Thursday, April 24, 2014

Recover data from your old hard disk

பழைய ஹாட் டிஸ்கில் இருந்து டேட்டாவை மீட்க..

நீங்கள் முன்னர் பயன் படுத்திய பழைய ஹாட் டிஸ்கில் உள்ள டேட்டாவை அந்த ஹாட் டிஸ்கை கணினியில் உள்ளே மறுபடியும் இணைக்காமலேயே எடுப்பதற்கு உதவுகிறது SATA/IDE to USB adaptor எனும் கருவி. இதன் மூலம் ஒரு பென்ட்ரவை கணினியில் USB போர்டில் இணைப்பதுபோல் இலகுவாக இணைத்து அதிலிருந்து தரவுகளை எடுத்து ஏற்கனவே கணினியில் பொருத்தியுள்ள ஹாட் டிஸ்கில் பதிந்து விடலாம்.

SATA மற்றும் IDE வகை ஹாட் டிஸ்கை இந்த கருவியின் ஒரு முனையில்  பொருத்தி விட்டு மறுமுனையை USB போட்டில் இணைக்க வெண்டும். இதற்கான மின்னிணைப்பு புறம்பாக  வழங்கப்படும். மேலும்  இந்தக் கருவியை கணினியில் இணைத்தவுடனேயே விண்டோஸ் இனம் கண்டு கொள்ளும். எந்த ட்ரைவர் மென்பொருளும் நிறுவ வேண்டியதில்லை இதன் மூலம் ஹாட் டிஸ்கை மாத்திரமன்றி சிடி, டீவிடி ரோம்களையும் வெளிப்புறமாக கணினியுடன் இணைத்து இயங்க வைக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம் எனலாம். இந்தக் கருவியை இலங்கையில் ரூபா. 1200  ற்குப் பெறலாம்.

அனூப்

Wednesday, April 23, 2014

Google Play Store - Rainbow Contacts

 Rainbow Contacts
நீங்கள் புதிதாக ஒரு எண்ட்ரொயிட் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்குறீர்கள். இது வரை பயன் படுத்திய உங்கள் பழைய தொலைபேசியிலுள்ள நண்பர்களின்  தொலைபேசி இலக்க விவரப் பட்டியலை (contacts list)  புதிதாக வாங்கிய எண்ட்ரொயிட் தொலைபேசியில் சேர்க்க வேண்டும். அந்தப் பட்டியல் மிக நீளமானது  என்றால் ஒவ்வொன்றாக டைப் செய்து இணைப்பது இலகுவான விடயமல்ல. எனவே இதன் அவசியத்தை உணர்ந்து உருவாக்கப் பட்டிருக்கும் எப்லிகேசனே Rainbow Contacts இதன் மூலம் ஒரு எண்ட்ரொயிட் தொலைபேசிக்கு வேறொரு தொலைபேசியிலிருந்து  ப்லூடூத் வசதியூடாக தொடர்பாளர் பட்டியல் முழுவதையும்  இலகுவாக மாற்றிக் கொள்ளலாம்.


Rainbow Contacts
கூகில் ப்லே ஸ்டோரிலிருந்து Rainbow Contacts எப்லிகேசனை  புதிய எண்ட்ரொயிட் தொலைபேசியில் நிறுவி விட்டு உங்கள் பழைய தொலைபேசியின் ப்லூடூத் வசதியை இயக்குங்கள். இதன் மூலம் பழைய தொலைபேசியில் உள்ள தொடர்பாளர் பட்டியல் முழுதையும்  புதிய தொலைபேசிக்கு இலகுவாக மாற்றறி விடலாம். பழைய தொலைபெசியில் இதனை நிறுவ வேண்டிய அவசியமில்லை. மேலும் இந்த செயற்பாட்டிற்கு 3G / Wifi / data cable இணைப்புக்கள் கூட  அவசியமில்லை மென்பது சிறப்பம்சம்.

அனூப்

Tuesday, April 22, 2014

Difference between http and https

http / https என்ன வேறுபாடு?

இணையதள முகவரிகள் பொதுவாக http  என ஆரம்பிக்கும். எனினும் சில இணைய தளங்கள் https என ஆரம்பிப்பதையும் நீங்கள் அவதானித் திருக்கலாம் http  (Hypertext Transfer Protocol)  என்பது  இணையம் வழியே தகவல்களை அனுப்பவும் பெறவும் என நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சில வரையறைகளாகும்இது தகவல்கள் விரைவாகவும், இலகுவாகவும் திருத்தமாகவும் தகவல்களைத் தேக்கி வைத்திருக்கும் சேர்வர் கணினி களிடையேயும் பயனரிடையேயும் பரவுவதற்கு வழி செய்கிறது

Http என்பது பொதுவாக html கொண்டு உருவாக்கப் பட்ட வெப் பக்கங்களை அணுகவே பயன் படுகிறது. எனினும் இணையத்திலுள்ள வேறு வளங்க ளையும் Http ஊடாகப் பெற முடியும். சில நேரங்களில் சேர்வர் கணினிகளின் ஊடாக கடன் அட்டை விவரங்கள் போன்ற அந்தரங்கமான விடயங்களையும் பறிமாற வேண்டிய  தேவை ஏற்படலாம்இவ்வாறான தகவல்கள் அதிகாரமற்ற எவரும் பெற முடியா வண்ணம் பதுகாக்கப்படவும் வேண்டும். இநோக்கத்திற்காக உருவாக்கப் பட்டிருக்கும்  ஒரு நெறி முறையே https  ஆகும். இதனை secure http Http எனப்படுகிறது

பல நிலைகளில் Http மற்றும் https  என்பன ஒரே மாதிரியாகவே தொழிற்படுகின்றன. காரணம் அடிப்படையில் அவை ஒரே வகையான நெறி முறைகளாகும்

Http மற்றும்   https  க்ளையண்ட் மென்பொருளான ஒரு வெப் பிரவுசர், ஒரு சேவர் கணினியுடன் இணைப்பை ஏற்படுத்தி அந்த சேர்வரிடம் ஒரு தகவலை எதிர் பார்த்து நிற்கிறது. இந்த செய்தியைப் பெறும் அந்த  சேர்வர் கணினி தனது தற்போதைய நிலையை தெரிவிப்பதோடு கூடவே ஒரு செய்தியையும் பிரவுஸருக்கு அனுப்பி வைக்கிறதுஅந்த செய்தியானது பிரவுசர் எதிர்பார்த்த தகவலாக இருக்கலாம் அல்லது தகவல் செயற்பாடு முறையாக செயற் படவில்லை என்ற ஒரு ஒரு பிழைச் செய்தியாகவோ இருக்கலாம். https  பயன் படுத்தும் போது தரவு மறை குறியாக்கம் ((encrypted)  செய்யப் பட்ட (SSL Secure Sockets layer-Digital Certificate) பாதுகாப்பான ஒரு இணைப்பு அவசியம் என்பதனை சேர்வருக்கு உணர்த்தி விடுகிறது.  

அனூப்