Thursday, July 24, 2014

When you install APK files in Android devices..

Android  கருவியில் APK பைல்களை நிறுவுவதற்கு.. 


When you install APK files
கூகில் ப்லே ஸ்டோரில் இல்லாத எண்ட்ரொயிட் அப்லிகேசன்களை வேறு தளங்களில் இருந்து டவுன்லோட் செய்து இலகுவாக எண்ட்ரொயிட் கருவியில் நிறுவிட முடியும். இந்த பைல்கள் .apk எனும் பைல் நீட்சியுடன் காணப்படும். இதனை விண்டோஸ் இயங்கு தளத்தின் .exe பைல் வகைக்கு ஒப்பிடலாம். இந்த .apk பைலை டவுன் லோட் செய்து எண்ட்ரொயிட் கருவியில் திறந்ததுமே நிறுவ ஆரம்பித்து விடும். எனினும் உங்கள் கருவியில் ஒரு சிறிய மாற்றத்தை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். அதாவது மூன்றாம் தரப்பு நிறுவன அப்லிகேசன்களை நிறுவுவதற்கான ஒப்புதலை உங்கள் என்ரொயிட் கருவிக்கு வழங்க வேண்டும். அதற்கு உங்கள் கருவியில் Settings  இல் தட்டி Applications   என்பதில் “Unknown Sources” என்பதைத் தெரிவு செய்ய வேண்டும்.

அனூப் 

Home Key / End Key

'Home' Key /  'End' Key  என்ன செய்யும்



விசைப் பலகையில் Home , End  என இரு விசைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் மிக அரிதாகவே அவற்றைப் பயன் படுத்தியிருப்பீர்கள் Home  மற்றும் End விசைகள் நீங்கள் பயன் படுத்தக் கூடிய சில இடங்களை இங்கு குறிப்பிடுகிறேன். எம்.எஸ்.வர்ட் போன்ற மென்பொருள்களில் End  விசையை அழுத்தும்போது தற்போது கர்சர் உள்ள வரியிலிருந்து அதன் இறுதிப் பகுதிக்கு கர்சரை நகர்த்தும். அவ்வாறே Home விசையை அழுத்தும் போது அவ்வரியின் ஆரம்பத்தில்  கர்சரை நிறுத்தும். (Ctrl) கண்ட்ரோல் விசையுடன் இணைத்து Home , End விசைகளை அழுத்தும் போது அந்த ஆவணத்தின் ஆரம்பப் பகுதிக்கும் , இறுதிப் பகுதிக்கும் கர்சரை முறையே நகர்த்தும். மேலும் ஒரு வெப் பிரவுசரில் இந்த விசைகளை அழுத்தும் போது ஒரு இணைய பக்கத்தின்  ஆரம்பப் பகுதியையும் இறுதிப் பகுதியையும் காண்பிக்கும். எனினும் இங்கு  Ctrl  விசையை சேர்த்து அழுத்த வேண்டியதில்லை

அனூப்

Wednesday, July 23, 2014

How to use your Pen drive as a RAM?

உங்கள் பென் ட்ரைவை நினைவகமாகப் பயன் படுத்துவது எப்படி?

ஒரு கணினியின் செயற்திறனில் பிரதான நினைவகமான ரேம் முக்கிய பங்கு வகிக்கிறது. நினைவகத்தின் கொள்ளளவு அதிகமயிருப்பின் கணினி வேகமாகவும் குறைவாக இருப்பின் மந்த கதியிலும் இயங்குவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். நினைவகத்தின்  கொள்ளளவை அதிகரிப்பதாயின் அதற்கு அதிகம் செலவாகும். உங்களிடம் ஒரு பென் ட்ரைவ் இருப்பின் அதனையே ரேம் ஆகப் பயன் படுத்தலாம். இந்த வசதிய விண்டோஸ் இயங்கு தளம் வழங்குகிறது.

