Friday, April 24, 2015

Chrome Browser tips

க்ரோம் ப்ரவுஸர் - அறிந்ததும் அறியாததும்

கூக்ல் க்ரோம் இணைய உலாவி குறுகிய காலத்தில் இணைய பயனர் மத்தியில் பிரபல்யம் பெற்று முன்னிலை வகிக்கிறது. இவ்விணைய உலாவி பல்வேறு வசதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும். இவ்வசதிகள் மூலம் நேரம் விரயமாக்கப் படுவது தவிர்க்கப் படுவது டன் எமது வேலைகளும் இலகுவாகிவிடுகின்றன. கூகில் க்ரோம் ப்ரவுஸர் தரும் சில வசதிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1. நீங்கள் திற்ந்திருக்கும் ஒரு டேபை மூடிவிட க்லோஸ் பட்டனில் க்ளிக் செய்துதான் மூட வேண்டும் என்பதிலை. மூட வேண்டிய டேபின் மேல் மவுஸை மிட்ல் க்ளிக் செய்வதன் மூலமும் மூடிவிடலாம். அதாவது ஸ்க்ரோல் பட்டனை க்ளிக் செய்தும் மூடலாம்.

2. திறந்திருக்கும் ஒரு டேபை ட்ரேக் எண்ட் ட்ரொப் முறையில் இழுத்து ஒரு புதிய விண்டோவைத் திறந்து கொள்ளவும் மறுபடி அந்த விண்டோவை முன்னர் இருந்த விண்டோவினுல் டேபாகவும் இழுத்துப் போடலாம்.

3. பிரவுஸர் விண்டோவிலுள்ள் ஒரு ஹைபலிங்கில் மிட்ல் க்ளிக் செய்வதன் மூலம் ஒரு புதிய டேபில் அந்தப் பக்கம் திறந்து கொள்ளும்.

4. எட்ரஸ் பாரில் ஒரு இணைய தள முகவரியையோ அல்லது தேடற் சொல்லையோ டைப் செய்து விசைப்பலகையில் Alt + Enter  விசைகளைத் தட்டும்போது ஒரு புதிய விண்டோவில் அந்தப் பக்கம்  தோன்றும்.

5. திறந்திருந்த ஏதேனும் ஒரு டேபை அவசரத்தில் அறியாமல் க்லோஸ் செய்து விட்டீர்களா? கவலை வேண்டாம்.  Ctrl+Shift+T  விசைகளை ஒரே தடவையில் அழுத்த மறுபடியும் அந்த டேப் திறந்து கொள்ளும். இதே விசைகளை மேலும் மேலும் அழுத்த முன்னர் மூடிய ஒவ்வொரு டேபும் அவை மூடிய ஒழுங்கில் திறந்து கொள்ளும்

6. Ctrl+H  விசைகளை ஒன்றாக அழுத்த நீங்கள் இதுவரை காலமும் பார்வையிட்ட தளங்களின் (history) பட்டியலைக் காண்பிக்கும்.

7. பார்வையிடும் ஒரு இணைய பக்கத்திலுள்ள ஓர் சொல்லை தெரிவு செய்து ரைட் க்ளிக் செய்யும் போது கிடைக்கும் மெனுவில் அந்த சொல் சார்ந்த தேடலை கூகில் தளத்தில் ஆரம்பிக்கலாம்நீங்கள் தெரிவு செய்தது ஒரு இணைய தள முகவரியாயின் அத்தளத்தினுள் பிரவேசிக்கலாம். ..

8. Ctrl + P விசைகளை அழுத்தி ஒரு பக்கத்தை அச்சிட்டுக் கொள்ளவோ அல்லது ஒரு pdf பைலாக சேமிக்கவோ முடியும்.

9. திறந்திருக்கும் பல டேப்களை ஒவ்வொன்றாகப் பார்வையிட விசைப் பலகையில் Ctrl விசையை அழுத்தியவாறு 1, 2, 3, 4 என இலக்கங்களை டைப் செய்தும் பக்கங்களைப் பார்வையிடலாம்.

10. Save to Google Drive எனும் கூகில் நீட்சியை extension பிரவுஸரில் பொருத்திக் கொள்வதன் மூலம் நீங்கள் பார்வையிடும் பக்கங்களையும் பைல்களையும் கூகில் ட்ரைல் இலகுவாக சேமித்துக் கொள்ளலாம்.

11. எட்ரஸ் பாரில் C:\ >  D:\>   E:\  என டைப் செய்வதன் மூலம் கணினியில் ஓவ்வொரு ட்ரைவிலுமுள்ள பைல்களையும் போல்டர்களையும் பார்வையிட முடியும்.

12. .com என முடிவடையும் இனைய தளப் பெயர்களை முழுவதும் டைப் செய்யாமல் நடுவிலுள்ள பகுதிய மட்டும் டைப் செய்து Ctrl மற்றும் Enter  விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தி www, .com பகுதிகளை சேர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக www.google.com  எனும் இணைய தளத்தின் பெயரில் google மாத்திரம் டைப் செய்து Ctrl மற்றும் Enter விசைகளைத் தட்டுங்கள்.

13. எட்ரஸ் பாரில் டைப் செய்துள்ள ஒரு இணைய தள முகவரியை தெரிவு செய்து ட்ரேக் அண்ட் ட்ரொப் முறையில் டெஸ்க் டொப்பில் ஒரு சோர்ட்கட்டாக  இழுத்துப் போடலாம்.

