Saturday, February 21, 2015

How to disable Video autoplay in Facebook?

பேஸ்புக்கில் வீடியோ ஓட்டோப்லே ஆவதை  நிறுத்துவதற்கு..

பேஸ்புக் தளத்தில் வீடியோ பதிவுகள் அனைத்தும் தாமாகவே இயங்கும் (Auto-play) வசதியை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது நீங்கள் அறிந்ததே. இந்த வசதியானது நாம் பார்க்க விரும்பாத வீடியோக்களையும்  இயக்கிவிடுவதனால் பலரும் இந்த ஓட்டோப்லே வசதியை விரும்புவதில்லைஎனினும் இதனை செயற்படாமல் வைக்கக் கூடிய வசதியையும் பேஸ்புக் தளத்தில் தரப்பட்டுள்ளது.


உங்கள் கணினியில் ஒட்டோப்லேயை நிறுத்து வதற்கு முதலில் ப்ரவுஸரைத் திறந்து பேஸ்புக் தளத்தில் நுளையுங்கள். அங்கு வலது ஓரத்திலுள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் க்ளிக் செய்து வரும் மெனுவில் Settings தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் செட்டிங்ஸ் பக்கத்தின் இடப் புறம் உள்ள வீடியோ எனும் பட்டனில் க்ளிக் செய்து Video setting பக்கத்திற்குச் செல்லுங்கள். அங்கு Auto-Play Videos என்பதை Off நிலைக்கு மாற்றி விடுங்கள். ஆனால் இந்த மாற்றம் உங்கள் கணினியிலுள்ள பிரவுஸ ருக்கு மட்டுமே செல்லுபடியாகும். கையடக் கக் கருவிகளிலும் நீங்கள் பேஸ்புக் பயன் படுத்துபவராயிருந்தால் அக்கருவிகளிலும் வீடியோ ஓட்டோ ப்லே வசதியை நிறுத்த வேண்டும். என்ரொயிட் கருவியில் ஓட்டோப்லேயை நிறுத்துவதற்கு பேஸ்புக் எப்லிகேசனைத் திறந்து மெனு பட்டனில் தட்டி செட்டிங்ஸ் தெரிவு செய்யுங்கள். அங்கு Video Auto-Play என்பதை Off நிலைக்கு மாற்றி விடுங்கள்

அனூப்

Friday, February 20, 2015

How to use WhatsApp in your PC?

இனி கணினியிலும்  பயன்படுத்தலாம் WhatsApp

இது வரை நீங்கள் கையடக்கத் தொலைபேசி களில் மட்டும் பயன் டுத்தி வந்த வட்ஸ்-எப் எனும் மிகப் பிரபலமான மெஸெஞ்சர் சேவையை இனிமேல் கணினியிலும் பயன் படுத்தக் கூடிய வசதி கடந்த  மாதம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. WhatsApp Web  என பெயரிடப்பட்டுள்ள இச்சேவையைப் பெற நீங்கள் எந்தவொரு மென்பொருளையும் ரவிறக்கவோ நிறுவவோ வேண்டியதில்லை. இணைய தளங்களைப் பார்வையிட உதவும் உங்கள் வெப் பிரவுஸரிலேயே அதனைப் பயன் படுத்தலாம். எனினும் தற்போது கூகில் க்ரோம் ப்ரவுஸரில் மாத்திரமே இதனைப் பயன் படுத்த முடியும்.  

ஸ்மாட் தொலைபேசியிலுள்ள வட்ஸ்-எப் அப்லிகேசனின் ஒரு பிரதிபளிப்பாகவே பிரவுஸரில் கண்பிக்கப்படுகிறது. எனவே இந்த வசதியைப் பெற உங்கள் கையடக்கத் தொலைபேசியிலும் வட்ஸ்-எப் அப்லிகேசன் நிறுவப்பட்டிருப்பதோடு இணைய இணைப்பிலும் இருத்தல் அவசியம்.

கணினியில் வட்ஸ்-எப் பயன்படுத்த பின்வரும்  வழி முறையக் கையாளுங்கள்.

முதலில் உங்கள் கையடக்கத் தொலைபேசியில் வட்ஸ் எப் அப்லிகேசனின் மிக அண்மைய பதிப்பை நிறுவிக் கொள்ளுங்கள். அடுத்து வட்ஸ்-எப் அப்லிகேசனைத் திறந்து Menu -> Whatsapp web என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது QR Code  ஸ்கேனர் கையடக்கத் தொலைபேசியில் இயக்கப்படும்

அடுத்து
உங்கள் கணினியில் க்ரோம் பிரவுஸரைத் திறந்து  https://web.whatsapp.com எனும் தளத்திற்குச் செல்லுங்கள். பிரவுஸரில் ஒரு QR Code காண்பிக்கப்படும். இக் கியூஆர் கோடினை தொலைபேசியிலுள்ள QR Code  ஸ்கேனர் மூலம் கணினித் திரைக்கு  நேராக தொலைபேசியைப் பிடித்து ஸ்கேன் செய்யுங்கள். உங்கள் கையடக்கத் தொலைபேசி இனம் காணப்ட்டதும்  தொலைபேசித் திரையில் காண்பிக்கப் படுவது போன்றே பிரவுஸரிலும் காண்பிக்கப்படும். கையடக்கத் தொலைபேசியில் வட்ஸ்-எப் பயன் படுத்துவது போன்றே அனைத்து வசதிகளுடன் பிரவுஸரிலும்  நீங்கள் பயன் படுத்த ஆரம்பிக்கலாம்

அனூப்