Saturday, October 17, 2015

Create your own font face?

எழுத்துருக்களை உருவாக்க ஒரு தளம்..


நீங்கள் விரும்பும் வடிவத்தில் எழுத்துருக்களை உருவாக்க உதவுகிறது fontstuct.com   இனைய தளம். இவ்விணைய தளத்தில் நுளைந்து இலவசமாக ஒரு கணக்கை உருவாக்கி விட்டு “Create new fontstruction” எனும் இணைப்பில் க்ளிக் செய்யுங்கள். அப்போது  நீங்கள் உருவாக்க விரும்பும் எழுத்துருவுக்கு ஒரு பெயரை வழங்கச் சொல்லுங்கள்.  அடுத்து நீங்கள் விரும்பிய எழுத்துருவை “A” முதல்  “Z” வரை ஆங்கில பெரிய எழுத்திலும் (uppercase) சிறிய எழுத்திலும் (lowercase) உருவாக்கிக் கொள்ளலாம். இங்கு உங்கள் கற்பனைத் திறனும் முக்கியம். எழுத்துரு உருவாக்கும் பணி முடிந்ததும் download பட்டனில் க்ளிக் செய்து உங்கள் கணினிக்கு உடனடியாக தரவிறகம் செய்து கொள்ளலாம். இந்த எழுத்துரு பைல,  சிப் எனும் சுருக்கப்பட்ட பைல் வடிவிலேயே தரவிரக்கம் ஆகும் என்பதனால அதனை அன்சிப் செய்தே பயன் படுத்த வேண்டும்.  -அனூப்-

Saturday, October 10, 2015

How to hide a drive?

ட்ரைவ் ஒன்றை மறைத்து வைக்க...

உங்கள் கணினியில் உள்ள பைல்களை பிறர் பார்வையில் படாதபடி  மறைத்து வைப்பது போன்று ட்ரைவ்களையும் மறைத்து வைக்கலாம். இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட பைல்களை எவரும் அனுகாமல் பாதுகாக்கலாம். இந்த வசதி விண்டோஸ் இயங்கு தளத்தின் அனைத்து பதிப்புகளிலும் கிடைக்கிறது.

ட்ரைவ் ஒன்றை மரைத்து வைப்பதற்கு  முதலில் ஸ்டாட் மெனுவில் ரன் தெரிவு செய்யுங்கள். அல்லது WinKey+ R விசைகளை ஒரே நேரத்தில்  அழுத்துங்கள். வரும் ரன் பொக்ஸில் diskpart என டைப் செய்யுங்கள். அப்போது கமாண்ட் ப்ரொம்ட் விண்டோ திறந்து கொள்ளும். அங்கு list volume என டைப் செய்யும் போது உங்கள் கணினியிலுள்ள ட்ரைவ்களைப் பட்டியலிடும். அதாவது ட்ரைவ் பெயருடன் அதற்குரிய எழுத்துக்களையும் காண்பிக்கும். உங்களுக்கு e ட்ரைவை மறைக்க வேண்டுமெனின் select volume e  என டைப் செய்யுங்கள். இங்கு e ற்குப் பதிலாக நீங்கள் விரும்பும் ட்ரைவ் எழுத்தை வழங்கலாம். இப்போது நீங்கள் வழங்கிய ட்ரைவ் எழுத்துக்குரிய ட்ரைவ் தெரிவு செய்யப்படும். அடுத்து  remove letter h  என டைப் செய்து  எண்டர் விசையை அழுத்த அந்த ட்ரைவ் மறைக்கப் பட்டு விடும். இப்[போது கம்பியூட்டர் அல்லது This PC  விண்டோவைத் திறக்க e ட்ரைவ் மறைக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.


மறு படி அந்த ட்ரைவைத் தோன்றச் செய்ய வெண்டுமானால் மேற் சொன்ன அதே வழியைப் பின்பற்றி remove என்பதற்குப் பதிலாக assign letter e என டைப் செய்ய வெண்டும். -அனூப்-

Saturday, October 03, 2015

What is WYSIWYG ?

WYSIWYG என்றால் என்ன?
WYSIWYG  என்பது What You See Is What You Get என்பதன் சுருக்கமான வடிவமாகும். இது விசிவிக் என உச்சரிக்கப்படும். ஒரு மென்பொருளை விருத்தி செய்யும் போதே அதன் வருவிளைவு எவ்வாறிருக்கும் என்பதைக் காட்டுவதையே விசிவிக் குறித்து நிற்கிறது. உதாரணமாக போட்டோசொப் அப்லிகேசன் ஒரு விசிவிக் மென்பொருள் எனலாம். ஏனெனில் போட்டொசொப் மென்பொருளில் ஒரு படத்தை எடிட் செய்யும் போதே அதன் அச்சுப் பிரதி எவ்வாறு தோன்றும் என்பதை அறிந்து கொள்ளலாம்,.
எனினும் தற்போது விசிவிக் எனும் சொல் இணைய தளங்களை வடிவமைக்கப் பயன்படும் அனேகமான அப்லிகேசன்களையே குறித்து நிற்கின்றது. இம்மென்பொருள்கள் விசிவிக் எடிட்டர் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த விசிவிக் எடிட்டர்கள் ஒரு இணைய தளத்தை வடிவமைக்கும் போதே அது  இணைய உலாவியில் எவ்வாறு தோற்ற மளிக்கும் என்பதைக் காட்டுகின்றன. இவ்வசதியின் மூலம் இணையத்தில் பதிவிடு முன்னரே  ஒரு படத்தையோ உரைப்பகுதியையோ இணைய பக்கமொன்றில் பொருத்தமான இடத்தில் நிலை நிறுத்தலாம். எனினும் இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், க்ரோம், பயபொக்ஸ் போன்ற வெவ்வேறு இணைய உலாவிகளில் ஒரு இணைய தளம் ஒரே மாதிரி தோற்ற மளிக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாவிட்டாலும் ஓரளவுக்குக் கிட்டிய தோற்றத்தை இந்த விசிவிக் எடிட்டர்கள்  காண்பிக்கின்றன. . அனூப்