Saturday, November 28, 2015

Find drivers for your PC easily

ட்ரைவர் மென்பொருள் கிடைக்கவிலையா?
ஹாட் டிஸ்கை போமட் செய்து விண்டோஸ் இயங்குதளத்தைப் புதிதாக  நிறுவியதும் கணினியில் பொருத்தப்பட்டுள்ள வன்பொருள் சாதனங்களுக்குரிய பொருத்தமான ட்ரைவர்  மென் பொருளை  கிடைக்கவிலையாஇதோ  உங்களுக்குக் கை கொடுக்கிறது 3DP Chip kw;Wk;   மற்றும்  3DP Net எனும் இலவச யூட்டிலிட்டிகள்.
விண்டோஸ் புதிதாக நிறுவியதும் உங்கள் நெட்வர்க் கார்டுக்குரிய ட்ரைவர் மென்பொருளை நிறுவாமல் இணையத்தில் உங்களால் இணைய  முடியாதிருக்கும். எனினும் இந்த 3DP Net யூட்டிலிட்டி உங்கள் கனினியில் பொருத்தப் பட்டிருக்கும் நெட்வர்க் கார்டைக் கண்டறிந்து பொருத்தமான ட்ரைவரை நிறுவி இணையத்தில் இணைவதற்கு வசதியளித்து அதிசயிக்க வைக்கிறது.
அதேபோன்று 3DP Chip எனபது மற்றுமொரு பயனுள்ள கருவி உங்கள் கணினியிலுள்ள சிபியூ மதர்போட் வீடியோ கார்ட்சவுண்ட் கார்ட் போன்ற அனைத்து  வன்பொருள் சாதனங்களையும் கண்டறிந்து அவை பற்றிய விவரங்களைப் பட்டியலிடுவதோடு அவற்றிற்குரிய ட்ரைவர் மென்பொருள்கிடைக்கக் கூடிய இணைய தளங்களுக்கான இணைப்புகளையும்  காண்பிக்கிறது.
உங்கள் கணினியில் இணைய இணைப்பு இருக்குமெனில் தரப்படும் அந்த இணைப்பில் க்ளிக் செய்வதன் மூலம் அனைத்து வன்பொருள் சாதனங்களுக்குரிய பொருத்தமான ட்ரைவர் மென்பொருளை டவுன் லோட் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.

இந்த மென்பொருள் கருவியை http://www.3dpchip.com எனும்இணைய தளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். - அனூப் -

Saturday, November 21, 2015

Math Input Panel

கணித சமன்பாடுகளை உள்ளீடு செய்ய..

கணித சமன்பாடுகளை டைப் செய்வதற்கென எம்.எஸ்.வர்ட் மென்பொருளின் 2007 மற்றும் அதற்குப் பிந்திய பதிப்புகளில்  ஈகுவேசன் (Equation) எனும் வசதியுள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம். எனினும் அதனை விட இலகுவாக கணித சமன்பாடுகளை உள்ளீடு செய்யும் வசதியைத் தருகிறது மேத் இன்புட் பேனல் (Math Input Panel) எனும் மென்பொருள் கருவி. இக்கருவி விண்டோஸ் இயங்கு தளத்தின் 7 , 8.1 மற்றும் அண்மைய 10 பதிப்புகளில் இன்ணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ட்ரோயிங் பேட் (Drawing Pad) போன்ற சிறிய விண்டோவில் மவுசைப் பயன்படுத்தி விரும்பிய சமன்பாடுகளை பேனா கொண்டு எழுதுவது போல் எழுதும் போது அக்கையெழுத்தை இனம் கண்டு சமன்பாடாக மாற்றிவிடுகிறது இக்கருவி

இதனைப் பயன் படுத்துவகு ஸ்டாட் மெனுவின் கீழுள்ள தேடல் பெட்டியில் Math Input Panel  என டைப் செய்யும் போது ஸ்டார்ட் மெனுவில் அதன் பெயரைக் காட்சிப்படுத்தும். அதில் க்ளிக் செய்து  இக்கருவியைத் திறந்து  கொள்ளலாம். பின்னர் அந்தப் பேனலில் மவுஸைக் கொண்டு சமன்பாடுகளை எழுதும் போது அதனைக் கண்டறிந்து சரியான வடிவில் மாற்றி விடுகிறது, பின்னர் அதனை எம்.எஸ்.வர்ட் போன்ற மென்பொருள்களில் நுழைத்துக் கொள்ளலாம்கணித சமன்பாடுகளை அதிகமாக டைப் செய்ய வேண்டிய நேரங்களில் பயன் படுத்தக் கூடிய உபயோகமான ஒரு கருவியே மேத் இன்புட் பேனல்.
-அனூப்-

Saturday, November 07, 2015

How to install multiple Operating Systems in a single PC?

