Friday, May 23, 2014

How to configure Gmail for other email sevices?

Gmail – இல்  பிற மின்னஞ்சல்களையும் பார்வையிடலாம்

பொதுவாக மின்னஞ்சல் பாவனையாளர்கள் பலரும் ஜிமெயில்யாகூஹொட் மெயில் என ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் சேவை நிறுவனங்களில் கணக்குகளை வைத்திருப்பது வழக்கம்.  இம்மின்னஞ்சல்களை பிரவுஸரில் பார்வையிடுவதாயின் ஒவ்வொரு மின்னஞ்சல் சேவை தரும் நிறுவன இணைய தளத்திற்குச் சென்று லொக் இன் செய்து பார்வையிட வேண்டும். இது சற்று சிரமான வேலைதான்.   

எனினும் Outlook, Outlook Express போன்ற மெயில் க்ளையண்டுகளைப் பயன் படுத்துவதன் மூலம் பல மின்னஞ்சல் கணக்குகளை ஒரே நேரத்தில் நிர்வகிப்பதற்கான வசதியைப் பெறலாம். எப்போதும் ஒரே கணினியைப் பயன் படுத்துபவர்களுக்கு இந்த மெயில் க்ளையண்ட் (mail client)  சிறந்த தெரிவுதான். எனினும் மின்னஞ்சல்களைப் பார்வையிட நிரந்தரமாக ஒரு கணினியைப் பயன் படுத்தாதவர்கள் தாம் பயன் படுத்தும் ஒவ்வொரு கணினியிலும் இந்த மெயில் க்ளையண்டுக்கான செட்டிங்க்ஸ் மாற்ற வேண்டியிருக்கும்.

இமெயில் க்ளையண்டுகள் போன்று பல மின்னஞ்சல் கணக்குகளை பார்வையிடவும் நிர்வகிக்கவும் கூடிய வசதியை ஜிமெயில் தருகிறது. அதாவது ஒரு மெயில் க்லையண்ட்டாகவும் ஆகவும் ஜிமெயில் தொழிற்படுகிறதுஇதன் மூலம் உங்கள் பிரவுசரிலேயே ஜிமெயில் மட்டுமல்லாது பிற நிறுவனங்களின் கணக்குகளுக்கு வரும் மின்னஞ்சல்களையும் ஜிமெயில் இன்பொக்ஸிலேயே பார்வை யிடலாம்இவ்வாறு ஐந்து வெவ்வேறு கணக்குகளை ஜிமெயிலுடன் இணைத்துக் கொள்ள முடியும்.   அந்த வசதியைப் பெற  பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள்.


முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கிற்குள் லொகின் செய்து நுளையுங்கள். அங்கு Settings க்ளிக் செய்யுங்கள். தோன்றும் விண்டோவில் Accounts & Import டேபில் க்ளிக் செய்து  Add a POP3 mail account you own   என்பதைக் க்ளிக் செய்யுங்கள். அப்போது ஒரு பொப் அப் விண்டோ தோன்றும். அங்கு பிற மின்னஞ்சல் கணக்கு விவரங்களை வழங்கி கீழுள்ள Add Account பட்டனில் க்ளிக் செய்து விடுங்கள்.

அனூப்

Thursday, May 22, 2014

Google Play Store - AppLock

AppLock

டேப்லட் கணினி, செல்போன் போன்ற கையடக்கக் கருவிகள் தனி நபர் பாவனைக்குரியதே. எனினும் சில வேளைகளில் இக்கருவிகளை நண்பர்களின் கையிலும் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம். இவ்வாறு கொடுக்கும் போது நண்பர்கள் புதிதாக அப்லிகேசன்கள் நிறுவி விடுவார்கள அல்லது வேறு ஏதாவது செட்டிங் மாற்றி விடுவார்கள். மின்னஞ்சல் போன்ற அந்தரங்க விடயங்களைக் கூட இவர்கள் பார்வையிட விட வாய்ப்புள்ளது.

இவ்வாறான தொல்லையிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கென அண்ட்ரொயிட் கருவிகளுக் காக உருவாக்கப் படிருக்கும் அப்லிகேசனே  AppLock. இதன் மூலம் நீங்கள் விரும்பும் அப்லிகேசனை பாஸ்வர்ட் கொண்டு பாதுகாக்க முடியும் அண்ட்ரொயிட் கருவியை எவர் கையில் கிடைத்தாலும் அந்தப் பாஸ்வர்ட் அறிந்தால் மட்டுமே அப்லிகேசன்களை இயக்கலாம்.

தொலைபேசியில் அழைப்புக்களை எடுத்தல், மின்னஞ்சல் பார்வையிடுதல், அப்லிகேசன்களை நிறுவுதல், செட்டிங் மாற்றுதல் போன்ற செயற்பாடுகளைத் எப்லொக் மூலம் இலகுவாகத் தடுக்க முடியும். கூகில் ப்லே ஸ்டோரில் இது இலவசமாகவே கிடைக்கிறது.

