Saturday, September 12, 2015

How to set multiple home pages in browsers

வெப் பிரவுஸரில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை ஆரம்பப் பக்கமாக வரவழைக்க..

இணைய உலாவியொன்றைத் திறக்கும்போது ஏதேனும் ஒரு பக்கத்தை முதற் பக்கமாக வரவழைக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் ஒன்றல்ல ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களையும் முதற் பக்கமாக வரவழைக்கலாம் என்பதை அறிவீர்களா? இங்கு க்ரோம், பயர்பொக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மற்றும் எட்ஜ் ஆகிய பிரபலமான பிரவுசர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைய எவ்வாறு முதற் பக்கமாக வரவைப்பது எனப் பார்ப்போம்.

Chrome 

க்ரோம் விண்டோவில் வலது பக்க மேல் மூலையில் உள்ள மூன்று கிடைக் கோடுகளுடன் தோன்றும் மெனு பட்டனில்  க்ளிக் செய்யுங்கள. வரும் மெனுவில் Settings தெரிவு செய்யுங்கள். அடுத்து On startup  பகுதியில் Open a specific page or set of pages பட்டனில் Set pages லின்கில் க்ளிக் செய்யுங்கள். அங்கு தோன்றும் பெட்டியில் Add a new page  பட்டனில் க்ளில் செய்து நீங்கள் ஆரம்ப பக்கமாக அமைக்க விரும்பும் இணைய தளத்தின் முகவரியை டைப் செய்யுங்கள். இவ்வாறு Add a new page பட்டனில் அடுத்தடுத்து க்ளிக் செய்து முகவரிகளை வழங்கி இறுதியாக ஓகே க்ளிக் செய்யுங்கள். அடுத்து க்ரோம் பிரவுஸரை மூடி விட்டு மீண்டும் திறக்கும் போது நீங்கள் வழங்கிய அனைத்து இணைய தளங்களும் வெவ்வேறு டேப்களில் திறந்து கொள்வதைக் காணலாம்.

Firefox:

பயர் பொக்ஸைத் விண்டோவைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து ஒவ்வொரு டேபாகத் திறந்து நீங்கள் ஆரம்ப பக்கமாக மாற்ற விரும்பும் இணைய தளங்களின் முகவரிகளை டைப் செய்து கொள்ளுங்கள். அடுத்து பயர் பொக்ஸ் விண்டோவில் வலது புற மேல் மூலையில் உள்ள மெனு பட்டனில் க்ளிக் செய்து  Options தெரிவு செய்யுங்கள். (மூன்று கிடைக் கோடுகள் உள்ள இடம்) அடுத்து General டேபில் க்ளிக் செய்து When Firefox starts என்பதில் Show my home page என்பது தெரிவு நிலையில் இருக்க Use Current Pages பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது Home Page  எனும் பெட்டியில் நீங்கள் இப்போது திறந்திருக்கும் பக்கங்களின் முகவரிகள் வரக் காணலாம். அடுத்து பய பொக்ஸை விண்டோவை மூடி விட்டு  மறுபடி திறந்து கொள்ளுங்கள் நீங்கள் விரும்பும் அனைத்து பக்கங்களும் ஆரம்பப் பக்கமாக வரக் காணலாம்.

Internet Explorer 

இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் விண்டோவில் Tools  மெனுவில் Internet Options தெரிவு செய்யுங்கள். வரும் டயலொக் பொக்ஸில் General டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Home page எனும் பகுதியில் நீங்கள் விரும்பும் இணைய தளங்களின் முகவரிகளை ஒன்றின் கீழ் ஒன்றாக வெவ்வேறு வரிகளில் வழங்கி ஓகே செய்து இண்டர்நெட் எக்ஸ்ப்லோரரை மூடி விடுங்கள்.

Edge


அண்மையில் அறிமுகமான விண்டோஸ் 10 பதிப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் புத்தம் புதிய எட்ஜ் பிரவுசரிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை முதற்பக்கமாக வரவழைக்கக் கூடிய வசதியுள்ளதுஎட்ஜ் பிரவுஸர் விண்டோவில் வலது பக்க மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளுடன் கூடிய மெனு பட்டனில் க்ளிக் செய்யுங்கள். தோன்றும் மெனுவில் Settings  தெரிவு செய்யுங்கள். அங்கு Open with எனும் பகுதியில் A specific page or pages எனுமிடத்தில் Custom தெரிவு செய்து Enter web Address எனும் பகுதியில் நீங்கள் விரும்பும் இணைய தள முகவரியை வழங்குங்கள் இவ்வாறு பல முகவரிகளை எதிரேயுள்ள + குறியீட்டில் க்ளிக் செய்து வழங்கலாம். அடுத்து எட்ஜ் பிரவுஸரை மூடி விட்டு மறுபடி திறக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்கள ஆரம்பப் பக்கமாக வருவதைக் காணலாம்

-அனூப்-

Saturday, September 05, 2015

What is Character Map?

எதற்கு இந்த கேரக்டர் மேப்.? பயன் படுத்துவது எப்படி

விண்டோஸ் இயங்கு தளத்துடன் வெளிவரும் ஒரு சிறிய மென்பொருள் கருவியே கேரக்டர் மேப். இது விண்டோஸின் ஆரம்ப காலப் பதிப்பு முதல் தற்போதைய விண்டோஸ் 10 வரையிலான அனைத்து பதிப்புகளிலும் இடம் பெறும் ஒரு பயனுள்ள யூட்டிலிட்டியாகும்.