ஒரே கணினியில் ஒன்றிற்கு மேற்பட்ட இயங்கு தளங்களை நிறுவிட..
கணினிப் பயனர் சிலர் வெவ்வேறு இயங்கு தளýங்களை (operating system) கணினியில் நிறுவிப் பணியாற்ற விரும்புவர். எடுத்துக் காட்டாக விண்டோஸ் 7 இயங்கு தளத்தில்  பணியாற்றுவோர் விண்டோýஸின் பழைய பதிப்புகளான விண்டோஸ் எக்ஸ்பி,  2000 மற்றும் விண்டோஸின் புதிய பதிப்பான 8 மற்றும் 10  போýன்ற இயங்கு தளங்களையும் சேர்த்து கணினியில் நிறுவிக் கொள்ள விரும்புவர். அதேபோன்று  விண்டோஸ் இயங்கு தளத்திற்குப் பரிச்சயமானவர்கள் விண்டோஸ் அல்லாத லினக்ஸ் போýன்ý இயங்கு தளங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாயிருப்பர். இவ்வாறான தேவைகளுக்கு உதவுகிறது virtual machine தொழில் நுட்பம்.
வேர்ச்சுவல் மெசீýன் (virtual machine) ýýன்பது டுவெல் பூட் (duel boot) அல்லது (multi boot) மல்டி பூட் இயங்குதளங்களைக் கொண்ட கணினி போýன்றதல்ல. மல்டி பூட் எனப்படுவது ஒரு கணினியில் ஒரே நேரத்தில் ýன்ýறுக்கு மேற்பட்ட ýயங்கு தளங்களை நிறுவுதலைக் குறிக்கும். அப்படி ýன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவ முடிந்தாலும் ஒரே நேரத்தில் ஒரு இயங்கு தளத்திலேயெ நம்மால் பணியாற்ற முடியும். ஒவ்வொரு இயங்கு தளமும் ஒரே ýýன்பொருளிலேயே இயங்குகின்றன. இவை மெய்க்கணினி (real machine) எனப்படும்.
இதற்கு மாறாக வேர்சுவல் மெசீன் ýன்பது ஒரு மாயக் கணினி. இதன்ý மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவி ஒரே நேரத்தில் ýன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களில் நம்மால் பணியாற்ற முடிகிறது. அதாவது உங்கள் கணினி முதலில் பிரதான இயங்கு தளத்தை பூட் செய்யும். பிýன்னர் அதýன்ý மீது ஏனைய இயங்கு தளங்கள் பூட் செய்யப்படும். இவை சாதாரண ஒரு பயýýன்பாட்டு மென்பொருள் (Application Software) போல் இயங்கும்.
ஆங்கிலத்தில் வேர்ச்சுவல் எனும் வார்த்தை இல்லாத ஒன்றை இருப்பதாகக் (மாயை) கருவதைக் குறிக்கும். அதேபோல் ýங்கு வேர்ச்சுவல் மெசீன் என்பது நிஜமான கணினியல்ல. அது நிஜம் போல் இயங்கும் ஒரு கற்பனைக் கணினியே.

நீங்கள் விரும்பிய இயங்கு தளத்தை விண்டோஸுடýன்ý இணைத்து நிறுவுவதற்கென சில வேர்சுவல் மெசீன் மெýன்ýபொருள் கருவிகள் பயýன் பாட்டில் உள்ளன. வேர்ச்சுவல் ப்லேயர் (VMware Player), மைக்ரோஸொப்ட் வேர்ச்சுவல் பீசி மற்றும்  ஒரேக்கல் நிறுவனத்தின் வேர்ச்சுவல் பொக்ஸ் (VirtualBox) போன்றவற்றை  குறிப்பிட்டுக் கூறலாம். இவற்றுள் வேர்ச்சுவல் பொக்ஸ் என்பது மிகப் பிரபலமான ஒரு  மெýýன்பொருள் கருவி. இதன் மூலம்  இலகுவாக ஒன்ýறுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை நிறுவிக் கொள்ளலாம். இதனை  https://www.virtualbox.org எனும் இணைய தளத்திலிருந்து  இலவசமாகவே டவுýன்லோட் செய்து கொள்ளலாம். பைல் அளவு 112 எம்பி.  -அனூப்-