Thursday, May 21, 2015

How to use Wi-Fi on Desktop PC?

டெஸ்க்டொப் கணினியில் வைபை பயன் படுத்த

மடிக்கணினி  மற்றும் கையடக்கக் கருவிகளில் வைபை இணைப்பு மூலம் இணையத்தைப் பயன் படுத்தலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். எனினும் டெஸ்க்டொப் கணினிகளில் எவ்வாறு வைபை இணைப்பைப் பெறுவது எனப் பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.  

புதிதாக வரும் சில டெஸ்க் டொப் கணிகளில் வைபை இணைப்பைப்  பெறும் வசதியும் இணைந்தே வருகின்றன. ஆனால் பொதுவாக பாவனையிலுள்ள பழைய டெஸ்க் டொப் கணினிகளில் இந்த வசதி  கிடைப்பதில்லை.  எனவே  டெஸ்க்டொப் கணினிகளிலும் வைபை வசதியைப் பெற வேண்டுமானால் அதற்கு வைபை வசதி உள்ளிணைந்த (built-in)  மதர்போர்டை வாங்கிப் பொருத்துவது மதர்போர்டில் தனியாக Wi-Fi card மாத்திரம் வாங்கிப் பொருத்துவது, யூ.எஸ்.பீ வைபை அடெப்டர் பொருத்துவது USB Wi-Fi adapter  என மூன்று வழிகள் உள்ளன. வைபை வசதி உள்ளிணைந்த மதர்போர்டை வாங்கிப் பொருத்துவதானால் அதற்கு அதிகம் செலவாகும்.  தனியாக Wi-Fi card வாங்கி மதர்போர்டில்  பொருத்துவது என்பது  செலவு குறைந்த வழியானாலும் அந்தக் கணினியில் மாத்திரமே அதனைப் பயன் படுத்தலாம். எனவே மூன்றாவது சொன்ன Wi-Fi adapter  வாங்கிப் பயன் படுத்துவதே சிறந்த தேர்வாகும். இந்த Wi-Fi adapter  செலவு குறந்த வழி என்பதோடு அந்த எடப்டரை எந்தவொரு கணினியிலும் தேவையான போது ஒரு பென் ட்ரைவ் போன்று பயன் படுத்தக்லாம்

USB Wi-Fi adapter பயன் படுத்துவதன் மூலம் வைபை ஊடாக இனைஅய இனைப்ப்பிஉப் பெற லாம். இதனை ஒரு பென் ட்ரைவ் போன்று plug-and-play கணினியில்  செருகிப் பயன் படுத்தலம்இணையத்தைப் பயன் படுத்தாத  போது அகற்றி விடலாம் அல்லது வேறு கணினியில் இணைத்துப் பயன் படுத்தலாம்இலங்கையில் இதன் விலை   சுமார் ரூபா. 1500 . 

அனூப்


SoftPerfect WiFi Guard - Protect your Wi-Fi conection

வை-பை இணைப்பப் பாதுகாக்க..

வைபை இணைப்பு மூலம் இணையம் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் நீங்கள் அவசியம் உங்கள் கணினியில் நிறுவ வேண்டிய ஒரு மென்பொருளே   SoftPerfect WiFi Guard.

உங்கள் வை-பை இணைப்பிற்குப் பாஸ்வர்ட் இட்டுப் பாதுகாப்பு வழங்கினாலும் அந்தப் பாஸ்வர்டை கொஞ்சம் விசயம் தெரிந்தவர்களால் இலகுவாகக் கண்டறிந்து வைபை இணைப்பைப் பயன் படுத்தலாம். இதனால் நீங்கள் இனையத்தைப் பயன் படுத்தமாலேயே உங்கள் இணைய கணக்குக்குரிய டேட்டாவை இழக்க நேரிடுவதோடு  இணைய வேகத்திலும் மந்த நிலையை உணரலாம்.

எனவே உங்கள்  வைபை இணைப்பில் அனுமதியின்றி வேறு எவராவது இணைந்து திருட்டுத் தனமாக இணையத்தைப் பயன் படுத்துகிறார்களா என்பதைக் கண்டறிய உதவுகிறது SoftPerfect WiFi Guard  எனும் மென்பொருள் கருவிஇதன் மூலம் அனுமதிக்கப்படாத கணினிகளைக் கண்டறிவது மட்டுமன்றி அக்கணினிகள்  மறுபடி இணையாமல் பாதுகாக்கவும் முடிகிறது.  1.8 MB பைல் அளவு கொண்ட இதனை  www.softperfect.com எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாய் தரவிறக்கலாம்.

அனூப்


Wednesday, May 20, 2015

Google Play Store -Google Handwriting Input

Google Handwriting Input


கையடக்கத் தொலைபேசி மற்றும் டேப்லட் கணினிகளில் கருவிகளில் வழமையான தொடுகை கீபோர்டுக்குப் பதிலாக நாம் உள்ளீடு செய்யம் விரும்பும் டெக்ஸ்டை டச் பேடில் (touch-pad) கை விரலால் எழுதுவதன் (வரைவதன்) மூலம் இலகுவாக உள்ளீடு செய்யும் வசதியைத் தருகிறது மிக அண்மை யில் கூகில் அறிமுகப் படுத்தியுள்ள Handwriting Input  எனும் அண்ட்ரொயிட் எப்லிகேசன். அதாவது உங்கள் கையெழுத்தை டெக்ஸ்டாக மாற்றி விடுகிறது இந்த எப்லிகேசன்இந்த வசதி ஆங்கிலத்தில் மாத்திரமன்றி மொத்தம் 82 மொழிகளில் கிடைக்கிறது.  தமிழிலும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத் தக்கது

அனூப்