Monday, January 20, 2014

Google Play Store - Super Backup :

Super Backup 


App Store
சில வேளைகளில் உங்கள் எண்ட்ரொயிட் கையடக்கத் தொலைபேசி மந்த கதியில் இயங்கும் போது அதனை Factory Reset  செய்து மறுபடி முன்னர் போன்று வேகமாக இயங்க வைக்கலாம். அவ்வாறு Reset செய்யும் போது நீங்கள் அழைத்த இலக்கங்கள்,  உங்களுக்கு வந்த அழைப்புக்கள், குறுஞ் செய்திகள், நண்பர்களின் தொலைபேசி இலக்கப் பட்டியல், அப்லிகேசன்கள் என ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும். பல முக்கியமான பைல்களை நீங்கள் இழக்க வேண்டி வரலாம். 

Super Backup
எனவே அவ்வாறு Reset  செய்வதற்கு முன்னர் அந்த ஃபைல்களை Backup செய்து விட்டால் ஃபைல் இழப்புக்கள் ஏதும் ஏற்படாதவாறு பாதுகாக்கலாம். இவ்வாறு பைல்களை Backup செய்வதற்கென எண்ட்ரொயிட் கருவிகளுக்காக உருவாக்கப் பட்டிருக்கும் ஒரு எப்லிகேசனே  Super Backup.  இதன் மூலம் அப்லிகேசன்கள், குறுஞ் செய்திகள், அழைப்புக்களின் பதிவுகள் (call logs) என பல விடயங்களை இலகுவாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும்  SD card இல் சேமித்து விடவோ அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடவோ முடியும்.


கையடக்கக் கருவியை Reset  செய்த பின்னர் மறுபடி இந்த பைல்களை இலகுவாக  Restore செய்யும் வசதியையும் இந்த Super Backup எப்லிகேசன் தருகிறது. 

-அனூப்-

Wednesday, January 15, 2014

How to download Facebook video

பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வதற்கு

பேஸ்புக் தளத்தில் நீங்கள் பார்வையிடும் வீடியோக்களை டவுன்லோட் செய்ய வேண்டுமா? அதற்கு ஒரு இலகுவான வழி இருக்கிறது. நீங்கள் டவுன்லோட் செய்யவிரும்பும் வீடியோவுக்குரிய URL (Uniform Resource Locater) பிரதி செய்து கொள்ளுங்கள். அந்த  URL  பிரவுசர் விண்டோவின் முகவரி பட்டையில் காணலாம். பின்னர் http://www.downvids.net தளத்திற்குச் சென்று முன்னர் பிரதிசெய்த (URL) லிங்கை ஒட்டிவிட்டு டவுன்லோட் பட்டனில் க்ளிக் செய்யுங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்கள் வீடியோ டவுன்லோட் செய்யப்பட்டு விடும். இந்த இணையதளம் மூலம் பேஸ்புக் வீடியோ மாத்திரமன்றி யூடியுப் தளத்திலுள்ள வீடியோக்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

அனூப்