15. கண்ட்ரோல் விசையுடம்  ‘+’ குறியீட்டையும் ‘-‘ குறியீட்டையும்  முறையே அழுத்துவதன் மூலம் ஒரு பக்கத்தின் காட்சித் தோற்றதைப் பெரிதாக்கவும் (Zoom In) சிறிதாக்கவும் (Zoom Out)  முடியும்.  

அனூப்

Thursday, April 23, 2015

F2 key in MS Word

எம்.எஸ்.வர்டில் F2 



எம்.எஸ்.வர்டில் டைப் செய்துள்ள ஒரு டெக்ஸ்ட் பகுதியை வேறு இடத்துக்கு நகர்த்துவதற்கு நீங்கள் கட் பேஸ்ட் எனும் வசதியை இதுவரை பயன் படுத்தியிருக்கலாம். ஆனால் அதனைவிட இலகுவாக டெக்ஸ்டை நகர்த்துவதற்கு உதவி புரிகிறது F2 எனும் விசை. முதலில் நீங்கள் நகர்த்த வேண்டிய டெக்ஸ்ட் பகுதியை தெரிவு செய்து கொள்ளுங்கள். அடுத்து F2 விசையை ஒரு முறை அழுத்துங்கள். பின்னர் நகர்த்தப் பட வேண்டிய இடத்திற்கு வந்து விசைப் பலகையில் Enter விசையைத்  தட்டி விடுங்கள்.

அனூப்

What is ICANN?

ICANN என்றால என்ன? 

ICANN (ஐகான்என்பது இணையத்தில் இணைந்துள்ள கணினிகளுக்கான ஐபி முகவரிகளை (IP addressesஒதுக்கீடு செய்வதற்கும் இணையதளப் பெயர்களை (domain name system) நிர்வகிப்பதற்கும் என உருவாக்கப் பட்டுள்ள ஒரு வணிக நோக்கற்ற நிறுவனமாகும். Internet Corporation For Assigned Names and Numbers  என்பதே ICANN என்பதன் விரிவாக்கமாகும்

இணையத்தில் இணைந்துள்ள சேர்வர் கணினி முதல் நாம் வீடுகளில் பயன் படுத்தும் தனிநபர் கணிணிவரை அனைத்துக்கும் ஐபி முகவரி எனும் ஒரு தனித்துவமான இலக்கம் வழங்கப்படுகிறது. எனினும் ஐகான் நிறுவனத்தினால் ஒவ்வொரு கணினிக்கும் நேரடியாக ஐபி முகவரிகளை வழங்குவதென்பது சாத்தியமான விடயமல்ல. எனவே ஐகான் அமைப்பு வணிக நிறுவனங்கள், கம்பனிகள், கல்வி சார் நிறுவனங்கள், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் என மொத்தமாக ஐபி முகவரிகளை வழங்கி விடுகின்றது. இந்நிறுவனங்கள் பின்னர் தமது இணைய சேவையைப் பெறும் வாடிக்கையாளர் கணினிகளுக்கு ஐபி  முகவரிகளைத் தனித்தனியாக வழங்குகிறது.

ஐகான் நிறுவனம் அமெரிக்க நாட்டில் தனது தளத்தைக் கொண்டிருந்தாலும் அது ஒரு உலகலாவிய இணைய சமூகமாகும். பொதுவாக குறிப்பிட்டால் இணையத்தில் வரையறைகளை நிர்ணயித்து அதன்  மேம்பாட்டிற்காக இயங்கி வரும் ஒரு நிறுவனமே ஐகான் ஆகும்.

அனூப்

Monday, April 20, 2015

Google Play Store - REMOTE MOUSE

எண்ட்ரொயிட் பக்கம் - REMOTE MOUSE

உங்கள் கையடக்கத் தொலைபேசியை மவுஸாக மாற்றி கணினியை தொலைவிலிருந்து இயக்கக் கூடிய வசதியைத் தருகிறது  REMOTE MOUSE  எனும் அண்ட்ரொயிட் எப்பலிகேசன். இந்த எப்லிகேசன் மவுஸாக மாத்திரமன்றி விசைப் பலகையாகவும் உங்கள் ஸ்மாட் போனை தொழிற்பட வைக்கிறது. இதற்கு உங்களிடம் வைபை இணைப்பு இருத்தல் அவசியம்.


இந்த வசதியைப் பெற முதலில் கூகில் ப்லே ஸ்டோரிலிருந்து REMOTE MOUSE  எப்லிகேசனை நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கணினியிலும்  http://www.remotemouse.net  எனும் இணைய தளத்திலிருந்து ரீமோட் மவுஸ் சேர்வர் அப்லிகேசனை நிறுவிக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் கணினியையும் ஸ்மாட்போனையும்  ஒரே வைபை இணைப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு கணினியிலும் ஸ்மாட்போனிலும் ரீமோட் மவுஸ் அப்லிகேசனை இயக்கி வைபை இணைப்பினூடாக இரண்டு சாதனங்ககளையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஸ்மாட்போனை ஒரு வயர் இல்லாத மவுஸாக (wireless)  பயன் படுத்தி  கணினியை இயக்க முடியும்வழமையான மவுஸிலுள்ள பட்டன்களின் செயற்பாடுகளை கையடக்கத் தொலைபேசியில்  எவ்வாறு கையாள்வதென்பதை ஆரம்பத்திலேயே ரீமோட் மவுஸ் எப்லிகேசனில் காண்பிக்கும்.

இந்த REMOTE MOUSE  எப்லிகேசன் அண்ட்ரொயிட் கருவிகளுக்கு மட்டுமன்றி ஐபோன் தொலைபேசிக்கும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

அனூப்