Saturday, July 25, 2015

Change Language in FaceBook

பேஸ்புக் மொழியை தமிழுக்கு மாற்ற

பேஸ்புக் தளத்தை ஆங்கில மொழியில் மட்டுமன்றி உலகின் பல மொழிகளில் பயன் படுத்தக் கூடிய வசதிய பேஸ்புக் தருகிறது. அம்மொழிகளில் நமது தமிழ் மொழியும் அடக்கம் என்பது மகிழ்ச்சியான விடயம். பேஸ்புக் மொழியை தமிழுக்கு மாற்றி விட்டால் உங்கள் ப்ரொபைல், வோல் என அனைத்தும் தமிழிலேயே காண்பிக்கப்படும். சரி.. தமிழ் மொழிக்கு எவ்வாறு மாறுவது.? 
உங்கள் Home wall இல் வலது பக்க கீழ் மூலையில் உள்ள English எனும் இணைப்பில் க்ளிக் செய்யுங்கள் அப்போது திரையில் நீங்கள் பேஸ்புக் தளத்தை மாற்றக் கூடிய மொழிகளைப் பட்டியலிட்டுக் காட்டும். அங்கு தமிழைத் தெரிவு செய்து  ஒகே சொல்லி விடுங்கள். அவவளவுதான்,. +Imthiyas Anoof 

Wednesday, July 22, 2015

Useful Excel Tips

எக்ஸல் டிப்ஸ்
·        தற்போது தெரிவு செய்துள்ள செல்லில் மாற்றங்கள் (edit)  செய்ய  F2  விசையை அழுத்துங்கள்
·        ஒரு செல்லினுள் இன்னுமொரு வரியை (Line Break)   உருவாக்க   Alt+Enter  விசைகளை அழுத்துங்கள்
·        ஒரு செல்லினுள் நீங்கள் டைப் செய்து கொண்டிருப்பதை இல்லாமல் செய்ய  ESC  விசையை அழுத்துங்கள்.  
·         இன்றைய திகதியை ஒரு செல்லில் உள்ளீடு செய்ய Ctrl+;   விசைகளை அழுத்துங்கள்
·        தற்போதைய நேரத்தை ஒரு செல்லில் உள்ளீடு செய்ய  Ctrl+Shift+;  விசைகளை அழுத்துங்கள்

  • பின்னமொன்றை உள்ளீடு செய்யும்போது அது தானாக திகதி வடிவத்திற்கு மாறி விடலாம். அதைத் தவிர்க்க பூச்சியமொன்றை ஆரம்பத்தில் சேர்க்க வேண்டும் உதாரணம் (0 3/4) - -அனூப்-

Sunday, July 19, 2015

SpeakIt - Extension

SpeakIt இணைய தளங்களைப் படிக்கும் ஒரு நீட்சி

நீங்கள் ஒரு இணைய தளத்தில் செய்தியொன்றை வாசிக்கிறீர்கள்.  எனினும் அதனை முழுமையாக வாசித்து முடிக்கும் அளவிற்கு உங்களுக்கு நேரமில்லை. கணினியில் இன்னும் வேறு வேலைகள் உங்களுக்கிருக்கின்றன. கூகில் க்ரோம் இணைய உலாவியில்  SpeakIt  எனும் நீட்சியை (Extension) நிறுவிக் கொள்வதன் மூலம் இணைய தளத்தில் விரும்பிய பகுதியைத் தெரிவு செய்து வாசிக்க வைத்து அதனைக் கேட்டுக் கொண்டே நீங்கள் வேறு வேலைகளில் ஈடுபடலாம்.

கூகில் க்ரோமிற்கென உருவாக்கப் பட்டிருக்கும் இதனை க்ரோம் வெப் ஸ்டோரிலிருந்து நிறுவிக் கொள்ளலாம். இதனை நிறுவிய பின்னர் இணைய தளமொன்றில் வாசிக்க வேண்டிய பகுதியத் தெரிவு செய்து அதன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் SpeakIt  தெரிவு செய்தல் வேண்டும்.