அனூப்

Wednesday, May 21, 2014

How to hide files in Windows

பைல் போல்டர்களை இப்படியும் மறைக்கலாமே..
விண்டோஸ் இயங்கு தளத்தில் ஒரு போல்டரை அல்லது பைலை மறைத்து வைப்பது எப்படி என பலரும் அறிந்திருப்பீர்கள். அதாவது மறைத்து வைக்க விரும்பும் பைல் அல்லது போல்டரின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் ப்ரொப்படிஸ் தெரிவு செய்யும் போது  வரும் டயலொக் பொக்ஸில்  “hidden” எனும் பண்பை தெரிவு செய்து விட்டால் போதும். அந்த பைல் மறைந்து விடும் அவ்வாறே மறைத்து வைத்த அந்த பைலை மறுபடியும் தோன்றச் செய்யும் இரகசியத்தையும் கூட அறிந்திருப்பீர்கள். ஆனால நான் இங்கு சொல்ல வருவது அது போன்ற மறைத்து வைத்தல் அல்ல. முக்கியமான விண்டோஸ் இயங்கு தளத்துக்குரிய பைல்கள் மறைத்து வைக்கப்படுவது போல் ஒரு பைலை மறைத்து விட்டால் விண்டோஸ் எக்ஸ்ப்லோரரில் Folder Options தெரிவு செய்து display hidden files and folders என்பதைத் தெரிவு செய்தாலும் அந்த பைலைக் காண்பிக்காது.

இவ்வாறு பைலை மறைத்து வைப்பதற்கு பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.  முதலில் ஸ்டாட் - ரன் ஊடாக cmd என டைப் செய்து கமாண்ட் ப்ரொம்டில் நுளையுங்கள். இங்கு பைலை மறைப்பதற்கு attrib எனும் கட்டளையை கீழுள்ளவாறு  (மேற்கோள் குறியீடின்றி) வழங்குங்கள். . attrib +s +h “C:\Users\Mad\Desktop\images”

இங்கு “C:\Users\Mad\Desktop\images” எனும் பகுதிக்குப் பதிலாக நீங்கள் மறைத்து வைக்க விரும்பும் போல்டர் அமைந்துள்ள இடைத்தின் path வழங்க வேண்டும். Images என்பது போல்டரைக் குறிக்கிறது.  மறைக்க வேண்டியது ஒரு பைலாயின் அந்த பைலுக்குரிய பைல் நீட்சியையும்-file extension வழங்க வேண்டும்.

இப்போது அந்த Images போல்டர் மறைக்கப் பட்டு விடும். எக்ஸ்ப்லோரர் விண்டோவில் போல்டர் ஒப்ஸன்ஸ் தெரிவு செய்து show hidden files and folders என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றினாலும் மறைத்து வைத்த போல்டரைக்  காண்பிக்காது.

மறைத்து வைக்கப் பட்ட அதே பைலை மறுபடி தோன்றச் செய்ய மேற் சொன்ன அதே கட்டளையை உரிய பைல் அல்லது போல்டர் சேமிக்கப் பட்டுள்ள  இடத்துடன்  ”+”  குறியீட்டுக்குப் பதிலாக “-“  குறியீட்டை வழங்க வேண்டும். attrib -s -h “C:\Users\Mad\Desktop\images”

இவ்வாறு மறைத்து வைக்கப்படும் பைல்களையும் விண்டோஸ் எக்ஸ்ப்லோரரில் காண்பிப்பதற்கு மற்றுமொரு வழியும் உண்டு. அதற்கு போல்டர் ஒப்ஸன்ஸ் டயலொக் பொக்ஸில் Hide protected operating system files என்பதை தெரிவு நிலையிலிருந்தி நீக்கி விட வேண்டும்

அனூப்

What is Sync?

Sync என்றால் என்ன? 


Sync என்பது சிங்க்ரனைசேஸன் synchronization  என்பதன் சுருக்கமாகும். இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சாதனங்களிலுள்ள ஒரே தரவுகள் சமப்படுத்தப் படுவதையே சிங்க்ரனைஸ் எனப்படுகிறது. இரண்டு கணினிகளை Sync செய்தல் என்பது குறித்த ஒரு  நேரத்தில் இரண்டு கணினிகளிலுமுள்ள ஒரே தரவுகளை ஒன்றை மற்றையதுடன் சமப் படுத்தப் படுவதைக் குறிக்கிறது அல்லது ஒரே தரவு மற்றைய கணினியில் பிரதி செய்யப் படுகிறது.
 உதாரணமாக நேற்று உங்கள் கணினியிலுள்ள சில பைல்களை வேறொரு கணினியில் பிரதி செய்தீர்கள். இன்று உங்கள் கணினியிலுள்ள அதே பைல்களுள் சிலவற்றை அழித்து விடுவதோடு புதிதாக சில பைல்களையும் சேர்த்து விடுகிறீர்கள். இப்போது மறுபடியும் அதே பைல்களை மற்றைய கணினியுடன் Sync செய்யும் போது இன்று அழித்த அதே பைல்களை மற்றைய கணினியிலும் அழிக்கப்படுவதோடு புதிய பைல்களும் சேர்க்கப் பட்டுவிடும்.


இப்போது சிங்க் எனும் வசதி ஐபோன், ஐபோட்  மற்றும் அண்ட்ரொயிட் போன்ற கையடக்கக் கருவிகளிலும் கிடைக்கின்றன. கையடக்கக் சாதனங்களிலுள்ள கணினியிலுள்ள பாடல்கள், வீடியோ, மற்றும் மின்னஞ்சல் போன்றன உங்கள் கணினியிலுள்ள அதே பைல்களுடன் சமப்படுத்தப்படுகின்றன. 

அனூப்