நீங்கள் பயன் படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு எனின் பின்வரும் மாற்றங்களை உங்கள் கணினியில் செயற்படுத்த வெண்டும்முதலில் பென் டரைவைக் கணினியில் செருகி அதனை போமட் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து My Computer ஐக்கனில் ரைட் க்ளிக் செய்து  properties என்பதைத் தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Advance டேபைக் க்ளிக் செய்யுங்கள். அங்கு performance. என்பதன் கீழ் settings  தெரிவு செய்யுங்கள். தோன்றும் performance options டயலொக் பொக்ஸில் மீன்டும் Advance  டேபைக்  க்ளிக் செய்யுங்கள். அங்கு change என்பதைத் க்ளிக் செய்து வரும் பெட்டியில் உங்களது பென்ட்ரைவுக்குரிய எழுத்தைத் தெரிவு செய்யுங்கள். பின்னர் custom size’ என்பதைத் தெரிவு செய்து நினைவகமாகப் பயன் படுத்தக் கூடிய பென்ட்ரைவின் அளவை விரும்பியவாறு தெரிவு செய்து கொள்ளலாம்.  இறுதியாக set பட்டனைக் க்ளிக் செய்து ஓகே சொல்லி விட்டுக் கணினியை மறுபடி இயக்குங்கள். முன்னரை விட கணினி வேகமாக இயங்குவதை அவதானிக்கலாம்.

விண்டோஸ் 7 மற்றும் 8 பாயனர்கள் இன்னும் இலகுவக இந்த மாற்றத்தைச் செய்யலாம். முதலில் பென்ட்ரைவைக் கணினியில் செருகி விட்டு அதனை போமட் செய்யுங்கள் பின்னர் மை கம்பியூட்டர் விண்டோவில் பென் ட்ரைவ் ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து ‘properties’  தெரிவு செய்யுங்கள். அங்கு Ready boost டேபைக் க்ளிக் செய்து use this device என்பதைத் தெரிவு செய்யுங்கள். இங்கு நினைவகமாகப் பயன் படுத்தக் கூடிய உச்ச அளவைத் தெரிவு செய்து ஓகே க்ளிக் செய்யுங்கள்.

அனூப்


Tuesday, July 22, 2014

PALS e-DICTIONARY - Tamil

PALS e-DICTIONARY  - தமிழ் அகராதி

Pals e-Dictionary என்பது  ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி. இந்த அகராதி சுமார் 45,000 முக்கிய சொற்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சொல்லினதும்  பொருளும் முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்களும் ஆங்கிலம் மற்றும் தமிழ் பொருளுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள தேடல் வசதி  ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருளை விரைவாக தேடிப் பெற அனுமதிக்கிறது. தேடும் சொல் ஆங்கிலம் அல்லது தமிழாக இருக்கிறது. மேலும் விரிவாக தேடும் முறையில் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கான அனைத்து பொருளையும் கொடுக்கிறது. அனைத்து சொற்களும் ஹைபர்லிங்க் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு சொல்லை கிளிக் செய்தே அதன் பொருளை பெறலாம்.


சென்னை பழனியப்பா பிரதர்ஸ்  உருவாக்கியுள்ள  73 எம்பி அளவு கொண்ட இந்த அகராதியை www.palbrothers.com இணைய தளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். எனினும் தற்போது இந்த தளம் இயங்கமல் இருப்பதால் http://software.informer.com/ எனும் தளத்தில் பெறலாம்

அனூப்

What is Phishing?

Phishing என்றால் என்ன?

பிஸிங் (Phishing)  என்பது குளத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது (fishing)  போன்ற ஒரு விடயம் தான். ஆனால் இங்கு மீனுக்குப் பதிலாக கடன் அட்டை விவரங்கள், ஓன்லைன் பயனர் கணக்கு விவரங்கள், கடவுச் சொற்கள் போன்ற ஒருவரின் தனிப்பட்ட விடயங்கள் திருடப் படுகின்றன. இந்த இணைய திருடர்கள் உங்களுக்கு eBay, PayPal மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து அனுப்பு வது போல் போலியான மின்னஞ்சல்களை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவார்கள். போலி என்று கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அசல் போன்றே இருக்கும் அந்த மின்னஞ்சலில் உங்கள் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்க வேண்டிய (update) தேவை இருப்பதாகவும் அல்லது செல்லுபடியாக்க அல்லது நீடிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் எனவே உங்கள் கணக்கு பற்றிய விவரங்களை (பயனர் பெயர், கடவுச் சொல்) வழங்கமாறும் அதன் பின்னர் கீழுள்ள இணைப்பில் க்ளிக் செயுமாறும் அறிவுறுத்தப்படுவீர;கள். பின்னர் நீங்கள் அந்த இணைப்பில் க்ளிக் செய்ய மறுபடி உங்கள பெயர், முகவரி தொலைபேசி இலக்கம் என மேலும் பல விவரங்களை வழங்குமாறும் கோரும். உங்கள் கணக்கிற்குரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் மாத்திரமே வழங்கி விட்டாலே போதும். னைய விவரங்களை அந்த கணக்கினுள் நுழைந்து திருடி விடுவார்கள்.