கீபோர்டில் இல்லாத விசேட குறியீடுகளையும் பிற மொழி எழுத்துக்களையும் உள்ளீடு செய்யும் வசதியை இந்தக் கேரக்டர் மேப் தருகிறது. கேரக்டர் மேப்பானது எம்.எஸ்.வர்டில் இன்சர்ட் மெனுவின் கீழ் வரும் சிம்பல் (Symbol) எனும் கருவிக்கு நிகரானது.

அனேகமான எழுத்துரு (Font) பைல்கள் வழமையான எழுத்துருக்களுடன் வேறு பல விசேட குறியீடுகளையும் கொண்டிருக்கும். இவற்றைக் கேரக்டர் மேப் மூலம் பார்வையிடுவதோடு தேவையான குறியீட்டை தெரிவு செய்து எமது ஆவணத்தில் பிரதி செய்து கொள்ளவும் முடியும்.

கேரக்டர் மேப்பை விண்டோஸ் எக்ஸ்பி பதிப்பில் All Programs-Accessories-System Tools- ஊடாக அணுகலாம். விண்டோஸின் வேறு சில பதிப்புகளில் சிஸ்டம் டூல்ஸில் அல்லாமல் நேரடியாக Accessories லிருந்தும் அணுக முடியும். ரன் கமாண்ட் மூலம் கேரக்டர் மேப்பை அடைவதற்கு charmap என ரன் பொக்ஸில் டைப் செய்யுங்கள்.

தேவையான குறியீடுகளை டொகுயுமெண்டில் நுளைப்பதற்கு முதலில் கேரக்டர் மேப் விண்டோவில் உரிய குறியீட்டின் மேல் இரட்டை க்ளிக் செய்ய வேண்டும் அல்லது Select பட்டனில் க்ளிக் செய்து கொள்ள வேண்டும். பின்னர் Copy பட்டனில் க்ளிக் செய்ய விண்டோஸ் க்ளிப் போர்டில் (Clipboard) அது சேமிக்கப்படும்.

பின்னர் அதனை டொகுயுமெண்டில் சேர்ப்பதற்கு கேரக்டர் மேப் விண்டோவை மினிமைஸ் செய்து விட்டு அதனைப் பிரதி செய்து கொள்ள வெண்டிய எப்லிகேசனைத் ஆரம்பிக்க வேண்டும்.. உதாரணமாக எம்.எஸ். வர்ட் ஆவணமொன்றில் ஒரு குறியீட்டை சேர்ப்பதற்கு அதனை நுளைக்க வேண்டிய இடத்திற்கு கர்சரை நகர்த்தி Edit மெனுவில் Paste தெரிவு செய்ய வேண்டும் அல்லது கீபோர்டில் Control + V அழுத்த வேண்டும்..

உங்களுக்குத் தேவையான விசேட குறியீடு குறிப்பிட்ட ஒரு எழுத்துருவில் இல்லையெனின்  எழுத்துருவை மாற்றிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குறியீடுகளையும் தெரிவு செய்து கொள்ளலாம.

சில குறியீடுகளை கேரக்டர் மேப்பைத் திறக்காமலேயே கீபோர்டில் உள்ள இலக்கங்களை டைப் செய்வதற்கென வரும் நியூமெரிக் கீபேட் (Numeric Keypad) மூலமாகவும் நுளைக்கலாம். சில விசேட குறியீடுகளை நீங்கள் அடிக்கடி உபயோகிப்பவரானால் கேரக்டர் மேப்பை விட விரைவாக அதனைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த குறியீட்டுக்குரிய இலக்கத்தினை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு குறியீட்டினையும் குறிக்கும் இலக்கங்களை (Keystroke) அக்குறியீட்டினைத் தெரிவு செய்யும்போது கேரக்டர் மேப்பின் வலது பக்க மூலையில் காண்பிக்கப்படும்.

நியூமெரிக் கீபோட் மூலமாக குறியீடுகளை நுளைக்கும்போது கீபோர்டில் உள்ள Num Lock கீயை On நிலையில் வைப்பதோடு ‘Alt’ கீயை அழுத்தியவாறே உரிய இலக்கத்தை டைப் செய்ய வேண்டும்.

உதாரணமாக ‘Alt’ கீயுடன் நியூமெரிக் கீபேடில் 0169 என டைப் செய்ய © எனும் குறியீடு தோன்றும்.


கேரக்டர் மெப்பில் Advanced View தெரிவு செய்வதன் மூலம் ஒரு பொண்டிலுள்ள விசேட குறியீடுகளை நாணயங்கள், கணித குறியீடுக:ள் என பல வகைப்படுத்தலாம். அதற்கு எட்வான்ஸ்ட வியூ தெரிவு செய்து Group by எனுமிடத்தில் Unicode Subrange தெரிவு செய்ய எனும் Group by எனும் தலைப்பிலான மற்றுமொரு சிறிய விண்டோ தோன்றும். அதில் குறியீடுகள் வகைபடுத்தப் பட்டிருக்கும். -அனூப்-