Tuesday, February 25, 2014

Which program opens the file?

ஃபைலைத் திறக்கும் அப்லிகேசன் எது

விண்டோஸ் இயங்கு தளத்தில் ஃபைல் ஒன்றைத் திறக்கும் போது உரிய அப்லிகேசனில் இயல்பாகத் திறந்து கொள்ளும். ஆனால் சில வேளைகளில் ஒரு ஃபைலைத் திறக்கும் போது அந்த ஃபைலைத் திறந்து கொள்ளும் அப்லிகேசன் நமது கணினியில் நிறுவப்பட்டிருக்காது. அப்போது ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றி அந்த ஃபைலைத் திறப்பதற்கான அப்லிகேசனைக் காண்பிக்குமாறு எம்மிடம் கேட்கும். உரிய அப்லிகேசன் கணினியில் நிறுவப்படிருந்தால் அதனைக் காட்டி விட முடியும்.

எனினும் ஒரு ஃபைலைத் திறப்பதற் கான அப்லிகேசன் எதுவென  நாமும் அறியாதபோது என்ன செய்யலாம்? இவ்வாறான சந்தர்ப்பத்தில் நமக்கு உதவுகிறது OpenWith.org எனும் இணைய தளம். இவ்விணைய தளத்தில் எராளமான பல்வேறு ஃபைல் வகைகளையும் அவற்றைத் திறக்கக் கூடிய அப்லிகேசன்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. எமது கணி னியில் அந்த அப்லிகேசன் நிறுவப்பட்டிராத போது அதனை இணையத்தி லிருந்து டவுன்லோட் செய்து கொள்ளக் கூடியவாறு இணைப்பையும் தருகிறது இந்த இணைய தளம்மேலும் இணைய இணைப்பு இன்றி  கணினியில் நிறுவிப் பயன் படுத்ததக் கூடிய வகையில் மென்பொருள் வடிவிலும் கிடைக்கிறதுhttp://www.openwith.org/

அனூப்

Friday, February 21, 2014

What is SSD?

SSD என்றால் என்ன?

ஹாட் டிஸ்க் ட்ரைவுக்கு மாற்றீடாக எதிர் காலத்தில் கணினிகளில் இடம் பிடிக்கப் போகிறது SSD எனும்  Solid State Drive. இது ஹாட் டிஸ்க் போனறு மின் இணைப்பின்றி டேட்டாவை நிரந்தரமாக சேமித்து வைக்கக் கூடிய ஒரு துணைத் தேக்கச் சாதனமாகும். டேடாவைப் பதிவு (write) செய்வதற்கும் (read) படிப்பதற்கும் SSD ட்ரைவ் ஹாட் டிஸ்க் போன்றே IDE மற்றும்  SATA இடை முகப்புகளுடன் கணினியில் இணைக்கப் படுகிறது.

SSD ட்ரைவ்கள் ஹாட் ட்ரைவ் போன்றே தொழிற்பட்டாலும் அவற்றின் உள்ளுறுப்புக்கள் வேறு பட்டவை. ஹாட் டிஸ்க் ட்ரைவில் போன்று SSD இல் அசையும் பாகங்கள் இல்லை. அதனால் தான் அதனை ஆங்கிலத்தில்  ளழடனை ளவயவந  (திட நிலை) எனப்படுகிறது. ஹாட் டிஸ்க்கில் டேட்டாவை பதிவு செய்யவும்  படிக்கவும் பயன்படும் மின்காந்தப் புல தொழில் நுட்பத்துக்குப் பதிலாக இங்கு  பெண் ட்ரைவ் போன்ற flash memory தொழில் நுட்பம் பயன் படுகிறது.

SSD இல் அசையும் பாகங்கள் இல்லாததனால் டேட்டாவை அணுகவோ படிக்கவோ பயன்படும் ட்ரைவ் ஹெட்டை (drive head)  ட்ரைவின் வெவ்வேறு பகுதிகளுக்கு அசைக்க வேண்டியதில்லை. எனவே ஹாட் டிஸ்கை விடை SSD லிருந்து வேகமாக தரவுகளைப் படிக்கலாம்.

ஹாட் ட்ரைவை விட SSD பல அனுகூலங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ஹாட் டிஸ்கில் ஒரு பைலுக்குரிய பகுதிகள் சிதறலாக பல் வேறு இடங்களில் சேமிக்கப்படுவதால் அதிகளவில் டேட்டா சேமிக்கப்படும் போது டேட்டாவைப் படிக்கும் ஆற்றல் குறைந்து விடுகிறது. எனினும் இக்குறைபாடு SSD இல் ஏற்படுவதில்லை. அதனால் ஹாட் டிஸ்கைப் போன்று SSD க்களை டிப்ரேக்மன்ட் (defragment) செய்யவும் அவசியம் ஏற்படுவதில்லை. மேலும் SSD இல் காந்தப் புல தொழிநுட்பம் பயன்படுத்தப்படாமையினால் தீவிர காந்தப் புலங்களுக்கு அருகாமையில் இருந்தாலும் டேட்டா இழப்புக்கள் ஏற்படுவதில்லை.

