Friday, August 22, 2014

Print to file - Print without a printer

ப்ரிண்டர் இல்லாமலேயே அச்சிட Print to file

நீங்கள் கணினியில் உருவாக்கிய ஒரு பைலை (உதாரணமாக எம். எஸ். வர்ட் ஆணமொன்றை) உங்களிடம் அச்சுப் பொறி இல்லாத நிலையில் அதனை அச்சிடாமலேயே ஒரு ப்ரிண்டர் பைலாக கணினியில் சேமித்துக் கொள்ளலாம். அந்த பைலை அச்சிட்டால் எவ்வாறு நமக்குத் தோற்றமளிக்குமோ அதே வடிவில் பக்க அமைப்புக்கள்  மாறாமல்  பேணப்படும்

இவ்வாறு ப்ரிண்டர் பைலை உருவாக்கும் போது .prn  எனும் பைல் நீட்சியுடன் அவை சேமிக்கப் படுகின்றன. கணினியில் நிறுவியுள்ள ப்ரிண்டர் ட்ரைவர் மென்பொருளி னாலேயே இந்த .prn பைல் உருவாக்கப் படுகின்றன. இந்தப் .prn  பைலை பின்னர் PDF பைலாகவோ அல்லது வேறு வடிவிலோ மாற்றிக் கொள்ளலாம். மேலும் .prn  பைலாக சேமிக்கும் போது அச்சுப்பொறி இணைக்கப் பட்டுள்ள ஒரு கணினியில் நீங்கள் ஆவணத்தை உருவாக்கிய குறித்த அப்லிகேசன் இல்லாமலேயே  அதனை அச்சிட்டுக் கொள்ளலாம்


தற்போதைய  விண்டோஸ் பதிப்புக்களில் XPS  எனும் ப்ரிண்டர் பைல் அறிமுகப் படுத்தப் பட்டுளளது குறிப்பிடத் தக்கதுஇந்த ப்ரிண்டர் பைலை உருவாக்குவதற்கு ப்ரிண்ட் டயலொக் பொக்ஸில் print to file என்பதைத் தெரிவு செய்ய வேண்டும்

அனூப்

Auto Recover feature in MS Office

மைக்ரோஸொப்ட் ஒபிஸ் Auto Recover

மைக்ரோஸொப்ட் ஒபிஸ் மென்பொருள் தொகுதியில் ஓட்டோ ரிகவரி எனும் வசதியுள்ளது. இந்த வசதி மூலம் ஒபிஸ் தொகுப்பில் பணியாற்றும் போது நமது டேட்டா கணினியில் ஒரு குறித்த நேர இடை வெளியில் (10 நிமிடம்தானாகவே சேமிக்கப் பட்டு விடுகின்றன. எதிர் பாராத விதமாக மின் தடை போன்ற காரணங்களால் கணினியின்  இயக்கம் தடைப் படும் போது  நாம் சேமிக்க மறந்தாலும் இந்த ஓட்டொ ரெகவரி வசதி மூலம் அந்த பைலை மீட்டெடுக்க முடியும். இந்த வசதி தற்போதைய ஒபிஸ் பதிப்பான 2013 மட்டுமல்லாது முன்னைய  பதிப்புக்களான  ஒபிஸ் எக்ஸ்பீ, 2003. 2007 ,மற்றும் 2010 பதிப்புக்களிலும் உள்ளது.

இவ்வாறு தானாகவே 10 நிமிடங்களுகொருமுறை சேமிக்கும்  நேர  இடை வெளியை நீங்கள் விரும்பியபடி கூட்டவோ குறைக்கவோ முடியும்.

ஒபிஸ் தொகுப்பில் ஏதேனும் ஒரு எப்லிகேசனில் உதாரணமாக எம்.எஸ்.வர்ட் 2010 இல் File  மெனுவில் க்ளிக் செய்து  Options தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில்  Save  க்ளிக் செய்து Save AutoRecover information எனுமிடத்தில் நேர இடை வெளியைக் மாற்றிக் கொள்ள முடியும்.

எம்.எஸ்.வர்ட் 2007 பதிப்பில் ஒபிஸ் பட்டனில் க்ளிக் செய்து Word Options தெரிவு செய்து மேற் சொன்னது போன்றே நெர இடை வெளியை மாற்றிக் கொள்ளலாம்.


ஒபிஸ் 2003 பதிப்பில் Tools  மெனுவில் Options தெரிவு செய்து வரும் டயலொக் பொக்ஸில் Save டேபில் க்ளிக் செய்து Save AutoRecover info every எனிமிடத்தில் மேற் குறிப்பிட்டபடி  மாற்றியமைக்கலாம்.

அனூப் 

Wednesday, August 20, 2014

CCleaner

 CCleaner

CCleaner என்பது ஒரு கணினி பயன்பாட்டில்  அவ்வப்போது சேரும் தற்காலிக பைல்கள் (temporary files)  போன்ற  வேண்டாத குப்பை பைல்களை நீக்கி  கணினியை சுத்தப் படுத்தும் ஒரு சிறிய மென்பொருள் கருவியாகும்.

மேலும் கணினி பயனரின் இணைய பயன்பாடு, இணைய தேடல் போன்ற தனிப்பட்ட விடயங்களை பிறர் கண்ணில் படாதவாறு temperory internet files, cookies என்பவற்றை நீக்கி அவரின் அந்தரங்கத்தையும் இது  பாதுகாப்பதோடு இணைய திருடர்களிடமிருந்தும் பாதுகாக்கிறது. மேலும் நீங்கள் அவ்வப்போது பயன் படுத்தும் அப்லிகேசன்கள் உருவாக்கும் தேவையற்ற பைல்களையும் நீக்கி ஹாட் டிஸ்கில் மேலதிக வெற்றிடத்தையும் சி-க்ளீனர் பெற்றுத் தருகிறது. ,


இந்த சி-க்ளீனர் மென்பொருள் கருவியை  https://www.piriform.com  எனும் இணைய தளத்திலிருந்து தறவிறக்கம் செய்யலாம்

அனூப்