Saturday, July 18, 2015

WinEject


CD  / DVD Drive உள்ள பட்டனைப் பயன் படுத்தாமல் சிடியை  வெளித்தள்ளவும் (eject) உட்செலுத்தவும் ( முடியும். சில வேளைகளில் CD/DVD Drive ல் இடும் சிடியை வெளியே எடுக்க முடியாதபடி சிக்கிக் கொள்ளும்.  இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு சூசியை நுழைத்து சிடியை வெளியே எடுத்த அனுபவம் உங்களுக்கிருக்கலாம். இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. வின் இஜெக்ட் (WinEject)  எனும் சிறிய யூடிலிட்டியை நிறுவிக் கொள்வதன் மூலம் சிடியை சிடி ட்ரைவிலுள்ள பட்டனைப் பயன் படுத்தாமல்  வெளித்தள்ளவும் உட்செலுத்தவும் முடியும். இதனைக் கணினியில் நிறுவியதும் டாஸ்க் பாரின் சிஸ்டம் ட்ரே பகுதியில் ஒரு ஐக்கன் வந்து அமர்ந்து கொள்ளும். அதன் மீது க்லிக் செய்து சிடியை வெளித்தள்ளவோ மூடவோ முடியும். http://www.wineject.com/ - அனூப்

Friday, July 17, 2015

Zip Files

சிப் பைல்கள்

இணைய பயனர்களுக்கு சிப்-பைல் (zip) என்பது ஒரு பரிச்சயமான பைல் வகையாகும். சிப் பைல் என்பது சுருக்கப்பட்ட (compressed file)  பைல் என்பதைக் குறிக்கிறது. உதாரணமாக நீங்கள் ஒரு பைலை டவுன்லோட் செய்யும் போது அந்த பைலின் பெயர்ப் "filename.zip,"   என இருந்தால அந்த பைல் ஒரு சிப் பைலாகும். சிப் செய்வது என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை ஒரு சிறு பைலாக மாற்றுவதாகும். ஒரு சிப் பைல் ஹாட் டிஸ்கில் குறைந்தளவு  இடத்தையே பிடித்துக் கொள்வதோடு அதனை வேறொரு கணினிக்கோ அல்லது பென் ட்ரைவிற்கோ மிக வேகமாக மாற்றிக் கொள்ளலாம்.  இதன் காரணமாகவே இணையத்தில் நீங்கள் டவுன்லோட் செய்யும் அனேகமன பைல்கள் சிப் பைல்களாகக் கிடைக்கின்றன.

ஒரு சிப், பைலை பயன் படுத்துவதற்கு அதனை முதலில் அன்சிப் (unzip) செய்தல் வேண்டும். அதவது சுருக்கப்பட்ட அந்த பைல விரிவடையச் செய்தல் வேண்டும். WinZip, WinRar என்பன அன்சிப் செய்வதற்கான சில பிரபலமான மென்பொருள் கருவிகளாகும். இந்த மென்பொருள் கருவிகள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. -அனூப்-

Wednesday, July 15, 2015

About IT Valam
Itvalam.blogspot.com  was first launched in 2008. This blog covers articles from computer, mobile and internet technology.  The primary objective  of this blog is to provide latest trends in the field of  information and communication technology (computer, internet and mobile) which is changing very fast.

This site contains more than 300 articles in various topics in the field of IT. 

Contact me:   anooof@gmail.com


2008 ஆண்டு ஜனவரி மாதம் முதல் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையில் வெளிவந்த "அனூப்புடன் ஒரு ஐடி வலம்" எனும் பகுதியில் தொடராக நான் எழுதி வந்த  கணினி சார் கட்டுரைகளையும் ’வானவில்’ பத்திரிகையில் நான் தற்போது எழுதி வரும்  ”வானவில் டொட் கொம்” எனும் பகுதியில் வெளிவந்த ஆக்கங்களையும் இங்கு பதிவிடுகிறேன்.

தகவல் தொழில் நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வரும் இக்கால கட்டத்தில் கடந்த காலங்களில் எழுதப்பட்ட இவ்வாக்கங்களில்  சில இன்றைய திகதிக்குப் பொருத்தமில்லாமல் இருக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு....
- அனூப் -

Tuesday, July 14, 2015

When you send a file as email attachment..


மின்னஞ்சலுடன் ஒரு இணைப்பு கிடைக்கப் பெறும்போது அதனைத் திறந்து பார்க்கப் பலரும் அஞ்சுவர். ஏனெனில் அந்த பைலுடன் வைரஸும். இணைந்து வருமோ என்ற அச்சம்தான், எனவே ஒரு பைலை இணைப்பாக அனுப்பு முன்னர் வைரஸ் ஸ்கேன் செய்து வைரஸ் இல்லையென உறுதி செய்த பின் அனுப்புங்கள். அல்லது பைல்களள இணைப்பாக அனுப்புவதை முடிந்த வரை தவிருங்கள். 