அந்த லின்ங்கில் க்ளிக் செய்யும் போது வரும் இணைய தளமும் ஓரளவு உண்மையான நிறுவன இணைய தளம் போன்றே  தோற்றமளிக்கும். அது உண்மையானதா போலியானதா என்பதை முகவரிப் பட்டையில் தெரியும் URL லிருந்து இலகுவாக இனம் காணலாம். உதாரணமாக eBay தளத்தைப் பார்வையிடும் போது அந்த தளத்தின் டொமேன் பெயரின் இறுதிப் பகுதி ebay.com முடிவுறும். அதாவது http://www.ebay.com, http://cgi3.ebay.com என்பன செல்லுபடியான உண்மையான  நடியல தளத்தினைக் குறிக்கின்றன. எனினும் http://www.ebay.validate-info.com, http://ebay.login123.com என்பன போலியான தள முகவரிகள் என்பதை இலகுவாக இனம் காணலாம்

மேலும் paypal போன்ற வணிக மற்றும் நிதி நிறுவனங்களின் இணைய தள முகவரியில்  http என்பதற்குப் பதிலாக  https எனும் நெறி முறை பின்பற்றப் பட்டிருப்பதைக் காணலாம்இது நாம் பார்வையிடும் தளம் மிகவும் பாதுகாப்பான தளம் என்பதை உறுதி செய்கிறதுமின்னஞ்சலில் தரப்பட்டட லின்ங்கில் க்ளிக் செய்ய வரும் இணைய தளத்தின் பெயருக்குப் பதிலாக ஒரு 12.30.229.107 எனும் வடிவில் ஒரு  IP முகவரி தோன்றுமாயின் அதுவும் ஒரு போலியான இணைய தளம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

உங்கள் ஓன்லைன் கணக்கிற்குரிய தகவல்களைப் புதுப்பிக்கக் கோரி வரும் மின்னஞ்சல் உண்மையானது என நீங்கள் கருதினால் அந்த மின்னஞ்சலில் தரப்பட்டிருக்கும் இணைப்பில் க்ளிக் செய்யாது நேரடியாக பிரவுஸரின் முகவரிப் பட்டையில் அத்தளத்தின் முகவரியை டைப் செய்து இணையுங்கள். உதாரணமாக உங்கள் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்குமாறு Pay Pal தளத்திலிருந்து அனுப்பியிருப்பது போல் மின்னஞ்சல் வந்திருந்தால்  https://www.paypal.com என டைப் செய்து இணை யுங்கள். அந்த இணைய தளத்தில் உண்மையாகவே விவரங்களைப்  புதுப்பிக்கக் கோரியிருப்பின் உங்களுக்கு வந்தது நிஜமான ஒரு மின்னஞ்சலே. எனினும் விவரங்களைப் புதுப்பிக்குமாறு கோரவில்லை யெனின் அது தகவல் திருடும் நோக்கில் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சல் என இனம் காணலாம்


இது போன்ற மின்னஞ்சல் உங்களுக்கு மாத்திரமல்ல. யாரோ ஒரு அப்பாவி தங்களிடம் மாட்டிக் கொள்வார் எனும் நம்பிக்கையில்பலருக்கு ஒரே நேரத்தில் அனுப்பப்படும். எனவே இது பொன்ற மின்னஞ்சல்கள் வரும்போது மிகக் அவதானமாக அவற்றைக் கையாளப் பழகிக் கொள்ளுங்கள்.

அனூப்