸ்கிலிருந்து அழிக்கும் பைல்கள் நிரந்தரமாக அழிவதில்லை என்பதை அறிவீர்கள். உங்கள் நண்பர் கொஞ்சம் விசயம் தெரிந்தவராக இருந்தால் உங்கள்  வங்கிக் கணக்கு விவரங்கள், பாஸ்வர்ட்கள் போன்ற அந்தரங்க விடயங்களை அந்த ஹாட் டிஸ்கிலிருந்து மீட்டு விட முடியும்.

அதே போன்று பென் ட்ரைவ், டிஜிட்டல்  கேமரா போன்ற கருவிகளை இரவல் கொடுக்கும்போது அல்லது பழுது பார்க்கக் கொடுக்கும் போது அதிலுல்ள மெமெரி சிப்பிலிருந்து படங்கள் வீடியோக்கள் போன்ற வற்றை  அழித்து விட்டுக் கொடுத்தாலும்  அவற்றிலிருந்து பைல்களை  மீட்டெடுக்க முடியும். இவ்வாறு பைல்களை மீட்க முடியுமென்பது ஒரு வசதியாகாக் கருதப் பட்டாலும் சில வேளை அந்த வசதியே நமது அந்தரங்கத்தைப்  பகிரங்கப் படுத்தி  எங்களை சிக்கலில் மாட்டி விடவும் முடியும்..


ஹாட் டிஸ்க், பென் ட்ரைவ், மற்றும் மெமரி சிப் போன்றவற்றிலிருந்து அழிக்கும் பைலை மறுபடி மீட்டெடுக்க முடியாத விதத்தில்  அழிக்கும் வசதியும் நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது, அழித்த பைலை மறுபடு மீட்க முடியுயாமல் தடயமே இல்லாமல் அழிக்கும் ஒரு மென்பொருள் கருவிதான்  Sure Delete  இதனை நீங்கள்  இணையத்திலிருந்து  இலவசமாக டவுன் லோட் செய்து கொள்ளலாம்.

அனூப்



-


7-Data Recovery Suite

பைல்களை மீட்க 7-Data Recovery Suite 

தவறுதலாக கணினியிலிருந்து அழித்த அல்லது ரீசைக்கில் பின் போல்டரிலிருந்து நீக்கி விட்ட உங்கள் முக்கிய பைல்கள், ஆவ ணங்கள்படங்கள்வீடியோ போன்ற வற்றை மீட்டெடுக்கலாம் என்பது நீங்கள் அறிந்ததே. அதற்கென ஏராளமான மென் பொருள் கருவிகள். உள்ளன. அவ்வாறு பைல்களை மீட்டுத் தரப் புறப்பட்டிருக்கும் மற்றுமொரு மென்பொருளே 7-Data Recovery Suite.  ஹாட் டிஸ்கிலிருந்து நீக்கிய பைல்களை மட்டுமன்றி டிஜிட்டல் கேமரா, மெமரி சிப் MP3 ப்லேயர் போன்ற கருவிகளிலிருந்து நீக்கிய பைல்களை யும் மீட்டுக் கொள்ளலாம்.  ஹாட் டிஸ்க் பாட்டிசனை நீக்கியிருந்தாலும் கூட ஒபைல்களை மீட்டுத் தருகிறது இந்த மென்பொருள் இதனை http://7datarecovery.com/ எனும் இணைய தளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  
-அனூப்-

Friday, December 20, 2013

Microsoft Remote Desktop for Android

Microsoft Remote Desktop

மைக்ரோஸொப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் பயனர்களுக்குத் தொலைவிலிருந்து தமது வீட்டுக் கணினியையோ அல்லது அலுவலகக் கணினியையோ  அணுகக் கூடிய வசதியத் தரும் Microsoft Remote Desktop  எனும் என்ட்ரொயிட் எப்லிகேசனை அண்மையில் வெளியிட்டுள்ளது. அண்ட்ரொயிட் இயங்கு தளத்துடன் கூடிய டேப்லட் கணினி மற்றும் ஸ்மாட்போன் போன்ற கையடக்கக் கருவிகளிலிருந்து உலகின் எப்பாகத்திலிருந்தும் உங்கள் கணினியை அணுகக் கூடிய  வசதியை இது தருகிறது. இந்த அப்லிகேசன் மூலம் உங்கள் வீட்டுக் கணினியிலுள்ள பைல்களையோ பயன்பாட்டு மென்பொருள்களையோ தொலைவிலிருந்தே திறந்து பார்க்கலாம்; இயக்கலாம். இதனை நீங்கள் Google Play-store லிருந்து இலவசமாகத் தறவிறக்கலாம்.

Remote Desktop
Remote Desktop வசதியென்பது ஒரு புதிய விடயமல்ல. இவ்வசதி ஏற்கனவே விண்டோஸின் அண்மைக்காலப் பதிப்பு களில் டெஸ்க்டொப் கணினிகளுக் கென வழங்கியிருந்தது, தற்போது கையடக் கக் கருவிகளுக்கும் இதே ரீமோட் டெஸ்க்டொப் வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது. எனினும் மிக அண்மையில் அறிமுகமாகி கணினிப் பயனரிடையே பிரபல்யம் பெற்று வரும் டீம்-வியூவரிலும் கூட இதே ரீமோட்  டெஸ்க்டொப்  வசதியைப் பெறலாம் என்பதை அவசியம் இங்கு  குறிப்பிடத்தான் வேண்டும். 

