Saturday, August 01, 2015

What is SEO ?

SEO  என்றால் என்ன?

இணையத்தில் தேடற் பொறிகளைப் பயன் படுத்தி தகவல் தேடும் போது நாம் தேடும் தகவல் அடங்கியிருக்கும் இணைய தளம் தேடல் முடிவுகளில் அனேகமாக முதலாவது பக்கத்திலேயே அதுவும் பட்டியலில் முதல் ஐந்து இடங்களிலேயே இடம் பெற்றிருக்கக்  காணலாம். மேலும் அவ்விணைய தளம் ஒரு பிரபலமான இணைய தளமாகவும் கூட இருக்கும். இவ்வாறு ஒரு இணைய தளத்தை தேடற் பொறிகளின் தேடல் முடிவுகளின் பட்டியலின் ஆரம்பத்தில் இடம் பெற வைப்பது என்பது ஒரு இலகுவான விடயமல்ல. இணையதளங்களை விருத்தி செய்பவர்கள் இதற்குப் பயன் படுத்தும் ஒரு (தொழில்) நுட்பமே SEO  எனப்படுகிறது.

Search Engine Optimization  (தேடற் பொறி உகப்பாக்கம்என்பதன் சுருக்கமே SEO  . ஒவ்வொரு இணைய தள விருத்தியாளரும் (web developers) தனது இணையதளம் அனைத்து தேடற் பொறிகளின் தேடல் முடிவுகளில் முதலிடத்தில் வருவதையே விரும்புவர். உதாரணமாக ரவி என்பவர் ஒரு ஓன்லைன் உதைபந்தாட்ட பாதனி வணிகத்திலீடுபடுபவர்உதைப்பந்தாட்ட பாதனி சோடியொன்றை ஓன்லைனில் கொள்வனவு செய்ய விரும்பும் ஒருவர் தேடற் பொறிகளைப் பயன் படுத்தி "soccer shoes"  என தேடலை மேற்கொள்ளும் போது ரவியின் ஒன்லைன் வணிக இணையதளம் தேடல் முடிவுகளின் பட்டியலில் ஆரம்பத்தில்  இடம் பெற வேண்டும் என்பதையே ரவி விரும்புவார். அதன் மூலம் அவரது தளத்திற்கு வந்து செல்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவதுடன் அதிக விற்பனையையும், அதிக வருமானத்தையும் அவரால் பெற முடியும்

ஆனால் இங்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. ரவியைப் போன்றே மேலும்  ஆயிரக்கணக்கான  வேறு பல ஓன்லைன் பாதணி விற்பனையாளர்களும் அவர்களது இணையதளங்களை விருத்தி செய்பவர்களும்  இதே இலக்கினையே  கொண்டிருப்பர்இங்குதான் கை கொடுக்கிறது ளுநுழு எனும் தொழிநுட்பம்.

இங்கு SEO  ஆனது இணைய தளத்தின் ஒவ்வொர் பக்கத்திலும் உள்ள HTML  (இணைய தளங்களை உருவாக்க உதவும் ஒரு மொழி) குறிப்புக்களில் பல் வேறு மாற்றங்களை செய்வதன் மூலம் தேடற் பொறிகளின் தேடல் முடிவுப் பட்டியலில் ஆரம்ப  இடத்தை அடைய உதவுகிறது. முதலில் இணைய தள பக்கத்தின் பெயர் உள்ளடக்கம் சார்ந்ததாயிருத்தல் வேண்டும்முன்னர் குறிப்பிட்ட உதாரணத்தில் ரவியின் இணைய பக்கத்தின் பெயர் (இணைய தள முகவரி அல்ல) "Ravi's Soccer Store -- Soccer Shoes and Equipment "   என்றவாறு இருத்தல் வேண்டும். இணைய பக்கமொன்றின் தலைப்பே  ளுநுழு நுட்பத்தில் முக்கிய அம்சமாகும். இத்தலைப்பானது தேடற்பொறிகளிடம் இவ்விணைய தளம் எவ்வாறான இணைய தளம் என்பதைக் கூறி விடுகிறது. மேலும்  ரவியின் இணைய தளத்தின் முதற் பக்கத்தில் (home page) "soccer", "soccer shoes" போன்ற வார்த்தைகள் பல தடவைகள் இடம் பெறக் கூடியதாகவும் அமைத்தல் வேண்டும்.

அடுத்து META tags  (மீடா டேக்ஸ்) எனப்படும் ஒட்டுக்கள் கை கொடுக்கின்றன. META tags  எனப்படும்  இந்த ர்வுஆடு  ஒட்டுக்கள் உண்மையிலேயே உங்கள் இணைய தளத்தை இதே போன்ற ஒரு இணைய தளக் குவியலிலிருந்து வேறுபடுத்திக் காண்பிக்க உதவுகின்றன. META tags எனப்படுவது தேடற் பொறிகளால் இலகுவாக வேறுபடுத்தக் கூடியதாக ஒரு இணைய தளம் பற்றிய மேலதிக விவரங்களையும் பிரதான தேடற் சொற்களையும் (key words) உள்ளடக்கியதாக இருக்கும்  இந்த META tags இன் உள்ளே இணைய தளம் பற்றிய ஒரு சுருக்கமான விவரக் குறிப்பு அடங்கியிருக்கும். ஒவ்வொரு இணைய பக்கத்திலும் இடம் பெறும் அவ்விவரம் இணைய தளத்தின் தலைப்புப் போன்றதாயும் மேலதிக விவரத்தைக் கொண்டதாயுமிருத்தல் வேண்டும். பிரதான தேடற் சொற்களின் பட்டியலில் 5 முதல் 20 வரையான சொற்களை உள்ளடக்கியதாகவும் அவை இணைய தளத்தின் உள்ளடக்கம் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்META tags பயன் படுத்துவதன் மூலம் தேடற் பொறிகளில் உங்கள் தளம் முன்னணியில் இடம் பெறும் வாய்ப்பை அதிகரிக்கிறது.  

சரி.. ஒரே விதமான தலைப்பையும், உள்ளடக்கத்தையும், மீடா ஒட்டுக்களையும் கொண்டதாய் ஏராளம் இணைய தளங்கள் இருப்பின் என்ன செய்வது? இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகப் பிரபலமான இணைய தளங்களை தேடற் பொறிகள் முன்னணியில் நிறுத்தும்.


மிகப் பிரபலமான இணைய தளப் பட்டியலில் எவ்வாறு இடம் பெறுவது? அதற்கான சிறந்த வழி தேடற் பொறிகளுக்கு மட்டுமல்லாது இணைய தள விவரக் கொத்துக்களிலும் (web directories) உங்கள் இணைய தளம் பற்றிய விவரங்களை சமர்ப்பித்தலாகும். பிற இணைய தளங்களிலிருது உங்கள் இணைய தளத்திற்கு இணைப்புக்களை (links) உருவாக்குவதன் மூலம் ஏராளமான பார்வையாளர்களைப் பெற முடிவதோடு தேடற் பொறிகளிலும் ஆரம்பப் பக்கங்களில் பட்டியடலிடப் படலாம்.

அனூப்

Reactions:

0 comments:

Post a Comment