அசையும் பாகங்கள் இல்லாமையினால் அது பழுதடைவதற்கான வாய்ப்புக்களும் குறைவு என கருதப்படுகிறது. மேலும் அது நிறை குறைந்தது. இயங்கும்போது இரைச்சலை உண்டாக்காதுகுறைந்தளவு மின் சக்தியையே பயன் படுத்துகின்றது. இது போன்ற பல அனுகூலங்களினால் SSD தற்போது  மடிக்கணினிகளில் இடம் பிடிக்க ஆரம்பித்துள்ளது

ஹாட் ட்ரைவை விட பல அனுகூலங்கள் காணப்பட்டாலும் ஒரு சில பிரதி கூலங்களையும் SSD கொண்டுள்ளது. குறிப்பாக அதன் விலை ஹாட் டிஸ்கை விட மிக அதிகமாகவுள்ளது. SSD தொழிநுட்பம் புதிதென்பதாலேயே அதன் அதிக விலைக்குக் காரணம் கூறப்படுகிறது. மேலும் அதன் கொள்ளளவும் இன்னும் சிறிய அளவிலேயே உள்ளதுடேட்டாவை அழித்து மீள பதிவு செய்யும் எண்ணிக்கையும் மட்டுப் படுத்தப்பட்டதால் காலம் செல்லச் செல்ல அதன் செயற் திறனும் குறைந்து விடும் சாத்தியம் உண்டு.


எனனினும் தற்போது SSD தொழில் நுட்பம் வளர்ந்து வருவதாலும் விலையும் கூட குறைந்து வருவதாலும் தற்போது பயன் பாட்டிலுள்ள ஹாட் டிஸ்குகளுக்கு மாற்றீடாக இன்னும் சில வருடங்களில் கணினிகளில் SSD ட்ரைவ் பரவலாகப் பயன் படுத்தப்படும் என்பதை இப்போதே உறுதியாகக் கூறலாம்.

அனூப்

Thursday, February 20, 2014

What is Read only file?

எதற்கு இந்த Read only file?

கணினியில் காணப்படும்  ஃபைல்களில்வாசிக்க மட்டும்எனும் பண்பைக் கொண்ட ஃபைல் வகைகளை Read only file எனப்படுகிறது. விண்டோஸ் இயங்கு தளத்தில் boot.ini, io.sys, msdos.sys போன்ற சிஸ்டம் பைல்கள் read-only  எனும் பண்பையே கொண்டிருக்கும்.

இவ்வாறான read-only  பண்புகளைக் கொண்ட பைல்களை திறந்து பார்க்க முடியும். எனினும் அந்த பைல்களில் மாற்றங்கள செய்ய இயலாது. அதாவது write செய்வது தடுக்கப்பட்டிருக்கும். மேலும் வழமையான பைல்களைப் போல் அழிக்கவும் இடமாற்றம் செய்யவும் முடியும். எனினும்  .சிஸ்டம் பைல்களான Read only file களை அழிக்கவோ இடமாற்றம் செய்யவோ முடியாது

நீங்கள எக்சல் போன்ற விரிதாள் மென்பொருள் கொண்டு  முக்கியமான ஒரு பைலை உருவாக்கியிருக்குறீர்கள்அந்த பைலை உங்களுடன் பணியாற்றும் பலருடன் பகிர்ந்து கொள்கிறீர்கள். அந்த பைலில் வழங்கியுள்ள ஒரு சூத்திரத்தை (formulaஎவரேனும் தவறுதலாக மர்றறி விடுவாராயின் உங்கள் மொத்த விரிதாளும் பயனற்றுப் போய்விடும். எனவே அந்த ஃபைலுக்கு Read only பண்பை வழஙகி விட்டால் அந்த பைலில் எவராலும் மாற்றம் செய்ய முடியாது. மாற்றங்களுடன் அதனை சேமிக்க முயற்சித்தாலும் அந்த மாற்றங்கள் சேமிக்கப்பட மாட்டாது.

ஒரு பைல் Read only file என்பதை அறிந்து கொள்ள அந்த பைலின் மீது வலது க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Attributes எனும் பகுதியின் கீழ் Read only file என்பது தெரிவு நிலையில் இருக்குமாயின் அது ஒரு  Read only file ஆகும். தெரிவை நீக்குவதன் மூலம் அதனை ஒரு சாதாரண பைலாகவும் மாற்றி விட முடியும்.

அனூப்

Wednesday, February 19, 2014

Google Play Store - AutoResponder

Android App  - AutoResponder 

உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஆனால் அசமயத்தில் நீங்கள் வேறு வேலையில் ஈடுபட்டிருக்கு றீர்கள். உங்களால் அப்போது அந்த அழைப்புக்குப் பதில் சொல்ல முடியாத நிலையில் தானாகவே உங்களை அழைத்தவருக்கு குறுஞ் செய்தி மூலம் பதில் சொல்லி விடுகிறது AutoResponder  எனும் அண்ட்ரொயிட் அப்லிகேசன். தொலை பேசி அழைப்புகளுக்கு மட்டு மல்லாமல் உங்களுக்கு வரும் குறுஞ் செய்திகளுக்கும் இந்த அப்லி கேசன் மூலம் பதில் சொல்ல முடிகிறது. நீங்கள் தெரிவிக்க வேண்டிய செய்தியை நீங்கள் விரும்பியவாறு ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்குமேற்றாற் போல் வெவ்வேறு செய்திகளை மாற்றியமைக்க வும் முடிகிறது. இந்த AutoResponder  அப்லிகேசனை Google Play Store லிருந்து தரவிறக்கலாம்.

அனூப்