Thursday, January 22, 2015

Search the Web for sound effects - findsounds.com

www.findsounds.com

பல்வேறு வகையான ஒலிக் கோப்புக் களின் களஞ்சியம் findsounds.com

இந்த இணைய தளத்தில் வெவ்வேறு ஒலி தரத்தில் வெவ்வேறு ஃபைல் வடிவங்களில் நீங்கள் விரும்பும் ஒலிகளைக் கேட்கலாம். ப்லே ஸ்டோரிலும் இதற்கான எப்லிகேசன் கிடைக்கிறது. 

அனூப்

Wednesday, January 21, 2015

You can find your folder open after restart

போல்டரைத் திறந்த நிலையிலேயே வரவழைக்க..

ஒரு போல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறீர்கள். கணினியை மறுபடியும் இயக்கியதும் அந்த போல்டரை நீங்களாகத் திறக்காமல் தானாகவே அந்த போல்டரை திறந்த நிலையில் வர வைக்கலாம். எனினும் விண்டோஸ் இயங்கு தளத்தில் இயல்பு நிலையில் இந்த வசதி நீக்கப்படிருக்கும். இந்த வசதியைப் பெற பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.


ஏதேனும் ஒரு போல்டரைத் திறந்து கொள்ளுங்கள்.; விண்டோஸ் செவன் இயங்கு தளத்தில்  Organize மெனுவில் Folder and Search options    (விண்டோஸ் xp யில் Tools மெனுவில் Folder Options)  தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபின் கீழ் Advanced settings பகுதியின் கீழ் Restore previous folder windows at logon என்பதைத் தெரிவு செய்து ஓகே செய்யுங்கள். அவ்வளவு தான். இனி ஒரு போல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியை ரீஸ்டார்ட் செய்து பாருங்கள். கணினி மறுபடி இயங்கியதும் அந்த போல்டர் திறந்த நிலையிலேயே வரக் காணலாம்.

அனூப்

Tuesday, January 20, 2015

How to add signature in Gmail

ஜிமெயிலில் Signature சேர்ப்பதற்கு....

நாம் ஒரு கடிதம் எழுதும்போது கடிதத்தின் இறுதியில் எமது கையொப்பத்தையும் (Signature) பொதுவாக இடுவது வழக்கம். அதே போன்று நாம் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் எங்கள் கையொப்பத்தைச் சேர்க்கலாம். ஆனால் கையொப்பமாக எங்கள் பெயரைக் கிறுக்குவதற்குப் பதிலாக பெயர், பதவி, முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, இணைய தள முகவரி போன்ற விவரங்களேமின்னஞ்சல் கையொப்பமாகசேர்க்கப்படும். இந்த கையொப்பம் நாம் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் தானாக ஒட்டிக் கொள்ளும்.

ஜிமெயிலில் இயல்பு நிலையில் (default) இந்த கையொப்பம் இடும் வசதி செயற்படாது. அதனைச் செயற்பட வைப்பதற்கு முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கிற்குள் நுளையுங்கள். அங்கு ளநவவiபௌ க்ளிக் செய்து தோன்றும் விண்டோவில் View டேபின் கீழ் Advanced settings என்பதற்கு எதிரேயுள்ள பெட்டியில் நீங்கள் விரும்பிய விவரங்களை கையொப்பமாக் டைப் செய்து விட்டு அதன் கீழுள்ள Restore previous folder windows at logon பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.

இப்போது நீங்கள் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் உங்கள் கையொப்பம் தோன்றும். எனினும் நீங்கள் அனுப்பும் சில மெயில்களுக்கு சிக்னேச்சர் சேர்க்க விரும்பாத போது அதனை டெலீட் கீயை அழுத்தி அகற்றிக் கொள்ளலாம்.

அனூப்