-அனூப்-

Thursday, December 19, 2013

What is Proxy Server?

ப்ரொக்ஸி சேர்வர் Proxy Server  என்றால் என்ன?
பாரிய வணிக நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் ,தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போன்றன தற்போது தமது கணினி வலையமைப்பில் ப்ரோக்ஸி சேர்வர்களை நிறுவுகின்றன.  ப்ரோக்ஸி  சேர்வர் என்பது ஒரு நிறுவன கணினி வலையமைப்பில் காணப்படும் ஒரு சேர்வர் கணினியாகும். அந்நிறுவனம் சார்ந்த கணினி வலையைப்பில் உள்ள அனைத்து கணினிகளும் இந்த ப்ரொக்ஸி சேர்வரினூடாகவே  இணையத்தினை அணுக வேண்டியிருக்கும். 

ப்ரொக்ஸி சேர்வர் பயன் படுத்துவதன் மூலம்.ஒரு நிறுவனம், கணினி வலயமைப்பினதும் இணையத்தினதும் வேகத்தினை அதிகரிக்க முடிவதோடு அவ்வலையமைபில் இணைந்துள்ள பயனர்களின் இணைய  செயற்பாடுகளைக்  கட்டுப்படுத்தவும்  முடிகிறது.   

ப்ரொக்ஸி சேர்வர் ஒரு நிறுவன வலையமைப்பிலிருந்து இணையத்தை அணுகும்போது இணைய வேகத்தினை அதிகரிப்பதற்காக பதுக்கல் (caching) முறையைப்  பின்பற்றுகிறது.

இந்தப் பதுக்கல் முறையில் நீங்கள் பார்வையிடும் இணைய தளங்கள், படங்கள் போன்ற இணைய தள உள்ளடக்கங்கள் மற்றும் பைல்களை ப்ரொக்ஸி சேரவரிலுள்ள ஹாட் டிஸ்கில் சேமிக்கப்பட்டு விடும். எனவே அத் தளங்களை மறுபடியும் பார்வையிடும் போது அந்த பைல்களை மறுபடி டவுன்லோட் செய்யாமல் ப்ரொக்ஸி சேர்வர்  ஹாட் டிஸ்கில் இருந்தே எடுத்துக் காண்பிக்கும்.

அதாவது நாம்  பார்வையிடும் அனைத்து  இணைய தளங்களிலுள்ள படங்கள  போன்ற இணைய உள்ளடக்கங்களை நாம் பயன் படுத்தும்  பிரவுஸர்,  எமது கணினி ஹாட் டிஸ்கில் சேமிப்பது போன்று ஒரு,  ஒரு வலையமைப்பிலிருந்து இணையத்தின் ஊடாக அணுகப்படும் அனைத்து தகவல்களும் ப்ரொக்ஸி சேர்வர் கணினி ஹாட் டிஸ்கில் சேமிக்கப்படும்.  

இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், ராம் என்பவர் cnn.com எனும் இனைய தளத்தில் மதியம் 1:00  மணிச் :செய்தியறிக்கைப் பக்கத்தைப் பார்வையிட்ட பின்னர், அதே பக்கத்தை ரவி என்பவர் மூன்று நிமிடம் கழித்துப் பார்வையிடுகிறார். என வைத்துக் கொள்வோம். இங்கு ரவி பார்வையிடும் போது ப்ரோக்ஸி சேர்வர் கணினி, அப்பக்கத்தைத் தனது  பதுக்கல் நினைவகத்திலிருந்தே அவருக்கு எடுத்துக் காண்பிக்கும் வாய்ப்பு அதிகமாகும். இதன் காரணமாக அத் தளததை ரவி மிக வேகமாக அணுகமுடிகிறது. எனினும் அவ்விணைய தளthதின் மிக அண்மைய பதிப்பை காண்பதற்கான வாய்ப்பு சில வேளை கிடைக்காமல் போகலாம்.

ப்ரொக்ஸி சேர்வர் பயன்படுத்துவதன் மற்றுமொரு நோக்கம் ஒரு நிறுவன கணினி வலையமைப்பில் அனுமதிக்கப் படாத இணைய பயன் பாட்டைக் கட்டுப் படுத்தலாகும். இதன் மூலம் ஒரு நிறுவன வலையமைப்பினுள் குறிப்பிட்ட இணைய தளங்களைp பயனர்கள்  அணுக விடாது தடுக்கலாம். தமது நிறுவன உழியர்கள் eBayfacebook போன்ற தளங்களில் அதிக நேரத்தை செலவிடுவதாக உணர்ந்தால் ப்ரோக்ஸி சேர்வர் மூலமாக அவ்விணைய தளங்களை அணுக விடாது இலகுவாகத் தடுக்கலாம்.  


விசைப் பலகையில் உள்ள Ctrl  விசையை அழுத்தியவாறு மவுஸின் நடுவிலுள்ள சில்லை மேலும் கீழும் நகர்த்துவதன் டெஸ்க்டொப் திரையில் உள்ள ஐக்கன்களின் அளவைப் பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ முடியும். விஸ்டா மற்றும் அதற்குப் பிந்திய விண்டோஸ் பதிப்புகளில் மட்டுமே இதனைச் செயற்படுத்தலாம் எனதை நினைவில் கொள்ளவும். 

-அனூப்-