மின்னஞ்சல் பைலின் அளவு அதிகமக இருக்கும்போது அதனை டவுன்லோட் செய்ய அதிக நெரம் எடுக்கும். எனவே எப்போதும் சிறிய அளவு கொண்ட பைல்களையே அனுப்புங்கள். உதாரணமாக படங்களை இணைப்பாக அனுப்பும் போது BMP போன்ற அதிக கொள்ளளவு கொண்ட பைலுக்குப் பதிலகா அவற்ரை GIF, JPG போன்ற பைல் வடிவங்களுக்கு மாற்றி அனுப்பலாம்.

படங்களல்லாத அளவில் பெரிய (ஒரு மெகா பைட்டை விட அதிகமான) வேறு வகையான பைல்களை அனுப்ப வேண்டிய தேவையேற்படின் அதனை வின்ஷிப், வின்ரார் போன்ற கருவிகளைப் பயன் படுத்தி ஷிப் செய்து பைல் அளவைச் சுருக்கி அனுப்புங்கள்.
.
மேலும் அளவில் பெரிய ஒரு வீடியோ பைலை அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டால் அதனைச் சிறு சிறு பகுதிகளாக வெட்டி (Split) வேறாக்கை அனுப்பலாம்.. அதற்கென ஏராளம் கருவிகள் உள்ளன.

ஒரு Word, Excel பைல் அல்லது PDF பைலை அனுப்பும் போது நண்பரிடம் அதனைத் திறப்பதற்கான உரிய மென்பொருள் உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு அனுப்புங்கள். அல்லது அந்த நண்பரிடம் உள்ள மென்பொருளுக்கேற்ப அதன் வடிவத்தை மாற்றி அனுப்புங்கள். -அனூப்-

Saturday, July 11, 2015

mail.com

mail.com போனதுண்டா?

மின்னஞ்சல் எனும் போது யாஹூ ஜி-மெயில், ஹொட்மெயில் போன்ற பிரபலமான மின்னஞ்சல் சேவை தரும் நிறுவனங்களின் பெயர்களையே நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். இத்தளங்களில் நீங்கள் விரும்பும் பயனர் பெயரோடு மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் டொமேன் (Domain) பெயரை நீங்கள் பெயரை மாற்ற முடியாது. உதாரணமாக ஜிமெயில் தளத்தில் ரவி உருவாக்கிய மின்னஞ்சல் முகவரி ravi@gmail.com  எனவே அமையும்.  ஆனால நீங்கள் விரும்பிய பெயருடன் டொமேன் பெயரையும் மாற்றி மின்னஞ்சல் முகவரிகளை  உருவாக்கக் கூடிய வசதியைத் தருகிறது  mail.com எனும் இணைய தளம். இங்கு மின்னஞ்சல்ல் முகவரி ஒன்றை உருவாக்கும் போது நூறுக்கும் மேற்பட்ட ஏராளமான டொமேன் பெயர்களைப் பட்டியலிடுகிறது mail.com எனும் இணைய தளம். -அனூப்-

Saturday, July 04, 2015

Smart Measure

Smart Measure  என்பது தூரத்தையும் உயரத்தையும் அளவு கோல் பயன் படுத்தாமல் அளவிடக் கூடிய அண்ட்ரொயிட் கருவிகளுக்கான ஒரு எப்லிகேசன். இதனைப் பயன் படுத்தி மிக எளிதாக ஒரு பொருள் அமைந்துள்ள தூரதையும் அதன் உயரத்தையும் கணிப்பிடலாம். .

ஒரு பொருளின் தூரத்தை அளவிட அப்பொருளை நோக்காது அதன் கீழ் தரையை கேமராவினால் நோக்க வேண்டும். உதாரணமாக ஒருவர் நிற்கும் தூரத்தை அளவிட இந்த எப்லிகேசனை இயக்கியதும் வரும் கேமராவினால் அவரை நோக்காமல் அவர் பாதணிகளை நோக்கி கேமராவின் சட்டரை அழுத்த வெண்டும். இந்த அப்லிகேசன் கொண்டு . 1-50m வரையிலான தூரத்தை இலகுவாக அளவிடலாம். Smart Measure  போன்று குறுகிய தூரத்தை (1-50cm)  அளவிட Smart Ruler  என்ற கருவியும் நீண்ட தூரத்தை (10m-1km) அளவிட (Smart Distance)  எனும் கருவியையும் ஒரே நிறுவனம் உருவாக்கி  ப்லே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது.  -அனூப்-